Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தடுப்பூசிகளும் அவை பற்றிய வாத பிரதிவாதங்களும்


Recommended Posts

குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

 

தடுப்பூசி அட்டவணை

 • பிசிஜி – பிறப்பின் போது
 • ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) – பிறப்பின்போது
 • ஹெபடைடிஸ் பி (2) – 4 வாரங்கள்
 • டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 8 வாரங்கள்
 • டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 12 – 20 வாரங்கள்
 • டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 18-20 வாரங்கள்
 • அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) – 8-9 மாதங்கள்
 • சின்னம்மை (விருப்பத்துடன்) – 12-18 மாதங்கள்
 • எம்எம்ஆர் – 15-18 மாதங்கள்
 • எச்ஐபி (பூஸ்டர்) – 15-18 மாதங்கள்
 • டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) – 18-24 மாதங்கள்
 • ஹெபடைடிஸ்-ஏமருந்து (விருப்பம்) – 2 ஆண்டுகள்
 • டைபாய்டு ஊசி – 3 ஆண்டுகள்
 • டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) – 5 ஆண்டுகள்
 • ஹெபடைடிஸ் – ஏ மருந்து (விருப்பம் – 5 ஆண்டுகள்
 • எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம் எம் ஆர் கொடுக்காவிட்டால்) – 5 ஆ ண்டுகள்
 • வாய்வழியாக டைபாய்டு – 8 ஆண்டுகள்
 • வாய்வழியாக டைபாய்டு – 9 ஆண்டுகள்
 • டெட்டானஸ் – 10 ஆண்டுகள்
 • சின்னம்மை தடுப்பூசி – 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)
 • டைபாய்டு வாய்வழியாக – 12 ஆண்டுகள்
 • டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) – 16 ஆண்டுகள்

குறிப்பு

மேற்காணும் தடுப்பூசிகள் அட்ட‍வணை  பகிர்ந்திருப்ப‍து விழிப்புணர்வு ஏற்படுத்த‍வே, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுமுன் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டுவரவும்

