Jump to content

நாவாந்துறையில் கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில் ஒருவர் கைது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதும் வதைக்கப்படுவது தமிழர்கள் தான்,

நேற்று பேருந்தில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் பயணம் செய்தவர் ஒருவர், தமது பேரூந்து புளியங்குளம், மாங்குளம், ஆனையிறவு ஆகிய இடங்களில் பயணிகள் அனைவருமே இறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக முகநூலில் எழுதியிருந்தார்.

ஆனால் இன்று அதிகாலை எனது உறவினர் ஒருவர் திருகோணமலையிலிருந்து கொழும்பு வந்தபோது தமது பேரூந்து ஓர் இடத்தில் மட்டுமே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக கூறினார்.

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

முஸ்லிம்களும் தமிழர்களுடன் வாழ்வதைவிட சிங்களவர்களுடன் வாழலாம் என்று போர்க்காலத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்கள். இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது!

ஒரே மொழியைப் பேசும் இரு சிறுபான்மை இனங்களுக்குள் உள்ள இந்த பரஸ்பர நம்பிக்கையற்ற தன்மையே சிங்களம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இரு இனங்களையும் தலையில் குட்டி அமத்திவைத்திருக்க வாய்ப்பைக்கொடுத்துள்ளது.

உண்மை ,சமுகங்களை தனித்துவத்துடன் வாழ அனுமதிக்க வேண்டும்,அதை சிங்கள அரசு செய்ய தவறியபடியால் வந்த விணைகளை சிறிலங்காவின் சதாரண குடிமக்கள் அனுபவிக்கின்றனர்....முஸ்லீம்கள் இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றமால் அரேபிய கலாச்சாரத்தை பின்பற்ற வெளிக்கிட்டமையால் தான் இன்று இளம் சந்ததியினர் இஸ்லாத்தை விட்டு அதி தீவிர அரேபிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்.......

ஒரே மொழி பேசும் சிறுபான்மை இனம் என்று சொல்லவும் முடியாது த்ற்பொழுது,சிங்களமொழியை வீடுகளில் பேசி சிங்கள முஸ்லீம்களும் உருவாகி கொண்டிருக்கிறார்கள்,குரான் சிங்கள மொழியில் வெளிவந்துள்ளது....

Link to comment
Share on other sites

நாங்கள் வெளி நாட்டில்தான் வாழுவோம்.🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Iraivan said:

நாங்கள் வெளி நாட்டில்தான் வாழுவோம்.🤣🤣

நன்றாகச் சொன்னீர்கள்.

நாங்கள் வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு.. கூட இருந்து குழிபறிக்கும் முஸ்லீம்களுக்கு நோகக் கூடாது என்று வகுப்பெடுப்போம். எங்கள் மண்ணும் நிலமும் அவனால் அடாத்தாகப் பறிக்கப்படும் வெட்டியாக பார்த்திருப்போம். எங்கள் பெண்களை அவன் மதம் மாற்றியோ மாற்றமலோ.. தனது மத பாலியல் அடிமையாக்கும் போது கூட கண்டும் காணாமலும் இருப்போம்.

சிங்களவன்.. யுத்த களத்தில் செய்ததை.. வன்முறைக் களத்தில் செய்தததை..  ஆக்கிரமிப்பு மண்ணில் செய்ததை.. செய்வதை.. முஸ்லீம் தினமும் கூட இருந்து.. செய்தாலும் நாம் அனுமதித்து.. புட்டும் புளிச்ச தேங்காய்பூவும் என்று கதை அளந்து கொண்டே இருப்போம்.

இதெல்லாம்.. ஊருக்கு உபதேசம்.. உனக்கிள்ளையடி கண்ணே.. என்ற கணக்கு. 😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Iraivan said:

நாங்கள் வெளி நாட்டில்தான் வாழுவோம்.🤣🤣

கடந்த முறை போய்விட்டு வந்தவுடன் ,இளைப்பாறிய பின்பு அங்கு ஆறு மாதம் இங்கு ஆறுமாதம் இருப்பம் என்று நினைத்தேன் ....இனி மயிரைத்தான் போனான் சிங்கன்....இரண்டு ஜம்பரை  போட்டுக்கொண்டு குளிரை தாக்கு பிடிக்கலாம் அங்க போய் குண்டு அடி,பொல்லடி வாங்க முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, nedukkalapoovan said:

இதெல்லாம்.. ஊருக்கு உபதேசம்.. உனக்கிள்ளையடி கண்ணே.. என்ற கணக்கு

கோத்தபாய ஆட்சிக்கு வந்து எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு தருவார். அதி தீவிரவாதிகள் எல்லாரையும் பிடித்து புனர்வாழ்வு கொடுப்பேன் என்று வேறு சொல்லியுள்ளார். அதனால் நெடுக்ஸ் போன்றவர்கள் வெளிநாட்டில்தான் வாழவேண்டும்.

நான் கோத்தபாய ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகளில் நிரந்தரமாக போய் வாழ அடுக்குகளை செய்துகொண்டிருக்கின்றேன்😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, putthan said:

கடந்த முறை போய்விட்டு வந்தவுடன் ,இளைப்பாறிய பின்பு அங்கு ஆறு மாதம் இங்கு ஆறுமாதம் இருப்பம் என்று நினைத்தேன் ....இனி மயிரைத்தான் போனான் சிங்கன்....இரண்டு ஜம்பரை  போட்டுக்கொண்டு குளிரை தாக்கு பிடிக்கலாம் அங்க போய் குண்டு அடி,பொல்லடி வாங்க முடியாது

நீங்களாவது 6 மாதம், நான் நிரந்தரமாகவே அங்கு போய் இருப்பதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தேன். மகனுக்கும் இலங்கை கடவுச்சீட்டு எடுத்தேன்.

Link to comment
Share on other sites

3 hours ago, MEERA said:

நீங்களாவது 6 மாதம், நான் நிரந்தரமாகவே அங்கு போய் இருப்பதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தேன். மகனுக்கும் இலங்கை கடவுச்சீட்டு எடுத்தேன்.

இங்கு என்னைப் போன்று Skill migration மூலம் வந்த என் பல நண்பர்கள் (பலர் IT / Software துறையில் இருப்பவர்கள்) நிரந்தரமாக ஊருக்கு போய் வாழ்வதற்கான பல ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தனர். ஒருவர் தன் குடும்பத்துடன் அப்படி போய் அங்கு வாழவும் தொடங்கி இருந்தார். இப்ப அனைவரும் தம் திட்டங்களை கைவிட்டு விட்டனர். ஊரில் செட்டிலான நண்பனும் குடும்பத்துடன் மீண்டும் இங்கு வர ஆயத்தங்களை செய்கின்றான்.

இலங்கையின் அரசியலமைப்பில் பெரும் மாற்றம் வராமல் அங்கு நிரந்தரமாக அமைதி வராது. அப்படியான அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதற்கான ஒரு தலைமையும் அங்கு இல்லை. இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து ஆட்சி செய்யும் / செய்த அனைத்து சிங்கள தலைவர்களும் நாட்டை உருப்படுத்துவதை விட இனவாத ஆட்சி செய்து தம் இன மக்களையும் சீரழிப்பதில் தான் வெற்றி கண்டு கொண்டுள்ளனர். மகாவம்சக் கனவில் மூழ்கிக் கிடக்கும் சிங்கள சமூகத்தில் இருந்து எல்லா மக்களையும் அரவணைத்து செல்லக் கூடிய தலைமை ஒரு போதும் ஏற்படப் போவதில்லை.

இலங்கையின் எதிர்காலம் பற்றி கதைக்க முதல், அதற்கு எதிர்காலம் ஒன்றே இருக்குமா என சந்தேகம் தான் வருகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

உண்மை,

இங்கு எனக்குத் தெரிந்த சிலர், ஊரில் குறைந்தது 6 மாதத்திற்காவது போய் இருந்துவிட்டு வரலாம் என்கிற ஆசையில் யாழ்ப்பாணத்தில் வீடுகளைக் கட்டலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். பலவருட கால புலம்பெயர் வாழ்க்கையின் சலிப்புத்தன்மையும், தாய்நாட்டில் இறுதிக்காலத்திலாவது வாழவேண்டும் என்கிற தவிப்பும் இவ்வாறு அவர்களைச் செய்ய தூண்டுகிறது.

அதேபோல, இன்னும் சிலர் வாழ்வின் சூழ்நிலைகளுக்கெற்ப, ஊரில் சென்று வாழலாம் என்று கொழும்பு உற்பட சில இடங்களில் வீடுகளை வாங்கி விடுகிறார்கள். பிள்ளைகள் வளர்ந்து, அவர்கள் எங்கே போவதென்று முடிவெடுத்தபின், தாம் ஊருக்கே சென்றுவிடலாம் என்பது அவர்களின் எண்ணம். 

