Jump to content

குருணாகலில் 356 முஸ்லிம் கிராமங்கள் சோதனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குருணாகலில் 356 முஸ்லிம் கிராமங்கள் சோதனை

 

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினத்தின் பின்னர்  நாடு முழுவதும் முன்னெடுக்கப்­பட்­டு­வரும் சோத­னைகள் மற்றும் தேடு­தல்­களில் குரு­ணாகல் மாவட்­டத்தில் மட்டும் 356 முஸ்லிம் கிரா­மங்கள் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

army.jpg

பொலிஸார், பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் மற்றும் முப்ப­டை­யினர் இணைந்து முன்­னெ­டுத்­துள்ள இந் நடவடிக்கையின் போது சுமார் 152 பேர் வரியில் கைது செய்யப்பட்­ட­தாக குரு­ணாகல் மாவட்ட உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கூறினார். 

இவர்­களில் 108 பேர் நீதி­மன்­றங்­களில் ஆஜர்  செய்­யப்­பட்ட பின்னர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்,  44 பேர் தடுப்புக் காவல் உத்­த­ரவின் கீழ் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வருவதாகவும் அந்த அதி­காரி சுட்­டிக்­க­ட­டினார். அவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் தடை செய்­யப்­பட்ட  தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்­பி­னர்கள் 8 பேரும் அடங்­கு­வ­தாக அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

மாளி­கா­வத்­தையில்  மேலும் கத்­திகள் , வாள்கள் மீட்பு

மாளி­கா­வத்தை, கெத்­த­ரம பகு­தியில் கிணற்றில் இருந்து நேற்றும் கத்­திகள் வாள்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. 

நேற்­றைய தினம் 16 வாள்கள், கத்­திகள் மீட்­கப்­பட்­ட­தாக பொலிசார் கூறினர். ஏற்­க­னவே  கெத்­தா­ராம விளை­யாட்டு மைதானம் அருகில் உள்ள பள்­ளி­வா­சலை அண்­மித்­துள்ள கிணற்றில் இருந்து நேற்று முன் தினம் 58 வாள்கள், 52 கத்­திகள்,  மீட்­கப்­பட்­டன. அதன்­படி நேற்று அந்த கிணறு இறைக்­கப்­பட்டு தேடுதல் நடாத்­தப்­பட்­டது. இதன்­போதே  16 வாள்கள் கத்­திகள் மீட்­கப்­பட்­ட­தாக பொலிசார் கூறினர்.

இரா­ஜ­கி­ரி­யவில் மெல­ளவி கைது ராஜ­கி­ரிய நாவல வீதி பகு­தியில் அடிப்­ப­டை­வாத உரைகள் அடங்­கி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் ஒலிப்ப­தி­வு­க­ளுடன் மெல­ளவி ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படை­யி­னரால் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

 குறித்த மெல­ள­வி­யி­ட­மி­ருந்து  அடிப்­ப­டை­வாத உரைகள் அடங்கிய 14 ஒலிப்­ப­தி­வு­களும்,  கொச்­சிக்­கடை தேவா­ல­யத்தின் புகைப்ப­டமும்  தொலை­பேசி ஒன்றும் மீட்­கப்­பட்­டுள்­ளன. 

இரு மாதங்­க­ளுக்கு முன்னர் குறித்த மெள­லவி நாவல பகு­தியில் பள்­ளி­வாசல் ஒன்றில் அங்கு வரு­வோ­ருக்கு அடிப்­ப­டை­வா­தத்தை போதிக்க முனைந்­ததால் விரட்­டப்­பட்­டவர் எனவும். அதன் பின்னர் அவர் அங்கு ஒரு வீட்டை வாட­கைக்கு எடுத்து அந் நடவடிக்­கை­களை தொடர்ந்­துள்­ள­தா­கவும் பொலிசார் கூறுகின்றனர். இது குறித்து வெலிக்­கடை பொலிசார் மேல­திக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். 

பாரா­ளு­மன்ற வரைப்­ப­டங்­க­ளுடன் கைதா­ன­வ­ருக்கு மறியல் நீடிப்பு

பாரா­ளு­மன்­றத்­தினுள் பிர­வே­சிப்­ப­தற்­கான 6 அனுமதிப்பத்திரங்களுடன் பலாங்­கொடை – கிரி­மெட்­டி­தென்ன பகு­தியில் கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பரின் விளக்­க­ம­றியல் உத்த­ரவு நேற்று நீடிக்­கப்­பட்­டுள்­ளது. பலாங்­கொடை நீதவான் முன்­னி­லையில் சந்­தே­க­நபர்  ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து, எதிர்­வரும் 23 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­தர்வு பிறப்­பிக்­கப்ப்ட்­டுள்­ளது. 

பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லுக்கு அமைய சந்­தே­க­ந­பரின் வீடு கடந்த ஏபரல்  24 ஆம் திகதி சோதனைக்குட்படுத்தப்பட்டது.இதன்போது, பாராளுமன்றத்திற்குள் பிர­வே­சிப்­ப­தற்­கான திட்ட வரை­படம், 2 ரவைகள், 13 சிம் கார்ட்கள் , 3 கைய­டக்க தொலை­பே­சிகள் மற்றும் கடன் அட்­டைகள் பலவும் கைப்­பற்­றப்­பட்­டன.சந்­தே­க­ந­பரின் வீட்டில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த கெப் வண்­டியை சோதனைக்குட்­ப­டுத்­திய போது, குறித்த கெப் வண்­டியில் போலி இலக்கத் தகடு பொருத்­தப்­பட்­டி­ருந்­த­மையும் கண்­ட­றி­யப்­பட்­டது.

கிரி­மெட்­டி­தென்ன பகு­தியை சேர்ந்த 27 வய­தான இளைஞர் ஒரு­வரே சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

குளி­யா­பிட்­டியில் கைக்­குண்டு மீட்பு

குளி­யா­பிட்டி  பகு­தியில் வீடொன்­றினை புனர் நிர்­மாணம் செய்ய, முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ரிடம் பெற்­றுக்­கொன்­ட­தாக கூறப்­படும் மணலில் இருந்து குண்­டொன்று கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. இலங்கை இரா­ணுவம் பயன்­ப­டுத்­தாத ஒரு வகை குண்டே இவ்வாறு கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. 

 குளி­யா­பிட்டி - நாரம்­மல, கணேன்­க­முவ பகு­தியில் உள்ள வீடொன்­றினை புணர் நிர்­மாணம் செய்ய கொள்­வன்வு செய்யப்பட்ட மணலில் இருந்தே  இக்­குண்டு கைப்பற்றப்பட்டதாக கூற­பப்­டு­கின்­றது. சம்­பவம் தொடர்பில் நாரம்­மல பொலிசார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள நிலையில் மணல் வர்த்­தகர் கைது செய்­யப்ப்ட்­டுள்ளார். 

விமான நிலைய  கட்­டுப்­பா­டு­களில் தளர்வு

விமான நிலை­யத்­திற்குள் பிர­வே­சிப்­ப­தற்கும் அங்­கி­ருந்து வெ ளியே­று­வ­தற்கும் விதிக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுப்­பா­டுகள் சில தளர்த்தப்­பட்­டுள்­ளன.பய­ணிகள் முன்­வைத்த முறைப்­பா­டு­க­ளுக்கு அமைய, இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக விமா­னப்­படை பேச்­சாளர்  குறூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன குறிப்பிட்டார். விமான நிலையத்திற்குள் செல்லும் போதும் அங்கிருத்து . வெளியேறும் போதும் பொதிகளுடன் நீண்ட தூரம் நடந்து செல்ல நேர்வதால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, நேற்று முன் தினம் இரவு  முதல் அமுலாகும் வகையில் வரையறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இனி வழமை போன்று  , பயணிகளின் வாகனங்கள் விமான நிலைய நுழைவாயில் வரை செல்ல முடியும் என அவர் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/55645

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

356 கிராமங்களா?!

எனக்கும் அதே சந்தேகம் வந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

356 கிராமங்களா?!

Kurunegala is a district in North Western ProvinceSri Lanka. Consists of 4812.7 km248,1270 Hectares and Consists 30 Divisional Secretariats, 1610 Grama Niladari Divisions and 4476 total Villages. It consists of 14 Electorate Divisions, 02 Municipal Council, 19 Urban Councils, 15 Parliamentary Ministers, 47 Provincial Council Members, 15 Ministers and 337 Local Council Members

3 hours ago, நீர்வேலியான் said:

எனக்கும் அதே சந்தேகம் வந்தது

4476 கிராமங்கள் மொத்தமாக உள்ள மாவட்டத்தில் 8.3 % சோனகர் வசிக்கின்றனர். 356 கிராமங்கள் 10% க்கும் குறைவுதானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதுளையில் வீட்டு சுரங்கத்தில் பதுங்கி இருந்த 3 பேர் பிடிக்கப்பட்டுள்ளார்கள் வீட்டு  எருமையாளரும் கைது ( அந்த மூவரும் பிரதான சந்தேக நபர்கள் )

ஹக்கீம் வந்து சொல்லுவார் அவர்கள் சுரங்கத்துல் வேலை செய்யுற ஆட்கள் என

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.