Jump to content

நீர்கொழும்பு பிரதேச தாக்குதல்களில் முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு கடுமையான சேதம் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
59451768_1922254724543458_662425493395472384_n.jpg
நேற்று இரவு  நீர்கொழும்பு, பலகத்துறை, செல்லக்கந்த உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற
தாக்குதல்களில்  முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுடைய,  வாகனங்கள் வீடுகள், வீட்டு பாவனை பொருட்கள் , கடைகள்  என பல பெறுமதிமிக்க பொருட்கள்  தாக்கி நாசம் செய்யப்பட்டுள்ளது.


 முஸ்லிம்களுடைய சொத்துக்களை தாக்கி. சேதம் ஏற்படுத்துவதிலேயே வன்முறையாளர்கள் குறியாக செயற்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்க தவறியதாகவும்  பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
59471448_1610903752386708_3922156614219464704_n.jpg
 
59371909_2277781132436575_8647106868772077568_n.jpg
59698884_596572007506368_6482637239296720896_n.jpg
Unknown.jpg
59429196_2429074887105656_657631571158761472_n.jpg
59693470_343378496316146_8323510159947071488_n.jpg
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் முஸ்லீம் அரசியல்வாதி ஒருத்தர் ஐ.நா சபையில் சிங்கள அரசுக்கு நற்சான்றிதல் வழங்கினார்.....சிங்கள அரசு சிறுபான்மையினரை பாதுகாக்கின்றது என்று

Link to comment
Share on other sites

மும்முனை சனாதிபதி தேர்தலில் சிங்கள வாக்குகள் பிரிவதையும், மற்றும் மகிந்த அண்ட் கோ வெல்லும் சந்தர்ப்பம் சிங்கள பேரினவாதம் ஊடக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எழுதப்படாத விதியாகிவிட்டது இலங்கையில்.

சிங்களப் பெளத்த இனத்திற்கோ அல்லது வேறு மதச் சிங்களவர்களுக்கோ அசம்பாவிதம் ஏதும் நிகழுமிடத்து, மொத்தச் சிறுபான்மையினமே அவர்களின் தாக்குதலுக்கு முகம் கொசுக்கவேண்டி வரும் என்பது.

அப்பாவிகள்தான் இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிங்களப் பெளத்த பேரினவாதத்துடன் மோதத் திராணியற்ற இஸ்லாமியப் பயங்கரவாதம், கிறீஸ்த்தவர்களைத் தாக்கினால் கேள்விகேட்கமாட்டார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டதன் விளைவு, இன்று நடக்கும் தாக்குதல்கள். 

தமிழர்கள் சிங்களப் பயங்கரவாதத்தால் ஒடுக்கப்படும்போது, கூடச் சேர்ந்து கோடரிக் காம்புகளாகவும், எரிக்கக் கொல்லியும் எடுத்துக்கொடுத்த முஸ்லீம்கள் இன்று அப்பேரினவாதத்தின் கோர முகத்தைத் தரிசிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரஞ்சித் said:

இது எழுதப்படாத விதியாகிவிட்டது இலங்கையில்.

சிங்களப் பெளத்த இனத்திற்கோ அல்லது வேறு மதச் சிங்களவர்களுக்கோ அசம்பாவிதம் ஏதும் நிகழுமிடத்து, மொத்தச் சிறுபான்மையினமே அவர்களின் தாக்குதலுக்கு முகம் கொசுக்கவேண்டி வரும் என்பது.

அப்பாவிகள்தான் இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிங்களப் பெளத்த பேரினவாதத்துடன் மோதத் திராணியற்ற இஸ்லாமியப் பயங்கரவாதம், கிறீஸ்த்தவர்களைத் தாக்கினால் கேள்விகேட்கமாட்டார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டதன் விளைவு, இன்று நடக்கும் தாக்குதல்கள். 