என்னுடன் கூட வேலைசெய்யும் நண்பர், அடிக்கடி ஊர்போய் வருபவர். இன்று என்னுடன் பேசும்போது ஊரின் நிலை பற்றிச் சொன்னார். சோதனைக் கெடுபிடிகள், விசாரணைகள், தேடுதல்கள் என்று போர்க்காலத்தின் நிலைக்கு யாழ்ப்பாணம் திரும்பிவிட்டதென்று அவரது தம்பியி கூறியதாகவும், இனிமேல் ஊருக்குப் போய்வரும் எண்ணத்தைக் கட்டிவைத்துவிடவேண்டியதுதான் என்று கூறுகிறார். 

யுத்தம் என்று ஒன்று பாரிய அளவில் நடைபெறாதவிடத்து, அவ்வாறான முடிவுகள் சாத்தியமாக இருந்தது. ஆனால், அப்பாவிகளைக் கொல்வததை வேதமாகக் கொண்ட அடிப்படைவாதம் இவ்வாறான எண்ணங்களை நிச்சயம் கலைத்துவிடும். 

ஒருகட்டத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டாலும் கூட, தொடர்ச்சியான சிங்களப் பேரினவாதம் நிற்கப்போவதில்லை. தமிழர்கள் மீதான அதனது ஆக்கிரமிப்பும், கலாசரா மொழிச் சிதைவும் தொடரத்தான் போகிறது. ஒருகாலத்தில் தமிழர்க்கான தாயகம் அங்கே இருந்ததற்கான அடையாளம் முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டுவிடும். இப்போதிருக்கும் தமிழ் அரசியத் தலைமைகளால் இதைத் தடுப்பதென்பது முடியாத காரியம். இன்னொரு போராட்டத்திற்கான முயற்சியை புதிய உலக ஒழுங்கு ஒருபோதும் விரும்பப்போவதில்லை என்பதுடன், அடக்குமுறையாளர்களுடன் கைகோர்த்து முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த  வருசம் ஊருக்குப் போய் பார்த்துட்டு அங்கே செட்டிலாகும் ஜடியா இருந்திச்சுது ..இப்பவும் இருக்குது...குண்டு வெடிச்சு தான் சாக வேண்டும் என்றால் லண்டனில் இருந்தாலும் குண்டு வெடிச்சு தான் சாக வேணும்...இந்த பிரச்சனை கொஞ்ச நாளில் அடங்கி விடும்...புலிகளை அடக்கினவர்களுக்கு இவர்களை அடக்குவது பெரிய வேலை இல்லை  என்று நினைக்கிறேன்.

மைத்திரி கொஞ்ச நாளாய் சொல்லிக் கொண்டு வந்தார்...போதைவஸ்தை ஒழிப்போம்,போதைவஸ்தை ஒழிப்போம் என்று...நாடு முழுதும் சல்லடை போட்டு தேடினம் எங்கேயாவது போதைவஸ்து பிடிபட்ட செய்தி வந்ததா?... ஒரு வேளை மைத்திரி போதைவஸ்து என்று முஸ்லீம் தீவிரவாதத்தை தான் சொல்லி இருப்பாரோ என்று சந்தேகம் வருகிறது 

உங்கள் எல்லோரிடமம் ஒரு கேள்வி 3ம் உலக மகா யுத்தம் அரபு நாடுகளோடு வந்தால் இலங்ககை பாதுகாப்பு ஆனதா? அல்லது நாம் இருக்கும் நாடுகள் பாதுகாப்பானதா ?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

இவர்களை அடக்குவதுக்கு சிங்கள புலனாய்வுத்துறை தான் அடங்கினாலே போதுமானது 
இவர்கள் வெறும் வால் சிங்கள இனவெறித்தான் தலை உடம்பு எல்லாம்.
இப்போ வெடித்த சி 4 வெடிமருந்து இலகுவாக யாருக்கும் கிடைக்காது  இது இராணுவத்தின் 
வெடிமருந்து என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. 
அவர்கள் நோக்கம் தமிழர்களை அழிப்பதுதான் முஸ்லிம்களை வில்லாக பாவிக்கிறார்கள்.

