Jump to content

கொழும்பு, நீர்கொழும்பில் தங்கியிருந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் அகதிகளை வவுனியாவில் குடியேற்ற முடிவு

Recommended Posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து

கொழும்பு, நீர்கொழும்பில் தங்கியிருந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் அகதிகளை வவுனியாவில் குடியேற்ற முடிவு

ஆனால் ஒன்பது மாகாணங்களிலும் பகிர்ந்து குடியமர்த்துமாறு சிவசக்தி ஆனந்தன் மைத்திரிக்குக் கடிதம்
 
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து ஏற்பட்ட அசாதாரண நிலையினால், ஏற்கனவே அகதிகளாகத் தஞ்சம் கோரி கொழும்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் தங்கியிருந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்களை வவுனியாவில் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாட்டவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுக்கு உதவியளித்திருக்கலாமோ என்ற சந்தேகத்தில் அவர்களை வெளியேற்றுமாறு கோரி நீர்கொழும்பில் சிங்கள மக்கள் பெரும் அழுத்தங்களைக் கொடுத்து வந்தனர். 
 
இதனால், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோரின் ஆதரவுடன் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு கட்டடம், செட்டிகுளம் மெனிக்பாம், பத்தினியார் மகிழங்குளம் பிரதேசங்களிலுள்ள அரச கட்டடங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

ஆனால், வவுனியாவில் அவர்களைக் குடியேற்ற வேண்டாமெனவும் அது மேலும் பல இன வேறுபாடுகளை உருவாக்குமெனவும் குறிப்பிட்டு , நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

எனினும் ஆளுநர் சுரேன் ராகவன், சுமந்திரன் ஆகியோர் அந்த அகதிகளை வவுனியாவில் குடியமர்த்த அனுமதித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.

ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்களைப் பகுதி பகுதியாகப் பிரித்து ஒன்பது மாகாணங்களிலும் உள்ள அரச கட்டங்களில் குடியமர்த்துமாறு சிவசக்தி ஆனந்தன் கேட்டுள்ளார்.

எனினும் அவர்களை வவுனியாவில் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இலங்கையில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு மாதமும் தலா இருபதாயிரம் ருபாய் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=939&fbclid=IwAR2ASWfrOGVkuUQlTltaam3Mh_oXCrpGpkUilgNL0GMOg9C53qEuuWsKPm8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு நடவடிக்கையை ராஜசிங்கன் மன்னன் எடுத்துத் தான் இன்று காத்தான்குடியின் ஊடாக கிழக்கு தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

இது வடக்கில் ஏலவே.. வவுனியா.. மன்னார்.. கிளிநொச்சி.. முல்லைத்தீவு.. யாழ்ப்பாணம்.. பருத்தித்துறை.. சாவகச்சேரி என்று எல்லா நகரின் இதயங்களிலும் போய் குந்தி இருக்கும் முஸ்லீம்கள்.. அகண்ட வடக்கு காத்தான்குடியை வவுனியாவை மையமாக உருவாக்கி.. வடக்கையும் கிழக்கைப் போல தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கவே வழிகோலும்.

ஒருபுறம் சிங்களக் குடியேற்றங்ளும்.. சிங்கள இராணுவ இருப்பும்.... வடக்குக் கிழக்கை சிங்கள மயமாக்கி வரும் நிலையில்.. இந்த முடிவு தமிழ் மக்களின் வடக்கிக் கிழக்கு பெரும்பான்மை இருப்பை முற்றாக இல்லாமல் செய்யும் ஒரு நடவடிக்கையின் இன்னொரு தொடக்கப்புள்ளியாகவே இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை அங்கு குடியேற்ற கூடாது..இது தமிழர்களுக்கு நல்லதல்ல...மேலும் பிரச்சனைகளுக்கு வலி கோலும் 

Link to comment
Share on other sites

27 minutes ago, nunavilan said:

இதனால், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோரின் ஆதரவுடன் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு கட்டடம், செட்டிகுளம் மெனிக்பாம், பத்தினியார் மகிழங்குளம் பிரதேசங்களிலுள்ள அரச கட்டடங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

ஆளுநர் சுரேன் ராகவன் சிங்கள அரசின் எடுபிடி. சுமந்திரனுமா......?? சும்மின் இரத்தம் பரிசோதிக்கப்பட வேண்டும்...😠

