Recommended Posts

பேஸ்புக் , வட்ஸ் எப் , வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீண்டும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

குறுகிய காலத்திற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்தார்.

நேற்றைய தினம் சில பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்றநிலைமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டினுள் சமாதானத்தை பேணுவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/119809

Share this post


Link to post
Share on other sites
35 minutes ago, போல் said:

நாட்டினுள் சமாதானத்தை பேணுவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் சமாதானத்தைப் பேண.... ஸ்ரீலங்கா அரசியல்வாதிகளுக்கு.... 
பத்து வருசத்துக்கு மேல் எடுத்தால்....நோய் முற்றி விட்டது என்று அர்த்தம்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, தமிழ் சிறி said:

நாட்டில் சமாதானத்தைப் பேண.... ஸ்ரீலங்கா அரசியல்வாதிகளுக்கு.... 
பத்து வருசத்துக்கு மேல் எடுத்தால்....நோய் முற்றி விட்டது என்று அர்த்தம்.

நாய்க்கு எங்க அடிபட்டாலும் காலை தூக்குவது போல இப்ப இந்த முடக்கம் நடக்குது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பேஸ்புக்கை தடை பண்ணா ஓட்டோ கிளம்புமா..? என்னப்பா சொல்ற..🙂

maxresdefault.jpg

Share this post


Link to post
Share on other sites

சமூகவலைத்தளங்கள் மீது தடை விதிப்பது முட்டாள்தனமான வேலை!

சமூகவலைத்தளங்கள் மீதான தடை மற்றும் ஊடகங்களில் சில காட்சிகளை காண்பிக்க தடை விதிக்கின்றமை மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் அச்சத்தையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளங்கள் மீதான தடையை விதித்தல், ஆயுதங்கள் பிடிபடும் போது அவற்றை ஊடகங்களில் காண்பிக்கவிடாமல் தடுத்தல் என்பன முட்டாள்தனமான வேலை.

இதனால் நாட்டு மக்களுக்கு சந்தேகம் அதிகரிக்குமே தவிர பிரச்சினை தீராது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இலங்கை பௌத்த நாடு இல்லை என்றும், இது இலங்கையர்களின் நாடே என்றும் அமைச்சர் மங்கல சமரவீர தெரிவித்திருந்த கருத்துக்கு, இதன்போது மகிந்த ராஜபக்ஷ எதிர்ப்பை வெளியிட்டார்.

ஏற்கனவே கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இது சிங்கள பௌத்த நாடு என்பதை தெளிவாக கூறி இருப்பதாகவும், யாருடைய கூற்றை கேட்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொள்ளுமாறும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

https://www.ibctamil.com/srilanka/80/119874

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

முதல் முதலாக twitter உம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதாம். (இலங்கை நேரம் 9.50 pm இலிருந்து)

(அனைத்து Dialog Axiata ISP subscribers க்கும்)

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

சமூக ஊடகங்கள் மீதான தடை தொடர்கிறது ; இன முறுகலை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டால் கடூழியச் சிறை

இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

sri-lanka-police-spokesman.jpg

இதேவேளை, சட்டத்தை பயன்படுத்தி அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் குறித்து கண்டறிய பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பொலிஸ் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் குற்றவாளியாக இனங்காணப்படுபவர்களுக்கு எதிராக 3 முதல் 7 வருடங்கள் வரை கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்தும் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

 

