Jump to content

தடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.


Recommended Posts

  • Replies 141
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புர்காவுக்கும் நிக்காபுக்கும் மட்டுமே தடை. ஹிஜாபுக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்ன ஆடைக்குத் தடை என்பது இல்லை. முகத்தை ஆள் அடையாளத்தை மறைத்து அணியும் ஆடைகளுக்குத் தடை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் / சிங்களம்  கலந்த மொழியில் கதைப்பதால்... நீர்கொழும்பில் நடந்த சம்பவம் போல் தெரிகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெட்டிக்காறி! வீடியோவும் எடுக்கிறா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.bbc.co.uk/newsround/24118241

ஹிஜாபில் முகம் மறைவதில்லை. தலைமுடியும், காதிற்கு பின்னான தலை பகுதியும் மட்டுமே மறையும்.

ஹிஜாபுக்கு தடை இல்லை என்பதை வர்தமானி அறிவித்தல் வந்த அன்றே பல  அமைசர்களே பொது வெளியில் தெரிவித்தனர்.

2 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் / சிங்களம்  கலந்த மொழியில் கதைப்பதால்... நீர்கொழும்பில் நடந்த சம்பவம் போல் தெரிகின்றது. 

புவாக்பிட்டிய கொழும்பு-அவிசாவளை இடையே இரத்தினபுரி மாவட்டத்தில் இருக்கும் ஊர். யாரினதோ இனவாத தூண்டுதலுக்கு அப்பாவி மலையக தமிழ் மக்கள் இரையாகியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனவாத தூண்டுதல் போல தெரியவில்லை.

இன்றய நிலையில், மக்களின் பயத்தினை அவர் புரிந்த மாதிரி தெரியாமல், வீடியோ வேறு எடுக்கிற தில்லில் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியின் பிரகாரம்.. அதன் இறுதிக்கட்டத்தில் அந்த முஸ்லீம் ஆசிரியை கறுத்த முழு உடலையும் போர்த்தி அணியும் புர்க்கா தான் அணிந்திருக்கிறார்.

ஆனால்.. இந்தக் காணொளியை சமூக வலையில் பகிர்ந்த முஸ்லிம் நபர்.. இதனை  ஹிஜாப்  என்று வரையறுத்திருக்கிறார்.

எதுஎப்படியோ ஒரு நபரை சரியாக அடையாளம் காண்பதற்கு.. முகம்.. கண்.. காது.. மற்றும் உடற்கூறுகள் வெளிப்படுதல் அவசியம்.

இந்த ஆசிரியை.. அவர் அணிந்திருக்கும் ஆள் அடையாளத்தை முழுமையாக வெளிப்படுத்த தடையாக இருக்கும் ஆடைக்கு... தடைகள் உள்ள நிலையில்.. மக்களும் நாடும்.. முஸ்லீம் மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் மத வெறிக்கு இலக்காகி.. அதனை எதிர்கொள்வதற்கான சூழலை தயார் செய்து கொண்டிருக்கும் வேளையில்.. இவரின் நடத்தை கண்டிக்கத்தக்கது மட்டுமன்றி.. சூழலைப் புரிந்து கொள்ளாத... முஸ்லீம்களிடம் இருந்து வரும் கடும்போக்கு.... அடாத்தான மத வெறிச் செயற்பாட்டின் வெளிப்பாட்டையே இது இனங்காட்டுகிறது.

இந்த காணொளிக்கு கீழ் கருத்துப் பகிர்ந்திருக்கும் முஸ்லீம்கள்.... இந்த அப்பாவி மக்களையும் விடுதலைப்புலிகள் என்று அழைக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் தோல்வியை வைத்து அந்த மக்களை பரிகாசிப்பதும் தெரிகிறது. இப்படியான கேவலம் கெட்ட முஸ்லீம் மத வெறியர்களை.. ரஷ்சிய அதிபர் சொன்னது போல.. நேரா அல்லாவிடம் அனுப்புவதே சிறந்தது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஆயின் தலையங்கம் “புர்கா அணிந்த ஆசிரியை” என்றிருக்க வேண்டும். தமிழர்களில் சில அறப்படிச்ச கூமுட்டைகள் இருப்பது போல முஸ்லீம்களிலும் தம் மதம் பற்றியே அற்வில்லாத கூமுட்டைகள் இருக்கலாம். அந்த கூமுட்டை புர்காவை ஹிஜாப் என்றழைக்குது என்பதுக்காக நாமும் அதை காவிச் செல்ல முடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