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

இப்படி ஒரு நடவடிக்கையை ராஜசிங்கன் மன்னன் எடுத்துத் தான் இன்று காத்தான்குடியின் ஊடாக கிழக்கு தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

இது வடக்கில் ஏலவே.. வவுனியா.. மன்னார்.. கிளிநொச்சி.. முல்லைத்தீவு.. யாழ்ப்பாணம்.. பருத்தித்துறை.. சாவகச்சேரி என்று எல்லா நகரின் இதயங்களிலும் போய் குந்தி இருக்கும் முஸ்லீம்கள்.. அகண்ட வடக்கு காத்தான்குடியை வவுனியாவை மையமாக உருவாக்கி.. வடக்கையும் கிழக்கைப் போல தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கவே வழிகோலும்.

ஒருபுறம் சிங்களக் குடியேற்றங்ளும்.. சிங்கள இராணுவ இருப்பும்.... வடக்குக் கிழக்கை சிங்கள மயமாக்கி வரும் நிலையில்.. இந்த முடிவு தமிழ் மக்களின் வடக்கிக் கிழக்கு பெரும்பான்மை இருப்பை முற்றாக இல்லாமல் செய்யும் ஒரு நடவடிக்கையின் இன்னொரு தொடக்கப்புள்ளியாகவே இருக்கும். 

ஏற்கனவே மன்னார் பறிபோய் விட்டது

வவுனியா அடுத்ததாக உள்ளது.....!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Dash said:

ஏற்கனவே மன்னார் பறிபோய் விட்டது

வவுனியா அடுத்ததாக உள்ளது.....!!!!

இந்த நெரத்தில் உங்களை தேடினேன்.இப்பவாவது வந்திங்களே.இது நக்கலோ நளினமொ இல்லை.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லி யார் இதை நிறுத்துப்போவது . ஆனால் இதையும் இன்னும் வர இருப்பதையும் எதிர்காலத்திற்கு பாவிக்க முனைய வேண்டும் .  அது மட்டுமல்ல எதிர்கால அரசியல் காய் நகர்தலுக்கு இப்படியான சில விட்டு கொடுப்புகளும் தேவை. ஈழத்தில் இன்று சின்னாபின்னமாகி இருக்கும் தமிழ் தலைமைகள் மற்றும்  மேலைத்தேய நாடுகளில் இருக்கும் தமிழ் கூட்டுகள் இந்த (தாக்குதல்) சம்பவத்தால் நிலைகுழம்பி இருப்பது நன்றாக தெரிகிறது. இவர்களால் ஈழத் தமிழரை எவ்வாறு இப்பிரச்னையால் வழிகாட்டுவது என்பது தலைமைத்துவத திரணி இன்றி முடங்கி கிடக்கிறது. இவர்களது நடவடிக்கைகள் உன்னிப்பாக பலரால் கவனிக்கப்படும்.  கிழக்கு கண்ட நாடுகள்  நமக்கு இம்மியளவேனும் உதவி செய்ய வர போவதில்லை.  ஆனால் முந்தைய  ஐ . நா . கூட்டத்தில் எமது கோரிக்கைகளுக்கு செவிமடுத்த நாடுகள் எமது நடவடிக்கைகளை அவதானித்துக்கொண்டு இருக்கிறார்கள் . அடுத்த ஐ . நா . கூட்டத்துக்கு இவர்கள் செல்லும்போது  இதன் விளைவு தெரிய வரும்.  மேலைத்தேய மக்களின் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஈழத்தை அண்டிய ஓர் பிரச்சனை தொடர்ச்சியாக கவனப்படுத்தப் பட்டுள்ளது. இது ஓர் அருமையான தருணம். இதை பாவிக்க ஒழுங்கான தலைமைகள் இல்லை என்பது உண்மை . ஆனால் பொதுவான  தமிழரும் தமது நடவடிக்கைகளால் ஒரு பக்கசார்வாக அல்லது கவலையத்தவர்களாக காட்ட முனைந்தால் எமது மக்களுக்கு முன்னேறுவதட்க்கான கதவுகளை மூடி விடும். வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்கள் அல்ல தாயகத்தில் அனாதரவாக்கப்பபட்டுள்ள தமிழர்களை குறிப்பிடுகிறேன் . யாரோ ஒருவர் எதையோ மௌனித்து யாருக்கோ இந்த பிரச்சினையை கையில் கொடுப்பதாக குறிப்பிட்டார் . அப்படியோர் தருணம் இது . 

