பா. சதீஷ் குமார்

ஆதித்த கரிகாலன் படுகொலை வழக்கு

Recommended Posts

அத்தியாயம் 1

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கொலை வழக்கை இந்த 21ம் நூற்றாண்டில் போஸ்ட் மார்ட்டம் செய்ய காரணமிருக்கிறது.ம்ஹும். அமரர் கல்கி எழுதிய என்றும் பெஸ்ட் செல்லர் பட்டியலில் இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் இப்போது இரு பாகங்கள் கொண்ட திரைப்படமாக எடுக்க முயற்சி செய்கிறார் என்பதால் அல்ல!
19.jpg
பிறகு எதற்காக இப்போது..? 
சுவாரஸ்யத்துக்காகத்தான்! பின்னே... தமிழகத்தின் பெருமை வாய்ந்த வரலாறாகச் சொல்லப்படும் பிற்காலச் சோழ அரசின் காலத்தில், இளவரசராக பட்டம் ஏற்று மன்னராக முடிசூட இருந்த ஆதித்த கரிகாலன் தன் 28வது வயதில் படுகொலை செய்யப்பட்டார் என்பதும், அதற்கான காரணம் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது என்பதும் எப்பேர்ப்பட்ட க்ரைம் ஸ்ேடாரி!

முதலில் அமரர் கல்கிக்கு நன்றி. வெறும் வரலாற்றுப் பேராசிரியர்கள் மத்தியில் மட்டுமே பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்த இந்த ஆதித்த கரிகாலன் கொலை வழக்கை தன் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலின் அடிநாதமாக வைத்து பொதுமக்களின் பார்வைக்குக்  கொண்டு வந்ததற்காக.

பிறகு இந்த நாவலை அடியொற்றி அமரர் விக்கிரமன், ‘நந்திபுரத்து நாயகி’ என்னும் புதினத்தை எழுதினார்.இவ்விரு நாவல்களுமே ஜஸ்ட் ஆதித்த கரிகாலனின் கொலையை ஊறுகாய் ஆக மட்டுமே பயன்படுத்தி இருக்கின்றன. இதற்காக அமரர் கல்கியையோ விக்கிரமனையோ குறை சொல்ல முடியாது. அவர்கள் காலத்தில் இருந்த வரலாற்றுப் பேராசிரியர்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்களை வைத்து எழுதிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு ‘பொன்னியின் செல்வனை’யும், ‘நந்திபுரத்து நாயகி’யையும் எழுதினார்கள்.

இன்று வரலாற்றுச் சான்றுகள் ஏராளமாகக் கிடைத்துள்ள நிலையில் இன்னும் நெருக்கமாக இந்தக் கொலை வழக்கை ஆராய வேண்டியிருக்கிறது. ‘காலச்சக்கரம்’ நரசிம்மா இதைத்தான் ‘வானதி’ பதிப்பகம் வெளியிட்டுள்ள தனது ‘சங்கதாரா’ நாவலில் அட்டகாசமாகச் செய்திருக்கிறார்! 
ரைட். ஆதித்த கரிகாலன் யார்..? அவருக்கும் சோழ அரச குடும்பத்துக்கும் என்ன உறவு..?

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியிருக்கிறார் அல்லவா ராஜ ராஜ சோழன்... அவரது அண்ணன்தான் இந்த ஆதித்தகரிகாலன். நியாயமாகப் பார்த்தால் இந்த ஆதித்த கரிகாலன்தான் சுந்தரசோழருக்குப் பிறகு சோழ மன்னராகி இருக்க வேண்டும்! இதன் ஒருபடியாக இவருக்கு இளவரசர் பட்டமும் சூட்டப்பட்டிருந்தது! 

இந்தச் சூழலில்தான் ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டார்! இதனையடுத்து யார் சோழ மன்னராவது என கேள்வி எழ... சுந்தர சோழரின் அண்ணன் கண்டராதித்தரின் மகன் உத்தம சோழன் - ராஜராஜ சோழனின் பெரியப்பா மகன் - பட்டத்துக்கு வந்தார்.

இந்த உத்தம சோழரின் காலத்துக்குப் பிறகே ராஜராஜ சோழன் மன்னராக அரியணை ஏறினார். இவருக்குப் பின் இவரது மகன் ராஜேந்திர சோழன் பட்டத்துக்கு வந்தார் என்பதெல்லாம் வரலாறு.இந்த ஹிஸ்டரி எல்லாம் இங்கு வேண்டாம். நேரடியாக ஆதித்த கரிகாலனின் கொலை வழக்குக்குச் சென்றுவிடலாம்! முன்பாக Reading Between Lines ஆக வரலாற்றில் இருக்கும் சில கேள்விகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.

‘வானுலகைப் பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான். உலகில் கலி என்னும் காரிருள் சூழ்ந்தது...’
என்று திருவாலங்காட்டு செப்பேடுகளில் ஆதித்த கரிகாலனின் கொலையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. புருவத்தை உயர்த்துவதும் இதுதான். ஏனெனில் இளவரசர்களுக்கு எல்லாம் சோழ நாட்டின்மீது ஆசை இருக்கும்போது ஆதித்த கரிகாலனுக்கு மட்டும் வானுலகம் மீது எப்படி ஆசை இருந்திருக்க முடியும்?!

அடுத்து, இந்த படுகொலை ரவிதாஸன் என்பவரின் தலைமையில் நடைபெற்றது என்கிறது கல்வெட்டு ஆதாரங்கள். நாவலின் சுவைக்காக இந்த ரவிதாஸனை பாண்டிய நாட்டின் ஆபத்துதவிகளில் ஒருவராக அமரர் கல்கி தனது ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வடிவமைத்திருக்கிறார்.
உண்மையில் ரவிதாஸன் பாண்டிய நாட்டு ஆபத்துதவி அல்ல! எனில் அவர் யார்?

உடையார் கோயில் கல்வெட்டில் (முதல் யாத்திரை) ஆதித்த கரிகாலனைக் கொன்றதைப் பற்றிக் குறிப்பிடுகையில் -
‘துரோகிகளான ரவிதாஸனாகிய பஞ்சவன் பிரும்மாதிராயன், அவன் உடன்பிறந்தோன் சோமன் சாம்பவன்...’ என செதுக்கப்பட்டுள்ளது. இதை அடிக்கோடிட்டு வாசிக்க வேண்டும். ஒரு நாட்டுக்கு, அந்த நாட்டைச் சேர்ந்தவன்தான் துரோகம் செய்ய முடியும். அண்டை நாட்டுக்காரன் பகைவன் அல்லது விரோதிதான். இது கல்வெட்டை செதுக்கியிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். அறிந்தே  துரோகம் என குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றால்... யெஸ். சோழ அரச குலத்தைச் சேர்ந்தவர்தான் ரவிதாஸன்!

காதில் பூ சுற்றவில்லை. சுந்தர சோழர் காலத்தில் சோழ நாட்டின் அமைச்சராக இருந்த அநிருத்தர் பிரும்மராயர் ஓய்வு பெற்றபிறகு இந்த ரவிதாஸனுக்கு - சோழ இளவரசரை படுகொலை செய்த வழக்கின் A1 குற்றவாளியான ரவிதாஸனுக்கு - சோழ அரசில் பெரும் பதவி அளிக்கப்பட்டது! இதன் காரணமாகவே ‘பஞ்சவன் பிரும்மாதி ராயன்’ என்று பெருமையுடன் ரவிதாஸன் அழைக்கப்பட்டார்! 

‘பிரும்மாதிராயன்’ என்பது சோழ அரசில் பெரும் பதவியில் உள்ள அந்தணர்களைத்தான் குறிக்கும்! அநிருத்தரும் பிரம்மாதிராயன் என்றே அழைக்கப்பட்டார் என்பதை இங்கு நினைவு கூர்வது நல்லது!

