ஈழப்பிரியன்

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

நீங்க‌ள் வ‌ட்ட‌ தூக்க‌//

பையா எனக்கென்னமோ  வ  னாக்கு முன்னால கா னாவ விட்டிட்டியலோ எண்டு சந்தேகமா இருக்கு

 • Haha 3

Share this post


Link to post
Share on other sites

உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு புள்ளிகளை விட எனது தனிப்பட்ட அணிகளில் உள்ள விருப்புக்களை வைத்து தான் நான் இந்த போட்டியில் தெரிவுகளை செய்தேன்.எனக்கு கோலியை கண்ணிலும் காட்டக்குடாது.இன்று அவுஸின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களின் பிளைதான் தோல்விக்கு முழுக்காரனம்.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites
35 minutes ago, நந்தன் said:

நந்தன்    18
கிருபன்    18

நீதிபதி ஐயா ஒண்டில் மொட்டையை மறைக்க தொப்பி போட்ட சேகுவராவ மேல கொண்டு போய் விடுங்க ,இல்ல என்ன கீழ அனுப்பிடுங்க(சாமி ஐயா வேணாம்) 

கிரிக்கெட் மட்சு பார்க்க போகும்போது தொப்பி இல்லாமல் போகமுடியுமா?🤔

மொட்டை இன்னும் விழவில்லை. விழுந்தாலும் அது ஹாண்ட்ஸமாக இருக்கும் என்பதால் மறைக்கவேண்டிய தேவை இல்லை😎

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, சுவைப்பிரியன் said:

உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு புள்ளிகளை விட எனது தனிப்பட்ட அணிகளில் உள்ள விருப்புக்களை வைத்து தான் நான் இந்த போட்டியில் தெரிவுகளை செய்தேன்.எனக்கு கோலியை கண்ணிலும் காட்டக்குடாது.இன்று அவுஸின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களின் பிளைதான் தோல்விக்கு முழுக்காரனம்.

என‌க்கும் இந்தியா அணிய‌ பிடிக்காது / இப்போது அவ‌ங்க‌ள் தான் அண்ணா (சுவர்)
விரல் விட்டு என்ன‌ முடியாத‌ அள‌வுக்கு இந்தியா அணியிட‌ம் நிறைய‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் / 

கோலிய‌ யாருக்கு தான் பிடிக்கும் , அவ‌னின் நாட்டுக் கார‌ங்க‌ளுக்கு வேனும் என்ரா அவ‌ன‌ பிடிச்சு இருக்க‌லாம் /

நான்  வெஸ்சீன்டீஸ் அணியின் தீவிர‌ ர‌சிக‌ன் 💪
 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

ஆனாலும் கிருபன் எனக்கு மேலே தான் நிக்கிறார்...அது தான் ஆக கடுப்பு 😄

நாளைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வென்றால் நீங்கள் கனபேரை முந்தலாம்.
முக்கியமாக கிருபனை.

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நாளைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வென்றால் நீங்கள் கனபேரை முந்தலாம்.
முக்கியமாக கிருபனை.

நாளைக்கு முழுநாளும் மழையாம்😌

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
18 minutes ago, ஈழப்பிரியன் said:

நாளைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வென்றால் நீங்கள் கனபேரை முந்தலாம்.
முக்கியமாக கிருபனை.

நான் மே.இந்தியாவுக்கா போட்டேன்? ...நம்பேலாமல் கிடக்குது 🤯

Share this post


Link to post
Share on other sites
47 minutes ago, கிருபன் said:

நாளைக்கு முழுநாளும் மழையாம்😌

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ம‌ழையால் விளையாட்டுக்கு இடைஞ்ச‌லா இருக்கு / 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, நந்தன் said:

நந்தன்    18
கிருபன்    18

நீதிபதி ஐயா ஒண்டில் மொட்டையை மறைக்க தொப்பி போட்ட சேகுவராவ மேல கொண்டு போய் விடுங்க ,இல்ல என்ன கீழ அனுப்பிடுங்க(சாமி ஐயா வேணாம்) 

