• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல்... இலங்கையின் அரசியல் வியாபாரிகள்.

Recommended Posts

Image may contain: one or more people and outdoor

ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல், உலகின் முன்னாள் சிக்கிக் கொண்ட, இலங்கையின் அரசியல் வியாபாரிகள்

இலங்கையின் இன்றைய அரசியல் தலைமைகள் இன்றுதான் அரசியலுக்கு வந்த புதியவர்கள் அல்ல, காலத்திற்கேற்ற புதிய சிந்தனைகளைக் காவி மாற்றங்களை ஏற்படுத்தவல்ல புனிதர்களுமல்ல, என்பதை கடந்த ஞாயிறு இலங்கையில் நடந்தேறிய ஒரு பெரும் நரபலி மீண்டும் நிரூபித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, தமது தனிப்பட்ட அரசியல் இருப்பிற்காக, இன, மத முரண்பாடுகளை தொடாந்தும் வளர்த்து, அதில் அப்பாவி மக்களைப் பலியிட்டு, அதனூடாக தமது ரத்த அரசியல் வியாபாரத்தை தொடர்ந்தும் அரங்கேற்றும் அதே சாத்தான்களே, அரசியல் சிம்மாசனத்தை தொடர்ந்தும் கடந்த 50 ஆண்டுகளாக அலங்கரித்து வருகின்றனர். இன்றைய சூழல் ஒரு சனாநாயக நாட்டில் ஏற்ப்பட்டிருந்தால், பல அரசியல் தலைகள் உடன் உருண்டிருக்க வேண்டும். ஆனால் அதுதான் இலங்கையில் என்றுமே நடைபெறாது. இந்நிலையில் ஞாயிறு நடந்தேறிய படுகொலைகளுக்கு, இந்த அரசியளாலர்களே முழுப்பொறுப்பு என்பது முழுமையாக நிரூபணமாகிவரும் நிலையில், இதன் பின்னணிகளை கட்டம் கட்டமாக விரிவாகப் பார்ப்போம்.

ஞாயிறு படுகொலைகளின் பின்னணியில் இருந்த தீவிரவாதக் குழுவான, தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பு, முன்னர் அறியப்படாத அமைப்பு என்ற விம்பம் உருவாக்கப்படுகிறது. அது உண்மையா? என்றால், இல்லை என்பதே பதில். எப்படி? என்றீர்களானால், அது குறித்துப் பார்ப்போம். பல பின்னணிகளை நீண்ட காலம் பின்னோக்கி ஆரம்பிக்க முடியும். அதாவது ராஜபக்ச, கோத்தபாயா காலத்தில் இருந்து மூலத்தை ஆதாரத்துடன் அலசலாம். அதை பின்னர் பார்ப்போம். தற்போது சமீபத்தில் இருந்தே வருவோம். தாக்குதலுக்கு முன்னர் ஏப்ரல் 11 எனத் திகதியிடப்பட்டு, பாதுகாப்பு உயர் வட்டாரங்களில் பகிரப்பட்ட இரகசியத் தகவல்களில் என்ன உள்ளது?

உதவிப் பொலீஸ் மாஅதிபர் பிரியலால் டசநாயக்காவால், முக்கிய பாதுகாப்பு அங்கங்களான, அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவு, தூதராலங்களுக்கான பாதுகாப்புப் பிரிவு, நீதிக்கட்டமைப்புக்களுக்கான பாதுகாப்புப் பிரிவு, மற்றும் முன்னாள் சனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவு என்பவற்றிற்கு, பின்வரும் விடயங்கள் பகிரப்பட்டுள்ளன. அதில் இவ்விடயங்கள் பாதுகாப்பு அமைச்சினால், பொலீஸ் மாஅதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் பொலீஸ் மா அதிபரால் ஏப்ரல் 9ஆம் நாள் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையையும், இதனுடன் இணைத்துப் பார்க்கவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் அச்சுற்றறிக்கையின் 2 முதல் 4ஆம் பக்கங்களில் உள்ள விடயங்களில் அதீத கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தேசிய தாவுகீத் ஜமாத்" எனத் தலைப்பிட்டு அதன் தலைவன் மொகமட் சகரன் இந்நாட்டில் தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராகியுள்ளமை குறித்தது, என்று வேறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒன்றைக் கவனத்தில் கொள்ளவும் பாதுகாப்பு அமைச்சில் இருந்தே விடயம் ஆரம்பிக்கிறது.