இதை அடிப்படையாக வைத்தே சில சரித்திர ஆசிரியர்கள் ரவிதாஸன் அந்தணனாக இருந்ததாலேயே சோழ நாட்டின் நீதிப்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்கிறார்கள்.எனில், சோழர்கள் படையெடுத்துச் சென்றபோதெல்லாம் அண்டை நாட்டில் இருந்த அந்தணர்களையும், பெண்களையும் கொன்று குவித்தனரே... இதெல்லாம் எதில் சேரும்? சொந்த நாட்டு அந்தணர்களைத்தான் கொல்லக் கூடாது... எதிரி நாட்டு அந்தணர்களைக் கொல்லலாம் என இதை எடுத்துக் கொள்ளலாமா?! அந்தணர்களைக் கொன்றதால் ஏற்பட்ட ‘சோழ பிரும்ம ஹத்தி’ என்கிற பாபத்தைக்கழிக்கவே அரச குடும்பத்தினர் பல விண்ணகரங்களையும் சிவாலயங்களையும் எழுப்பினார்கள் எனக் கருதலாமா?!  

போலவே ஆதித்த கரிகாலனின் தந்தையார் சுந்தர சோழருக்குப் பிறகு பதவிக்கு வந்த கண்டராதித்த தேவரின் மகன் உத்தம சோழன்தான் ஆள் வைத்து ஆதித்த கரிகாலனைக் கொலை செய்ததாக வேறு சிலர் சொல்கிறார்கள்.ஒரு வாதத்துக்காக அப்படி என்றே வைத்துக் கொள்வோம். ரவிதாஸனைக்  கொண்டு ஆதித்த கரிகாலனை உத்தம சோழர் கொலை செய்தார் என்றால், தான் பதவிக்கு வந்ததும் அவருக்கு அரச பதவி கொடுத்து ஏன் உத்தமசோழர் மரியாதை செய்தார்..? மக்கள் மனதில் இது சந்தேகத்தை எழுப்பியிருக்காதா?

இந்த உத்தம சோழருக்குப் பிறகு பதவிக்கு வந்த அருண்மொழி என்கிற ராஜராஜ சோழன், தன் அண்ணனான ஆதித்த கரிகாலனைக் கொன்ற ரவிதாஸனுக்கும் மற்றவர்களுக்கும் மரண தண்டனை விதிக்காததன் காரணம் அவர் அந்தணராக இருந்ததுதான்... இதனாலேயே ரவிதாஸனின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து, உடுத்திய ஆடையுடன் அவரது மொத்தக் குடும்பத்தையும் நாடு கடத்தினார் என்கிறார்கள். 

இதை ஏற்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது! ஏனெனில் சோழ அரச குடும்பத்தின் அடைமொழிச் சொல்லான ‘பஞ்சவன்’ என்ற விருதுப் பெயருடனேயே ரவிதாஸன் அழைக்கப்பட்டிருக்கிறார்! அந்தணர்களுக்கு இப்பட்டத்தை வழங்கும் வழக்கமில்லை! 

இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், ரவிதாஸன் அந்தணராக இருக்க வாய்ப்பில்லை என்று தெரியும்! எனில், ராஜராஜ சோழன் ஏன் ரவிதாஸன் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவில்லை?!

Cut to - ரவி என்கிற வடமொழிச் சொல்லுக்கு ஆதித்தன், கதிரவன், பிங்களன்... என பல அர்த்தங்கள் உண்டு என்பதை கவனத்தில் கொள்வது நல்லது!ரைட். ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்..? ஏன் இந்தக் கொலை நடந்தது..? எந்த இடத்தில் நடைபெற்றது..?

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15309&id1=6&issue=20190510

Share this post

Link to post
Share on other sites

ஆதித்த கரிகாலன் படுகொலைவழக்கு ... இதற்கவே மீண்டும் ஒரு முறை பொன்னியின் செல்வனை படிக்க ஆரம்பித்துள்ளேன்.. 

தொடருங்கள்.. 

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆதித்த கரிகாலன் படுகொலைவழக்கு ... இதற்கவே மீண்டும் ஒரு முறை பொன்னியின் செல்வனை படிக்க ஆரம்பித்துள்ளேன்.. 

தொடருங்கள்.. 

எத்தனையாவது முறை?

Share this post

Link to post
Share on other sites
On 5/11/2019 at 9:10 PM, ரஞ்சித் said:

எத்தனையாவது முறை?

மூன்றாவது 😊

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

இந்த நாவல்கள் உண்மையிலேயே சரித்திரத்தில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களா? அல்லது ஆசிரியரின் கற்பனையில் உதித்தவையா என்பதுபற்று விளக்கம் இருக்கவில்லை. சில விடயங்கள் நடந்திருக்கலாம் போல் தோன்றுகிறது.

Share this post

Link to post
Share on other sites
On 5/13/2019 at 9:47 AM, ரஞ்சித் said:

இந்த நாவல்கள் உண்மையிலேயே சரித்திரத்தில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களா? அல்லது ஆசிரியரின் கற்பனையில் உதித்தவையா என்பதுபற்று விளக்கம் இருக்கவில்லை. சில விடயங்கள் நடந்திருக்கலாம் போல் தோன்றுகிறது

இந்த பொன்னியின் செல்வனும் சரி , பெரும்பாலான சரித்திர நாவல்களும் சரி உண்மையான சம்பவங்களே. அதே சமயம் கதைக்கு மெருகூட்டுவதற்கு சில கற்பனை கதாபாத்திரங்களையும் உருவாக்கி இந்த கதைகளில் உலாவ விடுவதும் உண்டு. அத்தோடு சரித்திர நாவல்களை எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்கள், அவை பற்றிய ஆதாரங்கள், கல்வெட்டு குறிப்புக்கள் ஆகியவற்றையும் கற்பனை கதாபாத்திரங்களையும் முன்னுரையிலும் அத்தியாங்களின் இடையிலும் குறிப்பிடுவது வழமை. 

இந்த கதை இப்பொழுதானே ஆரம்பித்துள்ளது, ஆகையால் இந்த தொடரை தொடருங்கள் உங்களுடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்...

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

தமிழ் இலக்கியங்களைப் புரிந்துகொள்ளுமளவிற்கு தமிழறிவோ, ஆர்வமோ என்னிடத்தில் இல்லை. இப்படி யாராவது தாம் படித்ததைப் பகிரும்போது பார்ப்பதுடன் எனது ஆர்வமும் அடங்கிவிடும். 

சிலவேளைகளில், இவ்வளவு உயர் நிலையிலிருந்த தமிழினம் இப்படியிருக்கிறதே என்கிற அங்கலாய்ப்பும், அதனூடு கழிவிரக்கமும் ஏற்பட்டுவிடுகிறது.

நீங்கள் தொடருங்கள். நேரம் கிடைக்கும்போது எட்டிப்பார்க்கிறேன்.

Share this post

Link to post
Share on other sites

நான் எல்லாம் பொன்னியின் செல்வன்  5-7 தடவைகள் படித்துள்ளேன் புத்தகமாக 3 தடவைகளும் அப்ஸ்ல 4 தடவைகளிற்குமேலுமாக.:) 

சங்கதாராவில் வில்லியாக்கப்படுபவர் குந்தவை , பொன்னியின் செல்வனில் அழகும் அறிவும் மிகுந்த சோழகுலத்தையே பின்னிருந்து இயக்குபவராகவும் சோழப்பேரரசன்  ராஜேந்திரசோழனை அவனின் இளமைக்காலத்திலிருந்து  வளர்த்து அவனில் பேரரசின் கனவை விதைத்த ஒரு மதிநுட்பம் நிறைந்த ஒரு கதாநாயகியை வில்லியாக்குகின்றார். ராஜராஜசோழனை குந்தவியின் மகனாக்கிறார் சங்கதாராவில 

பொன்னியின் செல்வனின் வாசகர்களிற்கு சங்கதாரா சிறிதும் கூட ரசிக்கும்படி இருக்காது 

மணிரத்னம் படம் எடுத்தாலும் நேரடியாக எடுக்க மாட்டார் .சத்தியவான் சாவித்ரி சுட்டு ரோஜா, மகாபாரதததை  சுட்டு தளபதி,இராமயணம் "ராவணன்"  போன்று தான் இதையும்  உல்டா பண்ணுவார் 

ஆனால் பொன்னியின் செல்வன வெப்சீரிஸ் ஆக எடுக்க ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யாவை பிரபலநிறுவனம் அணுகி உள்ளதாகவும் அதுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெறுவதாகவும் செய்தி 

ஐ.நா சபையில் ஆடிய பரதநாட்டியம் போல பொன்னியின் செல்வன் வெப்சீரிஸ் ஆகாமல் இருக்க இப்போதிருந்தே இறைவனை வேண்டுகிறேன் 

Share this post

Link to post
Share on other sites

2. ஆதித்த கரிகாலனை கொலை செய்தது குந்தவையா...?!

தலைப்புக்கான காரணத்தைப் பார்க்கும் முன் ஓர் எட்டு பிற்காலச் சோழர்களின் Blood line - இரத்த உறவை - பார்த்துவிடலாம். ம்ஹும். டிரவுசர் கிழியும் அளவுக்கு எல்லாம் ஹிஸ்டரியை இங்கே போதிக்கப் போவதில்லை! ஜஸ்ட் நுனிப்புல்தான்!இந்த பிற்காலச் சோழர் பரம்பரை விஜயாலய சோழனிடம் இருந்து தொடங்குகிறது. 
31.jpg
இந்த விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன். இவருக்கு இளங்கோ பிச்சி, பல்லவ திரிபுவனதேவி என இரு மனைவிகள். இதில் மூத்தவரான இளங்கோ பிச்சிக்கு பிறந்தவர் கன்னரதேவன். ஆனால், இவருக்கு சோழ அரியணை மறுக்கப்பட்டது. பதிலாக இரண்டாவது மனைவியான பல்லவ திரிபுவனதேவியின் மகன் பராந்தக சோழர் அரியணை ஏறினார்!

இந்த பராந்தக சோழருக்கு கோக்கிழானடிகள், பழுவூர் அரசி என இரு மனைவிகள்.இதில் முதல் மனைவியான கோக்கிழானடிகளுக்குப் பிறந்தவர்கள் இராஜாதித்யன், கண்டராதித்தன் ஆகிய இருவர். இவர்களில் முதல் மகனான இராஜாதித்யன், தக்கோலம் போரில் இறந்தார் அல்லது கொல்லப்பட்டார்.

இரண்டாவது மனைவியான பழுவூர் அரசி வழியே பராந்தக சோழருக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். மூத்தவர் அரிஞ்சய சோழர். இரண்டாவதாகப் பிறந்தவர் உத்தமசீலி. இதில் இரண்டாவது மகனான உத்தமசீலியின் தலையையே போரில் பாண்டிய மன்னரான வீரபாண்டியன் சீவினார். இதற்குப் பழிவாங்கவே அதே வீரபாண்டியனின் தலையைக் கொய்தார் ஆதித்த கரிகாலன். 

இந்த ஆதித்த கரிகாலன், சுந்தர சோழரின் மகன். சுந்தர சோழர் யார்? பராந்தக சோழருக்கும் அவரது இரண்டாவது மனைவியான பழுவூர் அரசிக்கும் பிறந்த முதல் மகனான அரிஞ்சய சோழரின் புதல்வர். சுந்தர சோழருக்கும் வானவன் மாதேவிக்கும் மூன்று பிள்ளைகள். அதில் மூத்தவரே ஆதித்த கரிகாலன். அடுத்தது குந்தவை. மூன்றாவதாகப் பிறந்தவரே பின்னாளில் ராஜராஜ சோழனாகப் பதவி ஏற்ற அருண்மொழி. இந்த ராஜராஜ சோழனுக்குப் பிறகு சோழ சிம்மாசனத்தில் அமர்ந்தவர் இராஜேந்திர சோழன்.

இந்த இரத்த உறவுகள் எல்லாம் பராந்தக சோழனுக்கும் அவரது இரண்டாவது மனைவியான பழுவூர் அரசிக்கும் உரியது.எனில் அதே பராந்தக சோழனுக்கும் அவரது முதல் மனைவியான கோக்கிழானடிகளுக்கும் உரிய Blood line?முன்பே சொன்னபடி இவர்களது முதல் மகனான இராஜாதித்யன் தக்கோலம் போரில் இறந்துவிட்டார். இரண்டாவது மகனான கண்டராதித்தன், செம்பியன் மாதேவியை மணந்து சில ஆண்டுகள் சோழ மன்னராக இருந்தார். இவர்களுக்கு வாரிசு இல்லாததால், தன் தம்பியும் - தனது சிற்றன்னையின் மூத்த மகனுமான அரிஞ்சயருக்கு இளவரசு பட்டம் சூட்டிவிட்டு சிவப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 

பட்டத்துக்கு வந்த அரிஞ்சயர், தன் மகனான சுந்தர சோழருக்கு இளவரசர் பட்டம் சூட்டினார். ஆக, அரிஞ்சயர் மறைந்ததும் சுந்தர சோழர் பட்டத்துக்கு வந்தார்!ஆனால், அரிஞ்சயர் பட்டத்துக்கு வந்து மறைந்து... பிறகு அவர் மகன் சுந்தர சோழர் அரியணை ஏறியபோது -
ஒரு திருப்பம் ஏற்பட்டது! யெஸ். சோழ மன்னர் பதவியே வேண்டாம் என முடிவு செய்து சிவனடியாராக வாழத் தொடங்கிய கண்டராதித்தர் - செம்பியன் மாதேவி தம்பதிகளுக்கு அவர்களது இறுதிக் காலத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தையே பின்னாளில் சுந்தர சோழருக்கு பிறகு பட்டம் ஏறிய உத்தம சோழன்!

ஆனால், இந்த உத்தம சோழன் அரியணையில் ஏறியது கூட எதிர்பாராத வகையில்தான்! ஏனெனில் சோழ மன்னராக அப்போது இருந்த சுந்தர சோழர், நியாயமாகப் பட்டத்துக்கு வர வேண்டிய கண்டராதித்தரின் மகன் உத்தம சோழனுக்கு இளவரசு பட்டம் சூட்டவில்லை. பதிலாக தன் மகன் ஆதித்த கரிகாலனுக்குத்தான் இளவரசு பட்டத்தை சூட்டினார்!

இப்படி பட்டம் சூட்டப்பட்ட ஆதித்த கரிகாலன்தான் படுகொலை செய்யப்பட்டார். இதன்பிறகே நியாயமாக பட்டத்துக்கு வரவேண்டிய உத்தம சோழன் அரியணை ஏறினார்.ஆனால், இந்த உத்தம சோழனுக்குப் பிறகு சோழ மன்னராக முடிசூட வேண்டிய இவரது மகன் புறக்கணிக்கப்பட்டார். பதிலாக சுந்தர சோழரின் இரண்டாவது மகனும் ஆதித்த கரிகாலனின் தம்பியுமான அருண்மொழி என்கிற ராஜராஜசோழன் பட்டத்துக்கு வந்தார்.
இந்த ராஜராஜ சோழன் காலத்தில் ஆலய அதிகாரியாக உத்தம சோழனின் மகன் இருந்தார்! ஆலயத் திருப்பணிகளில் இவர் ஊழல் செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு ராஜராஜ சோழனால் இவர் - உத்தம சோழனின் மகன் - தண்டிக்கப்பட்டார்! 

