Sign in to follow this  
கிருபன்

ஒரு சமூகத்தை புறக்கணிக்க வேண்டாம்

Recommended Posts

புறக்கணிக்க வேண்டாம்

 

ஒரு சமூ­கத்தை அநீ­திக்­குட்­ப­டுத்தும் வகையில் செயற்­பட்­டதன் கார­ண­மாக கடந்த முப்­பது வரு­ட­கா­ல­மாக எமது நாடு மிகப்­பெ­ரிய யுத்­தத்தை எதிர்­கொண்­ட­துடன் அதன் முடிவில் பாரிய விலையை செலுத்­தி­யது.

god_father.jpg

முப்­பது வரு­ட­கால யுத்தம் கார­ண­மாக நாம் எதிர்­கொண்ட பின்­ன­டைவு எத்­த­கை­யது என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். இந்த யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் வேதனை, துயரம் மற்றும் வடுக்­களை சுமந்து வந்­தனர். பாதிக்­கப்­பட்ட மக்கள் இன்னும் வடுக்­க­ளுடன் வாழ்­கின்­றார்கள். 

இவ்­வா­றான சூழலில் மீண்டும் ஒரு யுத்­தத்­தையோ அல்­லது அது­போன்­ற­தொரு நிலை­மை­யையோ எதிர்­கொள்­ள­வேண்­டிய நிலையில் இந்த நாடு இல்லை என்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் உணர்ந்­துள்­ளனர். எனவே இது­போன்­ற­தொரு நிலைமை நாட்டில் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்கு அர­சியல் தலை­வர்கள், மதத் தலை­வர்கள் மற்றும் சிவில் சமூக பிர­தி­நி­திகள் ஆகியோர் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. 

மிக விசே­ட­மாக தற்­போது நாட்டில் தோன்­றி­யுள்ள புதிய சூழலில் எந்­த­வொரு சமூ­கமும் அநீ­திக்கு உட்­ப­டா­த­வ­கையில் நடந்­து­கொள்­ள­ வேண்­டி­யது அனை­வ­ரதும் பொறுப்­பாகும். இதில் மக்­களை உரிய முறையில் அர­சியல் மற்றும் மதத் தலை­மைகள் வழி­ந­டத்­த­வேண்டும். குறிப்­பாக தற்­போ­தைய சூழலில் முஸ்லிம் மக்கள் மீதான பார்வை அந்த மக்­களைப் பாரிய அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது. அவர்கள் அனை­வ­ரையும் சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் நிலைமை ஏற்­பட்­டி­ருப்­ப­தாக அந்த மக்கள் கவ­லையில் இருக்­கின்­றனர். 

இந்த நிலை வேண்டாம். நாட்டில் உயிர் அழிவை ஏற்­ப­டுத்­திய இந்த பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்கும் அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொள்­கின்­றனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் மற்றும் அமைச்­சர்கள் ஆகி­யோரும் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையும் இந்த விட­யத்தை தொடர்ச்­சி­யாக கூறி­வ­ரு­கின்­றனர். 

எனவே இந்த மக்கள் மீது வெறுப்­பு­ணர்வைக் காட்டும் வகையில் எந்­த­வொரு சமூ­கமும் செயற்­பட்­டு­வி­டக்­கூ­டாது. இந்த இக்­கட்­டான நிலை­மை­யி­லேயே அப்­பாவி முஸ்லிம் மக்­களை ஏனைய மக்கள் பாது­காக்­க­வேண்டும் என்­ப­துடன் அவர்­களை அர­வ­ணைத்துச் செல்­ல­வேண்டும். இந்த அசம்­பா­விதம் மற்றும் இழப்­புக்­க­ளுக்கு காரண கர்த்­தா­வாக முஸ்லிம் மக்­களை ஒரு­வரும் நோக்­கி­வி­டக்­கூ­டாது. முஸ்லிம் மக்கள் இந்த சம்­ப­வங்­க­ளையும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­த­வர்­க­ளையும் கடு­மை­யாக எதிர்த்து வரு­வ­துடன் அவர்­களை நிரா­க­ரிக்­கின்­றனர். எல்­லோ­ருக்கும் முன்­ன­தாக அவர்­களே இந்தப் பயங்­க­ர­வாத தாக்­கு­தலை முன்­னெ­டுத்­த­வர்­களை நிரா­க­ரித்­து­விட்­டனர். எனவே அந்த மக்கள் அசௌ­க­ரி­யப்­படும் வகையில் நாட்டில் ஏனைய சமூ­கத்­தினர் நடந்­து­கொள்­ளக்­கூ­டாது. அது­மட்­டு­மன்றி தற்­போ­தைய சூழலில் நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தவும் மக்­களின் அச்­சத்தைப் போக்­கவும் முப்­ப­டை­யி­னரும் பொலி­ஸாரும் நாட்டில் பாரிய பாது­காப்பு ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். அந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு முஸ்லிம் மக்கள் பாரிய ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி வரு­கின்­றனர். எனவே இந்த விட­யத்தில் அனைத்துத் தரப்­பி­னரும் மிகவும் நிதா­ன­மா­கவும் சகிப்­புத்­தன்­மை­யு­டனும் சமா­தா­னத்தை ஊக்­கு­விக்கும் வகை­யிலும் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. எக்­கா­ரணம் கொண்டும் முஸ்லிம் மக்­களை வெறுப்­பு­ணர்­வுடன் பார்க்­க­வேண்டாம். இந்தத் தாக்­குதல் கார­ண­மாக நாட்டு மக்கள் எவ்­வ­ளவு தூரம் அச்­ச­ம­டைந்­துள்­ள­னரோ அதே அளவு அந்த மக்­களும் பாரிய அச்­சத்­து­ட­னேயே உள்­ளனர். அந்த அச்ச நிலையை போக்­க­வேண்டும். இந்த நாட்டில் தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் இதே பிரச்­சி­னையை கடந்த 2009 ஆம் ஆண்டு வரை எதிர்­கொண்டு வந்­தனர். அக்­கா­லத்தில் அந்த மக்கள் எதிர்­கொண்ட பிரச்­சி­னைகள் ஏராளம். அதனால் இக்­கட்­டான நிலையில் ஒரு சமூ­கத்தின் மீது வித்­தி­யா­ச­மான பார்வை படும்­போது அல்­லது சந்­தே­கப்­பார்வை இருக்­கும்­போது அந்த சமூகம் எந்­த­ள­வு­தூரம் வலி­களைச் சுமந்து நிற்கும் என்­பதை தமிழ் பேசும் மக்­களால் புரிந்­து­கொள்ள முடியும். 

எனவே ஒரு­சில பயங்­க­ர­வா­திகள் மேற்­கொண்ட செயற்­பா­டு­க­ளுக்­காக  ஒட்­டுமொத்த சமூ­கத்­தையும் இவ்­வாறு நோக்க முற்­ப­டு­வது நியா­ய­மற்­ற­தாகும். எனவே முஸ்லிம் சகோ­தர மக்­களை முதலில் சந்­தேகக் கண்­கொண்டு பார்ப்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் நிறுத்­திக்­கொள்­ள­வேண்டும். அவர்கள் இந்த நாட்டில் பாது­காப்­புடன் வாழ்­கின்­றனர் என்­பதை அவர்­க­ளுக்கு உண­ர­வைக்­க­வேண்­டி­யது எமது கட­மை­யாகும். இந்த இக்­கட்­டான நிலை­மையில் இந்த மக்­களை அர­வ­ணைத்துச் செல்­வதொன்றே அவ­சி­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது. 

சமூகம் பொறுப்பாக முடியாது,

ஒரு­சில அடிப்­ப­டை­வா­திகள் மேற்­கொண்ட செயற்­பா­டு­க­ளுக்கு அமைய ஒட்­டு­மொத்த சமூ­கத்­தையும் வெறுக்க முற்­ப­டக்­கூ­டாது. விசே­ட­மாக சக முஸ்லிம் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போது வார்த்தைப் பிர­யோ­கங்கள் மிக கவ­ன­மாக இருக்­க­வேண்டும். அவர்­க­ளது மனதைப் புண்­ப­டுத்­தும் வ­கை­யி­லான சொற்­பி­ர­யோ­கங்­களைத் தற்­போ­தைய சூழலில் பிர­யோ­கிக்கக் கூடாது. அவர்­களின் உணர்­வு­களை மதிக்க முற்­ப­ட­வேண்டும். இந்த இக்­கட்­டான கட்­டத்­தில்தான் ஏனைய சமூ­கத்­தினர் முஸ்லிம் மக்­க­ளுடன் ஒற்­று­மை­யா­கவும் புரிந்­து­ணர்­வு­டனும் அவர்­களின் உணர்­வு­களைப் புரிந்­து­கொள்­கின்­ற­வர்­க­ளா­கவும் செயற்­ப­ட­வேண்டும். 