போதைவஸ்த்து என்பது பல கோடி ரூபாய் வருமான வியாபாரம் 
எந்த முன்னெச்செரிக்கையும் இல்லாமல் நகருவதில்லை ... இதில் பாதி பணம் பார்ப்பது 
அந்த அந்த நாட்டு இராணுவமும் போலீஸும்தான். அமெரிக்காவிலேயே இராணுவத்துக்கு 
இதில் பெரும் பங்கு உண்டு. இலங்கை போலீசு எல்லோருக்கும் விடுமுறை விட்டால் மக்கள் இரண்டு நாளில் 
போதைவஸ்த்தை ஒழிக்க முடியும். அவர்கள் தேடினால் எப்படி கிடைக்கும்? 

3ஆம் உலக போர் எவ்வாறு அரபுநாடுகளுடன் வரலாம்?
ஈரான் மீது அமெரிக்க போர்தொடுத்தால் ஒரு வேளை அதில் ஈரானுக்கு 
உதவியாக ரஸ்யா போனால் அது ரஷிய அமெரிக்க போராக மாறும் 
ஒரு பக்கம் ரஷ்ய- சீனா  வும்  மறுபக்கம் அமெரிக்க - ஐரோப்பிய  நாடுகளும் இருக்கும் 
எப்படியும் மூன்று நாலு அணுகுண்டை ரசியா லண்டனில் போடும் அதை மறைமுகமாக 
அமெரிக்காவும் விரும்பும் .... பின்பு லண்டனை தனது இன்னொரு மாநிலமாக மாற்றிவிடலாம் என்ற 
உள் எண்ணம் இருக்கும். இலங்கையை பொறுத்தவரை சீனா இலங்கையில் தரை இறங்கும் இந்திய- சீன போர் நடக்கும் ... இந்தியா தனது வெடிக்காத குண்டுகளை போடும் ... தலையில் வீழாது பார்த்துக்கொண்டால் 
தப்பி பிழைக்க வாய்ப்பு உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

நீங்கள் மட்டுமல்ல ஊரில் இருப்பவர்கள் கூட அரசுதான் இவர்களை வளர்த்தது என்று சொல்கிறார்கள்...எனக்கும் அதில் மாற்றுக் கருத்து இல்லை... புலிகளை அழித்த பின் இவர்களை அழிக்க வேண்டும் என்பது சிங்களம் ஏற்கனவே போட்ட நிகழ்ச்சி நிரல் அதன் படியே செய்து வருகிறது..இவர்கள் அழிக்கப் பட வேண்டியவர்கள் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை...தமிழர்கள் பட்ட வலி கொஞ்சமாவது இவர்கள் உணர வேண்டும்...எப்படித் தான் தமிழர்களை அழிக்க இவர்கள் உதவி செய்தாலும்,நீங்களும் சிறுபான்மையினர் தான் என்று முஸ்லிம்களுக்கு புரிய வைத்த சிங்கள அரசிற்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே புலம்பெயர்ந்த பலர் தங்கள் கருத்துக்களில் மீண்டும் இலங்கையில் குடியேறுவது பற்றி  கூறியிருக்கின்றார்கள். அவர்கள் மறைமுகமாக  விடுதலைப் புலிகளினால்தான் நாட்டில் பிரச்சனை இருந்தது என்று சொல்ல வருகின்றார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தாயம் அமைந்து தேசிய தலைவர் நிகழ்த்திய நீதியான ஊழல் அற்ற அபிவிருத்தியே முதன்மை நோக்காகவும் மக்கள் நலனை முதன்மைக் கடமையாகவும் கருதத்தக்க ஒரு ஆட்சி அமைந்தால் அன்றி.. ஊருக்குப் போறதா இல்லை. 

ஒன்றை உன்னிப்பாகக் கவனிக்கனும்.. குண்டு வெடித்த அடுத்த நிமிடம்.. புத்துக்க இருந்து ஈசல் வாற கணக்கா.. இராணுவமும்.. தடை முகாம்களும் முளைத்துவிட்டன.

இத்தனைக்கும்.. அதிகம் குண்டு வெடித்தது மேற்கில். ஆனால்... தீவிர சோதனை கெடுபிடி என்பது வடக்கில். 