இந்த மொகமட் சகரன் தான் தற்போது ஜசஸ் என்ற மத்திய கிழக்கு தீவிரவாத அமைப்பு, இலங்கைத் தாக்குதலுக்கு உரிமைகோரி வெளியிட்டுள்ள காணொளியில், முகத்தை மறைக்காது நடுவில் உள்ள நபர். குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு வெடித்தவர்களில் இவனும் ஒருவன். ஏப்ரல் 11ஆம் நாள் இரகசிய பாதுகாப்பு சுற்றறிக்கையில், வேறு என்ன விடயங்கள் தெவிக்கப்பட்டுள்ளன? தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பின் தலைவன் மொகமட் சகரன் மேற்கொள்ளவுள்ள தற்கொலைத் தாக்குதல்களின் விபரங்கள் வருமாறு, என அது தொடர்கிறது. வெளிநாட்டு உளவு அமைப்பொன்று எமக்கு சகரன் கஷ்மி என்றழைக்கப்படும், மொகமட் காசிம் மொகமட் சகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட, தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பின் தலைவனும், அவனைப் பின்பற்றுபவர்களும் இந்நாட்டில் தற்கொலைத் தாக்குதல்களுக்கு திட்டமிட்டுள்ளனர் என அறியத்தந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் அத்தகவலில் கத்தோலிக்க தேவாலயங்களும், இந்தியத் தூதரகமும் இலக்குகள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகலை வழங்கிய வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு வேறுயாருமல்ல, இந்தியா தான். அவர்களுக்கு இது எவ்வாறு தெரியுமென்றால்? அவர்களிடம் ஒரு தீவிரவாதி மாட்டிக் கொண்டான். அவனிடம் மேற்கொண்ட விசாரணைகளிலேயே அவன் இலங்கையில் சகரனிடம் தீவிரவாதப் பயிற்சிகளைப் பெற்றதையும், சகரனின் திட்டத்தையும் கக்கியுள்ளான். இத்தகவல் ஏப்ரல் 4ஆம் நாள் பகிரப்பட்டுள்ளது என்பது வேறு விடயம். ஈற்றில் தாக்துதல்கள் நடாத்தப்பட்டது ஏப்ரல் 21ஆம் நாள். ஆனால் தமக்கு எதுவும் தெரியாது என்பதை அமெரிக்க உளவுத்துறை வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளது. மேலும் ஏப்ரல் 11ஆம் நாள் இரகசிய சுற்றறிக்கையில், டிசம்பர் 26ஆம் நாள் 2018இல், மாவனெல்லவில் சமயச் சிலைகள் சேதமாக்கப்பட்டதின் பின், சகரன் கஷ்மி மற்றும் சகீட் இருவரும் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில், உள்ள ஒலுவில் கிராமத்தில் ஒளிந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக வேறு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேகாலை மாவட்டத்தில், கேகாலை நகருக்கும் கடுகனாவைக்கும் இடையில், கொழும்பு கண்டி வீதியில் அமைந்துள்ளது தான் மாவனெல்ல. இங்கு தான் டிசம்பர் 26ஆம் நாள் புத்தர் சிலைகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால், சுட்டியல்கள் கொண்டு அடித்துச் சேதமாக்கப்பட்டன. மானெல்லவில் சிங்கள சமூகத்துடன் கணிசமான முஸ்லீம் மக்களும் வாழுகின்றனர். இப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் தான் தற்போதைய அமைச்சர் கபீர் கசீம். இங்கு இரு சமூகங்களுக்குமான முறுகல் நிலை, 2001இல் இருந்தே வியாபித்தே இருக்கிறது. அது ஒரு பெரும் கதை. புத்தர் சிலைகள் உடைப்புச் சம்பவம் பரபரப்பாக நடாளாவிய ரீதியில் பேசப்பட்ட விடயம் வேறு. அது குறித்து அரச பத்திரிகை சண்டே ஒப்சேவர் டிசம்பர் 30 நாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றைப் பாருங்கள், Seven suspects had been taken in for questioning for destroying the Buddha statues in the Mawanella police division, while two more suspects are on the run. It was later found that they had already left the Mawanella police division, police sources said. இது குறித்து அப்போது பேசிய ரணில் ஜயா, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னாள் நிறுத்தப்படுவார்கள், எனப் பிரதமராக சூளுரைத்திருந்தார் வேறு. ஆக மொத்தத்தில் ஏப்ரல் ரகசிய குறிப்பில் குறிப்பிட்ட இருவர் (சகரன் கஷ்மி மற்றும் சகீட்) குறித்து கடந்த டிசம்பர் மாதத்திலேயே தெரியும், தேடிக் கொண்டிருந்திருக்கிறீர்கள். அதற்கு முன்னரே இவர்களுக்கு சகரன் கஷ்மியையும், தேசிய தாவுகீத் ஜமாத் என்ற அமைப்பையும் தெரியும் என்றது வேறு விடயம்.

