• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

கருத்துக் களப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு,

அன்புடையீர்!

நான் வரவேற்புப் பகுதியில் பதிவிட்டுடிருக்கிறேன். அதிலே உறவுகள் பலர் உற்சாகமாக  வரவேற்றுக் கருத்தகளைப் பதிவிட்டள்ளபோதும் என்னால் அவர்களுக்கு பதிலெழுத முடியாமல் உள்ளது. எழுதும் பெட்டியில் எழுதிப் பிரதி செய்து கிளிக் செய்தால் அதிற் பதிவதற்கான துறப்புக் காட்டாது வேறுவிடயங்களைக் காட்டுகிறது.   

என்னால் ஒரு புதிய திரியைத் தொடங்க முடிகிறது. ஆனால் பின்னூட்டங்களை எழுத முடியவில்லை. எனவே இதற்கான கரணியம் தெரியவில்லை. உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நட்பார்ந்த அன்புடன் 

நொச்சி

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் நொச்சி,
நீங்கள் வேறொரு கணணியில் அல்லது இன்னொரு உலாவியில் முயற்சித்துப் பார்த்தீர்களா ?

ஒவ்வொரு திரிகளுக்கும் கீழ் பதில் கருத்து எழுதும் பெட்டி எவ்வாறு தெரிகிறது ?

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, இணையவன் said:

ஒவ்வொரு திரிகளுக்கும் கீழ் பதில் கருத்து எழுதும் பெட்டி எவ்வாறு தெரிகிறது ?

அவரால் இதுக்கு பதிலெழுத முடியாதே.

நொச்சி பொறுப்பாளர்களுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

Share this post

Link to post
Share on other sites

large.91CBD532-5C65-4F9C-8EDB-D9AF1449330C.jpeg.92dd905302682b4d9bb05815d4873baa.jpeg

Reply to this topic... என்று காட்டும் பெட்டியில் கிளிக் செய்த பின்னர் பதிலை எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

Share this post

Link to post
Share on other sites

நொச்சி எமது பக்கம் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இணையவன் குறிப்பிட்டது போன்று வேறு ஒரு உலாவி மூலம் முயற்சித்துப்பார்த்தீர்களா?

11 hours ago, nochchi said:

எழுதும் பெட்டியில் எழுதிப் பிரதி செய்து கிளிக் செய்தால் அதிற் பதிவதற்கான துறப்புக் காட்டாது வேறுவிடயங்களைக் காட்டுகிறது.   

என்ன காண்பிக்கின்றது என படமா எடுத்து அனுப்ப முடியும? மேலும் என்ன உலாவி பாவிக்கின்றீர்கள் என தனி மடலில் அல்லது மின்னஞ்சலில் குறிப்பிடுங்கள்.

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, nochchi said:

என்னால் ஒரு புதிய திரியைத் தொடங்க முடிகிறது. ஆனால் பின்னூட்டங்களை எழுத முடியவில்லை. எனவே இதற்கான கரணியம் தெரியவில்லை.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.😍

கணணி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.🤩

ராசவன்னியருக்கு அமைவதெல்லாம் துபாய் சேக்குகள் கொடுக்கும் வரம். 🤣

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, ஈழப்பிரியன் said:

இது புதிய விதமான பிரச்சனை நொச்சி.

இருக்கலாம்.

நன்றி ஈழப்பிரியன்.

12 hours ago, இணையவன் said:

வணக்கம் நொச்சி,
நீங்கள் வேறொரு கணணியில் அல்லது இன்னொரு உலாவியில் முயற்சித்துப் பார்த்தீர்களா ?

ஒவ்வொரு திரிகளுக்கும் கீழ் பதில் கருத்து எழுதும் பெட்டி எவ்வாறு தெரிகிறது ?

நன்றி  இணையவன்.

தற்போது நான் கூகிளைவிட்டு  MSN ஊடாக முயற்சித்தேன் .  சரியாகி உள்ளது. ஆனால் ஏன் கூகிளில்  செயற்படவில்லை என்று தெரியவில்லை. மீணடும் நன்றி.

11 hours ago, கிருபன் said:

large.91CBD532-5C65-4F9C-8EDB-D9AF1449330C.jpeg.92dd905302682b4d9bb05815d4873baa.jpeg

Reply to this topic... என்று காட்டும் பெட்டியில் கிளிக் செய்த பின்னர் பதிலை எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

நன்றி  கிருபன்.

Edited by nochchi

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, மோகன் said:

நொச்சி எமது பக்கம் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இணையவன் குறிப்பிட்டது போன்று வேறு ஒரு உலாவி மூலம் முயற்சித்துப்பார்த்தீர்களா?