இன்ன ஆடைக்குத் தடை என்பது இல்லை. முகத்தை ஆள் அடையாளத்தை மறைத்து அணியும் ஆடைகளுக்குத் தடை.

 

1 hour ago, nedukkalapoovan said:

இந்த ஆசிரியை.. அவர் அணிந்திருக்கும் ஆள் அடையாளத்தை முழுமையாக வெளிப்படுத்த தடையாக இருக்கும் ஆடைக்கு... தடைகள் உள்ள நிலையில்.. மக்களும் நாடும்.. முஸ்லீம் மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் மத வெறிக்கு இலக்காகி.

எங்கும் சில முட்டையில் மயிர்புடுங்கும் கூட்டம் இருக்கும் என்பதால் தான் இப்படி எழுதப்பட்டுள்ளது. 

ஆள் அடையாளத்தை மறைக்கத்தக்க ஆடையை அந்த ஆசிரியை அணிந்திருக்கிறார் (புர்க்கா?) என்று தெரிந்தும்.. ஹிஜாப் என்று எழுதி தம்மை நியாயவாதிகளாகக் காட்ட நினைக்கும் முஸ்லீம் மத அடிப்படைவாதிகளின் மதவெறியை... தலைப்பை மாற்றி நாம் பாதுக்காக்க வேண்டியதில்லை. 

காணொளி மிச்ச சேதியை சொல்லும் மக்களுக்கு. மக்கள் மடையர்கள் இல்லையே. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்: ஹிஜாப் அணிந்த ஆசிரியர்களை தடுத்து இடம்மாற்றியதால் சர்ச்சை

இடம்மாற்றப்பட்ட ஆசிரியைகள்

ஹபாயா மற்றும் ஹிஜாப் ஆடையுடன், தாங்கள் பணியாற்றும் பாடசாலைக்குள் நுழைய தடுத்ததன் காரணமாக, இலங்கையின் மேல் மாகாணத்திலுள்ள பாடாசாலை ஒன்றில் பணியாற்றி வந்த 10 ஆசிரியைகள், நேற்று செவ்வாய்க்கிழமை வேறு பாடசாலைகளுக்கு மாற்றம் பெற்று சென்றது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

அவிசாவளை - புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலத்தில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள், பணிக்கு சென்றபோது, ஹபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து கொண்டு பாடசாலைக்குள் செல்லக் கூடாது என்று, நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அந்த பாடசாலையில் கற்கும் மாணவர்களின் பெற்றோரும், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் இணைந்து அவர்களை தடுத்ததாக மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலியின் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியைகள் அனைவரும் ஹபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்குச் செல்வது வழமையாகும். ஆயினும், நேற்றைய தினம்; "புடவை அணிந்து வந்தால் மாத்திரமே பாடசாலைக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்" என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைVALERY SHARIFULIN Image captionகோப்புப்படம்

எனவே, தங்களை பணி செய்ய விடாமல் திருப்பி அனுப்பப்பட்ட ஆசிரியைகள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக, மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலியிடம் முறையிட்டனர்.

இதனையடுத்து, மேல் மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளை நேற்று அழைத்த ஆளுநர் ஆஸாத் சாலி, இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இலங்கை இலங்கை

எவ்வாறாயினும், தம்மை அவமதித்த பாடசாலைக்கு, இனி பணியாற்றச் செல்வதில்லை என்று, பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் உறுதிபடத் தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட 10 ஆசிரியைகளுக்கும் தனது உத்தரவுக்கிணங்க நேற்றைய தினம், வேறு பாடசாலைகளுக்கு உடனடி இடமாற்றங்கள் வழங்கப்பட்டதாக, ஆளுநர் ஆசாத் சாலி பிபிசி-யிடம் கூறினார்.