அடுத்து, அவ்விரகசிய சுற்றறிக்கையில் ரில்வான் என்பவர் அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் யார் என்றால், சகரன் கஷ்மியின் இளைய சகோதரர். இவர் தான் சகரனுக்கு ஆட்களை சேர்த்துக் கொடுப்பவர் என்றும், அவரது முழுப்பெயர் முகமட் காசிம் மொகட் ரில்வான் எனவும், தெரிவிக்கப்பட்டு அவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் 903432624V எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, காத்தான்குடி பொலிஸ் பகுதியில், இந்த முகவரியை நிரந்தரவதிவிடமாகக் கொண்டவர், எனவேறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அம்முகவரி இங்கு தவிர்க்கப்படுகிறது. என்ன உங்களுக்கு தலைசுற்றுகிறதா? முகநூலில் லைக் போட்ட தமிழர்களையும், கணணியில் பாட்டுக் கேட்ட தமிழர்களையும், ஆய்ந்து, அறிந்து இன்றும் கைது செய்யும் சிறீலங்கா உளவுத்துறையும் பாதுகாப்புத்துறையும், இவ்வளவு விபரங்களை கொண்டிருந்தும் எதுவும் செய்யாதது ஏன்? ஆழமாக யோசியுங்கள்...

மார்ச் 10இ 2018இல், காத்தான்குடியில் தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பிற்கும், மற்றுமொரு மத அமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, ரில்வான் தனது நெருங்கிய சகா ஒருவரின் வீட்டில் ஒலுவில் பிரதேசத்தில, ஒளிந்து வாழுவது கண்டறியப்பட்டுள்ளது என அடுத்து வருகிறது. ஒளிந்திருந்தாலும் ரில்வான் சகரனுக்காக அக்கரைப்பற்று (அம்பாறை மாவட்டம்), குளியாப்பிட்டிய (குருநாகல் மாவட்டம்), புத்தளம் (பு;த்தளம் மாவட்டம்), மாவனெல்ல (கேகாலை மாவட்டம்) மற்றும் திகாரிய (கம்பகா மாவட்டம்) பகுதிகளில் ஆட்கைளச் சேர்த்த வண்ணமேயுள்ளான் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே கடந்த டிசம்பரில் அல்ல, கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் இவர்களைப் பற்றி நன்கு தெரியும். இது தவிர அவர்கள் ஆட்களைச் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைப் பாருங்கள். ஏப்ரல் 21 தாக்குதலில் தற்போது அடையாளம் காணப்பட்டோரில், கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தோரும் உண்டு என்பது வேறு. இவை அனைத்திற்கும் சிகரம் வைப்பது போன்றது தான் அடுத்த விபரம். ரில்வான் தனது மனைவியையும் பிள்ளைகளையும், இரவு 11 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் இடையில் குறித்த முகவரியில் சென்று சந்திப்பதாக வேறு மேலும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது தான். அந்த முகவரி இங்கு தவிர்க்கப்படுகிறது. உங்களுக்கு கோபம் வந்தால் கோபப்பட்டுக் கொள்ளுங்கள், இலலை சிரிப்புவந்தால் வாய்விட்டுச் சிரித்துக் கொள்ளுங்கள். இல்லை இன்று அநியாயமாக அரசியல் காட்டேரிகளுக்கு பலியிடப்பட்ட மக்களுக்காக அழுகை வந்தால், வாய்விட்டு அழுது கொள்ளுங்கள். அடுத்த பதிவில் மேலதிக விபரங்களுடனும் ஆதாரங்களுடனும் சந்தித்துக் கொள்வோம்...

 
#################   ####################   #########################  #######################
 

Image may contain: 3 people, crowd

Image may contain: 6 people, people standing, crowd and outdoor

ஓடவும் முடியாமல்... ஒளியவும் முடியாமல்... பகுதி 2:

ஒரு பொய்யை மறைக்க, ஓராயிம் பொய்கள் சொல்லும் நிலை,,, அவிழ மறுக்கும் முடிச்சுக்கள்.

