Jump to content

விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்

Recommended Posts

இதென்ன நீங்கள் அமெரிக்காவை, CIA ஐ அப்பாவி கணக்கில் எழுதியுள்ளீர்கள். 😀

அமெரிக்காவும் NWO இன் depopulation agenda இல் இயங்கும் நாடு என்பதை மறந்து விடாதீர்கள். 

அவர்களே ஆயுத குழுக்களை தமது நன்மை சார்ந்து உருவாக்குவார்கள், பயன்படுத்துவார்கள், பின் காரணம் சொல்லி அழிப்பார்கள்.

September 11 இரட்டைக்கோபுர தாக்குதல் கூட ஈராக் மீது போர் தொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு inside job. மக்கள் பலருக்கு உடனடியாக உண்மை தெரியாவிட்டாலும் பின் படிப்படியாக உண்மையை பலர் அறிந்து கொண்டார்கள்.

துருக்கி ISIS க்கு உதவி செய்வது அமெரிக்காவுக்கு தெரிந்தே நடந்தது. 

Donald Trump இன் பல நடவடிக்கைகள் NWO இற்கு எதிரானதாக உள்ளது. அது கூட ஒரு காரணம் அமெரிக்க மக்கள் பலர் அவரை ஆதரிப்பதற்கும் உலக Mainstream media அவரை போட்டுத்தாக்குவதற்கும். 

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Lara said:

இதென்ன நீங்கள் அமெரிக்காவை, CIA ஐ அப்பாவி கணக்கில் எழுதியுள்ளீர்கள். 😀

அமெரிக்காவும் NWO இன் depopulation agenda இல் இயங்கும் நாடு என்பதை மறந்து விடாதீர்கள். 

அவர்களே ஆயுத குழுக்களை தமது நன்மை சார்ந்து உருவாக்குவார்கள், பின் காரணம் சொல்லி அழிப்பார்கள்.

September 11 இரட்டைக்கோபுர தாக்குதல் கூட ஈராக் மீது போர் தொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு inside job. மக்கள் பலருக்கு உடனடியாக உண்மை தெரியாவிட்டாலும் பின் படிப்படியாக உண்மையை பலர் அறிந்து கொண்டார்கள்.

துருக்கி ISIS க்கு உதவி செய்வது அமெரிக்காவுக்கு தெரிந்தே நடந்தது. 

Donald Trump இன் பல நடவடிக்கைகள் NWO இற்கு எதிரானதாக உள்ளது. அது கூட ஒரு காரணம் அமெரிக்க மக்கள் பலர் அவரை ஆதரிப்பதற்கும் உலக Mainstream media அவரை போட்டுத்தாக்குவதற்கும். 

நான் அமெரிக்காவையோ அல்லது சி. ஐ உளவுப் பிரிவையோ அப்பாவிகள் என்று எந்தவிடத்திலும் நினைக்கவில்லை. அமெரிக்காவின் ஆளும்வர்க்கத்தின் நலனை முன்னிறுத்தியே அவர்களின் நடவடிக்கைகள் இருக்குமென்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நீங்கள் சொல்வதுபோல, அமெரிக்கா ஈராக்கில் போர் நடத்துவதற்காகவே ரெட்டைக் கோபுரத் தாக்குதல்களை தானே செய்தது என்பது ஒரு கொன்ஸ்பிராஸி தியரி மட்டுமே. இவ்வாறு வாதங்களை முவைப்பவர்கள் எவருமே ஏன் இதுவரை இதைச் செய்தவர்கள் மீது வழக்குத் தொடுக்கவில்லையென்று எவராவது யோசித்தீர்களா? ஏனென்றால், அவர்களால் அதை நிரூபிக்க முடியாது.

ஈராக்கில் போர்நடத்த ரெட்டைக் கோபுரங்களை அமெரிக்காவே அழித்ததென்றால், வியட்னாமில் போர்நடத்த எந்தக் கோபுரங்கள் அழிக்கப்பட்டன? 

உலக சனத்தொகைக் கட்டுப்பாடு பற்றி நீங்கள் வாசித்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஆனால், இதுகூட பலமிக்க ஏழு குடும்பங்கள், இலுமினாட்டி, ப்ரீ மேசன் என்று மக்களின் சிந்தனைகளைகளை வைத்தே புனையப்படுகின்றனவே ஒழிய சான்றுகளோ ஆதாரங்களோ இல்லை. 

இவைபற்றிப் பேசிவரும் முன்னால் அமெரிக்க கவர்னர் ஜெஸ்ஸி வென்சூரா கூட இதுஅவர் எந்த வழக்கையும் போடவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் செலவழித்து 39 வருட வரலாற்றை எழுதியிருக்கிறீர்கள்! நன்றி. ஆனால்  நீங்கள் முதலிலேயே குறிப்பிட்டிருப்பது போல, இப்படி ஆவணப்படுத்தப் பட்ட தகவல் சதிக் கோட்பாட்டுக் காரர்களின் யோசிப்பை மாற்றாது! அவர்கள் கையில் நேரம் நிறைய இருப்பதால் தங்கள் கற்பனைக் குதிரையில் தான் அதிகம் காசு கட்டி ஓட விடுவர்!

