• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

சர்வதேச ஊடக சுதந்திர தினம்

Recommended Posts

சர்வதேச ஊடக சுதந்திர தினம்

(நா.தினுஷா)

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் இன்றாகும். இந்த வருடத்துக்கான பத்திரிகை சுதந்திரத்துக்கான சர்வதேச பட்டடியலில் இலங்கை 126 ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன் இந்தியாவை விட 14 ஆவது இடத்தில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

world-press-frdom-day.jpg

1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாம் திகதி சர்வதேச பத்திரிகை சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு கொண்டாடப்படும் பத்திரிகை சுதந்திர தினத்தினமானது தேர்தல்கள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றில் ஊடகங்களில் பங்களிப்பு எனும் பிரதான தொனிப்பொருளில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதது. 

இதேவேளை 2019 ஆம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பும் விசேட நிகழ்வகளை ஏற்பாடு செய்துள்ளது.

பத்திரிகை சுதந்திரமாகவும் நாடுகளின் தர வரிசையில் முதல் பத்து இடங்களில் நோர்வே, பின்லாந்து, சவீடன், நெதர்லாந்து,டென்மார்க், சுவிஸ்லாந்து, நியூஸ்லாந்து, ஜமேய்க்கா, பெல்ஜியம் மற்றும் கொஸ்டாரிகா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தர வரிசையில் இந்தியா 140 ஆவது இடத்தையும் இலங்கை 126 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டள்ளது.

 

http://www.virakesari.lk/article/55210

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • புற்றுநோய் அணுக்களை அழிக்கும் மஞ்சள்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு   சென்னை சென்னை ஐஐடியைச் சேர்ந்தஆராய்ச்சியாளர் குழு, மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருளான ‘குர்குமின்’ குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். புற்று நோய் சிகிச்சையின்முக்கிய கட்டமாக உடலில் உள்ளஆரோக்கியமான உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படாமல், நோய்அணுக்கள் அழிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதையசிகிச்சை முறையில் இது முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில், மஞ்சளில் உள்ள நச்சுத்தன்மை இல்லாத‘குர்குமின்’, ரத்தம் மற்றும் எலும்புமஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ‘லுக்மியா’ அணுக்களை திறம்பட அழிப்பதாக சென்னை ஐஐடி உயிரிதொழில்நுட்பத் துறை பேராசிரியர் ரமா சங்கர் வர்மா தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். https://www.hindutamil.in/news/tamilnadu/564303-turmeric-destroys-cancer-cells.html  
  • நல்லதொரு பகிரவுகு நுணா
  • நன்றி பகிரவுக்கு, சென்னமாதிரி செய்துவீட்டீர்கள்,  ஆடிக்கூழ் என்றால் கலர் அப்படிதான் இருக்கனும் - அதுதான் சுமே👍
  • தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு கரோனா தொற்று: சென்னையில் 1,140 பேர் பாதிப்பு   சென்னை தமிழகத்தில் இன்று 4,328 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,140 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 78,573 ஆக அதிகரித்துள்ளது. 4,328 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 26.3 சதவீதத் தொற்று சென்னையில் (1,140 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,42,798-ல் சென்னையில் மட்டும் 78,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 55 சதவீதம் ஆகும். 92,567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 64.8 சதவீதமாக உள்ளது. நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது. தமிழகம் ஒரு லட்சத்து 42 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 78 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3 லட்சத்து 69 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 4,369 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 44 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 3,46,923. சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 2,032-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 2,032 பேரில் சென்னையில் மட்டுமே 1,277 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். * தற்போது 53 அரசு ஆய்வகங்கள், 52 தனியார் ஆய்வகங்கள் என 105 ஆய்வகங்கள் உள்ளன. இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு: * டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 48,196. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 33.7 சதவீதம் ஆகும். * மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 16,54,008. * இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 44,560. * மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,42,798. * இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,328. * மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 87,111/ பெண்கள் 55,664 / மூன்றாம் பாலினத்தவர் 23 பேர். * தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,410 (60.7%) பேர். பெண்கள் 1,555 (39.3%) பேர். * இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,035 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 92,567 பேர் . * இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 66 பேர் உயிரிழந்தனர். இதில் 16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,032 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,277 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 7,065 பேர். இதில் ஆண் குழந்தைகள் 3,689 பேர். பெண் குழந்தைகள் 3,376 பேர். 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,18,358 பேர் . இதில் ஆண்கள் 72,699 பேர். பெண்கள் 45,636 பேர். .மூன்றாம் பாலினத்தவர் 23 பேர். 60 வயதுக்கு மேற்பட்டோர் 17,375 பேர். இதில் ஆண்கள் 10,723 பேர் . பெண்கள் 6,652 பேர். இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   https://www.hindutamil.in/news/tamilnadu/564257-people-infected-with-coronavirus-in-tamil-nadu-1-185-affected-in-chennai-the-worrying-serial-death-toll-4.html