சிரிப்பவர்கள் சிரித்து வயிறைப் புண்ணாக்கிவிட்டீர்கள்.. கோபப்பட்டவர்கள் கோபத்தில் எதை எதையோ குத்திக் கையை காயப்படுத்திக் கொண்டீர்கள்.. அழுகை வந்தவர்களோ ஏதைஏதையே நனைத்துக் அதனை கரைத்துவிட்டீர்கள்... இப்படியோ உங்கiளை விட்டுவைத்தால் நிலைமை விபரீதமாகிவிடும் வாருங்கள் தொடர்ந்தும் பயணிப்போம். ஆனால் ஒன்றில் தெளிவாகிக் கொண்டிருப்பீர்கள்.. இலங்கையின் அரசியல் காட்டேறிகள் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதில்... ஏற்கனவே முதற்பதிவில் பகிரப்பட்ட விடயங்களிலேயே உள்ள குழப்பங்களை முதலில் கவனத்தில் கொள்வோம். தன் மனைவியைப் பார்க்க இரவு 11 மணிக்கும் அதிகாலை 4 மணிக்கும் இடையில் ஒளிந்திருக்கும் சகரனின் தம்பி ரில்வான் எந்த முகவரிக்குச் செல்வான் என்று சிறீலங்காவின் இரகசிய பாதுகாப்பு அறிக்கையில் இருந்த தகவலைப் பார்த்தோம். இதில் நகைச்சுவை என்னவென்றால் இவர்களுக்கு முகவரி, தொலைபேசி இலக்கம் உட்பட பல தகவல்களை வழங்கியது இந்தியா, தான் தானென மார்பு தட்டிக் கொண்டுள்ளது. புலனாய்வு என்பது, கிடைக்கும் தகவலை சரியா? என ஒன்றுக்கு பலமுறை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்வது.

இன்று சிறீலங்காவின் புலனாய்வுத் திணைக்களம் 3 ஆண்கள், 3 பெண்கள் அடங்கிய 6 பேரின் பெயரையும் படத்தையும் தருகிறோம், இவர்கள் தான் தேடப்படும் முக்கியமானவர்கள் என அடையாளப்படுத்தி பொலீசிடம் கையளிக்க, அவர்களும் அதனை பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர். வெளியிட்டு குறுகிய நேரத்திலேயே, அதில் பெயரிடப்பட்ட பெண் அப்துல் காதர் பாத்திமாவின் படம் அதுவல்ல, என படத்தை மீளப்பெற்றார்கள். இப்பெயர் சகரனின் தாயாரின் பெயரை நெருங்கியிருக்கிறது. சிலவேளை அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கலாம். இதிலும் விநோதம் என்னவென்றால் நாம் ஏற்கனவே பகுதி ஒன்றில் பார்த்த, இரு பெயர்கள், சகரனின் தம்பி ரில்வான் மற்றும் மாவனெல்லவில் கடந்த ஆண்டு இறுதியில் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்திவிட்டு தப்பிய, இருவர் என அடையாளம் காணப்பட்ட சகரனும் சாகிட்டும் குறித்த தகவலில் உள்ள சாகிட்டும் தேடப்படும் 6 பேரில் அடக்கம். அதேவேளை முகமட் இவுகிம் சாகிட் அப்துல் கக் என்ற ஒரே பெயரைக் கொண்ட இருவர் தேடப்படும் பட்டியலில் உள்ளனர்.