Link to comment
Share on other sites

இவர்களை காத்தான்குடியில் தங்கவைக்கலாமே!

ஒரே கலாச்சாரம், சந்தோசமா இருக்கலாம்!

மசூதிகளும் இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Rajesh said:

இவர்களை காத்தான்குடியில் தங்கவைக்கலாமே!

ஒரே கலாச்சாரம், சந்தோசமா இருக்கலாம்!

மசூதிகளும் இருக்கு!

ஹாஹா 🤣😉முடியல்ல...காத்தான்குடி முஸ்லீம் இவர்களை கொல்ல திரிவது தெரியாதா
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது நிலம், முஸ்லீம்களிடம்  போவதை இனியும் அனுமதிக்க முடியாது.
எமது அரசியல்வாதிகள்...  இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

51 minutes ago, ரதி said:

ஹாஹா 🤣😉முடியல்ல...காத்தான்குடி முஸ்லீம் இவர்களை கொல்ல திரிவது தெரியாதா
 
கொல்ல வந்தால் இந்தா கொல்லு என்று இவர்கள் சும்மா இருத்திடுவார்களா? அல்லது சொறிலங்கா அரசும் கொல்லட்டும் என்று பாத்துக்கொண்டு நிக்குமா? என்ன சொல்லவாறீங்கள்? 😉🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Rajesh said:

கொல்ல வந்தால் இந்தா கொல்லு என்று இவர்கள் சும்மா இருத்திடுவார்களா? அல்லது சொறிலங்கா அரசும் கொல்லட்டும் என்று பாத்துக்கொண்டு நிக்குமா? என்ன சொல்லவாறீங்கள்? 😉🤣

இவர்கள் முஸ்லீம்களது ஒரு பிரிவு..பெயர் நினைவுக்கு வருதில்லை...சிறுபான்மையினர்...பாக்கிஸ்தான்,வ,தேசத்தில் இருந்து உயிருக்கு பயந்து தான் இங்கே வந்துள்ளார்கள்...அங்குள்ளவர்கள் இவர்களை கொல்ல திரிகிறார்கள்...இங்குள்ள முஸ்லிம்களும் இவர்களுக்கு எதிரிகள் தான்..

Link to comment
Share on other sites

8 minutes ago, ரதி said:

இவர்கள் முஸ்லீம்களது ஒரு பிரிவு..பெயர் நினைவுக்கு வருதில்லை...

அஹமதியா முஸ்லிம்ஸ்

Link to comment
Share on other sites

23 minutes ago, ரதி said:

இவர்கள் முஸ்லீம்களது ஒரு பிரிவு..பெயர் நினைவுக்கு வருதில்லை...சிறுபான்மையினர்...பாக்கிஸ்தான்,வ,தேசத்தில் இருந்து உயிருக்கு பயந்து தான் இங்கே வந்துள்ளார்கள்...அங்குள்ளவர்கள் இவர்களை கொல்ல திரிகிறார்கள்...இங்குள்ள முஸ்லிம்களும் இவர்களுக்கு எதிரிகள் தான்..

பெயரில் முஸ்லிம்கள். மதத்தில் கிறிஸ்தவர்கள்(மாறினார்கள்).இதனால் யாரும் இவர்களுக்கு உதவ முன் வரவில்லை. ஐ.நா வால் இவர்கள் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டார்கள் என தெரிகிறது.ஐ.நா வால் மாதக் கொடுப்பனவு கொடுக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

இவர்களை அங்கு குடியேற்ற கூடாது..இது தமிழர்களுக்கு நல்லதல்ல...மேலும் பிரச்சனைகளுக்கு வலி கோலும் 

தனக்கு மிஞ்சியே தானம் அகதிகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ஆனால் நம்ம நாடு ஒன்றும் வளர்ச்சியடைந்த நாடு கிடையாது 

நம்ம சனம் பல் ஆயிரம் பேர் அகதிகளாக சென்று இன்று பல நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளார்கள் அப்படி அந்த நாட்டுக்காரன் நினைத்து இருந்தால் பல பலர் இப்ப வரைக்கும் அநாதரவாகத்தான் திரிந்து இருக்க வேண்டும் வந்து வுடன் அனுப்பிருந்தால் இந்த பிரச்சினை வந்திராது ஆனால் இருக்க விட்டு போக சொல்வதென்பது மனிசன் என்ற வகையில் ஏற்றுக்கொள்ள முடியாது வேண்டுமானால் கிழக்கி குடியேற்றலாம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