உதாரணமாகப் பாருங்கள்: ஈராக்கிற்கு டொயோட்டா ஏற்றுமதி செய்த ட்ரக்குகளின் எண்ணிக்கை 2011 இல் 6000  இருந்து 2013 இல் 18000 ஆக அதிகரித்தது! இவை ஈராக்கின் தரகர்களால் வாங்கப் பட்டு ஐசிஸ் பயங்கரவாதிகளிடம் கொடுக்கப் பட்டன என்று ஊழலில் மிதக்கும் ஈராக்கிய இராணுவமே ஒத்துக் கொண்டிருக்கிறது! ஆனால் இந்த dry fact இல் கிழுகிழுப்பு இல்லையென்று மருதர் ஒரு கதை சொல்கிறார், ஈராக்கிற்கு  அமெரிக்க இராணுவத் தளபாடங்களாக இவை சென்று பின்னர் அங்கால போகிறதாம்! இந்தக்கதையை வைத்து ஹொலிவூட் படம் எடுக்கலாம்! பயங்கரவாதிகளுக்கு வாகனங்கள் கிடைப்பதைத் தடுக்க முடியாது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

உதாரணமாகப் பாருங்கள்: ஈராக்கிற்கு டொயோட்டா ஏற்றுமதி செய்த ட்ரக்குகளின் எண்ணிக்கை 2011 இல் 6000  இருந்து 2013 இல் 18000 ஆக அதிகரித்தது! இவை ஈராக்கின் தரகர்களால் வாங்கப் பட்டு ஐசிஸ் பயங்கரவாதிகளிடம் கொடுக்கப் பட்டன என்று ஊழலில் மிதக்கும் ஈராக்கிய இராணுவமே ஒத்துக் கொண்டிருக்கிறது!

இப்படியொரு கோணம் இருப்பது எனக்கு இதுவரை தெரியாது ஜஸ்டின். அறியத் தந்தமைக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Maruthankerny said:

See the source image

See the source image

See the source image

See the source image

See the source image

See the source image

இந்த படங்கள் ஐஸ்ஸ் தீவிரவாதிகள் அமைத்த 
இஸ்லாமிய நாட்டில் எடுக்கப்படடவை 
இவை மட்டுமல்ல நீங்கள் எந்த படத்தை பார்த்தாலும் 
எல்லா படங்களிலும் ஒரு ஒற்றுமை உண்டு ..
அது என்ன எனப்து உங்களுக்கு உடனேயே தெரியும் ...
அது அவர்களுக்கு இப்படி இவை ஆயிரகணக்கில் கிடைத்தன என்ற கேள்விக்கு 
உங்களுக்கு வர கூடிய எண்ணங்களை இங்கே பதிவிட முடியுமா? 

மேலே ஜஸ்டின் குறிப்பிட்டதுபோல, 2011 இலிருந்து 2013 வரையான காலப்பகுதியில் ஈராக்கிற்கு ஏற்றுமதிசெய்யப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை 6000 இலிருந்து 18000 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது.

இதுதவிர, இதே காலப்பகுதியில் அவுஸ்த்திரேலியாவிலிருந்து சுமார் 800 இந்தவகை வாகனங்கள் காணாமல்ப் போயிருக்கின்றன. வாகனங்களைக் கடத்துதல், உதிரிப்பாகங்களாக அவற்றைக் கழற்றி வெளிநாடுகளிற்கு கொன்டெயினர்களில் ஏற்றுமதிசெய்தல் ஆகியவை  சிட்னி மெல்பேர்ன் நகர்களிலிருக்கும் மத்திய கிழக்கு வம்சாவளிக் கிரிமினல்க் குழுக்களின் பிரபலமான ஒரு தொழில். ஆகவே, இவ்வாகனங்கள் ஈராக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

அதேவேளை, சிரியாவிலும், ஈராக்கிலும் ஐஸிஸ் பயங்கரவாதிகளுக்கெதிராகப் போரிட்ட சிரிய விடுதலை ராணுவத்திற்கு அமெரிக்க அதிகாரிகள் 43 இவ்வகையான வாகனங்களை வழங்கியிருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இவ்வாகனங்களை போரில் ஐஸிஸ் இவர்களிடமிருந்து கைப்பற்றியிருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இவ்வகை வாகனம் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமானது. வாகனங்கள் அல்லது அவற்றிற்கான உதிரிப்பாகங்கள் என்பது அங்கே தங்குதடையின்றிக் கிடைப்பதும் இப்பயங்கரவாதிகள் அவ்வாகனங்களை அதிகமாகப் பாவிப்பதற்குக் காரணமாக அமைந்ததென்று பயங்கரவாதிகளுக்கான நிதி வழங்கல்களைத் தடுக்கும் அமெரிக்க திறைசேரியின் நிபுணர் குழுவொன்று தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. 

Link to comment
Share on other sites

53 minutes ago, ரஞ்சித் said:

நான் அமெரிக்காவையோ அல்லது சி. ஐ உளவுப் பிரிவையோ அப்பாவிகள் என்று எந்தவிடத்திலும் நினைக்கவில்லை. அமெரிக்காவின் ஆளும்வர்க்கத்தின் நலனை முன்னிறுத்தியே அவர்களின் நடவடிக்கைகள் இருக்குமென்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நீங்கள் சொல்வதுபோல, அமெரிக்கா ஈராக்கில் போர் நடத்துவதற்காகவே ரெட்டைக் கோபுரத் தாக்குதல்களை தானே செய்தது என்பது ஒரு கொன்ஸ்பிராஸி தியரி மட்டுமே. இவ்வாறு வாதங்களை முவைப்பவர்கள் எவருமே ஏன் இதுவரை இதைச் செய்தவர்கள் மீது வழக்குத் தொடுக்கவில்லையென்று எவராவது யோசித்தீர்களா? ஏனென்றால், அவர்களால் அதை நிரூபிக்க முடியாது.

ஈராக்கில் போர்நடத்த ரெட்டைக் கோபுரங்களை அமெரிக்காவே அழித்ததென்றால், வியட்னாமில் போர்நடத்த எந்தக் கோபுரங்கள் அழிக்கப்பட்டன? 

உலக சனத்தொகைக் கட்டுப்பாடு பற்றி நீங்கள் வாசித்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஆனால், இதுகூட பலமிக்க ஏழு குடும்பங்கள், இலுமினாட்டி, ப்ரீ மேசன் என்று மக்களின் சிந்தனைகளைகளை வைத்தே புனையப்படுகின்றனவே ஒழிய சான்றுகளோ ஆதாரங்களோ இல்லை. 

இவைபற்றிப் பேசிவரும் முன்னால் அமெரிக்க கவர்னர் ஜெஸ்ஸி வென்சூரா கூட இதுஅவர் எந்த வழக்கையும் போடவில்லை. 

அமெரிக்கா, CIA பற்றி நீங்கள் எழுதிய விதத்தை வைத்தே அமெரிக்காவும் CIA உம் அப்பாவி என்ற கணக்கில் எழுதியுள்ளீர்கள் என குறிப்பிட்டேன்.

NWO பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்தீர்கள். NWO ஐ கூட conspiracy theory போல் தான் பலர் பார்க்கிறார்கள். Google உம் சொல்கிறது. ஆனால் உங்களுக்கு அது அவ்வாறு தெரியவில்லை தானே?

இரட்டைக்போபுர தாக்குதல் inside job என கூறுவோர் ஆதாரத்துடன் தான் கூறுகிறார்கள். தாக்குதலுக்கு முன் திடீரென இரட்டைக்போபுரத்திற்கு செய்யும் insurance அளவை அதிகரித்தது, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை சூழவுள்ள பிரதேசம் தாக்குதலுக்கு முன்னமே உளவுத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது, தாக்குதல் தினமென்று இரட்டைக் கோபுர உரிமையாளர், அவரது பிள்ளைகள் என அனைவரும் வெவ்வேறு appointment க்காக வெளியே சென்றிருந்தனர், தாக்குதலின் பின் சூழவுள்ள பகுதிகளில் cctv பதிவுகள் அழிக்கப்பட்டிருந்தமை, பல Trillion பணம் திடீரென எந்தவொரு பதிவுமில்லாமல் மாயமாக மறைந்தமை உட்பட பல. சட்டம் கூட அவர்கள் கையில். பின்னர் எவ்வாறு வழக்கு தொடர்வார்கள். நீங்கள் நம்ப வேண்டும் என நான் கோரவில்லை. ஆனால் சில விடயங்களுக்கு உங்களாலும் ஆதாரம் தர முடியாது.

Illuminati, freemason என Music industry, hollywood industry இல் தான் கதைப்பார்கள். பல பாடகர்களின் பாடல்களிலேயே அதைப்புரிந்து கொள்ளலாம்.

அரசியலை பொறுத்தவரை secret societies, elite என பொதுவாக கதைப்பார்கள். முன்னைய அமெரிக்க ஜனாதிபதி JFK (John F. Kennedy) Secret Society க்கும் CIA இற்கும் உள்ள தொடர்பு பற்றி கூறி secret society ஐ அழிப்பேன் என கூறியிருந்தார். அதனால் அவரை கொலை செய்து விட்டார்கள். அவரது உரைகள் இன்னும் youtube இல் கிடைக்கும். வேண்டுமானால் தேடிப்பாருங்கள்.

இந்தியாவிலேயே வெளிப்படையாக secret society என கூறி படம் எடுக்க வெளிக்கிட்டார்கள். உதாரணம் “விவேகம்” படம். எம்மவர்கள் தான் இன்னமும் ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக...... 😀

Link to comment
Share on other sites

1 hour ago, ரஞ்சித் said:

அமெரிக்கா அல்கொயிதாவுக்கோ, தலிபானுக்கோ அல்லது ஐஸிஸிற்கோ எப்போதுமே ராணுவ உதவிகளைக் கொடுக்கவுமில்லை, அவர்களை உருவாக்கி அழகு பார்க்கவுமில்லை.

https://www.nytimes.com/2001/09/26/news/what-about-the-talibans-stingers.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஐஸிஸ்களுக்கெதிரான போரில், மேற்குலகிற்குச் சார்பானவர்கள் என்று காட்டிக்கொண்டு அதே சமயத்தில் ஐஸிஸ்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய ஒரு முக்கியமான நாடுதான் துருக்கி. சுன்னியினத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட துருக்கி, தொடர்ச்சியாக ஐஸிஸ்களுக்கு உதவி வந்தது. சிரியாவினுள்ளும், ஈராக்கினுள்ளும் ஐஸிஸ் கொள்ளையிட்ட பெருமளவு சுத்திகரிக்கப்படாத மசகு எண்ணையை துருக்கியே கொள்வனவு செய்தது. சிரிய - துருக்கி எல்லையில் நூற்றுக்கணக்கில் வரிசையாக துருக்கிய எண்ணெய்த் தாங்கர்கள் நின்றதை அமெரிக்க விமானிகள் பலமுறை படமெடுத்திருக்கிறார்கள். 

அதுமட்டுமல்லாமல், தாம் ஐஸிஸ்களிடம் வாங்கும் எண்ணெய்க்குப் பதிலாக ஆயுதங்கள், வாகனங்கள் வழங்கல்ப் பாதைகள் என்று பெருமளவு உதவிகளை துருக்கிய அரசு செய்துவந்தது. ஐஸிஸ்கள் போர்களில் சவாரி செய்த நவீன டொயோட்டா ஹைலக்ஸ்கள் துருக்கியூடாகவே அவர்களுக்குக் கிடைத்தன. 

கொபேனி எனும் குர்திஸ் நகர் மீதான ஐஸிஸ்களின் முற்றுகையில், தாக்குதல்களுக்குப் பயன்ந்து தமது எல்லை நோக்கி ஓடிவந்த குர்திஸ் அகதிகளை எல்லையில் தடுத்து வைத்தது மட்டுமல்லாமல், முற்றுகைக்குள் அகப்பட்ட மக்களுக்கு எந்தவித உதவிகளையும் செய்ய மறுத்த துருக்கி, ஆக்கிரமிப்பாளர்களான ஐஸிஸ்களுக்குத் தொடர்ச்சியான வழங்கற்பாதையினை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், சண்டையில் காயப்பட்ட பயங்கரவாதிகளை எல்லையூடாக துருக்கியினுள் கொண்டுவந்து சிகிச்சையளித்தது.

துருக்கியின் அட்டக்காசத்தைப் பொறுத்துக்கொள்ளமுடியாத அமெரிக்கா, இறுதியில் தனது அசுர விமானப்படைகொண்டு, துருக்கியின் கண்முன்னாலேயே அதனது செல்லப்பிள்ளையான ஐஸிஸ்கள் மீது குண்டுமாரி பொழிந்து முற்றுகையை உடைத்தெறிந்தது. 

இதுதான் நடந்தது.

அமெரிக்கா அல்கொயிதாவுக்கோ, தலிபானுக்கோ அல்லது ஐஸிஸிற்கோ எப்போதுமே ராணுவ உதவிகளைக் கொடுக்கவுமில்லை, அவர்களை உருவாக்கி அழகு பார்க்கவுமில்லை.

ஆனால், இவர்களின் உருவாக்கத்திற்கு அமெரிக்கா விட்ட தவறுகளே காரணமாக அமைந்தது என்பதையும் நான் மறுக்கவில்லை. அமெரிக்காவின் தொடர்ச்சியான இஸ்ரேல் ஆதரவுப் போக்கும், கம்மியூனிசத்தெற்கெதிரான அதனது நிலைப்பாடுமே இன்று உலகெங்கும் அவர்களுக்கெதிரான அலையினை ஏற்படுத்தியிருக்கிறதென்பதையும் மறுப்பதற்கில்லை. 

ரஞ்சித்,
மிகவும் சிறப்பாக தொகுத்துள்ளீர்கள்.  பச்சை முடிந்துவிட்டது 

Link to comment
Share on other sites

Elite க்கு எதிராக மைக்கல் ஜக்சன் பாடிய பாடல்: They don’t care about us.

“Will me thrill me you can never kill me“ , “Jew me sue me everybody do me”எனவும் சில வரிகளை பாடினார்.

இறுதியில் அவரையும் கொலை செய்து விட்டு drug overdose என கூறினார்கள்.

Link to comment
Share on other sites

ரஷ்ய ஜனாதிபதி Putin கூறுவது ஆங்கில subtitle உடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாவற்றையுமே கொன்ஸ்பிராஸி கண்கொண்டு பார்க்கிறீர்கள். சாதாரணமானவை கூட உங்களுக்கு பிரச்சனையானவையாகத் தெரியலாம். 

Link to comment
Share on other sites

1 minute ago, ரஞ்சித் said:

நீங்கள் எல்லாவற்றையுமே கொன்ஸ்பிராஸி கண்கொண்டு பார்க்கிறீர்கள். சாதாரணமானவை கூட உங்களுக்கு பிரச்சனையானவையாகத் தெரியலாம். 

அப்படியல்ல,

நான் எழுதியவற்றிற்கு ஆதாரபூர்வமாக மறுப்பு தெரிவிக்க முடிந்தால் மறுப்பு கூறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, சண்டமாருதன் said:

சண்டமாருதன்,

நீங்கள் இணைத்த இணைப்பில் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரொனால்ட் ரேகன் ஆப்கானிஸ்த்தானிய போராளிகளுக்கு, தலிபான்கள் உற்பட வெப்பத்தை நாடிச்சென்று தாக்கும் வல்லமையுடைய ஸ்டிஞ்சர் ஏவுகணைகளைக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறார்கள். 

இதில் வேடிக்கை என்னவென்றால், தலிபான் ஆரம்பிக்கப்பட்டதோ 1994 ஆம் ஆண்டு 10 ஆம் திகதி. ரொனால்ட் ரேகன் பதவியிலிருந்து வெளியேறியது 1989 ஜனவரி 20 ஆம் திகதி. அதன்படி பார்த்தால், தான் அதிகாரத்தில் இல்லாதபொழுது மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை தலிபான்களுக்குக் கொடுத்தார் என்கிறது செய்தி. இது சாத்தியமா?

ஆனால், செய்தியின் மற்றைய பகுதியான முஜஹிதீன்களுக்கு சோவியத் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்கு ஏவுகணைகள் வழங்கப்பட்டதென்பது உண்மை, ஆனால் அவர்கள் தலிபான்கள் இல்லை. ஏவுகணைகள் வழங்கப்பட்ட நேரம் சோவியத்துடனான போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். தலிபான்கள் உருவானது சோவியத் வெளியேறி 5 ஆண்டுகளுக்குப் பிறகு.  

3 minutes ago, Lara said:

அப்படியல்ல,

நான் எழுதியவற்றிற்கு ஆதாரபூர்வமாக மறுப்பு தெரிவிக்க முடிந்தால் மறுப்பு கூறுங்கள்.

கொண்ஸ்பிராஸி தியரியென்பது மக்களால் புனையப்பட்டவை, அவற்றிற்கு நான் எப்படி மறுப்புக் கூறமுடியும்? உங்களுக்கு அவற்றை நம்புவதற்குக் காரணங்கள் இருந்தால், அதில் தவறேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. 

21 minutes ago, Lara said:

ரஷ்ய ஜனாதிபதி Putin கூறுவது ஆங்கில subtitle உடன்.

புட்டினின் நம்பகத்தன்மை எப்படியானது? 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அவர் தாக்கம் செலுத்தி டொனால்ட் டிரம்பினை ஆட்சிக்குக் கொண்டுவந்தார் என்கிறார்கள், நம்புகிறீர்களா??

Link to comment
Share on other sites

13 minutes ago, ரஞ்சித் said:

கொண்ஸ்பிராஸி தியரியென்பது மக்களால் புனையப்பட்டவை, அவற்றிற்கு நான் எப்படி மறுப்புக் கூறமுடியும்? உங்களுக்கு அவற்றை நம்புவதற்குக் காரணங்கள் இருந்தால், அதில் தவறேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. 

இந்த இணைப்பில் புதிய உலக ஒழுங்கு (New World Order/ NWO) என எழுதியுள்ளீர்கள். அதையும் conspiracy theory என பலர் கூறுகிறார்கள், google உம் சொல்கிறது. ஆனால் உங்களுக்கு அது அவ்வாறு தெரியவில்லை தானே என கேட்டேன். நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.

https://yarl.com/forum3/topic/227017-நாவாந்துறையில்-கூரிய-ஆயுதங்களை-வீசுவதற்கு-வந்தவர்களில்-ஒருவர்-கைது/page/2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Lara said:

இந்த இணைப்பில் புதிய உலக ஒழுங்கு (New World Order/ NWO) என எழுதியுள்ளீர்கள். அதையும் conspiracy theory என பலர் கூறுகிறார்கள், google உம் சொல்கிறது. ஆனால் உங்களுக்கு அது அவ்வாறு தெரியவில்லை தானே என கேட்டேன். நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.

நான் புதிய உலக ஒழுங்கு என்று குறிப்பிட்டது செப்டம்பர் 11 இற்குப்பிறகான உலக ஒழுங்கைத்தான். அதாவது, பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்னும் எழுந்தமான ஒரு கோட்பாட்டைத்தான். இதன்படி, எந்தவொரு கிளர்ச்சியையோ, மக்கள் போராட்டத்தையோ அடக்குமுறையாளர்கள் தமக்கு வேண்டியவாறு அழிப்பதற்குக் கிடைத்திருக்கும் அனுமதி பற்றியது. 

இதைவிட வேறு அர்த்தத்தில் நான் எழுதவில்லை. 

Link to comment
Share on other sites

Just now, ரஞ்சித் said:

சரி, ஆனால் conspiracy theory என சொல்லிக்கொண்டு ஏன் பெரிய வரலாறை Wikipedia வேலை மினக்கட்டு காட்டுது என சிந்தித்தால் பயன்.

நான் மேலே இணைத்துள்ள ரஷ்ய ஜனாதிபதியின் உரையின் பின்னணியிலும் ஏன் The World Order : New Rules or No Rules என எழுதப்பட்டுள்ளது என சிந்தித்தால் உண்மை புரியும்.

இல்லை அனைத்தையும் conspiracy theory என நினைத்து புறந்தள்ள விரும்பினால் அது உங்கள் விருப்பம்.

Link to comment
Share on other sites

24 minutes ago, ரஞ்சித் said:

புட்டினின் நம்பகத்தன்மை எப்படியானது? 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அவர் தாக்கம் செலுத்தி டொனால்ட் டிரம்பினை ஆட்சிக்குக் கொண்டுவந்தார் என்கிறார்கள், நம்புகிறீர்களா??

அரசியலை பொறுத்தவரை யாரையும் 100% நம்ப முடியாது.

ஒபாமா கூறியதற்கு எதிராக கருத்து கூறும் போதே அக்காணொளி எடுக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் நம்பகத்தன்மையாகவும் உள்ளன.

மற்றும்படி புடின், டொனால்ட் டிரம்ப் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நோக்கில் இயங்குகிறார்கள். அவர் டொனால்ட் டிரம்ப்பை ஆட்சிக்கு கொண்டுவருவதில் தாக்கம் செலுத்தினார் என்பதை நான் மட்டுமல்ல பல அமெரிக்கர்களும் நம்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Lara said:

நீங்கள் குறிப்பிட்ட விக்கிபீடியா கூட கொன்ஸ்பிராஸி தியரி பற்றி விளக்கும்போது இப்படித்தான் நடந்திருக்கவேண்டும் என்று முன்னமே முடிவெடுத்துக்கொண்டு, சாட்சியங்கள் இல்லாமல் உருவாக்கப்பட்ட அபிப்பிராயங்கள் என்று கூறுகிறது. அதுமட்டுமில்லாமல், இவை நம்பிக்கைகளேயன்றி, ஆதாரமற்றவை என்றும் வேறு கூறுகிறது.

மேலும்,  இந்த நிலையென்பது அபாயகரமானதும், குருட்டுத்தனமானதும், வேண்டுமென்றே கிலியை ஏற்படுத்தும் நம்பிக்கைகளை வளர்க்கக் கூடிய ஒரு மனோநிலை என்றும் கூறுகிறது. 

உதாரணத்திற்கு, மிக உயரப் பறக்கும் ஜெட் விமானங்களிலிருந்து வெளிவிடப்படும் நீண்ட வெள்ளைப் புகையானது, சனத்தொகைக் கட்டுப்பாடு, சூரியக் கதிர் வீச்சுக் கட்டுப்பாடு, காலநிலையை மாற்றுதல், மக்களின் மனோநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துதல், இரசாயன உயிரியல் ஆயுத பயிற்சி போன்ற இன்னோரென்ன தேவைகளுக்காக அரசுகள் செய்வதாகக் கூறும் தியரியை சுமார் 10% அமெரிக்கர்கள் நம்புகிறார்களாம். இதுகூட ஒரு மனோவியாதி என்றுதான் ஏனையவர்கள் கூறுகிறார்கள். 

இனி, இதுபற்றி நான் எழுதவில்லை. உங்களின் நம்பிக்கை, நான் செய்ய எதுவுமில்லை. 

ரெட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அதுபற்றி வெளிவந்த பல கொன்ஸ்பிராஸி தியரிகளைப் பார்த்தபின்னர் இப்படி நடந்திருக்கலாமோ என்று நானும் எண்ணியிருந்தேன். ஆனால், காலப்போக்கில் அதுபற்றிய தெளிவு வந்துவிட்டது.

ஆனால், இவ்வாறான நம்பிக்கைகள் சுவாரசியமானதும், எமது தேடல்களை அதிகரிக்கவும் உதவுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

இப்படியானவை இல்லாமலிருந்தால், நீங்கள் இவ்வளவு விடயங்களைத் தேடி அறிந்திருப்பீர்களா?? இல்லையல்லவா?? ஆகவே, நல்லதுதான் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வேலையிடத்திற்கு அண்மையில் ஒருவர் நின்று கொண்டு வருவோர் போவோருக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொல்வதைக் கேட்டதும் ஒவ்வொருவரும் வானத்தை நிமிர்ந்து பார்த்து விட்டு, அவரையும் பார்த்து விட்டு பேசாமல் நகர்ந்து கொண்டிருந்தனர். நானும் ஆர்வக் கோளாறால் என்ன தான் சொல்கிறார் என்று பார்க்க அவரைக் கடந்து நடந்தேன். "ப்றதர், வானம் ஏன் நாவல் கலரில் இருக்கிறது? விளக்க முடியுமா எனக்கு?" என்றார்! நானும் வானத்தை நிமிர்ந்து பார்த்தேன், அது நீலமாக இருந்தது! அவர் யார் என்று விளங்கி விட்டதால் எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டேன்!

சம்பவத்தின் நீதி: ஒருவருக்கு வானம் நாவல் கலர் என்று நம்பவும் சொல்லவும் உரிமை இருக்கிறது! ஆனால் அது நீல நிறம் என்று காணும் சாதாரணர்களிடம் " அது நாவல் இல்லை என்று நிரூபி பார்க்கலாம்!" என்று சவால் விடுவது கொஞ்சம் "குக்கூ" தனமான வேலை!

நன்றி.

Link to comment
Share on other sites

3 minutes ago, ரஞ்சித் said:

நீங்கள் குறிப்பிட்ட விக்கிபீடியா கூட கொன்ஸ்பிராஸி தியரி பற்றி விளக்கும்போது இப்படித்தான் நடந்திருக்கவேண்டும் என்று முன்னமே முடிவெடுத்துக்கொண்டு, சாட்சியங்கள் இல்லாமல் உருவாக்கப்பட்ட அபிப்பிராயங்கள் என்று கூறுகிறது. அதுமட்டுமில்லாமல், இவை நம்பிக்கைகளேயன்றி, ஆதாரமற்றவை என்றும் வேறு கூறுகிறது.

மேலும்,  இந்த நிலையென்பது அபாயகரமானதும், குருட்டுத்தனமானதும், வேண்டுமென்றே கிலியை ஏற்படுத்தும் நம்பிக்கைகளை வளர்க்கக் கூடிய ஒரு மனோநிலை என்றும் கூறுகிறது. 

உதாரணத்திற்கு, மிக உயரப் பறக்கும் ஜெட் விமானங்களிலிருந்து வெளிவிடப்படும் நீண்ட வெள்ளைப் புகையானது, சனத்தொகைக் கட்டுப்பாடு, சூரியக் கதிர் வீச்சுக் கட்டுப்பாடு, காலநிலையை மாற்றுதல், மக்களின் மனோநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துதல், இரசாயன உயிரியல் ஆயுத பயிற்சி போன்ற இன்னோரென்ன தேவைகளுக்காக அரசுகள் செய்வதாகக் கூறும் தியரியை சுமார் 10% அமெரிக்கர்கள் நம்புகிறார்களாம். இதுகூட ஒரு மனோவியாதி என்றுதான் ஏனையவர்கள் கூறுகிறார்கள். 

இனி, இதுபற்றி நான் எழுதவில்லை. உங்களின் நம்பிக்கை, நான் செய்ய எதுவுமில்லை. 

Secret Society என்பதே secret ஆக இயங்குவது தான். மக்களுக்கு உண்மையை வெளிப்படையாக சொல்லாமல் conspiracy theory ஆக காட்டி வாசிக்கும் பலரை நம்ப மறுக்க செய்வதும் பின்னணியில் அவர்கள் தாம் நினைத்ததை அரங்கேற்றுவதுமாக உள்ளார்கள்.

எத்தனையோ பேர் இவை பற்றி பகிரங்கமாக கதைக்க வெளிக்கிட்டு அவர்களை கொலை செய்து விட்டார்கள். (அமெரிக்க ஜனாதிபதி JFK உட்பட).

இங்கு யாரையும் எதையும் நம்புமாறு நான் கேட்கவில்லை. ஆனால் உலகத்தில் என்ன நடக்கிறது என புரிய வேண்டுமானால் இவற்றை புரிந்து கொண்டால் தான் இலகு. அது அவரவர் விருப்பம்.

22 minutes ago, ரஞ்சித் said:

ரெட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அதுபற்றி வெளிவந்த பல கொன்ஸ்பிராஸி தியரிகளைப் பார்த்தபின்னர் இப்படி நடந்திருக்கலாமோ என்று நானும் எண்ணியிருந்தேன். ஆனால், காலப்போக்கில் அதுபற்றிய தெளிவு வந்துவிட்டது.

ஆனால், இவ்வாறான நம்பிக்கைகள் சுவாரசியமானதும், எமது தேடல்களை அதிகரிக்கவும் உதவுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

இப்படியானவை இல்லாமலிருந்தால், நீங்கள் இவ்வளவு விடயங்களைத் தேடி அறிந்திருப்பீர்களா?? இல்லையல்லவா?? ஆகவே, நல்லதுதான் !

இரட்டைக்கோபுர தாக்குதல் inside job என கூறியவர்கள் ஆதாரத்துடன் தான் கூறுகிறார்கள். ஆனால் அதை conspiracy theory என்பவர்கள் கூறப்பட்ட ஆதாரங்களை சரியான முறையில் மறுக்கவில்லை. நீங்கள் உட்பட. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Lara said:

எத்தனையோ பேர் இவை பற்றி பகிரங்கமாக கதைக்க வெளிக்கிட்டு அவர்களை கொலை செய்து விட்டார்கள். (அமெரிக்க ஜனாதிபதி JFK உட்பட).