"அடையாளத்தை மறைக்கும் வகையில் முகத்தை மறைப்பதை, அரசாங்கம் தடை செய்வதற்கு முன்னதாகவே, மேல் மாகாணப் பாடசாலைகளில் முகத்தை மறைக்கும் வகையில் யாரும் ஆடை அணிந்து வரக் கூடாது என்று நான் அறிவித்தேன். அந்த வகையில் புர்கா, நிகாப் போன்ற ஆடைகளைத்தான் அணிய முடியாது. ஆனால், புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் முகத்தை வெளிக்காட்டும் வகையில் ஹிஜாப் அணிந்து வந்த ஆசிரியைகளுக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, சாரி (புடவை) அணிந்து வருமாறும் அந்த ஆசிரியைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது" என்றும் ஆசாத் சாலி தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தின் உதவி அதிபர் பிபிசி-யிடம் பேசுகையில்; "நடந்த சம்பவத்துக்கும் பாடசாலை அதிபர், பிரதியதிபர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் தொடர்பு கிடையாது" என்றார். "பாடசாலையின் நுழைவாயிலுக்கு வெளியில் நின்றிருந்த பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள்கள்தான், இதனுடன் சம்பந்தப்பட்டார்கள்" எனவும் அவர் கூறினார். இவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

மேலும், இந்த பாடசாலைக்குள் நுழைவதற்குத் தடுக்கப்பட்டதை பாதிக்கப்பட்ட ஆசிரியைகளில் ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்த காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றது.

இடம்மாற்றப்பட்ட ஆசிரியைகள்

இந்த ஆசிரியைகளை பாடசாலைக்குள் நுழைய விடாமல் தடுத்தவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற கருத்துக்கள், சமூக வலைத்தளங்களில் அதிகளவில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஏப்ரல் 21-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்கதல்களை அடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைவரத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம்களின் கலாசாரங்களை ஒழிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர், தங்களின் அடையாளத்தை மறைக்கும் வகையில் முகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இதன்படி புர்கா ஆடை அணிவதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆயினும், ஹபாயா மற்றும் ஹிஜாப் ஆடைகளை அணிவதற்கு எவ்வித தடைகளும் இல்லை.

https://www.bbc.com/tamil/sri-lanka-48201035

Link to comment
Share on other sites

பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகர்கள் பொது இடங்களில் கடமையாற்றுவோர் எந்த ஒரு  மத சின்னங்களையும் அணியக் கூடாது என்று கடுமையான சட்டம் பாராளுமன்றத்தில்  இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர்கள் இடமாற்றங்கள் மிகவும் கடினமானது. இவர்கள் சந்தர்ப்பத்தினை பெரிதாக்கி, பயன்படுத்தி, ஊரோட மாத்தம்  வாங்கிக் கொண்டு விட்டார்கள்.

சுஜல சந்தர்ப்பவாதம். அதுவே வீடியோ எடுத்துக்கு காரணம்.

******

உந்த ஆள் அசாத் சாலி முன்னமே இரண்டு.

உங்க முகத்திரையை எடுத்துப் போட்டு வடிவான பொம்பிளை டீச்சர் அம்மாக்கள் நிக்கினம்.

அவரின்ட கணக்கு கூடப்போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண்கள் துணிந்த கட்டையள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

இந்தப் பெண்கள் துணிந்த கட்டையள் 

சுஜல சந்தர்ப்பவாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகர்கள் பொது இடங்களில் கடமையாற்றுவோர் எந்த ஒரு  மத சின்னங்களையும் அணியக் கூடாது என்று கடுமையான சட்டம் பாராளுமன்றத்தில்  இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். 

