Jump to content

அமைச்சர் ஒருவரின் ஆசிர்வாதத்துடன் வவுனியாவில் தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் முயற்சிகள் கனகச்சிதம்!

Recommended Posts

வவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வவுனியா A9 பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள நொச்சிமோட்டை கிராமத்தில் உள்ள பல காணிகளுக்கு காணிக் கச்சேரி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி காணிகளை அபகரிப்பதோடு அதில் முஸ்லீம் மக்களை குடியேற்றி தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் முயற்சிகள் நடந்தேறிவருகின்றது.

சுமார் 180 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு காணிக்கச்சேரி இடம்பெற்று அவற்றில் சுமார் 100 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு இப்பிரதேசங்களை ஒரு போதும் சேர்ந்திராத பிரதேச செயலாளரின் மனைவியின் உறவினர்கள் அண்ணனின் உறவினர்கள் என ஏறத்தாழ நூறு பேருக்குமேல் இவ்வாறு காணி அனுமதிப்பத்திரங்கள் பதியப்பட்டு வவுனியா பிரதேச செயலாளரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது

இதில் திடுக்கிடும் உன்மையாதெனில் பிரதேச செயலாளரின் உறவினர்கள் மற்றும் பிரதேச செயலாளருக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் தனது கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான காணிகளை அவர்களின் பெயரில் பதிந்து பின்பு LDO காணிப்பத்திரங்களுக்கான உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றதும் முஸ்லீம்மக்களின் பெயரில் மாற்றம் செய்வதே பிரதேச செயலாளர் மற்றும் அமைச்சர் ஒருவரின் திட்டம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.இந்த சதித்திட்டத்துக்கு வவுனியாவை சேரந்த ஒரு சில வழங்கறிஞர்களும் உடந்தையாக இருக்கின்றனர்.

மேலும் நொச்சிமோட்டை கிராமம் மட்டுமல்லாது A9 பிரதான வீதியை அண்மித்த ஏனைய சில தமிழர் கிராமங்களும் இந்த சதித்திட்ட வலைக்குள் வீழ்ந்துள்ளதாக அறியமுடிகிறது உறுதிப்பத்திரங்கள் மாற்றப்பட்டதும் குடியேற்றங்களை சட்டரீதியாக தடுக்கமுடியாது என்பது வெளிப்படை உன்மை. அடுத்த சில வருடங்களில் வவுனியா-யாழ் வீதியை அண்மித்த பல கிராமங்களில் திடீர் இனப்பரம்பல் மாற்றமடையும் சந்தர்ப்பம் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியா பிரதேச செயலாளரின் குறித்த முறையற்ற காணி சுவீகரிப்பு நடவடிக்கை தொடர்பாக ஆதாரபூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஹனீபா அவர்களிடம் தெரிவித்திருந்த போதும். குறிப்பிட்ட அமைச்சரின் தலையீடு காரணமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் பிரதேச செயலாளருக்கு எதிராக வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவிலும் பிரதேச மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/119800?ref=rightsidebar

Link to comment
Share on other sites

On 5/13/2019 at 8:11 AM, போல் said:

சுமார் 180 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு காணிக்கச்சேரி இடம்பெற்று அவற்றில் சுமார் 100 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு இப்பிரதேசங்களை ஒரு போதும் சேர்ந்திராத பிரதேச செயலாளரின் மனைவியின் உறவினர்கள் அண்ணனின் உறவினர்கள் என ஏறத்தாழ நூறு பேருக்குமேல் இவ்வாறு காணி அனுமதிப்பத்திரங்கள் பதியப்பட்டு வவுனியா பிரதேச செயலாளரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது

இதில் திடுக்கிடும் உன்மையாதெனில் பிரதேச செயலாளரின் உறவினர்கள் மற்றும் பிரதேச செயலாளருக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் தனது கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான காணிகளை அவர்களின் பெயரில் பதிந்து பின்பு LDO காணிப்பத்திரங்களுக்கான உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றதும் முஸ்லீம்மக்களின் பெயரில் மாற்றம் செய்வதே பிரதேச செயலாளர் மற்றும் அமைச்சர் ஒருவரின் திட்டம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.இந்த சதித்திட்டத்துக்கு வவுனியாவை சேரந்த ஒரு சில வழங்கறிஞர்களும் உடந்தையாக இருக்கின்றனர்.

அரச அதிகாரிகளை வளைத்துப்போட்டு கள்ளகாணிகளை பிடிக்கும் முஸ்லிம் கயவர்களின் வழிமுறைகள் அம்பலம்!

Link to comment
Share on other sites

On 5/13/2019 at 8:11 AM, போல் said:

வவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வெளிச்சத்துக்கு வந்தபின்னர் வவுனியா சிவசக்தி ஆனந்தன், லிங்கநாதன், சத்தியலிங்கம் போன்றோர் என்ன செய்கின்றனர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Rajesh said:

வெளிச்சத்துக்கு வந்தபின்னர் வவுனியா சிவசக்தி ஆனந்தன், லிங்கநாதன், சத்தியலிங்கம் போன்றோர் என்ன செய்கின்றனர்?

வாயைத் திறந்தால் இவர்களுமொல்லோ வெளிச்சத்துக்கு வர வேண்டி இருக்கும்.

Link to comment
Share on other sites

Just now, ஈழப்பிரியன் said:

வாயைத் திறந்தால் இவர்களுமொல்லோ வெளிச்சத்துக்கு வர வேண்டி இருக்கும்.

அதான் மைத்திரி முதல் ரணில் வரை U வடிவில எல்லாரும் கப்சிப்!

Link to comment
Share on other sites

12 hours ago, Rajesh said:

வெளிச்சத்துக்கு வந்தபின்னர் வவுனியா சிவசக்தி ஆனந்தன், லிங்கநாதன், சத்தியலிங்கம் போன்றோர் என்ன செய்கின்றனர்?

சம்மந்தன், சுமந்திரன் உட்பட அனைத்து கூட்டமைப்பு அரசியல்வாதிகளும்  பாராளுமற்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது!  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.