இது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­யி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மிக முக்­கிய சில விட­யங்­களைக் குறிப்­பிட்­டி­ருந்தார். இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் கார­ண­மாக ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் பயங்­க­ர­வா­தத்துக்குள் தள்­ளு­வதா என்­பதை யோசிக்க வேண்டும். விடு­த­லைப்­பு­லிகள் காலத்தில் சகல தமி­ழரும் புலிகள் என்ற கருத்து உருப்­பெற்­றது. இதனால் எமக்குள் பிரிவு ஏற்­பட்­டது. 83 கல­வ­ரத்தில் தமி­ழர்­களின் சொத்­துக்கள் நாச­மாக்­கப்­பட்­டதை அடுத்து தமிழ் இளை­ஞர்கள் புலி­க­ளுடன்  இணைந்­தனர். நாம் தமிழர் மீதான அவ நம்­பிக்கை கொண்­ட­மையே 30 ஆண்­டு­கால யுத்­தத்தை உரு­வாக்க கார­ண­மாக அமைந்­தது. ஆகவே  இப்­போது நாம் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும். விடு­த­லைப்­பு­லிகள் என தமி­ழர்­களைப் பார்த்­த­தைப்போல் முஸ்­லிம்­களைப் பயங்­க­ர­வா­திகள் என பார்க்க வேண்டாம்.  விடு­த­லைப்­பு­லிகள் என்ற பெயரில் தமி­ழர்­களைப் போராட்­டத்துக்கு தள்­ளி­ய­தைப்­போன்று  இந்த நாட்­டுடன் தொடர்­பில்­லாத ஒரு இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தத்தை சுட்­டிக்­காட்டி ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் பயங்­க­ர­வா­தத்­துக்குள் தள்­ளக்­கூ­டாது 

அந்­த­வ­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டின் தலைவர் என்ற ரீதியில் இந்த முக்­கி­ய­மான விட­யத்தைக் கூறி­யி­ருக்­கின்றார்.  மிக முக்­கி­ய­மாக 1983 ஆம்   ஆண்டு கல­வரம்  இந்த நாட்டில் எவ்­வா­றான விளைவை ஏற்­ப­டுத்­தி­யது என்­ப­தனை உணர்ந்து நாம் செயற்­ப­ட­வேண்டும் என்­ப­தனை ஜனா­தி­பதி  நினை­வூட்­டி­யி­ருக்­கின்றார்.  அதன் விளை­வாக நாம்  30 வரு­டங்கள்   நெருக்­க­டி­களை எதிர்­கொண்டோம். எனவே யாரும் தற்­போ­தைய  சூழலில்  தூர­நோக்­கற்ற செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து  பழைய  நிலை­மைக்கு நாட்டைக் கொண்டு சென்­று­வி­டக்­கூ­டாது.  

அதே­போன்று கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையும் இந்த விடயம் தொடர்பில் சில முக்­கி­ய­மான ஆழ­மான கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்தார். அதா­வது  கொச்­சிக்­கடை,  மட்­டக்­க­ளப்பு மற்றும் கட்­டு­வப்­பிட்­டிய போன்ற தேவா­ல­யங்­களில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்கள்  முஸ்லிம் மக்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­ட­வை­யல்ல. அதனை நான் தெளி­வாகக் குறிப்­பிகி­டுன்றேன். இது தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்ட இளைஞர் குழு­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட செய­லாகும். அதற்கு முஸ்லிம் மக்­களை பலி­யாக்­கி­விடக் கூடாது. 

எனவே நாம் ஒரு­நாளும் உங்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட மாட்டோம். தயவு செய்து முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராகக் கையைத் தூக்க வேண்டாம் என கத்­தோ­லிக்க மக்­க­ளிடம்   கோரிக்கை விடுக்­கின்றேன். அவ்­வாறு எந்த செயற்­பாட்­டையும் முன்­னெ­டுப்­ப­தற்கு எந்த உரி­மையும் கிடை­யாது. அவ்­வாறு செய்தால் அது கத்­தோ­லிக்க மதத்­துக்கு எதி­ரா­ன­தாகும். நாம் இரண்டு தரப்­பி­னரும் சகோ­த­ரர்கள். நாம் அனை­வரும் ஆதாமின் பிள்­ளைகள். எனவே நாம் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். நடை­பெற்ற அசம்­பா­வி­தத்­துக்கு முஸ்­லிம்கள் பொறுப்­பாக முடி­யாது. அதனால் அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கு இடை­யூ­றாக இருக்கக் கூடாது. அமை­தி­யா­கவும் சமா­தா­ன­மா­கவும்  அனை­வரும் வாழ வேண்டும். முஸ்லிம் மக்­களும் கிறிஸ்­தவ மக்­களும் சகோ­த­ரத்­து­ட­வத்­துடன் வாழ வேண்டும். குறை­பா­டுகள் இருக்­கலாம். மனி­தர்கள் மத்­தியில் குறை­பா­டுகள் ஏற்­ப­டலாம். அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் பொறுமை காத்து சகோ­த­ரத்­து­வத்­துடன் வாழ வேண்டும்.

கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள்,

அதன்­படி பார்க்­கும்­போது நாட்டின் ஜனா­தி­ப­தியும் கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் பேரா­யரும் தெரி­வித்­துள்ள விட­யங்கள் தொடர்பில் அனைத்துத் தரப்­பி­னரும் கருத்தில் கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தற்­போது இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தலின் பின்னர் சில முக்­கிய சட்­ட­திட்­டங்கள் அமு­லுக்கு வந்­துள்­ளன. எப்­ப­டி­யி­ருப்­பினும் முஸ்லிம் சகோ­தர மக்­களின் கலா­சார விழு­மி­யங்­களைப் பாதிக்­கா­த­வாறு இந்த விட­யங்கள் இருக்­க­வேண்டும். தற்­போது புர்கா அணி­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய சூழலில் பாது­காப்பு நிலை­மையைக் கருத்­திற்­கொண்டு இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் சமூ­கத்­தினர் இந்தத் தீர்­மா­னத்தை ஏக­ம­ன­துடன் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றனர். 

இந்த இடத்தில் முஸ்லிம் அர­சி­யல் த­லை­மை­க­ளுக்கு மிக முக்­கிய பொறுப்பு காணப்­ப­டு­கின்­றது. அவர்கள் தமது சமூ­கத்­தி­ன­ருக்கு சரி­யான தலை­மைத்­து­வத்தை வழங்­க­வேண்டும். இந்தத் தீர்க்­க­மான கட்­டத்தில் உணர்ச்­சி­வ­சப்­பட்டு கருத்­துக்­களை வெளி­யி­டு­வது பொருத்­த­மாக அமை­யாது என்­பதை தலை­மைத்­து­வங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். கடந்த புதன்­கி­ழமை கூட பாரா­ளு­மன்­றத்தில் இந்த விவ­காரம் தொடர்பில் பாரிய வாதப் பிர­தி­வா­தங்கள் சர்ச்­சைகள் ஏற்­பட்­டி­ருந்­தன. ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் மக்கள் மத்­தியில் அமை­தியை ஏற்­ப­டுத்­தவும் சகோ­த­ரத்­து­வத்தை வலுப்­ப­டுத்­தவும் அச்ச உணர்வைப் போக்­கவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும். 

தலைமைத்துவங்களின் பொறுப்பு,

இதற்­காக முஸ்லிம் அர­சியல் தலை­மைத்­து­வங்கள் அந்த மக்­களை சரி­யான முறையில் வழி­ந­டத்­து­வ­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வேண்டும். எந்­த­வொரு சமூ­கமும் வழி­த­வறிச் சென்­று­வி­டக்­கூ­டாது. அந்த இடத்தில் சர்­வ­மதத் தலை­வர்­க­ளுக்கும் பாரிய பொறுப்பு காணப்­ப­டு­கின்­றது. அதே­போன்று பாது­காப்பு ஏற்­பா­டுகள் பலப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. எனவே அந்த செயற்­பா­டு­க­ளுக்கு அனைத்துத் தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்புத் தர­வேண்டும். 

இந்­நி­லையில் எந்­த­வொரு சமூ­கத்­தி­ன­ருக்கும் நாட்டில் அநீ­திகள் ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்கக் கூடாது எந்­த­வொரு சிறு­பான்மை சமூ­கமும் தாம் அநீ­திக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்றோம் என்று உண­ரா­த­வ­கையில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். இதில் நாட்டின் அரசின் தலை­மைத்­து­வங்­க­ளுக்கும் மதத்­த­லை­வர்­க­ளுக்கும் சிவில் சமூகத் தலை­வர்­க­ளுக்கும் பாரி­ய­தொரு பொறுப்பு இருக்­கின்­றது என்­பதை உணர்ந்து செயற்­ப­டு­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும். 

சிறு­பான்மை மக்கள் பாது­காப்­பாக தம்மை உணரும் வகையில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் இருக்­க­வேண்டும். கடந்த முப்­பது வரு­ட­கா­ல­மாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் பாரிய சொல்­லொ­ணாத்­துன்­பங்­களை அனு­ப­வித்து வந்­தனர். யுத்தம் என்­பது அனைத்துத் தரப்­பி­ன­ருக்கும் அழி­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தாகும். எனினும் கடந்த 2009ஆம் ஆண்டு வரை இந்த யுத்தம் கார­ண­மாக தமிழ் மக்கள் எதிர்­கொண்ட பிரச்­சி­னைகள் சொற்­களால் விப­ரிக்­கப்­பட முடி­யா­த­வை­யாகும். 

அவ்­வா­றா­ன­தொரு நிலைமை மீண்டும் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது. அதன்­படி பார்க்கும் போது தற்­போது முஸ்லிம் மக்கள் தொடர்­பான அணு­கு­முறை சரி­யா­ன­தாக இருக்­க­வேண்டும். அவர்­களை புறந்­தள்ளும்­வ­கையில் எந்த செயற்­பா­டு­களும் இருக்­கக்­கூ­டாது. பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் தலை­மைத்­து­வங்கள் வேத­னையின் கார­ண­மாக சில கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­வதைக் காண முடி­கின்­றது. ஆனால் இந்த இடத்தில் அனைத்துத் தரப்­பி­னரும் பொறு­மை­யு­டனும் சகிப்­புத்­தன்­மை­யு­டனும் செயற்­ப­டு­வதே முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாகக் காணப்­ப­டு­கின்­றது. 

ஒரு இக்­கட்­டான நிலை­மைகள் ஏற்­படும் பட்­சத்தில் குறிப்­பாக மக்கள் பொறு­மை­யுடன் செயற்­ப­ட­வேண்டும். யாரும் யாருக்கு எதி­ரா­கவும் வன்­மு­றை­களைக் கையில் எடுத்­து­வி­டக்­கூ­டாது. எந்­த­வொரு சூழ்­நி­லை­யிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டுவிட வேண்டாமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலிந்து கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் அந்த கோரிக்கையின் தாற்பரியத்தை மக்கள் புரிந்துகொண்டு செயற்படவேண்டும். வன்முறையின் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். 

அதனால் முஸ்லிம் சமூகத்தினர் மீதான கெடுபிடிகளுக்கோ சந்தேகத்துடனான பார்வைக்கோ ஒருபோதும் இடம் வைக்கக்கூடாது.இதனை நாட்டின் தலைமைத்துவம் உறுதியாகக் கவனிக்கவேண் டும். ஏற்கனவே ஜனாதிபதியின் இது தொடர்பான அறிவிப்புக்கள் திருப்திகரமாக அமைந்திருக்கின்றன. அவற்றை அனைத்து தரப்பினரும் ஏற்று நடக்கவேண்டும் என்பதே இங்கு அவசியமாகின்றது. ஒரு சமூகத்தை காயத்துக்குட்படுத்தி வடுக்களை ஏற்படுத்துவதன் மூலம் எமது இழப்பை ஈடுசெய்ய முடியாது. 

இதன் பின்னர் இவ்வாறானதொரு அசம் பாவிதம் இடம்பெறாதவகையில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயற்படுவதே தேசிய அவசியமாக காணப்படுகின்றது.

எனவே இக்கட்டான இந்த சூழலில் முஸ்லிம் மக்களை அரவணைத்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும். ஒருசில அடிப்படை வாதிகளின் செயற்பாடுகளுக்காக முழு சமூகத்தையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது நியாயமற்றது. இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அந்த மக்கள் வழங்கும் ஒத்துழைப்பை கவனத்தில் கொண்டு அவற்றை சரியாகப் பயன்படுத்தி அமைதியான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒற்றுமையுடன் திடசங்கற்பம் பூணவேண்டும் என்பதே யதார்த்தமான தேவையாகக் காணப்படுகின்றது. 

ரொபட் அண்டனி

 

http://www.virakesari.lk/article/55734

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இவ்வாறான காணொளிகளை வெளியிட்டு (இங்கு இணைத்ததை குறிப்பிடவில்லை) இந்த கொலையை ஏதோ ஒருவகையில் ஒரு தரப்பு நியாயப்படுத்த முனைகின்றதுபோல் தெரிகின்றது. மனைவி காதலி முன்னாள் மனைவி என யாராக இருந்தாலும்  அவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களை அடிப்பது கொலை செய்யும் உரிமை கணவன் காதலனுக்கு இல்லை. அவ்வாறு செய்வது காட்டுமிராண்டித்தனம். பிடிக்கவில்லையாயின் அந்தந்த நாட்டு சட்டத்தை நாடி பிரிந்து செல்வது ஒன்றுதான் நியாயமானதும் நாகரீகமானதும்.    
  • எவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை! கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரை அவன்கார்ட் வழக்கிலிருந்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது. எவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தாக்கல் செய்த வழக்கானது கடந்த 20 ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.  கடந்த 20 ஆம் திகதி வழக்கு  கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க  முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது, கடந்த 12 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றமானது, நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு குறைபாடுடையதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளதால் கோத்தா உள்ளிட்ட சந்தேக நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு, அவர்களின் சட்டத்தரணிகள் கோரினர். எனினும் மேன் முறையீட்டு நீதிமன்றின் குறித்த தீர்ப்பின் பிரதி, நீதிவான் நீதிமன்ருக்கு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டிய மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க, வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன், மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பின் பிரதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் பதிவாளருக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, முன்னாள் மேலதிக பாதுகாப்பு செயலர் சுஜாதா தமயந்தி ஜயரத்ன,  இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரால்  வடுகே பாலித்த பியசிறி பெர்னாண்டோ, கருணாரத்ன பண்டா எகொடவல,  முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் சோமதிலக திஸாநாய்கக்க, எவன்கார்ட் நிறுவன தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, முன்னாள் கடற்படை தளபதி  அத்மிரால் ஜயநாத் குமாரசிறி கொலம்பகே,  முன்னாள் கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் பிரன்சிஸ் டயஸ் ஜயரத்ன பெரேரா ஆகியோருக்கு எதிராக 19 குற்றச்சாட்டுக்களின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தது.   2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் 2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் எவன்கார்ட் மெரிடைம்ஸ் சேர்விசஸ் தனியார் நிறுவனத்துக்கு, மிதமிஞ்சிய சலுகை, சட்ட விரோதமான பிரதி பலன் அல்லது அனுசரனை அல்லது அனுகூலம் ஒன்றினை பெற்றுக்கொடுப்பதை நோக்கக் கொன்டு அல்லது அவ்வாறு இடம்பெறும் என அறிந்திருந்தும்  குறித்த நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்ஜியத்தை அமைக்க அனுமதி கொடுத்ததன் ஊடாக ஊழல் எனும் குற்றத்தை புரிந்தமை அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களே இந்த 8 பேருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ளன.  இந் நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, ஆணைக் குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெறாமலேயே தான் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே அப்படி தககல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்து தான் உள்ளிட்ட 8 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறும் பிரதிவாதிகள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இலஞ்ச ஊழல் சட்டத்தின் 78 (1) ஆம் பிரிவின் கீழ் ஆட்சேபணத்தை முன்வைத்தனர். எனினும் அதனை நீதிவான் நீதிமன்றம் அப்போது நிராகரித்தது வழக்கை விசாரிக்க தீர்மனைத்தது. இந் நிலையில்  வழக்கை விசாரணை செய்ய, கொழும்பு பிரதான நீதிவான் எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் நிராகரிக்கப்பட்டு அந்த தீர்மானம்  நியாயமானது என கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.    இந் நிலையிலேயே, மேன் முறையீட்டு நீதிமன்றில்,  மேல் நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றங்களின் தீர்மானத்துக்கு எதிராக மீளாய்வு மனு கோத்தாபய சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.  அந்த வழக்கை பரிசீலனை செய்த மேன் முறையீட்டு நீதிமன்றம், குறித்த வழக்கை நீதிவான் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை உத்தரவொன்றினைப் பிறப்பித்து,   தன் முன் முன்வைக்கப்பட்ட மேன் முறையீட்டு மீளாய்வு மனுவை விசாரித்தது. இதன்போது  முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தா சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, அலி சப்றி, சட்டத்தரணிகளான சுகத் கல்தேரா, ருவந்த குரே, பாரித் டி மெல் ஆகியோர் சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய ஆஜராகி வாதங்களை  முன்வைத்திருந்தனர். இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, ஆணைக் குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெறாமலேயே தான் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே அப்படி தககல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்து தான் உள்ளிட்ட 8 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறும்  கோத்தாபய ராஜபக்ஷ சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை மேன் முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டே கடந்த 12 ஆம் திகதி, அவர்களை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/65353  
  • காஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது இந்திய அரசாங்கம் காஸ்மீரில் பெருமளவு சிறுவர்களை கைதுசெய்து  தடுத்துவைத்துள்ளது என தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. காஸ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதன் காரணமாகவும் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதன் காரணமாகவும்  காஸ்மீரின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக பிபிசி தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்காக சிறுவர்களையும் இளைஞர்களையும் அதிகாரிகள் கைதுசெய்கின்றனர் என காஸ்மீரில் பல பகுதிகளில் பொதுமக்கள் தெரிவித்தனர் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். நபர் ஒருவர் தான் தனது 16 வயது மகனுடன் சேர்த்து தடுத்துவைக்கப்பட்டதாக தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள பிபிசி அவர்கள் இந்திய பாதுகாப்பு படையினரால்  பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக முகத்தை மூடியபடி கருத்து தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளது. இராணுவத்தினர் தங்களை கைதுசெய்து காவல்துறையினரிடம் கையளித்தனர் அவர்கள் எங்களை ஆறு நாட்கள் தடுத்து வைத்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் சுதந்திரம் கோருகின்றீர்கள் கற்களால் எங்களை தாக்குகின்றீர்கள் என தெரிவித்து அவர்கள் எங்களை தாக்கினர் என தந்தையும் மகனும் தெரிவித்துள்ளனர். பிள்ளைகள் சித்திரவதை செய்யப்படுவதை பார்க்க விரும்பாததால் நான் மரணிக்கவேண்டும் என விரும்பினேன் என தந்தை தெரிவித்துள்ளார். ஆனால் என்னால் என்ன செய்ய முடியும் நான் வலுவற்றவனாக அதிகாரமற்றவனாக காணப்பட்டேன் என தெரிவித்துள்ள தந்தை பின்னர் நாங்கள் அப்பாவிகள் என தெரிவித்து எங்களை விடுதலை செய்தனர் என குறிப்பிட்டுள்ளார். அங்கு நடந்தவைகளால் நான் இன்னமும் அச்சத்தின் பிடியி;ல் சிக்கியுள்ளேள் இரவில் நான் அச்சமடைகின்றேன் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றேன் வெளியில் செல்வதில்லை என மகன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். என்னால் இரவில் உணவு உண்ணவோ உறங்கவோ முடியவில்லை அவர்கள் மீண்டும் வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார். காஸ்மீரின் 17 ற்கும் மேற்பட்ட குடும்பத்தவாகள் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது.’ சிறுவர்கள் கல்எறியும் போராட்டங்களில் ஈடுபடுவது வழமை என தெரிவித்துள்ள பிபிசி அதேவேளை இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளவேண்டும் என சட்டங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆண்களும் இளைஞர்களும் சிறுவர்களும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இதற்கான எந்த காரணங்களையும் எந்த நியாயப்பாட்டினையும் முன்வைக்காது அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என  மிர் உர்பி என்ற சட்டத்தரணி தெரிவித்துள்ளார். குடும்பத்தவர்கள் அவர்களை சந்திப்பதற்கான அனுமதி கூட வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளாh. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தவர்களிற்கு சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன, உலகின் அனைத்து மக்களிற்கும் பொதுவான மனித உரிமைகள் காஸ்மீரில் முற்றாக மறுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனது 14 வயது மகன் காவல்துறையினரால் தடுத்துவைத்துள்ளனர் என பெண்மணியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளாh. இரவில் வந்து எனது கணவரை கைதுசெய்தனர் பின்னர் எனது கணவரை விடுதலை செய்வதற்காக எனது மகனை தருமாறு கேட்டு தடுத்து வைத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். தனது மகனை காவல்நிலையத்தில் பார்த்ததாக தந்தை தெரிவித்துள்ளார். நான் எனது மகனை பார்க்க சென்றவேளை அவன் கதறிஅழ தொடங்கிவிட்டான் நான் எந்த குற்றமும் செய்யவில்லை கல் எறியவில்லை ஏன் அவர்கள் என்னை கைதுசெய்தனர் என அவன் கதறினான் என தந்தை தெரிவித்துள்ளார். தங்கள் பிள்ளைகளிற்கும் இந்த கதி நேரலாம் என காஸ்மீரில் பலர் அச்சத்துடன் உள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிப்பதற்கு காவல்துறையினர் மறுத்துவிட்டனர் எனவும் குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்களின் விபரங்களை வெளியிட்டால் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என இந்திய இராணுவத்தினர் தெரிவித்தனர் எனவும் பிபிசி தெரிவித்துள்ளது.   https://www.virakesari.lk/article/65350  
  • பாகிஸ்தானில் பஸ் விபத்து : 26 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில்  நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஸ்கார்டு நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்தித்தில் உள்ள நகரொன்றுக்கு சென்ற பஸ்ஸில் 50 பயணிகள் பயணித்துள்ளனர். பஸ்ஸில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதியின் கட்டுபாட்டை இழந்த பஸ், சாலையின் அருகில் உள்ள மலையில் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இவ்விபத்தில் பொதுமக்கள் உற்பட சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தோடு கடந்த மாதம் இவ்வாறான பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/65346
  • கவிழ்ந்தது பிரிட்டனின் 178 வருட தோமஸ்குக் நிறுவனம்-இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இக்கட்டான நிலையில் பிரிட்டனை சேர்ந்த பிரபல சுற்றுலா போக்குவரத்து குழுமமான தோமஸ் குக் வீழ்ச்சியடைந்து தனது வர்த்தக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 178 வருடகால நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்டப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடனில் சிக்கியிருந்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. தோமஸ் குக் நிறுவனம் உடனடியாக தனது சேவைகளை நிறுத்திவிட்டது என பிரிட்டனின் சிவில் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. தோமஸ்குக் தனது நடவடிக்கைகளை இடைநிறுத்தியதன் காரணமாக உலகின் பல நாடுகளில் இடைநடுவில் சிக்குண்டுள்ள  பிரிட்டிஸ் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பிரிட்டனின் சிவில் விமானப்போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் இடைநடுவில் விடப்பட்டுள்ள 150.000 பயணிகளை பிரிட்டனிற்கு அழைத்து வருவதற்கான ஒப்பரேசன் மட்டர்ஹோர்ன் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதேவேளை உலகநாடுகளை சேர்ந்த ஆறு இலட்சம் பேர் வெளிநாடுகளில் சிக்குண்டிருக்கலாம் என  டெலிகிராவ் தெரிவித்துள்ளது. தனது நிறுவனம் கவிழ்ந்தமை மிகவும் கவலைக்குரிய விடயம் என தோமஸ் குக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். தோமஸ் குக் நிறுவனம் மூடப்பட்டதால் சர்வதேச அளவில் 22,000 பேரும்  பிரிட்டனில்  9000 பேரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தோமஸ்குக் நிறுவனம் வீழ்ச்சியடைந்தமை பணியாட்களிற்கும் சுற்றுலாப்பயணிகளிற்கும் மிகவும் கவலையளிக்கின்ற விடயம் என தெரிவித்துள்ள பிரிட்டனின் போக்குவரத்து துறை அமைச்சர் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாப்பயணிகள் அவர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவரும் மிகவும் சவாலான பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை புரிந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தோமஸ்குக்கின் வாடிக்கையாளர்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக பிரிட்டன் பல விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தோமஸ் குக் நிறுவனத்தினால் விமானநிலைய கட்டணம் செலுத்தப்படாததை தொடர்ந்து நிறுவனத்தின் விமானங்களை கைப்பற்றும் நடவடிக்கைகளை  பிரிட்டன் விமானநிலையங்கள் ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.   https://www.virakesari.lk/article/65344