👆🏼👌

57 minutes ago, Nathamuni said:

ஆசிரியர்கள் இடமாற்றங்கள் மிகவும் கடினமானது. இவர்கள் சந்தர்ப்பத்தினை பெரிதாக்கி, பயன்படுத்தி, ஊரோட மாத்தம்  வாங்கிக் கொண்டு விட்டார்கள்.

சுஜல சந்தர்ப்பவாதம். அதுவே வீடியோ எடுத்துக்கு காரணம்.

******

உந்த ஆள் அசாத் சாலி முன்னமே இரண்டு.

உங்க முகத்திரையை எடுத்துப் போட்டு வடிவான பொம்பிளை டீச்சர் அம்மாக்கள் நிக்கினம்.

அவரின்ட கணக்கு கூடப்போகுது.

ஆத்திரக்காரனுக்கு மட்டுமில்லை, இனக்குரோதம் தலைக்கேறியவனுக்கும் புத்தி மட்டு. ஏற்கனவே சிங்கள பகுதியில் இருக்கும் தமிழ் பாடசாலை அதுவும் மலையக மேலக தமிழ் பிள்ளையள் படிக்கிற பாடசாலை.

யாழ்பாணத்து , கிழக்கிலங்கை டீச்சர்மார் போகப் பஞ்சிப் படுவினம். போனாலும் எப்ப கொழும்பு பஸ் ஏறலாம் எண்ட தவிப்பில் பாதி நேரத்தோட ஓடீடுவீனம் ( கிளிநொச்சி, கொக்கட்டிசோலை பக்கமும் இப்படித்தான்).

ஒரே கொத்தா 12 டீச்சர்மார இழந்து போட்டு நிக்குதுகள். பிள்ளையள்ட படிப்பில மண்விழுந்தாலும் சோனகனுக்கு சகுனப் பிழை வந்தால் போதும்.🤦‍♂️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நியாயம் பிழைக்கலாம்.

பயம், அய்யா பயம். அடி பட்டவர்களுக்கு தான் தெரியும் வலி. 

இவர்கள் சேலை கட்டியவர்கள்.... வஹாபிகள் வந்த பின்னர், தமது கலாச்சாரத்தினை விட்டு, அரேபியன் கலாச்சாரத்தினை மூர்க்கமாக எடுப்பவர்கள்.

வாத்திமார் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மத அனுதாபிகள் வேண்டாம் எண்டெல்லே சனம் சொல்லுது.

அரச வேலையில் இருப்பவர்கள், மத ரீதியிலான உடையினை அணிவதை தடுக்க வேண்டும்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ்,  கிறிஸ்தவ சிலுவை பெண்டன் அணிந்து வந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பியது. தனியார் நிறுவனம். எனினும், அதனை அனுமதித்தால், சகலரும் அவ்வாறே வருவார்கள் என சொன்னது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் அரசு பிறப்பிச்ச சட்டத்துக்குப் புறம்பாக அதே அரசின் ஆளுநர்.. தான் சார்ந்த மதம்.. சமூகம் என்ற அடிப்படையில் பக்கச் சார்ப்பாக தன்னிலை விளக்கத்துடன்.. ஆசிரியர்களை கொத்தாக இடமாற்றம் செய்யச் சொல்வது.. ஆளுநரின்.. எதேச்சதிகாரப் போக்கையே காட்டுகிறது.

முதலில் இவரின் பதவியைப் பறிச்சிட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

சட்டத்தை மதிக்காமல்.. ஆள் அடையாளத்தை முழுமையாகக் காட்டாது மத அடிப்படைவாத வெறியோடு ஆடை அணிய திமிர் கொண்டு அலையும் இந்த ஆசிரியைகள் அனைவரும் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு சம்பளக் கொடுப்பனவுகள் யாவும் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

3 hours ago, ஏராளன் said:
இடம்மாற்றப்பட்ட ஆசிரியைகள்

இலங்கை ஆள் அடையாள சட்டத்தின்படி காதுகளை மறைக்க முடியாது! இந்த முஸ்லீம் மதவெறி ஆசிரியர்கள் காதுகளை மறைத்துள்ளார். மேலும் இந்த ஆசிரியர்கள் காதுகளை மறைக்காது அந்த பாடசாலைகளுக்கு செல்ல மறுத்ததால் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்.  பதவிநீக்கம் செய்யப்பட வேண்டிய முஸ்லீம் மதவெறி பீடித்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கிய முஸ்லீம் மதவெறி பீடித்த அசாத்சாலியும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட வேண்டும்!