எனவே ராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன் அரியணை ஏற இருந்த எல்லா தடைகளும் அகற்றப்பட்டன! இதுதான் பிற்காலச் சோழர்களின் பரம்பரை.கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது ஓர் உண்மை பளிச்சிடும். அதாவது விஜயாலய சோழரின் Blood lineல் மூத்த  மகன்களுக்கு மகுடம் கிட்டவில்லை! கன்னர தேவன், இராஜாதித்யன், ஆதித்த  கரிகாலன் ஆகியோர் இதற்கு உதாரணங்கள். இது ஏன் என்பதற்கான காரணத்தை கதாசிரியர்கள் ஆராய்ந்து தனி நாவல்களாக எழுதட்டும்!

இப்போது நம் இலக்கு ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது யார் என்பதை போஸ்ட் மார்ட்டம் செய்வதுதான்.
ரைட். பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளா ஆதித்த கரிகாலனைக் கொன்றது..?

இல்லை என்பதே இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் சொல்பவை. ஒருவேளை உதவி புரிந்திருக்கலாம். ஆனால், கொன்றது இவர்கள் அல்ல.
எனில் ஆதித்த கரிகாலனின் இளைய சகோதரியும் ராஜராஜ சோழனின் அக்காவுமான குந்தவையின் கணவர் வந்தியத்
தேவன்தான் கொன்றாரா..?

சரித்திர ஆதாரங்களே இதற்கு விடையளிக்கின்றன. ஆம் என திட்டவட்டமாகச் சொல்லாமல் உதவினார் என்ற தொனியில்! ஏனெனில், ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டபிறகு பட்டத்துக்கு வந்த கண்டராதித்தரின் மகன் உத்தம சோழரின் காலத்தில் சில ஆண்டுகள் - 12 ஆண்டுகள் என்கிறார்கள் - வந்தியத்தேவன் சிறையில் அடைக்கப்பட்டார். 

அதே ஆதித்த கரிகாலனின் படுகொலைக்குத் துணை போனதாக!வந்தியத்தேவன் ஏன் இந்தப் படுகொலைக்கு துணை போக வேண்டும்..? பழிக்குப்பழி வாங்கத்தான் என சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.இந்த வந்தியத்தேவன் வாணர் குலத்தைச் சேர்ந்தவர். பாலாற்றுக்கு வடக்கே சித்தூர் வரை அமைந்திருந்த  நாட்டை வாணிகம்பாடி, வாணர் நாடு என்றழைத்தனர். இப்போதும் இப்பகுதியில் வாணியம்பாடி என்ற ஊர் உள்ளதை நினைவில் கொள்வது நல்லது. 

இப்பரப்பை ஆண்டவர்களே வாணர் குலத்தோர். வல்லம், வாணர்புரம் என்ற இரு தலைநகரத்துடன் பல நூற்றாண்டுகள் இப்பகுதியை ஆண்டனர். இவர்கள் தங்களை மாபலி சக்கரவர்த்தியின் வழி வந்தவர்களாக கூறிக் கொண்டனர். முதலாம் பராந்தக மன்னர் ஆட்சிக் காலத்தில் கங்க மன்னன் பிருதிவிபதியோடு சேர்ந்து வல்லத்தில் வாணர் குலத்துடன் சோழநாடு போர் புரிந்தது. இதற்கான ஆதாரங்களை உதயேந்திர செப்பேட்டிலும், சோழசிங்கபுர (இன்றைய சோளிங்கர்) கல்வெட்டிலும் காணலாம்.

இப்போரில் பராந்தகனிடம் தோல்வியுற்ற வாணர்குல அரசர்கள் இராஷ்டிரகூட மன்னன் கிருஷ்ணதேவனிடம் அடைக்கலம் புகுந்தனர்.இந்த கிருஷ்ணதேவன்தான் கன்னரதேவனின் தாய் இளங்கோ பிச்சியின் தந்தை (பாட்டன்!). இந்த வல்லத்து யுத்தம் கி.பி.911, 912ல் நடந்ததாகக் கொள்ளலாம்.ஆக, தங்கள் வம்சத்தையே அழித்த சோழர்களைப் பழிவாங்க வந்தியத்தேவன் முடிவு செய்திருக்கலாம்... அதன் ஒருபகுதியாக ஆதித்த கரிகாலனைக் கொன்றிருக்கலாம் என்ற வாதத்தை சரித்திர ஆசிரியர்கள் முன்வைக்கிறார்கள். 

அடுத்து சந்தேகத்தின் வட்டத்தில் வருபவர்கள் இருவர்.ஒருவர் ஆதித்த கரிகாலனின் இளைய சகோதரியான குந்தவைப் பிராட்டியார். அடுத்தவர் குந்தவைப் பிராட்டியாரின் தம்பியும் பிற்காலத்தில் மன்னராக சோழ அரியணையில் ஏறியவருமான ராஜராஜ சோழன் என்கிற அருண்மொழி!சற்றே அழுத்தமாக இவர்கள் இருவர் மீதே இப்போது எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டிருக்கிறது!

காரணம், அடுக்கடுக்கான வினாக்கள்!தளிக்குளத்தார் கோயில் என்ற சிறிய ஆலயம்தான் இடிக்கப்பட்டு அதே இடத்தில் தஞ்சை பெரியகோயில் கட்டப்பட்டது என்கிறார்கள்! சின்ன கோட்டை மறைக்க அதன் மேல் பெரிய கோட்டைக் கிழிப்பது போல் இப்படி ஏன் செய்ய வேண்டும்..? ஒருவேளை அங்குதான் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டாரா..? 

இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்ததால்தான் இராஜேந்திர சோழன் தஞ்சையை விட்டு நீங்கி தன் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரை உருவாக்கி அங்கு தஞ்சை பெரிய கோயிலைப் போன்றே பிரமாண்டமாக ஆலயம் ஒன்றை எழுப்பினாரா..? 
யார் இந்த இரவிதாஸன்..? சோழ அரச குடும்பத்தில் இவருக்கு என்ன உறவு..?

மன்னராக முடிசூட்டிக் கொண்டதும் எதற்காக பிற நாடுகளின் மீது போர் தொடுக்காமல் முதல் வேலையாக காந்தளூரில் இருந்த ஒரு கடிகையைத் தாக்கி ராஜராஜ சோழன் அழித்தார்..? 
http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15350&id1=5&issue=20190517

Share this post

Link to post
Share on other sites

3. ஆதித்த கரிகாலன் கொலை வழக்கில் இராஜராஜ சோழனுக்கு பங்கு உண்டா?

முறுக்கு சுற்றுவதுபோல் பிழியாமல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்துவிடலாம்.தன் அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்ததில் இராஜராஜ சோழனுக்கும், அவரது சகோதரி குந்தவைப் பிராட்டியாருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 
23.jpg
1. உத்தமசோழன் பதவியேற்கும்போது அவருக்கு ஒரு மகன் இருந்திருக்கிறார். அரச விதிமுறைகளின்படி உத்தம சோழனுக்குப் பின் அவர் மகனுக்குத்தான் இளவரசுப் பட்டம் சூட்டவேண்டும். ஆனால், இதற்கு முரணாக அருண்மொழி என்கிற இராஜராஜ சோழன் சிம்மாசனத்தில் அமர்கிறார். ஏன்? 

2. இராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ரவிதாசன் முதலியவர்களின் சொத்தைப் பறித்துக்கொண்டு ஊரைவிட்டுத் துரத்துகிறார். தன் அண்ணனை கொலை செய்தவர்களை சிறையில் அடைத்துத் தண்டிக்காமல் இப்படி ஊரை விட்டுத் துரத்தியதுடன் கொலை வழக்கை ஏன் முடித்தார்?
 
3. தான், செய்யும் எல்லா செயல்களையும் கல்வெட்டில் வடிப்பது இராஜராஜ சோழனின் வழக்கம். தன் காலத்தில் இருந்த தேவதாசிகளின் பெயர் உட்பட எல்லாவற்றையும் கல்வெட்டில் பொறித்திருக்கிறார்.

