பிழம்பு

யாழில் வாள்வெட்டு - முதியவர் பலி ; 7 பேர் படுகாயம்

Recommended Posts

தென்மராட்சி, கொடிகாமம் பாலாவிப் பகுதியில்  இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

deadbody.jpg

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உள்பட்ட பாலாவிப் பகுதியில்  சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நின்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடாத்தினர்.

சம்பவத்தில் தனது வீட்டில் இருந்த பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் ஆயுதக் கும்பல் ஈட்டியால் (பாரை) குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

மேலும் வீதியால் சென்ற பாலாவியைச் சேர்ந்த  யே.திலிசாந் (வயது-25), பாலாவி வடக்கைச் சேர்ந்த  சோ.கணேசமூர்த்தி (வயது-39), தம்பிராஜா யோகராஜா (வயது -46), த. கவிதரன், நடராஜா வளர்மதி (வயது-52), செல்வராஜா குமார் (வயது-35) மற்றும் வைரமுத்து தவசீலன் (வயது-39) ஆகியோர் வாள் வெட்டு மற்றும் கல் வீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். அவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் ந.வளர்மதி, செ.குமார் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பேலிப் பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் இது மூன்றாவது வாள்வெட்டுச் சம்பவமாகும்.

கடந்த திங்கட்கிழமை மாலையும் கெற்பேலியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டில் இருந்த பெறுமதியான பொருள்களை அடித்து நொருக்கி சேதமாக்கியமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

http://www.virakesari.lk/article/55054

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, பிழம்பு said:

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உள்பட்ட பாலாவிப் பகுதியில்  சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நின்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடாத்தினர்.

சம்பவத்தில் தனது வீட்டில் இருந்த பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் ஆயுதக் கும்பல் ஈட்டியால் (பாரை) குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

அதிரடிப் படையினர், பல இஸ்லாமிய வீடுகளில், மசூதிகளில்... 
சோதனையிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில்.
அங்கு பரவலாக பல ஆயுதங்களும், கூரிய  வாட்களும்  கத்திகளும் தான்.... 
என்பதை செய்திகளில் பார்க்கின்றோம்.

அப்படி இருக்க.... இந்த வாள் வெட்டு மூலம், இன்று ஒரு தமிழ் முதியவர்,
30 பேருக்கு மேற்பட்டவர்களால்,   கொல்லப் பட்டுள்ளார் எனும் போது...
இந்தப் பயங்கரவாதப் பிரச்சினையின்... உண்மையான ஆணிவேரை....
இன்னும், ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறை, கண்டு பிடிக்கவில்லை என்றே தோன்றுகின்றது.
அல்லது...பிரச்சினையை...  திசைமாற்ற, நாடகம் ஆடுகின்றார்களா?

ஏனென்றால்... புத்தி உள்ள எவரும், இந்த நேரத்தில்... 30 பேர் கொண்ட கோஷ்டியாக  சேர்ந்து,
இந்த  அடாவடித்தனம்   செய்து, கொலை செய்யும் அளவிற்கு போய் இருக்க முடியாது. 
பின்னுக்கு... யாரோ... பெரியவர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் யார்?

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

வாள்வெட்டுகுழு ஓரே சமயத்தில் 30 பேருடன் தெருவில் நின்று அடாவடித்தனம் செய்வதிலிருந்து எமக்கு புலப்படுவது என்ன?
1. போதைவஸ்து பயன்படுத்துபவர்கள்
2. குற்றத்திற்கு தண்டனை கிடைக்காது என்ற உயரிடத்தின் உத்தரவாதம்.
3. சிங்கள அரசின் வழிநடத்தல் 
4. இராணுவம் அல்லது  இராணுவத்தின் கைக்கூலிகள்
5. தமிழின விரோதிகள்
6. தமிழ் அரசியல்வாதிகளின் செயல்திறனற்ற தன்மை
7. ஆளுனர் உட்பட வடக்கின் உயர்மட்ட சிவில் அதிகாரிகளின் உடன்பாடு

புதிய ஆளுனர் வடக்கில் அமைதியையும் சீரான பாதுகாப்பான வாழ்கையையும் மக்களுக்கு உறுதிமொழி கொடுத்தது என்னவாயிற்று?

பந்தாவுக்கு பெளத்த மகாநாடு நடத்துவதிலும் பார்க்க மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குற்றச்செயல்கள் அரஜகம் முதலில் ஒழிக்கப்படவேண்டும் என்பதை ஆளுனர் அறிந்திருக்காத முட்டாளா?

ஆளுனர் ஆட்சியிலும் வாள்வெட்டுக் கலாசாரம் தொடர்வதன் அர்த்தம் என்ன? வள்வெட்டு சமாசாரத்தைப்பற்றி வடமாகாண ஆளுனர் அலட்டிக்கொண்டதாக இதுவரை  எந்த செய்தியிலும் வந்ததுமில்லை ஏன்?