என்ன காண்பிக்கின்றது என படமா எடுத்து அனுப்ப முடியும? மேலும் என்ன உலாவி பாவிக்கின்றீர்கள் என தனி மடலில் அல்லது மின்னஞ்சலில் குறிப்பிடுங்கள்.

உண்மைதான். இந்த உலாவியிற் செயற்படுகிறது. மற்ற உலாவியூடாக மீண்டும் பார்க்கும் போது படம் எடுத்துப் போடுகின்றேன்.

நன்றி மோகன்.

1 hour ago, Paanch said:

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.😍

கணணி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.🤩

ராசவன்னியருக்கு அமைவதெல்லாம் துபாய் சேக்குகள் கொடுக்கும் வரம். 🤣

ம்.ம்.... வணக்கம் பாஞ்ச் . பாஞ்சவர்களின் "பாஞ்ச்" வார்த்தை உண்மைதான்போலும். நன்றி.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Paanch said:

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.😍

கணணி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.🤩

ராசவன்னியருக்கு அமைவதெல்லாம் துபாய் சேக்குகள் கொடுக்கும் வரம். 🤣

நீங்க வேறை..! 'ஷேக்'குகள் மூக்கால அழுதுக்கிட்டு சம்பளம் கொடுக்கிறார்கள்..:)

அவர்களுக்கு திறமையுள்ள, அனுபவமிக்க பொறியாளர்கள் வேண்டும், ஆனால் சம்பளம் மட்டும் 'பியூன்' அளவிற்குதான் கொடுப்பேன் என்றால் எவன் கிடைப்பான்..? 😎

Share this post

Link to post
Share on other sites
28 minutes ago, ராசவன்னியன் said:

நீங்க வேறை..! 'ஷேக்'குகள் மூக்கால அழுதுக்கிட்டு சம்பளம் கொடுக்கிறார்கள்..:)

அவர்களுக்கு திறமையுள்ள, அனுபவமிக்க பொறியாளர்கள் வேண்டும், ஆனால் சம்பளம் மட்டும் 'பியூன்' அளவிற்குதான் கொடுப்பேன் என்றால் எவன் கிடைப்பான்..? 😎

அவர்களும் இப்போது உலகத்தோடு இணைந்துவிட்டார்களாக்கும் . (இந்த விடயத்தில் மட்டும்)

Share this post

Link to post
Share on other sites

சில  காலங்கள்  எழுதாவிட்டால்

அல்லது 

குறைவான கருத்துக்களை  எழுதுபவர்களுக்கு

இவ்வாறு  வர  வாய்ப்புள்ளதாக  முன்னர்   எங்கோ  வாசித்ததாக  ஞாபகம்???

(புது  விதிகளின் படி???)

Share this post

Link to post
Share on other sites

பதிவு தப்பென்றால் அதனைத் தூக்குவதில் தப்பில்லை.

தூக்கியதன் காரணம் தெரியத்தானே வேண்டும்..... 

மறுபடி அந்தத் தப்பு வராதிருக்க.

என் பதிவொன்றுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. 🤔 

Share this post

Link to post
Share on other sites
On 5/8/2019 at 5:02 AM, ராசவன்னியன் said:

நீங்க வேறை..! 'ஷேக்'குகள் மூக்கால அழுதுக்கிட்டு சம்பளம் கொடுக்கிறார்கள்..:)

அவர்களுக்கு திறமையுள்ள, அனுபவமிக்க பொறியாளர்கள் வேண்டும், ஆனால் சம்பளம் மட்டும் 'பியூன்' அளவிற்குதான் கொடுப்பேன் என்றால் எவன் கிடைப்பான்..? 😎

இளைப்பாறும் வயதில் உங்களை வேலைக்கு வைத்திருக்கிறதே பெரிய காரியம்.
உஸ்ஸ்.

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, ஈழப்பிரியன் said:

இளைப்பாறும் வயதில் உங்களை வேலைக்கு வைத்திருக்கிறதே பெரிய காரியம்.
உஸ்ஸ்.

இங்குதான் தவறாக கணிக்கிறீர்கள்.

ஒரு தொழிலிற்குரிய நிபுணத்துவம், அவசர காலத்தில் உடனடியாக முடிவெடுத்து சீர்தூக்கும் தன்மை, படிப்பறிவிலும், அனுபவத்திலும் வருவது.

