Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

முஸ்லிம் கிராமங்களில் வெடித்த கலவரம்; கட்டுப்படுத்த திணறும் இராணுவம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

சில இடங்களில் பாதுகாப்புத் தரப்பினர் முன்னிலையில் வன்முறைகள் நடைபெற்றமைக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தேன்.

2009 இன்வழிப்புப் போரில் கொல்லப்பட்டது எல்லோருமே புலிகள் தான். அரசு மனிதாபிமானப் போரையே நடத்துகிறது, பொதுமக்கள் எவருமே கொல்லப்படவில்லை என்று இவர் நீதியமைச்சராக இருந்து சர்வதேசத்திற்குப் பிரச்சாரம் செய்தது ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது இப்போது !!!! என்னசெய்வது? தனக்குத் தனக்கு வரும்போதுதான் எல்லோருக்கும் புரிகிறது. 

 • Like 2
Link to post
Share on other sites

1983இல் காடையர்களால் கொழும்பில் தமிழர் மீதும் தமிழர் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலுடன் ஒப்பிடுகையில் நேற்று குருநாகலில் கம்பகாவில் நடந்த சம்பவங்கள் ஒன்டுமே இல்ல!  

1983இல் கொழும்பில் மட்டும் தமிழரின் பலகோடி சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழரின் பலகோடி சொத்துக்கள் எரிக்கப்பட்டன. தமிழரின் 5000 க்கு மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டன. தமிழரின் 8000 க்கு மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன. 2000க்கு மேற்பட்ட தமிழர் கொலை செய்யப்பட்டனர். 150000 க்கு மேற்பட்ட தமிழர் அகதிகள் ஆயினர். சிங்களவர்களுடன் சேர்ந்து முஸ்லீம் காடையர்களால் செய்யப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுடன் ஒப்பிடுகையில் நேற்று குருநாகலில் கம்பகாவில் நடந்த சம்பவங்கள் ஒன்டுமே இல்லை! 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு வேளையிலும் குண்டர்கள் அட்டகாசம்! துப்பாக்கிச் சூடு.. கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு! திணறும் முப்படையினர்

வடமேல் மாகாணத்தில் உள்ள குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதிலும் பதற்றத்தை தணிப்பதிலும் முப்படையினரும், பொலிஸாரும் இரவு வேளையில் தடுமாறுகின்றனர்.

அங்கு ஊரடங்கு நேரத்திலும் குண்டர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல் மாவட்டத்தில் பல இடங்களில் வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

எனினும், சில இடங்களில் வன்முறையாளர்களை கட்டுப்படுத்த பொலிஸாரும், இராணுவத்தினரும் துப்பாக்கிச் சூடு நடத்தி கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசியுள்ளனர்.

“நூற்றுக்கணக்கான குண்டர்கள் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். இராணுவத்தினரும் பொலிஸாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிலையங்களை தாக்கி எரித்துக் கொண்டிருக்கின்றனர்“ என்று கொட்டாம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தாங்கள் வீடுகளை விட்டு வெளியேற முனைந்த போதும் பொலிஸார் உள்ளேயே இருக்குமாறு கூறி விட்டனர் எனவும் அந்த நபர் கூறியுள்ளார்.

அதேவேளை வடமேல் மாகாணத்தில் நேற்று மாலை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை.

மறு அறிவித்தல் வரை அங்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/119895

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, போல் said:

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

பிக்குவும்.... வீதிக்கு  வந்த படியால், நிலைமையை... கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது கஸ்ரம்.
கொஞ்சம்  வாங்கிக் கட்டினால் தான்.... முஸ்லீம்களுக்கு  புத்தி வரும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சிங்களத்தைப்பற்றி  எல்லாம் தெரிந்த ஒரேயொரு இனமென்றால் அது ஈழத்தமிழினம் மட்டுமே.

ஆகையால் சொல்கிறேன்.........சோனகர்கள் பொறுத்த இடத்திலைதான் மாட்டுப்பட்டிருக்கினம்.

