Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்!

Tokyo-Olympics-720x450.jpg

ஜப்பானில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பமாகியுள்ளது.

33 விளையாட்டுகளுக்கு டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2,500 யென் தொடங்கி 3,00,000 யென் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளைச் சேர்ந்த இரசிகர்கள் அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் திகதி முதல் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் தங்கள் நாட்டிலேயே டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

www.ticket.tokyo2020. org  என்ற இணையதளத்தில் டிக்கெட் விற்பனை தொடர்பாக விபரங்களை இரசிகர்கள் பார்க்கலாம்.

கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும், 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை, ஜப்பானின் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

206 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில், 33 விளையாட்டுகளில் இருந்து 339 விiளாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் 11,091 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, இந்த ஒலிம்பிக் போட்டிகளில், அண்மையில் வெளிவந்த தகவலின்படி, பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், 7 புதிய விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தவுள்ளன. இதனை சர்வதேச ஒலிம்பிக் குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதேபோல, கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு, ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது

டோக்கியோவில் உள்ள புதிய தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில், 540 பிரிவுகளில் 22 விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன.
………….

அரசின் பெருமளவான நிதியினால் கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கப்பட்டு வரும் பிரமாண்ட விளையாட்டு அரங்குகளின் 60 சதவீதமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கங்கள் பெரும்பாலும் அடுத்த வருடம் நவம்பர் மாதத்துக்கு முன்னதாக, முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், வெப்பத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரங்கத்தின் கூரைகள் மரத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் பார்வையாளர்கள் மற்றும் வீரர்களை குளிர்சியாக வைத்திருக்க முடியுமென வடிவமைப்பாளர்கள் நம்புகின்றனர்.

குறித்த கோடைக்கால ஒலிப்பிக் தொடரில், பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முகத்தின் மூலம் ஒருவரை அடையாளம் காணும் முறைமையை போட்டி அமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தவுள்ளனர்.

 