http://www.virakesari.lk/article/55881

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • உலகிலேயே அதிகளவிலான புலம்பெயர் தமிழர்கள் இலங்கையிலிருந்தே வெளிநாடுகளுக்கு சென்று வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது, தமது உயிரை பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன் பல இலங்கையர்கள் ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வாழ்ந்து வருகின்றமையை காண முடிகின்றது. தமிழர்கள் மாத்திரமன்றி, சிங்களவர்களும் புலம்பெயர்ந்து வாழ்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. யுத்த சூழ்நிலை மாத்திரமன்றி, அரசியல் பிரச்சினைகள் காரணமாக ஊடகவியலாளர்கள், செல்வந்தர்கள், சமூக செயற்பட்டாளர்கள் என பலர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கையில் பிறந்து, வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 3 மில்லியன் என கணிக்கப்பட்டுள்ளது.   பல்வேறு காரணங்களின் நிமித்தம் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ளவர்கள், இலங்கையின் பொருளாதாரம், சமூக செயற்பாடுகள், அரசியல் நிலவரங்கள் என அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இலங்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ள புலம்பெயர் தமிழர்களின், இந்த முறை ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு அவதானிக்கின்றனர் என்பது தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது. கனடாவில் புலம்பெயர்ந்து வசித்து வரும் இலங்கையின் முன்னாள் பிரபல ஒலிபரப்பாளர் கே.ஆர்.கிரிஷ்ணாவிடம் நாம் வினவினோம். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்காது என்ற நிலைப்பாட்டிலேயே தாம் உள்ளதாக கே.ஆர்.கிரிஷ்ணா தெரிவிக்கின்றார். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி அமைப்பதை தாம் விரும்பவில்லை என்பதுடன், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கூட தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டுகின்றார். அத்துடன், இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அல்லது அவர் சார்ந்த ஒருவருக்கு ஆதரவு வழங்க புலம்பெயர் தமிழர்கள் விரும்பவில்லை என அவர் கூறுகிறார். ஒரு வேளை, ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகும் பட்சத்தில், அது இலங்கையில் யுத்த கால சூழ்நிலையை மீண்டும் தங்கள் உறவினர்களுக்கு ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ளதாகவும் இலங்கையின் முன்னாள் பிரபல ஒலிபரப்பாளர் கே.ஆர்.கிரிஷ்ணா குறிப்பிடுகின்றார். கனடாவில் தற்போது வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழரான இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஆர்.ரமணனிடம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பிபிசி தமிழ் வினவியது. ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கும் பட்சத்தில், இலங்கையில் இதுவரை காலமும் இருந்து வந்த மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம், ஊடக சுதந்திரம் போன்றவை முற்றாக முடக்கப்படும் அச்சம் எழுந்துள்ளதாக ஆர்.ரமணன் கூறுகின்றார். தமிழ் பிரதேசங்களில் கடந்த காலங்களில் இடம் பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள், நினைவெழுச்சி நிகழ்வுகள், அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களின் நிலைமைகள் குறித்து கரிசனை கொள்ளப்படும் நிலைமை உருவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மறுபுறம் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறும் பட்சத்தில், ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் காணப்பட்ட அதிகார போட்டி, ரணில் விக்ரமசிங்கவிற்கும், சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார். தமது அதிகாரத்தை தக்க வைப்பதில் இரண்டு தலைவர்களும் காண்பிக்கும் அக்கறை என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையும் என அவர் குறி;ப்பிடுகின்றார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது போன சூழ்நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் சஜித் பிரேமதாஸ வெற்றி பெறுவதை விடவும், கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதை விரும்பியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். கோட்டாபய ராஜபக்ஷவின் பலவீனங்களை நன்கறிந்துள்ள மேற்குலக நாடுகள், அவரை தமது தேவைக்கு ஏற்ப ஆட வைக்க முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளதாகவும் ஆர்.ரமணன் சுட்டிக்காட்டுகிறார். இந்த சூழ்நிலையில், பெரும்பான்மை சிங்கள மக்களின் பேராதரவு பெற்று, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படக்கூடியவர், சிறுபான்மையான தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கு எதையும் பெரிதாக வழங்கி விடப் போவதில்லை என்ற யதார்த்தத்தை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என புலம்பெயர் தமிழரான இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஆர்.ரமணன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/sri-lanka-50071067
  • சிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் எர்டகன் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாக, துருக்கி அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க, அந்நாட்டின் குர்து படைகளுடன் இணைந்து செயல்பட்ட அமெரிக்கா, தனது  துருப்புகளை அண்மையில் திரும்பப் பெற்றது. அதுமுதல் வடக்கு சிரியா பகுதிகளில் வாழும் குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து துருக்கி அதிபர் எர்டகனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில், முட்டாள்தனமாக செயல்படாமல், ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்வோம் என டிரம்ப் கூறியிருந்தார். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு எர்டகன் காரணமாக வேண்டாம் என கூறிய டிரம்ப், துருக்கியின் பொருளாதாரம் அழிவதற்கு தானும் பொறுப்பாக விரும்பவில்லை எனவும் மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த கடிதத்தின் நகலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள நிலையில், துருக்கி அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதம் குப்பை தொட்டியில் வீசப்பட்டதாக துருக்கி அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.polimernews.com/dnews/85233/டிரம்ப்-அனுப்பிய-கடிதத்தைதுருக்கி-அதிபர்-குப்பைதொட்டியில்-வீசிவிட்டதாகதகவல்   Read President Trump’s Bizarre Letter to Turkey’s President             பின் குறிப்பு : இது ஒரு மூன்றாம் வகுப்பு கற்கும் மாணவரின் கடிதத்தை ஒத்ததாக உள்ளது என பலராலும் வர்ணிக்கப்படுகின்றது,
  • (இராஜதுரை ஹஷhன்) ஐந்து தமிழ்த் தேசிய கட்சிகள் 13 தீர்மானங்களை உள்ளடக்கிய   கோரிக்கைகளை தற்போது முன்வைத்துள்ளமை காலத்தினை வீணடிக்கும் செயற்பாடாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, விடுதலை புலிகள் ஆயுதமேந்தி கோரியதை மறைமுக ஆவணங்களின் ஊடாக நிற‍ைவேற்ற இடமளிக்க முடியாது என்றும் கூறினார். அத்துடன் அரசியல் நோக்கங்களை கொண்ட அரசியல் கட்சிகளின் ஆதரவினை கோரவில்லை தமிழ் மக்களின் ஆதரவினையே கோருகின்றோம். அரசியலமைப்பின் 13 வது திருத்த உள்ளடக்கங்கள்  அனைவருக்கும் ஏற்றால்போல் பாதிப்பின்றி செயற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/67110
  • இந்த பாரம்பரிய சடங்குகள் மற்றவரைப் பாதிக்கும் போது அதை பிற்போக்குத்தனமாக நான் சுட்டிக் காட்டுவதுண்டு! உதாரணமாக உங்கள் பாதுகாப்பில் இருக்கும் மைனர் பிள்ளைகளை நீங்கள் சடங்கு என்று அலகு குத்தினால் அதை யாரும் பிற்போக்கு சட்ட விரோதம் என்று சொல்ல முடியும். உங்கள் வாதப் படி மேற்கு நாடுகளில் நடக்கும் FGM ஐக் கூட நாம் தனியுரிமை என்று விட்டு விட வேண்டும்! அப்படி முடியாது! மற்றவருக்கு பாதிப்பில்லாத சம்பிரதாயங்களை அவற்றுக்கு போலி விஞ்ஞான விளக்கம் கொடுக்காமல் செய்யுங்கள்! மற்றவரைப் பாதிப்பவற்றை  செய்யும் போது கேள்விகள் வரவே செய்யும்! "இலங்கையில் மத போதனை செய்ய எந்த தடையும் சட்ட ரீதியில் இல்லை. இது fact. சட்ட ரீதியில் தடையில்லாத ஒன்றை ஒருவரின் தனியார் வீட்டில் வைத்துச் செய்வதற்கு கிராம சேவகரின், பொலிசாரின் அனுமதி வேண்டும்!"இந்த இரண்டு வசனங்களுக்கும் இருக்கும் முரண்பாட்டைப் புரிந்து கொள்ள இயலாதவர் அல்ல நீங்கள்! இலங்கையின் எந்த சட்டம் மத போதனையை நெறிப்படுத்துகிறது என்று காட்டும்ப் படி கேட்டிருந்தேன்! வழமை போல பதில் இல்லாததால் நீங்கள் வழுவல் நழுவல் என்று ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது! சட்டங்களுக்கு சரத்து எண் இருக்கிறது! அதைச் சுட்டிக் காட்டுங்கள் பேசலாம்! இல்லையெனில் தனியே நின்று பேசிக் கொண்டிருங்கள்!