Jump to content

வவுணத்தீவு கொலைகள் – முன்னாள் போராளியை விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வவுணத்தீவு கொலைகள் – முன்னாள் போராளியை விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

May 1, 2019

 

ajanathan-family.jpg?resize=800%2C534மட்டக்களப்பு வவுணத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு காவல்துறையினரின் படுகொலைகள் தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிப்பதாக ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், குறித்த காவல்துறையினரை கொலை செய்தது தேசிய தௌஹீத் ஜமா அத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் என தெரிய வந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவல்துறை மாஅதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக தன்னிடம் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளதாக மனோககேணசன் தனது முகப் புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அஜந்தனின் மனைவியான செல்வராணி ராசகுமாரனுக்கு அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகம் அறிவித்துள்ளதாகவும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#vavunatheevu #manoganesan #president #ajanthan #ltte

 

http://globaltamilnews.net/2019/120139/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா, கணேசன்...

இந்த மனிசன் சும்மா அள்ளி எறியும் வாயால .... பிறகு விழுந்து படுத்திரும்.

திரத்திப் பிடியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கு தமிழர்களின் ஓட்டுக்களை பெற்ற கூட்டமைப்பு செய்ய வேண்டிய வேலையை இவர் செய்கிறார். உண்மையில் விடுவித்தால் சந்தோசம்.

இவருக்கு நடந்ததை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லவேண்டும். எப்படியெல்லாம் தமிழர்கள் இன்றும் பெளத்த & சோனக கூட்டினால் வதைக்கப்படுகிறார்கள் என்று.....

Link to comment
Share on other sites

24 minutes ago, MEERA said:

வடகிழக்கு தமிழர்களின் ஓட்டுக்களை பெற்ற கூட்டமைப்பு செய்ய வேண்டிய வேலையை இவர் செய்கிறார். உண்மையில் விடுவித்தால் சந்தோசம்.

கூட்டமைப்பினர் புதிதாகக் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டுக் கூரைகளுக்கு, வடகிழக்கு தமிழர்கள் கொடுத்த ஓ( ட்)டுகள்  போதுமா என்ற தவிப்பில் அவர்கள் இருக்கும்போது, நீங்க வேற...🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசு இவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நட்டஈடும் கொடுக்க வேண்டும். இதே ஐரேப்பிய / அமெரிக்கா நாடுகளாக இருந்தால். பாதித்தவர் வழக்கு தொடந்த்து நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, colomban said:

அரசு இவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நட்டஈடும் கொடுக்க வேண்டும். இதே ஐரேப்பிய / அமெரிக்கா நாடுகளாக இருந்தால். பாதித்தவர் வழக்கு தொடந்த்து நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ளலாம்.

அவர்களை உயிருடன் வாழவிடுவதே பெரிய விடயம்...

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

அரசு இவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நட்டஈடும் கொடுக்க வேண்டும். இதே ஐரேப்பிய / அமெரிக்கா நாடுகளாக இருந்தால். பாதித்தவர் வழக்கு தொடந்த்து நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ளலாம்.

அங்கேயும் வழக்கு தொடர்ந்தால் நட்ட ஈட்டை பெற்று கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுவரை இவர் விடுவிக்கப்பட்டதாக (?) தெரியவில்லையே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட அநியாயம் வேறு என்ன இருக்கிறது?

இஸ்லாமியப் பயங்கரவாதம் செய்த கொலைக்காக அப்பாவி போராளி சிறையில் மாதக் கணக்காக சித்திரவதை அனுபவித்து இன்று தெளிவாக அவர் நிரபராதி என்று தெரிந்தும்கூட வெளியில் வரமுடியாத நிலை. 

அப்பாவிகளை விடுவிக்கவே தயங்கும் சிங்களப் பேரினவாதம், அரசியல்க் கைதிகளை எப்போது விடுதலை செய்யப்போகிறது?

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தாக்குதலுக்குப்பிறகு சர்வதேசத்தால் கொம்புசீவப்பட்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் இனிமேல் கட்டுக்கடங்காமல் துள்ளப்போகிறது. அனுபவிக்கப்போவதோ என்றும்போல தமிழர்களும், அப்பாவி முஸ்லீம்களும்தான். 

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

இன்றுவரை இவர் விடுவிக்கப்பட்டதாக (?) தெரியவில்லையே 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க பாதுகாப்பு செயலாளரின் கடிதம் / கையொப்பம் கிடைக்க வேண்டுமாம். அதை பெறுவதில் உள்ள தாமதம் தான் அவரின் விடுதலையை தாமதிக்குதாம் என்று எங்கோ செய்தி வாசித்த ஞாபகம்.