http://athavannews.com/கோடைக்கால-ஒலிம்பிக்-போட்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இவர்கள் இப்பொது Demalagattara (டெமலா கட்டற) எனும் சாதி பெயரால் அழைக்கப்படும் சிங்களவர்கள். RAW agent, வழுக்கைத்தலை பி.கே பாலச்சந்திரன் , உண்மையிலேயே மொட்டை தான்.   புலமை சார் நேர்மை அற்ற சிங்கள வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆய்வாளளர்கள், பி.கே பாலச்சந்திரன் வழுக்கைத்தலையில்  முட்டை அடித்து, மிளகாய் அரைக்க, அதை வெளியில் சொல்லி தனக்கு தானே கூழ் முட்டை அடித்த   RAW agent, வழுக்கைத்தலை பி.கே பாலச்சந்திரன். கிந்தியாவின் புலனாய்வு எப்படி இருக்கும்?  
  • டோக்யோ ஒலிம்பிக்: லவ்லீனா போர்ஹோகெய்னின் சார்பட்டா வெற்றி சாத்தியமானது எப்படி? வந்தனா பிபிசி இந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, லவ்லீனா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்தார் குத்துச் சண்டை வீராங்கனை லவ்லீனா போர்ஹோகெய்ன். 69 கிலோ வெல்டர்வெயிட் பிரிவின் காலிறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனை சென்-நீன் சென்னை அவர் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அசாம் மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக்கிற்குச் சென்ற முதல் இந்திய மகளிர் குத்துச்சண்டை வீரர் அவர். லவ்லீனா தோற்கடித்த சென், முன்னாள் உலக சாம்பியனாவார். லவ்லீனா இதுவரை பல போட்டிகளில் அவரிடம் தோல்வி அடைந்துள்ளார்.   2018ஆம் ஆண்டில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் லவ்லீனா அவரிடம் தோற்றுப்போனார். இந்தத் தோல்விகளில் இருந்து அவர் இப்போது மீண்டு வந்து வெற்றி பெற்றிருக்கிறார். மைக் டைசன், முகமது அலி பாணியை விரும்புவர் மைக் டைசனின் பாணியை விரும்பும் லவ்லீனாவுக்கு முகமது அலியையும் பிடிக்கும். ஆனால் இது தவிர அவர் தனது சொந்த அடையாளத்தையும் உருவாக்க வேண்டியிருந்தது. சிமோன் பைல்ஸ்: 6 ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை இறுதி போட்டியில் இருந்து விலகியது ஏன்? ஒலிம்பிக் மாரத்தானில் 37ஆவது இடம் பிடித்தவருக்கு ஏன் ராஜ மரியாதை? இந்தியாவின் சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வரும் பல வீரர்களைப் போலவே, 23 வயதான லவ்லீனாவும், பல நிதி நெருக்கடிகளை தாண்டி ஒலிம்பிக்கிற்கு முன்னேறியுள்ளார். அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பாரோ முகியா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் அவர். தந்தை ஒரு சிறு வியாபாரி. தாய் ஒரு இல்லத்தரசி. தந்தையின் மாத வருமானம் மிகவும் குறைவாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, லவ்லீனா லவ்லீனாவுக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூறுவதை புறக்கணித்த இந்த இரட்டை சகோதரிகள் கிக் பாக்ஸிங்கைத் தொடங்கினர். பின்னர் லவ்லீனாவும் கிக் பாக்ஸிங்கில் ஈடுபட்டார். கிக் பாக்ஸிங்கில் இரட்டை சகோதரிகள் தேசிய சாம்பியனானார்கள். ஆனால் லவ்லீனா தனக்கென ஒரு வித்தியாசமான யோசனையைக் கொண்டிருந்தார். ஒரு நாள் செய்தித்தாளில் கட்டப்பட்ட இனிப்புகளை அவரது தந்தை கொண்டுவந்தபோது, அதில் முகமது அலியின் புகைப்படத்தை லவ்லீனா பார்த்தார் .