சிங்களவன் எவ்வளவு அடிமையா இந்த மக்களை வைச்சிருக்கிறான்.. தன் ஆக்கிரமிப்புக்குள் என்பதை இப்பவாவது விளங்கிக் கொள்ளனும் சிலர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இங்கே புலம்பெயர்ந்த பலர் தங்கள் கருத்துக்களில் மீண்டும் இலங்கையில் குடியேறுவது பற்றி  கூறியிருக்கின்றார்கள். அவர்கள் மறைமுகமாக  விடுதலைப் புலிகளினால்தான் நாட்டில் பிரச்சனை இருந்தது என்று சொல்ல வருகின்றார்களா?

புலி மட்டும்தான் தான் நினைத்தை செய்யும் 
மற்ற அனைவருக்கும் ஆட்டுவிக்க ஒருவர் வேணும் 
அது சிங்கள அரசு பார்த்துக்கொள்ளும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஒரு காலமும் பிரச்சனை இல்லாதமாதிரியும்......ஏதோ விடுதலைப்புலிகள் வந்த பின்னரே இலங்கையில் வாழமுடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டது போலவும்  பல மீள்குடியேற்ற கருத்துக்களை வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இவர்களுக்கு இலங்கையில் நடந்த இனக்கலவரங்கள் ஞாபகத்திற்கு வரவில்லையா?

சிங்களகாடையர்களினால் அடித்து விரட்டப்படும் போது சொந்த ஊர் நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டதை மறந்து விட்டார்களா?

அல்லது தமிழ் பிரதேசங்களில் குடிகொண்டிருக்கும் ராணுவம் கடற்படை விமானப்படை எல்லோரும் நல்லவர்களாக மாறிவிட்டார்கள் என எண்ணுகின்றார்களா?

10 வருட இடைவெளியில் ஈழத்தமிழரின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்தமாதிரியே ஒரு சில கருத்துக்கள் காணப்படுகின்றன.

இலங்கையில் பிரச்சனையே சிங்களமும் அதன் கொள்கையுமே என்பதை உலகம் புரிய முன் எம்மவர் புரிந்து கொண்டால் கடவுளுக்கு நன்றி சொல்வேன்.

சோனகர் குண்டு போட்டாங்களாம்.....இனி ஊருக்கு போய் இருக்கேலாதாம்.....தங்கச்சி.....தங்கச்சி.......🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

அப்ப எல்லாம் அவையட்ட காசு கொஞ்சம் கையில கடிச்சது. இப்ப சோசல் காசு.. சம்பளக் காசு.. கிரடிட் காட் காசு.. சீட்டுக்காசு... லோன் காசு.. ரீமோக்கேச் காசு.. யாவாரக் காசு.. சுருட்டின காசு.. கொள்ளையடிச்ச காசு.. கள்ளமட்டைக் காசு.. அப்படி இப்படின்னு.. கொஞ்சக் காசுகள் கையில புளங்குதில்ல.. வெளிநாட்டுக்கு ஓடியாந்தப் பிறகு. அதில அவைக்கு..  உரிமை.. போராட்டம்.. மண்... எல்லாம் மண்ணும் மண்ணாங்கட்டியுமா தெரியுது.

இதனால் தான் நாங்க இவர்களை எப்பவுமே பொருளாதார அகதிகள் என்று சொல்லுறது. நீங்கள் பல தடவைகள் இதற்கு கோபித்துக் கொண்டதுண்டு.

இப்ப விளங்குதா எம்மவரின் பிறவிக் குணம் என்னென்பது. 😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

இங்கே புலம்பெயர்ந்த பலர் தங்கள் கருத்துக்களில் மீண்டும் இலங்கையில் குடியேறுவது பற்றி  கூறியிருக்கின்றார்கள். அவர்கள் மறைமுகமாக  விடுதலைப் புலிகளினால்தான் நாட்டில் பிரச்சனை இருந்தது என்று சொல்ல வருகின்றார்களா?

