யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த மௌலவி விமான நிலையத்தில் கைது

Recommended Posts

ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த மௌலவி விமான நிலையத்தில் கைது

D6SBS6EUIAADbef.jpg

ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்ட வவுனியாவைச் சேர்ந்த மௌலவியை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

வவுனியா- செட்டிகுளம், முதலியார் குளத்தை பிறப்பிடமாக கொண்ட முனாஜிப் மௌலவி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவிலிருந்து விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை  இன்று (சனிக்கிழமை)  காலை அவர் வந்தடைந்தபோதே  குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

முனாஜிப் மௌலவி, கடந்த ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல் குறித்து தனது முகநூலில் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்குஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டிருந்தார். குறித்த காணொளியை ஆதாரமாக கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் விசாரணைகளின் பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

http://athavannews.com/வவுனியா-மௌலவி-விமான-நிலை/

Share this post


Link to post
Share on other sites

போலீஸ் தேடேக்க, உந்த லெப்பையர், எப்படி சவூதிக்கு போனவர்.

Share this post


Link to post
Share on other sites

ரிசாத்துவோ  அல்லது புல்லாவோ கடிதம் குடுத்திருப்பினம்....நேரேபோய் பிளைட் ஏறி சவுதி  அப்புவிடம் குசலம் விசாரித்திட்டு வந்திரிப்பார்..

Share this post


Link to post
Share on other sites

பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் உரையாற்றிய மௌலவிக்கு விளக்கமறியல்

May 12, 2019

பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலான உரையினை காணொளி மூலமாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள மௌலவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மௌலவி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மக்காவுக்கு சென்றுவிட்டு நேற்றையதினம் நாடு திரும்பும்போதே கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவரை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே நீதிவான் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

#maoulavi  #arrest #vavuniya

 

http://globaltamilnews.net/2019/121412/

 

Share this post


Link to post
Share on other sites

இவருக்கு எவ்வளவு தில் இருந்திருந்தால் திரும்பி நாட்டுக்கு வந்திருப்பார்?

Share this post


Link to post
Share on other sites
24 minutes ago, ரதி said:

இவருக்கு எவ்வளவு தில் இருந்திருந்தால் திரும்பி நாட்டுக்கு வந்திருப்பார்?

இதயே புலிகளுக்கு இப்படி ஆதரவு தெரிவித்துப்போட்டு இப்படி வரலாமா.தடிப்பு அப்படி.

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, ரதி said:

இவருக்கு எவ்வளவு தில் இருந்திருந்தால் திரும்பி நாட்டுக்கு வந்திருப்பார்?

சிங்களவனோடை சேர்ந்து கொள்ளையடிச்ச தில் தான்!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தன்னுடை வீட்டுக்குள்... சோதனையிட வந்தால்,
அது போர்க்களம் என்று, தில்லாக அறிக்கை விட்ட ஆள் இவர்.
இப்ப அவருக்கு... நாலாம் மாடியில், மிளகாய்த் தூள் தடவுகிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு