Jump to content

றோ அதிகாரிகளும் இலங்கைக்கு படையெடுப்பு!


Recommended Posts

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசிமின் உரைகள் அடங்கிய காணொளிகளை அடையாளப்படுத்தி இந்தியாவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன..

கடும்போக்கு வாதக் கருத்துக்கள் அடங்கிய உரைகளை அவர் காணொளிகளாக தரவேற்றியதுடன், அவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் இரண்டு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அவர்கள் இந்த தாக்குதல் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஏற்கனவே எப்.பீ.ஐ. மற்றும் பிரித்தானியாவின் ஸ்கொட்லன்யாட் பொலிஸாரும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன் இஸ்ரேல் நாட்டின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/118679

Link to comment
Share on other sites

மீண்டும் தாக்குதல் நடாத்தப்படும் எனவும்  தாக்குதல்கள் எங்கே நடக்குமெனவும் இந்தியா அறிக்கை விட்டுள்ளதாமே. தமிழ் தொலைக்காட்சி ஒன்று மேற்படி செய்தியை  வெளியிட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

மீண்டும் தாக்குதல் நடாத்தப்படும் எனவும்  தாக்குதல்கள் எங்கே நடக்குமெனவும் இந்தியா அறிக்கை விட்டுள்ளதாமே. தமிழ் தொலைக்காட்சி ஒன்று மேற்படி செய்தியை  வெளியிட்டுள்ளது.

இந்த விதத்தில் இந்திய உளவு துறையை பாராட்டியே ஆகவேண்டும் ...
இந்தியா தான் செய்தது ..அமேரிக்கா செய்தது.. ஆபிரிக்கா செய்தது என்று இலங்கை சோனிகள் அடிக்கும் சுத்துமாத்து Conspiracy Theories இற்கு அப்பால்.. இந்தியா குண்டுகள் வெடித்து மூன்று மணிகளிற்குள் நான்கு நாட்கள் சென்று இலங்கை கண்டுபிடித்த சிதம்பர ரகசியத்தை போட்டுடைத்துவிட்டது ...முன்னையது உளவுத்துறை பின்னையது ஊழல் துறை...ஹிஸ்புல்லா கொண்டுவந்த ஷேக்குகள் எத்தனை பேர் திரும்பி ஊர் போனானுகளோ தெரியாது  

Link to comment
Share on other sites

12 hours ago, போல் said:

அவர்கள் இந்த தாக்குதல் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவனுகளுக்கு இந்தியாவிலேயே தங்கட ஆட்களை தற்கொலை குண்டுத்தாக்குதல்கள்ல பாதுகாக்க தெரியலை. இங்க என்னத்தை வெட்டிக்கிழிக்க போகினம்?

Link to comment
Share on other sites

நிச்சயமாக இந்த தாக்குதலுக்கும் இந்திய றோவிற்கும் தொடர்பு இருக்கிறது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.