புலிகளால் தான்  நாட்டில் பிரச்சனை இருந்தது என்று சொல்லவில்லை அண்ணா...ஆனால் புலிகள் தற்போது இருந்திருந்தால் வட கிழக்கு அபிவிருத்தி அடையவோ,புலம் பேர் மக்கள் ஊரில் முதலிடவோ அரசு விட்டு இருக்காது ...நீண்ட காலத்திற்கு சும்மா இருப்பதால் ஒரு பிரயோசனமும் இல்லை...ஒரு கதைக்கு புலிகள் கடைசி யுத்தத்தில் வென்று இருந்தாலும் கூட அதனால் எது வித நன்மைகளும் தமிழர்களுக்கு கிடைக்கப் போவதில்லை...அதெல்லாம் விளங்கினதால் தான் தலைவர் அமைதியாய் ஒதுங்கினவர் .
தமிழர்கள்  திரும்பவும் ஊருக்குப் போய் அவரவர் இடத்தில் குடியேறுவது நல்லது தானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி பாத்தால் ஒரு தமிழனும் இலங்கையில் இருக்காமல் இருக்க வேணும்.இதைத்தானே அவனும் விரும்பிறான்.ஊருக்கு போக நினைப்பவர்கள் தங்கள் சயநலம் இருந்தாலும் மறைமகமாக பல நன்மைகள் அதில் உண்டு.நாங்கள் படுக்காவிட்டாலும் தள்ளியாவது படுக்கலாம்.எனது தாழ்மையான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

புலிகளால் தான்  நாட்டில் பிரச்சனை இருந்தது என்று சொல்லவில்லை அண்ணா...ஆனால் புலிகள் தற்போது இருந்திருந்தால் வட கிழக்கு அபிவிருத்தி அடையவோ,புலம் பேர் மக்கள் ஊரில் முதலிடவோ அரசு விட்டு இருக்காது ...நீண்ட காலத்திற்கு சும்மா இருப்பதால் ஒரு பிரயோசனமும் இல்லை...ஒரு கதைக்கு புலிகள் கடைசி யுத்தத்தில் வென்று இருந்தாலும் கூட அதனால் எது வித நன்மைகளும் தமிழர்களுக்கு கிடைக்கப் போவதில்லை...அதெல்லாம் விளங்கினதால் தான் தலைவர் அமைதியாய் ஒதுங்கினவர் .
தமிழர்கள்  திரும்பவும் ஊருக்குப் போய் அவரவர் இடத்தில் குடியேறுவது நல்லது தானே 

  தங்கையே!    

நான் அங்கே மீண்டும் குடியேற நினைப்பவர்களை குறையோ குற்றமோ கூறவில்லை. அண்மைய தாக்குதல்களை அடுத்து ஐயோ மீண்டுமா என்ற போர்வையில் பல கருத்துக்கள் வந்ததாலேயே எனது கருத்தை தெரிவித்தேன்.

நாம் பிறந்த நாள் முதல் இன மத சாதி கலவரங்களுடன் வாழ்ந்தவர்கள்.அப்படி இருக்கும் போது அண்மைய தாக்குதல்கள் எதுவுமே புதிதல்லவே.

கலவர  பூமி  அது.

அங்கிருப்பவர்கள் வாழவில்லையா? அதென்ன உங்களைப்போன்றவர்களுக்கு மட்டும் பிரத்தியேக குழப்பங்கள்?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2019 at 8:02 AM, nunavilan said:

நன்றிகள் வீடும் வெளிச்சமும் அமைப்பாளர்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

  தங்கையே!    

நான் அங்கே மீண்டும் குடியேற நினைப்பவர்களை குறையோ குற்றமோ கூறவில்லை. அண்மைய தாக்குதல்களை அடுத்து ஐயோ மீண்டுமா என்ற போர்வையில் பல கருத்துக்கள் வந்ததாலேயே எனது கருத்தை தெரிவித்தேன்.

நாம் பிறந்த நாள் முதல் இன மத சாதி கலவரங்களுடன் வாழ்ந்தவர்கள்.அப்படி இருக்கும் போது அண்மைய தாக்குதல்கள் எதுவுமே புதிதல்லவே.

கலவர  பூமி  அது.

அங்கிருப்பவர்கள் வாழவில்லையா? அதென்ன உங்களைப்போன்றவர்களுக்கு மட்டும் பிரத்தியேக குழப்பங்கள்?
 
எனக்கு ஒரு குழப்பமும் இல்லை அண்ணா ...இந்த குண்டு வெடிப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு அங்கே போய் இருப்பதா,இல்லையா என்று தீர்மானிக்க மாட்டேன்...நிழலி எழுதினதை பார்க்க எனக்கும் கவலையாய்  இருந்தது...கனடாவிலோ,லண்டனிலோ குண்டுகள் வெடிக்காது என்ற மாதிரி பதறி அடிச்சு கொண்டு திரும்பி வருகினம் என்பதை நினைக்க சிரிப்பு தான் வந்தது 

