Sign in to follow this  
போல்

தற்கொலைதாரியான சஹ்ரான் காசிமையும் வளர்த்தவர் கோட்டாதான் - காதர் மாஸ்டர்

Recommended Posts

பொதுபலசேனாவை வளர்த்த கோத்தாபயதான் தற்கொலைதாரியான சஹ்ரான் காசிமையும் வளர்த்தார் என தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சகர் காதர்மாஸ்தர்.

இது தொடர்பில் ஐபிசி-தமிழ் தொலைக்காட்சியின் அகக்கண் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பான முழுமையான காணொளி.

https://www.ibctamil.com/srilanka/80/119037

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கோட்டா - தவ்ஹீத் ஜமாத் தொடர்பு என்ன? அம்பலப்படுத்திய ஐ.தே.க. உறுப்பினர்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்தை நிறுவக் காணி ஒன்றை பெற்றுக் கொடுத்துள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசார இந்துநில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்றயை தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் அடிப்படைவாதத்தைத் தோற்றுவிக்க கோட்டாபய ராஜபக்ச பல முயற்சிகளை மேற்கொண்டார். 241 ஏ, சிறி சத்தர்வ மாவத்தை, கொழும்பு என்ற முகவரியில் உள்ள காணியை தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்குக் கோட்டாபய ராஜபக்ச பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த அமைப்பின் அலுவலகத்தை அமைப்பதற்கே அவர் இந்தக் காணியை வழங்கினார். இவ்வாறே அடிப்படைவாத அமைப்புக்களுக்கு அவர் உதவிகளை வழங்கியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக அவர் அமைதியாக இருக்கும் முஸ்லிம் இனத்தை இரண்டாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவ்வாறு அனைத்துச் செயற்பாடுகளையும் கீழ்த்தரமான அரசியல் யுக்தியை அவர் மேற்கொண்டார் எனவும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/119060

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

உணர்ச்சி பொங்கும், ஆனால் அறிவற்ற அரசியல் வரலாற்று ஆய்வாளர் திருநாவுக்கரசு!

 

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இந்த மனுஷன் முஸ்லிம்களின் அடாவடிகளை, இஸ்லாம் பயங்கரவாதத்தை மூடி மறைச்சாலும் ஓரளவு விபரமா தான் பேசுறார்!

சம்பந்தன், சுமந்திரன், மாவை, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரன்கள் போற்ற வெங்காயத் தலைவர்களை விட பல மடங்கு திறம் இவர்!

Share this post


Link to post
Share on other sites

இரண்டு வரிகளில் ஒரு நிமிடத்தில் சொல்வதை, மாவை சேனதிராஜா.ஒரு மணிநேரமா மாவரைப்பதுடன் தனது அடிமைத்தன மனநிலைகளையும், தனது ஒட்டுண்ணி வாழ்வு மனநிலைகளையும் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.   

போராட்டம் வெடிக்கும்,ஐ.எஸ்.ஐ.எஸ் விவகாரம். உண்மையை விளக்கும் மாவை சேனதிராஜா.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, Rajesh said:

போராட்டம் வெடிக்கும்,ஐ.எஸ்.ஐ.எஸ் விவகாரம். உண்மையை விளக்கும் மாவை சேனதிராஜா.

இவர் கொஞ்சக் காலமாக போராட்டம் வெடிக்கும் போராட்டம் வெடிக்கும் வெடிக்கும் என்று புலம்பி வருகிறார்!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 5/2/2019 at 11:20 PM, போல் said:

இவர் கொஞ்சக் காலமாக போராட்டம் வெடிக்கும் போராட்டம் வெடிக்கும் வெடிக்கும் என்று புலம்பி வருகிறார்!

