Jump to content

காத்தான்குடியில், 5 இந்தியர்கள், பெண் ஒருவர் உட்பட, 12 பேர் கைது..

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியில், 5 இந்தியர்கள், பெண் ஒருவர் உட்பட, 12 பேர் கைது..

April 30, 2019

மட்டக்களப்பு காத்தான்குடியில்  இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலில்,  விசா இன்றி தங்கியிருந்த 5 இந்தியர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட 12 பேரை இன்று (30.04.19)  கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ரவவைகள், பெரும் திரளான கணினிகள், இறுவெட்டுக்கள் என்பனவும்  மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

IMG_2222.jpg?resize=660%2C495

கடந்த 21 ஆம் திகதி இலங்கையில்   இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் கடற்கரை வீதி தொடக்கம் ஒரு பகுதியை 600 பேர் கொண்ட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (30.04.19) அதிகாலை தொடக்கம் சுற்றிவளைத்து பாரிய தேடுதல் வேட்டையினை நடத்திவருகின்றனர்  இந்தச்  சுற்றிவளைப்பு பகுதிக்கு வெளியில் இருந்தே அங்கிருந்து வெளியே ஒருவரையும் செல்ல விடாமல் வீடுவீடாக சோதனை நடத்திவருகின்றனர்.

IMG_2221__1_.jpg?resize=660%2C495

இதேவேளை தனது அலுவலகத்தில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். #Kattankudy #srilanka #arrested #roundup #MLAMHizbullah #stf  #eastersundayattacksrilanka 

kk.jpg?resize=660%2C495

http://globaltamilnews.net/2019/120095/

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். 

சுண்ணத்துச் செய்யப்படாத ரவைகளை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

Quellbild anzeigen

ஆகவே  எங்களுக்கும் அவைக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது. 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி 'புது கண்டுபிடிப்பு'களை பதிவு செய்வதில் கில்லாடிதான் நீங்கள்..! 🤗

Link to comment
Share on other sites

8 hours ago, கிருபன் said:

காத்தான்குடியில், 5 இந்தியர்கள், பெண் ஒருவர் உட்பட, 12 பேர் கைது

எங்கெல்லாம் உண்மையான பயங்கரவாதங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்தியர்களும் இருப்பார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, போல் said:

எங்கெல்லாம் உண்மையான பயங்கரவாதங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்தியர்களும் இருப்பார்கள்!

ஈஸ்ச்டர் தற்கொலை தாரிகள் அநேகர் இந்தியா மொபைல் போன்களுடன் இறுதி வரையிலும் தொடர்பில் இருந்துள்ளனர் .குண்டு வெடிப்பின் பின் அந்த நம்பர்களும் செயல் இழந்து உள்ளது இந்தியா மீது பலத்த சந்தேகத்தை உண்டு பண்ணியுள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

ஈஸ்ச்டர் தற்கொலை தாரிகள் அநேகர் இந்தியா மொபைல் போன்களுடன் இறுதி வரையிலும் தொடர்பில் இருந்துள்ளனர் .குண்டு வெடிப்பின் பின் அந்த நம்பர்களும் செயல் இழந்து உள்ளது இந்தியா மீது பலத்த சந்தேகத்தை உண்டு பண்ணியுள்ளது .

இந்தியான்ட  விளையாட்டு என்று தான் மைத்திரி காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்தாரோ!... ஆனால் இந்தியா விளையாட்டை வினையாக்கிட்டுது 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

ஈஸ்ச்டர் தற்கொலை தாரிகள் அநேகர் இந்தியா மொபைல் போன்களுடன் இறுதி வரையிலும் தொடர்பில் இருந்துள்ளனர் .குண்டு வெடிப்பின் பின் அந்த நம்பர்களும் செயல் இழந்து உள்ளது இந்தியா மீது பலத்த சந்தேகத்தை உண்டு பண்ணியுள்ளது .

சிங்கள பிரதேசங்களில் அடர்த்தியாக கிறிஸ்தவர்களும் தேவாலயங்கள் இருந்தாலும்......தமிழர் சார்ந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டதன் பின்னணி என்னவாக இருக்கும்? 