சங்கீதம் பாடின வாயும் சிரங்கு சொறிஞ்ச கையும் சும்மா இருக்காது எண்டது போலை .......

சிங்களம் மற்றவருக்கு கெடுதல் செய்யாட்டி அதுகளுக்கு பத்தியப்படாது.:cool:

அகிம்சை முறையில் உலகுக்கு சொன்னோம் கண்டு கொள்ளவில்லை,ஆயுதம் மூலம் சொன்ன போதும் கண்டு கொள்ளவில்லை , இனியாவது உலகு சிங்கள சகோதரயாக்களை பற்றி அறிந்து கொள்ளுமோ?

9 hours ago, குமாரசாமி said:

சிங்களத்தைப்பற்றி  எல்லாம் தெரிந்த ஒரேயொரு இனமென்றால் அது ஈழத்தமிழினம் மட்டுமே.

ஆகையால் சொல்கிறேன்.........சோனகர்கள் பொறுத்த இடத்திலைதான் மாட்டுப்பட்டிருக்கினம்.

சங்கீதம் பாடின வாயும் சிரங்கு சொறிஞ்ச கையும் சும்மா இருக்காது எண்டது போலை .......

சிங்களம் மற்றவருக்கு கெடுதல் செய்யாட்டி அதுகளுக்கு பத்தியப்படாது.:cool:

இப்பவும் சிறிலங்காவை சிங்கபூரா மாற்றுகின்ற எண்ணம் உவையளுக்கும் எங்கன்ட சில ஆள்களுக்கும் இருக்கோ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அகிம்சை முறையில் உலகுக்கு சொன்னோம் கண்டு கொள்ளவில்லை,ஆயுதம் மூலம் சொன்ன போதும் கண்டு கொள்ளவில்லை , இனியாவது உலகு சிங்கள சகோதரயாக்களை பற்றி அறிந்து கொள்ளுமோ?

உலக நாடுகளுக்கு 1983லேயே அவர்களை பற்றி தெரியும். 

 

1 hour ago, putthan said:

இப்பவும் சிறிலங்காவை சிங்கபூரா மாற்றுகின்ற எண்ணம் உவையளுக்கும் எங்கன்ட சில ஆள்களுக்கும் இருக்கோ

நிச்சயமாக இருக்கிறது. அழிந்து போகும் நாடுகளை கட்டி எழுப்புவதில் பெருமளவு இலாபம் இருக்கிறது. வியட்னாம்,  கம்போடியாவுக்கு அடுத்ததாக ஸ்ரீ லங்கா.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Jude said:

உலக நாடுகளுக்கு 1983லேயே அவர்களை பற்றி தெரியும். 

 

நிச்சயமாக இருக்கிறது. அழிந்து போகும் நாடுகளை கட்டி எழுப்புவதில் பெருமளவு இலாபம் இருக்கிறது. வியட்னாம்,  கம்போடியாவுக்கு அடுத்ததாக ஸ்ரீ லங்கா.

கட்டி எழுப்புவது வேறு .....சிங்கப்பூருக்கு நிகராக மாற்றுவது என்பது வேறு ....
கம்போடியா வியட்நாம் போன்ற நாடுகளை சிங்கப்பூருக்கு நிகராக ஒப்பிடமுடியாது...சிங்கப்பூர் சொந்தக்காலில் முன்னேறியது    .....மற்றவை வெளிநாடுகளின் தேவைக்காக கட்டிஎழுப்பப்பட்டது

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எரித்து நாசமாக்கப்பட்ட முஸ்லிம் வர்த்தகரின் 700 மில்லியன் ரூபாய் பெறுமதியான தொழிற்சாலை!

நேற்று தென் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் பல சேதமாக்கப்பட்டன.

குறிப்பாக, கம்பகா மாவட்டத்தில் உள்ள மினுவாங்கொட நகரில் உள்ள 700 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான உணவு பதனிடும் தொழிற்சாலை ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கள காடையர்களால் எரியூட்டப்படுவதற்கு முன்னர் அந்த தொழிற்சாலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், எரிந்த பின்னர் அந்த தொழிற்சாலையின் தற்போதைய நிலையின் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளன.