அதாவது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், நடமாட்டம் என விலாவாரியாக தகவல்களை வைத்திருப்பதாக இரகசிய அறிக்கையில் பதிவு செய்துவிட்டு, இப்போது மக்களே இவர்களை கண்டுபிடிக்க உதவுங்கள் என பகிரங்கமாக அறிக்கை வெளியிடுவது, புலனாய்வுவின் நிலைமையை உங்களுக்குத் துல்லியமாக வெளிப்படுத்தும் என்று நினைக்கிறேன். இதில் உள்ள வேதனை என்னவென்றால், இப்படி ஏதோ இயங்குகிறோம் என கணக்குக்காட்டுவது, மக்களின் ஆபத்து நிலையை எவ்விதத்திலும் தணிக்காது என்பதுவே. இருக்க கடந்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களை மேற்கொண்டவர்களில் ரில்வான் மற்றும் சாகிட் கிடையாது என்பதை தற்போது அவர்களை தேடுவதனூடாக உறுதிப்படுத்துகின்றனர். அவ்வாறானால் இவர்களது இரகசிய அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட சகரன், சாகிட் மற்றும் ரில்வானில் இருவர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். சகரன் குறித்து தொடர்ந்தும் குழப்பநிலையே தொடர்கிறது. இருக்க அவ்வறிக்கையில் மேலும் உள்ள இருவர் மில்கான் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த முன்னாள் முகைடீன் குறித்து தொடர்ந்து பார்ப்போம். அவர்கள் குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. அதேவேளை சகரனின் குடும்பமே ஏப்ரல் 18இல் இருந்து, அதாவது தாக்குதலுக்கு முன்பிருந்தே காணாமல் போயுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் யாரென்றால், சகரனின் 55 வயது நிரம்பிய தந்தை கயத் மொகமட் கசீம், தாயார் 50 வயது நிரம்பிய அப்துல் காதர் சமீமா. சிறீலங்காவின் இரகசிய அறிக்கையில் சகரன் கஷ்மி என்றிருந்தது ஆனால் சகரன் கசீமே சரியானது. சகரன் கசீமுக்கு 33 வயதாகிறது. கயத் மொகமட் கசீமின் 5 பிள்ளைகளில் மூத்தவன் சகரனே. இவனுக்கு குருநாகலை மாவட்டத்தின் கேகனுவெலவைச் சேர்ந்த, முகமட் கடியா என்ற 23 வயது மனைவி உண்டு. இவர்களுக்கு 8 வயதில் ஒரு ஆண்பிள்ளையும், 4 வயதில் ஒரு பெண்பிள்ளையும் உண்டு. இவனுக்கு எந்த வயதில் திருமணம் நடைபெறிருக்கும்? அப்போது இவனது மனைவியின் வயதென்ன? என்ற ஆராச்சிகளை விட்டுவிடுவோமே! இவனது அடுத்த சகோதரன் மொகமட் செயின் கசீம் 30 வயது நிரம்பியவன். அவனுக்கு 23 வயது நிரம்பிய அப்துல் கபூர் அவ்ரின் என்ற மனைவியும், 5 வயதில் ஆண்பிள்ளையும், 3 வயதில் பெண்பிள்ளையும் உண்டு. மூன்றாவது சகோதரனே நாம் பலமுறை பார்த்துவிட்ட, தற்போது தேடப்படும் பட்டியலில் உள்ள 28 வயதுடைய மொகமட் ரில்வான் கசீம். இவனுககு 20 வயதில் நவ்கா என்ற மனைவவியும், 5 வயதிலும் 6 மாதத்திலும் என இரு ஆண்பிள்ளைகள் உண்டு. சகரனுடைய இளைய சகோதரி 20 வயது மொகமட் ஜசீரா கசீம். இவருடைய கணவர் 22 வயது முகமட் ரிசாட். 1 வயதில் ஆண்குழந்தை உண்டு. மேற்கண்ட அனைவருமே காணாமல் போயுள்ளதாக சொல்லப்படுகிறது. இவனது சகோதரி 25 வயது மொகமட் மடனியா கசீமே தற்போது வெளிப்படையக உள்ளார். இவருக்கு 10 மாதக் குழந்தை உட்பட மூன்று பிள்ளைகள் உண்டு.

கடந்த பதிவில் இரகசிய அறிக்கையில், மார்ச் 10, 2018இல் காத்தான்குடியில் தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பிற்கும், மற்றுமொரு மத அமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து ரில்வான் தனது நெருங்கிய சகா ஒருவரின் வீட்டில் ஒலுவில் பிரதேசத்தில ஒளிந்து வாழுவது கண்டறியப்பட்டுள்ளது என்றிருந்தேன். அத் தகவலும் தவறு. சம்பவம் நடைபெற்ற நாள் மார்ச் 10 2017. 2018 அல்ல. அதாவது ஒரு வருடத்திற்கு முன்னர். காத்தான்குடியில் 63 பள்ளிவாசல்கள் உண்டாம். அதில் 8 பள்ளிவாசல்களில் அடிப்டைவாத அல்லது தீவிரவாத இஸ்லாத்தை வெளிப்படையாக பின்பற்றுகின்றனவாம். மேலும் 3 பள்ளிவாசல்களில் அடிப்படைவாதம் பல்வேறு நிலைகளில் பின்பற்றப்படுகிற தாம். மார்ச் 10, 2017 இல் காத்தான்குடியின் அலியா சந்தியில் நடைபெற்ற மதம் சார்ந்த கூட்டம் ஒன்றில், சகரன் பேசுவதாக இருந்தது. அதிலேயே அடிப்படைவாதிகளுக்கும், மிதவாதிகளுக்கும் இடையே ஆயுத மோதல் மூண்டுள்ளது. இது தொடர்பாக சகரனின் தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 9 பேர், சகரனின் சகோதரன் செயின் கசீம் உட்பட கைது செய்யப்பட்டனர். மறுதரப்பில் இருவர் கைது செய்யப்பட்டனர். தேடப்பட்ட நிலையிலேயே, ரில்வான் மட்டுமல்ல முதன்மையாக தேடப்பட்ட சகரனும் அப்போதிருந்தே தலைமறைவாகினர். இப்போது சொல்லுங்கள், சகரனையும் தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பையும், இரகசிய அறிக்கையைத் தயாரித்த புலனாய்வுத்துறைக்கு எவ்வளவு காலம் தெரியும்?