சிங்கள பிரதேசங்களில் தாக்குதலை நடத்தினால் பின்விளைவுகள் அகோரகனமானதாக இருக்கும் என நினைத்தார்களா?
அல்லது?????
ஈழத்தமிழர்கள் கேள்வி கேட்க நாதியற்ற இனம் என நினைத்தார்களா?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் உருண்டையா அல்லது  நியுட்டனின் 3ம் விதியா என தெரியவ்வில்லை அப்படி இருக்கிறது முஸ்லீம் பிரதேசங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உலகம் உருண்டையா அல்லது  நியுட்டனின் 3ம் விதியா என தெரியவ்வில்லை அப்படி இருக்கிறது முஸ்லீம் பிரதேசங்கள் 

மீண்டும் உங்களை விரைவாக கண்டதில் மகிழ்ச்சி, நிலைமை எப்பிடி உள்ளது? முடிந்தால் சிறிது விபரமாக சொல்லவும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

மீண்டும் உங்களை விரைவாக கண்டதில் மகிழ்ச்சி, நிலைமை எப்பிடி உள்ளது? முடிந்தால் சிறிது விபரமாக சொல்லவும்  

நாழுக்கு நாள் விசாரணைகள் மூலம் தினம் தினம் பதுக்கிவைப்பட்டுள்ள ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன முஸ்லீம் பிரதேசங்களில் (இலங்கையில் உள்ள எல்லா இடங்களிலும் முஸ்லீம்கள் உள்ள) தற்போதுதான்  ஒட்டுமொத்த மக்களுக்கும் இவர்களின் சுயரூபம் தெரிகிறது  அம்பாறை மாவட்டம் கொஞ்சம் அதிக செக்கிங்  சுற்றிவளைப்புகளும் அதிகம்.  மட்டக்களப்பு செல்லும் வாகனங்கள் முற்றுமுழுதாக பரிசோதிக்கப்படுகிறது .  ராணுவத்தினரின் சுற்றிவளைப்புக்களுக்கும் விசாரணைக்கும் பயந்து ஆயுதங்களை வெளியில் வீசியும் செல்கிறார்கள் அனைத்து திருட்டு தொழில்களும் கடத்தல்களும் மொத்தமாக பிடிக்கப்பட்டுவருகின்றது .

பாடசாலைகளுக்கு சீ சீ டீவி கமறாக்கள் மற்றும் பொலிஸ் ராணுவங்கள் கொடுக்க இருக்கிறார்கள்  பாடசாலை ஆரம்பமாவதற்கு பள்ளி மாணவர்களை புத்தக பைகள் எடுத்து வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது அது போக மாணவர்களை மொத்தாமாக பாடசாலையிலிருந்து விடக்கூடாது எனவும் பல அறிவிறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது .

மக்களின் சுதந்திரமான வாழ்க்கை இன்று பயத்துடன் கழிந்து போகிறது எல்லோருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாழுக்கு நாள் விசாரணைகள் மூலம் தினம் தினம் பதுக்கிவைப்பட்டுள்ள ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன முஸ்லீம் பிரதேசங்களில் (இலங்கையில் உள்ள எல்லா இடங்களிலும் முஸ்லீம்கள் உள்ள) தற்போதுதான்  ஒட்டுமொத்த மக்களுக்கும் இவர்களின் சுயரூபம் தெரிகிறது  அம்பாறை மாவட்டம் கொஞ்சம் அதிக செக்கிங்  சுற்றிவளைப்புகள் அதிகம்.  மட்டக்களப்பு செல்ல வாகனங்கள் முற்றுமுழுதாக பரிசோதிக்கப்படுகிறது .  ராணுவத்தினரின் சுற்றிவளைப்புக்களுக்கும் விசாரணைக்கும் பயந்து ஆயுதங்களை வெளியில் வீசியும் செல்கிறார்கள் அனைத்து திருட்டு தொழில்களும் கடத்தல்களும் மொத்தமாக பிடிக்கப்பட்டுவருகின்றது .

பாடசாலைகளுக்கு சீ சீ டீவி கமறாக்கள் மற்றும் பொலிஸ் ராணுவங்கள் கொடுக்க இருக்கிறார்கள் ஆரம்பமாவதற்கு பள்ளி மாணவர்களை புத்தக பைகள் எடுத்து வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது அது போக மாணவர்களை மொத்தாமாக பாடசாலையிலிருந்து விடக்கூடாது எனவும் பல அறிவிறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது .

மக்களின் சுதந்திரமான வாழ்க்கை இன்று பயத்துடன் கழிந்து போகிறது எல்லோருக்கும் 

தகவல்களுக்கு நன்றி! இதோடாவது சிலரின் கொட்டம் அடக்கப்பட்டால் நல்லது, குறிப்பாக ஹிஸ்புல்லாஹ், ரிசாட் போன்றவர்கள். அவர்களை பற்றிய பார்வை இப்பொழுது எப்பிடி உள்ளது? அம்பாறையில் தமிழர்களின் நிலை எப்பிடி உள்ளது? எழுதுவது பாதுகாப்பு அற்றது என்றால் கண்டபடி எழுத வேண்டாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