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91625.0.560.350.390.830.053.800.670.160.91

625.0.560.350.390.830.053.800.670.160.91

https://www.ibctamil.com/srilanka/80/119929?ref=home-imp-parsely

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் சம்பவத்தில் முற்றாக சேதமடைந்த பிரபல வர்த்தக நிலையம்! 13 பேர் கைது

குருநாகல் பகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் மினுவங்கொட - குருநாகல் வீதி டையமண்ட் பாஸ்டா நிறுவனம் தீக்கிரையாகியுள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கெலியோய முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான குறித்த நிறுவனத்தில் உள்ள இயந்திரங்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை மினுவங்கொட நகரில் நேற்றைய தினம் வர்த்தக நிலையங்கள் பல தாக்கப்பட்டு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் 13 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவர்களில் 9 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/119920

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

தாக்குதல் சம்பவத்தில் முற்றாக சேதமடைந்த பிரபல வர்த்தக நிலையம்! 13 பேர் கைது

குருநாகல் பகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் மினுவங்கொட - குருநாகல் வீதி டையமண்ட் பாஸ்டா நிறுவனம் தீக்கிரையாகியுள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கெலியோய முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான குறித்த நிறுவனத்தில் உள்ள இயந்திரங்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை மினுவங்கொட நகரில் நேற்றைய தினம் வர்த்தக நிலையங்கள் பல தாக்கப்பட்டு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் 13 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவர்களில் 9 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/119920

இலங்கையில் பாஸ்டாவா?...வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யினமோ  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பள்ளிவாசல் தாக்குதலை தலைமைதாங்கிய ராணுவம்? சீ.சீ.டி.வி காணொளியில் அகப்பட்டது!!

நாத்தாண்டிய, தும்மோதர பள்ளிவாசல் நேற்றைய தினம் சிங்கள காடையர்களினது தாக்குதலுக்கு உள்ளானது.

காடையர்களின் தாக்குதலை சிறிலங்கா ராணுவத்தினரே தலைமைதாங்கிய நடத்தியதா என்கின்ற கேள்வி, பள்ளிவாயல் சீ.சீ.ரீ.வி காணொளிகளைப் பார்க்கின்ற பொழுது எழும்புகின்றது.

முதலாவது, பள்ளிவாயல் மீதான தாக்குதல்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த பொழுதே இடம்பெற்றிருக்கின்றது.

இரண்டாவது, குறிப்பிட்ட அந்த பள்ளிவாயல் சிறிலங்கா காவல்துறையின் பூரண பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையிலேயே தாக்கப்பட்டிருக்கின்றது.

மூன்றாவதாக, பதிவாகியுள்ள சீ.சீ.ரீ.வி. காணொளியில், ஆயுதம் தாங்கிய சீருடை தரித்த ஒரு இராணுவ வீரரே, காடையர்களை தாக்குதல் நடாத்த வரும்படியாக சைகை காண்பிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/119942?ref=imp-news

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கை பற்றி எரிந்ததற்கு இதுவே காரணம்!

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் பின்னால் ஆட்சி மாற்றத்தை விரும்பும் அரசியல் பின்னணி உள்ளதாக பிரதமர் தலைமையிலான குளியாப்பிட்டி கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை காரணம்காட்டி, குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும், ஆட்சி மாற்றமொன்றை இலக்காக வைத்தே இப்படியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி நகருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட அமைச்சர்களான கபீர் ஹாசிம், அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசிம், அலி சாஹிர் மௌலானா மற்றும் ஜெ.சி. அலவத்துவல ஆகியோர் இன்று (14) நேரில் சென்று பார்வையிட்டனர்.

