கிருபன்

மதம் பிடித்த பிராந்தியங்கள்

Recommended Posts

மதம் பிடித்த பிராந்தியங்கள்

by in ஆய்வு கட்டுரைகள்

church-blasts-1.jpgமத்திய கிழக்கைப் போலவே, தெற்காசிய நாடுகள் அனைத்தும் இன்று மதம் பிடித்தோரின்  அரசியலில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

பல்தேசிய சமூகங்களை கொண்ட இந்த பிராந்தியத்தில் பெரும்பான்மையினர் என தம்மை அடையாளப்படுத்தி கொண்டுள்ளவர்கள்,   மத கொள்கைகளை முன்னிறுத்தி  ஆட்சியை கைப்பற்றி தமது நம்பிக்கைகளையும்  புனை கதைகளையும் ஆட்சியில் உட்புகுத்துவது மட்டு மல்லாது, சமூக பொருளாதார வாழ்வில் பெரும் தக்கங்களை விளைவித்து வருகின்றனர்.

தமது ஆட்சி அதிகாரப்போக்கினை மேலும் பல ஆண்டுகளுக்கு நிலை நிறுத்தி கொள்ளும் போக்கில், தமது கொள்கைகளை சமூகங்களின் மத்தியில் பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளை கொண்டிருக்கின்றனர். கல்வி தலையீடுகள்,  வேலைவாய்பு தலையீடுகள் மட்டுமல்லாது புதிய  சமநிலையற்ற சமூக வாழ்விற்கான காரணிகளாகவும்  சமய அதிகார  ஆட்சி யினர்  உள்ளனர்.

தெற்காசிய நாடுகளில் சனநாயக விழுமியங்களுக்கு முரண்பட்ட ஆட்சியாளர்கள் எவ்வாறு தமது அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதில் திட்டமிட்ட வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதன் தாக்கத்தினால் எவ்வாறு சமுதாய சீர்கேடுகள் உருவாகின்றது  என்பதை இந்த கட்டுரைகள் ஆய்வு செய்கின்றன.

மதமும் அரசியலும்

சிறிலங்காவில் அண்மையில் இடம் பெற்று வரும் நிகழ்வுகள் மதங்களின் பெயரால் இடம் பெற்று கொண்டிருக்கின்றன. இதுபோல் தெற்காசியாவில் மட்டுமல்ல மத்திய கிழக்கில் பலவருடங்களாக இடம் பெற்று வருகிறது.

மதத்தை மனிதன் உருவாக்கிய மூல நோக்கத்திலிருந்து தவறி, மனித உயிர்களை சீரழிக்கும் ஒரு காரணியாக மதத்தை மனிதன் உபயோகப்படுத்தவது மிகவும் இழிவுத்தனமானதாகும்.

மத போதனை எனும் பெயரில் வன்முறையை தூண்டும் படியான அறிவுரைகளும் அதற்கான வியாக்கியானங்களும் உருவாக்கப்பட்டு இன்னும் ஒரு மத நம்பிக்கையை சார்ந்தவர்களை நோக்கி வன்மத்துடன் திருப்பி விடப்படுகிறது.

இந்த வன்முறை தூண்டல்களின் பின்னால் அரசியல் லாபங்களே எப்பொழுதும் உள்ளன. மக்கள் மத்தியிலே நிலவும் சகிப்பு தன்மை அற்ற நிலையை தந்திரமாக உபயோகப்படுத்தும் சில அரசியலாளர்கள், சர்வதேச அளவில் பரந்து பட்டு உள்ளனர் என்பது உண்மை.

சிறிலங்காவில் இடம் பெற்ற குண்டு தாக்குதல்களுக்கு நாட்டு எல்லைகள் பிராந்திய எல்லைகள் கடந்த அமைப்புகள் உரிமை கோரி நிற்பது இதற்கு நல்ல உதாரணமாகும்.

தெற்காசியாவை பொறுத்தவரையில்  இந்தியாவிலும் நேபாளத்திலும் இந்து மத ஆதிக்கமும் பாகிஸ்தானிலும் பங்களாதேசத்திலும் மாலைதீவிலும்  இஸ்லாமிய மத ஆதிக்கமும் சிறிலங்காவில் பௌத்த மத ஆதிக்கமும் உள்ளது. இந்த மதங்கள் அந்த நாட்டு அரசியலில் பெரும் தலையீடுகள் செய்கின்றன.

அதேவேளை, மத நம்பிக்கை மூலம்  உருவாக்கிய சமூக ஊடுருவல் காரணமாக குறிப்பிட்ட சில மத பிரதானிகள் தமது அரசியல் செல்வாக்கை பிரயோகிப்பது வெளிப்படையான உண்மையாகும் . மத செல்வாக்குகள் அதிகரித்து இருக்கும் நிலையில்  சர்வதேச அரசியலில் தமது செல்வாக்கை செலுத்தும் பொருட்டு தெற்காசிய பிராந்தியங்களில் உள்ள நாடுகளில் சர்வதேச வல்லரசுகள் தமது செயற்பாடுகளுக்கு சாதகமாக்க முனைந்துள்ளன.

மதமும் பிராந்தியமும்

இரண்டாம் உலக போரின் பின் பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த இந்த நாடுகள், சமூக அரசியல் பொருளாதார நிலையில் ஒன்றுடன் ஒன்று பெருமளவு வேறுபட்டவை அல்ல.

அடிப்படையில் தமது விடுதலை சாசனத்தில் தாம் பல்லின ஆட்சி அரசாக இருக்கப் போவதாகவே சுதந்திரம் பெற்று கொண்டன.  மதசார்பின்மையை கடைப்பிடிக்கப் போவதாகவே உறுதி கொண்டிருந்தன.  ஆனால் காலப்போக்கில் பெரும்பான்மை இன மதங்களின் கைகளில் தெற்காசிய நாடுகளின் அரசியல் சிக்குண்டு போய் உள்ளது.

உதாரணமாக இந்து மதத்தின் கையில் இந்தியாவும் நேபாளமும், இஸ்லாமிய மத்தின் கையில் பாகிஸ்தான், வங்காளதேசம் , மாலைதீவு போன்றனவும் பௌத்தத்தின் கையில் சிறிலங்காவும் சிக்குண்டு போய் உள்ளது. இதனால் தற்போது மத அரசியலும் அதன் பின்விளைவுகளும் பெரும் தாக்கத்தை விளைவிக்கின்றன.

இதனை மேலும் பற்றி எரியக்கூடிய செயற்பாடுகளாக சர்வதேச சூழலில் மதம் சார்ந்த போர் மேகம் ஒன்று மீண்டும் சூழ்ந்து வருகிறது.  இந்த சர்வதேச  போரிற்கான அத்திவாரங்களாகவே கொழும்பு குண்டு வெடிப்புகளும் சர்வதேச அளவில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான உளப்பார்வை உருவாக்கும் போக்கும் உள்ளதோ என்ற எண்ணத்தை  தருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ அவர்கள் ஈரான் நாட்டுடன் எந்த வித பொருளாதார தொடர்புகள் வைத்திருக்கும் நாடுகளுக்கும் எதிராக, அவை அமெரிக்க கூட்டு நாடுகளாக இருந்தாலும், தடைகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தார்.

அத்துடன் ஈரானிய புரட்சிகர காவலர் படைகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தார். அது மாத்திரம் அல்லாது B52ரக போர் விமானங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய  மத்திய கிழக்கு அரசியல் எவ்வாறு தெற்காசியாவில் தாக்கம் விளைவிக்கின்றது என்ற  நிலைமையை  புரிந்து கொள்வது அவசியமாகிறது.

donald-trump.jpg

மத்திய கிழக்கு மதப்பிராந்தியம்

அரபு நாடுகள் தம்மிடையே கூட்டு உறவு ஒன்றை ஏற்படுத்தி கொள்வதில் பெரும் தோல்வி அடைந்துள்ளன. தமது பொருளாதார அரசியல் சமூக வாழ்வை சமாதானமாக  உறுதி செய்து கொள்ள முடியாத நிலையை இன்று அடைந்திருக்கின்றன. ஒரு நிரந்தரமான மத்திய கிழக்கு கூட்டு ஒன்றை உருவாக்க முடியாது உள்ளன.

மத அரசியல் காரணமாக ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையை கொண்டிருப்பது, அருகாண்மை பிராந்தியமான தெற்காசிய நாடுகளில் இன்று தாக்கங்களை விளைவிக்க ஆரம்பித்திருக்கிறது.

2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரியாவில் ஆரம்பமான ஆட்சி கவிழ்ப்பு போராட்டங்களை தொடர்ந்து நிலைமை மேலும் சிக்கல் நிலையை அடைந்திருக்கிறது. சிரிய அரசியல் நிலவரம் சர்வதேச வல்லரசுகளை தலையீடு செய்யும் நிலைக்கு உள்ளாக்கி இருக்கின்றன.

அல்லது மறுவளமாக பார்த்தால், அரபு நாடுகளிடையே நிரந்தரமான உறுதியான அரசுகள் அமைவது பொருளாதார மற்றும் எரிபொருள் எண்ணெய் உற்பத்தி கட்டுப்பாடு அற்ற நிலையை கையாளும் வகையில் அரபு நாடுகளை முரண்பட்ட நிலையில் வைத்திருக்க சர்வதேச வல்லரசுகள் திடம் கொண்டுள்ளன.

அதேவேளை, மத்திய கிழக்கு அரபு நாடுகள் மத்தியில் இருக்கக்கூடிய இஸ்ரேல், தனது பாதுகாப்பை மையமாக கொண்டு மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் முரண்பாடுகளை உருவாக்குவதிலும் சமூக பொருளாதரத்தில் மேம்பட்ட நிலையை அடையாத வகையில் வைத்திருப்பதன் ஊடாக, பலவீனப்படுத்துவதில் பல்வேறு பொறி முறைகளை கையாளுகிறது.