இருக்க, சிறீலங்காவில், சிறீலங்கா தாவுகீத் ஜமாத் என்ற அமைப்பு உண்டு. அதில் முரண்பட்டே 2011இலேயே, தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பிற்கு சகரன் அத்திவரம் போட ஆரம்பித்து விட்டதாக விசயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்த ஞாயிறு பேரனத்திற்கும் முழுமையான பொறுப்பு அரசியல் இரத்தக்காட்டேரிகளே எனப் பார்த்திருந்தோம். தாங்கள் நல்லவர்கள், பாவப்பட்டவர்கள் எனக் காட்ட, பாதுகாப்பு செயலரை முதலாவதாக சாத்தான்கள் பலியிட்டுள்ளன. இங்கு அவர்களிடம் சில கேள்விகள்? உங்கள் தரவுகளில் இருந்தே, 2017 மார்ச் 10இல் காத்தான்குடி ஆயுத மோதல் காரணமாக, சகரனையும், ரில்வானையும் தேட ஆரம்பித்தீர்கள். பின்னர் மாவனெல்லவில் புத்தர் சிலைகள் உடைப்புக் காரணமாக, டிசம்பர் 28 2018இல் மீண்டும் சகரனையும், சகீட்டையும் தேட ஆரம்பிப்பதாக சொன்னீர்கள். ரணில் ஜயா! மாத்திரி ஜயா! கூடவே மகிந்தா ஜயா! புத்தம் அரச மதம். புத்தத்தை வளர்ப்பதுவும், காப்பதுமே அரசின் கடமை என அரசியல் அமைப்பில் எழுதி, அதில் எவ்வித விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை என முரசறையும் நீங்கள், புத்தரையே ஒரு நகர் முழுதும் உடைத்துப் போட்ட சகரனைப் பிடிப்பதில் நான்கு மாதங்களாக என்ன செய்தீர்கள்? ரணில் ஜயா நினைவுபடுத்துகிறோம், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன், என்ற உங்கள் சூளுரை என்னவானது? நீங்கள் சரியாக இவ்விடயத்தில் இயங்கியிருந்தால், இன்று இவ்வளவு அப்பாவி உயிர்கள் பலியிடப்பட்டிருக்குமா? ஆகமொத்தத்தில், உங்கள் அரசியல் இருப்பிற்காக மத, இன முரண்பாடுகளை வளர்த்து, அதில் குளிர்காயும் சாத்தான்களே! இன்னும் கேள்விகள் இருக்கிறது பின்னர் வருகிறேன்.

இருக்க, இரகசிய அறிக்கையில் உள்ள மேலதிக சில விடயங்களையும் பார்த்துவிடுவோம். மில்கான் என்பவன் அதில் அறிமுகப்படுத்தப் படுகிறான். இவன் கல்முனை சகீரா கல்லூரியில் கல்வி கற்றவன். சகரனை கண்மூடித்தனமாக பின்பற்றுபவன். அதேவேளை தாங்கள் சார்ந்த தீவிரவாத இஸ்லாத்தைத் தவிர ஏனையவர்கள் மீது ஆழமான வெறுப்புக் கொண்டவனாக அதில் அறிமுகப்படுத்தப்படுகிறான். இவன் தான் சகரன் சார்ந்த சமூக வலைத்தளங்களைப் பராமரிப்பவன். மொகமட் மில்கான் என்ற தனது தனிப்பட்ட சமூக வலைத்தளக் கணக்கைத் தவிர, சகரன் சம்பந்தப்பட்டதிலும் இவனே தரவேற்றுவான். மார்ச் 15, 2019இல் நியூசிலாந்தின் கிரைஸ்சேர்சில் பள்ளிவாசல்கள் மீது வெள்ளையினவாதி ஒருவன் நடாத்திய தாக்குதல்களின் பின், முஸ்லீம் அல்லாதோர் மீதான இனவாதக் கருத்துக்கள் நாளும் தொடர்ச்சியாக பல தரவேற்றப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்து எனவும், அவ்விரகசிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கொண்டே நியூசிலாந்து தாக்குதலுக்குப் பழிவாங்கும் தாக்குதலே, இலங்கையின் தேவாலங்கள் மீதான தாக்குதல் என்ற கருதுகோள் வலுப்பெற்றது. எனினும் இதனையும் கடந்து அக்கருதுகோளை வலுப்படுத்தும் சான்றுகள் உண்டு. அதனைப் பின்னர் பார்ப்போம். இதுதவிர மில்கான் பயன்படுத்தும் தொலைபேசியின் இலக்கம் வேறு அங்கு பகிரப்பட்டிருந்தது.