சட்டவிரோதமான ஆடைகளுடன் பாடசாலைக்குள் நுழைய முயன்ற இந்த முஸ்லீம் மதவெறியர்களை தடுத்து நிறுத்திய பெற்றோர்கள் பாராட்டுக்கும் தேசமான்ய விருது பெறுவதற்கும் உரியவர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

நாங்கள் நியாயம் பிழைக்கலாம்.

பயம், அய்யா பயம். அடி பட்டவர்களுக்கு தான் தெரியும் வலி. 

இவர்கள் சேலை கட்டியவர்கள்.... வஹாபிகள் வந்த பின்னர், தமது கலாச்சாரத்தினை விட்டு, அரேபியன் கலாச்சாரத்தினை மூர்க்கமாக எடுப்பவர்கள்.

வாத்திமார் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மத அனுதாபிகள் வேண்டாம் எண்டெல்லே சனம் சொல்லுது.

அரச வேலையில் இருப்பவர்கள், மத ரீதியிலான உடையினை அணிவதை தடுக்க வேண்டும்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ்,  கிறிஸ்தவ சிலுவை பெண்டன் அணிந்து வந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பியது. தனியார் நிறுவனம். எனினும், அதனை அனுமதித்தால், சகலரும் அவ்வாறே வருவார்கள் என சொன்னது.

இலங்கை பூராவும் ஹிஜாப் அணிந்த ஆசிரியைகள், முஸ்லீம் அல்லாத பாடசாலைகளில் படிபிக்கினம்.சிங்கள பாடசாலைகள் உட்பட. யாருக்கும் இல்லாத பயம் புவாக்பிட்டியவில் மட்டும் ஏன்?

இந்த 12 ஆசிரியைகளையும் இந்த பெற்றோருக்கு, அபிவிருத்தி சங்கத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை தெரியாதா? ஹிஜாப்பின் ஊடாக முகம் வடிவாக தெரியுமே? அப்போ இவர்கள் டீச்சரா இல்லை குண்டுதாரியா? என்று கண்டு பிடிப்பது கஸ்டமில்லையே?

குண்டு வைத்தவன் எவனும் இஸ்லாமிய உடையில் வரவில்லை. எல்லாம் டிசேர்ட் பேஸ்போல் தொப்பி போட்டுத்தான் வந்துள்ளார்கள். 

ஆக டீச்சர் வேடத்தில் குண்டுதாரி வந்து விடுவான் என்பது நகைப்புக்கிடமானது. இது பயனில்லை பம்மாத்து.

இல்லாமல் முஸ்லீம்கள் குண்டு வைத்ததால் ஹிஜாப் அணியும் எல்லோரையும் திரத்த வேண்டும் என்றால், கிடைக்கிற சான்சை பயன்படுத்தி முஸ்லீம்களின் கலாச்சார, மத அனுஸ்டான விடயத்தில் கைவைத்து விடுவோம் எனும் இழிமனோ நிலையே அன்றி வேறில்லை.

லண்டனில் சில கலுசான் போட்ட, முதுகு பை சுமந்த பிரவுண் தோல்காரர் டியூப்பில் குண்டு வைத்த படியால் இனிமேல் எந்த பிரவுண் தோல் காரனும் கலுசான் போட்டபடி, முதுகு பையோட டியூப்பில் ஏறக் கூடாது என்று சொல்வது எப்படி அடி முட்டாள்தனமோ, அப்படிதான் இதுவும்.

ஆனால் இதில் நியாய அநியாயத்தை விட்டு விடுவோம். கடைசியில் ஆப்பு யாருக்கு? தமிழ் பிள்ளைகளின் கல்விக்கு மட்டும்தானே?

