Sign in to follow this  
கிருபன்

முஸ்லிம்கள் நாம் சுயபரிசீலிப்போம்!

Recommended Posts

முஸ்லிம்கள் நாம் சுயபரிசீலிப்போம்!

1062a8a5P2208292mrjpg

வெடிகுண்டுத் தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆனால், அரசை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒருவிதத் தப்பித்தல்தான். “தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல; அவர்கள் பயங்கரவாதிகள்; அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை” என்று சப்பைக்கட்டுவதை நிறுத்துங்கள். இப்போதுகூட நம்மை நாமே சுயபரிசீலனை செய்துகொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதிவிடுவோம்.

கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் முன்னோக்கிப் பார்க்கிறேன். என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் இருந்தது. படிப்படியாக அரேபியக் கலாச்சாரம் தலைக்கு ஏறத் தொடங்கியது. முஸ்லிம், காபிர் என்ற பிரிவினைப் போக்கை இந்த ஒற்றைக் கலாச்சாரம் ஏற்படுத்திவிட்டது. அன்று நாம் சாப்பிட்ட நாரிசா் சோறு, பராத் ரொட்டி போன்ற எல்லாவற்றையும் ஹராம் என்ற ஒற்றைக் கதவு போட்டு அடைத்துவிட்டார்கள். ஒவ்வொருவரும் அடுத்த சமூகத்திலிருந்து பிரித்துவிடப்பட்டுள்ளோம். நான் ஐந்து வயதாக இருக்கிறபோது எனது ஆடையைப் பற்றி கேள்வி எழுப்பாத மதரஸாக்கள் இன்று எனது எட்டு வயது மகள் கருப்பு ஹபாயாவை அணிந்துவந்தால்தான் ஓத முடியும் என்று சட்டம் வகுக்கின்றன. 

1062a8a5P2208294mrjpg

 

பாவாடை சட்டை தாவணி அணிந்து பாடசாலை சென்ற ராத்தா பல்கலைக்கழகம் செல்கிற அவளது மகளுக்குக் கண்கள் இரண்டு மட்டும் தெரியும் விதமாக ஹபாயாவைப் போர்த்தி அனுப்பிவைக்கும் சூழல் இலங்கையிலே நிலவுகிறது.

சகிப்புத்தன்மையற்ற வஹாபியிஸத்தின் கொடூரங்கள் எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தும் பார்க்காமலும் இருந்த இந்த நோய் முற்றித்தான் பயங்கரவாதமாக இன்று மாறி உயிர்களைப் பலிகொண்டு நிற்கும் நிலை உருவாகியிருக்கிறது. சில குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இக்கட்டான நிலையில் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இனிமேலும் சவுதியின் கைக்கூலிகளாகச் செயல்படும் இத்தீவிரவாதப் போக்கைக் கண்டுகொள்ளாமல்விடுவது முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் ஆபத்தானது. ஆகையால், நம்மைச் சுற்றி என்ன நடந்தது, எப்படியெல்லாம் நாம் மூளைச்சலவை செய்யப்படுகிறோம் என்பதை உணருங்கள்; நம் தலைமுறைகளைக் காப்பாற்ற முனையுங்கள்.

- பாத்திமா மாஜிதா, இலங்கை தமிழ் எழுத்தாளர், வழக்கறிஞர்.

- முகநூல் பதிவில் இருந்து...

 

https://tamil.thehindu.com/opinion/columns/article26940022.ece?utm_source=HP&utm_medium=hp-editorial

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

சவுதி ஷேக்குகளை போட்டி போட்டுக் கொண்டு வந்தது, பதியுதீனும், ஹிஸ்புல்லாவும்.  

கடந்த வாரம் கூட வந்திருந்தார்கள். 

அவர்கள் உண்மையில் ஷேக்குகளா பயங்கரவாதிகளா  என்று கேட்டு சொல்லுங்கள் முதலில்.
 

Edited by Nathamuni
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

roflphotos-dot-com-photo-comments-20190424141809.jpg

முஸ்லீம் பயங்கரவாதிகள், பெண்களின் படத்தைப் போட்டு, 
இப்படியும்... அனுதாபம் தேடலாம். 

தமிழ் மக்கள் தான்... மிகக்  கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால்.... தமிழர்களுக்கு. மறதிக் குணம் உள்ளது,
என்னத்தை... செய்தாலும்... மறந்து விடுவார்கள் என்று, அறிந்து விட்டார்கள்.

