Jump to content

மக்கள் புகைப்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்: நோர்வே சுகாதார அமைச்சரின் கருத்தால் சர்ச்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

norway-720x450.jpg

மக்கள் புகைப்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்: நோர்வே சுகாதார அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

புகைப்பிடிப்பது மற்றும் மதுபானம் அருந்துதல் தொடர்பான நோர்வே சுகாதார அமைச்சரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நோர்வே மக்கள் எவ்வளவு வேண்டுமாயினும் புகைப்பிடிக்கலாம், மது அருந்தலாம் என நோர்வேயின் புதிய சுகாதார அமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை நோர்வேயின் புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட சில்வி லிஸ்தோக், நோர்வே ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த சர்ச்சை கருத்தைத் தெரிவித்தார்.

இதன்போது, தான் ஒரு இறுக்கமான பொலிஸ்அதிகாரி போன்று செயற்படப்போவதில்லை எனவும், மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புகைப்பிடிக்கவும், மதுபானம் அருந்தவும் மக்கள் அனுமதிக்கப்படவேண்டும். எது சுகாதாரமானது என்பதை மக்கள் அறிந்து வைத்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/மக்கள்-புகைப்பிடிக்க-அனு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் உண்மையை சொல்கிறார்......!   😁

Link to comment
Share on other sites

On 5/9/2019 at 8:23 AM, suvy said:

அவர் உண்மையை சொல்கிறார்......!   😁

உண்மைதான். எங்கள் தோட்டத்துக்கு அருகே கனகர் என்ற வயோதிபர் 96 வயதிலும் வாயில் சுருட்டுடன் பலமணிநேரம் தனது தோட்டத்தில் வேலைசெய்வார், அவர் நோய்வாய்ப்பட்டதை நான் கண்டதுமில்லை கேட்டதுமில்லை.  நோர்வேயின் புதிய சுகாதார அமைச்சர்  தெரிவித்த உண்மையை உலகம் நியாயப்படுத்தினால், இலங்கையிலும் பல தமிழ்விவசாயிகள் நன்மையடைவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அமைச்சரின் பின்னணி தெரியாமல்.. இதை மக்களுக்கான அறிவியல் அறிவுரை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு.. இந்த அறிவுரை பொருந்தாது. 

பிரித்தானியாவில்.. குடிகாரர்களால் மட்டும்.. பெருமளவு பொதுச் சொத்துக்களுக்கு சேதமும்.. தேசிய சுகாதார சேவைக்கு அதிக பணச் செலவும் ஆகிறது. இதில் புகை வேற. 🙄

எந்த நாட்டு மக்கள் ஆயினும்.. இந்த அமைச்சரின் கருத்தைப் பின்பற்றுவது ஆபத்தானது. 

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

உந்த அமைச்சரின் பின்னணி தெரியாமல்.. இதை மக்களுக்கான அறிவியல் அறிவுரை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு.. இந்த அறிவுரை பொருந்தாது. 

அமைச்சரின் அறிவியல் அறிவுரை ஆரோக்கியமான சமூகத்திற்கு கேடு விளைவிக்கலாம் என்று அறிவித்து, அறிவுரையை ஏற்றுக்கொள்ளலாமே.

marlboro-rot.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.