கொட்டம்பாபிடிய பிரதேசத்துக்கு விஜயம்செய்த பிரதமர், அங்கு தாக்குதலுக்கு இலக்கான மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கு சென்று அழிவுகளை நேரில் பார்வையிட்டார். இதன் பின்னர் குளியாப்பிட்டிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்கு குறிப்பிட்ட சிலரே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் அமைச்சர்களையும், இராஜாங்க அமைச்சர்களையும், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளையும், மதகுருமார்களையும், முக்கியஸ்தர்களையும் சந்தித்து தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட ஏனையவர்கள் முன்வைத்த கருத்துகளை செவிமடுத்த பிரதமர், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் கலவரங்கள் ஏற்படலாமென்ற அச்சம் நிலவுவதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அங்கு சமூகமளித்திருந்த பாதுகாப்புத்துறை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பாதுகாப்பு தரப்பினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறியமை தொடர்பில் முதலில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பிரயோகிப்பதில் ஏற்பட்ட பலவீனமே நேற்றைய வன்செயல் நடவடிக்கைகள் உக்கிரமடைவதற்கு காரணமாக அமைந்ததென முஸ்லிம் அமைச்சர்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கூட, தாக்குதல் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பிரதமர் தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான வன்செயல்கள் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தால் இந்தளவு நிலைமை மோசமடைந்திருக்காது என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

அத்துடன் பாதிப்படைந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதாகவும் பிரதமர் அங்கு உறுதியளித்தார். கடந்த வருடம் திகன மற்றும் அம்பாறையில் நடைபெற்ற சம்பவங்களின்போது இழப்பீடுகள் வழங்கிய அதே சுற்றறிக்கையின் பிரகாரமே, இதில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த துரதிஷ்டமான நிலைமை உரிய முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அதில் தவறிழைக்கப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். அத்துடன் மக்கள் அச்சமின்றி வாழவேண்டிய சூழ்நிலையொன்றை உடனடியாக உருவாக்கப்பட வேண்டுமெனவும் அதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் துரிதப்படுத்த வேண்டுமெனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.

இத்தாக்குதல் நடவடிக்கைளை மேற்கொண்ட தருணத்தில் வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் பஸ் மற்றும் மோட்டார் வண்டிகளில் வந்து உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, முஸ்லிம் பிரதேசங்களுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடாத்தியதாக பிரதமரினதும் அமைச்சர்களினதும் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அத்தோடு இந்த விடயத்தை அங்கு சமூகமளித்திருந்த பௌத்த மதகுருமார்களும் உறுதிப்படுத்தினார்கள்.

மேற்படி அசம்பாவிதத்தின் பின்னணியில் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்ட ஆறு பேரை குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வந்து விடுவித்துச் சென்றதாகவும் பிரதமரிடமும் அமைச்சர்களிடமும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை இந்த தாக்குதல்களின் பின்னால் அரசியல் பின்னணியொன்றும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை காரணமாக வைத்து, ஆட்சி மாற்றமொன்றை நோக்கமாகக் கொண்டு இந்த குண்டர்கள் இவ்வாறான தாக்குதல்களை தொடுத்திருந்ததாக சபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வாகனங்களில் வந்தவர்களின் பதிவுகள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளை சி.சி.ரிவி. கமெராக்கள் மற்றும் தனிப்பட்ட காணொளிகள் மூலம் இனம்கண்டு அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கும், சூத்திரதாரிகளுக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அங்கிருந்த உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் பாதிக்கப்பட்ட ஹெட்டிபொல, கொட்டம்பாபிடிய, பண்டாரகொஸ்வத்த, மடிகே, அனுக்கன, எஹட்டுமுல்ல, தோரகொடுவ, கினியம, பூவல்ல, அசனாகொடுவ, கல்ஹினியாகடுவ போன்ற இடங்களில் தாக்குதலுக்குள்ளான இடங்களுக்குச் சென்று, மக்களின் குறைகள் குறித்து கேட்டறிந்துகொண்டனர்.

