Jump to content

இராணுவம் வெளியேறவேண்டும்: பல்கலைக்கழக மாணவர் கைதிற்கு கண்டனம்.. விக்னேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் வெளியேறவேண்டும்: பல்கலைக்கழக மாணவர் கைதிற்கு கண்டனம்.. விக்னேஸ்வரன்

May 3, 2019

vikkineswaran.jpg?resize=600%2C398

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில்; இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

அவசரகால சட்டத்தின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திரு.விக்னேஸ்வரன் அவர்கள் நாட்டின் பாதுகாப்பை விரைவாக உறுதிப்படுத்தி அவசரகால நிலைமையை அரசாங்கம் மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரமும் பின்வருமாறு:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரைத் தொடர்ந்தும் வைத்திருப்பதை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முழு நாட்டினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் நான் ஏற்கனவே கூறியபடி எல்லா மாகாணங்களுக்கும் இராணுவத்தை சம அளவில் பகிர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரைச் சாட்டாக வைத்து இராணுவத்தினரை இங்கு நிலைநிறுத்தி வைத்த அரசாங்கம் அண்மைய நிலைமையைச் சாட்டாக முன்வைத்து வடமாகாணத்தை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்பார்ப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாததொன்று.

வடக்கு மாகாணம் தொடர்ந்தும் உச்ச அளவில் இராணுவமயப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கை தொடர்ந்தும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வாழ்வாதார செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. பொதுமக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அவர்கள் அபகரித்துள்ளனர். இது நல்லிணக்கத்துக்கும் நிலையான சமாதானத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினரைத் தொடர்ந்து வடக்கு கிழக்கில் வைத்திருக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி இருக்கின்றமை மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் ஒரு துன்பியல் நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பாவிக்க முற்பட்டுள்ளதை அறியாதிருக்கும் இவர்கள் மேல் பரிதாபம் மேலோங்குகின்றது.

தீர்வு முயற்சிகள் ஒருபுறம் இருக்க, தற்போதைக்கு பொலிசார் மூலம் எமது பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். சிறந்த முறையில் சட்டம் ஒழுங்கை எமது மக்களே எமது பகுதிகளில் பொலிசாருடன் சேர்ந்து நிர்வகிக்க முடியும். இதனைவிடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து இராணுவத்தைத் தொடர்ந்து பெருமளவில் வடக்கு கிழக்கில் வைத்திருப்பதற்கு நியாயம் கற்பிப்பது எந்தவகையிலும் பொருத்தம் அற்றது.

மிகவும் தெளிவான முன் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுங் கூட எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமல் விட்டமையே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணம் என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினதும் அரசாங்கத்தினதும் அலட்சியமே இன்றைய நிலைக்கு காரணம். மரணித்தவர்களில் பெரும்பாலானோர் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. அரசாங்கம் முன்னெச்சரிக்கையாகச் செயற்பட்டிருந்தால், இன்று நாட்டில் மீண்டும் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்யவேண்டி இருந்திருக்காது. கடந்த காலங்களில் அவசரகால நிலைமை எந்தளவுக்குப் பொதுமக்களின் சுதந்திரங்களைப் பாதித்ததுடன் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்தது என்பதை நாம் கண்டுள்ளோம்.

இன்று எமது பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை மீண்டும் அந்த நிலைமை ஏற்படப்போகின்றதோ என்ற அச்சத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவர்களின் கைதை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்களை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றேன்.

பாராளுமன்றத்தில் அவசரகால நிலைமைக்கு ஆதரவாகச் செயல்ப்;பட்டுவிட்டு இன்று எமது மாணவர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று அவர்களை விடுதலைசெய்யுமாறு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கோருவது வேடிக்கையாக இருக்கின்றது.