அப்படிப்பட்டவர் தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை எந்தக் கல்வெட்டிலும் வடிக்கவில்லை! எப்படி கொலைகாரர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்கள் என்ற தகவலையும் குறிப்பாகக் கூடச் சொல்லவில்லை! 

4. இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் உத்தம சோழரின் மகன் கோயில்களை நிர்வகிக்கும் பதவியில் இருந்தார். இவர் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். அதாவது தன் மகன் இராஜேந்திர சோழன் பட்டம் ஏற்க போட்டி வரக் கூடாது என்பதற்காகவே உத்தம சோழரின் மகனை இராஜராஜ சோழன் அப்புறப்படுத்தினார் என்கிறார்கள். 

5. உத்தம சோழர் பதவிக்கு வந்த மூன்றாண்டுகள் கழித்து ஆதித்த கரிகாலனின் கொலை தொடர்பாக வந்தியத்தேவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இந்த வந்தியத்தேவன், பின்னாளில் இராஜராஜ சோழனாக பட்டம் ஏற்ற அப்போதைய அருண்மொழியின் தமக்கை குந்தவையின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தம சோழரின் காலத்தில் நடைபெற்ற ஆதித்த கரிகாலனின் கொலை தொடர்பான விசாரணை விவரங்கள் ஏதும் இப்போது கிடைக்கவில்லை. ஒருவேளை அழிக்கப்பட்டிருக்கலாம்! ஆனால், இராஜராஜ சோழன் அரியணையில் அமர்ந்ததுமே 12 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் வந்தியத்தேவனை உடனடியாக விடுவிக்கிறார். ஏன் அவர் விடுதலை செய்யப்பட்டார்... ஆதித்த கரிகாலனை வந்தியத் தேவன் கொலை செய்யவில்லை என்பதற்கு ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்ததா? இந்த விவரங்களும் கவனமாக அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன! 

6. உத்தம சோழரின் ஆட்சிக் காலத்தில் அண்டை நாடுகளுடன் பெரியதாக போர் ஏதும் நடக்கவில்லை. இராஜராஜ சோழன் அரியணையில் அமர்ந்ததும் அண்டை நாடுகள் பிரச்னை செய்ய ஆரம்பிக்கின்றன. இவற்றை ஒடுக்க வேண்டியது ஒரு மன்னரின் கடமை. இராஜராஜ சோழரும் படையெடுத்துச் சென்று அண்டை நாடுகளுடன் போர் புரிந்தார்.

ஆனால், இவை எல்லாம் பிறகு நடந்தவை.எனில், முதலாவது? காந்தளூரில் இருந்த கடிகை (கல்விக் கூடம்) ஒன்றைத்தான், தான் பதவிக்கு வந்ததுமே இராஜராஜ சோழன் படை திரட்டிச் சென்று அழித்தார். ஏன்? எதிரி நாடுகளை விட ஒரு கடிகையை அழிப்பது ஏன் இராஜராஜ சோழருக்கு முதன்மையாகப் பட்டது?

இதற்குக் காரணம் காந்தளூர் கடிகையின் தலைமை ஆசானாக இருந்தவர்தான் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்ததாக தண்டிக்கப்பட்ட ரவிதாசனின் குரு! இவருக்கும் அந்தக் கடிகைக்கும் பல உண்மைகள் தெரியும். பின்னாளில் பிரச்னைகள் ஏதும் வரக்கூடாது என்பதற்காகவே காந்தளூர் கடிகையை இராஜராஜ சோழன் அழித்தார் என்கிறார்கள்.

சரி. யார் இந்த ரவிதாசன்?

பிற்காலச் சோழப் பேரரசை நிறுவிய விஜயாலய சோழரின் மகன் முதலாம் ஆதித்த கரிகாலனின் இரு புதல்வர்களில் ஒருவரான கன்னரத் தேவனின் வம்சத்தைச் சேர்ந்தவர்! இந்த கன்னரத் தேவனுக்கு பட்டம் மறுக்கப்பட்டு இளையவர் பராந்தகர் அரியணை ஏறினார் என்பது வரலாறு!
கன்னரத் தேவனுக்கு ஏன் சோழ அரியணை மறுக்கப்பட்டது என்பதும் இன்று வரை புரியாத புதிர்!

இந்த அரச மர்மங்கள் எல்லாம் வெளிப்பட வேண்டாம் என்றுதான் சோழப் பரம்பரையைச் சேர்ந்த ரவிதாசனை நாட்டை விட்டே இராஜராஜ சோழன் துரத்தினார்... தன் அண்ணன் ஆதித்த கரிகாலனின் கொலை வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார்... லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். 

தன் தம்பி அருண்மொழி பட்டத்துக்கு வர வேண்டும் என்பதற்காக சோழ அரசர் குலத்தில் நிலவி வந்த அரியணைப் போட்டியைத் தனக்கு சாதகமாக குந்தவை பயன்படுத்தி ஸ்கெட்ச் போட்டார்... ஆனால், தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் பட்டத்துக்கு வருவதை அவர் ஏன் விரும்பவில்லை... தன் தம்பி அருண்மொழி என்கிற இராஜராஜன் பட்டத்துக்கு வர வேண்டும் என்று ஏன் ஆசைப்பட்டார்... என்பதெல்லாம் கேள்விகளாகவே இப்போதும் நிற்கின்றன.

இவை எல்லாம் இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் சொல்லப்படுபவை. நாளையே வேறு ஆவணங்கள் கிடைக்கும்போது ஆதித்த கரிகாலன் கொலை குறித்த புதிய பூகம்பங்கள் கிளம்பலாம்.

மொத்தத்தில் காலம்தோறும் இக்கொலை வழக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பது மட்டும் உண்மை! போலவே இந்த அரசியல் படுகொலைக்கான காரணங்கள் ஒருபோதும் வெளியே வராது என்பதும்!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15374&id1=6&issue=20190524

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
On 5/17/2019 at 10:55 PM, அபராஜிதன் said:

நான் எல்லாம் பொன்னியின் செல்வன்  5-7 தடவைகள் படித்துள்ளேன் புத்தகமாக 3 தடவைகளும் அப்ஸ்ல 4 தடவைகளிற்குமேலுமாக.:) 

சங்கதாராவில் வில்லியாக்கப்படுபவர் குந்தவை , பொன்னியின் செல்வனில் அழகும் அறிவும் மிகுந்த சோழகுலத்தையே பின்னிருந்து இயக்குபவராகவும் சோழப்பேரரசன்  ராஜேந்திரசோழனை அவனின் இளமைக்காலத்திலிருந்து  வளர்த்து அவனில் பேரரசின் கனவை விதைத்த ஒரு மதிநுட்பம் நிறைந்த ஒரு கதாநாயகியை வில்லியாக்குகின்றார். ராஜராஜசோழனை குந்தவியின் மகனாக்கிறார் சங்கதாராவி 

பொன்னியின் செல்வனின் வாசகர்களிற்கு சங்கதாரா சிறிதும் கூட ரசிக்கும்படி இருக்காது 

நான் பொன்னியின் செல்வனை முதன்முதலாக வாசித்த பொழுது குந்தவையை எனக்கு அதிகம் பிடிக்கவில்லை, காரணம் சோழ ராச்சிய வளர்ச்சிக்காக அருண்மொழியை அதிகமாக கட்டுப்படுத்தியதும் கொடும்பாளூரின் மகள் வானதியை அதிகளவில் தாங்கிப்பிடித்ததும் .. ஆதித்த கரிகாலனை வெறுத்ததும்..

சங்கதாராவை வாசிக்க இன்னமும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..பார்ப்போம் ..