தந்தை முகமது அலியின் கதையை மகளுக்கு விவரித்தார். அப்போதிலிருந்து லவ்லீனாவின் குத்துச்சண்டை பயணம் தொடங்கியது. தொடக்கப்பள்ளியில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேர்வுப்போட்டிகள் நடைபெற்றபோது, பயிற்சியாளர் பதும் போரோவின் 'திறமையை கண்டறியும் பார்வை' லவ்லீனாவின் மீது பட்டது. லவ்லீனாவின் குத்துச்சண்டை பயணம் 2012 ல் தொடங்கியது. ஐந்து ஆண்டுகளில் அவர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கத்தை வென்றார். இந்தியாவில் வேறு வகையான ஒரு பிரச்னையை லவ்லீனா எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது பிரிவில் மிகக் குறைவான பெண் வீரர்களே உள்ளனர். எனவே அவர் பயிற்சி செய்ய 'சண்டையிடும் கூட்டாளர்கள்' கிடைப்பது கஷ்டமாக இருந்தது. பலமுறை 69 கிலோ பிரிவில் இல்லாதவர்களுடன் பயிற்சி செய்யவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, லவ்லீனா ஒலிம்பிக்கிற்கு முந்தைய சில மாதங்கள் அவருக்கு எளிதானதாக இருக்கவில்லை. மற்ற வீரர்கள் பயிற்சியில் மும்முரமாக இருந்தபோது, லவ்லீனாவின் தாயாருக்கு சிறுநீரக மாற்று அறுவை செய்யவேண்டியிருந்தது. எனவே அவர் குத்துச்சண்டையில் இருந்து விலகி தனது தாயுடன் நேரம் செலவிட வேண்டியிருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான், லவ்லீனா மீண்டும் பயிற்சிக்குச் சென்றார். இதன் பின்னர், கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அவர் தனது அறையிலே நீண்ட காலம் பயிற்சி பெற வேண்டியிருந்தது. ஏனெனில் பயிற்சி ஊழியர்களில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த நேரத்தில் அவர் வீடியோ மூலம் தொடர்ந்து பயிற்சி பெற்றார். தண்டு வட சிகிச்சையைத் தாண்டி தங்கம் வென்ற ஆஸ்கர் ஃபிகாரோ காதலால் தேசங்களைக் கடந்த ஒலிம்பிக் வீராங்கனை அவரது பாதையில் பல்வேறு வகையான சிரமங்கள் இருந்தன. ஆனால் லவ்லீனா அவற்றை ஒவ்வொன்றாகக் கடந்துவிட்டார். 2018ஆம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது லவ்லீனாவின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. இது குறித்து ஒரு சர்ச்சையும் அப்போது இருந்தது. காமன்வெல்துக்கு தெரிவு செய்யப்பட்ட விவரம் லவ்லீனாவுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவில்லை என்றும் அவர் செய்தித்தாள்களிலிருந்து தெரிந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. அவரால் காமன்வெல்த் பதக்கத்தை வெல்ல முடியவில்லை. ஆனால் இங்கிருந்து அவர் தனது விளையாட்டின் நுட்பம் பற்றி மட்டுமல்லாமல், மன மற்றும் உளவியல் மீதும் கவனம் செலுத்தத்தொடங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, லவ்லீனா இதன் விளைவை பார்க்க முடிந்தது. 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் தொடர்ந்து இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்றார். டோக்யோ ஒலிம்பிக்கில் சில நாட்களுக்கு முன்பு, மணிப்பூரின் மீராபாய் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெர்றுத்தந்தார். இப்போது வடகிழக்கின் மற்றொரு வீராங்கனையான லவ்லீனா பதக்கம் பெற்றும் வாய்ப்பிற்கு அருகில் உள்ளார். அசாமில் லவ்லீனா பற்றிய பெரும்உற்சாகம் நிலவுகிறது. அசாம் முதல்வரும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களும் இணைந்து லவ்லீனாவுக்கு ஆதரவாக சில நாட்களுக்கு முன்பு ஒரு சைக்கிள் பேரணி நடத்தினர். குறைந்தது இரண்டு முறையாவது ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும், அதன்பின்னர் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் ஆகும் விருப்பம் உள்ளது என்று இந்திய விளையாட்டு ஆணையத்தின் வீடியோவில் லவ்லீனா தெரிவித்திருந்தார். அதாவது, குறைந்தது ஒரு ஒலிம்பிக் பயணமும் பதக்கக் கனவும் அவரிடம் மீதமிருந்தது ஒலிம்பிக்கில், காலிறுதிக்கு முந்தைய போட்டியில் அவர் ஒரு 'பை ' பெற்றார். பின்னர் அவர் ஜெர்மன் வீராங்கனை நதின் அப்டிஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். இப்போது தன்னால் தோற்கடிக்க முடியாமல் இருந்த சீன தைபே வீராங்கனையைத் தோற்கடித்து பதக்கக் கனவை நிறைவேற்றியிருக்கிறார். அவரது அடுத்த இலக்கு தங்கம்தான். https://www.bbc.com/tamil/sport-58022412
