Jump to content

மகிழ்ச்சியான ஒரு செய்தி... வவுணதீவு போலீசாரை ஸஹ்ரானின் அடியாட்கள் கொன்றதை ஒப்புக்கொண்டதை அடுத்து, அஜந்தன் விடுதலை செய்யப்பட்டார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

58667533_2230516323701354_8214381474816720896_n.jpg

 

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் அஜந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் அஜந்தன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், அஜந்தன் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் சர்ஹானின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுணதீவு பொலிஸாரை தாங்களே கொலைசெய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் அஜந்தனை விடுதலைசெய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து பிணையில் விடுவித்த பதில் நீதவான் எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பணித்தார்.

அதனைத்தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அஜந்தன் அவரது வீட்டுக்கு அழைத்து  செல்லப்பட்டு விடப்பட்டதாக அஜந்தனின் மனைவி தெரிவித்தார்.
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை கொலைகளை ஹிஸ்புல்லாவின் முஸ்லீம் ஊர்காவல் படையும்.. ஜிகாத் கும்பலும்.. சொறீலங்கா அரச கொன்றொழிப்பு பயங்கரவாதப் படைகளுடன்.. புலனாய்வாளர்களாக உல்லாச உலா வந்த முஸ்லிம் மதவெறிப் பயங்கரவாதிகளும் செய்து முடித்திட்டு.. பழிகளை.. அப்பாவி தமிழ் மக்கள் மீதும்.. விடுதலைப்புலிகளின் பெயருக்கு களங்கம் உண்டு பண்ணவும் அவர்கள் மீதும் போட்டார்களோ தெரியாது. தெரிந்தது இது ஒன்று தான் இப்போதைக்கு வெளிப்பட்டிருக்குது. 🙄

சொறீலங்காவின் நீதித்துறையின் கையாலாகாத்தனமும்.. சொறீலங்காவின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடுமைகளையும்.. அதன் நீதி நிர்வாகத்துறையின்.. செயற்திறனின்மையையும் இந்தச் சம்பவம் புட்டுபுட்டு வைக்கிறது. 

எதுஎப்படியோ.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின் செயலால் நிகழ்ந்த ஒரு நல்ல விடயம்.. இந்த அப்பாவிகளுக்கு கிடைத்த விடுதலை. 

Link to comment
Share on other sites

அயந்தன் குற்றவாளி அல்ல என்று தெரியவந்துள்ளது. ஆகவே தவறாகக் கைதுசெய்யப்பட்டதையிட்டு அவருக்கான நிவாரணம் என்ன.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Paanch said:

அயந்தன் குற்றவாளி அல்ல என்று தெரியவந்துள்ளது. ஆகவே தவறாகக் கைதுசெய்யப்பட்டதையிட்டு அவருக்கான நிவாரணம் என்ன.?

இது ஒரு தற்செயலாக நடந்த சம்பவம் இந்த ஒரு சம்பவ்த்தை வைத்து சகல முஸ்லீம் புலனாய்வளர்களையும் குற்றம் சாட்ட முடியாது......😄

இவருக்கு சரியான நிவாரணம்  கிடைக்க வேணுமென்றால் இவரை இலங்கை இராணுவத்தில் புலனாய்வாளராக பதவி கொடுக்க வேண்டும் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

அயந்தன் குற்றவாளி அல்ல என்று தெரியவந்துள்ளது. ஆகவே தவறாகக் கைதுசெய்யப்பட்டதையிட்டு அவருக்கான நிவாரணம் என்ன.?

அந்த நாட்டில் சட்ட திட்டங்கள் எப்பிடி துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பது தெரிந்ததே.  பெரும் தலைகள் யாராவது முன்னெடுத்தால் மாத்திரம் கிடைக்கலாம், அவர்களுக்கு எதுவித ஆதாயமும் இல்லாமல் செய்ய மாட்டார்கள். ஊடகங்கள்/மக்கள் நெருக்குதல் கொடுத்தால் நடக்கலாம்.

அவர் வெளியில் வந்தது பெரிய விடயம், அந்த பிள்ளைகள் எவ்வளவு சந்தோசமாக இருப்பார்கள். ஒரு ஆதாரங்களும் இல்லாமல் சும்மா ஒருவரை பிடித்து உள்ளே போடுகிறார்கள், இவர்கள் எப்பிடி ஒரு மனசாட்சி இல்லாமல் செய்கிறார்கள் என்பது புரிபடுவதில்லை 

Link to comment
Share on other sites

இப்பொழுது கூட பிணையில் தான் விடுவிக்கப்பட்டுள்ளார். முழுமையாக விடுதலை பெற இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியவில்லை.

ஆனாலும் குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கலாம் என்பது மகிழ்ச்சியான விடயம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி..இனி மேலாவது அந்த குடும்பம் நிம்மதியான வாழ்க்கை வாழட்டும்...இவரது விடுதலைக்கு மனோ கணேசன் உதவினார் என்று கேள்விப் பட்டேன் 

Link to comment
Share on other sites

ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கபடாவிட்டிலும் பரவாயில்லை ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்ற உயரிய கொள்கை தமிழர்களுக்கு மட்டும் இங்கு இல்லை. 

இவர்கள் குடும்பம் மேற்கொண்டு நிம்மதியாக வாழ சிங்களபேரினவாதம் விடட்டும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்போன்ற அப்பாவிகள் இனி பாதிக்கப்படக்கூடாது-அஜந்தன்!

AdminMay 11, 2019

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் அஜந்தன் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

20190511_174659.jpg?w=640

இன்று காலை பதில் நீதிவானின் இல்லத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொண்டுவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் அஜந்தன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அஜந்தன் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவந்தார்.

இந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரதான தாக்குதல்தாரியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த சர்ஹானின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுணதீவு தாக்குதலை தாங்களே பொலிஸாரை கொலைசெய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் அஜந்தனை விடுதலைசெய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வீ.தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்த பதில் நீதிவான் எதிர்வரும் 13ஆம் திகதி திறந்த நீதிமன்றில் சமுகமளித்து விடுவிப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் பணித்தார்.
அதனைத்தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டு விடப்பட்டதாக அஜந்தன் தெரிவித்தார்.

தன்விடுதலைக்கு காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அஜந்தன் இனிவரும் காலங்களின் என்னைப்போன்ற அப்பாவிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

 

http://www.errimalai.com/?p=40158

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையானதில் சந்தோசம் ஆனால் அவர் பட்ட சித்திரவதைகளை நினைக்கையில் மனசு வலிக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தொழில் உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளது- வவுனதீவு முன்னாள் போராளி அஜந்தன்

 
IMG_0629.jpg?resize=726%2C545
 

 

எனது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது உதவி செய்யும் நல்லுள்ளங்கள் எனக்கு உதவுங்கள் என வவுணதீவு பொலிஸாரின் படுகொலையில்   குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி   கதிர்காமத்தம்பி இராசகுமாரன் என்றழைக்கப்படும் அஜந்தன்(வயது-40) குறிப்பிட்டுள்ளார்.
 
விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரது வீட்டிற்கு சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் மேற்கண்டவாறு கூறியதுடன் பொருளாதாரம் மிக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதங்கத்தை தெரிவித்து உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
 
மேலும் குறிப்பிட்ட அவர்
 
எனக்கு நடந்தது போன்று இனி எவருக்கும் நடக்கக் கூடாது .சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்கள் நிலைமை இப்படியாகிவிடக் கூடாது என்று கூறுவேன்.இன்று நான் இவ்வாறு கைது செய்யப்படாது இருந்திருந்தால் எனது குடும்ப பொருளாதாரத்தை கட்டியெழுப்பி இருப்பேன்.ஆனால் துரதிஸ்ட வசமாக நான் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து சில நலன்விரும்பிகள் எங்கள் குடும்பத்திற்கு பொருளாதார  உதவி செய்து  இருந்தார்கள்.இவ்வாறு இருந்த போதிலும் எனது விடுதலைக்காக எனது மனைவியின் நகைகள் அன்பாக வளர்த்த மாடு என்பன விற்கப்பட்டன.
 
எனது கைதால் எனது குடும்பம் எனது பிள்ளைகள் வெகுவாக  பாதிக்கப்பட்டு விட்டனர். அதனை சீர் செய்ய சில காலங்கள் செல்லும். இப்படியான துயர சம்பவங்கள் இனழ  நடந்துவிடக் கூடாது நாங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் நாங்கள் எமது குடும்பம்  சமுகம் சார்ந்த பணிகளில் மட்டுமே ஈடுபடுகின்றோம். அரசாங்கத்திற்கு எதிராகவே வேறு சட்டமுறையற்ற செயற்பாடுகளிலோ நாங்கள் ஈடுபடமாட்டோம்.
 
எங்கள் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எங்களது இயல்பு வாழ்க்கையினை குழப்பும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.பல்வேறு வேதனைகளுடன் வாழ்க்கைக்குள் காலடி வைத்து ஓரளவு இயல்பு நிலையினை அடைந்த போதிலும் மீண்டும் தனது வாழ்க்கை பூச்சியத்திற்குள்ள தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.அத்துடன் வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த எனக்கு ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.விசேடமாக ஊடக நண்பர்கள் அனைவரும் முக்கியமானவ்கள்.இச்சந்தர்ப்பத்தில் எனது பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப எனது குடும்ப நிலமையை உணர்ந்து உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன். என கூறினார்.
 
 விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தன் எனப்படும் கதிர்காமத்தம்பி இராசகுமாரன்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால்  நேற்று(11)  விடுவிக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.இவர் ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கு அமைய   பதில் நீதவானின் இல்லத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொண்டு வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
உதவ விரும்புபவர்கள் தொடர்பிற்கு-0763685539,0779690803
பாறுக் ஷிஹான்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இவர் சரணடைந்ததாக அல்லவோ கதை வந்தது ....?
அப்படி இருந்தால் யார் கூறி சரணடைந்திருப்பார் ....?
 

Subsequently, two former LTTE members had been taken into custody over the killing of the policemen. The two suspects were identified as Kadiramathambi Iraja kumaran (Kannan,40) and Rasanaygam Sarvananthan.  

Kannan was taken into custody in Batticaloa and Sarvananthan at Kilinochchi. Later Sarvananthan was brought to Batticaloa for questioning. He is a former leading intelligence operative of the LTTE. He had told the police that he was in Batticaloa for several weeks to organise a Mahaveer event. Sarvananthan was staying in Kannan’s house in Vavunathivu, Batticaloa. It was also revealed that Sarvananthan had come to Batticaloa several times to celebrate Mahaveer every year.  

Although reports said that one of the suspects had admitted that he was responsible for the killing, the CID has no strong evidence against the two suspects and therefore whether both of them were involved in the double murder is still unknown. Meanwhile, UNP MP Ranjith Madduma Bandara pointed out that the incident in Batticoloa was serious in nature and demands a proper investigation, as such crimes did not take place during the past three and half years. 

http://www.dailymirror.lk/news-features/Who-killed-two-policemen-on-duty-in-Vavunativu-/131-159641

Link to comment
Share on other sites

சொறிலங்காவின் அரசும் போலீசும் எப்படி அப்பாவித் தமிழர்களை  குற்றவாளிகள் ஆக்குறார்கள் என்டு வெளிச்சத்துக்கு வந்துள்ளது!

மறுபக்கம் சொறிலங்காவின் அரசு மோசமான சிங்களக் குற்றவாளிகளை உயர்பதவிகளில் இருத்துறார்கள்! 

Link to comment
Share on other sites

விடுதலைப் புலி அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் பாதுகாப்பு படையினர் கொலை வழக்கிலிருந்து விடுதலை

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு போலீஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அஜந்தனை இன்று சனிக்கிழமை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி சோதனை சாவடியிலிருந்த இரண்டு போலீஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் போலீஸார், குற்றப் புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட பலர் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த இரண்டு தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என போலீஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு, அவர்களது உறவினர்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தபோதிலும், அவர்களை விடுதலை செய்ய பாதுகாப்பு தரப்பினர் மறுத்து வந்தனர்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த சந்தேக நபர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மட்டக்களப்பைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான அஜந்தன் என்றழைக்கப்படும் கதிர்காமத்தம்பி ராஜகுமார் இன்று, சனிக்கிழமை, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களினாலேயே வவுணதீவு போலீஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாக போலீஸார் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான அஜந்தனை விடுதலை செய்யுமாறு அமைச்சர் மனோ கணேஷன், ஜனாதிபதியிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியிலுள்ள சோதனை சாவடியொன்றில் கடமையாற்றிய இரண்டு போலீஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கி சூட்டு இலக்காகி உயிரிழந்திருந்தனர். அவர்களின் உடலில் வெட்டு காயங்களும் காணப்பட்டமை போலீஸார் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், அரச பாதுகாப்பு தரப்பை சேர்ந்த இருவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்று கருதப்படுகிறது.

இதேவேளை, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு வவுணதீவு போலீஸ் உத்தியோகத்தர்களை கொலை செய்ததன் ஊடாகவே தமது பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸார் மத்தியில் தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-48238525

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 5/11/2019 at 10:30 PM, nunavilan said:

சிறிலங்கா இப்படி எத்தனை அப்பாவிகளை உள்ளே வைத்துள்ளது??

60384232_2417129281670494_52847154510692

அயந்தனின் குடும்ப நிலைகண்டு அவர்களுக்கு ஏதாவது சிறு உதவியாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டது. அவருடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த முயன்று முடியாதபோது தனிக்காட்டு ராசா அவர்களே அந்தத் தொடர்பை ஏற்படுத்தித் தந்தார். அயந்தன் தனது தொழிலைத் திரும்பத் தொடங்குவதற்கு வேண்டிய உபகரணங்கள் கொள்வனவுசெய்ய ஒன்றரை இலட்சம் வரையில் தேவை இருப்பதும் தெரிந்தது. அந்த வேளையில்தான் எங்கள் கள உறவுகளான குமாரசாமி அவர்களும், தமிழ்சிறி அவர்களும் உதவியில் பங்குபற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்கள். தற்போது அயந்தனின் தேவையில் மூன்றிலொரு பங்கினை அவருக்குக் கிடைக்கச் செய்துள்ளோம். இதனை மற்ற உறவுகளும் அறிந்து மேலும் உதவ முன்வரக்கூடும் என்பதாலே இந்தவிடயத்தை  இங்கு தெரிவிக்கிறேன். யாராவது உதவ விரும்பினால் அயந்தனுடன் நேரடியாகவே தொடர்புகொண்டு உதவி செய்யலாம் Money gram மூலமே பணம் அவர்கையில் ஒப்படைக்கப்பட்டது.   

 

அயந்தனின் தொலைபேசி எண். 0094779690803.

முகவரி,

Kathirgamathamby Rajakumaran

Karaiyakkantivu

Kannankudah

Batticaloa.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி..💐

Link to comment
Share on other sites

4 hours ago, Paanch said:

அயந்தன் தனது தொழிலைத் திரும்பத் தொடங்குவதற்கு வேண்டிய உபகரணங்கள் கொள்வனவுசெய்ய ஒன்றரை இலட்சம் வரையில் தேவை இருப்பதும் தெரிந்தது. அந்த வேளையில்தான் எங்கள் கள உறவுகளான குமாரசாமி அவர்களும், தமிழ்சிறி அவர்களும் உதவியில் பங்குபற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்கள். தற்போது அயந்தனின் தேவையில் மூன்றிலொரு பங்கினை அவருக்குக் கிடைக்கச் செய்துள்ளோம்

பாராட்டுக்கள்!
இக்கட்டான தருணத்தில் செய்யும் சிறு உதவியும் பேருதவியாகவே அமையும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.