Jump to content

கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் அன்று சொன்னது இன்று நடக்கிறது.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“நாகவிகரையில்
பூசை நடந்ததாம்
ரூபவாகினி சொல்லிற்று..
இனி என்ன?
“காமினி ரீ றூம்”
கதவுகள் திறக்கும்!
சிற்றி பேக்கரியும்
சீனிச் சம்பலும்
நகரப் பகுதியில்
அறிமுகமாகும்!
புத்தன் கோவிலுக்கு
அத்திவாரம் போட
ரத்வத்த வரக்கூடும்!
சிங்கள மகாவித்தியாலயம்
திரும்ப எழுமா?
எழலாம்.
வெசாக் கால வெளிச்சக் கூட்டை
எங்கே கட்டுவார்?
ஏன் இடமாயில்லை?
வீரமாகாளியின்
வெள்ளரசிற் கட்டலாம்,முனியப்பர் கோவில்

முன்றலிலும் கட்டலாம்,
பெருமாள் கோவில் தேரிலும்
பிள்ளையார் கோவில்
மதிலிலும் கட்டலாம்!
எவர் போய் ஏனென்று கேட்பீர்?
முற்ற வெளியில்
“தினகரன் விழாவும்”
காசிப்பிள்ளை அரங்கில்
களியாட்ட விழாவும் நடைபெறலாம்!
நாகவிகாரையிலிருந்து
நயினாதீவுக்கு
பாதயத்திரை போகும்!
பிரித் ஓதும் சத்தம்
செம்மணி தாண்டிவந்து
காதில் விழும்!
ஆரியகுளத்து
தாமரைப் பூவிற்கு
அடித்தது யோகம்!
பீக்குளாத்து பூக்களும்
பூசைக்கு போகும்!
நல்லூர் மணி

துருப்பிடித்துப்போக
நாகவிகாரை மணியசையும்!
ஒரு மெழுகுவர்த்திக்காக
புனித யாகப்பர் காத்துக்கிடக்க
ஆரியகுளத்தில்
ஆயிரம் விளக்குகள் சுடரும்!
எம்மினத்தின்
இளைய தலைமுறையே,
கண் திறக்காது கிடகின்றாய்.
பகைவன்
உன் வேரையும்
விழுதையும் வெட்டி
மொட்டை மரமாக்கி விட்டான்!

-தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை

https://www.thaarakam.com/2019/05/02/கவிஞர்-புதுவை-இரத்தினதுர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Sasi_varnam said:

-----ஆரியகுளத்து
தாமரைப் பூவிற்கு
அடித்தது யோகம்!
பீக்குளாத்து பூக்களும்
பூசைக்கு போகும்!
நல்லூர் மணி

துருப்பிடித்துப்போக
நாகவிகாரை மணியசையும்!
ஒரு மெழுகுவர்த்திக்காக
புனித யாகப்பர் காத்துக்கிடக்க
ஆரியகுளத்தில்
ஆயிரம் விளக்குகள் சுடரும்!
எம்மினத்தின்
இளைய தலைமுறையே,
கண் திறக்காது கிடகின்றாய்.
பகைவன்
உன் வேரையும்
விழுதையும் வெட்டி
மொட்டை மரமாக்கி விட்டான்!

-தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை

புதுவை இரத்தினதுரை அவர்களினது இந்தக்  கவிதை,
அண்ணளவாக 15 ஆண்டுகளிற்கு முன்பு, எழுதியதாக இருக்கலாம்.
ஆனால்.... எவ்வளவு  துல்லியமாக, கணித்துளார் எனும் போது, வியப்பாக உள்ளது.
எமது... விடுதலைப் போரை, தோற்கடித்ததில்....
இப்போதும் உயிருடன் வாழும்... ஆனந்த சங்கரி,  டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற,
ஓட்டுக் குழுக்களும்.... இன்று, இந்தக் கவிதையை... வாசித்துப் பார்க்க வேண்டும் என்பதே  என் விருப்பம்.

Link to comment
Share on other sites

கவிஞர்களை தீர்க்கதரிசிகள் என்றும் சொல்வார்கள்.  

தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் அதனை நிரூபித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் பலர் கூறும் விடயங்கள் இப்படி எத்தனையோ பின்னர் நடந்திருக்கின்றன. லண்டனில் மாவீர் நாளில் நாம் ஓர் அரங்க நிகழ்வை 2008ம் ஆண்டில் நிகழ்த்தினோம். 2009 இல் அதே போல் அழிவு வன்னியில் இடம்பெற்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.