தகவல்களுக்கு நன்றி! இதோடாவது சிலரின் கொட்டம் அடக்கப்பட்டால் நல்லது, குறிப்பாக ஹிஸ்புல்லாஹ், ரிசாட் போன்றவர்கள். அவர்களை பற்றிய பார்வை இப்பொழுது எப்பிடி உள்ளது? அம்பாறையில் தமிழர்களின் நிலை எப்பிடி உள்ளது? எழுதுவது பாதுகாப்பு அற்றது என்றால் கண்டபடி எழுத வேண்டாம் 

ம்ம்  பிரதான போக்குவரத்து பாதைகளில் ராணுவம் , கடற்படை விசேட ராணுவ படையணிகள் நிற்கிறார்கள் சந்தேகத்துகிடமான வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன அதுபோக அம்பாறை மாவட்டத்தில் மட்டும் ஊரடங்கு அறிவிப்பு இரவு 8. மணி தொடக்கம் காலை 6 மணி வரையுள்ளது  இது தளர்த்தப்படலாம் . நாட்கள் செல்லும் 

தமிழர்களை பொறுத்த வரையில் இது பழகிய ஒன்றுதானே ஆனால் இளையோருக்கு மட்டும்  கொஞ்சம் கஸ்ரமாக இருக்கலாம் ஆனால் முஸ்லீம் மக்களுக்கு மிக கெடுபிடியாக உள்ளதை  காணக்கூடியதாக உள்ளது . அவர்கள் பழக்கப்படவில்லையே .

 இலங்கையில் நடக்காததையா எழுதுகிறோம்  மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் அதுதான் எல்லோரினதும் விருப்பமும் கூட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம்  பிரதான போக்குவரத்து பாதைகளில் ராணுவம் , கடற்படை விசேட ராணுவ படையணிகள் நிற்கிறார்கள் சந்தேகத்துகிடமான வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன அதுபோக அம்பாறை மாவட்டத்தில் மட்டும் ஊரடங்கு அறிவிப்பு இரவு 8. மணி தொடக்கம் காலை 6 மணி வரையுள்ளது  இது தளர்த்தப்படலாம் . நாட்கள் செல்லும் 

தமிழர்களை பொறுத்த வரையில் இது பழகிய ஒன்றுதானே ஆனால் இளையோருக்கு மட்டும்  கொஞ்சம் கஸ்ரமாக இருக்கலாம் ஆனால் முஸ்லீம் மக்களுக்கு மிக கெடுபிடியாக  காணக்கூடியதாக உள்ளது . அவர்கள் பழக்கப்படவில்லையே .

 இலங்கையில் நடக்காததையா எழுதுகிறோம்  மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் அதுதான் எல்லோரினதும் விருப்பமும் கூட

நன்றி, ஆம் தமிழர்களுக்கு இது பழகியதுதான். இந்த முறை , நிலைமை கொஞ்சம் வித்தியாசமானது. அதனால் தமிழர்களின் வீடுகளும் சோதனையிடப்படுகிறதா என்று அறிந்துகொள்ள கேட்டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இருக்குமென்று நான் நினைக்கவில்லை. தானே செய்ய எத்தனிக்கும் தாக்குதல் ஒன்றுபற்றி இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியா அறிவிக்க வேண்டிய நோக்கமென்ன? ஆகவே, இந்தியாவிற்கு இந்தத் தாக்குதல்களில் பங்கிருக்கின்றது என்பது அடிபட்டுப் போய்விடுகிறது. ஆனால், இந்த தாக்குதல்களுக்குப் பின்னரான நிலைமைகளை தனக்குச் சாதகாமகப் பாவிக்க இந்தியா முனைகின்றதென்பதை மறுப்பதற்கில்லை. இதன் ஒரு அங்கம்தான் தனது தேசிய பாதுகாப்புப் படையினரையும், புலநாய்வுத்துறையையும் இந்தியா களமிறக்கியிருப்பது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் தற்போதைய பங்களிப்புகளுக்கு அமெரிக்காவின் மறைமுக ஆசீர்வாதமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இங்கே குறிப்பிடப்படவேண்டிய முக்கிய விடயம், இந்தியப் பிரஜைகள் இத்தாக்குதலில் தொடர்புபட்டிருப்பது. அண்மைக்காங்களில் இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாட்டு முஸ்லீம் இளைஞர்களை நோக்கி பாக்கிஸ்த்தானின் புலநாய்வுப்பிரிவான ஐ. எஸ் . ஐ செயற்திட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றதனால் ஆகும். இந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு ஆளும் இந்துத்துவ பாரதீய ஜனதாக் கட்சிமீதிருக்கும் இயல்பான கோபத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் ஸ்த்திரத்தன்மையைக் குலைப்பதற்கு பாக்கிஸ்த்தான் முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது. பாக்கிஸ்த்தானின் திட்டங்களுடனும், சவுதி போன்ற மத்திய கிழக்கு சுன்னி இஸ்லாம் நாடுகளினதும் பண உதவியுடனும், சர்வதேசப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் கள் இலங்கை இந்திய முஸ்லீம் சமூகளுக்குள் ஊடுருவியிருக்கிறார்கள். சிரியாவில் நடந்த போரில் பங்களிப்பதற்கென்று இவ்விடங்களிலிருந்து சென்ற நூற்றுக்கணக்கான முஸ்லீம் தீவிரவாத இளைஞர்கள், சிலர் போரில் கொல்லப்பட, மீதமானோர் மீண்டும் நாடு திரும்பியிருக்கிறார்கள். இவ்வாறு நாடு திரும்பிய இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊரிப்போன தமிழக - இலங்கை முஸ்லீம்கள் தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்கள். அதனாலேயே, தமிழகத்தில் தெளவீத் ஜமாத் அமைப்பிற்கும், இலங்கையில் தேசிய தெளவீத் ஜமாத் அமைப்பிற்கும் தொடர்புகள் உருவாகியிருக்கின்றன.  இந்திய புலநாய்வுத்துறை தமது விசாரணைகளை கேரளாவில் ஆரம்பித்தபோதே இலங்கை அமைப்பிற்கும் இந்திய அமைப்பிற்குமான தொடர்பு வெளிப்பட்டு, இலங்கைக்கும் அறிவிக்கப்பட்டது. 