Share this post


Link to post
Share on other sites
816370-815862-sri-lanka-blasts-colombo-afp.jpg
நாங்கள் நாங்களாவே இருந்தோம்...
பல பத்து வருடங்களுக்கு முன்
அவர்கள் மார்க்கத்தின் பெயரால் வந்தார்கள் .......
பெண்களே முகத்தை மூடுங்கள் என்றார்கள்
சக மனித உறவினை , கருத்துப்பறிமாறலை 
கொஞ்சம் கொஞ்சமாக.. நெருக்கடிக்குள் தள்ளினர். 
சக சமூகங்களின் நெருக்கத்தினை மார்க்கத்தின் பெயரால் தள்ளி வைத்தனர்....
"அடையாளம், அடையாளம், அடையாளம்",
இலங்கை முஸ்லிம் சமூகமும் அகத்தே உள்ளொடுங்கியது..
அதே நேரம் பிற சமூகங்களும் 
முஸ்லிம்களில் இருந்து , அவர்களுடனான நெருக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல வெளியேறினர்....
மதம் தீவிரமான முக(கா)மாக்கப்பட்டது...
பன்மைத்துவம் மறுக்கப்பட்டது
ஒற்றைப்படையான கருத்தியல் , கலாசார அடையாளம் ஆயுதமாக்கப்பட்டது.
அடிக்கொரு பள்ளிவாசல்கள் முளைத்தன
மதக் கல்வி மனிதர்களை அகமும் புறமுமாக 
மற்ற மனிதர்களிடமிருந்து பிரித்தது...
எங்கு பார்ப்பினும் விவாதங்கள் தொடங்கியது
பல அமைப்புகள் உருவாகின
NGOக்கள் போல் இதனை முன்னெடுப்பவர்கள் ,
சௌதி பணத்தில் பணக்காரர்களானர்கள் 
மதம் பற்றிய விவாதங்கள் பல்கிப் பெருகின..
ஒரே வீட்டுக்குள் , ஊருக்குள் , சமூகத்திற்குள்
"நல் இஸ்லாத்தினை" நிலை நாட்ட சர்ச்சைகள், முரண்பாடுகள்... உடல் வன்முறைகள்.. ஏன் உள்படுகொலைகளும் நிகழ்ந்தன...
எல்லாமே மாறியது...
பின்பு ...
புத்தர் சிலைகளை உடைத்தனர் ...
கிறிஸ்தவர்களின் புனித ஞாயிறில்
வணக்க வழிபாட்டில்
குழந்தைகள், பெண்கள், முதியோர் என 
நூற்றுக்கணக்கில் குருதி குடித்தனர்..
விடுதிகளில், வீடுகளில் , பாதைகளில் 
குண்டை வெடுக்க வைத்தனர்......
இலங்கை முஸ்லிம்களை அம்மனமாக்கினர்..
இப்போது
முஸ்லிம் பெண்கள் , 
இவர்களால் கொண்டு வரப்பட்ட 
முகத்தினை மூட சொல்லப்பட்டதை 
செய்ய முடியாது என அரசு அறிவித்துள்ளது...
நடுத் தெருவில்.. 
இருண்ட நிகழ், எதிர்காலத்தின் பிடியில் ..
அன்றாடம் காய்ச்சிகளான உழைக்கும் மக்கள்
..
வீதியில் இறங்க முடியாதுள்ளது,
அன்றாட பணிகளை செய்ய முடியாதுள்ளது
சந்தேகம், அச்சம், வெறுப்பு எங்கும் பரவி விட்டுள்ளது என கைதேசப்படுகின்றனர்
 