சேனாதிராஜா தன்ற பெயருக்கு ஏத்தபடி சேனாதிபதி ஆக துடிக்கிறார்! 😀😀

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • படம்: மனம் போல் மங்கல்யம்(1957) பாடியோர்: A.M.ராஜா & P.லீலா வரிகள்: சுரதா இசை: A.ராமாராவ்.... மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய் மணியான மதராசு, மாப்பிள்ளை டோய் மை லேடி டோய் மை லேடி டோய் மனம் போலே வந்து வாச்ச, பெண் ஜோடி டோய்.. ... கொப்பியிலே பல் தேய்க்கிற, மாப்பிள்ளை டோய் கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய் கொப்பியிலே பல் தேய்க்கிற மாப்பிள்ளை டோய் கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய் மாபிள்ளை டோய் மணியான மதராசு மாப்பிள்ளை டோய் சோப்பாலே மூஞ்சி தேய்க்கிறா சுந்தரி டோய் சுண்ணாம்பை, கொழச்சி பூசுறா, சுந்தரி டோய் சோப்பாலே மூஞ்சி தேய்க்கிறா சுந்தரி டோய் சுண்ணம்பை, கொழச்சி பூசுறா, சுந்தரி டோய் மை லேடி டோய் மை லேடி டோய் மனம் போலே வந்து வாச்ச பெண் ஜோடி டோய் சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது மன்னாதி மன்னனுனு மன்னாதி மன்னனுனு, மனசுக்குள்ளே நினைச்சிடுவார் மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய் மணியான மதராசு மாப்பிள்ளை டோய் பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய் பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய் பெண்களுக்கு அழகாகுமோ? ஸா ரி ஸ் ஸரிஸநி தபமப ஸரிஸரி மபடப மப ஸா ரிஸ ஸரிஸநி ஸரிஸநி தபமப ஸரிஸரி மபதப ஸரிமரி ஸநிதஸஸ ரிஸநித பமமப தபம ரிக மகரிஸ நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார் நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார் ஓயாத குறும்பை கண்டு, தீராத காதல் கொண்டேன்.. ... மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய் மணியான மதராசு, மாப்பிள்ளை டோய்  
    • யாழ்ப்பாணத்தில் கிடைத்த சந்தர்ப்பங்கள் எனது வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று: பேராசிரியர் நிசான் கனகராஜா யாழ்ப்பாணத்தில் யுத்தம் நடைபெற்றவேளை பல கஷ்டங்கள் இருந்தபோதிலும் அங்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் தனது வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்றும் யாழ் பரியோவான் கல்லூரியில் வளர்த்துக்கொண்ட ஆளுமை பிரித்தானியாவில் பெரிதும் உதவியாக இருந்ததாகவும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற லெஸிஷ்டர் பல்கலைக்கழகத்தின் துணையவேந்தராக பதவி ஏற்கவிருக்கும் பேராசிரியர் நிசான் கனகராஜா தெரிவித்திருக்கிறார். அவுஸ்திரேலியாவின் SBS தமிழ் ஒலிபரப்பு சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருக்கும் பேராசிரியர் நிசான் கனகராஜா எதனை சாதிக்க நினைக்கிறீர்களோ அதனை ஒருபோதும் கைவிடாமல் நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள், எல்லோருடனும் நன்றாக பழகுங்கள், மாறும் சூழ்நிலைமைக்குக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ள பழகுங்கள் என்ற மூன்று அறிவுரைகளை வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கூறியிருக்கிறார். பேராசிரியர் நிசான் கனகராஜா வழங்கிய நேர்காணலை கீழே கேட்கலாம் :   http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-கிடைத்த/
    • விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து அரச தரப்புடன் பேச்சுவார்த்தை… August 26, 2019 ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நான்காயிரம் ஏக்கர் காணிகளை விட இன்னும் விடுவிக்கப்ட வேண்டிய பொது மக்களின் காணிகள் தொடர்பாக, அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இறுதி நாள் அன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. இதேவேளை பருத்தித்துறை தறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வும், சுத்தமான குடிநீர் விநியோகத்திட்டங்களும் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நேற்று மாலை வரையில் சுமார் ஐந்து இலட்சம் பேர் நன்மை அடைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி விசேட செயலணியுடன் இணைந்து முன்னெடுக்கும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் கடந்த இரு தினங்களிலும் ஆயிரத்து 293 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் 15 பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள 435 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் எதிர்வரும் 30ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நான்காயிரத்து 400 நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. இவற்றுள் 23ம் திகதி முதல் நாளாந்தம் யாழ்.மாவட்டத்தில் மக்கள் விழிப்பூட்டப்பட்டு வருவதுடன் நடை முறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சுற்றாடல், பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சிறுவர், மகளிர், முதியோர், விசேட தேவையுடையோர் பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டங்களும், தொழில் முயற்சிகள், வேலைவாய்ப்பு, நிதி மற்றும் வங்கி நடவடிக்கைகளும், வட மாகாணத்திற்கு ஏற்றவாறு மேற்கொள்ள இத்திட்டம் வழிவகுக்கின்றது. கிராம சக்தி, ஸ்மாட் ஸ்ரீலங்கா, சுத்தமான குடிநீர், சிறுநீரக நோய் நிவாரணம் என்பன உட்பட விவசாய, மீன்பிடி, கைத்தொழில் அபிவிருத்திகளுக்கும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் பாரிய பங்களிப்புக்களை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. (அரசாங்க தகவல் திணைக்களம்) http://globaltamilnews.net/2019/129519/