  • 3ஆவது டி20I: சொதப்பிய இந்தியா, எளிதில் வென்ற இலங்கை அணி - முக்கிய ஹைலைட்ஸ் 29 ஜூலை 2021, 19:30 GMT பட மூலாதாரம்,TW20I   படக்குறிப்பு, அணி கேப்டன்கள் தசுன் ஷனகா (இலங்கை), ஷிகர் தவான் (இந்தியா) இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 இன்டர்நேஷனல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தலா ஒரு வெற்றி பெற்று இரண்டும் சமநிலையில் இருந்தன. இந்த நிலையில், வெற்றி அணியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி வியாழக்கிழமை கொழும்பு பிரேமதாசா விளையாட்டரங்கில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்து களமாடியது. ஆனால், தொடக்கம் முதலே இறங்குமுகமாக இருந்த இந்திய அணி கெய்க்வாட், அணி கேப்டன் ஷிகர் தவான் இணையில் ஐந்து ரன்கள் எடுத்தது. ஒரு ரன் கூட எடுக்காமல் தவான் டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய வீரர்களின் ஆட்டமும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. கொரோனா காரணமாக ஐந்து பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கிய இந்திய அணி, 5 ஓவரில், 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 6 வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர், பேட்டிங் செய்ய களமிறங்கினார். அடுத்த சில நிமிடத்தில் நிதிஷ் ராணா (6) அவுட் ஆனார். பேட்ஸ்மென்களில் 8 பேர் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ருத்ராய் கெய்க்வாட் 19, குல்தீப் 23, புவனேஷ்குமார் 15 ரன்களை எடுத்திருந்தனர். இப்படியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களை குவித்திருந்தது. குல்தீப்பும் ஐந்து எடுத்திருந்த சக்காரியாவும் அவுட் ஆகாமல் இருந்தனர்.   ஐபிஎல் 2021: சிஎஸ்கே Vs மும்பை அணி மோதலுடன் செப்டம்பரில் போட்டி - அட்டவணை இதோ IND vs ENG: கடைசி டி20 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றிய இந்தியா இதையடுத்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மைதானத்தில் களமாடிய இலங்கை அணி, தொடக்கத்தில் சுமாராக ஆடினாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டது. இந்திய அணி பந்து வீச்சாளர் ராகுல் சஹார் பந்து வீச்சில் இலங்கை தொடக்க ஆட்டக்காரர்கள் அவிஷிங்கா 18 வந்துகளில் 12 ரன்களுடனும் மினோத் பானுகா 27 பந்துகளில் 18 ரன்களுடனும் வெளியேறினர். சதீரா சமரவிக்ரமா 13 பந்துகளில் 6 ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் சென்றார். ஆனால், பின்னர் நுழைந்த தனஞ்செய, ஹசரங்கா ஜோடி 14.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய இந்த ஜோடியில் தனஞ்செய 20 பந்துகளில் 23 ரன்களையும் ஹசரங்கா 9 பந்துகளில் 14 ரன்களையும் எடுத்தனர். இந்திய வீரர் ராகுல் சஹார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இந்த போட்டியில் இலங்கை தரப்பில் சிறந்த ஆட்ட நாயகனாக ஹசரங்கா, சிறந்த பேட்ஸ்மேனாக தனஞ்செய டி சில்வாவும், இந்தியா தரப்பில் குல்தீப் யாதவும் சிறந்த பெளலராக ராகுல் சாஹரும் தேர்வாகினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 2க்கு 1 என்ற கணக்கில் வென்றிருக்கிறது. சிறப்புகள் என்ன? பட மூலாதாரம்,SRILANKA CRICKET 2021 ஜூலை 29, ஆட்ட நாள்தான் இலங்கை வீரர் ஹசரங்காவின் 24ஆவது பிறந்த தினம். அதனால், ஆட்டம் தொடங்கும் முன்பிருந்தே அவருக்கு ரசிகர்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து உற்சாகமூட்டினர். வலது கை ஸ்பின்னரான ஹசரங்கா, டி20ஐ பெளலர்கள் வரிசையில் இரண்டாமிடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார். ஒட்டுமொத்த 20 ஓவர்கள் கொண்ட இன்னிங்ஸில் நான்கு பவுண்டரிகளை மட்டுமே இந்திய அணி அடித்திருக்கிறது. பட மூலாதாரம்,SRILANKA CRICKET   படக்குறிப்பு, இலங்கை கிரிக்கெட் அணி டி20 இன்டர்நேஷனல் வரலாற்றில் இந்தியாவை முதல் முறையாக இலங்கை வீழ்த்தியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று தடுப்பு வழிகாட்டுதல்கள் காரணமாக இந்திய வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனோ முடிவு பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து, அவருடன் நெருங்கிப் பழகியதாக அறியப்பட்ட வீரர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் நெகட்டிவ் என முடிவுகள் வந்த வீரர்கள் மட்டுமே ஆடுகளத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். டி20 இன்டர்நேஷனல் போட்டியில் இந்த அளவுக்கு மோசமாக இந்தியா ஆடியது இது மூன்றாவது முறை. இதற்கு முன்பு இந்தியா 2008இல் ஆஸ்திரேலியாவுடன் மோதி 74 ரன்களை குவித்தது. அதன் பிறகு 2016இல் நியூசிலாந்துடன் மோதி 79 ரன்களை எடுத்திருந்தது. https://www.bbc.com/tamil/sport-58020525 https://www.bbc.com/tamil/sport-58020525
  • ஓர் RAW agent, புலமை சார் நேர்மை அற்ற சிங்கள வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்களோடு சேர்ந்து,   ஈழததமிழருக்கு இலங்கைத் தீவில் பூர்விகம் இல்லை என்று நிறுவ முயற்செய்கிறார். பாவம் RAW agent, மகாவம்சம் கூட சிங்கள இனம், மக்கள், ஏன் சிங்களம் எனும் சொல்லை கூட சொல்லவில்லை.  ஆனால், மகாவம்சம், தமிழர் என்பதை டெமேல (Demela) என்று இழிவாக பாவித்து, திட்டி கொட்டி இருக்கிறது. 
  • Olga Fikotova: காதலால் தேசங்களைக் கடந்த ஒலிம்பிக் வீராங்கனை - கெளரவித்து அழகு பார்த்த அமெரிக்கா 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 1956. உலகம் அமெரிக்கா மற்றும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா என இரு பெரும் நாடுகளுக்குப் பின் வரிசை கட்டி நின்று கொண்டிருந்த கால கட்டமது. இன்று செக் குடியரசாக இருக்கும் நாடு, அன்று செக்கோஸ்லோவாக்கியாவாக இருந்தது. அந்நாட்டைச் சேர்ந்த சுமார் ஆறு அடி உயரம், அஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஒரு பெண் மருத்துவ கல்லூரி மாணவிக்கு விளையாட்டின் மீது அதீத காதல் இருந்தது. அவர் பெயர் ஓல்கா ஃபிகொடோவா (Olga Fikotova). கல்லூரியில் படித்த கொண்டிருந்த போது வட்டு எறிதல் (Discuss Throw) அவரை வெகுவாக ஈர்க்க, அதை தன் பாணியில் வீசத் தொடங்கினார்.   நல்ல உடல் வலுவும், திறனும் இருப்பதை அவரது பயிற்றுநர் அடையாளம் கண்டார். ஆனால் அவரிடம் வட்டு எறியும் ஒரு ரிதம் மட்டும் சரியாக அமையவில்லை. வட்டு எறிதலுக்கோ அந்த ரிதம் தான் அத்தனை அவசியமானது. அதையும் ஓல்கா மெல்ல சரி செய்து கொண்டார். 1955ஆம் ஆண்டில் அவர் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அவரை மேற்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளுக்குத் தயார் செய்ய, ரஷ்யாவின் முன்னாள் ஒலிம்பிக் வட்டு எறிதல் வீராங்கனையே களமிறங்கினார். ஒரு கட்டத்தில் குருவை மிஞ்சிய சீடராக உருவெடுத்தார். அப்படியே ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவும் தகுதி பெற்றார். 1956 ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் செக்கோஸ்லோவாக்கியா நாட்டுக்காக போட்டியிட்டு தங்கப் பதக்கம் வென்றார். கட்டுரை அவ்வளவு தானா? அதான் ஒலிம்பிக்கில் தங்கம் ஜெயித்துவிட்டாரே என கேட்கிறீர்களா? பட மூலாதாரம்,GETTY IMAGES இனி தான் கதையே ஆரம்பம். தங்க மங்கை ஓல்கா ஃபிகொடோவாவுக்கு, மெல்பர்னில் ஒலிம்பிக் போட்டிகளில் ஹேமர் த்ரோ போட்டியில் அமெரிக்கா சார்பாக கலந்து கொண்டு தங்கம் வென்ற ஹரால்ட் கானொலி உடன் காதல் ஏற்பட்டது. மெல்பர்ன் முழுக்க காதலோடு சுற்றித் திரிந்தனர். செக்கோஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த ஓல்கா மழலை ஆங்கிலத்தில் பேசி காதல் செய்தார் என்கிறது ஒலிம்பிக்ஸ் சேனல். மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. இருவரும் தங்கள் நாடுகளுக்குச் செல்ல வேண்டிய தருணம் வந்தது. ஒலிம்பிக் மாரத்தானில் 37ஆவது இடம் பிடித்தவருக்கு ஏன் ராஜ மரியாதை? தண்டு வட சிகிச்சையைத் தாண்டி தங்கம் வென்ற ஆஸ்கர் ஃபிகாரோ ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். இவர்களது காதலை, அவர்களது வீட்டார் எதித்தார்களோ இல்லையோ, செக்கோஸ்லோவாக்கியா கடுமையாக எதிர்த்தது. ஹரால்டை திருமணம் செய்து கொண்டால், இனி தன் செக்கோஸ்லோவாக்கியா நாட்டுக்காக விளையாடவே முடியாது என ஓல்கா ஃபிகொடோவாவை அச்சுறுத்தியது. பல கட்ட பிரச்சனைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, ஓல்கா ஃபிகொடோவா, ஹரால்ட் கானொலியை மணந்து அமெரிக்காவில் குடியேறினார். செக்கோஸ்லோவாக்கியாவும், ஓல்காவை அச்சுறுத்தியதோடு நிற்காமல், அவர் மீண்டும் செக்கோஸ்லோவாக்கியாவுக்காக விளையாட முடியாத படி செய்தது. பிறந்த நாடான செக்கோஸ்லோவாக்கியா கைவிரித்தாலும், மாப்பிள்ளை கொடுத்த புகுந்த நாடான அமெரிக்கா அவரை அன்போடு வரவேற்றது. அதோடு தன் நாட்டின் சார்பாகவும் விளையாட அனுமதித்தது அமெரிக்கா. பட மூலாதாரம்,GETTY IMAGES 1956-க்குப் பிறகு 1960, 1964, 1968, 1972 என நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவுக்காக விளையாடினார். தேசங்களைக் கடந்து நட்பும், அமைதியும் பரவ வேண்டும் என்பது தானே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நோக்கமும். அதை தன் வாழ்கை வழி நடத்திக் காட்டியவர் ஓல்கா ஃபிகொடோவா. இதை எல்லாம் விட 1972 ஒலிம்பிக் போட்டிகளின் போது, அமெரிக்க தேசிய கொடியை ஏந்தி, அமெரிக்க அணியை வழிநடத்திச் செல்லும் பெருமையை ஓல்காவுக்கு வழங்கி கெளரவித்தது அமெரிக்கா. இப்போது ஒரு முழு அமெரிக்கராகவே வாழ்ந்து வருகிறார் ஓல்கா. அவரது மகன் அமெரிக்காவில் தேசிய அளவில் ஒரு பெரிய ஈட்டி எறிதல் வீரராகவும், அவரது மகள் அமெரிக்காவின் கைப்பந்து அணியில் ஒரு வீராங்கனையாகவும் வளர்ந்தனர் என்கிறது ஒலிம்பிக்ஸ்.காம் என்கிற வலைதளம். 'தி ரிங்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்கிற பெயரில் தன் காதல் கதை குறித்து ஒரு புத்தகமே எழுதியுள்ளார் ஓல்கா கானொலி ஃபிகடோவா. இன்று வரை எத்தனையோ காதல் கதைகள் ஒலிம்பிக் போட்டிகளைச் சுற்றி நிகழ்ந்தாலும், அத்தனை காதல் கதைகளுக்கும் முத்தாய்ப்பாய் மணி மகுடமாய் திகழ்வது, ஓல்கா - ஹரால்ட் காதல் கதை தான் என்றால் அது மிகையல்ல. அன்பை அளவிட பதக்கங்கள் உண்டா என்ன? https://www.bbc.com/tamil/sport-58019451
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.