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 5/24/2019 at 11:47 PM, பா. சதீஷ் குமார் said:

மொத்தத்தில் காலம்தோறும் இக்கொலை வழக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பது மட்டும் உண்மை! போலவே இந்த அரசியல் படுகொலைக்கான காரணங்கள் ஒருபோதும் வெளியே வராது என்பதும்

உண்மைதான்.. 

யாழ் இணையத்தில் கூட ஆதித்தய இளம்பிறையன் என்பவரால் 2015 & 2018 வழக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது.. ஆனாலும் வழக்கு முடியவில்லை..

இனி மணிரத்தினம் அல்லது ஜஸ்வர்யா தனுஷ் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்ப்போம்.. 

Share this post

Link to post
Share on other sites
On 5/24/2019 at 6:47 AM, பா. சதீஷ் குமார் said:

3. ஆதித்த கரிகாலன் கொலை வழக்கில் இராஜராஜ சோழனுக்கு பங்கு உண்டா?

முறுக்கு சுற்றுவதுபோல் பிழியாமல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்துவிடலாம்.தன் அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்ததில் இராஜராஜ சோழனுக்கும், அவரது சகோதரி குந்தவைப் பிராட்டியாருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 
23.jpg
1. உத்தமசோழன் பதவியேற்கும்போது அவருக்கு ஒரு மகன் இருந்திருக்கிறார். அரச விதிமுறைகளின்படி உத்தம சோழனுக்குப் பின் அவர் மகனுக்குத்தான் இளவரசுப் பட்டம் சூட்டவேண்டும். ஆனால், இதற்கு முரணாக அருண்மொழி என்கிற இராஜராஜ சோழன் சிம்மாசனத்தில் அமர்கிறார். ஏன்? 

2. இராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ரவிதாசன் முதலியவர்களின் சொத்தைப் பறித்துக்கொண்டு ஊரைவிட்டுத் துரத்துகிறார். தன் அண்ணனை கொலை செய்தவர்களை சிறையில் அடைத்துத் தண்டிக்காமல் இப்படி ஊரை விட்டுத் துரத்தியதுடன் கொலை வழக்கை ஏன் முடித்தார்?
 
3. தான், செய்யும் எல்லா செயல்களையும் கல்வெட்டில் வடிப்பது இராஜராஜ சோழனின் வழக்கம். தன் காலத்தில் இருந்த தேவதாசிகளின் பெயர் உட்பட எல்லாவற்றையும் கல்வெட்டில் பொறித்திருக்கிறார்.

அப்படிப்பட்டவர் தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை எந்தக் கல்வெட்டிலும் வடிக்கவில்லை! எப்படி கொலைகாரர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்கள் என்ற தகவலையும் குறிப்பாகக் கூடச் சொல்லவில்லை! 

4. இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் உத்தம சோழரின் மகன் கோயில்களை நிர்வகிக்கும் பதவியில் இருந்தார். இவர் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். அதாவது தன் மகன் இராஜேந்திர சோழன் பட்டம் ஏற்க போட்டி வரக் கூடாது என்பதற்காகவே உத்தம சோழரின் மகனை இராஜராஜ சோழன் அப்புறப்படுத்தினார் என்கிறார்கள். 

5. உத்தம சோழர் பதவிக்கு வந்த மூன்றாண்டுகள் கழித்து ஆதித்த கரிகாலனின் கொலை தொடர்பாக வந்தியத்தேவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இந்த வந்தியத்தேவன், பின்னாளில் இராஜராஜ சோழனாக பட்டம் ஏற்ற அப்போதைய அருண்மொழியின் தமக்கை குந்தவையின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தம சோழரின் காலத்தில் நடைபெற்ற ஆதித்த கரிகாலனின் கொலை தொடர்பான விசாரணை விவரங்கள் ஏதும் இப்போது கிடைக்கவில்லை. ஒருவேளை அழிக்கப்பட்டிருக்கலாம்! ஆனால், இராஜராஜ சோழன் அரியணையில் அமர்ந்ததுமே 12 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் வந்தியத்தேவனை உடனடியாக விடுவிக்கிறார். ஏன் அவர் விடுதலை செய்யப்பட்டார்... ஆதித்த கரிகாலனை வந்தியத் தேவன் கொலை செய்யவில்லை என்பதற்கு ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்ததா? இந்த விவரங்களும் கவனமாக அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன! 

6. உத்தம சோழரின் ஆட்சிக் காலத்தில் அண்டை நாடுகளுடன் பெரியதாக போர் ஏதும் நடக்கவில்லை. இராஜராஜ சோழன் அரியணையில் அமர்ந்ததும் அண்டை நாடுகள் பிரச்னை செய்ய ஆரம்பிக்கின்றன. இவற்றை ஒடுக்க வேண்டியது ஒரு மன்னரின் கடமை. இராஜராஜ சோழரும் படையெடுத்துச் சென்று அண்டை நாடுகளுடன் போர் புரிந்தார்.

ஆனால், இவை எல்லாம் பிறகு நடந்தவை.எனில், முதலாவது? காந்தளூரில் இருந்த கடிகை (கல்விக் கூடம்) ஒன்றைத்தான், தான் பதவிக்கு வந்ததுமே இராஜராஜ சோழன் படை திரட்டிச் சென்று அழித்தார். ஏன்? எதிரி நாடுகளை விட ஒரு கடிகையை அழிப்பது ஏன் இராஜராஜ சோழருக்கு முதன்மையாகப் பட்டது?

இதற்குக் காரணம் காந்தளூர் கடிகையின் தலைமை ஆசானாக இருந்தவர்தான் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்ததாக தண்டிக்கப்பட்ட ரவிதாசனின் குரு! இவருக்கும் அந்தக் கடிகைக்கும் பல உண்மைகள் தெரியும். பின்னாளில் பிரச்னைகள் ஏதும் வரக்கூடாது என்பதற்காகவே காந்தளூர் கடிகையை இராஜராஜ சோழன் அழித்தார் என்கிறார்கள்.

சரி. யார் இந்த ரவிதாசன்?

பிற்காலச் சோழப் பேரரசை நிறுவிய விஜயாலய சோழரின் மகன் முதலாம் ஆதித்த கரிகாலனின் இரு புதல்வர்களில் ஒருவரான கன்னரத் தேவனின் வம்சத்தைச் சேர்ந்தவர்! இந்த கன்னரத் தேவனுக்கு பட்டம் மறுக்கப்பட்டு இளையவர் பராந்தகர் அரியணை ஏறினார் என்பது வரலாறு!
கன்னரத் தேவனுக்கு ஏன் சோழ அரியணை மறுக்கப்பட்டது என்பதும் இன்று வரை புரியாத புதிர்!

இந்த அரச மர்மங்கள் எல்லாம் வெளிப்பட வேண்டாம் என்றுதான் சோழப் பரம்பரையைச் சேர்ந்த ரவிதாசனை நாட்டை விட்டே இராஜராஜ சோழன் துரத்தினார்... தன் அண்ணன் ஆதித்த கரிகாலனின் கொலை வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார்... லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். 

தன் தம்பி அருண்மொழி பட்டத்துக்கு வர வேண்டும் என்பதற்காக சோழ அரசர் குலத்தில் நிலவி வந்த அரியணைப் போட்டியைத் தனக்கு சாதகமாக குந்தவை பயன்படுத்தி ஸ்கெட்ச் போட்டார்... ஆனால், தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் பட்டத்துக்கு வருவதை அவர் ஏன் விரும்பவில்லை... தன் தம்பி அருண்மொழி என்கிற இராஜராஜன் பட்டத்துக்கு வர வேண்டும் என்று ஏன் ஆசைப்பட்டார்... என்பதெல்லாம் கேள்விகளாகவே இப்போதும் நிற்கின்றன.