அங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவராவது இது தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் அப்படி யாரும் கொடுக்கப் போவதில்லை என்பதால் சிங்களம் இரங்கி விடுவிக்கும் வரைக்கும் காத்திருக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரஞ்சித் said:

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தாக்குதலுக்குப்பிறகு சர்வதேசத்தால் கொம்புசீவப்பட்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் இனிமேல் கட்டுக்கடங்காமல் துள்ளப்போகிறது. அனுபவிக்கப்போவதோ என்றும்போல தமிழர்களும், அப்பாவி முஸ்லீம்களும்தான். 

Big Pictureஇல் பார்த்தால் இப்பிடித்தான் நடக்க போகிறது, முஸ்லிம்களை எங்களுக்கு எதிராக கொம்பு சீவி வளரவிட்டார்கள், இப்பொழுது தேவை முடிந்துவிட்டது  சர்வதேசத்தின் ஆதரவுடன் உரிமையாக அடிப்போட பார்க்கிறார்கள். சந்தடி சாக்கில், யாழ் பல்கலைக்கழகத்தில் கைது, தமிழரை மிரட்டுதல் என்று வேறு காரியங்களையும் முடிக்கிறார்கள். எங்கள் பழைய போராளிகளை வைத்து அவர்களுக்கு எதிராக கொம்பு சீவ பார்க்கிறார்கள். நன்றாக சாதித்துக்கொண்டு போபவர்கள் என்னவோ சிங்களவர்கள்தான்.  இந்த முஸ்லிம்கள் என்ன தெனாவெட்டாக ஆட்டம் போட்டுகொண்டு திரிந்தார்கள். சிங்களவர்கள் இந்த அளவுக்கு இவர்கள் செய்வார்கள், சுற்றுலாத்துறை இந்த அளவுக்கு அடி வாங்கும்  என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதன் தாக்கம் வரும் காலங்களில் சாதாரண மனிதர்களை வந்தடையும் பொது , கோபம் இன்னும் அதிகமாகும். இவர்களின் அடிப்படை வியாபாரம், இனி வரும் காலங்களில் முஸ்லீம்களின் வியாபாரதளங்கள் நல்ல அடி வாங்கும் நான் நினைக்கிறன், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி இல்லை.

இது நீதிமன்றம் போய்விட்ட வழக்கு. ஜனாதிபதி ஒன்றும் நேரடியாக செய்ய சட்டபூர்வமான காரணம் இல்லை. துரிதப்படுத்த தனக்கு கீழான சட்டமா அதிபருக்கு சொல்ல முடியும்.

நீதிமன்றம் தான் விடுதலை உத்தரவு இட முடியும். அவர் மட்டக்களப்பு நிதிமன்றில் பொலீசாரால்,

தோற்றப்பட்டதாகவும், சில வழக்கமான நடவடிக்கைகளின் பின் சில நாட்களில் விடுதலையாவார் என தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2019 at 6:04 AM, Jude said:

அங்கேயும் வழக்கு தொடர்ந்தால் நட்ட ஈட்டை பெற்று கொள்ளலாம்.

எங்கள் வீடுகள் மீது குண்டுபோட்டு அழித்தது பாகிஸ்தானா?
வழக்கை எங்கு போடுவது? சிங்கப்பூரிலா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

எங்கள் வீடுகள் மீது குண்டுபோட்டு அழித்தது பாகிஸ்தானா?
வழக்கை எங்கு போடுவது? சிங்கப்பூரிலா? 

இதை வாசித்தவுடன் எனது சொந்த கதைதான் ஞாபகம் வந்தது, சூரிய கதிர் என்று வெளிக்கிட்ட இரண்டு நாட்களுக்குள் வீட்டுக்கு புக்காராவால் அடித்து தரைமட்டமாக்கினார்கள். திரும்பி வந்தபிறகு அந்த வீட்டுக்கு ஏதாவது நட்ட ஈடு  கிடைக்கும் என்று கொஞ்ச காலம் அலைந்தேன், ஒன்றுமே இல்லை.   இவர்களுக்கு  நட்ட ஈடு பெறவேண்டும் என்றால், பெரிய ஆட்களின் உதவியுடன் அணுகினால் மாத்திரமே ஏதாவது கிடைக்கலாம், அதுவும் சந்தேகம், இலகுவில் தங்கள் பிழைகள் நீதிமன்றத்தால், சட்ட ரீதியாக வருமளவுக்கு விட மாட்டார்கள். இப்ப இருக்கும் நிலையில், அவரை  வெளியில் கொண்டுவர யாராவது உதவி செய்தாலே பெரிய விஷயம்.     

Link to comment
Share on other sites

8 hours ago, Maruthankerny said:

எங்கள் வீடுகள் மீது குண்டுபோட்டு அழித்தது பாகிஸ்தானா?
வழக்கை எங்கு போடுவது? சிங்கப்பூரிலா? 

இல்லை, செவ்வாய் கிரகத்தில் வழக்கு போடுங்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.