Sign in to follow this  
கிருபன்

மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீட்டிற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு: சர்ச்சை பேச்சால் வந்த வினை..!

Recommended Posts

மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீட்டிற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு: சர்ச்சை பேச்சால் வந்த வினை..!

இந்தியா, தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் திகதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அங்கு பிரசாரம் செய்துள்ளார்.


அப்போது, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே இந்துதான் என குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் கமலின் பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

அவரது வீட்டின் முன் சில இந்து அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தலாம் என்று வந்த தகவலை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/55900

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

கமல் ஆன்ரி இந்தியன் அல்ல.. ஆன்ரி மனித குலம்.. எச் ராஜா பரபரப்பு விமர்சனம் ..!

hraja45-1557910268.jpg

கொடைக்கானல்: கமல்ஹாசன் ஆன்ரி இந்தியன் அல்ல. அவர் ஆன்ரி மனிதகுலம் என பாஜக தேசிய உறுப்பினர் எச் ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய குழு உறுப்பினரும் சிவகங்கை எம்பி தொகுதி வேட்பாளருமான எச் ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

அவர் கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் கமல்ஹாசன் ஆன்ரி இந்தியன் அல்ல. அவர் ஆன்ரி மனிதகுலம். கமலின் இந்து தீவிரவாதி குறித்த கருத்துக்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்.கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் வைரமுத்துவுக்கு எழுந்தது போல் கமலுக்கு எதிர்ப்பு உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் எச் ராஜா.

இவர் எப்போதும் ஆன்ரி இந்தியன் என்ற வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம்.அதாவது தேச நலனுக்கு எதிரானவர், இந்தியர்களுக்கு எதிரானவர் என்ற பொருளில் கூறுவார். ஆனால் கமல்ஹாசனை மனிதகுலத்துக்கே எதிரானவர் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://tamil.oneindia.com/news/dindigul/h-raja-criticises-kamal-haasan-that-he-is-anti-humankind-350406.html

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

அவரும் வாங்கின காசுக்கு கூவினார்.

மேற்க்கொண்டு துட்டு வரல்ல.... வேண்டுமென்றே அப்படி இப்படி கதைச்சு தானே ஒதுங்கீட்டார்.

அடுத்தது ரஜனி இறக்கப்படுவார்  🙄

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • எழுபதுகளின் ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது இப்பாடல் மிகவும் பிரபலம்..! இப்பொழுது புது வடிவில்..    
  • (ஆர்.விதுஷா) கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக     பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய  அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும்  தொடர்ந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று காலை      கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ அந்த  பகுதிக்கு  விஜயம்  செய்திருந்தார்.  சம்பளப் பிரச்சினைக்கான தீர்வினை கூடிய விரைவில்  பெற்றுத்தருமாறுவலியுறுத்தி கடந்த 11 ஆம் திகதியிலிருந்து இந்த முன்னாள்  படை வீரர்கள்  சத்தியாக்கிரகப்போராட்த்தை முன்னெடுத்து வருகின்றனர்.  இந்த போராட்டத்திற்கு  இராணுவ வீரர்களின் உரிமைகளை  பாதுகாப்பதற்கான  தேசிய  இயக்கம், சிவில் சங்கங்கள்  உள்ளடங்கலாக 11  இற்கும்  அதிகமான அமைப்புக்கள் ஆதரவினை வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/65232
  • நான் இந்த விடயத்தில் கனேடிய சட்டம் என்ன முடிவுக்கு வருகிறது என்று அக்கறைப்படவில்லை! கொடூரமான கொலைகாரர்களே ஆயுள்தண்டனை பெற்றாலும் சராசரியாக 22 ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் சிறையில் இருப்பதில்லை என்று இந்த கனேடியச் செய்தி சொல்கிறது: https://nationalpost.com/news/canada/here-is-just-a-partial-list-of-the-brutal-murderers-that-canada-has-set-free இதன் படி கொடூரக் கொலைஞர்கள் பலரை கனடாவில் சாதாரணமாக வெளியே உலவ விட்டிருக்கிறார்கள். என் அக்கறையெல்லாம் இப்படியான ஒரு கொடூரக் கொலையின் பின்னர் கூட, கொலைஞருக்கு கொஞ்சமேனும் நியாயமாகப் படக்கூடிய காரணம் இருந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வந்து வாதாடும் ஆட்கள் இருப்பது பற்றித் தான்! இது இந்தச் செய்தியையும் சம்பவத்தையும் தாண்டி வியாபித்திருக்கும் ஒரு பிற்போக்கான மனவியாதி! மேலே சகாரா சொன்னதை விட நாம் எதுவும் மேலதிகமாகச் சொல்லி விடமுடியாது இது பற்றி! 
  • யாழ் இந்துவின் பழைய மாணவன் என்ற முறையில் கவலையாக இருந்தாலும் இது மிகவும் உண்மை. நான் சமீபத்தில் அங்கு போயிருந்த போது, இந்த நபரின் ஊழல் பற்றி சாதாரணமாகவே எல்லோருக்கும் தெரிந்திருந்தது, அத்துடன் பாடசாலையின் பெயரும் இந்த நபரால் மிகவும் கெட்டிருந்தது
  • எனக்குத் தெரிந்த மட்டில் இந்த வழக்குக்கும் கடஞ்சா சொல்லும் வழக்குக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. கடஞ்சா சொல்வதை battered women syndrome என்பார்கள். தொடர் வன்முறையை எதிர்கொள்ளும் ஒருவர் திருப்பி அடிக்க, அது கைமோசமாகி கொலையில் முடிவது. ஒரு மாதம் முன்பு கூட ஒரு கணவனை கொன்ற வயதான மனைவியை விடுதலை செய்தார்கள். ஆனால் இது வெறி ஏற்றியபடி, பஸ்சுக்கு காத்திருந்து  செய்யப்பட்ட கொலை. ஆகவே இதை இப்படி முடிப்பது கடினம். மனநிலை பாதிப்பு என கூறி diminished responsibly எனச் சொல்லி murder ஐ manslaughter ஆக குறைக்கலாம். ஆனால் இப்படிச் செய்தால் மனநிலை மாறும் வரை (வாழ்நாள் பூராவும் கூட) ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிவரும். அதுக்கு மேர்டர் சார்ஜை ஒத்துகொண்டு 10 வருடத்தில் வெளியே வருவது பரவாயில்லை.