இவை எல்லாம் இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் சொல்லப்படுபவை. நாளையே வேறு ஆவணங்கள் கிடைக்கும்போது ஆதித்த கரிகாலன் கொலை குறித்த புதிய பூகம்பங்கள் கிளம்பலாம்.

மொத்தத்தில் காலம்தோறும் இக்கொலை வழக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பது மட்டும் உண்மை! போலவே இந்த அரசியல் படுகொலைக்கான காரணங்கள் ஒருபோதும் வெளியே வராது என்பதும்!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15374&id1=6&issue=20190524

வாசிக்க சுவையாக உள்ளது, அந்த நாளில் மன்னர்கள் நடந்துகொண்ட முறைகள், ஒருவருக்கொருவர் குழி பறித்தல், பதவி சண்டை என்பதை வைத்துப் பார்த்தால், ராஜராஜ சோழன் திட்டமிட்டு ஆதித்த கரிகாலனை கொன்று இருந்திருப்பதுக்கு நிறைய சாத்தியம் உள்ளது.  அப்படி இருப்பவர்களால் மாத்திரமே பெரிய நிலையை அடைய முடியும். உலகில் பேரரசர்களின் எவருமே சாதுவானவர்களாகவோ, நேர்மையானவர்களாகவோ இருந்ததில்லை, அப்பிடி இருக்கவும் முடியாது.     

பொன்னியின் செல்வன் புத்தகத்தை எத்தனை  தடவை வாசித்தேன் என்று கணக்கில்லை. 14-15 வயதில் முதலாவதாக வாசித்தேன், கடந்த வருடமும் இங்கு முழுமையாக வாசித்தேன். ஒவொருமுறை வாசிக்கும் போதும் புது அனுபவமாகவே இருக்கும்

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, நீர்வேலியான் said:

அந்த நாளில் மன்னர்கள் நடந்துகொண்ட முறைகள், ஒருவருக்கொருவர் குழி பறித்தல், பதவி சண்டை என்பதை வைத்துப் பார்த்தால், ராஜராஜ சோழன் திட்டமிட்டு ஆதித்த கரிகாலனை கொன்று இருந்திருப்பதுக்கு நிறைய சாத்தியம் உள்ளது.  அப்படி இருப்பவர்களால் மாத்திரமே பெரிய நிலையை அடைய முடியும். உலகில் பேரரசர்களின் எவருமே சாதுவானவர்களாகவோ, நேர்மையானவர்களாகவோ இருந்ததில்லை, அப்பிடி இருக்கவும் முடியாது.  

உண்மைதான் .. ரோம, கிரேக்க, மொகலாய இராச்சியங்களில் நடந்த சதிகளைவிட எங்களது மூவேந்தர்களின் இராச்சியங்களின் நடந்த சதிகள் பரவாயில்லை எனக்கூறலாம்.. 

அதனால்தான் இந்த ரோம, கிரேக்க பேரரசர்கள் உலகை ஆண்டார்கள்..

அதே போல இப்பொழுதுள்ள வல்லரசுகள் கூட பழைய பேரரசுகளுக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதைபோல செயற்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது..

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, நீர்வேலியான் said:

பொன்னியின் செல்வன் புத்தகத்தை எத்தனை  தடவை வாசித்தேன் என்று கணக்கில்லை. 14-15 வயதில் முதலாவதாக வாசித்தேன், கடந்த வருடமும் இங்கு முழுமையாக வாசித்தேன். ஒவொருமுறை வாசிக்கும் போதும் புது அனுபவமாகவே இருக்கு

எத்தனை முறை வாசித்தாலும் கல்கியின் “பொன்னியின் செல்வன்”, சாண்டில்யனின் “கடல் புறா” இரண்டும் எனக்கு பிடித்த சரித்திர நாவல்கள்..

Share this post

Link to post
Share on other sites
On 6/1/2019 at 5:46 AM, பிரபா சிதம்பரநாதன் said:

எத்தனை முறை வாசித்தாலும் கல்கியின் “பொன்னியின் செல்வன்”, சாண்டில்யனின் “கடல் புறா” இரண்டும் எனக்கு பிடித்த சரித்திர நாவல்கள்..

உண்மைதான், சாண்டில்யனும் சிறப்பான நாவல்கள் எழுதியுள்ளார். சரித்திர நாவல்கள் படிப்பதுக்கு எப்பவுமே சுவையானவை. கடல்புறாவை கூட இரண்டு மூன்று தடவையாவது வாசித்திருப்பேன். சிறப்பான நாவலாக இருந்தாலும், பொன்னியின் செல்வனுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லை என்று நினைக்கிறேன்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

வந்தியத்தேவன் கல்கி அவர்களின் கற்பனை நாயகன் இல்லையா?!

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, ஏராளன் said:

வந்தியத்தேவன் கல்கி அவர்களின் கற்பனை நாயகன் இல்லையா?!

இல்லை நந்தினி தான் கற்பனை பாத்திரம் 

On 6/1/2019 at 8:46 PM, பிரபா சிதம்பரநாதன் said:

எத்தனை முறை வாசித்தாலும் கல்கியின் “பொன்னியின் செல்வன்”, சாண்டில்யனின் “கடல் புறா” இரண்டும் எனக்கு பிடித்த சரித்திர நாவல்கள்..

சாண்டில்யன் மற்றும் கல்கிக்கு பிறகு யாருடைய வரலாற்று நாவல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை 

மகுட திலகம் நல்லா இருந்தது ,சோழ திலகம் அவ்வளவாக பிடிக்கல, விக்கிரமன் ஜெகற்சிப்பியன் ஆகியோர் எழுதிய  வரலாற்று நாவல்களில் சில நன்றாகவே இருந்தன..ஆனாலும் கல்கி மற்றும் சாண்டில்யனை முதல் முதலாக படித்ததோ என்னவோ மற்றையோரின் கதைகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை ,பாலகுமாரனின் உடையார் முதல்பாகம் எப்பவோ முடித்தாயிற்று கன நாட்களாக 2ம் பாகம் இழுபட்டு கொண்டே இருக்கிறது..அதை விட்டு விட்டு 3 ம் பாகம் படித்தாச்சு 4,5 மற்றும் 2 படிக்கணும்.

Share this post

Link to post
Share on other sites
21 minutes ago, அபராஜிதன் said:

15 hours ago, ஏராளன் said:

வந்தியத்தேவன் கல்கி அவர்களின் கற்பனை நாயகன் இல்லையா?!

இல்லை நந்தினி தான் கற்பனை பாத்திரம்

ஊமைரானி, பூங்குழலி கூட கற்பனை பாத்திரங்கள் தானே..

சாண்டியல்யனின் சரித்திர நாவல்களில் தனது  பாத்திரங்களை(கற்பனையோ நிஜம்) பற்றிய ஒரு அறிமுகம் இருக்கும்.. அது எனக்கு பிடித்திருந்தது..

ஆனால் கல்வியின் பொன்னியின் செல்வனில் அப்படி இல்லாதமையால்.. கதையின் போக்கை வைத்தே இவர்கள் கற்பனை பாத்திரங்களாக இருக்ககூடும் என முடிவிற்கு வந்தேன்..

33 minutes ago, அபராஜிதன் said:
On 6/1/2019 at 10:46 PM, பிரபா சிதம்பரநாதன் said:

சாண்டில்யன் மற்றும் கல்கிக்கு பிறகு யாருடைய வரலாற்று நாவல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை 

மகுட திலகம் நல்லா இருந்தது ,சோழ திலகம் அவ்வளவாக பிடிக்கல, விக்கிரமன் ஜெகற்சிப்பியன் ஆகியோர் எழுதிய  வரலாற்று நாவல்களில் சில நன்றாகவே இருந்தன..ஆனாலும் கல்கி மற்றும் சாண்டில்யனை முதல் முதலாக படித்ததோ என்னவோ மற்றையோரின் கதைகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை ,பாலகுமாரனின் உடையார் முதல்பாகம் எப்பவோ முடித்தாயிற்று கன நாட்களாக 2ம் பாகம் இழுபட்டு கொண்டே இருக்கிறது..அதை விட்டு விட்டு 3 ம் பாகம் படித்தாச்சு 4,5 மற்றும் 2 படிக்கணும்

உண்மைதான்..