அதற்கு நல்ல உதாரணமாக சிரியாவில் இடம் பெறும் யுத்தத்தை எடுத்து கொள்ளலாம்

சிரிய பிரச்சினையில் பல்வேறு தரப்புகளுக்குமான உதவிகள் சர்வதேச அளவில் பல்வேறு வல்லரசுகளிடம் இருந்தும் பெறப்பட்டு வருகிறது. இந்த உதவிகள் நேரடியாக அல்லாது மறைமுகமாக முகவர்கள் ஊடாக யாரிடம் இருந்து யாருக்கு செல்கிறது என்பது வெளியே தெரியாத வகையில் முகவரிகள் தவறாது போராட்ட தரப்புகளுக்கு வந்து சேர்கிறது.

இதனாலேயே சிரிய யுத்தத்தை இது ஒரு முகவர் யுத்தம் Proxey War என்ற சொற்பதங்களுடாக மேலைத்தேய பத்திரிகைகள் அழைக்கின்றன.

சிரிய அரசுக்கு எதிராக போராடும் விடுதலைப் போராளிகளுக்கு துருக்கி ஊடாக சவுதி அரேபியா உதவுகிறது. சுண்ணத்து இஸ்லாமிய மதப்பிரிவை உள்ளடக்கிய இந்த போராளிகளுக்கு வோகாபிஸ் என்று அழைக்க கூடிய சவுதி அரேபியாவின் ஆளும் பழைமைவாத முதலாளித்துவ அரச வர்க்கத்திடம் இருந்து உதவிகள் கிடைக்கின்றன,

அரச படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும் அரச படைகளோடு இணைந்து செயலாற்றக் கூடிய வர்களுக்கு ஈரானும் உதவுகின்றன. சியா இஸ்லாமிய வகுப்பை சேர்ந்த ஈரானிய தலைமை மிகப் பெரும் தொகை ஆயுத மற்றும்  உணவு உதவிகளை செய்து வருகிறது.

அதேவேளை ஈராக்கிய யுத்தத்தின் போது தமது தாயக பிராந்தியத்தை அந்த பகுதியில் தக்க வைத்து கொண்டுள்ள குர்திஷ் இன போராளிகள் சிரிய தேசத்துடன் இணைக்கப்பட்டுள்ள தமது ஒருபகுதி தாயகப் பிரதேசத்தை  மீட்கும் பொருட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு  இஸ்ரேலிய உதவி கிடைக்கிறது.

2014 ஆம் ஆண்டு வரை உக்கிரமாக நடந்த போர் நடவடிக்கைகள் அதிபர் டொனால்ட் ரம்ப் அவர்களின் ஆட்சி ஏற்புடன் அமெரிக்க செயல்பாடுகளில் தொய்வு கண்டது . இந்த நிலையில் ரஷ்ய கூட்டுடன் சிரியா அரச படைகள்  விடுதலைப் போராளிகளுக்கு எதிராக கடுமையான தாக்கதல்களை நடத்தி திரும்பவும் தமது இழந்த பிரதேசங்களை மீட்டு எடுத்து கொண்டன.

Abu-Bakr-al-Baghdadi.jpg

ஐஎஸ் ஐஎஸ் உருவாக்கம்

ஆனால், 2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சிரியாவுக்கு எதிராக போராட்ட குழுக்களுடன் இணைந்து   போரிட்ட  சுண்ணத்து  இஸ்லாமிய பகுதியான அல் குவைதா அமைப்பிலிருந்த ஒரு சிலரால் இராக்கிய சிரிய இஸ்லாமிய அரசு என்ற ஐஎஸ் ஐஎஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஈராக்கிய யுத்தத்தின் போதே ஐஎஸ் ஐஎஸ் தோற்றம் பெற்று விட்டபோதிலும்,  தமது உக்கிரமான நடவடிக்கைகளை சிரியாவிலேயே ஆரம்பித்தனர். இந்த அமைப்பு சவுதி அரேபிய, அமெரிக்க, இஸ்ரேலிய நேரடி மற்றும் மறைமுக உந்துதல்களின் அடிப்படையிலேயே உருவாகியது.

மத்திய கிழக்கு குறித்த மேலைத்தேய ஆய்வாளர்கள் பலரின் ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம் , ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு சவுதி அரேபிய  ஆட்சிப்பீடத்தில் உள்ள வொகாபிஸ் களின் உதவியிலேயே இயங்கி வருகிறது. இந்த அமைப்பு சர்வதேச ரீதியாக மிகவும் செல்வாக்கு பெற்றதாகும். அத்துடன் பல்வேறு கிளை அமைப்புகளை தனது வலைஅமைப்பினுள் கொண்டதாகவும் ஐஎஸ் ஐஎஸ் உள்ளது.

கடந்த காலங்களில் மேலைத்தேய அவுஸ்திரேலிய  நாடுகளில் இடம்பெற்ற பல தாக்குதல்களுக்கு உரிமை கோரியதன் மூலம்,  உலக மக்கள் மத்தியிலே இஸ்லாத்தின் மீது ஒரு வெறுப்பை உருவாக்குவதே இந்த அமைப்பின் பெரும் வெற்றியாக மேலை நாடுகளில் உணர்ந்து கொள்ளப்படுகிறது.

வெறுப்புருவாக்கம்

சிரிய யுத்தத்தில் சியா இஸ்லாத்தை தழுவும்  ஈரானும்  சுண்ணத்து இஸ்லாத்தை தழுவும் சவுதி அரேபியாவும் மிக கடுமையான முகவர் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.  அதேவேளை , மத்திய கிழக்கு நாடுகளில் உறுதியான அரசியல் கட்டமைப்புகள் கொண்ட ஈராக்,லிபியா,எகிப்து ஆகிய நாடுகளை சிதைத்துவிட்ட இஸ்ரேலிய மேலைத்தேய கூட்டு சதியானது தற்போது ஈரானின் உறுதியான அரசியல் கட்டமைப்பை உடைத்து தமது பாதுகாப்பை உறுதி செய்வதில் கருத்தாக இருக்கின்றன.

ஈரான் மீது தமது தாக்குதல்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் தேடும் வகையில் இஸ்லாத்தின் மீது வெறுப்புருவாக்கம் நடத்தப்படுகிறது. இதற்கு மறைமுக வொகாபிஸ் ஆட்சியாளர்கள் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகிறது.

அதேவேளை   2011 இல் அரபு இலைதுளிர் கால போராட்டங்களால்  இவர்கள் மிகதாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர் எனலாம். சனநாயகத்தின் பெயரால் தமது ஆட்சி அதிகாரத்தை இழக்க சவுதி மன்னர் ஆட்சி என்றும் தயாராக இல்லை.

மேலும் பல அரசியல் கொலைகளில் இருந்து அரச குடும்பத்தினர் மேலைத்தேயத்தால் காப்பாற்றப் பட்டு உள்ளனர்.  இதனால் மேலைத்தேய இஸ்ரேலிய பாதுகாப்பு திட்டத்துடன் இணைந்து போக வேண்டிய தேவையும் வொகாபிஸ் அட்சியாளர்களுக்கு உள்ளது.

இந்த நூற்றாண்டின் மிக ஆரம்பத்தில் ஈராக் மீதான படை எடுப்பு நிகழ்த்தும் பொருட்டு அன்றைய அதிபர் ஜோர்ஜ் புஷ் அவர்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பல்வேறு நாடுகளையும் சம்மதிக்க வைப்பதில் பெரும் பாடுபட்டார். அதிபர் சதாம் குசைனிடம் மனித இனத்தை அழித்துவிட கூடிய இராசாயன ஆயுதங்கள் இருப்பதாக பொய் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டது. இறுதியாக பிரான்ஸ் ரஷ்யா சீன நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமலே ஈராக் மீது படைஎடுப்பு நிகழ்த்தப்பட்டது.

ஈராக்கில் இன்று மேற்கத்தேய ஆதரவு அரசு ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. ஜனநாயகம் என்ற பெயரில் அதன் இராணுவ, அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பு வலு குறைக்கப்பட்டு  உள்ளது . இருந்த போதிலும் ஈரானின் செல்வாக்கு அங்கு மிக அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் ஈரான் மீதான ஒரு நடவடிக்கை நிகழ்த்துவது குறித்து தீவிரமான அடித்தள முயற்சிகள் தற்போழுது ஆரம்பமாகி உள்ளது. கடந்த கால குண்டு வெடிப்புகள் அனைத்தும் இதந்கு அமைவாக உருவாக்கப்படும்   இஸ்லாமிய வெறுப்புருவாக்கத்தின் அடிப்படைகளே எனலாம்.

(தொடரும்)

-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

 

http://www.puthinappalakai.net/2019/05/14/news/37981

Share this post


Link to post
Share on other sites

மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2

by in ஆய்வு கட்டுரைகள்

saudhi-india-300x200.jpgமத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில்  மதம் செல்வாக்கு செலுத்துவது போல தெற்காசிய நாடுகளிலும்  மதம்,  அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தும்  நிலையை பெற்று கொண்டுள்ளது.  குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தெற்காசிய நாடுகளில் பிரதான பங்கு வகிக்கும் நாடுகளில் மத செல்வாக்கு மிகவும் அதிகரித்த நிலை உள்ளதை காணக் கூடியதாக உள்ளது.

இந்த நாடுகள் மத்தியிலே இருக்கக்கூடிய  பொதுவான பண்புகளை  முதலில் கருத்தில் கொள்வது நல்லது.

முதலாவதாக, தெற்காசிய நாடுகள் அனைத்தும் ஜனநாயக அரசியல் பாரம்பரியத்தை தம்மகத்தே கொண்டனவாக காண்பித்து கொண்டுள்ளன. பெரும்பான்மை ஜனநாயகம் என்றதன் பெயரில், அந்நாடுகளில் சனத்தொகையில் அதிகம் கொண்ட மதம் அல்லது மொழி ஆட்சியில் அதிகாரம் செலுத்துகின்றது.  மேலும் தேசியவாதம் என்பது அதிகாரம் செலுத்தும் மதமும் அது சார்ந்த மொழியையும் முதன்மைப்படுத்தவதாக உள்ளது.

இரண்டாவதாக, அவை அனைத்தும் மதத்தையே  அடிப்படையாக வைத்து பெரும்பான்மை அரசியல் நடத்தி வருகின்ற போதிலும் பொருளாதார ரீதியாக மிகவும் அடித்தள நிலையில் உள்ள மக்களை, பெரும்பான்மையாக தம்மகத்தே கொண்டுள்ளன. கல்வி அறிவு விகிதம் குறைந்த மக்கட் தொகை அதிகம் காணப்படுகிறது

மூன்றாவதாக, இந்த நாடுகள் அனைத்தும் பெரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை கொண்டுள்ளன.  மேலும்  வேலைவாய்ப்பு, கல்வி வசதி, சுகாதாரம் , சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் மதக்கூறுகளின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது

இத்தகைய நிலைமையினால், சமூகப் பிரிவினைகளை கொண்ட நாடுகளாக இந்த நாடுகள் உள்ளன. சமூகப் பிரிவினைகள் உள்நாட்டு நிர்வாகத்தில் அரசியல் அமைதி இன்மையை  உருவாக்குகின்றது அல்லது இலகுவாக சமூக சீர் கேடுகளை உருவாக்க கூடிய நிலை உள்ளது.

மோசமான, அரசியல் சமூக உறுதியற்ற தெற்காசிய நாடுகளை தமது  பூகோள அரசியல் பொருளாதார நலன்களுக்கு ஏற்றாற்போல், வல்லரசு நாடுகள் உபயோகப்படுத்த முனைகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளை எவ்வாறு தமது முகவர் யுத்தத்துக்கு தகுந்த வகையில் பயன்படுத்துகின்றனவோ, அதேபோல தெற்காசிய நாடுகளையும் தமது பொருளாதார இராணுவ நலன்களுக்கு ஏற்ற வகையில் வல்லரசுகள் அவற்றின் உள்நாட்டு பிரிவினைகளை, தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன.

இதனை மேலைத்தேய இராஜதந்திர நகர்வுகளில் internal mechanism என்ற கவர்ச்சி மிக்க சொற் தொடர் கொண்டு உள்ளக பொறி முறையை கையாளும் வகையை குறிப்பிடுகின்றனர். இதில் மிதமான பாதையாயின், எதிர் கட்சிகளை தூண்டி விடுதல், கடினமான பாதையாயின்  மதங்களிடையே கலவரங்களை உருவாக்கும் வகையில், முகவர்கள் மூலம்  குண்டு தாக்குதல்களை நடத்துதல் என அனைத்தும் அடங்கும்.

இந்த வகையில்  தெற்காசிய நாடுகள் அனைத்தும் தமது முன்னேற்றம் என்பதன் பெயரில் சீனாவிடம் கடன் பெற்றுக் கொள்வதிலும், அமெரிக்காவுடன் ஆயுத உற்பத்தி மற்றும் ஆயுத கொள்வனவு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதன் ஊடாகவும்,  தமது சுதந்திர அரசியலையும்  இறையாண்மையையும் பறி கொடுத்தனவாக உள்ளன. இந்த வரிசையில் அடங்கக்கூடிய தெற்காசிய நாடுகளில் முக்கியமானவற்றை இங்கே காணலாம்.

Narendra-Modi.jpg

மதம்பிடித்துள்ள இந்தியா

2014 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்ததிலிருந்து இந்து அடிப்படைவாத அமைப்பான ஆர் எஸ் எஸ் என அழைக்கப்படும்,  தேசிய  தன்எழுச்சி தொண்டர்கள் அமைப்பு (Rashtriya Swamyam Sevak Sangh) தனது சித்தாந்தத்தை வெகு வேகமாக நிலைநிறுத்துவதில் கவனமாக உள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்து அடிப்படைவாதம் அரச நிர்வாகப் பிரிவுகளுக்குள் இரகசிய, அத்துமீறிய ஆக்கிரமிப்பகளை செய்து வருகிண்ற போதிலும் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) வின் வெற்றி இந்து அடிப்படைவாதத்தின் அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது

இது வரை காலமும் குற்றச்செயல்களாக கருதப்பட்ட இதர மதநம்பிக்கைகளை தவறாக தூற்றுதல்,  மதிப்பளிக்காது விடுதல் போன்ற செயற்பாடுகள், தற்போது ஏற்று கொள்ளத்தக்கதாக அல்லது அரச சேவையாளர்களால் கூட உதாசீனம் செய்யப்படுவதாக உள்ளது.

இத்தகைய இதர மதங்கள் மீதான வெறுப்பு குறிப்பாக,  வட இந்திய சமூகங்களால் அதிகம் மேற்கொள்ளப்படுவதாக நியூயோக்கர் என்ற அமெரிக்க சஞ்சிகை கூறுகிறது.

இந்தியாவை ஆட்சி செய்து வரும் பாஜக அரசாங்கம் சமய சிறுபான்மை மக்களின் வாழ்க்கையில் பெரும் இடையுறுகளை விளைவிப்பதாக  உள்ளது. உதாரணமாக இந்து சாதீய அமைப்பிலிருந்து தப்பும் பொருட்டு, பல இந்து தாழ்த்தப்பட்ட சாதி மக்கள்,  மதம் மாறும் நிலை காணப்படுவதாகவும், ஆனால் இந்த நிலைக்கு எதிராக பல மாநில அரசுகள் மதமாற்ற சட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக அந்த சஞ்சிகை தெரிவிக்கிறது.

மேலும் பஜ்ஜிரங் தள் எனப்படும் இந்து அதீத வலது சாரி  அமைப்பு பல மத கலவரங்களை நடத்தி வருவதாகவும் அத்துடன் பாதிரியார் ஒருவர்  சட்டத்துக்கு புறம்பான வகையில் ஒருவரை மதமாற்றம் செய்தார் என்று அவரை மொட்டை அடித்து கழுதையில் ஏற்றி, நகர் வலம் வந்ததாகவும் அந்த சஞ்சிகை கட்டுரை வரைந்துள்ளது.

கடந்த வருடம் மகாராஷ்டிராவில்  சிறு நகரமான குர்கான் எனும் இடத்தில் இந்து தேசியவாத குழுக்கள் பொது இடங்களில் தொழுகைகள் நடத்துவது தடை செய்யப்பட வேண்டும் என்ற மிரட்டியதுடன் அவ்வாறு தொழுகை நடத்த முற்பட்டவர்கள்  மீது சட்டம் ஒழுங்கு நிலைநாட்டல் என்ற பெயரில் தாக்குதல்கள் நடத்தியது.

இது போல் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதீயர்களுக்கும் எதிராக பரவலாக கடுமையான தாக்குதல்கள், வட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் இடம் பெற்றிருப்பது குறித்த செய்திகள்,  பல மேலைத்தேய  பத்திரிகைகள் மற்றும்  செய்தி நிறுவனங்கள்  கடந்த நான்கு வருடங்களில்  கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டுள்ளன.

அண்மையில் வெளிவந்த Financial Times Weekend இணைப்பு வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில,  மோடி அவர்களின் ஆட்சியில் இந்து தேசிய வாதம் தேசிய நீரோட்டத்தில் சேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டுதல் குறித்து அனைத்து ஆயத்தங்களும் செய்யப்பட்டு அதற்கான கற்சிற்பங்களும் தூண்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது சரியான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது மிக விரைவாக பொருத்தி அடுக்கப்பட கூடிய வகையில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதன் மூலம் அரசியல் வெற்றிக்காக மதசித்தாந்த கருத்துகளை உள்நாட்டில் உபயோகப்படுத்தும் பாஜக அரசாங்கம், வெளியுறவு கொள்கையிலும்  கூட சர்வதேசத்தில் அதீத வலதுசாரி தேசியவாத அரசுகளுடனும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யுத்த நிலையை தூண்டும் அரசுகளுடனும் அதிக உறவு நிலையையும் பேணும் போக்கையும் காணக்கூடியதாக உள்ளது.

israel-india.jpg

சுவர்க்கத்தில் நடந்தது

2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4அம் திகதி இந்தியப் பிரதமர் இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அதுவே முதன் முதலாக இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு  சென்ற சந்தர்ப்பமாகும். முன்று நாள் பயணத்தின் இறுதியில் இடம்பெற்ற இருதரப்பு தலைவர்களதும் செய்தியாளர் மாநாட்டில்  பேசிய இஸ்ரேலியப் பிரதமர், ”இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான திருமணம்  சுவர்க்கத்தில் நடந்தது. அதனை இவ்வுலகில் நடைமுறை படுத்துகிறோம்” என்று களிப்புடன் கூறி இருந்தார்.

வலது சாரி தேசியவாதகொள்கை கொண்ட இரு தலைவர்களுக்கும் இடையில் பெருமெடுப்பிலான ஒற்றுமைகள் உள்ளன. இஸ்லாமிய எதிர்ப்புவாத கொள்கை . பொதுவாக பயங்கரவாத எதிர்ப்பு என்ற வார்த்தையை தமது முக்கிய ஆயுதமாக கொண்டு செயற்படக் கூடிய தன்மை ஆகியன இஸ்ரேலிய இந்திய உறவை என்றும் இல்லாத வகையில் நம்பிக்கைக்குரியதாக உருவாக்கி உள்ளது.

