Jump to content

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தடையின்றி வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அடாத்தாக பிடித்து பௌத்த மதகுரு ஒருவர்  விகாரை அமைந்துள்ளமை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது .

IMG_6564_800x533.JPG

அடாத்தாக பௌத்த பிக்குவால் விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒரு பிள்ளையார் ஆலயம் மிக நீண்டகாலமாக இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பிள்ளையார் ஆலயத்தில் தடைகள் எதுவும் அற்றநிலையில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்திகளை உரிய உள்ளுராட்சி திணைக்களகளின்  அனுமதிகளுடன் மேற்கொள்ளவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று அனுமதியளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ் .லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கிலேயே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கில் முதலாம் தரப்பாக பிள்ளையார் ஆலய வளவில் விகாரை அமைத்துள்ள குருகந்த ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும் இரண்டாம் தரப்பாக நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர் . இதில் பிள்ளையார் ஆலயம் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டதரணிகள் தமது வாதங்களை முன்வைத்தனர். 

IMG_9213_800x533.JPG

மிக நீண்டநேரம் இடம்பெற்ற இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி முதலாம் தரப்பான பௌத்த மதகுரு இரண்டாம் தரப்பான  பிள்ளையார் ஆலயத்தினரின் வழிபாட்டுக்கு எந்தவிதமான தடையையும் ஏற்படுத்தக்கூடாது எனவும் கட்டுமான வேலைகளின்போது உரிய அனுமதிகளை உள்ளூராட்சி திணைக்களங்களில் பெற்று மேற்கொள்ளவேண்டும் எனவும் அதேபோல் இரண்டாம் தரப்பான பிள்ளையார் ஆலயதரப்பினர் வழிபாடுகளை சுயமாக தடைகளின்றி மேற்கொள்ளமுடியும் எனவும் கட்டுமானங்களை மேற்கொள்ளவிருந்தால் உரிய அனுமதிகளை பெற்று மேற்கொள்ளமுடியும் எனவும் ஏற்கனவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் என இருந்த பெயர்பலகையை மாற்றி கணதேவி தேவாலயம் என பௌத்த பிக்கு பெயர் பலகையை நாட்டியிருந்தார். 

ஆகவே அது வழமையாக இருந்ததைப்போன்று நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மீண்டும் அமைக்கப்படவேண்டும் எனவும்  அதனை உறுதிசெய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி பொலிசாருக்கு கட்டளையிடடார் . மேலும் இரண்டு தரப்பும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் செல்ல மன்று கட்டளையிட்டது .

http://www.virakesari.lk/article/55406

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடாத்தாக அனுமதி இன்றி கட்டப்பட்ட விகாரைக்கு எதிராக என்ன நடவடிக்கை? 

Link to comment
Share on other sites

பொதுவாக இது மஹிந்தவின் வேலை யாக தான் இருக்கும். இங்கு  விகாரை        கட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மஹிந்தவுக்கு தெரியும் தமிழர் நிலங்களில்  விகாரை கட்டினால் கட்டாயம் பிரச்சினை பண்ணுவான், வழக்கு போடுவான்,  உடனே அதை சிங்கள மக்களிடம் காட்டி வாக்குகளாக மாற்றுவது தான் யுக்தி.

ஆனால் இந்த பழைய காலத்து தந்திரம் பலிக்க போவதில்லை.

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக உத்தரவு வழங்கிய நீதிபதி!

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் பிள்ளையார் ஆலயத்துக்கு மட்டும் பொருத்தப்பட்டுள்ள இரகசிய CCTV கமராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றையதினம் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றின் அனுமதிகளுடன் பிள்ளையார் ஆலயத்தின் இருமருங்கிலும் வீதி ஓரம் பெயர் பலகையை நாட்டச் சென்றனர்.

இதன்போது நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரும் செம்மலைக்கிராம மக்களும் பௌத்தபிக்குவுக்கும் விகாரைக்கும் பாதுகாப்பாக நிற்கும் பொலிஸ் உத்தியோகத்தரால் தடுக்கப்பட்டதோடு பௌத்த பிக்குவின் முறைப்பாட்டுக்கு அமைவாக உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் ஆலயத்துக்கு அபிவிருத்தி வேலைகளுக்காகவும் வழிபாட்டுக்காகவும் சென்ற மக்களை நிலத்தில் அமர்த்தி விசாரணைகளை செய்து பதிவுகளை மேற்கொண்டு குற்றவாளிகளை போல நடத்தியிருந்தனர் .

இந்த சம்பவங்களையடுத்து குறித்த நீராவியடி பிள்ளையார் ஆலயத்தினை சேர்ந்தவர்களால் நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையில் சிரேஷ்ட சட்டதரணி அன்டன் புனிதநாயகம் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சேர்ந்த சட்டத்தரணிகளும் ஆஜராகியிருந்தனர்.

நேற்றையதினம் வழிபாடுகளுக்கும் அபிவிருத்தி வேலைகளுக்கும் சென்ற நீராவியடி பிள்ளையார் ஆலயத்தினருக்கு பொலிஸாரினாலும் பௌத்த பிக்கு தரப்பினராலும் இடையூறு ஏற்பட்டமை தொடர்பில் வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தியை ஆதாரம் காட்டி சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இதனையடுத்து உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மன்றுக்கு அழைத்த நீதிபதி வழக்கின் தீர்ப்பின் படி பௌத்தபிக்குவால் மாற்றம் செய்யப்பட்ட கணதேவி தேவாலயம் என்ற பெயரை ஏற்கனவே இருந்ததை போன்று நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மாற்றம் செய்யுமாறு பொலிஸாருக்கு கூறப்பட்டது.

இன்னும் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் இரண்டு புதிய இரகசிய கெமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் வினவினார் . இதன்போது இன்றையதினமே இரகசிய கெமராக்களை அகற்றுவதாகவும்

பெயரினையும் மாற்றுவதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்றில் தெரிவித்ததை தொடர்ந்து உடன் குறித்த வேலைகளை செய்யுமாறும் மேலும் இரண்டு தரப்பினரையும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நீதிமன்றின் தீர்ப்பை மதித்து செயற்படுமாறும் அமைதிக்கு பங்கம் ஏற்படாதவாறு செயற்படுமாறும் கட்டளையிட்டது .

இதனை இனியும் மீறுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாக நேரிடும் எனவும் எச்சரித்தது .

https://www.ibctamil.com/srilanka/80/120836

Link to comment
Share on other sites

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகின்ற நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் இந்த கேமராக்களை உடனடியாக அகற்றுமாறு போலீசாருக்கு உத்தரவிட்ட நிலையில் இந்த விடயம் தொடர்பாக செய்தி சேகரிப்பு நடவடிக்கைக்காக சென்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் அவர்கள் கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டிருக்கிறார்.

ஊடகவியலாளர் கமராவையும் சேதப்படுத்தி அவரை தீய வார்த்தைகள் பேசி எச்சரித்ததாகவும் ஊடகவியலாளர் தெரிவித்திருக்கின்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/120848

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.