தீபம் நா. பார்த்தசாரதியின் மணிபல்லவம் வாசித்திருக்கிறேன் மற்றும் பாண்டிமாதேவி(தற்பொழுது வாசிக்கும் நாவல்) .. ஆஹா ஓஹோ என கூறமாட்டேன் ஆனால் பரவாயில்லை 

Share this post

Link to post
Share on other sites

எழுத்துப்பிழையை (கல்வி - கல்கி) எப்படி திருத்துவது?

Share this post

Link to post
Share on other sites
47 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

தீபம் நா. பார்த்தசாரதியின் மணிபல்லவம் வாசித்திருக்கிறேன் மற்றும் பாண்டிமாதேவி(தற்பொழுது வாசிக்கும் நாவல்) .. ஆஹா ஓஹோ என கூறமாட்டேன் ஆனால் பரவாயில்லை 

இப்போதெல்லாம் வேள் பாரி வாசிக்கவில்லையா என்று கேட்பது தானே  fashion !

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஊமைரானி, பூங்குழலி கூட கற்பனை பாத்திரங்கள் தானே..

சாண்டியல்யனின் சரித்திர நாவல்களில் தனது  பாத்திரங்களை(கற்பனையோ நிஜம்) பற்றிய ஒரு அறிமுகம் இருக்கும்.. அது எனக்கு பிடித்திருந்தது..

ஆனால் கல்வியின் பொன்னியின் செல்வனில் அப்படி இல்லாதமையால்.. கதையின் போக்கை வைத்தே இவர்கள் கற்பனை பாத்திரங்களாக இருக்ககூடும் என முடிவிற்கு வந்தேன்..

உண்மைதான்..

தீபம் நா. பார்த்தசாரதியின் மணிபல்லவம் வாசித்திருக்கிறேன் மற்றும் பாண்டிமாதேவி(தற்பொழுது வாசிக்கும் நாவல்) .. ஆஹா ஓஹோ என கூறமாட்டேன் ஆனால் பரவாயில்லை 

உமைராணி  ஒரு உண்மையான பாத்திரத்தை வைத்து பின்னப்பட்ட ஒரு கற்பனைப்பாத்திரம் என்று கல்கி சொன்னதாக ஞாபகம். ஈழத்து நாச்சியார் என்றொருவருக்கு பிற்காலத்தில் ராஜராஜன் அல்லது ராஜேந்திர சோழன் (சரியாக ஞாபகம் இல்லை) கோவில் ஒன்று கட்டியிருந்தார், அவர் ராஜா ராஜ சோழனின் ஈழத்து காதலியாக இருக்கலாம் என்று ஒரு ஊகம் இருந்தது, அதை வைத்து இந்த பாத்திரம் படைக்கப்பட்டிருந்தது.

நீங்கள் சொல்வது உண்மை, சாண்டில்யன் பாத்திரங்களை பின்புலத்துடன், வரலாற்றுடன் அறிமுகப்படுத்துவார். ஆனால் அவரிடம் பிடிக்காத விடயம், தேவைக்கு அதிகமாக வர்ணனைகள் நீண்டுகொண்டு போகும்,  அத்துடன் அவரது பாத்திரங்கள் அதீதமான ஆளுமைகளுடன் இருக்கும், கல்கியின் பாத்திரங்கள் ஓரளவுக்கு நண்பகத்தன்மையுடன் இருக்கும். கல்கி நிறைய எழுதவில்லை, சாண்டில்யன் அப்படியல்ல. எனக்கு சாண்டில்யனின் யவனராணியம் நன்றாக பிடித்த ஒரு நாவல். அகிலன் எழுதியது என்று நினைக்கிறேன், வேங்கையின் மைந்தன், வீட்டிலே இருந்தபடியால் அதை அடிக்கடி வாசித்து பிடிக்கும். கயல் விழி விழி என்று ஒரு நாவலும் பாண்டியர்களை பற்றி இவர் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன் , அதுவும் நல்ல நாவல். சாண்டில்யன், கல்கி அளவுக்கு மற்றவர்கள் இல்லை என்பது உண்மை.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • அருமையான‌ வ‌ரிக‌ள் நொச்சி ஜ‌யா / வித்தாகி போன‌ த‌ள‌ப‌திக‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் / மீண்டு எழுவோம் என்ற‌ ந‌ம்பிக்கை ப‌ல‌ர் ம‌ன‌தில் இருக்கு / பொறுத்தார் பூமி ஆள்வார் , 
  • ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு!         by : Litharsan அமெரிக்காவுக்கு ஹைட்ரொக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது. இதனால், அமெரிக்கா ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் மருந்துகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், அமெரிக்கா ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதேவேளை, ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என ட்ரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ட்ரம்ப்பின்-கோரிக்கை-நிற/
  • இலங்கையில் கொரோனா வைரஸால் 6 ஆவது உயிரிழப்பு!         by : Jeyachandran Vithushan இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 6 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/இலங்கையில்-6-ஆவது-நோயாளிய/
  • அற்ப விடயங்களுக்காக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – இராணுவத் தளபதி           by : Benitlas ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நோய்த் தடுப்பிற்கான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டத்தை மதித்து அனைத்து பிரஜைகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அற்ப விடயங்களுக்காக அநாவசியமாக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சுகாதார நிலையுடனான போராட்டம் காரணமாக ஒவ்வொரு பிரஜைகளும் தங்களின் பொறுப்புகளை சரிவர நிறைவேற்ற வேண்டும். தொழில் நிமித்தம் வௌிமாவட்டங்களுக்கு சென்று சிக்கலை எதிர்நோக்கியுள்ளவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. எனினும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் ஒரு வழி முறையாகவே அவர்களை அனுப்பி வைக்காதுள்ளோம். ஆகவே, இந்த விடயம் தொடர்பில் பகிரப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். அனைத்து பிரஜைகளுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது“ எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/அற்ப-விடயங்களுக்காக-அநாவ/
  • சமூர்த்தி பயனாளிகளுக்கு எவ்வித பேதமும் இன்றி கொடுப்பனவு வழங்கப்படும் – டலஸ்!          by : Benitlas கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் சமூர்த்தி பயனாளிகளுக்கு எவ்வித பேதமும் இன்றி கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அனைத்து சமூர்த்தி பயனாளிகளுக்கும் நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படவில்லை. எந்த வேறுபாடும் இன்றி இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட்டதை எனது அரசியல் வாழ்வில் நான் பார்க்கவில்லை. நூற்றுக்கு 80 வீதம் கட்டாய சேமிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரம் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் சமூர்த்தி நிவாரணங்களை வழங்கிய போது அதனைப் பெற்றுக்கொண்ட யாருக்கும் 80 வீத கட்டாய சேமிப்பு காணப்படவில்லை. தற்போது அந்த முறைமை நீக்கப்பட்டுள்ளது. 80 வீத கட்டாய சேமிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரம் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற முறையை தற்போதும் நடைமுறையில் இருந்திருந்தால் கடந்த அரசாங்கத்தில் நிவாரணம் பெற்ற எவருக்கும் தற்போது கிடைக்கப்பெறாது. எனினும் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்காது எவ்வித பேதமும் இன்றி இம்முறை எமது அரசாங்கத்தால் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளது. ஆனால் இந்த தீர்மானம் சமூகமயப்படுத்தப்படவில்லை. அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் பரவலடைந்துள்ளன. இதுவே உண்மை நிலைமையாகும்“ எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/சமூர்த்தி-பயனாளிகளுக்க-3/