நாமே நம்மை பெரும் அறிவுசார் சமூகமாக பீற்றிக் கொண்ட போதும், மோட்டுச் சிங்களவன், மொக்குச் சோனி என்று இளக்காரம் செய்த போதும், 1948 க்கு பிறகு, முஸ்லீம்களிடமும், சிங்களவரிடமும் நாம் அரசியல், ராஜதந்திர ரீதியில், பலத்த தோல்வியை சந்திதோம் என்பதே உண்மை.

அந்த உண்மையின் ஒரு சிறிய குறுக்கு வெட்டே மேலே நிகழ்ந்த இந்த நிகழ்வு.

நாங்கள் இங்கே விசை பலகையில் அசாத் சாலியை தூக்கு, அவன் அப்பனையும் தூக்கு என்று எழுதலாம். ஆனால் ஒரு தமிழனாலும் சாலியின் அல்லது ரிசாத்தின் அல்லது ஹிஸ்புல்லாவின் ஒரு உரோமத்தை கூட பிடுங்க முடியாது என்பதே நிஜம்.

சிங்களவவனுக்கு தமிழனை எங்க வைக்கணும், முஸ்லீமை எங்க வைக்கணும், யாரை எங்கே, எப்படி தட்டி வைக்கணும் என்ற தெளிவிருக்கிறது.

முஸ்லீமுக்கு சண்டைகாரன் காலிலே விழுந்தாலும், ஒரு போதும் சாட்சிக்காரன் காலில் விழக்கூடாது என்ற தெளிவிருக்கிறது.

இந்த பாழாய் போன மூத்த குடிதான், மொக்குதனமா, இடம், பொருள், ஏவல் தெரியாம சொந்த செலவிலேயே சூனியம் வைத்துக் கொள்கிறது😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்பா சொறீலங்கா சிங்கள அரசாங்கமே.. எதுக்கு... ஆள் அடையாளத்தை மறைக்கும் ஆடைக்கு தடை போட்டீங்க. குண்டு வைச்சவன் யாருமே ஆள் அடையாளத்தை மறைக்கல்லையாமே. ஆனால் பர்த்தாவை தூக்கிட்டு பார்த்தால் ஆம்பிளை வந்தானாக்கும்... குண்டை உடலில் கட்டிக்கொண்டு. அதைச் சிலர் காணவில்லைப் போலும். 

பாடசாலைகள்.. பொது இடங்கள்.. வேலைத்தலங்கள்.. எங்கனும்.. மத அடையாளம் மற்றும் ஆள் அடையாளங்களை மறைக்கும் ஆடைகளுக்கு சட்டப்படி தடையை கடுமையாக அமுலாக்கனும்.

இங்கிலாந்தில் அண்மைய மரதன் போட்டியின் பங்காளிகள்.. ஒளிபுகக் கூடிய முதுகுப் பை தான் அணியக் கேட்கப்பட்டிருந்தார்கள். அவனுங்களுக்கு பைத்தியமோ என்னமோ..?! 

Link to comment
Share on other sites

இங்கே எடுபிடிகள் விசை பலகையில் முஸ்லீம் மதவெறியை நியாப்படுத்தலாம்! ஆனால் இனி இவர்களால் இவர்களின் விதண்டாவாதங்கள் மூலம் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது.

மிகமோசமான திருட்டுக் கும்பலான அசாத்சாலி, ரிசாத், ஹிஸ்புல்லா, அதாவுல்லா போன்றோரின் கொட்டங்கள் விரைவில் அடக்கப்படும்! இவர்களின் விசைப்பலகை எடுபிடிகள் முக்காடு போடவேண்டியது தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, போல் said:

இங்கே எடுபிடிகள் விசை பலகையில் முஸ்லீம் மதவெறியை நியாப்படுத்தலாம்! ஆனால் இனி இவர்களால் இவர்களின் விதண்டாவாதங்கள் மூலம் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாது.