ஆயுதங்களோடு வெளியூர் மக்களும் உள்ளூர் மக்களும் ஒன்றாக சேர்ந்து தங்களை தாக்கியபோது தாங்கள் அனுபவித்த மன வேதனைகளை பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க எடுத்துரைத்தனர். புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் நோக்குகின்ற நோன்பை ஒழுங்காக நோற்க முடியாமல் செய்ய இத்தகைய விஷமிகளின் செயற்பாடுளினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலநிலை தொடர்பில் கவலை தெரிவித்தனர்.

இத்தாக்குதல் காணொளிகள் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல் ஒன்றின் சி.சி.ரி.வி. பதிவகத்தை (ஹார்ட் டிஸ்க்) சீருடைகளில் வந்தவர்கள் கழற்றி எடுத்துக்கொண்டு சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் அமைச்சரிடம் முறையிட்டனர். அவ்வாறான நிலைமைகள் மேலும் நிகழாது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக தமக்கு அறியத்தருமாறும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

இதில் இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலான உட்பட வடமேல் மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா, குருநாகல் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எச்.எம். ஜெஸ்மின் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

https://www.ibctamil.com/srilanka/80/119953?ref=home-imp-parsely

Link to post
Share on other sites
17 hours ago, போல் said:

காடையர்களின் தாக்குதலை சிறிலங்கா ராணுவத்தினரே தலைமைதாங்கிய நடத்தியதா என்கின்ற கேள்வி, பள்ளிவாயல் சீ.சீ.ரீ.வி காணொளிகளைப் பார்க்கின்ற பொழுது எழும்புகின்றது.

ஆமி சொல்லிருக்கு இப்பிடியான வீடியோக்களை தங்களிடை தரட்டாம்! சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்க வேண்டாமாம்! சின்னப்பிள்ளைகளுக்கு சொல்றமாதிரி!

உடம்பு முழுக்க இவையளிட்டை திருட்டுக்குணம் தான் நிரம்பிருக்கு என்டு விளங்குது!

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முஸ்லிம் கிராமத்தின் மீதான வன்முறை - உயிரைக் காத்துக்கொள்ள காட்டுக்குள் தஞ்சமடைந்த பெண்கள்

_106963047_gettyimages-1143782375.jpg

இலங்கையில் ஈஸ்டர் தின தொடர் குண்டுதாக்குதலை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இலங்கையில் புத்தளம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் முஸ்லிம்கள் வாழும் சில பகுதிகளிலும் மே 13 அன்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவங்களினால் பல முஸ்லிம் கிராமங்கள் கடுமையான சேதம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட கிராமமொன்றுக்கு பிபிசி தமிழ் சென்றது.

இது புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய - துன்மோதர பிரதேசமாகும்.

_106963845_img_20190514_163713.jpg

இந்த பிரதேசத்தில் பெருமளவு தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும், இந்த கிராமத்தை சூழ்ந்துள்ள பகுதிகள் அனைத்திலும் இலங்கையின் பெரும்பான்மை சமூகமான சிங்களவர்களே வாழ்ந்து வருகின்றனர்.

துன்மோதர பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை வேளையில் முகங்களை மூடியவாறு சுமார் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி பிரவேசித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

துன்மோதர பகுதிக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில், தமது கிராமத்து இளைஞர்கள் ஒன்று திரண்டிருந்ததை அவர்கள் அவதானித்துள்ளதாக அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரான நிஷ்தார் தெரிவிக்கின்றார்.

அதன்பின்னர், தமது கிராமத்திற்குள் பிரவேசிப்பதற்கான குறுக்கு வழிகளை கண்டறிந்த முகங்களை மூடிய இளைஞர்கள், அந்த வழியாக தமது பிரதேசத்திற்குள் வருகைத் தந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமது பிரதேசத்திற்குள் வருகைத் தந்த வன்முறையாளர்கள், முதலில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், அதனை சூழ்ந்துள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

தமது சமூகத்தினர் நோன்பு துறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்திருந்த தருணத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கவலை வெளியிடுகின்றார்.

_106962554_img_20190514_163820.jpg

தாக்குதல் நடத்தப்படுவதனை அவதானித்து பிரதேச பெண்கள், உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக தமது கிராமத்திற்குள் அருகிலுள்ள காடுகளை நோக்கி சென்றதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு காடுகளுக்குள் சென்ற பெண்கள், அதிகாலை வேளை வரை காடுகளுக்குள்ளேயே மறைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில், அத்துமீறி பிரவேசித்தவர்கள், துன்மோதர பகுதியிலுள்ள அனைத்து முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், பல வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகளை எரிந்து, கட்டடங்களை தீக்கிரையாக்கியுள்ளனர் என அங்குள்ள மக்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

முஸ்லிம்களின் புனித நூலான குர்-ஆன்களையும் வன்முறையாளர்கள் தீக்கரையாக்கியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கட்டடங்கள், வாகனங்கள், வீட்டுத் தோட்டங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளும் சேதமாக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவமானது, பாதுகாப்புப் பிரிவின் முழுமையாக அனுசரணையுடனேயே முன்னெடுக்கப்பட்டதாக அந்த பிரதேச இளைஞரான நிஷ்தார் குற்றம் சாட்டுகிறார்.

பாதுகாப்பு பிரிவினர் குறித்த பகுதிகளில் இருந்த சந்தர்ப்பத்திலேயே தமது சொத்துக்களின் மீது சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

பாதுகாப்பு பிரிவின் அனுசரணையுடன் தாக்குதல் நடாத்தப்பட்டமையினால், தமக்கு பாதுகாப்பு பிரிவினர் மீதான நம்பிக்கை முழுமையாக அற்று போயுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

_106963169_img_20190514_163755.jpg

புத்தளம் - நாத்தாண்டி - துன்மோதர பகுதியில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பின்னணியின் பாதுகாப்பு தரப்பினர் இருப்பதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ராணுவம் ஒத்துழைப்பு வழங்குமாயின், அது பாரதூரமான குற்றம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், ராணுவ தளபதியின் ஆலோசனைகளை பெற்று, இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க தாம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரால் ஏதேனும் தவறுகள் அல்லது குற்றங்கள் இழைக்கப்படுமாயின்; அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

தமது கிராமத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் முழுமையாக நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என நாத்தாண்டி - துன்மோதர பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48276948

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் பூட்டி எரியூட்டப்பட்ட முஸ்லிம் சிறுவன்! அச்சத்தில் உறைந்து போயுள்ள முஸ்லிம்கள்!! களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன வன்முறைகள் காரணமாக முஸ்லிம்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களை அடுத்து தமது கிராமங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்ற துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லீம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அச்ச நிலை காரணமாக இன வன்முறைகளில் படுகாயமடைந்த சிறுவர்கள் உட்பட பலர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கும் செல்லாது வீடுகளிலேயே முடங்கியிருப்பதையும் அங்கு சென்ற எமது செய்தியாளர்களால் காண முடிந்தது.

இவ்வாறான கொடூரங்கள் உட்பட இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் எமது கொழும்பு அலுவலக செய்தியாளர் சிரியான் சுஜித் வழங்கும் மேலதிகத் தகவல்களாவன,

மே மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிலாபம் மற்றும் குளியாபிட்டிய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் மறுநாள் வடமேலடமாகாணத்தின் குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களுக்கு பரவியிருந்தன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள இனவாதிகளால் ஆயுதங்கள், பொல்லுகள் இரும்புக் கம்பிகள் சகிதம் நூற்றுக் கண்க்கான மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களில் சென்று திட்டமிட்ட இந்த இன வன்முறைகளை முன்னெடுத்தனர்.

இதனால் முஸ்லிம்களின் ஏராளமான வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களான பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டும் தீ வைத்தும் கொளுத்தப்பட்டுள்ளன. இந்த இன வன்முறைகளில் மோசமான அழிவையும் சந்தித்த மற்றும் உயிர்ப்பலியொன்றும் பதிவாகிய புத்தளம் மாவட்டத்தின் நாத்தண்டிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட தும்மோதர பிரதேசத்தின் தற்போதைய நிலமைகளை பார்வையிட பயணித்த ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவினராக எமக்கு காணக்கிடைத்த காட்சிகள் இனவன்முறைகளின் கோரத்தாண்டவத்தை மிகத் தெளிவாக எடுத்துரைத்தது.

தும்மோதர பிரதேசத்தில் கடந்த 13ஆம் திகதியான திங்கட்கிழமை மாலை முதல் ஸ்ரீலங்கா படையினரது கண்முன்னே சிங்கள இனவாதக் கும்பல் முஸ்லிம் வீடுகள்,வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை நடத்தியதோடு தீ வைத்தும் கொளுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தீக்கு இரையாகிய வீடொன்றில் அகப்பட்டுக் கொண்ட 16 வயதுடைய சிறுவன் தப்பிச் செல்ல வழியின்றி தனது அறையிலிருந்த கட்டிலுக்குக் கீழ் ஒளிந்துகொண்டு உயிரை பாதுகாத்துக் கொண்டுள்ளார். அவருடன் சேர்த்து முழுவீட்டிற்கும் தீ வைத்துக் கொளுத்திய இனவாதிகள் அங்கிருந்து சென்றபோதிலும் அவர்களால் ஏற்படுத்திய வடுக்கள் அப்பாவி சிறுவனின் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கிவிட்டுள்ளது.

மிக மோசமான எரிகாயங்களுடன் காணப்படும் இந்த சிறுவன் இன்னமும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு செல்லாது உள்ளான. இது குறித்து நாம் சிறுவனிடமே கேட்டபோது எந்த நம்பிக்கையில் சென்று சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது என்ற கேள்வியையையும் அந்த சிறுவன் எழுப்பினான்.

முகம்மட் நஜ்மின் மாத்திரமன்றி இன வன்முறைகளின் போது படுகாயமடைந்த மேலும் பலர் நாத்தண்டிய தும்மோதர மற்றும் அருகிலுள்ள முஸ்லீம் கிராமங்களில் இருக்கின்ற போதிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அவர்கள் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு செல்லாது தமது கிராமங்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

சிங்கள கிராமங்களைத் தாண்டியே வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டியிருப்பதாலேயே இவர்கள் தமது கிராமங்களுக்குள் சிகிச்சையின்றி முடங்கியுள்ளனர். இந்த துர்ப்பாக்கிய நிலமைகள் தொடர்பில் அங்கு சென்ற நாம் பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியப்படுத்தியதுடன், அவர்கள் இனவன்முறைகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொடுக்க தேவையானவர்களை வைத்தியசாலைகளுக்கும் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதாக ஐ.பீ.சீ தமிழுக்கு உறுதியளித்தனர்.

https://www.ibctamil.com/srilanka/80/120013?ref=imp-news

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களின் கடைகளை அடையாளம் காண்பித்த பெண்! சீ.சீ.டி.வி காணொளியில் மாட்டிக்கொண்டார்!!

தென் இலங்கையில் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் நடாத்திய காடையர்களுக்கு, மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்து வந்த ஒரு பெண் முஸ்லிம்களின் கடைகளை அடையாளம் காண்பித்த காட்சி, சீ.சீ.டி.வி. காணொளியில் தெளிவாகத் தெரிகின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/121034?ref=home-imp-flag

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தென் இலங்கையில் முஸ்லிம்கள் எப்படித் தாக்கப்பட்டார்கள்? அதிர்ச்சிக் காணொளி!!

தென் இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீதும், முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மீதும் காடையர்களின் தாக்குதல்கள் எப்படி மேற்கொள்ளப்பட்டன என்பதை வெளிப்படுத்தும் 20 இற்கும் மேற்பட்ட சீ.சீ.டி.வி. காணொளிகளின் தொகுப்பு இதோ:

https://www.ibctamil.com/srilanka/80/121108?ref=rightsidebar

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.