ஆகவே, அண்மைய பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்களையும் அவற்றுக்குத் தூண்டுகோல்களாக இருந்தவர்களையும் இனம்கண்டு கைதுசெய்து சட்டத்தின்முன்பாக நிறுத்தி அனைத்து மக்களினதும் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் இயன்றளவு விரைவாக அவசர காலப் பிரகடனத்தை வாபஸ் பெறவேண்டும் என்றும் அவசரகாலச் சட்டத்தை வைத்து அப்பாவி மக்களைக் கைது செய்து துன்புறுத்துவதை நிறுத்தவேண்டும் என்றும் அரசாங்கத்தை வேண்டிக்கொள்கின்றேன். பயங்கரவாதத்தை முறியடிக்கும் வகையில் பொலிஸ் திணைக்களத்தைப் பலப்படுத்துமாறும் வேண்டிக்கொள்கின்றேன்.

ஊடகப் பிரிவு
தமிழ் மக்கள் கூட்டணி
03.05.2019

 

http://globaltamilnews.net/2019/120508/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குண்டுவெடிப்பு: "ராணுவம் தொடர்ந்து நிலைகொள்வதை அனுமதிக்க இயலாது"

ராணுவம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பை காரணமாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் ராணுவத்தைத் தொடர்ந்து நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் போலீஸாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

அவசரகால சட்டத்தின் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன், நாட்டின் பாதுகாப்பை விரைவாக உறுதிப்படுத்தி அவசரகால நிலைமையை அரசாங்கம் மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினரைத் தொடர்ந்து வைத்திருப்பதை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முழு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நான் ஏற்கனவே கூறியபடி எல்லா மாகாணங்களுக்கும் ராணுவத்தை சம அளவில் பகிர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரைச் சாட்டாக வைத்து ராணுவத்தினரை இங்கு நிலைநிறுத்தி வைத்த அரசாங்கம் அண்மைய நிலைமையைச் சாட்டாக முன்வைத்து வடமாகாணத்தை ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்பார்ப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ராணுவம் தொடர்ந்து நிலைக்கொண்டிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், தாக்குதலை காரணம்காட்டி ராணுவத்தினரை தொடர்ந்து வடக்கு கிழக்கில் வைத்திருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியது கவலை தருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

"பாதுகாப்பு தரப்பினதும் அரசாங்கத்தினதும் அலட்சியமே இன்றைய நிலைக்கு காரணம். மரணித்தவர்களில் பெரும்பாலானோர் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. அரசாங்கம் முன்னெச்சரிக்கையாகச் செயற்பட்டிருந்தால், இன்று நாட்டில் மீண்டும் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்யவேண்டி இருந்திருக்காது. இயன்றளவு விரைவாக அவசர காலப் பிரகடனத்தை வாபஸ் பெறவேண்டும் என்றும் அவசரகாலச் சட்டத்தை வைத்து அப்பாவி மக்களைக் கைது செய்து துன்புறுத்துவதை நிறுத்தவேண்டும்" என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48159111

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளைக்கு ஐயா இந்த விஷயத்தில் அடக்கி வாசிக்கிறது நல்லது

கெடுதலிலும் ஒரு நல்லது உள்ளதுபோல், அண்மைய தாக்குதலில் யாழ்ப்பாணமும்

இலக்கு வைக்கபடாததுக்கு அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள ராணுவமும் புலனாய்வு பிரிவுகளுமொரு காரணமாக இருந்திருக்கலாம், இல்லையெனில் அவங்களின் முதல் தேர்வே யாழ்ப்பாணமாகதான் இருந்திருக்கும், அந்த அளவில் யாழில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றம்பற்றி இன்றுவரை அந்த தீவிரவாத முஸ்லீம்களில் இருந்து தீவிரவாதம் எங்களுக்கு சுத்தமா பிடிக்காது என்று நடிக்கிற முஸ்லீம்கள் வரை கறுவிக்கொண்டு இருக்கிறார்கள்.