தமிழர்கள் சிங்களப் பயங்கரவாதத்தால் ஒடுக்கப்படும்போது, கூடச் சேர்ந்து கோடரிக் காம்புகளாகவும், எரிக்கக் கொல்லியும் எடுத்துக்கொடுத்த முஸ்லீம்கள் இன்று அப்பேரினவாதத்தின் கோர முகத்தைத் தரிசிக்கிறார்கள்.

சொந்தக் காசில சூனியம் வைத்த கதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்கொழும்பில் இடம்பெற்றது என்ன ? பள்ளிவாசல்கள், வீடுகள் மீது தாக்குதல்கள் !

நீர்­கொ­ழும்பில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வத்தில் பள்­ளி­வாசல் உட்­பட 10 இற்கும் மேற்­பட்ட வீடுகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­துடன் மோட்டார் சைக்­கிள்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ள­துடன் முச்­சக்­க­ர­வண்­டி­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

Negombo-attacked.jpg

வீடு­க­ளுக்குள் புகுந்த குழு­வினர் வீட்டில் உள்ள பொருட்­களை அடித்து சேதப்­ப­டுத்­தி­ய­துடன் சில வீடு­களில் நகைகள் பணம் மற்றும் பொருட்­களை கொள்­ளை­யிட்டு சென்­றுள்­ள­தா­கவும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் முறை­யி­டு­கின்­றனர்.

நீர்­கொ­ழும்பு  கொச்­சிக்­கடை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட போரு­தொட்ட, பல­கத்­துறை பிர­தே­சத்தில் முச்­சக்­கர  வண்டி சங்­கங்­களைச் சேர்ந்த  இரண்டு குழுக்­க­ளி­டையே நேற்­று­முன்­தினம்  ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை இடம்­பெற்ற  கைக­லப்பை அடுத்து அப்­ப­கு­தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரி­யூட்­டப்­பட்­ட­துடன் சில முச்­சக்­கர வண்­டி­களும் சேத­மாக்­கப்­பட்­டன. 

இந்த நிலையில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் மற்றும் இரா­ணு­வத்­தினர் சம்­பவ இடத்­திற்கு வர­வ­ழைக்­கப்­பட்­ட­துடன் நிலைமை ஓர­ள­வுக்கு கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­தி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து நீர்­கொ­ழும்பு பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட பகு­தியில் ஊர­டங்­குச்­சட்டம் அமுல்ப்­ப­டுத்­தப்­பட்­டது. ஊர­டங்­குச்­சட்டம் அமுல்ப்­ப­டுத்­தப்­பட்­ட­போதும் குழு­வொன்று முஸ்­லிம்­களின் வீடுகள் மற்றும் வாக­னங்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளது. 

வாள்கள் பொல்­லு­க­ளுடன் வருகை தந்த இக்­கு­ழு­வினர் தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்­ளனர். ஊர­டங்­குச்­சட்டம் அமுல்ப்­ப­டுத்­தப்­பட்­ட­மை­யினால் பிர­தான வீதிக்கு செல்­லாமல் உள்­வீ­தி­களால் பிர­வே­சித்த குழு­வி­னரே இத்­த­கைய தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர்.

 இந்த அசம்­பா­வி­தங்­க­ளின்­போது வீடுகள் பல தாக்­கப்­பட்­டன. வீடு­களில் உள்ள பொருட்கள் சேத­மாக்­க­பட்­ட­துடன் சில வீடு­களில் நகைகள், பணம் மற்றும் பொருட்கள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.  இந்த சம்­ப­வத்­தின்­போது வாக­னங்கள் பல தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ள­துடன் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் சிலர் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

 ஊர­டங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட வேளையில்  இனந்­தெ­ரி­யாத குழுக்கள் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­களும் தெரி­விக்­கின்­றனர். 