கடந்த கால இந்திய அரசாங்கங்கள்  பாலஸ்தீனத்தில் ஒரு அரசு நிறுவுவதற்கு தமது ஆதரவுகளை கொடுத்திருந்தனர். இதுகுறித்து பாராளுமன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் மோடி அவர்களின் 2017 இஸ்ரேலிய பயணத்தின் போது, அவர் ஜெருசலேமில் இருந்த போதிலும்  ஒரு நடுவு நிலைமையை காட்டும் பொருட்டாவது, பலஸ்தீன தலைமையை சந்திக்காது  திரும்பியது  அவரது இஸ்ரேலிய சார்பு கொள்கையை மிகவும் தெளிவாக காட்டியது.

அதேவேளை இந்திய இராணுவத்திற்கு தேவையான ஆயுத தளவாட தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில், இந்தியாவின் ஆயுத கொள்வனவு ஒப்பந்தம் பிரதமர்  மோடி அவர்களால், 4 பில்லியன் டொலர் வரையில் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாஅதிகமாக  இறக்குமதி செய்யும் ஆயுத தளவாடங்களில், ரஷ்யாவுக்கு அடுத்தாக தற்பொழுது இஸ்ரேலிய உற்பத்திகள் ஆகும்.

சுவர்க்கத்தில் இடம் பெற்ற திருமணம் என்ற இஸ்ரேலிய பிரதமரின் வார்த்தைகளின் இந்தியாவிற்கான ஆயுத வழங்கல் உடன்படிக்கைகளின்  அடிப்படையிலிருந்தே  வருகிறது என்பது இப்பொழுது தெளிவாகிறது.

saudhi-india.jpg

மசகு எண்ணையில் மதம்

இதேபோல பிரதமர் மோடி அவர்களின் சவுதி அரேபியாவுடனான உறவும் மிகவும் நெருக்கமானதாக  எழுந்துள்ளது. இதன் காரணமாக  இந்திய வெளியுறவு கொள்கை ஈரானுடனான உறவை முறித்து கொள்ளுமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.

இந்த கட்டுரை எழுதி கொண்டு இருக்கும்    பொழுது ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜாவீட் சரீப் அவர்கள் புது டில்லியில் பேச்சுவார்த்தைகளுக்காக வந்திருந்தார்

ஏற்கனவே இந்த கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டது போல   அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ , ஈரான் நாட்டுடன் எந்த வித பொருளாதார தொடர்புகள் வைத்திருக்கும் நாடுகளுக்கும் எதிராக, அவை அமெரிக்க கூட்டு நாடுகளாக இருந்தாலும், தடைகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட   இந்தியா,  ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் மசகு எண்ணையை நிறுத்தி கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மசகு எண்ணை இறக்குமதி நிறுவனமான  இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் எனப்படும் IOC  தனது வருடாந்த இறக்குமதி ஒப்பந்தத்தை அடுத்த ஆண்டுக்கு புதுப்பிக்கமாட்டாது என அறிவித்துள்ளது.

அதேவேளை ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கு பதிலாக இவ்வருடம் ஜூலை மாதம் முதல் ஒரு நாளுக்கு 2மில்லியன் மசகு எண்ணெயை சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு IOC உடன்பட்டிருக்கிறது.

ஆக, இந்தியா,  அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக செயலாற்றவதற்கு முன் வந்துள்ளது. இந்தியாவின் இந்த நகர்வை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும்  சவுதி இளவரசர், அண்மைய இந்திய பயணத்தின் போது  இந்தியாவில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு கைத்தொழிலில் முதன்மை வகிக்கும் Reliance Industries எனும் நிறுவனத்துடன் இணைந்து அந்த கைதொழிலில் 25 சதவீத நிதி முதலீடு செய்வதற்கு முன் வந்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய மசகு எண்ணெய் உற்பத்தி கைத்தொழிலாக கருதப்படும் இந்தியாவில் உள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு வியாபாரம் குறிப்பாக Reliance Industries அம்பானி சகோதர்களுக்கு சொந்தமானதாகும். பல கோடிகளுக்கு சொந்தக்கார்களாகிய அம்பானிகள் இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் சகபாடிகள் என இந்திய பத்திரிகைகள் பல தகவல்கள் வெளியிட்டு வருகின்றன.

sushma-iran.jpg

வெறும் வியாபார ஒப்பந்தங்களிலே  மதம் எங்கே உள்ளது என்ற கேள்வி எழுமானால் சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் ஈரானை தமது எதிரியாக பார்க்கின்றன. இந்த இரு நாடுகளுமே தமக்கிடையிலான மத பிரிவினைகளை ஒருபுறம் வைத்து விட்டு, சியா இஸ்லாமிய ஈரானை அமெரிக்க துணை கொண்டு தாக்கி விடுவதற்கு முனைகின்றன.

இதற்கு ஏற்றவகையில் பிராந்திய நாடுகளை தமக்கு சார்பாக மாற்றும் பொருட்டு நிதி முதலீடுகள் ஆயுத விற்பனைகள் மட்டுமல்லாது  மேலைத்தேயத்தால்  உருவாக்கப்பட்ட  சர்வதேச விதி முறைகள் என பல்வேறு காரணிகளையும் சமயோசிதமாக பயன்படுத்தி வருகின்றன.

அதேவேளை தலைமை பிராந்திய நாடுகளின் கீழ் இருக்கக் கூடிய நாடுகளில் தமக்கு சாதகமான யுத்த சூழலை உருவாக்கும் பொருட்டும் சமூக மனமாற்றங்களை உருவாக்கும் நோக்குடன்  குண்டு வெடிப்புகள் யுத்தக் கப்பல்களின் வரவுகள் என பதற்ற சூழலை குறிப்பாக தெற்காசிய நாடுகளில் ஏற்படுத்துகின்றன.

ஆனால் இந்த நாற்றாண்டின் ஆரம்பத்தில் ஈராக் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்ட தன் பலனாக,  மேலைத்தேயம் சந்தித்த பொருளாதார முடக்கம் அதே காலப்பகுதியில் சீனாவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு  அரசியல் இராசதந்திர நகர்வுகள் இடம் பெறுகின்றன.

இவ்வார economist சஞ்சிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல “சோவியத் யூனியன் வீழ்ச்சி கண்டு மூன்று பத்தாண்டுகளின் பின் ஒற்றை மைய உலகு என்னும் நிலை இன்று முடிவு கண்டிருக்கிறது. சீனாவும் அமெரிக்காவும் யார், “நம்பர் வண்“ என்று பெயர் எடுப்பதில் திடகாத்திரமாக பரவலான போட்டியில் உள்ளன.

வர்த்தகத்தின் மூலம் உறவு வலுப்பெறும் என்று இருந்த நிலை மாறி வர்த்தகமே போராகி விட்டது.  வல்லரசுப் போட்டிகளை தவிர்க்கும் பொருட்டு புதிய சட்டதிட்டங்களை உருவாக்கும் நிலைமை நிலவுகிற போதிலும்  இருதரப்பும் சட்டதிட்டங்களை மீறும் செயற்பாடுகளிலேயே உள்ளன”  என்று அந்த ஆசிரியர் தலையங்கத்தை முடித்திருக்கின்றது

இருந்த போதிலும் அமெரிக்கா இன்னமும் முழுமையான யுத்தம் ஒன்றிற்கு தயார் நிலையில் இல்லை. இதற்கு பல்வேறு உள்ளக வெளியக காரணிகள் உள்ளன. ஆனால் சந்தர்பங்களுக்காக நிகழ்வுகளை உருவாக்குவதும், நிகழ்வுகளுக்காக சந்தர்ப்பங்களை உருவாக்குவதுமே  ஏகாதியத்திய சிந்தனையாளர்களின் அடிப்படை நோக்கமாகும்.

  • லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

(தொடரும்)

 

http://www.puthinappalakai.net/2019/05/25/news/38140

Share this post


Link to post
Share on other sites

மதம் பிடித்த பிராந்தியங்கள் -3

by in ஆய்வு கட்டுரைகள்

us-india-china-300x197.jpg

 

 

பிராந்திய ஏகாதிபத்திய அரசியலில் மத்திய கிழக்கை இஸ்ரேல் தனது கட்டுக்குள் வைத்திருக்க முனையும் அதேவேளை, தெற்காசிய அரசியலில் இந்திய பிராந்திய வல்லரசு தனது மேலாண்மையை நிச்சயப்படுத்த முனைகிறது.

இந்த வியூகத்தை மையமாக கொண்டு இரு பிராந்தியங்களிலும்  மதம் உள்நாட்டு சமூக பிரிவுகள் மத்தியில்  எழுச்சி ஊட்டும் உபாயமாக ஆங்காங்கே தேசங்களுக்கு ஏற்ற வகையில் பயன் படுத்தப்படுகிறது

சமூகங்கள் மத்தியில் இருக்கக் கூடிய மத வேறுபாடுகளை ஏகாதியத்திய சிந்தனையாளர்கள் கையாளுகின்றனர். தமது பாதுகாப்பான இருப்பை  மையமாக கொண்டு, சர்வதேச வல்லரசுகள் ஏகாதியத்திய பிராந்திய கூட்டு கோட்பாடுகளை மையமாக கொண்டு,  மத அடிப்படையிலான வேற்றுமை மற்றும் எழுச்சி ஊட்டலுக்கு துணை போகின்றன.

அதிலும் பல்வேறு படிகள் மேலாக அதீத பலன்களை அடையும் முகமாக பல தசாப்தங்களுக்கு மத வேற்றுமையை வளர்த்தலில் வியூகம் அமைத்து செயலாற்றுகின்றன.

மேலும் யுத்தநோக்கு கொண்ட   நகர்வுகளை செய்வதன் ஊடாக சர்வதேச வல்லரசுகள் ஆயுத வியாபார பொருளாதாரத்தை வளம் பெற வைத்தல், எதிர் பிராந்திய கூட்டுகளை யுத்த செலவீனத்திற்குள்  உள்ளாக்குவதன் மூலம் எதிர்தரப்பின் பொருளாதார வளத்தை சிதைத்தல்  ஆகியவற்றை மையமாக கொண்டு தாம் இயற்றிய  சர்வதேச சட்ட திட்டங்களையே  மீறும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன

இந்த வல்லரசுகளின் அரசியல் நகர்வுகள் குறித்தும், பிராந்திய வல்லரசுகள் தமது பிராந்தியத்தில் நேரடியாக யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடாது முகவர்களுடாக தமது நோக்கங்களை அடைவதில் ஆர்வமாக உள்ளன என்பது குறித்தும் கடந்த கட்டுரைகளில் கண்டிருந்தோம் .

இவ்வாரம் வெளிவந்திருக்கும் கட்டுரையில் பிராந்திய நகர்வுகள் எவ்வாறு கோட்பாடு ரீதியாக ஒருமித்த தன்மையை கொண்டிருக்கின்றன என்று பார்ப்பதன் மூலம் சர்வதேச நிகழ்வுகளாக நடக்கும் பல்வேறு விடயங்களும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பிணைந்து செல்கின்றன என்பதை காண முடியும்

இந்த ஒருமித்த தன்மையை காணும் விடயத்தில் பல தனிமங்கள் ( இவை அமைப்புகளாகவோ அல்லது தேசிய இனங்களாகவோ அல்லது தனிநபர்களாகவோ அரசியல் கட்சிகளாகவோ இருக்கலாம் )  நேரடி முகவர்களாக தென்படாது போனாலும் அவர்கள் பல இடங்களில் சித்தாந்த முகவர்களாக செயலாற்றும் தன்மையையும் காணலாம் .

பிராந்திய கோட்பாடு

ஒரு அரசு அதிக ஆதிக்கத்தை குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்தில் கொண்டிருக்கும் பொழுது, சிறிய வலு குறைந்த  நாடுகள் தமது இருப்பில் அதிக கவனம் செலுத்தும் மனோ நிலையை பெறுகின்றன. அந்த சிறிய நாடுகளுக்கு பாதுகாப்பு இன்மை குறித்த  எண்ணக்கருத்தின் ஆரம்ப பொருளாக அதிக ஆதிக்கத்தை கொண்ட நாட்டின் செயற்பாடுகள் அமைகின்றன.

சமச்சீரற்ற தோற்றப்பாடு  குறிப்பாக மூலோபாய நிலைகளாயினும் ,இராணுவ பாதுகாப்பு வளங்களாயினும் பொருளாதார வலு எனஆதிக்கம் செலுத்தக்கூடிய  எந்த காரணியாயினும்  இந்த பாதுகாப்பு அற்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்தி விடுகிறது.

தெற்காசிய பிராந்தியத்தின் பிரதான இந்திய நாட்டிற்கும் அதனை அயல் நாடாக கொண்ட  பாகிஸ்தான், பங்களாதேசம்,சிறிலங்கா, மாலைதீவு போன்ற நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு அசெளகரீயங்களை உள்ளூர உணர்ந்து வரும் நிலையும் அரசியல்  பதட்ட நிலையும் எப்பொழுதும் இருந்து வருகிறது.

இந்த பதட்ட நிலை மறுவளமாகவும் செயற்பட வல்லது.  அதாவது சிறிய நாடுகளில் ஏற்படக் கூடிய உள்ளுர் அரசியல் மாற்றங்களும் பெரிய அயல் நாடான இந்திய பாதுகாப்பு செளகரீய உணர்வுக்கு ஏற்றதல்ல.

உதாரணமாக சிறிலங்காவில் நடைபெற்ற  உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு அதே காலப்பகுதியில் இடம்பெற்ற இந்திய தேர்தல் களத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருந்தது. ஆளும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்கள் இஸ்லாமிய அபாயம் நெருங்கி வருவதாக பிரச்சாரம் செய்வதற்கு பெரும் வாய்ப்பளித்தது.

அதேபோல பாகிஸ்தானிய அரசியல் பொருளாதார மாற்றம் துல்லியமான வகையில் உடனடியாக  இந்தியாவில்  நிலவர மாற்றத்தை காட்ட வல்லது. இதற்கு நல்ல உதாரணமாக சீன -பாகிஸ்தானிய பொருளாதார ஒழுங்கை ஒப்பந்தமும் அதில் இந்தியா கொண்டுள்ள ஐயப்பாடுகள் குறித்தும் எழுந்துள்ள பிரச்சினைகளை குறிப்பிடலாம்.

அராபிய பார்சிய இன மக்களை அதிகம் கொண்டுள்ள பாகிஸ்தான் இஸ்லாத்தை தனது தேசிய மதமாக கொண்டுள்ளது. 82 சத வீத சுண்ணத்து இஸ்லாமியரையும், 11.8 சதவிகிதம் சியா இஸ்லாத்தையும் கொண்டுள்ளது.  பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் மிக நெருங்கிய உறவு நிகழ்ந்து வந்தது.

இரு நாடுகளும் சுண்ணத்து இஸ்லாத்தை தழுவுபவர்களாக இருப்பதால்,  பொருளாதார மற்றும்  பாதுகாப்பு விவகாரங்களில் அதிக உறவு கொண்டாடி வந்தனர்.

இரண்டு வரலாற்று ரீதியான நிகழ்வுகள் சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிக நெருக்கத்தை உருவாக்கின. முதலாவது 1979 ஆம் ஆண்டு நடை பெற்ற ஈரானிய புரட்சி. ஈரானில் சியா இஸ்லாமியர்களின் எழுச்சி சுண்ணத்து இஸ்லாமிய பாகிஸ்தான் மீது அதிக கவனம் செலுத்த வைத்தது.

இரண்டாவதாக அதே ஆண்டு இடம் பெற்ற ஆப்கனிஸ்தான் மீதான சோவியத் படைகளின் நகர்வு பாகிஸ்தானிய இஸ்லாத்தை காப்பாற்றும், பொருட்டு மதராசா பள்ளி கூடங்கள் ஊடாக சவுதி அரேபியா பொருளாதார வசதிகள் செய்து கொடுத்தது.

2015இல் யேமன் நாட்டின் மீது சவுதி அரேபியா படை எடுத்த  போது,  ஈரானிய சார்பு கவுட்டி படைகளுக்கும் சவுதி அரேபிய படைகளுக்கும் இடையில் பாகிஸ்தான் நடு நிலைமை வகித்தது. ஆனால்  பின்பு சவுதி அரேபியாவின் அழைப்பிற்கு ஏற்ப பாகிஸ்தானிய இராணுவத்தை  நேரடி யுத்தம் அல்லாத பகுதிகளில் சவுதி அரேபிய தேசிய ஒருமைப்பாட்டிற்கு உதவும் வகையில் யுத்தப் பகுதிகள் அல்லாத பிரதேசங்களில் பணியாற்ற படைகளை அனுப்புவதற்கு ஒப்பு கொண்டது

அத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கும் வந்திருந்த சவுதி இளவரசர் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இருதரப்பு இணக்க உடன் படிக்க செய்து கொண்டதிலிருந்து  பாகிஸ்தானிய சவுதி உறவுகள் மேலும் வலுப்பெற்று உள்ளது.

தாக்குதலும் சவுதி இளவரசரும்

காலாகாலம் சவுதி அரேபியாவினால் வழங்கப்படும் தாராள பொருளாதார உதவிகள் சவுதி ஆளும் வர்க்க வொகாபிஸ்களுடன் இணைந்து செல்லக்கூடிய தூய இஸ்லாமியம் என்ற பெயரிலான- ஈரானியர்களுக்கு எதிரான வகையில் கட்டுக்குள் வைத்து கொள்ளக் கூடிய வகையிலான- ஒரு நிலையை சவுதி அரேபியாவினால் பாகிஸ்தானில்  பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு ஒரு நல்ல உதாரணமாக, இந்திய தேர்தலுக்கு சற்று முன்பாக இடம் பெற்ற புல்வாமா தாக்குதல்களும் அதனை இந்திய- பாகிஸ்தானிய -சவுதி அரேபிய கூட்டு எவ்வாறு செயல்படுத்தியது  என்பதை காணலாம் .

புல்வாமா தாக்குதலும், அதிலே இறந்த இந்திய இராணுவத்தினரும் அதனை தொடர்ந்து இந்திய விமானப்படையின் பாகிஸ்தானிய எல்லையை மீறி சென்று நடத்திய தாக்குதல்களும்  இந்திய தேர்தலை மையமாக கொண்டு இடம் பெற்றவையே என்பது இங்கே வெளிச்சமாகிறது.

ஏற்கனவே திட்டமிட்டபடி சவுதி இளவரசர் இந்திய – பாகிஸ்தானிய பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்த பயணத் திட்டத்திற்க ஏற்ப தாக்குதல் நாடகம் அரங்கேற்றப்பட்டது மட்டுமல்லாது. இதன் பலனாக நீண்ட கள மோதல் ஒன்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம் பெறாது பாதுகாக்கப்பட்டது என்பது முக்கியமானதாகும்.

சவுதி இளவரசர் இந்திய வருகை இந்த திட்டத்தை சமநிலைபடுத்தியது. இதிலே சுவுதி அரேபியாவின் பங்களிப்பு எந்த அளவு என்பது சரியாக குறிப்பிட முடியாது போனாலும் அனைத்து நிகழ்வு களும் காலம் தவறாது இடம் பெற்றன என்பது மட்டும் உண்மை.

அத்துடன்  இந்திய மக்கள் மத்தியில் மோடி அவர்கள் ஒரு பாதுகாவலன் என்ற ஒரு பிரம்மையை உருவாக்கும் பொருட்டு தான்  இந்த தாக்குதல் இடம் பெற்றது என்பதுவும்  வெளிவருகிறது.

பணமும் குற்றவாளிகளும்         

900 மில்லியன் வாக்காளர்கள் பங்குபற்றிய அண்மைய இந்திய தேர்தல் உலகிலேயே மிகவும் அதிக செலவீனம் கொண்ட தேர்தல் என புதுடெல்லியை மையமாக கொண்டு இயங்கக் கூடிய தகவல் தொடர்பு கற்கைகளுக்கான மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே 60 000 கோடி இந்திய ரூபா செலவிடப் பட்டிருக்கிறது. இது சுமார் 8.7பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இணையானது என்பது மட்டுமல்லாது,  2014 ஆம் ஆண்டு இடம் பெற்ற தேர்தல் செலவீனங்ளிலும் பார்க்க இது இரண்டு மடங்க அதிகமானது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது .

இப்பொழுது தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.  இந்த வெற்றி மகத்தான வெற்றி இந்துத்துவா என்று ஆங்கிலத்தில் அழைக்க கூடிய இந்து அடிப்படைவாத கோட்பாட்டிற்கு புதிய ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

இங்கே ஒட்டு மொத்தமாக 539 பாராளுமன்ற உறுப்பினாகள் தெரிவு செய்யப்ட்டனர். இவர்களில் 233 பேர் மீது பாலியல் வல்லுறவு, கொலை கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற குற்ற சாட்டுகள் உள்ளதாக சனநாயக சீர்திருத்த அமைப்பு என்ற ஒரு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதாவது அரைவாசி பேர் குற்ற விசாரணைக்குட்பட்டவர்களாகவோ அல்லது சட்டத்தை ஏய்த்தவர்களாகவோ உள்ளனர் என்பது அந்த நிறுவனத்தின் அறிக்கையாகும். இதிலே பாஜக வை சேர்ந்தவர்கள் 116 பேர் எனவும் தெரிவு செய்யப்பட்ட 54 காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 29 பேர் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து முக்கியமான துறைகளான பொருளாதாரம் வெளியுறவு ஆகியவற்றிற்கு அமைச்சர்களை தெரிந்து எடுக்க முடியாமல் இருவரையும் தமிழ் நாட்டிலிருந்து தெரிவு செய்திருப்பதுவும் யதார்த்தம் தான்.

இருப்பினும் தெற்காசிய  பிரந்திய நாடுகள் மத்தியில் மத உணர்வை மையமாக வைத்து அரசியல் செய்யும் தன்மை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இரண்டிலும் மிக அதிகமாக காணப்படுகிறது என்பது மட்டும் உண்மை.

அடுத்த கட்டுரையில் எவ்வாறு இந்திய -இலங்கை நாடுகளுக்கு இடையிலான பௌத்த உறவு அரசியல் மற்றும் வெளியுறவு சார்ந்தது. சிறிலங்காவின் பௌத்தம் தனது இருப்பை அந்த தீவில்  உத்தரவாதம் செய்து கொள்ளும் பொருட்டு எந்த வகையிலும் நிறம் மாறி கொள்ளும் போக்கு கொண்டது என்பதையும் முன்பு என்றும் இல்லாதவாறு பௌத்த சிங்களம் எவ்வாறு தனி ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் பார்க்கலாம்.

லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

 

 

http://www.puthinappalakai.net/2019/06/11/news/38497

Share this post


Link to post
Share on other sites

மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4

by in ஆய்வு கட்டுரைகள்

Kalmunei-Protest-1.jpgதெற்காசியப் பிராந்தியத்தில் மிகச்சிறிய இன அடையாளத்தை கொண்ட ஒரு அலகினால், அதீத மதவாத சிந்தனையின் பால் சார்ந்து,  நன்கு திட்டமிட்ட வகையில் தனது சவால்களை எதிர் கொள்வது மட்டுமல்லாது,  இதர இன அடையாளங்களை துல்லியமாக ஜனநாயகத்தின் பெயரால் பெளத்த மேலாண்மைக்குள் உள்ளாக்கக் கூடிய ஒரு தகைமையை சிறிலங்கா அரச திணைக்களங்களும்,  பௌத்த மதபீடங்களும் கொண்டிருக்கின்றன.

இன்று தமிழ் மக்களின்அடிப்படை தேவைகளுக்கான போராட்டங்களில் கூட பௌத்த துறவிகளும் சேர்ந்து கொள்வது பிரதிநித்துவ  மேலாண்மையை தக்க வைத்து கொள்ளும் போக்கு கொண்டதுடன்,  இந்திய அரசியல் மாற்றத்திற்கு ஏற்ற வகையில் இந்திய நாடாளுமன்றத்தில்  பதவி ஏற்றுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலம் மிக்க ஒரு கட்சி யில் இருந்து வந்திருப்பதுவும், அதிலும் பலர் ஈழத்தமிழர் சார்பு கொள்கை கொண்டவர்களாக இருப்பதுவும் காரணமாக தெரிகிறது.

தமிழ் மக்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான தேவைகளை அரசிடம் இருந்து பெற்று கொடுப்பதில் பௌத்த துறவிகள் சேர்ந்து கொள்வது. உள்நாட்டில் பௌத்த சிங்கள- தமிழ் உறவு வலுவடைந்து வருவதை வெளிகாட்டுவதாகவும் இதனால் இந்திய தலையீடுகள் இன நல்லுறவை சிதைக்க வல்லது என்ற ஒரு பார்வையை உருவாக்குவதாகவும் அமைய வல்லது .

ஆனால் பௌத்த துறவிகளின் அண்மைக்கால நடவடிக்கைகள் தலைமைத்துவ ஆளுமையற்ற தமிழினத்தை சலுகைகளால் உள்வாங்கும் போக்கு மூலம்,   பெளத்தத்தை பரவலடைய செய்வதுடன் அதன் இருப்பையும் உரிமையையும் தமிழ் பிரதேசங்களில் வலியுறுத்துவதாக அமைகிறது.

இந்த வகையில் மதம் பிடித்துள்ள பிராந்தியங்கள் என்ற கட்டுரையின் வரிசையில் நான்காவது பாகமாக சிறிலங்காவின் அரசியல் கள நிலவர நகர்வுப் போக்கில், மதம் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என்பது குறித்த பார்க்கலாம்.

கடந்த மூன்று கட்டுரைகளிலும் பூகோள நலன்களின் அடிப்படையிலேயே நகர்த்தப்படும் சர்வதேச அரசியலின் கருவியாக மதம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து பார்க்க கூடியதாக இருந்தது. `

இதே பார்வையில் சிறிலங்காவில் இரண்டு மதங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. இந்த இரண்டு மதங்களும் பூகோள நலன்களின் அடிப்படையில் கையாளப்படுகிறது.

முதலாவதாக இலங்கைத்தீவிலே சனத்தொகையில் பெளத்தம் பெரும்பான்மை பலம் பெற்ற ஒரு மதமாக இருப்பதுவும் குறைந்த அளவில் உள்ள இதர மதங்களை தன்னிலிருந்து   தரம் தாழ்ந்த நிலையில் வைத்து கொள்ளும் அதீத மதவாத போக்கு கொண்டதாகவும் உள்ளது

உதாரணமாக, அரச அதிகாரம் பெறும் எந்த தலைவர்களும் பௌத்த மத தலைவர்களை முதலில் சந்தித்து ஆசி பெறுவதுடன் பௌத்த சாசனத்தை கடைப்பிடிப்பதாக உறுதி தர வேண்டியவர்களாக உள்ளனர்.

அதே போல புதிதாக ஏதாவது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக இருந்தாலும்  அல்லது யுத்த வெற்றிகள் ஈட்டினாலும் பௌத்த மத பீடாதிபதிகளிடம் அனுமதியும் ஆசியும் பெறுவது சிறிலங்கா மதவாத பண்பாட்டு தர்மமாகும்.

மேலும் இதர மதங்களை தழுவும் அரசியல் தலைவர்கள் பௌத்த மத தலைவர்களை சந்திப்பதற்கு அவர்களுடைய மத பீடங்களுக்கு வருகைதருமிடத்து அவர்கள் தரம் தாழ்த்தப்பட்டு அவமதிக்கத் தக்க வகையில் நடத்தப் படுவதை யிட்டு அந்த அரசியல் தலைவர்கள் விசனம் தெரிவித்துள்னர்.

சிங்கள சமுதாயத்திடம் ஆழ ஊடுருவி உள்ள பௌத்த மதவாதம்   நாட்டின் அரசியல் நகர்வுகளை பெருமளவில் தீர்மானிக்கும் பெரும் சக்தியாக உள்ளது. இந்த பலத்தை அதன் பீடாதிபதிகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்துவதுடன் பௌத்த சிங்களத்தின் பாதுகாவலர்கள் தாமே என அனுபவித்து வருகின்றனர்.

பௌத்த மதம் தழுவாத வேறு எந்த மதபிரிவினருக்கும் தேசிய இனம் என்ற தரம் வழங்கப்படாது சிறுபான்மையினர் என்ற தரத்திலேயே வைத்து பார்க்கப்படுகின்றனர். ஆனால் இன்று அந்த  சிறுபான்மையினர் கூட தமது உரிமைகளை இழந்து விட்ட நிலையை உணர்கின்றனர்.

இந்த நிலையை வெளிப்படுத்தம் வகையில் அண்மையில் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில்  (சிறிலங்கா) “அரசின் வலிய பாதுகாப்பு கெடுபிடிகள் அனைத்து வகையான அதீதவாதத்தையும் தான் வளர்த்தெடுக்க வல்லது.  எமது பிரச்சினை என்ன வெனில் அடிப்படையில் சிறுபான்மையினர் உரிமைகள், மத அல்லது இன உரிமைகள் யாவும் அவமரியாதைக்குரிய வகையில் வலுக்கட்டாயமாக அரசாங்கத்தினால் கையாளப்படுகிறது ” என மிதவாத தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவரான சுமந்திரன் கூறிய தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மிதவாத தலைமை சிறிலங்கா அரசியல் கட்டமைப்பை பாதுகாத்து வந்திருந்த போதிலும் மதவாத சிந்தனைகளின் உச்ச நிலையில் சிறிலங்காவின் அரசியல் போக்கு இன்று அமைந்திருக்கிறது என்பதை மிதவாத தமிழ் தலைமைகள் கூட வெளியிட்டிருப்பது முக்கியமானது.

மதவாத நடைமுறைகளை உள்ளகத்தே கொண்டிருந்தாலும் வெளிப்பார்வைக்கு தனது மேலைத்தேய தாராள ஜனநாய நாடுகளின் அரசியல் சட்ட பண்பாடுகளை அரங்கேற்றுவதன் மூலம் சிறிலங்கா அரசு தனது பெரும்பான்மை மதவாத அரசியலை  ஜனநாயகத்தின் பெயரால் பாதுகாத்து கொள்கிறது.

கொழும்பில் இடம் பெற்ற உயிர்த்த  ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் சிறிலங்காவில் வாழும் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் மக்கள் சிங்கள பௌத்த மத்தினால் முற்றுகை இடப்பட்ட நிலையை அடைந்துள்ளனர் என மேலத்தேய இணயத்தளம் ஒன்று செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதேவேளை சர்வதேச அரசியல் மட்டத்தில் தாக்கம் விளைவிக்கூடிய வகையிலான, சர்வதேச அரசியல் கருத்துகளை கூறவல்ல  Foreign policy சஞ்சிகை , ஏற்கனவே ஆழமான சமூக பிரிவினை மனோநிலையை கொண்டுள்ள சிறிலங்கா மேலும் அதிகரித்த பிரச்சினைகளுடன் மிக இருண்ட எதிர்காலம் ஒன்றை எதிர் கொண்டுள்ளதாக கூறி உள்ளது.

kalmunai-fasting-1-2.jpg

எல்லோரும் எண்ணுவது போல் புத்த மதத்தை சமாதான மதமாக பார்ப்பது போல் அல்லாது,  சிறிலங்கா, பர்மா போன்ற நாடுகளில் நிலைமை சிக்கலானது என்ற Foreign policy இன் பார்வை, சிறிலங்கா பௌத்த பீடங்களை விழிப்படைய செய்துள்ளது என்பது  கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் சார்ந்து பௌத்த துறவிகள்  நடத்தும் போராட்டங்களில் இருந்து தெரிய வருகிறது.

தற்போதைய நிலையில் சிறிலங்காவில் இரண்டு மதங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. இந்த இரண்டு மதங்களும் பூகோள வல்லரசுகளினதும் பிராந்திய வல்லரசுகளினதும் நலன்களின் அடிப்படையில் கையாளப்படுகிறது. என்பது இங்கே எடுத்துக்காட்டப்பட உள்ளது

உயிர்த்த  ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் குறித்து பல்வேறு ஆய்வாளர்களும் தமது கருத்துகளை கூறியுள்ளனர். எல்லோரும் குறிப்பாக உண்மையில் யார் காரணம் , சர்வதேச பயங்கர வாத அமைப்பான ஐஎஸ் ஐஎஸ் அமைப்பின் பின்புலம்,  சிறிலங்கா அரசியல் தலைவர்களின் கருத்துகள், சிறிலங்காவில் .இஸ்லாமிய அடிப்படை வாதம் என பல்வேறு கோணங்களிலும் ஏற்கனவே ஆய்வுகளை பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் கூறிவிட்டனர்.

ஆனால் இந்த குண்டு வெடிப்பு களுக்கு என்ன தேவை இருக்கிறது என்பதையும் அதன் மூலம் பயன் அடைந்தவர்கள் குறித்தும் பெரிய அளவில் ஆய்வாளர்கள் கரிசனை கொண்டதாக தெரியவில்லை. சர்வதேச நகர்வுகளுக்கான  தேவை , இந்திய அரசியல்  தேவை , சிறிலங்காவில் உள்நாட்டு  தேவை  என இங்கே மூன்று வகையாக  பிரித்து கையாள வேண்டியதாக உள்ளது.

சர்வதேச தேவை

இலங்கையின் பூகோள முக்கியத்துவமும் ஈரான் மீதான அமெரிக்க நடவடிக்கைகள் குறித்தும் ஏற்கனவே இந்த கட்டுரை தொகுதிகளில் கண்டிருக்கிறோம். ஆனால் சிறிலங்காவின் சீன சார்பு போக்கும் சீனாவுக்கான தள வசதிகள் நிரந்தரமாக்கப்பட்ட நிலையும் , உதாரணமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தினை 99 வருட குத்தகை ஒப்பந்த கைச்சாத்து ஆகியன அமெரிக்க  உயர்மட்ட காங்கிரஸில் தெற்காசிய பிராந்திய கண்காணிக்கும் செனட்டர்களை  மிகவும் கவலை அடைய செய்திருப்பது குறித்து செய்திகள் 2018 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக அனைத்து முன்னணி அமெரிக்க பத்திரிகைகளிலும் பிரசுரமாகி இருக்கிறது எனலாம்.

இது தவிர தற்போதைய அமெரிக்க நிர்வாகம் எந்த பிராந்தியத்திலும் நிரந்தர படைத்தளங்களை அமைத்து கொள்வதில்லை என்ற கொள்கையை கொண்டிருப்பதுடன். இராணுவ பாதுகாப்பு ஆய்வாளர்கள் சிலரின் பார்வையில் நிரந்தர படைத்தளங்கள், உள்ளுர் தேசியவாதிகளின் எதிர்ப்பை தேடி கொள்வதை தவிர இன்றைய பல யுத்த கப்பல்களின் வசதிகளுடன் ஒப்பிடும் இடத்து பெரிதாக எந்தவித சலுகைகளையும் தருவதாக இல்லை என்ற பார்வையை கொண்டுள்ளனர்.

ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தவரையில் அதன் பூகோள நிலையம் அதீத முக்கியத்துவம் பெறுவதால் அதனை திருத்தி எடுப்பதை தவிர வேறு வழியில்லை. அதாவது எப்பொழுதும் மேலைத்தேயத்திற்கு  சாதகமான அரசை ஆட்சியில் வைத்திருக்க வேண்டிய தேவை சிறிலங்காவில் இருக்கிறது.

Rodrigo-Duterte-trump.jpg

இதனால்  நாட்டில் நிரந்தர அரசியல் கட்டமைப்பு ஒன்று  இல்லாத வகையில், செய்வதன் மூலம் சிறிலங்காவில் மேலைத்தேய பூகோள நலன்களை கரிசனையில் கொண்டு நடக்காத எந்த அரசாங்கத்தையும்  மிரட்டலில் வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இதுவரையில் குண்டு தாக்குதல் நடத்தியவர்கள் பல ஆய்வாளர்களால்  முகவர் யுத்ததாரிகளாகவே  பார்க்கப்படுகின்றனர். ஏனெனில் இலங்கைத்தீவின் ஒன்பது இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களும் ஒன்பது தாக்குதல்தாரிகளும் மிகச்சிறிய ஒரு குழுவினை சார்ந்தவராக இருந்தபோதிலும், மிக கச்சிதமான இராணுவ பெறுமதிமிக்க  வெடி பொருட்களுடன் எவ்வாறு நடத்த முடிந்தது என்பது பலரதும் கவனமாக உள்ளது .

சிறிலங்கா பத்திரிகைகள் சில மேலைத்தேய நாடுகளின் எதிரிகளான ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினர் தம்மை தாக்கினர், தாமும் மேலைத்தேயத்துடன் இணைவாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்ற வகையில் பெருமை கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த குண்டு தாக்குதல்களில் மேலைத்தேய நாடுகளின் உளவு நிறுவனங்களின் சதி சந்தேகத்திற்கு உரிய வகையில்  இருப்பதை ஒரு சாரார் குறிப்பிட்டு வருகின்றனர்.

சிறிலங்காவின் சீன சார்பு கொள்கை குறித்தும் அதன் கப்பற்தள வசதிகள் உட்பட பல்வேறு முதலீடுகளிலும் சீனாவின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டும் இந்த ஆய்வாளர்கள், இவ்வாறு அமெரிக்க சார்பு நாடுகளாக இருந்த பூகோள முக்கியத்துவம் மிகுந்த நாடுகள் பின்பு சீன சார்பு கொள்கைகளுக்கு மாறியதன் பின்பு, இஸ்லாமிய தீவிரவாத நெருக்கடிகளை அல்லது உள்ளுர் அரசியல் நெருக்கடிகளை  சந்தித்த தன்மையை உதாரணமாக காட்டுகின்றனர்.

குறிப்பாக, பிலிப்பைன்ஸ் தலைவர் 2017 ஆம் ஆண்டிற்கு முன்னர் தனது பிராந்திய வல்லரசான சீனாவுடன் இணைந்து போகக்கூடிய வகையில், சீன சார்பு கொள்கைக்கு மாற்றம் கண்டிருந்தார். இந்த மாற்றத்தால் அமெரிக்க இராணுவ இருப்பு பிலிப்பைன்சிலே கேள்விக்குறியாகியது. நீண்ட கால அமெரிக்க நிலை தளர்வடையும் போக்கு தென்பட்டது.