இருந்தாலும் எதிர்காலத்தில்  யாழின் நல்லூர் உட்பட புகழ்பெற்ற ஆலயங்களின் திருவிழாக்கள், பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் பொதுநிகழ்வுகள் விஷயத்தில் தமிழர் சமூகம் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் குண்டுத்தாக்குதல் நடைபெறும் என்று நினைக்கவில்லை. தாக்குதல்களை நடத்திய சிறிய குழு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது என்றுதான் நினைக்கின்றேன். குண்டுகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இருந்தாலும் அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்களை சேகரிக்கும் அளவிற்கு இலங்கைப் புலனாய்வுத்துறை விட்டுவைக்காது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இனி இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் குண்டுத்தாக்குதல் நடைபெறும் என்று நினைக்கவில்லை. 

 

உங்களின் வாக்கு பலித்தால்,அதில் மிகபெரும் நிம்மதியடைய  தவறேதும் செய்யாமலே சிதறிபோன  இலங்கையில் உள்ள மக்களின் உறவுகளும், மரண பயத்தில் வாழும்  ஏனைய மக்களையும் தவிர வேறு யார் இருக்கபோகிறார்கள்.

ஆனால் உங்களின் உறுதியான நம்பிக்கையை பார்க்கும்போது எனக்கே பயமாயிருக்கிறது.

குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டே மதத்துக்காக குண்டை வெடிக்க வைக்கும் இவர்களுக்கு பிறரை கொன்று குவிக்க குண்டுகள்தான் தேவையென்றில்லை,

ஐரோப்பாவில்  செய்வதுபோல், கத்தி,வாள்,கோடரி லொறி போன்றவற்றை வைத்துகூட இயங்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

ஆனால் உங்களின் உறுதியான நம்பிக்கையை பார்க்கும்போது எனக்கே பயமாயிருக்கிறது

பெரிய புலிகள் இயக்கத்தையே 2009 மே முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் எதுவும் செய்யமுடியாமல் தடுத்தவர்கள் இந்தக் கொசுறுகளை விட்டுவைப்பார்களா?

குண்டுத்தாக்குதல் இல்லாமல் செய்யும் வன்முறைகளை வழிநடத்த தலைவர்களையும் விட்டுவைக்கமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இனி இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் குண்டுத்தாக்குதல் நடைபெறும் என்று நினைக்கவில்லை. தாக்குதல்களை நடத்திய சிறிய குழு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது என்றுதான் நினைக்கின்றேன். குண்டுகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இருந்தாலும் அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்களை சேகரிக்கும் அளவிற்கு இலங்கைப் புலனாய்வுத்துறை விட்டுவைக்காது.

 

நானும் அப்படித் தான் நினைக்கிறேன்...ஆனால் சிங்கள குரங்குகள் வெசாக் தினத்தில் ஏதாவது பிரச்சினை செய்து போட்டு இவர்கள் தலையில் போடப் பார்க்கும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவத்துக்கு அளவுக்கு அதிகமாக.. இடம் கொடுத்தால்.. அதிகாரம் அளித்தால்.. இப்படியான கொடுமைகள் சகஜமாகும்.

சிங்கள இராணுவம் பெரும் மனிதப் படுகொலைகளை புரிந்துவிட்டு.. சர்வதேச சட்டங்களின் தண்டனைகளில் இருந்து தப்பிக்க.. ஓடி...ஒளித்துத் திரியும் அரச பயங்கரவாதக் கூட்டம். அதனிடம் போய் பாதுகாப்பு வேண்டி மண்டி இட்டால்.. இதுதான் நிலை.

Link to comment
Share on other sites

பல்கலை மாணவர்களின் கைது மனித உரிமை மீறலுக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது : சி.வி.விக்னேஸ்வரன்

பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையானது மனித உரிமை மீறலுக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கண்டிப்பதாகவும், பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதுகாப்பு என்ற போர்வையில் வட மாகாணத்தில் இராணுவம் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

எல்லா மாகாணங்களுக்கும் இராணுவத்தை சம அளவில் பகிர்ந்து, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/119301

Link to comment
Share on other sites

யாழ். பல்கலை மாணவர் கைது அமைச்சர் மனோ போர்க்கொடி!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளரைக் கைதுசெய்தமை பிழையானது என்று சுட்டிக்காட்டியுள்ளார் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்.