000
ஏன் இவர்கள் வந்தார்கள்??????
உலகெங்கும் இந்தக் கொலைகும்பலை உருவாக்கி, பரவ விட்டது யார் ?
எந்த நாட்டில், எந்த மண்ணில் இவர்கள்
வசந்தங்களை விதைத்தார்கள்?..
ஒரு சிறு உதாரணம்...உள்ளதா?
ஈராக், லிபியா, சிரியா யெமன்..
ஆப்கான்....
அழிவு.. அழிவு... அழிவு.. அழிவு...
யாருக்கு இதில் இலாபம்?
இஸ்லாமிய வெறுப்பை விதைக்க 
முழு மனித குலத்துக்கும் முன்னால் 
முஸ்லிம்களை தலை குலைய வைக்க ...
இந்த விச ஜந்துக்களை உருவாக்கி, 
பரவவிடுவதை விட 
கைதேர்ந்த வழிமுறை வேறு இருக்க முடியுமா?
0000
ஏன் இவர்கள் வந்தார்கள்??????
இந்தக் கொலைகும்பலை உருவாக்கி,
பரவ விட்டது யார்?
இன்னும் போசிப்போர் யார்?
00000
கொல்லப்பட்டோர் பட்டியலில் இலட்சக் கணக்காணோர்...
ஆயிரக்கணக்கில் அகதிகள்..
பல நகரங்கள், கிராமங்கள் சாம்பம் மேட்டில்..
அனாதைகள்.. வாழ்வை இழந்தோர் 
இலட்சக் கணக்கில்..
ஆனால், அமெரிக்காவின் சிறந்த நண்பன்
சௌதி ஆளும் வர்க்கம்...
பல மில்லியன் பெறுமதியில் 
இஸ்ரேலின் முதல் பெண்மணிக்கு 
பட்டத்து இளவரசர் பரிசளிப்பார் 
மார்புக் கச்சை அல்ல, 
அந்த ஆளும் அதிகார மங்கையின்
மலர் வண்ணக் கழுத்தை மெருகூட்டும் ”நெக்லசை”
தூ......
 
- Fauzer Mahroof -

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • 5. இலங்கை அனுபவம் அப்பாவை, சித்தப்பாவை ஒட்டியது. அப்பா வைத்தியர் சிவக்குமாரன்னின் நண்பர். வைத்தியர் கண்டிப்புக்கு பெயர் போனவர் ஆனாலும் அப்பாவின் நண்பர் என்பதால் கொஞ்சம் இயல்பாய் இருப்பார். தனியார் மருத்துவ மனையில் ஒருதரம் அப்பாவை பார்த்து விட்டு, அவரே இதைவிட என் கூடுதல் கவனிப்பு அரச மருத்துவ மனையில்தான் கிடைக்கும் அங்கே வாருங்கள் என மாற்றினார் ( இப்படி பட்ட உன்னதத்களும் எம்மத்தியில் இருந்தார்கள்). இதன் பின் அப்பா காலாமாகும் வரை அரச ஆஸ்பத்திரிதான். குறை சொல்ல முடியாத சேவை. என்ன இலங்கை ஆஸ்பதிரிகளுக்கே உரிய மூக்கை பிடுங்கும் மருந்து நாற்றம்தான் ஒரே குறை. 5. சித்தப்பா - தனியார் ஆஸ்பத்திரிக்கு போகும் போதே மூளைச்சாவு ஆகிவிட்டார். எனினும் 3 நாட்கள் செயற்கை உயிரூட்டியில் வைத்து காசை கறந்த பின்னரே விட்டார்கள் 😡. பிகு: கல்வியும் மருத்துவமும், எப்போதும் அரச கையில் இருக்க வேண்டும். பெறும் நிலையில் (point of delivery/service) இலவசமாக இருக்க வேண்டும். இவை இரெண்டிலும் லாப நோக்க தனியார் கம்பெனிகளை விட்டால், அவர்கள் வேண்டும் என்றே அரச அமைப்புக்களை சீரழித்து, தனியாரே சிறப்பு. அல்லது காப்புறுதியே காப்பு எனும் நிலையை உருவாக்குவார்கள். அமெரிகாவை பார்த்தால், ஓபாமா கேர் இற்கு வந்த எதிர்ப்புகளை பார்த்தால் இது புரியும். 
  • உண்மை தான் நுனா அண்ணா , இவ‌ருக்கு இர‌ண்டு நாக்கு இருக்கு , இவ‌ர் என்ன‌ ம‌னித‌ பிற‌ப்பு என்று என‌க்கு தெரியாது , இவ‌ர் போட்டி இட்ட‌ தொகுதியிலும் ம‌க்க‌ளுக்கு காசு குடுக்க‌ ப‌ட்ட‌து / காசு குடுத்து ஓட்டை வாங்கும் பிராடுக‌ளுட‌ன் கூட்ட‌னி வைச்சு கொண்டு எப்ப‌டி தான் இவ‌ரால் வெளியில் த‌ல‌ காட்ட‌ முடியுது  /  ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னியில் இருக்கும் போது வேறு பேச்சு , திமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சா பிற‌க்கு இன்னொரு பேச்சு 
  • மிகவும் அருமையான பதிவு சாமன்யன். எனக்கும் இலங்கையிலும் யூகேயிலும் ஆசுப்பத்திரி அனுபவங்கள் இருக்கு. 1. யூகே NHS ஆனது free at point of service எனும் நடைமுறையில் நடக்கிறது. ஆனால் பொது வரியில் இருந்து கணிசமான அளவு இதற்குப் போகிறது. யூகேயில் தனியார் காப்புறுதிகள் இருந்தாலும், அடிப்படை, மேல்நிலை (கான்சர், bypass surgery, transplant) இப்படி கிட்டத்தட்ட சகல பிரச்சினைக்களுக்கும் தரமான மருத்துவம், இலவசம். முன்னாள் பிரதமர் கமருன் பெரும் செல்வந்தர், மனைவி அவரை விட செழிப்பான குடும்பம். ஆனாலும் அவர்களின் வலுக்குறைந்த குழந்தை ஒன்றை முற்றிலும் என் எச் எஸ் சிலேயேதான் பராமரித்தார்கள். இங்கேயும் எமெர்ஜென்சியில் போனால் காத்திருக்கும் பிரச்சினை இருக்கு. பொதுவாக பெருநகரங்களில் இது அதிகம். ஆனால் எல்லா காத்திருப்பும் ரெகோர்ட் செய்யப்பட்டு. டார்கெட் இற்கு எதிராக மாத முடிவில் அலசப்படும். இந்த டார்கெட் இருப்பதால் எப்படியும் 3 மணதியாலதுக்குள் பார்த்துவிடுவர். 2. இங்கே பெரிய பிரச்சினை படுக்கை. Bed space. Social care செய்ய வேண்டிய ஒரு பகுதி வேலையும் மருத்துவ மனைகள் மீது விழுவதால், விடுவிக்க தயாரான பின்னரும் பல வயதானவர்கள் மருத்துவ படுக்கையில் இருப்பதால் - படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு. எமெர்ஜின்சி வார்டில், கொரிடோரில் கட்டில் போடும் நிலையும் சில சமயம் ஏற்படும். எனது தாயாருக்கு பல நோய்கள். அண்மையில் 3 கிழமை ஆசுபத்திரி வாசன். மிகவும் கண்ணியமான, கனிவான கவனிப்பு. அவரோடு 24/7 நாங்கள் நிண்டது பல தாதிகளுக்கு அதிசயம். அம்மாவுக்க்கு இலவச உணவு, அதையும் தாண்டி எம்மையும் கோப்பியை, பானை எடுத்து சாப்பிடமாறு வேறு கேட்பார்கள். அதுவரை அதிகப்படியான வரி என்று முக்கால் அழும் நான் அன்றுதான் அதன் பலனை உணர்ந்தேன். 3. இங்கே NHS ஒரு தேசிய அடையாளம். அதில் கைவைக்கப் போகிறார்கள், தனியார் மயப்படுத்த போகிறார்கள் என சதா தொழில் மற்றும் லிபரல் கட்சிகள் கன்சவேடிவ்வை தாக்கும். அவர்களுக்கும் அப்படி செய்ய ஆசைதான், ஆனால் அப்படி செய்தால் ஆட்சி பறிபோகும். எனவே சிறுக சிறுக தனியார் மயப்படுத்தலை புகுத்துகிறார்கள். மிக அதிகளவில் ஆசுபத்திரிகளை மூடி விட்டார்கள்.  4. முன்னர் NHS ஐ உலகின் பொறாமை (envy of the world) என்பார்கள். இப்போ அந்த சிறப்பு இல்லை எனிலும், ஆதார மருத்துவம், அவசர மருத்துவம், மேல் மருத்துவம், மருத்துவ ஆராய்சி என்பதில் இன்னும் தரமான சேவையே தரப்படுகிறது. இப்போ கன்சேவேடிவ் ஜோன்சனும் கூடுதல் பண ஒதுக்கீடு அறிவித்துள்ளார். பார்க்கலாம்:
  • தென்மராட்சியின் பழமரக்கிராமம் மீசாலை