Jump to content

தமிழ் இளைஞர்களைக் கொண்ட, ஊர்காவல் படை உருவாக்க வேண்டும் என கோரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மட்டக்களப்பில் தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படை உருவாக்க வேண்டுமென சிங்களப் பேரினவாத அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்! இது தொடர்பான விசேட கூட்டம், மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச சபை செயலகத்தில் நடைபெற்றது."
 
தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படை உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை!
இன்றைய சூழ்நிலையில் தமிழர் பகுதிகளை பாதுகாக்க தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படையினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மட்டக்களப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளிலும் பாடசாலைகள் மற்றும் மதத்தலங்கள் உட்பட கிராமங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொதுமக்களின் பங்களிப்பனை பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கூட்டம் சனிக்கிழமை மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
 
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம். தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
 
இதன்போது ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளில் குழுக்களை அமைத்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.
 
அத்துடன் தமிழ் எல்லைப்பகுதிகளின் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் ஊர்காவல் படைப்பிரிவினை அமைக்க நடவடிக்கையெடுக்குமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டன.
 
கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம் பிரதேசங்களை பாதுகாக்க ஊர்காவல் படை அமைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது போல தமிழ் பிரதேசங்களை பாதுகாக்க தமிழ் இளைஞர்களைக் கொண்டு ஊர்காவல் படை அமைக்கப்படவேண்டும் என பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இங்கு வேண்டுகோள் விடுத்தனர்.
 
தமது பாதுகாப்பினை கருத்தில்கொண்டு தமிழ் இளைஞர்களை ஊர்காவல் படையில் இணைத்து பாதுகாப்பினை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
இது தொடர்பான அறிக்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.
 
இனங்களிடையே விரிசல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்த்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச செயலாளரினால் இங்கு அறிவுறுத்தப்பட்டது.
 
இதன்போது கிராம மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் பாதுகாப்பு தரப்பினருக்கு தேவையான உதவிகளை வழங்குவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இழவும் தேவையில்லை.. குறைந்தது.. மாகாண பொலிஸ் அதிகாரங்களை தமிழ் மக்களிடம் வழங்கினால் போதும். 

மேலும் கிழக்கில் நடந்த தாக்குதலுக்கு சம் சும் கும்பல் தான் பொறுப்பு. அவர்கள் தான் மாகாண அதிகாரங்களையும் முஸ்லிம் மத வெறியர்களிடம் வழங்கி.. முஸ்லிம் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் இந்த அளவுக்கு தமிழ் மக்கள் மீதான கொலைவெறியுடன் தாண்டவமாட இவர்களே காரணம். 

விடுதலைப்புலிகள் காலத்தில் வாலை சுருட்டிக்கொண்டிருந்த இந்தக் கூட்டம்.. இப்போ.. தமிழ் மக்களை இலக்கு வைத்து ஐ எஸ் பயங்கரவாதிகளின் துணையுடன் தாக்குதல் நடத்தும் அளவுக்கு.. இவர்களை..  செயற்பட இடமளித்தது தான் தமிழ் மக்கள் செய்த மகா தவறு. 

இந்தப் பயங்கரவாதம் தொடர்பில் யாழில் பலமுறை எழுதிய போதும்.. நிழலி உட்பட பலர் அதனை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கடாசி எறிந்த வரலாறும் உண்டு. 

இன்னும் காத்தான்குடி சம்பவத்தை எடுத்ததற்கும் உதாரணம் காட்டும் எம் அதி புத்திசாலிகள் சிலர்.. கிழக்கில் சைவ ஆலயங்களில் நிகழ்ந்தப்பட்ட படுகொலைகள்.. மற்றும் செங்கலடிப் படுகொலை.. கல்முனைப்படுகொலை.. மூதூர் படுகொலை என்று பல படுகொலைகளை அரங்கேற்றிய இஸ்லாமிய ஜிகாத் மற்றும்.. முஸ்லிம் ஊர்காவல் படை காடைகளின் செயற்பாடுகள் குறித்து வாயும் திறப்பதில்லை.

இன்று பள்ளிவாசல்களில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படும் போது செய்தி வெளியிடும் ஊடகங்கள் 1990 களில் வடக்கில் குறிப்பாக யாழ் குடா நாட்டில்.. பள்ளிவாசல்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும்.. பின்னர் அவை விடுதலைப்புலிகளால் பறிமுதல் செய்யப்பட்டு.. தமிழ் மக்கள் மீது அன்றே கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்க வேண்டிய இந்தக் கொலைகளை தடுத்து நிறுத்தியமையை.. எந்த ஊடகமும் இன்று வரை இதய சுத்தியோடு பேசவில்லை.

சம் சும் கும்பல் அண்மை வரை கூட இந்த விடயத்தை.. இனச்சுத்திகரிப்பு என்று விளித்துக் கருத்துக் கூறி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில்.. தமிழ் மக்கள் மீதான.. இந்த இஸ்லாமிய மதப் பயங்கரவாத தாக்குதலுக்கும் குறிப்பாக சுமந்திரனுக்கும் உள்ள ரகசியத் தொடர்பு தொடர்பில் மக்கள் ஆராய்ந்தறிந்து கொள்ள வேண்டும். இவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

சிங்கள படைகள தேவைக்கு அதிகமாக உள்ளனர்.  அவர்களை தேவைக்கு ஏற்ப, இடத்துக்கு ஏற்ப பயன்படுத்தலாம். தமிழ் மக்களை ஊர்காவல் படையில் சேர்த்து இனமுறுகலை மேலும் வலுப்படுத்த யாரோ முற்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

மீண்டும் பொம்மலாட்டமா?

சிங்களம் தனக்கேற்றவாறு ஆட்டுவிக்கும்😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லீமை அகற்றிவிட்டு தமிழ் முதலமைச்சர்.  தமிழ் ஆளுனரை நியமிக்க சொல்லி மத்திய அரசிடம் மனு போடலாமே,அது செய்யமாட்டீர்கள் ஆனால் முஸ்லீம் அதிகாரத்திலுள்ள பிரதேசத்தில் தமிழ் ஊர்காவல்படை என்று ஒன்றை ஆரம்பித்து ..மத்திய அரசு சிங்களம். மாநில அரசு முஸ்லீம்,இடையில் தமிழர் ஊர்காவல்படை என்றால். எஞ்சியிருக்கும் தமிழர்களையும் காவு வாங்க எவ்வளவுநாள் திட்டம் போட்டீர்கள்? தனக்கு ஆபத்து வருகிறதென்றால்.நாளைக்கே சிங்களம் காலில் வீழ்ந்து அவர்களுடன் முஸ்லீம் ஒற்றுமை ஆகிடுவான்..இடையில் நின்ற தமிழன் பொழைப்பு மறுபடியும் அம்போ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.