இவரது கொலைகூட ஒரு கொன்ஸ்பிராஸி தியரி என்றால் நம்புவீர்களா??

இவர் இலுமினாட்டிகளால்த்தான் கொல்லப்பட்டார் என்று நம்பும் மக்கள் கூட்டம் இந்தக்கொலையுடன் தொடர்புபட்டவர்கள் என்று இதுவரை 42 தனிக் குழுக்களையும், 82 கொலைஞர்களையும் 214 பெயர் தெரிந்த நபர்களையும் குறிப்பிட்டிருக்கிறார்களாம். அப்போ , லீ ஹார்வி ஒஸ்வால்ட் இவர்களுக்குள் அடங்கவில்லையா? 

சில தியரிகள் பற்றி அதிகமானவர்கள் பேசுகிறார்கள். ரெட்டைக் கோபுரத் தாக்குதல் மற்றும் சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ரோங் தரையிறங்கிய நிகழ்வுகள் போன்றவை பலராலும் கேள்விகேட்கப்படும் விடயங்கள். இதனால் மட்டும் இவை உண்மையாகிவிடும் என்று நியதியில்லை. 

அண்மையில் டொனால்ட் டிரம்ப், இதுவரை தேசிய காப்பகத்தில் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த 2800 அரசியல் கொலைகள் பற்றிய ஆவனங்களை மக்கள் பார்வைக்கு வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், எப் பி ஐ மற்றும் ஸி ஐ ஏ ஆகிய நிறுவனங்களின் அழுத்தங்களுக்குப் பின்னர் இன்னும் ஆயிரக் கணக்கான ஆவணங்களை இன்னும் 6 மாதத்திற்கு வெளியிடுவதைத் தள்ளி வைத்திருக்கிறார்.

யாரும் இதுவரை வெளியிடப்பட்ட ஆவணங்களைப் பற்றி அறிந்திருந்தால் பதியலாம். 

Link to comment
Share on other sites

4 minutes ago, ரஞ்சித் said:

இவரது கொலைகூட ஒரு கொன்ஸ்பிராஸி தியரி என்றால் நம்புவீர்களா??

இவர் இலுமினாட்டிகளால்த்தான் கொல்லப்பட்டார் என்று நம்பும் மக்கள் கூட்டம் இந்தக்கொலையுடன் தொடர்புபட்டவர்கள் என்று இதுவரை 42 தனிக் குழுக்களையும், 82 கொலைஞர்களையும் 214 பெயர் தெரிந்த நபர்களையும் குறிப்பிட்டிருக்கிறார்களாம். அப்போ , லீ ஹார்வி ஒஸ்வால்ட் இவர்களுக்குள் அடங்கவில்லையா? 

இவரது கொலையையும் conspiracy theory ஆக காட்ட நினைப்பதை விடுத்து அவர் என்ன கதைத்தார் என்பதை தேடியறிய முயற்சி செய்யலாம்.

இது அவர் secret Society என குறிப்பிட்டு கதைத்த ஒரு காணொளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே ரஞ்சித் அவர்களின் தகவல்களின் படி அமெரிக்கா நல் வழியில் பயணிக்கின்றது. அவர்களிடம் சூதுவாது எதுவுமேயில்லை.

அவர்கள் உலக நலன் விரும்பிகள்.

ஹிரோசிமாவுக்கு குண்டு போட்டது சீனா எண்டு சொல்லாதவரைக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

10 hours ago, ரஞ்சித் said:

புட்டினின் நம்பகத்தன்மை எப்படியானது? 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அவர் தாக்கம் செலுத்தி டொனால்ட் டிரம்பினை ஆட்சிக்குக் கொண்டுவந்தார் என்கிறார்கள், நம்புகிறீர்களா??

கடந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வர மைக்கல் ஜக்சனின் இறப்பும் ஒரு காரணம்.

இவர்கள் இருவரும் நீண்டகால நண்பர்களாக இருந்தார்கள். மைக்கல் ஜக்சன் மீது பொய்க்குற்றச்சாட்டு வழக்குகள் இடம்பெற்ற போது பலரும் அவரை விட்டு விலகி சென்ற போது டொனால்ட் டிரம்ப் “Michael Jackson loved the children, but he is not a child molester” என தொலைக்காட்சிகளில் சென்று கூறியிருந்தார்.

அதை மக்கள் பல வருடங்கள் கடந்த நிலையிலும் மறக்கவில்லை. மைக்கல் ஜக்சனின் இறப்பால் ஏற்கனவே கவலையிலிருந்த மக்களில் பலர் இவருக்கு வாக்களித்தார்கள்.

C4zGeq_VcAAU-fg?format=jpg&name=900x900

(முன்னைய பதிவில் இதுபற்றி குறிப்பிட மறந்து விட்டேன்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.