அடுத்து 5ஆவதும் இறுதியாக அடையாளப்படுத்தப்பட்ட, அந்த முக்கிய நபர் குறித்துப் பார்ப்போம். நான் முன்னர் குறிப்பிட்டது போல், இராணுவத்தைச் சேர்ந்த முன்ளாள் வீரர் முகைடீன். காத்தான்குடி அன்வர் மசூதிக்கு அருகில் வதியும், 760683126V என்ற தேசிய அடையாள அட்டையைக் கொண்ட பகருடீன் மொகமட் முகைடீன் என்ற இயற்பெயரைக் கொண்ட ஆமி முகைடீன் என அழைக்கப்படும், முன்னாள் இராணுவ வீரரும் கவனத்தில் கொள்ளப்பட்டுளார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எதனால் அவர் கவனத்தில் கொள்ளப்படுகின்றார் என்ற விபரம் அதில் கிடையாது. இறுதியாக, எங்கும் சகரன் தேவாலயங்களையோ, இந்திய தூதுவலாலயத்தையோ தாக்குங்கள் என நேரடியாக தனது ஆதரவாளர்களை வேண்டவில்லை என்றும், ஆனால் 2016இன் பின் இஸ்லாத்தை பின்பற்றாதவர்களைக் கொலை செய்வது, புனிதச் செயல் என்றும், அவ்வாறான செயற்பாடுகளினூடாக இஸ்லாத்தைப் பரப்பலாம் எனவும், தன் ஆதரவாளர்களுக்கு ஓதுகிறான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சகரன் வெளிப்படையாக சொல்லிவிட்டுத் தான், தாக்குவான் என நம்பிக் காத்திருக்கிறதாம் சிறீலங்காவின் உளவுத்துறை. இப்பொழுது சொல்லுங்கள் ஈற்றில் சகரன் குறித்துத் தெரிந்த விடயங்கள் 2016 இல் இருந்து அவ் இரகசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? இவ்வளவு அழிவுகளின் பின்னரும் மக்களே கண்டுபிடித்துத் தாருங்கள் என்ற நிலையே தொடருமானால் நிலைமை என்ன? இதையும் கடந்து பல அரசியலாளர்களின் பின்புலமும், மேலும் பல தகவல்களும் பேசுச வேண்டும். 2018 டிசம்பர் புத்தர் சிலைகள் உடைப்பில் கைது செய்யப்பட்டு அரசியல் தலையீட்டால் விடுவிக்கப்பட்ட ஒருவன், தற்போது கொழும்புத் தாக்குதலில் ஒருவன் என்றால், இவ்விடயத்தில் உங்கள் பதில் என்ன? 2019 சனவரியில் புத்தளத்தில், 100 கிலோ வெடிமருந்துகளுடன் மறைவிட பயிற்சித்தளம் கைப்பற்றப்பட்டதே! அதன் விசாரணைகளுக்கு என்ன நடந்தது? அதில் கைதான ஒருவன் எந்த அரசியல் தலையீட்டால் விடுவிக்கப்பட்டான்? ஆம் முடிச்சுக்கள் பல... ஆனால் அரசியல் காட்டேரிகளுக்கு விடைகள் சிலவே... ஏமாறும் மக்கள் கூட்டம் இருக்கும் வரையும், ஏமாற்றும் அரசியல்வாதிகள் உலகெங்கும் நிறைந்தே கிடப்பார்கள்... அதுபோலவே, கைக் கொள்ளும் மதம் குறித்து எவ்வித தெளிவும், கேள்வியும் இன்றிப் அதனுள் புதைந்துகிடந்தால், அதை வைத்தே போதையேற்றி, அழிவையே அறுவடை செய்வோர், உலகின் அனைத்து மதங்களிலும், நிறைந்தே கிடக்கின்றனர்... அடுத்த பதிவில் (ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் பகுதி3) மேலதிக தகவல்களுடன் சந்தித்துக் கொள்வோம்...

 
Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • எமது மக்கள் சக்தி கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காரணத்தினால், தேர்தலில் போட்டியிட முடியாது போன பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார். எமது மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/politics/01/252949?ref=home-top-trending
    • புதய நாடாளுமன்றம் எதிர்வரும் 13ஆம் திகதி கூடவுள்ளது. கடந்த 5 மாதங்களிற்கு பின்னர், நாடாளுமன்றம்- நாடாளுமன்ற கட்டட தொகுதியில் கூடவுள்ளது.   நடந்து முடிந்த தேர்தலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல முக்கியஸ்தர்கள் தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். யாழில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தோல்வியடைந்தார். இம்முறை நாடாளுமன்றத்தில் 28 தமிழ் பேசும் தமிழர்கள் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 25 பேர் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்கிறார்கள். முன்னாள் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவாகியுள்ளார். அது தவிர, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல்கள் மூலம் மேலும் இருவர் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர். யாழ் மாவட்டம் அங்கஜன் ராமநாதன் சிவஞானம் ஶ்ரீதரன் எம்.ஏ சுமந்திரன் த.சித்தார்த்தன் டக்லஸ் தேவனந்தா கஜேந்திர குமார் பொன்னம்பலம் சி.வி விக்னேஸ்வரன் வன்னி மாவட்டம் சார்ல்ஸ் நிர்மலநாதன் செல்வம் அடைகலநாதன் வினோ நோகராதலிங்கம் குலசிங்கம் திலீபன் திருகோணமலை மாவட்டம் ஆர்.சம்பந்தன் மட்டக்களப்பு மாவட்டம் சிவனேசதுரை சந்திரகாந்தன் சாணக்யா ராகுல் கோவிந்தன் கருணாகரன் சதாசிவம் வியாழேந்திரன் கண்டி மாவட்டம் எம். வேலுகுமார் நுவரெலியா மாவட்டம் ஜீவன் தொண்டமான் மருதபாண்டி ரமேஸ்வரன் பழனி திகாம்பரம் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மயில்வாகனம் உதயகுமார் பதுளை மாவட்டம் வடிவேல் சுரேஸ் அரவிந்தகுமார் கொழும்பு மாவட்டம் மனோ கணேசன் இது தவிர, பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக முன்னாள் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.தே.க ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றுள்ளதால், அதற்காக தமிழர் நியமிக்கப்பட வாய்ப்பு குறைவு. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக ஒருவர் தெரிவாகுவார். அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தேசியப்பட்டியல் மூலம் ஒருவர் தெரிவாகுவார். https://www.pagetamil.com/139170/
    • இன்னும் உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை  இலங்கையில் உள்ள தமிழர்களையும் யாரும் காப்பாற்ற முடியாது 2009 ற்கு பிறகு தீர்வு எடுத்து தருகிறோம் என பேய்க்காட்ட மட்டுமேமுடியும் சிலரால்  ஞானசாரதேரர் காப்பாற்ற வந்தாலும் அதை தடுக்க சில தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறவாதோர்கள் இந்த தேர்தலில் க்ண்ணுற்றோம் நாங்கள்  உன்மையை சொல்லணும் கூட்டமைப்பை மண் கவ்வ வச்சிருக்கம் அது போதும் மக்கள் என்னத்தை விடும்புகிறார்கள் மட்டக்களப்பிலும் , அம்பாறையிலும் என சொல்லி இருக்கிறம் வேணுமென்றாக் சில நாட்களுக்கு பின் ஆய்வுக்கட்டுரைகள் வரும் இணைக்கிறோம்  முஸ்லீம்களால் எல்லை கிராமங்கள் மட்டுமே காணிகள் பிடிப்பது  , இனமாற்றும் நடவடிக்கைகள் ,  அடாவடிகள் எல்லாம் எல்லா காலத்திலும் நடந்துகொண்டுதான் வருகிறது அப்படி தடுத்து நிறுத்தியதாக  கூட்டமைப்பு எம்பிக்கள் யாராவது சொல்லி இருக்கிரார்களா இல்லை அவர்கள் அவர்கள் வேலையை பார்க்கட்டும் நாங்கள் எங்கள்வேலையை பார்ப்போம் நாங்கள் உழைத்தால்தான் சோறு இன்று வரைக்கும் அரசியலால் ஒரு கிலோ அரிசி  கிடைச்சிருக்குமா என்பது என் 35 வயது வாழ்வில் சந்தேகமே . அதாவுல்லா கிட்டதட்ட பல தமிழர்களுக்கு வேலை வழங்கியுள்ளார் ஏன் தமிழர்களும் வாக்கு அளித்துள்ளார்கள் ஆக மக்களுக்கு செலவுக்கும் வாழ்க்கை நடத்துவதற்கும் பணம் தேவை தேசியம் தேவையில்லை , தீர்வும் தேவை இல்லை என அவரவர் வயிற்றுக்கும் மட்டுமே தெரியும்  வெளிநாடுகளிலிருந்து  பார்ப்பபவர்களுக்கு தெரியாது கிழக்கு நிலமை வாழ்ந்து பார்ப்பவனுக்கே அதன் அருமை தெரியும்  கடக்ட் மச்சி  ஒன்றை தக்க வைக்க ஆள் வேண்டுமென்ற நினைப்புத்தான் எங்களுக்கும் இதன் அர்த்தம் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன்