• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • இந்த செய்தி ஊடகம் வரைக்கும் பரபரப்பானதால் அந்த பெண்ணை தெரிந்தவர்கள் எந்தக்கோணத்தில் பார்ப்பார்கள்?  நக்கல் நையாண்டிகள் உட்பட......
  • உலகப் பொருளாதாரம் 2020: இன்னொரு நெருக்கடியை நோக்கி... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2020 ஜனவரி 23  சில பழக்க வழக்கங்கள், முறைமைகள் போன்றவற்றில் இருந்து மாற்றமடையாமல், மீட்சிக்கு வழி இல்லை. இலகுவில் மாற்றங்களுக்கு உள்ளாக, மனித மனம் தயாராக இருப்பதில்லை. இதன் பாதகமான விளைவுகள் எல்லாவற்றையும் அது, தொடர்ந்து அனுபவித்து வருகிறது.  வரலாறும், எமக்குத் தவறாது பாடங்களை இடித்துரைத்தபடியே இருக்கிறது. நாமோ அவற்றைக் கேட்காது, புறந்தள்ளிய படியே, புதிய திசையில் பயணிப்பதானது, சொல்லியபடி புதைகுழியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதற்கு ஒப்பானதாகும். குழியில் விழுவதும், சகதியில் சிக்கி உடலெங்கும் ஒட்டிய சகதியையும் தூக்கி அள்ளிக் கொண்டு நடந்து, திரும்பவும் படுகுழியில் விழுகிறோம்.     நமது பழக்கங்களில் இருந்து, நாம் மாற வேண்டும்; இல்லாவிடில், இந்தக் கொடும் சுழலில் சிக்கித் தவிப்பது, என்றென்றைக்கும் நிரந்தரமானதாகி விடும்.   உலகப் பொருளாதாரம், இன்னொரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. அதற்கான அத்தனை அறிகுறிகளும் தெளிவாகத் தெரிகின்றன. ஆனால், எதுவுமே நடக்காதது போல, பொருளியல் அறிஞர்களும் அரசியல்வாதிகளும் பாவனை செய்கிறார்கள். “உலகப் பொருளாதாரம், நல்ல நிலையில் இருக்கிறது” என்ற பொய்யை, எல்லோரும் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். ஆனால், தரவுகளும் குறிகாட்டிகளும் பொருளாதார நெருக்கடியை எதிர்வு கூறுகின்றன.    இந்தப் பொருளாதார நெருக்கடி, திடீரெனத் தோற்றம் பெற்ற ஒன்றல்ல; ‘ஒருவரை ஒருவர் சுரண்டிக் கொழுத்தல்’ என்ற, கேவலமான பொருளாதார முறையின் விளைவின் தொடர்ச்சியே இதுவாகும்.    ஒவ்வொரு முறையும் பொருளாதார நெருக்கடிகளை நாடுகளும் பிராந்தியங்களும் காணும்போதெல்லாம், அவை குறித்த ஆழமான சிந்தனையும் விமர்சனமும் இன்றி, அதே கொடுஞ்செயலைச் சுற்றிச் சுற்றிப் பயணித்து, விழாத படுகுழியில் உலகப் பொருளாதாரம் விழுந்திருக்கிறது.    இது தொடர்ந்து ஏன் நிகழ்கிறது என்பதைப் பார்க்கிறபோது, இதற்கான காரணிகளை, இலகுவில் அடையாளம் காண இயலும்.    செல்வம் தொடர்ச்சியாக, ஒருசிலரின் கைகளில் மிகப்பெரிய அளவில் சென்றடைவதோடு, அவர்களின் செல்வம், ஆண்டுதோறும் பல மடங்காக அதிகரிக்கிறது.    மறுபுறம், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி, அதிகரித்துக்கொண்டே போகிறது. பொருளாதார சமத்துவமின்மை சர்வ வியாபகம் ஆகிறது.    இச்சமத்துவமின்மை, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த உலகின் தலையாய நாடுகளிலும் பரவியுள்ளது.    காலநிலை மாற்றம், நம் கண்முன்னே அதன் கோர தாண்டவத்தை ஆடிக் கொண்டிருக்கையில், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை, ‘இலாபவெறி’ தடுத்து நிறுத்தியபடியே இருக்கிறது.    உணவுப் பொருள்களின் அதிகரிக்கின்ற விலைகள், அன்றாட உணவைப் பெற்றுக்கொள்வதற்கு இயலாத தாக்குகின்றன. நுகர்வுக் கலாசாரம் உருவாக்கிய கெட்ட பழக்கங்கள், மக்களை மனித நேயப் பொருளாதார முறைகளிலிருந்து அப்பால் நகர்த்தி விட்டன. இந்தச் சிக்கல்களில் இருந்து நாம் எவ்வாறு மீள்வது?   பில்லியனர்களின் உலகம்   அண்மையில் ‘ஒக்ஸ்பாம்’ நிறுவனம், ‘அக்கறை செலுத்துவதற்குரிய காலம்’ (Time to Care) என்று தலைப்பிட்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி, உலகில் 2,153 பில்லியனர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மொத்தச் சொத்து மதிப்பானது, உலகில் உள்ள 4.6 பில்லியன் மக்களின் சொத்தை விட அதிகமானது என்ற உண்மையைக் காட்டியது.    இப்போது நடைமுறையில் உள்ள பொருளாதார முறையானது, பாலியல் ரீதியாகப் பெண்களை மோசமாகச் சுரண்டுவதாகவும் பெண்களாலும் பெண் குழந்தைகளாலும் மேற்கொள்ளப்படும் சம்பளமில்லாத, குறைந்த சம்பளமுடைய பணிகள், தொடர்ந்தும் குறைத்து மதிப்பிடப்பட்டு வருகின்றன என்றும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 22 பில்லியனர்களின் மொத்தச் சொத்து மதிப்பானது, ஆபிரிக்கா எங்கும் வாழும் மொத்தப் பெண்களின் சொத்து மதிப்பை விட அதிகமானது.    உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒரு சதவீதமானது, உலகின் மொத்தச் சனத்தொகையின் சொத்தை விட, இரண்டு மடங்கு அதிகமான சொத்தைக் கொண்டிருக்கிறது. இந்தத் தரவு, உலகமானது எவ்வளவு சமத்துவமில்லாத ஒன்றாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டப் போதுமானது.    இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்ற இன்னொரு தரவு, மிகவும் சுவாரஸ்யமானது. எகிப்திய பிரமிட்டுகள் கட்டப்பட்ட நாள் தொடக்கம், நாளொன்றுக்கு 10,000 அமெரிக்க டொலர்களை நீங்கள் சேமித்திருந்தீர்களாயினும் இன்று உங்களின் சொத்து மதிப்பு, பில்லியனர் ஒருவரின் சொத்து மதிப்பின் ஐந்தில் ஒன்றுக்கே சமமானதாகும். இது, பில்லியனர்கள் எவ்வளவு வேகமாகவும் அதிகமாகவும் சொத்துச் சேர்க்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.    செல்வம், இருக்கின்ற இடத்தில் மேலும் மேலும் குவிகிறது. செல்வந்தர்கள் செல்வங்களைக் குவித்த வண்ணமே இருக்கிறார்கள்.    இன்று உலகளாவிய ரீதியில் பெண்களால் (15 வயதுக்கு மேற்பட்ட) சம்பளமின்றிச் செய்யப்படுகின்ற சேவைகளுக்கு, மதிப்பு வழங்குவோமாயின் அதன் பணப் பெறுமதி, குறைந்தது 10.8 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இது உலகளாவிய தகவல்தொழில்நுட்பத் துறையை விட, மூன்று மடங்கு பெரிது.    இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்ற விடயங்கள், உலகளாவிய கவனத்தை வேண்டுவன. இந்த உலகமானது, செல்வந்தர்களின் உலகமாக, செல்வந்தர்களுக்கான உலகமாக மாறியிருக்கின்றது.    உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தொய்வும் சரிவும், இந்தச் செல்வந்தர்களைப் பாதிக்கப் போவதில்லை. மாறாக, அனைத்து நட்டங்களும் பொருளாதாரச் சங்கிலியின் கீழடுக்கில் இருந்து உழலும் மக்களின் தலையில்தான் கட்டப்படும்.  அதற்குப் பல்வேறு பெயர்கள் சுட்டப்படும். தேசியவாதமும் மதவாதமும் இதை எமது தலையில் ஆபத்தின்றிக் கட்டுவதற்கு வழி செய்து கொடுக்கும்.    சீரழிந்த பொருளாதார முறையின் குணங்குறிகள்   பொருளாதார நெருக்கடி பற்றி, அடிக்கடி பேசுகிறோம். 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, பொருளாதார நெருக்கடி பற்றிய பேச்சுகள், தொடர்ந்தும் பேசுபொருளாய் உள்ளன.    நெருக்கடி இருந்தாலும் இல்லாவிட்டாலும், பொருள்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன; சேவைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. சாதாரண மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இதை ஒவ்வொருவரும் அறிவோம்.    ஆனால், இந்தச் சீரழிந்த முதலாளித்துவப் பொருளாதார முறையை, எம்மால் தூக்கியெறிய இயலாதபடி, அதிகார வர்க்கமும் உலகமயமாக்கலும் பார்த்துக் கொள்கின்றன.    ஒருபுறம், நுகர்வுப் பண்பாடு எம்மை ஆட்கொண்டுள்ளது. பெட்டிக் கடைகளில் பொருள்கள் வாங்குவதைத் தவிர்த்து, இன்று பல்பொருள் அங்காடிகளுக்குப் பழகி விட்டோம்.    தேவையான பொருள்களைப் பெட்டிக் கடைகளில், மலிவு விலையில் கேட்டு வாங்கிய காலம் மலையேறிவிட்டது. இன்று, பல்பொருள் அங்காடிகளில் தேவையானதையும் தேவையற்றதையும் சேர்த்து, அதிக விலைக்கு வாங்கப் பழக்கப்பட்டு விட்டோம்.    விளம்பரங்களும் கவர்ச்சிகரமான சலுகைகளும் எமது நுகர்வை அதிகரித்துள்ளன. வங்கிகளின் கடன் முறைகள், கடன் அட்டைகள் ஒருபுறம் எம்மிடம் இல்லாத பணத்தைச் செலவழிக்க வழி செய்கின்றன. மறுபுறம், எம்மை என்றென்றைக்கும் கடனாளியாக்கி வைத்திருக்கின்றன.    மூலதனத்தின் பிரதான அம்சம் எதுவென்றால், அது வளர்ந்து கொண்டே போக வேண்டும் என்பதுதான். ஆனால், அந்த வளர்ச்சியின் தன்மையை, அதனால் தீர்மானிக்க இயலாது. மூலதனம் வளர்ந்து வந்த விதமும் பங்குச் சந்தை முதலீட்டு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் பங்குச் சந்தையில் கட்டுப்பாடற்ற வணிக நடவடிக்கைகளுக்கு வழிசெய்தது.   முதலாளித்துவப் பொருளாதாரத்தில் இரண்டு முகாம்கள் உண்டு. “சந்தையை அரசாங்கம் கண்காணித்து, மூலதனத்தின் பாய்ச்சலை அரசாங்கம் நெறிப்படுத்த வேண்டும்” என்று, ஒரு முகாம் கூறுகிறது.    மற்றொரு முகாம், “சந்தைக்குப் புத்தியுண்டு; அது மூலதனம் எங்கு போகவேண்டும் என்பதைச் சரியாகத் தீர்மானித்துவிடும். அரசாங்கம் தலையிடக் கூடாது” என்கிறது.    முதலாவது முகாம், பிரித்தானியாவால் முன்தள்ளப்பட்டது. இரண்டாவது முகாம், அமெரிக்கா முன்தள்ளுவது.  இரண்டுமே, முதலாளிகளின் இலாப வேட்டையால், வேட்கையால் உருவாகும், மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் தந்திரோபாயங்களை உருவாக்குவதை, நோக்கமாகக் கொண்டனவே தவிர, சமூக உழைப்பு சக்தியால், சரக்குகள் வடிவில் உருவாகும் செல்வத்தை, நியாய அடிப்படையில் மக்களிடையே விநியோகிப்பது என்பதல்ல.   சரக்குகளாக இருக்கும் செல்வத்தை, பணவடிவில் மாற்றி, சிலர் சுருட்டிக் கொள்வதற்குப் பாதுகாப்பு கொடுப்பதே, அரசாங்கத்தின் கடமை என்பதில், இந்த இரண்டு வழிமுறைகளுக்கும் ஒற்றுமை உண்டு. இந்த முறைமை, சுரண்டலுக்கான முறைமையே அன்றி, நியாயமான உழைப்புக்கு, ஊதியம் வழங்கும் முறைமை அல்ல.   காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள்   காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் கடந்தாண்டு உலகம் மிகத் தெளிவாக உணர்ந்தது.  பிரேஸில் முதல் அவுஸ்திரேலியா வரை, உலகெங்கும் காலநிலை மாற்றம் தனது, கோரத் தாண்டவத்தை ஆடிக் கொண்டிருக்கின்றது.      இது, உலகப் பொருளாதாரத்துக்குப் புதிய சவாலை உருவாக்கியுள்ளது. ஆனால், உலகின் தலைவர்கள் டாவோஸில் கூடி, செல்வத்தைப் பெருக்குவது பற்றிப் பேசுகின்றார்கள்.    2020ஆம் ஆண்டில், பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை, உலகெங்கும் மக்கள் உணர்வர்; வீதியில் இறங்கிப் போராடுவார்கள். ஆனால், இந்தப் பொருளாதார முறைமையை மாற்றாமல், தீர்வுக்கு வழியில்லை.       http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உலகப்-பொருளாதாரம்-2020-இன்னொரு-நெருக்கடியை-நோக்கி/91-244426
  • தேசியம், ஐக்கியம், தமிழர் பலம் -இலட்சுமணன் தேர்தல் எனும் வசந்த காலம், அரசியல் வானில் உதயமாகத் தொடங்கியதன் வெளிப்பாடுகளாகத் தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துகள், விவாதங்கள், அறிக்கைகள் மெல்லமெல்ல மேலௌத் தொடங்கியுள்ளன.  ‘வேதாளம், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது போல்’ தமிழர்களின்  உரிமை, தமிழர்களுக்கு இடையேயான ஐக்கியம், தமிழர் பலம் எனப் பல்வேறு கோசங்கள், அரசியல்வாதிகளால்  வெளிப்படுத்தப்படுகின்றன.  அரிதாரம் பூசிய அரசியல் நடிகர்களின் கூத்துகளையும் பம்மாத்துகளையும்  வரலாற்றுச் சாதனைகளாகவும் தமிழ் மக்களின் வரலாறாகவும் பார்க்கும் காலமாகவே தற்போதைய நிலைமைகள் அமைந்துள்ளன.  சுதந்திரத்துக்குப் பின்னர் இருந்த அரசியல் வீச்சும், போராட்ட குணமும் தமிழ் அரசியல் தலைமைகளிடம் இல்லை. அப்போதைய தலைமைகளுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இன்று தரம் கெட்டுப் போய்விட்டன.  ஆயுத மௌனிப்பின் பின்னர், எழுந்துள்ள தமிழர் அரசியல் சூழ்நிலையானது, போர்க் குணம் கொண்டதாகவோ, தமிழரின் அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொடுப்பதாகவோ அமையவில்லை.  மாறாக, தமிழரின் அரசியல் செல்நெறியானது, சுயலாப நோக்கம் நிறைந்ததாகவும் ஒவ்வோர் அரசியல்வாதியும்  தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் வர்த்தக அரசியலாகவே, தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறது. தமிழரது அரசியல் விடுதலைக்காக, ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு, வாக்கு என்ற ஆயுதத்தின் மூலம், தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் தேவைகள், அபிலாசைகள் தொடர்பில், இதுவரை காலமும் எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியல்படுத்திக் கூறமுடியுமா? தொழில்வாய்ப்பு ரீதியாக, அபிவிருத்தி ரீதியாக, சமூகப் பிரச்சினைகள் ரீதியாக, பொருளாதார வளர்ச்சி தொடர்பாக, அரசியல் உரிமைகள் தொடர்பாக, அரசியல் கைதிகள் தொடர்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக, இதுவரை முன்னெடுத்த நடவடிக்கைகளை தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகளால் பட்டியல்படுத்த முடியுமா? என்பது தமிழ் மக்களின் உள்ளத்தில் இருந்து எழும் எழும்வினா. தமிழரின் தேசிய அரசியலுக்குள் சிக்குப்பட்டுப் போயுள்ள இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் வாக்குறுதி அளிக்கும் அரசியல்வாதிகள், தேர்தல் முடிந்த பின் காணாமல் போய்விடுகின்றனர்.  தமிழர் உரிமை கிடைத்தால்தான், மற்றையவை கிடைக்கும் எனச் சுருக்கமாகத் தமது கடமையை முடித்து விடுகின்றனர். சிலர், தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள, மக்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, தமது முகத்தைக் காட்டி, உசுப்பேற்றும் கருத்துகளைத் தெரிவித்துவிட்டு, வேறெதையும்  அறியாதவர்கள் போல், நழுவி விடுவர்.   ஆயினும், இத்தகைய அரசியல்வாதிகள் தமது அரசியல் உரிமைகளுக்கு அப்பால்,  அந்த அரசியலால் வரும் சலுகைகளை, நூறு சதவீதம் அனுபவித்துக் கொள்கின்றனர். இந்த அனுபவிப்புகளின் ‘ருசி’ தொடர்ந்தும் தமது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ‘பசி’யை ஏற்படுத்துகின்றது.  இந்தப் பின்புலத்திலேயே, தமிழர்களது அரசியல் பயணம் நகர்ந்துகொண்டிருக்கிறது. தமிழரின் ஐக்கியம் தொடர்பாக, உரத்துக் கத்துபவர்களே, தமிழரின் ஐக்கியத்தைச்  சிதைப்பவர்களாக இருப்பதை நாம் எல்லோரும் காண்கின்றோம்.  தேசியம், ஐக்கியம் பற்றி உரக்கக் குரல் கொடுப்பவர்கள், தமிழரின்  ஐக்கியத்தை உண்மையில் வலியுறுத்துபவர்கள், தமிழர் அபிலாசைகள் நிச்சயம் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்று சிந்திப்பவர்கள், அனைவரது பாதுகாப்பையும் இருப்பையும் தொடர்ந்து பேணவேண்டும் எனச் சிந்திப்பவர்கள், தம்மால் மற்றவர்கள் வெளியேற்றப்படவில்லை என்றும் தாமாகவே வெளியேறிச் சென்றனர் எனக் கருத்துத் தெரிவிப்பவர்கள், கடந்த காலங்களை மறந்து, பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கலாம் எனக் கருதுபவர்கள், தற்போது தமிழ்க் கூட்டமைப்பில் பிரச்சினை இல்லை எனச் சொல்பவர்கள், மாற்றுத் தலைமை என்பது தமிழ்த் தலைமையைச் சிதைப்பதற்கான சதி எனப்  பரப்புரை செய்பவர்கள், ஏன் ஒன்றை மட்டும் இதுவரை கூறவில்லை; சிந்திக்கவில்லை; முன்வைக்கவில்லை.  சிலவேளை, இந்தக் கேள்விகளும் கூட, தமிழர் அரசியல்வாதிகளின் செவிக்கு எட்டாத செய்தியாக அல்லது எட்டியும் எட்டாத செய்தியாகத் தமிழ்த் தலைமைகளுக்குச் சென்றுவிடலாம் எனத் தமிழ் மக்கள் கருதுகின்றனர். உண்மையில், தமிழரது அபிலாசைகள், உரிமைகள், தேவைப்பாடுகள் தொடர்பான அக்கறையும் கவனமும் தார்மிகப் பொறுப்பும் தம்மிடம் இருப்பதாக இருந்தால், தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைக்கட்சி என்ற வகையில், அனைவரையும் அரவணைத்து கொள்ள வேண்டும். இதற்காக எடுக்கும் முயற்சி, தேர்தல் காலத்தில் வாக்கு சேகரிக்கும் போட்டியாக இல்லாமல் இருக்க வேண்டும்.  தமிழர் பிரதிநித்துவத்தின் உண்மையான தத்துவார்த்தங்களைப் பாதுகாப்பதற்கு, உண்மையிலேயே இதயசுத்தியுடன் இருந்தால், தமிழர் அபிலாசைகள் நிறைவேறும். இதற்கு இன்னும் காலம் கடந்து விடவில்லை.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்காலத்தில், குறிப்பாக, தேர்தல் முடிந்த காலாண்டில், தனிக்கட்சியாக, தனிச் சின்னத்தில், புதிய பதிவுடன் செயற்படுவதுடன், அதற்கான யாப்புத் தயாரிக்கப்படும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட வேண்டும்.  மேலும், உட்கட்சி ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பதுடன், தமிழரசுக் கட்சியின் சர்வாதிகாரப் போக்கிலிருந்து விலகி,  ஜனநாயக மயப்படுத்தப்பட வேண்டும். இதுவே, கூட்டமைப்பிலிருந்து கட்சிகள் வெளியேறுவதற்கு அடிப்படைக் காரணமாகவும் மீண்டும் இணைவதற்கு தடையாகவும் இருக்கின்ற காரணங்களாகும்.  எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், ஐக்கியம் பற்றி உரக்கக் குரல்கொடுப்பவர்களும் “மாற்று அணி வேண்டாம்; அது தமிழ்த் தேசியத்தைப் பலமிழக்கச் செய்யும் சதி” எனக் கருத்துரைப்பவர்களும் தமிழ் மக்களின் இந்த அபிலாசைகளைப் பகிரங்கமாக அறிவித்து, வெளியேறியவர்களை வழிப்படுத்த, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த செயலில் இறங்குவார்களா?   அல்லது, தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் கூட்டமைப்பு, பழைய பல்லவி போல், இழுத்தடிப்பு வேலைகளில் இறங்கிவிடுமா? என்ற அச்ச உணர்வு இயல்பாகவே தமிழ் மக்களுக்கும் வெளியேறிச் சென்ற கட்சிகளுக்கும் உண்டு.  தமிழர் அரசியல் கட்சிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் குரல் தரவல்ல, அதிகாரம் அளிக்கப்பட்டவர், பகிரங்கமாக இதற்கான முன்னெடுப்புகளை முன்னெடுத்துச் செல்வார்களா?  உண்மையில், தமிழரின் ஐக்கியம் பற்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்தால், மனதார நினைத்தால் இதைச் செய்தேயாக வேண்டும். இதைத் தமிழ் மக்கள் இதயபூர்வமாக வரவேற்கிறார்கள்.  இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே, எதிரிகள் எங்கோ ஓடி மறைவர் எனத் தமது அரசியல் பலத்தை, மக்கள் உறுதிப்படுத்துவார்கள். எனவே, தமிழ் மக்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொறுப்பு,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்க உரியதாகும்.   இது இவ்வாறு இருக்க, மாற்றுத் தலைமைகள் தொடர்பான சிந்தனைகள், முடிவுறுத்தப்பட்டு ஒரு கட்சி ஜனநாயகத்துக்குள், தமிழர் அனைவரும் ஒன்றிணைய அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது.  இதற்கு மாற்றுத் தலைமை, கூட்டமைப்பின் தலைமையை மாற்றினால் தாம் இணைவதாகக் குறிப்பிட்டுள்ளமை, மாற்றுத் தலைமையின் அரசியல் சாணக்கியம் இன்மையையும் கொள்கைத் தெளிவின்மையையும் வெளிக்காட்டுகிறது.  நாம் எதைச் செய்கிறோம்; என்ன செய்கிறோம்; எப்படிச் செய்கிறோம்; அதன் பின்விளைவுகள் என்ன என்பது பற்றிச் சிந்திக்காத, சிறுபிள்ளைத்தனமான செயற்பாடாகவே  இதைப் பார்க்கவேண்டி உள்ளது.  மாற்றுத் தலைமை தமிழர் அரசியலில் எடுக்கும் நடவடிக்கைகள் முன்னுக்குப்பின் முரணாகவும் ஸ்திரமற்ற நிலைப்பாடு உடையதாகவும் உள்ளது. தமிழரது அரசியல் இது தொடர்பாக இந்திய விஜயத்தின் பயனற்ற தன்மை அவரது தமிழ் திரையுலக நடிகர் ரஜினி சந்திப்பின் ஊடாக வெளிப்பட்டிருக்கிறது. இது, மாற்றுத் தலைமையின் தலைமை, அரசியல் முதிர்ச்சி உடையவரா என்ற ஐயப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.  பொங்கலின் பின்னர், ஓரிரு நாள்களில் தங்கள் கட்சிப் பதிவு தொடர்பாகவும் கூட்டணி தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தவர்கள், தங்களுக்குள் புடுங்குப்பட்டு பொங்காமல் போய்விட்டனர்.  தமிழரது தீர்வுத்திட்டம், அடுத்த பொங்கலுக்கு, அடுத்த தீபாவளிக்கு என்று விமர்சிப்பவர்களின் மாற்றுத் தலைமைக் கனவும்  கூட்டும் அக்கட்சிப் பதிவும் பொங்காமல் உடைந்த பானையாகப் போய்விட்டது என்ற கருத்துகளும் மக்களிடம் முளைவிடத் தொடங்கிவிட்டன.  அது எப்படி இருப்பினும், தமிழர் அரசியலில் ஐக்கியம் தொடர்பாக, மாற்றுத் தலைமைக் கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கியம் தொடர்பாகப் பேரம் பேசலாம்; பேசாமலும் விடலாம்.  ஏனெனில், இங்கு எவரும் இனி வரும் காலங்களில், எதையும் செய்யப்போவதில்லை. ஏனெனில், அதைத்தான் கடந்த கால வரலாறுகள், கற்றுத்தந்து கொண்டிருக்கின்றன.  தேசியம் சய ஐக்கியம் சய தமிழர் பலம் சக  தமிழர் பிரதிநிதிகள் சமன் தமிழ் மக்கள் பாவம்.   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேசியம்-ஐக்கியம்-தமிழர்-பலம்/91-244425  
  • பொதுத் தேர்தலை நோக்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வு புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 ஜனவரி 22 பொதுத் தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், அந்தத் தேர்தலுக்கான அரங்கு, நாடு பூராகவும் களைகட்டத் தொடங்கிவிட்டது. கூட்டணிப் பேச்சுகள், வேட்பாளர் தெரிவு இழுபறிகள், சமூக ஊடகங்களில் சண்டை சச்சரவுகள் என்று, ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் அடங்குவதற்குள், மீண்டுமொரு தேர்தல் பரபரப்புக் காட்சிகள். அதுவும், தென் இலங்கையைக் காட்டிலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், பொதுத் தேர்தலுக்கான பரபரப்பு என்பது, முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு என்பது, அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தேர்தல்களில் முதன்மையானது பொதுத் தேர்தலாகும். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களைக் காட்டிலும், பொதுத் தேர்தலை, தமக்கான பேச்சுவார்த்தையாளர்களை (பிரதிநிதிகளை) அடையாளப்படுத்தும் தேர்தலாக, தமிழ் மக்கள் கருதுகிறார்கள். அதுதான், அதிக தருணங்களில் வாக்களிப்பு என்பது, ஒரு தரப்பை நோக்கி அதிகம் குவியவும் காரணமாகி இருக்கின்றது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் காலத்திலும் அதனை தோற்கடித்த தமிழரசுக் கட்சிக் காலத்திலும், அனைவரும் ஒன்றிணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக் காலத்திலும், அதுவே பிரதிபலித்தது. விடுதலைப் புலிகளது எழுச்சியின் பின்னரான நாள்களில், தேர்தல்களுக்கான முக்கியத்துவம் தமிழ்ப் பரப்பில் சுருங்கியிருந்தது. அதனையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒருங்கிணைத்ததன் மூலம், புலிகளே மாற்றி அமைத்தார்கள். அதன் பின்னரான காலம் என்பது, கூட்டமைப்பை நோக்கிய திரட்சியாக மாறியது. இந்தக் கட்டத்திலிருந்துதான், இந்தத் தேர்தலையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈபிஆர்எல்எப் ஆகிய கூட்டமைப்பின் ஆரம்பப் பங்காளிகள், கூட்டமைப்பிலிருந்து வெளியேறி பல காலமாகின்றது. அதுபோல, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்களும், கூட்டமைப்பிலிருந்து விலகிவிட்டார்கள். ஆனால், கூட்டமைப்பின் அத்திபாரம் என்பது, குறிப்பிட்டளவு உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது. அந்த அத்திபாரத்தை அசைக்கும் வேலைகளை, தென்னிலங்கையின் மேலாதிக்கச் சக்திகளும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் மாற்றுத் தலைமையைக் கோரிய தரப்புகளும் செய்து பார்த்தன. ஆனாலும், அதில் அவர்களுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. அதிகபட்சம், கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய சிலர் உதிரிகளாக மாறினார்கள். இறுதி மோதல்களுக்குப் பின்னரான பத்து ஆண்டுகளில், கூட்டமைப்பின் நிலைபெறுகை என்பது எதிர்பார்க்கப்பட்ட அளவையும் தாண்டியதாகவே இருக்கின்றது. அது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏக நிலைக்கும் வழிகோலியிருக்கின்றது. கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத்தலைமை என்கிற உரையாடல், இன்றைக்குத் தேய்ந்து போய், தமிழரசுக் கட்சிக்கு மாற்றான தலைமை என்கிற விடயம் மேலொங்கிவிட்டது. இந்தத் தேர்தலிலும், தமிழரசுக் கட்சி தலைமையிலான அணிக்கே கூட்டமைப்பு அடையாளம் சூட்டப்பட்டிருக்கின்றது. மாறாக, கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சி, தமிழரசுக் கட்சி என்றவாறாக களம் இல்லை. ஏனெனில், கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு மற்றும் ஆசனப் பங்கீடு என்பது, கிட்டத்தட்ட தமிழரசுக் கட்சியின் முடிவுகளாகவே இருக்கின்றன. பங்காளிக் கட்சிகள் யாரைத் தேர்தலில் களமிறக்க வேண்டும், யாரை களமிறக்கக் கூடாது என்பது வரையில், தமிழரசுக் கட்சி தலையீடுகளைச் செய்கிறது. அதுபோலவே, கூட்டமைப்புக்கு மாற்றான தலைமையாக எழ நினைத்த தரப்புகள் எல்லாமும், தமிழரசுக் கட்சிக்கு மாற்றான தலைமையொன்றை கட்டியெழுப்பும் கட்டத்தை நோக்கி இறங்கியிருக்கின்றன. மாற்றுத் தலைமைக் கோஷக்காரர்களிடம் காணப்படும் ஆளுமைக் குறைபாடு மற்றும் தேர்தல் அரசியலைக் கையாளுவதில் அவர்கள் பெற்ற தோல்வி என்பன, தமிழரசுக் கட்சியின் ஏகநிலை எழுச்சியின் மற்றைய காரணங்களாகும். தைப் பொங்கல் விழாக்கள் தொடங்கி, தேர்தலை இலக்காகக் கொண்ட நிகழ்வுகளை, கூட்டமைப்பு தொடங்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (காங்கிரஸ்) வரை எல்லாக் கட்சிகளும் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த விழாக்களின் அளவைக் கருத்தில் கொண்டாலே, ஒரு கட்சி அல்லது, அதன் தலைமை தன்னுடைய தேர்தல் இலக்கை எவ்வளவாக வரையறுத்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். கூட்டமைப்பு, வடக்கு- கிழக்குப் பூராகவும் நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருக்க, வடக்குக்குள் மாத்திரம், முன்னணி தன்னைச் சுருக்கிக் கொண்டுவிட்டது. இன்னொரு தரப்பான விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர், தங்களுக்குள் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது சார்ந்த குழப்பத்தோடு இன்னமும் இருக்கின்றனர். விக்னேஸ்வரனின் அணியில், ஈபிஆர்எல்எப், டெலோவில் இருந்து அண்மையில் பிரிந்த  சிறிகாந்தா - சிவாஜிலிங்கம் அணி உள்ளிட்டன இருக்கின்றன. இதன் இணைப்புப் புள்ளியாக, தமிழ் மக்கள் பேரவை இருக்கின்றது. இதனைத் தாண்டிய மக்களை அணுகும் காட்சிகளை, அந்த அணி பெரியளவில் பதிவு செய்யவில்லை. அதிக பட்சமாக, விக்னேஸ்வரனின் ஊடக அறிக்கைகள் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோரின் ஊடகச் சந்திப்புகள் இடம்பெறுகின்றன. அப்படியான கட்டத்தில்தான், மழைக்கு முளைக்கும் காளான்களின் முயற்சிக்கு ஒப்பான இன்னொரு முயற்சியாக, சுயாதீனக்குழு என்கிற பேச்சுவார்த்தைக் குழுவொன்று மீண்டும் எழுந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளர் கோரிக்கைகளோடும் சுயாதீனக்குழுவொன்று எழுந்து வந்திருந்தது. அந்தக் குழுதான், பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டும் எழுந்திருக்கின்றதா  என்பது தெளிவில்லை. ஆனால், விக்னேஸ்வரனோடு பேசுவதிலிருந்துதான், பேச்சுவார்த்தைகளையே ஆரம்பிப்போம் என்கிற ஒரு வரையறையை அந்தக் குழு வைத்திருப்பதாக ஞாயிறு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த முப்பது ஆண்டுகளில், ஏக ஆளுமை செலுத்திய தரப்பொன்றின் ஏற்பாடுகள் அல்லது ஏவல்களுக்கு அப்பால், சுயாதீனக் குழுக்களோ செயற்பாட்டாளர்களோ, பெரிய சாதனைகள் எதனையும் செய்துவிட்டிருக்கவில்லை. அவர்களை, அரசியல் கட்சிகளும் பெரிதாகக் கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. ஒரு சாக்குக்காக  அவர்களோடு பேசி அனுப்புவதோடு கடமை முடிந்தது என்கிற தோரணையோ, இதுவரை வெளிப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சிக் கட்டங்களிலும், அதுவே நிலைமையாக இருந்தது. அப்படியிருக்க, பேரவை செல்லாக்காசாகி விட்டிருக்கின்ற இன்றைய கட்டத்தில், அதன் பின்னணியில் எழும் சுயாதீனக் குழுக்களினால் அதிசயங்களை நிகழ்த்திவிட வாய்ப்பில்லை. கூட்டமைப்புக்கு எதிரான அணியினரையே ஒன்றாக இணைக்க முடியாதளவுக்கான ஆளுமைக் குறைபாட்டை, பேரவை வெளிப்படுத்திவிட்டதான கருத்து இருக்கின்றது. அப்படியான கட்டத்தில், அந்தப் பேரவையின் பின்னணியில் எழும் சுயாதீனக்குழு, தமிழ்த் தேசியக் கட்சிகளோடு என்ன அடிப்படைகளை முன்வைத்துப் பேசப்போகின்றன என்பதும் முக்கியமான கேள்வியாகும். அது தவிரவும், தமிழ்த் தேசியக் கட்சிகள் சிலவற்றைப்போல, பேரவையும் தன்னுடைய சிந்தனை மட்டத்தை, யாழ்ப்பாணத்தை இலக்காக்கியே வைத்துக் கொண்டிருக்கின்றது. அது, கிழக்கு மக்களையோ அதன் புவியியல் சார் குடிப்பரம்பலையோ கருத்தில் எடுப்பதில்லை. அதனால், ஒரு பிரதேசத்தைத் தாண்டி, அவற்றால் கவனம்பெற முடிவதில்லை. வடக்கில் கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை ஈபிஆர்எல்எப் எடுத்தாலும், கிழக்கில் அந்த முடிவில் இருக்க முடியாது என்று ஈபிஆர்எல்எப்பின் கிழக்கு முக்கியஸ்தர் ஒருவர் கூறுகிறார். ஆக, ஒரு கட்சியே அதன் பிரதேச, பிராந்திய நிலைகள் குறித்து யோசிக்காமல், யாழ்ப்பாணத்தை இலக்காக வைத்துச் செயற்படுகின்ற நிலையில், கிழக்கு மக்களின் மனங்களை மாற்றுத் தலைமையாகத் தங்களை வரிந்து கொள்ளத் துடிக்கும் தரப்புகள் வெல்வது கடினமாகும். அப்படியான நிலையில், அது, ஏற்கனவே ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கும் கூட்டமைப்புக்கு (தமிழரசுக் கட்சிக்கு) இன்னொரு வாய்ப்பை இலகுவாக வழங்கிவிடும். தமிழ்த் தேசியக் கட்சிகள், பல ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும், அறிக்கை வழியாகவுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான இயங்கு தளத்தில் இருப்பவர்களால், மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஏனெனில், ஊடகச் செய்திகளுக்கும் வதந்திகளுக்கும், அறிக்கைகளுக்கும், ஓரிரண்டு நாட்களே ஆயுள். அப்படியான நிலையில், மக்களோடு மக்களாக நேரடியாக இயங்கும் எந்தத் தரப்பாகினும், மேலேழுந்து வரும். அதனையே, தேர்தல் முடிவுகளும் பிரதிபலிக்கப் போகின்றன.     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொதுத்-தேர்தலை-நோக்கிய-தமிழ்த்-தேசியக்-கட்சிகளின்-நகர்வு/91-244365
  • வழமையாக தமிழர் அல்லாதோர் காற்றுப் பறிஞ்சாலே எகிறி குதிக்கும் பிஜேபி C டீம் கேப்டன் சீமான், இந்த விடயத்தில் ரொம்பவே அடக்கி வாசிக்கிறார். பிஜேபி A டீம் கேப்டனை பற்றி காரசாரமாக ஏதும் இல்லை. எல்லாம் குருமூர்தி உத்தரவு.