வடக்கில் அரச நிர்வாக, படைத்தரப்பு, மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புப் பொறிமுறை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தனது ருவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“பாதுகாப்பு சோதனை எனப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளே சென்று அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி, இணையத்தில் பகிரங்கமாகப் பகிரப்படும் ஒரு படத்தைக் காரணமாகக் காட்டி, மாணவத் தலைவர்களைக் கைதுசெய்வது அதிக பிரசங்கித்தனம்.

எந்த நாட்டிலும் பல்கலைக்கழகம் ஒரு நாற்று மேடை. இப்போது அமைதியாகக் கிடக்கும் கழகத்தில், வன்முறை என்ற விதையை விதைத்தால், அது அங்கே வன்முறை பயிராகத்தான் முளைக்கும்.

இந்த அரசுக்கு முழுமையான ஆதரவைத் தரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமது ஆதரவுக்கு பிரதியுபகாரமாக வடக்கு மாகாணத்தின் அரச நிர்வாக, படைத்தரப்பு, பொலிஸ் ஆகியவற்றுடன் கூட்டிணைந்த ஒரு பொறிமுறையை இதற்குள் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

யாழ். கட்டளைத் தளபதி, பிராந்திய பொலிஸ்மா அதிபர், வான்படை, கடற்படை, மாவட்ட அரச அதிபர்கள், ஆளுநர், கூட்டமைப்புத் தலைமை மற்றும் எம்.பிக்கள் மட்டத்தில் இது செயற்பட்டிருக்க வேண்டும்.

இத்தகைய ஒரு பொறிமுறை இருந்திருந்தால், இத்தகைய விடயம் உடனடியாகத் தீர்க்கப்பட்டிருக்கும். கைது, பொலிஸ், நீதிமன்றம், தடுத்து வைப்பு என இழுபட்டிருக்காது.

இராணுவத் தரப்புக் கைதுசெய்ய, பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்த என இது இவ்வளவு தூரம் நிழ்ந்திருக்கக் கூடாது.

பல்கலைக்கழகம்தான் எப்போதும் தீவிரவாதத்துக்கு நாற்றுமேடை. யாழ். பல்கலையில் இப்போது, நானறிய, வன்முறை சிந்தனை கிடையாது. பிரிவினை சிந்தனை கிடையாது. அவை மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன. மழை விட்டாலும், தூவானம் விடாது போல் ஆங்காங்கே எச்ச சொச்சங்கள் காணப்படத்தான் செய்யும்.

இது இளம் மாணவர் விவகாரம். இவற்றை சாணக்கியமாகத்தான் கையாள வேண்டும். ஆனால், இத்தகைய முன்யோசனையற்ற சம்பவங்கள் துளிர்விடும் ஜனநாயக சிந்தனையைக் கெடுத்து விடுகின்றன.

ஜே.வி.பி. போராளிகள் என்ன, பூக்களை வைத்துக்கொண்டா சண்டை இட்டார்கள்? அவர்கள் என்ன, இந்தியப் படைகளுடனா சண்டை இட்டார்கள்? இன்று, தென்னிலங்கையில் ஜே.வி.பி. தலைவர் விஜேவீரவின் படங்கள் நாடு முழுக்க சுவரொட்டியாகவே ஒட்டப்பட்டுக் கொண்டாடப்படுகின்றன.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் படங்களும் இணையதளத்தில் அபரிதமாக தினசரி பயன்படுத்தப்படுகின்றன. இந்தநிலையில், அறையில் படம் இருந்தது என்று இதை ஒரு பெருங்குற்றமாகக் கருதி கைதுசெய்து, சிறையில் அடைத்து, மாணவர் மத்தியில் சினத்தையும், மக்கள் மத்தியில் வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கக் கூடாது.

