Jump to content

எவரெஸ்ட் மலையிலிருந்து 2 வாரங்களில் 3 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எவரெஸ்ட் மலையிலிருந்து 2 வாரங்களில் 3 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம்

May 1, 2019

everest.jpg?resize=615%2C350

எவரெஸ்ட் மலையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள குப்பைகளை அங்கிருந்து அகற்றியுள்ளன. நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் ஆகிய இருவரும் கடந்த 1953-ம் ஆண்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டதன் நினைவாக, எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நேபாள அரசு கடந்த 14ம் திகதி ஆரம்பித்திருந்தது.

இந்த பணியில் நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள குப்பைகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.  நேபாள அரசின் இந்த தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் கிலோ வரையிலான குப்பைகளை அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#rubbish  #nepal #Mount #Everest

 

http://globaltamilnews.net/2019/120153/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.