பசுத்தோல் போர்த்த ஓநாய்களை அரசு களமிறக்கியுள்ளது.

Edited by vanangaamudi
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஒரு கட்டத்தில் சனமே பொறுக்கமுடியாமல் திருப்பி அடிக்கும் அப்ப இந்த செய்தியை பார்த்துவிட்டு கடந்து போகிறவர்கள் போலிஸ் நீதி நியாயம் என்று அலம்பரை பண்ணுவார்கள் பாருங்க .

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, vanangaamudi said:

வாள்வெட்டுகுழு ஓரே சமயத்தில் 30 பேருடன் தெருவில் நின்று அடாவடித்தனம் செய்வதிலிருந்து எமக்கு புலப்படுவது என்ன?

இதன் பின்னணியில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இராணுவக் கட்டமைப்புக்கள் தான் உள்ளன என்ற  விடயத்தை சந்தேகத்துக்கு அப்பால் தெளிவுபடுத்துகிறது!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுமக்கள் சாட்சியமளிக்க மறுப்பு

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பலி கிராமங்களுக்கு இடையே இடம்பெற்ற வன்முறையில் சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுமக்கள் சாட்சியமளிக்க மறுப்பதுடன், விசாரணைக்காக வீடுகளுக்குச் சென்றால் கதவடைப்புச் செய்கின்றனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

police.jpg

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பலி கிராமங்களுக்கு இடையே கடந்த ஒரு மாத காலமாக முறுகல் நிலை தொடர்கிறது. இடையிடையே கைகலப்பு – வாள்வெட்டு வன்முறையும் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை வன்முறை உக்கிரமடைந்து வாள்வெட்டு வன்முறை இடம்பெற்றது.

பாலாவி மற்றும் கெற்பலியைச் சேர்ந்த சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நின்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடாத்தினர்.

சம்பவத்தில்  வீட்டில் இருந்த பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் வன்முறைக் கும்பல் ஈட்டியால் (பாரை) குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

மேலும் வீதியில் சென்ற பாலாவியைச் சேர்ந்த  யே.திலிசாந் (வயது-25), பாலாவி வடக்கைச் சேர்ந்த  சோ.கணேசமூர்த்தி (வயது-39), தம்பிராஜா யோகராஜா (வயது -46), த. கவிதரன், நடராஜா வளர்மதி (வயது-52), செல்வராஜா குமார் (வயது-35) மற்றும் வைரமுத்து தவசீலன் (வயது-39) ஆகியோர் வாள் வெட்டு மற்றும் கல் வீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். அவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

படுகாயமடைந்தவர்களில் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

“இரண்டு கிராமங்களுக்கு இடையே கடந்த ஒரு மாதகாலமாக முறுகல் நிலை தொடர்கிறது. சில வன்முறைகளும் அங்கு இடம்பெற்றன. எனினும் நேற்று செவ்வாய்க்கிழமை கூரிய ஆயுதங்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

சம்பவத்தையடுத்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் விசாரணைக்காக கிராமங்களிலுள்ள வீடுகளுக்குச் சென்றால் மக்கள் வீட்டுக்கதவை அடைத்துவிட்டு ஒத்துழைப்புத் தர மறுக்கின்றனர். வன்முறைகள் தொடர்பில் சாட்சியம் வழங்க எவரும் முன்வருகிறார்கள் இல்லை.

சாட்சியம் வழங்கினால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அந்த ஊர்களின் மக்கள் அச்சமடைகின்றனர். அதனால் வன்முறைகளுடன் தொடர்புடைய 20 பேர் அடையாளம் காணப்பட்ட போதும் கைது செய்ய முடியவில்லை.

இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தலைமறைவாகியுள்ளனர். அனைவரும் கைது செய்யப்படுவார்கள்’ என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/55144

Edited by பிழம்பு

Share this post


Link to post
Share on other sites

கள்ள மணல் ஏற்றும் குழுக்கள்  மேற்கொண்ட தாக்குதல்.
கிராம மக்கள் எல்லோரும் எதிர்க்காத போது தாக்கப்பட்ட குடும்பம் மட்டும் பொலிசாருக்கு முறையிட்டுள்ளனர்.
அதன் பின்னர் நடந்தது விளங்குது தானே!

Share this post


Link to post
Share on other sites

ஒரு குழு முழுக்கிராமத்தையே குறிவைத்து கிராமவாசிகளையும் வருவோர் போவோரையும் தாக்கும்போது வீடுகளுக்கு சென்று விசாரணை செய்யவேண்டிய அவசியம் கிடையாது. குற்றவாளிகளால் மக்களுக்கு ஆபத்து உண்டு என்று வந்தபின் இது பொலிசாரின் பிழையான அணுகுமுறை. 