ஒரு உதவி மனப்பான்மை இல்லாத சனங்கள்.....tw_glasses:😆

Share this post


Link to post
Share on other sites
13 minutes ago, குமாரசாமி said:

ஒரு உதவி மனப்பான்மை இல்லாத சனங்கள்.....tw_glasses:😆

உவேன்ட‌ லொல்லுக்கு அடுத்த‌ உல‌க‌ கோப்பை கால்ப‌ந்து போட்டியில் நெத்திய‌டி குடுங்கோ தாத்தா / 

நீங்க‌ள் கால்ப‌ந்து ர‌சிக‌னா இருந்து கிரிக்கேட் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌தே பாராட்ட‌ த‌க்க‌து 👏

Share this post


Link to post
Share on other sites

எங்கட ஜேஆர் ஜெயவர்தனவை பற்றி ஒரு கதை இருக்கு. அரசியலில் நரிக்குணம் மிக்க எம்டன் மட்டுமல்ல, ஆள் படிக்கிற காலத்தில ஸ்கூலிலையும் பெரிய ஆல் ரவுண்டர். கிரிகெட், ரக்பி மற்றும் படிப்பும்.

ஆனா அவற்றை மகன் ரவி கொஞ்சம் சுமார் ரகம். யாழ்பாண பாசைல சொல்றெண்டால், “சோத்தி” (பின்னாளில் தகப்பன் தயவில் எஸ் டி எப் தளபதி). 

AL சோதனைல ரவி எல்லாத்திலயும் கொடி. வீட்டுக்கு வந்த பையன், தகப்பனை தேற்றுமாப் போல, சொல்லி இருக்கு, “ கவலை வேண்டாம் அப்பா, தோல்விகள்தாம் வெற்றியின் படிகட்டுகள்” (failures are the pillars of success).

அதுக்கு ஜேஆர் சொன்னாராம், “ தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுகள் மட்டுமல்ல, அவை வெற்றியின் மகன்களும் கூட” என்று. (Failures are not only the pillars of success, they are also the sons of success ) 😂

எனக்கென்னமோ, இந்த போட்டி பூராவும் எனக்கு படிக்கட்டுகளாய் அமையப் போகுதோ எண்ட பயம் தொத்தீட்டு 😂.

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, குமாரசாமி said:

ஒரு உதவி மனப்பான்மை இல்லாத சனங்கள்.....tw_glasses:😆

வாழ்ந்தாலும் ஏசும்

தாழ்ந்தாலும் ஏசும்

வையகம் இது தானையா.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
Mon 10 June
02:30 (PDT) (YOUR TIME)
Hampshire Bowl, Southampton10:30AM UK
 
SOUTH AFRICA
WEST INDIES

இன்றைய போட்டியில் 15 பேர் தென்னாபிரிக்கா வெல்லும் என்றும்

10 பேர் மேற்கிந்தியத்தீவுகள் வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் என்று விடையளித்தவர்கள்

சுவி,நந்தன்,கோசான்சே,ஏராளன்,சுவைப்பிரியன்,ரதி,கறுப்பி,குமாரசாமி,எப்போதும் தமிழன்,வாத்தியார்.

 

 

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, goshan_che said:

எங்கட ஜேஆர் ஜெயவர்தனவை பற்றி ஒரு கதை இருக்கு. அரசியலில் நரிக்குணம் மிக்க எம்டன் மட்டுமல்ல, ஆள் படிக்கிற காலத்தில ஸ்கூலிலையும் பெரிய ஆல் ரவுண்டர். கிரிகெட், ரக்பி மற்றும் படிப்பும்.

ஆனா அவற்றை மகன் ரவி கொஞ்சம் சுமார் ரகம். யாழ்பாண பாசைல சொல்றெண்டால், “சோத்தி” (பின்னாளில் தகப்பன் தயவில் எஸ் டி எப் தளபதி). 

AL சோதனைல ரவி எல்லாத்திலயும் கொடி. வீட்டுக்கு வந்த பையன், தகப்பனை தேற்றுமாப் போல, சொல்லி இருக்கு, “ கவலை வேண்டாம் அப்பா, தோல்விகள்தாம் வெற்றியின் படிகட்டுகள்” (failures are the pillars of success).

அதுக்கு ஜேஆர் சொன்னாராம், “ தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுகள் மட்டுமல்ல, அவை வெற்றியின் மகன்களும் கூட” என்று. (Failures are not only the pillars of success, they are also the sons of success ) 😂

எனக்கென்னமோ, இந்த போட்டி பூராவும் எனக்கு படிக்கட்டுகளாய் அமையப் போகுதோ எண்ட பயம் தொத்தீட்டு 😂.

                                                            Image associée  

இப்ப சில போட்டிகள்தான் முடிந்திருக்கு கோசான்  சே, இன்னும் கன போட்டிகள் இருக்கு இனி ஒன்றும் தவறாது. .....!  👍

                                               Résultat de recherche d'images pour "the fail fishing gif"

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

அடடா இன்றைக்கு மழையால நான் முதலாவதா வரேலாது போல இருக்கே!! ரதியும் கிருபனை முந்த முடியாது!! வருண பகவான் சரியான மோசம் செய்கிறார்!!!

Share this post


Link to post
Share on other sites

அநியாயம் இன்டைக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்திருக்க வேண்டியது...உலக கிண்ண போட்டிகள் தொடங்க ,முன்னர் ஒராள் சொன்ன மாதிரி இருந்திச்சு  மழையே பெய்யாது,போட்டிகளில் தடை வராது என்று😞 
 

Share this post


Link to post
Share on other sites

அது வேறை ஒன்டும் இல்லை.எங்கடை கெயில் கட்ச் பிடித்த போதே நான் நினைத்தேன் மழை வரும் என்டு.வந்திட்டுது.😂

 • Like 1
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

இன்றைக்கு வருண பகவானின் கருணையினால் எல்லோருக்கும் முட்டை 🥚 இலவசமாக வழங்கப்படுகின்றது. இது இரண்டாவது முட்டை! 🥚 ஜெற் ஸ்ற்றீம் மெதுவாக நகர்வதால் இந்த வாரம் எல்லோருக்கும் இன்னும் முட்டைகள் 🥚 🥚 🥚  கிடைக்கலாம்😂 எல்லோரும் ஆம்லெட் 🍳 போட ரெடியாகுங்கள்!

3 minutes ago, ரதி said:

அநியாயம் இன்டைக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்திருக்க வேண்டியது...உலக கிண்ண போட்டிகள் தொடங்க ,முன்னர் ஒராள் சொன்ன மாதிரி இருந்திச்சு  மழையே பெய்யாது,போட்டிகளில் தடை வராது என்று😞 
 

ஜெற் ஸ்ற்றீம் எப்படி நகரும் என்று வெதர்மான் கூட சொல்லமுடியாமல் திணறுகின்றார்! 🎃Mathematical modelling இன்னும் optimum ஆக இல்லையாம்!😫

Share this post


Link to post
Share on other sites

அநேகமா வெஸ் இண்டீஸ்,சவ்த் ஆபிரிக்கா விளையாடினால் விண்டீஸ் தான் வின் பண்ணும்

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, ரதி said:

அநேகமா வெஸ் இண்டீஸ்,சவ்த் ஆபிரிக்கா விளையாடினால் விண்டீஸ் தான் வின் பண்ணும்

அப்படி வென்றால் ரதி எங்கேயோ போயிருக்கும்.

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்படி வென்றால் ரதி எங்கேயோ போயிருக்கும்.

நானும் தான்.😂😂😂

Share this post


Link to post
Share on other sites

நாளைக்கு என்ரையாக்கள் விளையாடினம்...நாளைக்கும் மழையோ🤩

Share this post


Link to post
Share on other sites
Tue 11 June
04:30 (CDT) (YOUR TIME)
Bristol County Ground, Bristol10:30AM UK
 
BANGLADESH
SRI LANKA

இன்றைய போட்டியில்
13 பேர் பங்களாதேஸ் வெல்லும் என்றும்

12 பேர் இலங்கை வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.

 

 

Share this post


Link to post
Share on other sites
Match delayed by rain
16th match, ICC Cricket World Cup at Bristol, Jun 11 2019

இன்றைக்கும் முட்டைதான்  போல இருக்கு??

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, ஈழப்பிரியன் said:
Tue 11 June
04:30 (CDT) (YOUR TIME)
Bristol County Ground, Bristol10:30AM UK
 
BANGLADESH
SRI LANKA

இன்றைய போட்டியில்
13 பேர் பங்களாதேஸ் வெல்லும் என்றும்

12 பேர் இலங்கை வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.

 

 

இன்றும் எல்லோருக்கும் முட்டையா?:334_thunder_cloud_rain:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • வாழ்த்துக்கள் ராஜவன்னியன் அண்ணா! இந்த வருடம் நான் துபாய் வருவதாக இருந்தேன்  எக்ஸ்போ 2020 க்கு  நீங்கள் முன்பு சொன்னீர்கள் நான் அப்போ அங்கு இருக்க மாட் டேன் என்று.  இப்போது நீங்கள் இருக்கிறீர்கள்  எக்ஸ்போவும் நானும்தான் இருக்க மாட்டோம்  பல திருப்பங்கள் தெரியும் பாதையில்தானே பயணம் நடக்கிறது                                                                                      நா. முத்துக்குமார் 
  • ஓம்...  ரதி... இதுக்கு, ஏன்.. விழுந்து.. விழுந்து... சிரிக்கிறீர்கள்.    உங்களுக்கு... எப்பவும், சந்தேகம் தான்...    
  • எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று
  • இந்த வீதியோரக் கவிஞனுக்குள் தமிழ் வார்த்தைகள் கொஞ்சி விளையாடுகிறது. காலம் செய்த கோலம் வீதியில் வீற்றிருந்து கவிதை சொல்கிறான். ஒருநாளும் நான் இதுபோல் அழுதவனல்ல அந்த திருநாளை மகன் கொடுத்தால் யாரிடம் சொல்ல என்ற வரிகள் அவனது அடிமனதின் உணர்வுகளை எடுத்துச் சொல்கிறது.
  • கொரோனா சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டு அரசாங்கத்தால் பல நடைமுறைகள் முடக்கப்பட்டுள்ளன. சில வேலைத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. சிலர் வீட்டில் இருந்து வேலை செய்ய பணிக்கபட்டுள்ளனர். சுயதொழில் செய்வோர் , பகுதி நேரமாக வேலை செய்வோர் , ஒப்பந்தம் இல்லமால் வேலை செய்தோர் , பதிவுகள் இன்றி கைகளில் சம்பளம் வாங்கி வேலை செய்தோர் , வேலை செய்ய அனுமதி இல்லாதவர்கள் , இந்த நாட்டில் தங்கி வாழ அனுமதி மறுக்கபட்டவர்கள் என பலரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். வைரஸ் தாக்கத்தில் இருந்து எப்பிடி தப்பிப்பது என்ற பயம் ஒருபுறமும், தமது வாழ்க்கையினை எவ்வாறு கொண்டு நகர்த்துவது என்ற யோசனை மறுபுறமும் ஒவ்வொருத்தரையும் ஆட்கொண்டுள்ளது. உலகமே இவ்வாறான நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானிய அரசு நெருக்கடி நிலையினை எதிர்கொள்ள சில வாழ்வாதர திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மக்களின் அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்ய போதாது. மேலதிக கோரிக்கைகளை முன் வைத்து போராட்ட நடவடிக்கைகளை பலப்படுத்த நாம் முன் வர வேண்டும். இருப்பினும் அரசு அறிவித்துள்ள சில விசயங்கள் கூட பலரிடம் போய் சேரவில்லை என்பதால் கீழ்வரும் தகவல்களை தொகுத்துள்ளோம். நீங்கள் 