வேலை சந்தைகளில் உயரிய தொழிற்நுட்ப திறன் சிலவற்றுக்கு ஆட்கள் அரிதாகவே கிடைப்பார்கள். அம்மாதிரி திறமைகளுக்கு பொறியாளர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுத்தாக வேண்டிய தேவையை தவிர்க்க முடியாது.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, ராசவன்னியன் said:

உண்மை தான் .
ஆனாலும் வயது கூடினால் திரும்பவும் அதே சம்பளத்தில் வேலை எடுப்பது அமெரிக்காவைப் பொறுத்த வரை குதிரைக் கொம்பு.
அதை வைத்தே சொன்னேன்.மற்றும்படி உங்கள் கெட்டித்தனம் தெரியாததா என்ன?

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான் .
ஆனாலும் வயது கூடினால் திரும்பவும் அதே சம்பளத்தில் வேலை எடுப்பது அமெரிக்காவைப் பொறுத்த வரை குதிரைக் கொம்பு..
...

பின் அங்கே எப்படிதான் சமாளிக்கிறீர்கள்..? 🤔

அலுவலக வேலையென்றால் அதில் நமக்கு ஒரு 'பிடிமானம்' வைத்துக்கொள்ள வேண்டும். 

புதுப்புது தொழில் உத்திகளை புகுத்த வேண்டும், நாம் இல்லையென்றால் அந்த துறையில் சமாளிக்க இயலாது என்ற வகையில் இருக்க வேண்டும், வேலையில் நமது பெறுமதி அப்பொழுதான் மேலிடத்திற்கு தெரியும்.

"என் ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்" எனற வகையில் பத்தோடு பதினொன்றாக வேலையில் இருந்தால் நீங்கள் சொன்ன அறுபது வயதிற்கு மேல் வேலையில் நீடிக்க முடியாது. அதுவே இங்கேயும் நிலை..!

  • Like 1
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, ராசவன்னியன் said:

வன்னியர் செய்த வேலையை விட்டு  புதிய கம்பனிகள் தேடிப் போகும் போதே இப்படியான பிரச்சனை என்பதையே எழுதினேன்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • திறமையானவர்களை மக்கள் ஆதரிக்கவேண்டும் – கே.சிவாகரன்          by : Vithushagan பொது தேர்தல் தமிழர்களுக்கு மிக முக்கியமான தேர்தலாகும்  எனவே தமிழ் மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து ஒரு நல்ல முடிவு எடுக்கவில்லையெனின் தமிழ் மக்கள் இல்லாமல் போய்விடுவோம் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணிகட்சியில் போட்டியிடும் வேட்பாளர் கே.சிவாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு ஏரன்ஸ் வீதியிலுள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இடம்பெற்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அக்ருத்து தெரிவித்த அவர், “கிழக்கு தமிழ் மக்கள் முக்கியமாகக யோசிக்க வேண்டிய விடயம் என்ன என்றால் இப்போழுது இருக்கின்ற  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை இருந்த உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து போனவர்களின் அடிப்படையில் பார்த்தால் படிப்பறிவும் சரி பேசுகின்ற மொழியும் சரி நிறைய மாற்றம் கொண்டுவர வேண்டும். இப்பொழுது எமது கிழக்கு மாகாணத்திலுள்ள நிலை மாற வேண்டுமென்றால் உங்களைப் போல நல்ல படித்த பட்டதாரிகளை  நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும். கூட்டமைப்பில் கிடைக்கவில்லை என்று அரசியலில் இருந்து போக கூடாது என்றனர். ஏனக்கு அரசியல் வருவதற்கு சுத்தமாக விருப்பமில்லை. இதை ஆரம்பத்திலிருந்தே சொல்லுகின்றேன். நான் ஒரு அரசியல்வாதி இல்லை. நான் எல்லா மக்களையும் போல ஒரு சராசரி மனிதன். அரசியலுக்கு வருவது என் நோக்கம் கிடையாது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் நடக்கிற நிலையை பார்த்தால் நாம் எல்லா மக்களும் கண்ணை மூடிக் கொண்டு போனோம் என்றால் நாம் காணாமல் போய்விடுவோம் அது நிச்சயம். அது மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கு செய்து கொடுப்பதற்கு வழிகாட்டுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது என்று அந்த அடிப்படையில் தான் கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் சேர்ந்து பாரம்பரியமான நமது உதயசூரியன் சின்னத்தில் சேர்ந்து வேட்பாளராக  நிற்கின்றேன். நல்ல படித்த தரமான  பல மொழியும் தெரிந்த வேட்பாளர்கள்  முக்கியமாக தமிழ் மக்கள் சிந்தித்து மிக முக்கியமாக வாக்கை சிதற விடாமல் சொந்தகாரர் சகோதரர்கள் பழகின கட்சி என்றெல்லாம் பார்க்காமல் தமிழ் மக்களின் எதிர்காலத்தை சிந்திக்க வேண்டும். இந்த தேர்தலில் தமிழ் மக்களுக்கென்று ஒரு நிலையை நாட்டாவிட்டால் நாம் காணாமல் போய்விடுவோம். இந்த அடிப்படையில் தான் கிழக்கு தமிழர் ஒன்றியத்துடன் சேர்ந்து இந்த தேர்தலில் இறங்கியுள்ளேன். படிப்பறிவை பொறுத்தவரை மொழியை பொறுத்தவரை ஆண்டவன் புண்ணியத்தால் எனக்கு எல்லாம் இருக்கிறது. நான் 23 வருடங்களாக வெளியில் சென்று விட்டு இப்பொழுது நாடு திரும்பி வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அரசியலில் கால் வைத்துள்ளேன். இந்த நல்ல நோக்கத்தை மனதில்  அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் நன்றாக சிந்தித்து எனக்கு வாக்களிக்க வேண்டுமென்று நான் மக்களிடம் சொல்லவில்லை. யார் தரமானவர் என்று மக்கள் சிந்திக்க வேண்டும் அது மாத்திரமில்ல நமக்கு கிழக்கு மாகாணத்தில எமக்கென்று ஒரு தனி ஆட்சி நமது கையில் இருக்க வேண்டும். அப்பொழுது தான் கிழக்கு மாகாணத்தை நமது கையில் கொண்டுவர முடியும். இப்பொழுது இருக்கிற சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஒரு அதிகாரமும் கிடையாது. அந்த அதிகாரம் நமது கைக்கு வேண்டுமென்றால் இந்த தேர்தலில் கண்டிப்பாக ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும் “ என தெரிவித்தார். https://athavannews.com/திறமையானவர்களை-மக்கள்-ஆத/
    • கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் சீனாவின் திட்டத்தை கனடா நிராகரித்தது!     by : Anojkiyan கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் சீனாவின் திட்டத்தைக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்துள்ளார். இதன்மூலம், கசப்பான குற்றச்சாட்டுகள் கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் கடுமையான உறவுகளை புதிய தாழ்விற்கு தள்ளியுள்ளன. அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில், உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்புப் பொருள் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஸோவை (Meng Wanzhou) கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி கனடா-வன்கூவர் பொலிஸார், கைது செய்தனர். இதற்கு அமைய பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் இராஜதந்திரி மைக்கேல் கோவ்ரிக் மற்றும் தொழிலதிபர் மைக்கேல் ஸ்பேவர் ஆகியோர் டிசம்பர் 2018ஆம் ஆண்டு முதல் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும், இது சீனாவின் பழிவாங்கல் எண்ணமே என கனடா கூற, இதனை சீனா தொடர்ந்து மறுத்துவந்தது. தற்போது இவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டுமானால், மெங் வான்ஸோவை விடுவிக்க வேண்டும் எனச் சீன அரசு கோரியுள்ளது. ஆனால், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் இந்தத் திட்டத்தை ஏற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறுத்துவிட்டார். இதையடுத்துக் குற்றவாளிகளை நாடு கடத்த ஹொங்கொங்குடன் செய்திருந்த உடன்பாட்டையும் ரத்து செய்துவிட்டார். இதேபோல் ஹொங்கொங்குக்கு இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களின் ஏற்றுமதிக்கும் தடை விதித்துள்ளார். ஹொங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து முக்கிய பொருட்களும் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கானவை என்றும் கனடா கருதுகிறது. கனேடிய வெளியுறவு அமைச்சர் புதிய சட்டத்தை சுதந்திரத்திற்கான ‘ஒரு குறிப்பிடத்தக்க படி’ என்று குறிப்பிட்டார். ஆனால், இது சீனாவை கோபப்படுத்தியுள்ளது. சீனா, ஹொங்கொங் பாதுகாப்புச் சட்டத்தை விமர்சித்ததற்காக கனடாவைக் கண்டித்தது. அதே நேரத்தில் ஒப்படைப்பு ஒப்பந்தத்தை கனடா நிறுத்தியதில் ஹொங்கொங் அதிகாரிகள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். https://athavannews.com/கைதிகளைப்-பரிமாறிக்-கொள்/
    • கல்வியறிவு விடயத்தில் மஹிந்தவுடன் என்னை ஒப்பிட வேண்டாம்- சஜித்     by : Yuganthini கல்வியறிவு விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் என்னை ஒப்பிட வேண்டாமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விட பல விடயங்களில்  தனக்கு ஆழமான அறிவும் புரிதலும் இருக்கின்றதெனவும் சஜித் கூறியுள்ளார். ஆகவே தன்னை மஹிந்தவுடன் ஒப்பிட்டு பேச வேண்டாமெனவும் அவர்  வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/கல்வியறிவு-விடயத்தில்-மஹ/