ஆதாரம் : அரசினர் தாய்சேய் நல மருத்துவமனை

Link to comment
Share on other sites

டென்மார்க் நாட்டில், 1999-லிருந்து 2010-ம் ஆண்டு வரை பிறந்த 6,57,461  குழந்தைகளிடம் மிகப்பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் `எம்.எம்.ஆர்' தடுப்பூசிக்கும், ஆட்டிசம் குறைபாட்டுக்கும் துளியளவும் சம்பந்தமில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவுகள், 'அன்னல்ஸ் ஆஃப் இன்டெர்னல் மெடிசின்' (Annals of Internal Medicine) என்ற தளத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே இதே ஆய்வாளர்கள், 1991- லிருந்து 1998 வரை பிறந்த 5,37,303 குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வு முடிவுகள் 'இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்' ( England Journal of Medicine) என்கிற தளத்தில் 2002-ம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.vikatan.com/news/health/151773-story-about-a-new-research-about-mmr-vaccine.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இயக்கத்தில் மிக முக்கிய பொறுப்பான அரசியல் துறை பொறுப்பாளரின் மின்னஞ்சல் முகவரியின் கடவு ச்சொல் கண்டவர்களுக்கெல்லாம் தெரியும் அளவுக்கு பாதுகாப்பற்றதாக இருந்ததானது எவ்வளவு மோசமான அரசியல் பேதமை. 
  • ஸ்மார்ட்போனில் தங்கம்: பழைய போன்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பிரிட்டன் நாணய ஆலை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, உலகில் ஐந்தில் ஒரு பகுதி மின்கழிவுகளே மறுசுழற்சிக்கு வருகின்றன பழைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களில் இருந்து மதிப்பு மிக்க உலோகமான தங்கத்தைப் பிரித்தெடுக்க முடிவு செய்திருக்கிறது பிரிட்டனின் அரசு நாணய ஆலை. பிரிட்டன் அரச குடும்பத்தின் கீழ் இயங்கும் ராயல் மின்ட் எனப்படும் அரசின் நாணய தயாரிப்பு நிறுவனம் மின்னணுக் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி செய்யும் இத்தகைய தொழில்நுட்பத்தை முதன் முதலாகப் பயன்படுத்த இருக்கிறது. மின்னணு கழிவுகளில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவான அளவே மறு சுழற்சி செய்யப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. "இந்த தொழில்நுட்பம் உலகின் மிகப்பெரிய சுற்றுச் சூழல் சவால்களில் ஒன்றின் மீது உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று ராயல் மின்டின் தலைமைச் செயல் அதிகாரி ஆன்னி ஜெசோப் கூறினார். ரூ.745 கோடி மதிப்புள்ள நீலக்கல் தொகுப்பு: வீட்டின் பின்புறம் தற்செயலாக கிடைத்தது காங்கோ தங்க மலை: அள்ள அள்ள தங்கம், ஆனந்தத்தில் மக்கள் - என்ன சொல்கிறது அரசு? மின்னணுக் கருவிகளின் மின்சுற்று அட்டைகளில் (circuit boards) இருந்து 99 சதவிகிதம் தங்கத்தைப் பிரித்தெடுக்க கனடாவின் தொடங்கு நிறுவனமான எக்சைருடன் ராயல் மின்ட ஒப்பந்தம் செய்திருக்கிறது தேர்ந்தெடுக்கப்பட்ட விலையுயர்ந்த உலோகங்களை மின்சுற்று அட்டைகளில் இருந்து வேதியியல் தொழில்நுட்பம் நொடிகளில் பிரித்தெடுக்கிறது என்று ராயல் மின்ட் கூறுகிறது 2021 ஆம் ஆண்டில் தூக்கி எறியப்பட்ட மின்னணு மற்றும் மின் சாதனங்கள் 5.7 கோடி டன்களுக்கு மேல் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம்,ROYAL SOCIETY OF CHEMISTRY   படக்குறிப்பு, ஸ்மார்ட்போன்களில் சுமார் 30 வெவ்வேறு தனிமங்கள் உள்ளன, அவற்றில் சில பூமியில் காலியாகிக் கொண்டிருக்கிறது. இந்தச் சிக்கலை எதிர்கொள்ள எதுவும் செய்யவில்லை என்றால், 2030 க்குள் மின்னணு கழிவுகள் 7.4 கோடி டன்களை எட்டும். அதாவது ஒரு தசாப்தத்தில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று ராயல் மின்ட் கூறுகிறது. உயர் வெப்பநிலையில் உருக்குவதற்குப் பதிலாக, இந்தத் திட்டத்தின்படி ரொண்டா சினான் டாப்பில் உள்ள ராயல் மின்ட் ஆலையில் அறை வெப்பநிலையிலேயே விலைமதிப்பற்ற உலோகங்கள் பிரிக்கப்பட இருக்கின்றன. ராயல் மின்ட் நாணய ஆலையில் இந்தத் தொடழில்நுட்பத்தின் தொடக்கநிலைப் பயன்பாடு மூலமாக ஏற்கெனவே 999.9 தூய்மையான தங்கம் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதே தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால், பல்லேடியம், வெள்ளி மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களையும் பிரித்தெடுக்க முடியும். மின்னணு கழிவுகளைக் குறைப்பதிலும், மதிப்புமிக்க உலோகங்களைக் மீட்பதிலும், புதிய திறன்களை வளர்ப்பதிலும் இந்தத் தொழில்நுட்பம் மிகப்பெரிய சாத்தியமான ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்று மின்டின் ஜெசோப் கூறினார். இந்த வேதியல் தொழில்நுட்பம் "புரட்சிகரமானது" என்று நாணய ஆலையின் தலைமைய வளர்ச்சி அதிகாரி ஷான் மில்லார்ட் கூறிகிறார். "இது ராயல் மின்ட் மற்றும் கழிவுகளே இல்லாத சுற்றுப் பொருளாதாரத்துக்கு பெரும் ஆற்றலை வழங்குகிறது. பூமியின் மதிப்புமிக்க வளங்களை மீண்டும் பயன்படுத்த உதவுகிறது. பிரிட்டனில் புதிய திறன்களை உருவாக்குகிறது" https://www.bbc.com/tamil/science-58982005
  • சரி இன்னுமொரு விடையம் கிரிப்டோவில் காசு போட்டால் போட்டது போட்டதுதான்  அது யூ எஸ் டி டியில் வரவு வைக்கப்பட்டிருக்கும் அதைக் காசாக்கவேண்டுமானால் யாருக்காவது யூ எஸ் டி ரியை விற்கவேண்டும் அதைவிட ஒரு நல்ல விடையம் இருக்கு Revolut bank கில்  ஒரு கணக்கைத் திறந்து அதற்கு நீங்கள் வேண்டிய கரன்சியில் உங்களது USDTயை மாற்றலாம்.பிரச்சனப்பிடவேண்டியதில்லை. அபரா, SHIBA/USDT வை நான் ஆரம்பத்தில் வாங்கி அது 0.00005400 வரை ஏறியது நல்ல காசு பாத்திட்டேன் இப்போ அது இறங்குமுகம். ஆனால் பைனான்ஸ் இணையத்தளத்தி காசு சம்பாதிச்சுக்கொடுக்கும் காயிஙளில் முதல் பத்து இடத்தில் இப்போதும் இருக்கு. முட்டாள்தனமாக நான் பணம் சம்பாதிக்க முற்பட்டு பத்து மில்லியன் காயிஙளாக இருந்த எனது சீபா இனு ஆறு இல்லியனுக்குக் குறைந்துவிட்டது. இனிமே தொட்டுப்பார்க்கும் எண்ணம் இல்லை. ஆனால் "bainance" இணையத்தளத்தி காசு சம்பாதிச்சுக்கொடுக்கும் காயிஙளில் முதல் பத்து இடத்தில் இப்போதும் இருக்கு. முட்டாள்தனமாக நான் பணம் சம்பாதிக்க முற்பட்டு பத்து மில்லியன் காயிஙளாக இருந்த எனது SHIBA/USDT ஆறு  மில்லியனுக்குக் குறைந்துவிட்டது. இனிமே தொட்டுப்பார்க்கும் எண்ணம் இல்லை. சரி விடையத்துக்கு வருகிறேன்  பைனான்ஸ்சில் இப்போது இலாபமீட்டும் காயின் எனப் பட்டியலிடுவார்கள் அதில் இருபத்து நாலு மணிநேர உயர்வு / தாழ்வு என வரும் அதைக்கவனித்தால் மெழுகுதிரி இடையில் நின்றால் கவனமாக முதலீடு செய்து ஓரிரு மணி நேரத்திலோ நிமிடக்கணக்கிலோ வித்துக் காசு பாக்கலாம் ஆனால் ஆக அடிமட்டத்திலிருந்து திடீரென உயரும் காயினில் முதலீடு செய்யவேண்டாம். அடிச்சுக்கொண்டு போயிடும். இப்போ NU/USDT எனும் காயின் சிலநேரம் ஏறும்போல இருக்கு ஆனால் அவதானம்.  TRX/USDT இப்போது ஏறுது விருப்பமானால் வித்துக்காசு பாக்கலாம்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.