உண்மையில், அரசை அடுத்து, வடக்கின் பிரதான மக்கள் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நண்பர்களின் குறைபாடாகவே இதை நான் கருதுகிறேன். எனது இந்த ஆரோக்கியமான விமர்சனத்தை கூட்டமைப்புத் தலைமை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

இதை நான் சொல்வதற்குக் காரணம் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது அரசின் அதிகாரபூர்வமற்ற பங்காளியாகவே இருக்கின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் கடந்த ஒக்டோபர் அரசமைப்பு சதி முறியடிப்பு ஆகியவற்றில் பாரிய பங்களிப்பை, கூட்டமைப்பு இந்த அரசுக்கு வழங்கியுள்ளது. அதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்தது. இறுதியாக அவசரகால சட்டத்தையும் எதிர்க்காமல் ஏகமனதாக நிறைவேற ஆதரவளித்துள்ளது. இவை அனைத்தும் சரியே.

ஆனால், இவற்றுக்கு பிரதியுபகார விளைவாக வடக்கு மாகாணத்தின் அரச நிர்வாக, இராணுவ, பொலிஸ் ஆகியவற்றுடன் கூட்டமைப்புத் தலைமை மற்றும் எம்.பிக்கள் கூட்டிணைந்த ஒரு பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

வடக்கில் அரச நிர்வாக மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்போது அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற நியதி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்போது போர் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்று பழைய யுத்தகால நியதிகள் செல்லாது. புதிய நியதிகள் உருவாக வேண்டும்.

இத்தகைய ஒரு பொறிமுறை இருந்திருந்தால், இத்தகைய விடயம் உடனடியாக தீர்க்கப்பட்டிருக்கும்.

கைதுசெய்யவா, வேண்டாமா என அவ்விடத்திலேயே தொடர்பு கொண்டு பேசி முடிவெடுத்திருக்கலாம். இது எதுவும் நடைபெறவில்லை. அதனால், கைது, பொலிஸ், நீதிமன்றம், தடுத்து வைப்பு என விவகாரம் இழுபட்டு விட்டது.

கைது நடைபெற்ற உடன் அங்கே சென்று கண்காணிக்கவும், நீதிமன்றத்தில் வழக்கைப் பேசி செயற்படவும் சட்டத்தரணிகள் உள்ளனர். இதற்கு அரசியல்வாதிகள் அவ்வளவு அவசியமில்லை.

ஆனால், ஆதரவளிக்கும் அரசுடன் கலந்து பேசி, ஒரு பொறிமுறையை உருவாக்கும் முகமாக அரசியல் தலைமை செயற்பட வேண்டும்.

எமது அரசுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி. ஆனால், நீங்கள் அளிக்கும் ஆதரவை பிரயோசனம் இல்லாமல் அளிக்க வேண்டாம். இந்த அரசில் இருந்துகொண்டே இதை நான் சொல்கிறேன்.

எனது இந்தக் கருத்தை எவரும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு மொழிபெயர்த்துக் கூறி, உங்கள் அமைச்சரே இப்படிச் சொல்கிறார், பாருங்கள் எனக் கலந்துரையாடி சிரமப்பட வேண்டியதில்லை.

செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் சுத்தமான சிங்கள மொழியில் நேரடியாக அவர்களுக்கும் எல்லா அமைச்சர்களுக்கும் விளங்கும் முகமாக நானே இதை கூறுவேன்" - என்றுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/119290

Link to comment
Share on other sites

பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களுக்கும் விடுத்த அச்சுறுத்தலே!