பள்­ளி­வா­சல்­மீது தாக்­குதல்

பெரி­ய­முல்லை லாசரஸ் வீதி, பெரி­ய­முல்லை செல்­ல­கந்த வீதி, தளு­பத்தை, கல்­கட்­டுவை வீதியில் சமகி மாவத்­தையில் அமைந்­துள்ள வீடுகள் பல­வற்­றின்­மீது தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் முச்­சக்­கர வண்­டிகள், மோட்டார் சைக்­கிள்கள் ஆகி­யன தாக்கி சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. இப்­ப­கு­தியில் 10 இற்கும் மேற்­பட்ட வீடுகள் தாக்­கு­த­லுக்­குள்­ளா­கி­யுள்­ள­துடன் பொருட்­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டன. பெரி­ய­முல்லை லாசரஸ் வீதியில் தெனி­ய­வத்த பிர­தே­சத்தில் உள்ள பள்­ளி­வா­சலின் யன்னல் கண்­ணா­டிகள்  உடைக்­கப்­பட்­டுள்­ளன.

 சம்­ப­வத்தை அடுத்து முஸ்லிம் மக்கள் பெரும் அச்­சத்­துடன் இருந்­தனர். சிலர்  தமது உற­வி­னர்­க­ளு­டைய வீடு­க­ளுக்கு பாது­காப்பு தேடிச் சென்­றனர்.

சம்­பவம் தொடர்­பாக முப்­ப­டை­யினர் மற்றும் பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கப்­பட்­டதை அடுத்து பிர­தே­சத்தில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆயினும் ஊர­டங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட வேளை­யிலும் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக குற்­றச்­சாட்டு தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கர்­தினால் நேரில் விஜயம்

இதே­வேளை, கொழும்பு பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித், அகில இலங்கை  ஜம்­மி­யத்துல் உல­மாவின் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோர் பல­கத்­துறை ஜும்மா பள்­ளி­வாசல்,  தெனி­ய­வத்த பள்­ளி­வாசல், பெரி­ய­முல்லை பெரிய பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்கு  விஜயம் செய்­தனர். பெரி­ய­முல்லை பெரிய பள்­ளி­வா­சலில் இரு தலை­வர்­களும் இரு தரப்­பி­னரும் ஒற்­று­மை­யாக இருக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தினர்.

பேராயர் மல்கம் ரஞ்சித் அங்கு உரை­யாற்­றும்­போது , 

சிறிய குழுவைக் கொண்ட அடிப்­ப­டை­வா­திகள்  அண்­மையில் தேவா­ல­யங்­க­ளிலும் ஹோட்­டல்­க­ளிலும் மேற்­கொண்ட தாக்­கு­தல்­க­ளுக்கு முஸ்­லிம்கள் பொறுப்­பல்ல. எனவே,  முஸ்­லிம்­களை தாக்க வேண்டாம் என்று என்று கேட்­டுக்­கொள்­கிறேன். 

இரு சம­யத்­த­வர்­களும் சகோ­த­ரர்­க­ளாவோம். இரு இனத்­தி­னரும் நூறாண்­டு­க­ளுக்கு மேலாக சகோ­த­ரர்­க­ளாக வாழ்ந்தோம். இனியும் வாழ­வேண்டும். எனவே, கிறிஸ்­த­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு தொந்­த­ரவு செய்ய வேண்டாம். இங்­குள்ள சிறிய பள்­ளி­வாசல் ஒன்றின் கண்­ணா­டிகள் உடைக்­கப்­பட்­டி­ருந்­த­தையும் சம­யப்பாட­சா­லையின் கட்டடம் தாக்கப்பட்டதையும் அவதானித்தேன். 

இது கத்தோலிக்கர்களான எங்களுக்கு பொருத்தமானது அல்ல. இவ்வாறு நாங்கள் செய்யக்கூடாது. அப்படி நடந்தால் நாங்கள் எமது சமயத்திற்கு எதிராக நடந்துகொண்டதாக அமையும். நாங்கள் முஸ்லிம்களுடன் சகோதரர்களாக பழக வேண்டும். நடந்த சம்பவத்திற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

 இதன்போது மேல்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் , நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அத்துகோரல, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

http://www.virakesari.lk/article/55427

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.