அதிலும் நெடுக்கர் போன்றவர்களுக்கு உரிமையை எப்படி பெற்றுக் கொள்கிறது என்றும் தெரியவில்லை...இங்கேயிருந்து கொண்டு யாழிலும்,.மூ.புத்தகத்திலும் வீர வசனம் பேசினால் உரிமை கிடைச்சிடும்  என்று நினைக்கிற  ஆட்கள் ...அரச செலவில் படிச்சு போட்டு அங்கேயிருக்கும் மக்களுக்கு கொஞ்சம் கூட சேவை செய்ய மனமில்லாத ஆட்கள் மற்றவர்களை நையாண்டி செய்ய வந்திட்டார்...எவனவன்  என்ன செய்தால் உ வருக்கு என்ன? ...தன்ட வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்கிறது தானே!...யாரும் அவர் அங்கே போய் இருக்கவில்லை என்று அழுததா 😠

Link to comment
Share on other sites

On 5/6/2019 at 1:39 PM, MEERA said:

நேற்று பேருந்தில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் பயணம் செய்தவர் ஒருவர், தமது பேரூந்து புளியங்குளம், மாங்குளம், ஆனையிறவு ஆகிய இடங்களில் பயணிகள் அனைவருமே இறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக முகநூலில் எழுதியிருந்தார்.

3 அல்லது 4 இடங்களில் சோதனைகள் நடைபெறுவதாக தான் பலரும் கூறுகின்றனர்!

Link to comment
Share on other sites

On 5/7/2019 at 3:28 AM, குமாரசாமி said:

இலங்கையில் ஒரு காலமும் பிரச்சனை இல்லாதமாதிரியும்......ஏதோ விடுதலைப்புலிகள் வந்த பின்னரே இலங்கையில் வாழமுடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டது போலவும்  பல மீள்குடியேற்ற கருத்துக்களை வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இவர்களுக்கு இலங்கையில் நடந்த இனக்கலவரங்கள் ஞாபகத்திற்கு வரவில்லையா?

சிங்களகாடையர்களினால் அடித்து விரட்டப்படும் போது சொந்த ஊர் நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டதை மறந்து விட்டார்களா?

அல்லது தமிழ் பிரதேசங்களில் குடிகொண்டிருக்கும் ராணுவம் கடற்படை விமானப்படை எல்லோரும் நல்லவர்களாக மாறிவிட்டார்கள் என எண்ணுகின்றார்களா?

10 வருட இடைவெளியில் ஈழத்தமிழரின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்தமாதிரியே ஒரு சில கருத்துக்கள் காணப்படுகின்றன.

இலங்கையில் பிரச்சனையே சிங்களமும் அதன் கொள்கையுமே என்பதை உலகம் புரிய முன் எம்மவர் புரிந்து கொண்டால் கடவுளுக்கு நன்றி சொல்வேன்.

சோனகர் குண்டு போட்டாங்களாம்.....இனி ஊருக்கு போய் இருக்கேலாதாம்.....தங்கச்சி.....தங்கச்சி.......🤣

மிகவும் யதார்த்தமான கருத்துக்கள்!

மீண்டும் தமது தாய்நாட்டுக்கு சென்று வாழ நினைத்தவர்கள், தமது தாய்நாட்டில் பெருமளவு தமிழர்கள் ( உறவினர்,உற்றார் உட்பட) இன்னமும் வாழ்ந்துவரும் நிலையில், மிக மோசமான கோழைகளால் மட்டுமே இது போன்ற குண்டுவெடிப்பு சம்பவங்களை காரணம் காட்டி தங்களின் எண்ணங்களை மாற்றிக்கொண்டதாக கூறமுடியும்!

இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளால் பல ஐரோப்பிய நாடுகளில், அமெரிக்கா, கனடா உட்பட்ட நாடுகளில் ஏற்கனவே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அண்மையில் நியூசிலாந்தில் ஒரு கிறித்தவ மதவெறித் தீவிரவாதியால் படுகொலைகள் நடத்தப்பட்டன. ஆனால் அங்கிரும் எமது புலம்பெயர்ந்தவர்கள் இவற்றைக் காரணம் காட்டி மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்பும் எண்ணைகளை கொண்டிருக்கவில்லை. இவற்றின் மூலம் இவர்களின் போலித்தனங்களும் வெளிபட்டுவிட்டன!

இது போன்ற கோழைத்தனங்களும் போலித்தனங்களும் தமிழர்களின் பலவீனக்களில் அடங்கும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.