வடக்கில் திட்டமிட்ட குழப்பங்களை ஏற்படுத்த அரசாங்கம் முயல்கின்றது. அதற்கமையவே பல்கலைக்கழக மாணவர்களின் கைதும் இடம்பெற்றிருப்பதாகச் சுட்டிக் காட்டியிருக்கும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் இத்தகைய சூழ்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்வதைக் கைவிட்டு அவசரகாலச் சட்டத்தை நீக்கி மாணவர்களை விடுவிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின் போது பல்கலைக்கழக மாணவர்கள் கைது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த அரச படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் போராளியான தீலிபன் ஆகியோரின் படங்கள் இருந்ததாகக் கூறி பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட மூவரைக் கைது செய்துள்ளனர். இக் கைது நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதுடன் மாணவர்களையும் விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

யுத்தத்தின் பின்னர் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருந்த வடக்கு மாகாணத்தில் திட்டமிட்ட அசம்பாவிதங்களை அரசாங்கமே மேற்கொண்டு வந்திருக்கின்றது. இதன் தொடர்ச்சியாகவே நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் செயற்பாடுகளை அரசு முன்னெடுத்துள்ளது. இதற்கமையவே பல்கலைக்கழக மாணவர்களையும் திட்டமிட்ட வகையில் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட விடுதலைப் போராட்ட வரலாறுகள் எமது அடுத்த சந்ததிகளுக்கும் தெரிய வேண்டும். அந்த வரலாறுகளைத் தெரியாமல் எமது இளம் சமூகம் வளர முடியாது. ஆந்த வரலாறுகள் எமது சமூகத்திலுள்ள ஒவ்வொருவரிடத்திலும் இருக்கின்றது. ஆகவே அந்த வரலாறுகளின் அடிப்படையில் புலிகளின் படங்களை வைத்திருப்பது குற்றம் அவர்களை நினைப்பது குற்றம் என்றால்; ஒவ்வொருவரதும் மனங்களில் இருக்கின்றவர்களுக்கு என்னதைச் செய்யப் போகின்றனர்.

ஆகவே திட்டமிட்ட வகையில் அரசு முன்னெடுக்கின்ற இச் செயற்பாடுகள் ஐனநாயக விரோதமானது. இந்த அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி சோதனைகளை அதிகரிப்பது தேடுதல்களை மேற்கொள்வது கைது செய்வது எல்லாம் தீர்வை நோக்கிய தமிழ் மக்களின் அகிம்சைப் போராட்டத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பாதிப்பதாகவே அமையும். ஆகவே இதனை அனைவரும் உணர்ந்து கொள்கின்ற அதே நேரத்தில் பொது மக்களைப் பல வழிகளிலும் பாதிக்கின்ற அவசர காலச் சட்டத்தை உடனடியாக அரசாங்கம் நீக்கிக் கொள்ள வேண்டியதும் அவசியமானது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பிரச்சனைகள் தொடர்பில் பேசுவதற்கும் நீதியைக் கோருவதற்கும் உரித்துண்டு. ஆகவே அந்த உரிமையை பறிக்கும் வகையில் அச்சுறுத்துகின்ற செயற்பாடுகளை அரசு கைவிட வேண்டும். தமிழ் மக்களின் பல பிரச்சனைகள் தொடர்பிலும் பல்கலைக்கழக மாணவர்களே குரல் கொடுத்தச் செயறப்ட்டு வந்திருக்கின்ற நிலையில் மாணவர்களைக் கைது செய்துள்ளமை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களுக்கும் விடுத்த அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக ஐஎஸ்,ஐஎஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகளையடுத்தே நாட்டில் அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்தச் சட்டத்தை தமிழ் மக்கள் மீதே திட்டமிட்ட வகையில் அரசு பிரயோகிக்கின்றது. கடந்த காலங்களில் அரச பயங்கரவாதம் கோவில்கள் தேவாலயம் என்று எதனையும் பார்க்காமல் தான் மக்களை அழித்தது.