65 வயதிற்குட்பட்ட, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தவராகவும், தற்போதிருக்கும் சூழ்நிலையால் உங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு வேலைக்கு செல்ல முடியாதவராகவும் இருந்தால் Employment Support Allowance ற்கு விண்ணப்பிக்கலாம். மேலதிக தகவலுக்கு இணைப்பு இதோ Click Here தற்போதைய சூழ்நிலையால் ஏற்பட்ட சுகயீனம் காரணமா உங்களால் வேலைக்கு செல்ல முடியாவிட்டால் நீங்கள் Statutory Sick Pay ற்கு விண்ணப்பிக்கலாம். மேலதிக தகவலுக்கு இணைப்பு இதோ Click Here உங்கள் வேலைத்தளம் மூடப்பட்டு இருந்தால், அல்லது தற்போது வேலை இல்லை என்று உங்களை நிறுத்தி வைத்திருந்தால் உங்கள் மாத சம்பளத்தில் 80சதவீதத்தை அரசாங்கம் உங்களுக்கு வழங்கும். அதனை Payroll ஊடாக உங்கள் வேலைத்தளம் உங்களுக்கு வழங்க வேண்டும். சம்பளத்தின் மீதி 20சதவீதத்தை வேலைத்தளம் உங்களுக்கு வழங்கலாம் என அரசு பரிந்துரைக்கிறது. மேலதிக தகவலுக்கு இணைப்பு இதோ Click Here நீங்கள் ஒப்பந்தம் இன்றி வேலை செய்து வேலை வேலை நீக்கம் / வேலை இல்லாதவராக இருந்தால் Coronavirus Job Retention Scheme இற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். நீங்கள் ஏற்கனவே உதவி தொகை பெறுபவர்களாக இருந்து தற்போது வீட்டு வருமானம் குறைவடைந்து இருந்தால் உங்கள் மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு மேலும் உதவியினை பெறலாம். மேலதிக விபரங்களுக்கு இங்கிலாந்தில் வசித்தால் Click Here ஸ்கொட்லாந்தில் வசித்தால் Click Here வேல்ஸ் இல் வசித்தால் Click here வட அயர்லாந்தில் வசித்தால் Click Here உங்களால் Gas, Electricity, Water போன்ற அடிப்படை சேவைகளுக்கு பணம் செலுத்த முடியவில்லை என்றால் அல்லது வீட்டு வாடகை செலுத்த முடியவில்லை என்றாலோ அரசிடம் உதவிதொகை பெறலாம். மேலதிக தகவல்களுக்கு இணைப்பு இதோ Click here உங்கள் சொந்த வீட்டிற்கான மாதாந்த கட்டுப் பணத்தை (Mortgage) கட்ட இயலாது போனால் மூன்று மாதத்திற்கு அந்த கட்டுப்பணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்ன அரசு அறிவித்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு இணைப்பு இதோ Click Here கேளிக்கை , சில்லறை வியாபார நிலையங்கள், மற்றும் ஹோட்டல் போன்ற தொழில்துறைகளுக்கு விசேட சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு இணைப்பு இதோ Click here உணவு கிடைக்க பெறாத சூழ்நிலை ஏற்படுமானால் நீங்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் உணவு வழங்கும் வங்கியை நாடி செல்லலாம். மேலதிக தகவல்களுக்கு இணைப்பு இதோ Click here அவசரகால அல்லது தற்காலிக உதவி தொகையை விரைவாக பெற்றுக்கொள்ள... மேலதிக தகவல்களுக்கு இணைப்பு இதோ Click here இவை தொடர்பான மேலதிக விபரங்களை தமிழ் மொழியில் கேட்டுத்தெரிந்துகொள்ள விரும்பினால் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புகொள்ளலாம். Tamil Help Line Number Desk +442035001573 Mobile - +447525050010 Email : coronatamilhelp@gmail.com https://www.tamilwin.com/uk/01/243023?ref=imp-news