Share this post


Link to post
Share on other sites

எனக்கு என்னமோ அந்த ஊரிலை வேறை பிரச்சனை இருக்கிற மாதிரித்தான் தெரியுது. :cool:

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

எனக்கு என்னமோ அந்த ஊரிலை வேறை பிரச்சனை இருக்கிற மாதிரித்தான் தெரியுது. :cool:

அந்த பிரச்சினை என்னென்டால் அந்த ஊருக்கு ஒரு மொள்ளமாரி ஆளுனர் இருக்கிறார். அதான். 😎

Share this post


Link to post
Share on other sites

வன்முறையாளர்கள் குறித்த விசாரணைகளுக்கு பொதுமக்கள் கதவடைப்பு….

May 2, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பலி கிராமங்களுக்கு இடையே இடம்பெற்ற வன்முறையில் சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுமக்கள் சாட்சியமளிக்க மறுப்பதுடன், விசாரணைக்காக வீடுகளுக்குச் சென்றால் கதவடைப்புச் செய்கின்றனர் என கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாலாவி மற்றும் கெற்பலி கிராமங்களுக்கு இடையே கடந்த ஒரு மாத காலமாக முறுகல் நிலை தொடர்கிறது. இடையிடையே கைகலப்பு – வாள்வெட்டு வன்முறையும் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வன்முறை உக்கிரமடைந்து வாள்வெட்டு வன்முறை இடம்பெற்றது. கெற்பலியைச் சேர்ந்த சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலாவியை சேர்ந்தவர்கள் மீது வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நின்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடாத்தியது.

சம்பவத்தில் தனது வீட்டில் இருந்த பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் வன்முறைக் கும்பல் ஈட்டியால் (பாரை) குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் வீதியால் சென்ற பாலாவியைச் சேர்ந்த யே.திலிசாந் (வயது-25), பாலாவி வடக்கைச் சேர்ந்த சோ.கணேசமூர்த்தி (வயது-39), தம்பிராஜா யோகராஜா (வயது -46), த. கவிதரன், நடராஜா வளர்மதி (வயது-52), செல்வராஜா குமார் (வயது-35) மற்றும் வைரமுத்து தவசீலன் (வயது-39) ஆகியோர் வாள் வெட்டு மற்றும் கல் வீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். அவர்கள் நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

படுகாயமடைந்தவர்களில் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை கடந்த திங்கட்கிழமை உழவு இயந்திரத்தில் தமது முகங்களை துணிகளால் மறைத்து கட்டியவாறு வந்த 15க்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட கும்பல் ஒன்று கெற்போலி மேற்கில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்த உடமைகளை அடித்து சேதமாக்கி அட்டகாசம் புரிந்துள்ளது.

அந்த சத்தம் கேட்டு அயலவரான க. கனகலிங்கம் (வயது 31) அவ்வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்த நபர்கள் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டு வாளினால் வெட்டி காயப்படுத்தினர்.

குறித்த சம்பவங்களை அடுத்து ஊரவர்கள் திரண்டதும் தாக்குதல் கும்பல் தமது உழவு இயந்திரத்தையும் கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அதனை அடுத்து படுகாயமடைந்த நபரை ஊரவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

கெற்போலி மேற்கில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பழி தீர்க்கும் முகமாகவே பாலாவி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அது தொடர்பில் கொடிகாம காவல்துறையினரிடம் கேட்ட போது ,
‘இரண்டு கிராமங்களுக்கு இடையே கடந்த ஒரு மாதகாலமாக முறுகல் நிலை தொடர்கிறது. சில வன்முறைகளும் அங்கு இடம்பெற்றன. எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை கூரிய ஆயுதங்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் ஐவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தையடுத்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் விசாரணைக்காக கிராமங்களிலுள்ள வீடுகளுக்குச் சென்றால் மக்கள் வீட்டுக்கதவை அடைத்துவிட்டு ஒத்துழைப்புத் தர மறுக்கின்றனர். வன்முறைகள் தொடர்பில் சாட்சியம் வழங்க எவரும் முன்வருகிறார்கள் இல்லை.

சாட்சியம் வழங்கினால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அந்த ஊர்களின் மக்கள் அச்சமடைகின்றனர். அதனால் வன்முறைகளுடன் தொடர்புடைய 20 பேர் அடையாளம் காணப்பட்ட போதும் கைது செய்ய முடியவில்லை.

இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தலைமறைவாகியுள்ளனர். அனைவரும் கைது செய்யப்படுவார்கள்’ என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

#kodikamam #investigation #deny #police

http://globaltamilnews.net/2019/120301/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.