பெயரில் முஸ்லிம்கள். மதத்தில் கிறிஸ்தவர்கள்(மாறினார்கள்).இதனால் யாரும் இவர்களுக்கு உதவ முன் வரவில்லை. ஐ.நா வால் இவர்கள் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டார்கள் என தெரிகிறது.ஐ.நா வால் மாதக் கொடுப்பனவு கொடுக்கப்படுகிறது.

யார் சொன்னது இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று ...இவர்களும் முஸ்லீம்கள் தான்...நோன்பு துறப்பதற்கு தயார் ஆகின்றனர் என்று எங்கேயோ வாசித்தேன் ...எங்களுக்குள் பல சாதிகள் இருக்கின்ற மாதிரி அவர்களில் சிறுபான்மையினர்...யாராவது தெளிவு படுத்தினால் நல்லம் 
 
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

தனக்கு மிஞ்சியே தானம் அகதிகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ஆனால் நம்ம நாடு ஒன்றும் வளர்ச்சியடைந்த நாடு கிடையாது 

நம்ம சனம் பல் ஆயிரம் பேர் அகதிகளாக சென்று இன்று பல நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளார்கள் அப்படி அந்த நாட்டுக்காரன் நினைத்து இருந்தால் பல பலர் இப்ப வரைக்கும் அநாதரவாகத்தான் திரிந்து இருக்க வேண்டும் வந்து வுடன் அனுப்பிருந்தால் இந்த பிரச்சினை வந்திராது ஆனால் இருக்க விட்டு போக சொல்வதென்பது மனிசன் என்ற வகையில் ஏற்றுக்கொள்ள முடியாது வேண்டுமானால் கிழக்கி குடியேற்றலாம்  

தனி ஏற்கனவே அங்கு இருக்கின்ற முஸ்லீம் மக்களது கரைச்சல் தாங்கவில்லை...அதில இவர்கள் வேறையா?...எத்தனையோ மு.நாடுகள்,வசதியான நாடுகள் இருக்கின்றன...அவர்கள், இவர்களை ஏற்கலாம் தானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

எமது நிலம், முஸ்லீம்களிடம்  போவதை இனியும் அனுமதிக்க முடியாது.
எமது அரசியல்வாதிகள்...  இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

உந்நதப் பிரச்சனைக்கு புலம் பெயர் நாங்களும் ஆர்வம் காட்ட வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

ஹாஹா 🤣😉முடியல்ல...காத்தான்குடி முஸ்லீம் இவர்களை கொல்ல திரிவது தெரியாதா
 
என்ன இருந்தாலும் தங்கச்சி! உந்த  புலம்பெயர் நடுநிலை வாத்தியளின்ரை பினாத்தல் தாங்கேலாமல் கிடக்கு.....நாங்கள் அகதியாய் வந்தனாங்களாம்.....அதாலை அவைக்கும்  அங்கை இடம் குடுக்க வேணுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17 hours ago, ரதி said:

தனி ஏற்கனவே அங்கு இருக்கின்ற முஸ்லீம் மக்களது கரைச்சல் தாங்கவில்லை...அதில இவர்கள் வேறையா?...எத்தனையோ மு.நாடுகள்,வசதியான நாடுகள் இருக்கின்றன...அவர்கள், இவர்களை ஏற்கலாம் தானே 

ம் அது நல்ல யோசனைதான் ஆனால் முஸ்லீம் நாடுகள் அவர்கள் நாட்டை தவிர மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதில்லை ( மத்திய கிழக்கு) அது போக முஸ்லீம் என்றால் அவர்கள் அவர்கள் நாட்டுக்காரரை மட்டுமே பார்ப்பார்கள் மற்ற நாட்டுக்காரரை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் மத்திய கிழக்கில் நான் இருந்த நேரத்தில் பாகிஸ்தானி , வங்காளி , சூடானி, இலங்கை , இந்தியா போன்ற நாடுகளின் முஸ்லீம்களை  முஸ்லீமாக மட்டுமே பார்ப்பார்கள் ஆனால் இணைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.