 போரியல், நாசகாரத் தாக்குதல்கள், குண்டுதயாரித்தல், தற்கொலைத் தாக்குதல்கள் போன்றவற்றில் பரீட்சாயமானவர்களான இவர்களை பாக்கிஸ்த்தானிய - சவூதிக் கூட்டு பாவிக்கிறது. 

இதெல்லாவற்றையும் விட முக்கியமான விடயம், ஏன் இந்தத் தாக்குதல்கள் பற்றி இலங்கை எதுவுமே செய்யவில்லை என்பதும், மைத்திரி தெரிந்திருந்தும் ஏன் மறைத்தார் என்பதும். 

பார்க்கப்போனால், இத்தாக்குதல் பற்றி நன்கே தெரிந்திருந்தும், சிறுபான்மை தமிழ் மற்றும் சிறுபான்மைச் சிங்களக் கத்தோலிக்கர்கள் தானே என்கிற அசமந்தப் போக்கோ அல்லது நாட்டில் அசாதாரண நிலையொன்றினை ஏற்படுத்துவதன்மூலம் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தலாம் என்கிற மைத்திரிபால சிறிசேன உற்பட்ட மகிந்த சார்பு அரசியல்வாதிகள் மற்றும்  அதிகாரிகளினது செயற்பாடோதான் இத்தாக்குதல்களை ஏதுவாக்கியிருக்கின்றன. 

Link to comment
Share on other sites

2 hours ago, ரஞ்சித் said:

இந்த பயங்கரவாதிகள் கோத்தாவின் காலத்தில் அவரின் இரகசிய அரச பணத்தில் சம்பளம் பெற்றவர்கள் என்று அமைச்சர்கள் சொல்லி இருக்கிறார்கள். தான் இப்படியான அரபு மொழியில் புலமை பெற்ற ஐயாயிரம் புலனாய்வாளர்களை வைத்திருந்ததாக கோத்தாவே சொல்லி இருக்கிறார். இந்த தாக்குதலால் பெரும் பயன்பெறுபவரும் அவர் ஒருவரே. ஆட்சியை கைப்பற்ற பௌத்தர்களை கொல்ல அவர்கள் விரும்பி இருக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

பார்க்கப்போனால், இத்தாக்குதல் பற்றி நன்கே தெரிந்திருந்தும், சிறுபான்மை தமிழ் மற்றும் சிறுபான்மைச் சிங்களக் கத்தோலிக்கர்கள் தானே என்கிற அசமந்தப் போக்கோ அல்லது நாட்டில் அசாதாரண நிலையொன்றினை ஏற்படுத்துவதன்மூலம் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தலாம் என்கிற மைத்திரிபால சிறிசேன உற்பட்ட மகிந்த சார்பு அரசியல்வாதிகள் மற்றும்  அதிகாரிகளினது செயற்பாடோதான் இத்தாக்குதல்களை ஏதுவாக்கியிருக்கின்றன. 

மைத்திரி &மகிந்தா கோஸ்டி நினைத்திருக்கலாம் சிறிய தாக்குதல் ஒன்று  நடக்கும் அதை இலகுவாக கையாலலாம் என்று....ஆனால் அவர்கள் நினைக்கவில்லை தற்கொலை தாக்குதல் நடை பெறும் என்று....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கொஞ்சம் தலை நிமிர்ந்தாலும் இந்தியா விடாது.ஆனால் இதில் இந்தியா சம்பந்தப்பட்டிருக்க வாயப்பு குறைவு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.