முஸ்லீம்களின் அடாவடியை சிங்களவன் தாங்கிக் கொண்டிருந்தது... தமிழர்களையும் முஸ்லீம்களையும் ஒரே நேரத்தில் பகைக்க முடியாது என்ற பயத்தில் தானே தவிர (அப்படிப் பகைத்தால் தமிழருக்கு நன்மை கிடைக்கலாம் எண்று).. உண்மையில்.. தமிழர்களை விட முஸ்லீம்களின் மத வெறியாட்டத்தை சிங்களவர்களும் அதிகம் வெறுத்தார்கள்.

ஆனால்.. இன்று தமிழர்களின் உரிமைப் போராட்டம்.. ஒரு தொய்வு நிலைக்கு வந்துள்ள நிலையில்.. சிங்களம்.. அதன் முழுக் கவனத்தையும்.. நிதானமாக முஸ்லீம் மத வெறிப்பக்கம் திருப்பி உள்ளது. இப்படி நடக்கும் என்று 1990 இலேயே விடுதலைப் புலிகள் இந்த முஸ்லிம்களை எச்சரித்திருந்தார்கள்.. மதவெறியை அதனூடான தமிழின வெறுப்பைக் கைவிடச் சொல்லி. 

ஆனால்.. மதவெறி மிஞ்சி.. அது இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதமாக பரிணமித்து விட்டது. விளைவை எனி எல்லாரும் அனுபவிச்சே ஆகனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா பிச்சை வேணாம், நாயை பிடியுங்கோ....

உலகத்தில மிக மோசமான தாக்குதல் உங்க நடந்திருக்கு. சரத் பொன்னர் வேற 13ம் திகதி வெடி வைக்கபோகினமாம் எண்டு சொல்லுறார். 

150ல 50 தான் பிடிபட்டிருக்கு. மிச்சம் 100 எங்க எண்டு தெரியல்லையாம்.

மனிசன் வெடிப்பயத்தில, இருக்கிறான்..... எங்களுக்கு இவையள் படிப்பிச்சு கிழிக்க தேவை இல்லை எண்டது தான் இப்ப சனத்தோட நிலை.

தமிழே வேண்டாம், சிங்கள வாத்தியிடம்  சிங்களத்திலே  படிக்கலாம்.... உந்த பயத்தோட பள்ளிக்கூடம் போற வேலை வேண்டாம்....

இரண்டொரு மாதம் போக நிலைப்பாடு மாறலாம். இப்ப வேணாம்.

உவர் ஒருத்தர், பிரச்னை இல்லை எண்டு சான்றிதழ் குடுத்த மாதிரி கதைக்கிறார். வீடியோ எடுத்து சோசியல் மீடியாவிலே போட்டதன் நோக்கம் என்ன? எப்படிப் பட்ட கில்லாடிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக இவர்களின் மதப் பயங்கரவாதத்திற்கு எனியும்... தமிழர்கள் உயிர் விலை கொடுக்க முடியாது. 

18 minutes ago, Nathamuni said:

அய்யா பிச்சை வேணாம், நாயை பிடியுங்கோ....

உலகத்தில மிக மோசமான தகுதல் உங்க நடந்திருக்கு.

மனிசன் வெடிப்பயத்தில, இருக்கிறான்..... எங்களுக்கு இவையள் படிப்பிச்சு கிழிக்க தேவை இல்லை எண்டது தான் இப்ப சனத்தோட நிலை.

இரண்டொரு மாதம் போக நிலைப்பாடு மாறலாம். இப்ப வேணாம்.
 

உண்மை தான். தாக்குதல் நடந்த இடங்களைப் பார்க்கின்ற போது பெருந்தொகையான உலோகக் கோளைகள் பதுக்கி வைக்கப்பட்டு இந்தக் குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன. உயர் உயிர் சேதம் என்பதுவே இவர்களின் கொடிய நோக்கமாக இருந்துள்ளது. ஒரு உந்துருளியில் உள்ள துவாரங்களை அவதானிக்கையில்... ஆயிரம் துளைகளை எண்ணலாம் போலுள்ளது. 

President-maithripala-srisena-visit-batt

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.