குறிப்பாக நவாலியில் தேவாலயத்தில் 154 தமிழ் மக்கள் கொல்லப்பட்டது வரலாறாக உள்ளது இந்த சம்பவங்களை செய்த அரச பயங்கரவாத்த்திற்கும் ஐஎஸ்ஐஎஸ்; தீவிரவாதிகளால். நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் தமிழ் மக்கள் தான் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு இரண்டிலும் நாங்கள் தான் இழந்தோம். இரண்டிலும் பாதிக்கப்பட்ட மக்கள் நாம் தான்.

இவ்வாறிருக்கையில் அவசரகால சட்டத்தின்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளிலும் நாங்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். ஆகவே இச் சட்டத்தை நீக்கி சிவில் நிர்வாகத்தை கொண்டு வருவர வேண்டும். அதனூடாக நடவடிக்கைளை எடுத்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் அரசாங்கத்திற்கு இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறவுள்ளதாக எச்சரிக்கை கிடைத்தும் அதற்கமைய நடவடிக்கை எடுக்காமல் இருந்தவிட்டு தற்போது தன்மீது விழுந்துள்ள பழியை ஏனையவர்கள் மீது சுமத்தவதற்கு முயல்கிறது.

இன்றைக்கு இலங்கை இராணுவம் முன்னால் புலிகளை ஒத்துழைப்பு ஆறுதல் வழங்கி தம்முடன் இணைந்து செயற்படுமாறும் கேட்டு உள்ளதாக அறிகிறோம் இதே போராளிகள் வாழ்வாதாரம் உதவி கோரிய போது அதனை வழங்க முடியாது என்று ஐனாதிபதி கூறியிருந்தார். ஆனால் இப்போது அவர்களை ஒத்துழைக்குமாறு கோருகின்றனர். இதனூடாக மீண்டும் இன முரண்பாடுகளைக் தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது என்ற சந்தேகம் எழுகின்றது.

நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக வெளி உலகிற்கு காட்டி அரசு தன்னைப் பாதுகாத்தக் கொள்ள முயல்கிறது. ஏனெனில் இங்கு பிரச்சனைகள் இருக்கிறதென்றால் இனப்பிரச்சனைக்கான தீர்வை வழங்காமலும், ஐ.நா தீர்மானத்தில் இருந்து விலகியிருப்பதற்கும் தேர்தல்களை நடாத்தாமல் இருப்பதற்குமென பல காரணங்களை அரசு தன்வசம் வைத்துள்ளது. இவ்வாறு அரசு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் இரண்டு முகங்கள் கொண்டு செயற்பட்டு வருகின்றது என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/119309

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Rajesh said:

எமது அரசுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி. ஆனால், நீங்கள் அளிக்கும் ஆதரவை பிரயோசனம் இல்லாமல் அளிக்க வேண்டாம். இந்த அரசில் இருந்துகொண்டே இதை நான் சொல்கிறேன்.

இந்தக் கெட்டித்தனம் எமது தலைவர்களுக்கு இல்லையே.

குதிரையில் ஏறும் போது கடிவாளத்தை அடுத்தவரிடமெல்லோ கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

இந்த குண்டு வெடிப்பு சில அரசியல் நோக்கங்களுக்கு சிலரால் செய்யப்பட்ட்து ....இது அரசாங்கத்துக்கு தெரியும் .....

Link to comment
Share on other sites

13 hours ago, ஈழப்பிரியன் said:

குதிரையில் ஏறும் போது கடிவாளத்தை அடுத்தவரிடமெல்லோ கொடுக்கிறார்கள்.

கடிவாளத்தை பிடிச்சால் இரண்டே கைகளை வச்சுக்கொண்டு அவங்கள் அள்ளி வீசுறதை எப்பிடி பொறுக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Rajesh said:

கடிவாளத்தை பிடிச்சால் இரண்டே கைகளை வச்சுக்கொண்டு அவங்கள் அள்ளி வீசுறதை எப்பிடி பொறுக்கிறது?

தமிழ் மக்களுக்கான நல்லதொரு தலைமை எப்போது வரும் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.