ஆனால் 2017 ஆம் ஆண்டு  பிலிப்பைன்சின் தீவுகளில் ஒன்றான மின்டானோவில் உள்ள மறாவி என்ற நகரில்  ஐஎஸ் தீவிர வாத தாக்குதல்கள் அங்கு திடீரென ஆரம்பித்ததை தொடர்ந்து மீண்டும் அமெரிக்க சார்பு கொள்கைக்கு தன்னை மாற்றி கொண்டார்

அதேபோல மலேசிய முன்னைநாள் பிரதமர் நஜீப் ரசாக் அவர்களும் 2009 ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததிலிருந்து  சீன சார்பு போக்கை கடைப்பிடித்தது மட்டுமல்லாது, சீனாவின் ஒரு சூழல் ஒரு பாதை  திட்டத்தில் மிக ஆர்வமாக இணைந்து செயற்பட்டதுடன்,  பல்வேறு சீன முதலீடு களிலும் ஊழல்களிலும் தொடர்புடையவராக இருந்தார்.  இதனை மையமாக வைத்து அமெரிக்க பத்திரிகைகள் முன்நின்று அவரது ஊழல் விவகாரங்களை சர்வதேச அளவில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன.

இதன் மூலம் ரசாக்  பதவியிலிருந்து இறக்கப்பட்டார். பதிலாக பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு வாழ்க்கை வாழ்ந்து வந்த  முன்னைநாள்  பிரதமர் மகதீர் முகமது மீண்டும் பதவியில் ஏற்றப்பட்டார்.  ரசாக்கின்  காலப்பகுதியிலே மலேசிய விமானம் மர்மமான முறையில் காணாமல் போனதுவும் இன்னும் ஒர் விமானம் உக்ரேன் கிழக்கு பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.

malasiyan-.jpg

இதிலே பிலிப்பைன்ஸ் அரசியல் கொள்கை  இஸ்லாமிய முகவர் தாக்குதலாலும்  மலேசிய தலைமை ஊழல் காரணமாகவும் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன்  ஊடாகவும் மாற்றப்பட்டனர்.

இதேபோல மியான்மரில் ரொகின்யா மக்கள் மத்தியில் இருந்த சிறு குழு ஒன்றின் ஊடாக சீன முதலீட்டு பிராந்தியங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதும், 2015 ஆம் ஆண்டு சிறி லங்காவில் ராஜபக்ச ஆட்சி பதவியை இழந்த விவகாரம், மாலைதீவில் சதிப்புரட்சிகள் இடம் பெற்றமை, இம்ரான்கான் மேற்கத்தேய கடன்உதவிகளை கட்டுப்படுத்தும் கொள்கையை அறிவித்ததும், தெற்கு பாகிஸ்தானிய குண்டு வெடிப்புகள் என பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

சந்தேகத்திற்கு இடமான வகையிலும் சர்ச்சைக்குரிய வகையிலும்  மேற்குலக முகவர்களாலும், உளவு நிறுவனங்களாலும் தெற்காசியாவில் நடத்தப்பட்ட பல குண்டு வெடிப்பு, சதி புரட்சி  ஆதாரங்கள் குறிப்பிடக் கூடியனவாகும்.

ஆக ஏற்கனவே கூறியது போல  சிறிலங்காவில் இடம் பெற்ற குண்டு வெடிப்புகளும் இத்தகைதொரு சந்தேகத்தையே கிளப்புகிறது என்பது, சந்தேக கண் கொண்ட ஆய்வாளர்கள் பார்வையாகும் .

 இந்தியாவின் தேவை

புல்வாமா தாக்குதல்களும் அதனை தொடர்ந்து இடம் பெற்ற விமான தாக்குதல்களினாலும் வடஇந்தியாவில் இந்திய பிரதமர் ”இந்தியாவின் பாதுகாவலன்” என்ற பெயர் எடுத்திருந்தது குறித்தும் இந்த கட்டுரைகளில் ஏற்கனவே கண்டிருந்தோம்.

வட இந்தியாவில் இந்து அடிப்படைவாதத்தை மையமாக கொண்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்த இந்திய பிரதமர் மோடிக்கும் அவரது பாரதீய ஜனதா கட்சிக்கும் தெற்கிலிருந்தும் இஸ்லாமிய ஆபத்து இருக்கிறது என்று காட்டும் தேவை ஏற்பட்டது.

தேர்தல் பிரச்சாரங்களில் சிறிலங்கா குண்டு வெடிப்பு மிகப்பெரும் தாக்கத்தை விளைவித்து இருக்கிறது. இதனை தேர்தல் காலப்பகுதி பிரச்சார மேடைகளில் பாஜக தலைவர் அமித் ஷாவும், இதர தலைவர்களும் நடத்திய பேச்சுகள் சான்றாக அமைகின்றன. மோடியினால் மட்டுமே தெற்காசியாவை பாதுகாக்க முடியும். அவருடைய நவ யதார்த்தவாத போக்கு ஒன்று மட்டுமே பிராந்திய பாதுகாப்பு சமநிலையை பேணவல்லது என்பது பாஜக வின் பேச்சுப்பொருளாக இருந்தது.

மோடி பாதுகாப்பையும், வெளியுறவையும் மையமாக கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளும் பாதுகாப்பான வளர்ச்சி மிக்க அரசியல் நடத்தி வந்தார். ஆனால் தற்பொழுது   தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்து வருகிறது என்பதை வெளிப்படுத்தப் பட்ட போது , அனுபவங்கள் அற்ற அரசியல்  எதிராளி, சமூக பிரச்சனைகளிலும் மாநில கட்சிகளின்  கூட்டு பலத்திலும் தங்கி இருந்த ராகுல் காந்தி மிகச் சிறியவராக ஆகி விட்டார்.

இதனால் மோடியின் இந்து அடிப்படைவாத  தேர்தல் பிரசாரத்திற்கு இஸ்லாமிய எதிரி தெற்கிலும் இருக்கிறது என்ற மனஇயல் தாக்கம் இந்திய வாக்காளர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது.   பாதுகாப்பு நிலைமை ஒன்றை நாடியே மக்கள் முன்னேற வேண்டும் என்பதன் பலனாக மோடி மீண்டும்  பிரதமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரது 2.0 என்று குறிப்பிடக் கூடிய சர்வதேசத்திற்கு உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய முதலாளித்துவ பார்வைகொண்ட இந்துத்துவ முன்னிலைவாத அரசியலின் தொடர்ச்சி மேலும் தரம் உயர்த்தப்பட்ட வகையில் செயற்பட்டு வருகிறது.

-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

 

 

http://www.puthinappalakai.net/2019/07/03/news/38842

 

Share this post


Link to post
Share on other sites

மதம் பிடித்த பிராந்தியங்கள் -5

by in ஆய்வு கட்டுரைகள்

rajapakshas-1-300x192.jpgஅமெரிக்க அரசியலில்  செல்வாக்கு மிக்க சிந்தனை குழுக்களில் ஒன்றான The Heritage Foundation என்ற அமைப்பு,  இந்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதியிட்ட , சிறிலங்காவின் அரசியல் நிலைமை குறித்து மிக விபரமான ஒரு அறிக்கையை தயாரித்திருந்தது.

இந்த அறிக்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவை முதன்மைப்படுத்துவதாகவும் ராஜபக்ச குடும்பமே,  இந்த வருட இறுதியில் நாட்டின் உயர்பதவியை ஏற்க வல்லதாக இருக்கும் என்பது, அந்த அறிக்கையின் சாரம்சமாகும்,

ஆனால், முன்னர் என்றுமில்லாத அமெரிக்க உறவின் வளர்ச்சியை 2017இல் கண்டதாக குறிப்பிடுகின்ற அந்த அறிக்கை,  ஜனநாயகத்தை தரமுயர்த்துவதற்கும், மனித உரிமையையும்   அடிப்படை சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கும்,  இருநாடுகளும் சேர்ந்து உழைப்பதாக உறுதி கூறப்பட்டுள்ளது.

அதேவேளை  பாதுகாப்பு விவகாரங்களில் திறந்த , சுதந்திரமான இந்தோ -பசுபிக் பிராந்தியம் என்ற பார்வையை அமெரிக்கா கொண்டுள்ளது.

சுதந்திரமான, திறந்த  இந்தோ- பசுபிக் பிராந்திய மூலோபாயம்  என்ற பெயரில் தேவைக்கு ஏற்ற வகையில் தனது படைகளை நகர்த்தக் கூடிய ஒரு ஒப்பந்தத்தை சிறிலங்காவுடன் செய்து கொள்ளமுனைகிறது அமெரிக்கா.

சுதந்திரமான, திறந்த இந்தோ- பசுபிக் பிராந்தியம் என்ற சொல்லாடல் 2017 ஆம் ஆண்டு ஆசிய -பசுபிக் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப்பினால், பிரயோகிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

தனது படைகளையும், கலன்களையும்  சிறிலங்கா குடியகல்வு குடிவரவு திணைக்களம்,  சுங்க திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சிறிலங்கா அரசியல் எல்லைக்குள் தனியாகவோ, கூட்டாகவோ உட்பிரவேசிக்கவும் வெளியகலவும் வசதியாக இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்குத் தேவைப்படுகிறது.

பல்வேறு உட்பிரிவுகளை கொண்ட இந்த ஒப்பந்தம், ஏறத்தாழ அமெரிக்காவின் ஒரு மாநிலமாக சிறிலங்கா மாறுவது போன்ற எண்ணப்பாட்டை உருவாக்குவதாக, சில  சிறிலங்கா ஆய்வாளர் தரப்பினால் பார்க்கப்படுகிறது .

ஆனால், இது சிறிலங்காவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் விரோதமான ஒரு ஒப்பந்தம் என்பது சிறிலங்காவின் பார்வையாக உள்ளது.

சிறிலங்காவில் அமெரிக்க சார்பாளராக கருதப்படும் ரணில் விக்கிரமசிங்க கூட  விரைவில் வர இருக்கும் தேர்தலில் சிங்கள பௌத்த மத தேசியவாதம் முக்கிய இடம்பிடிக்க இருப்பதால், அமெரிக்காவுக்காக விவாதிக்க முடியாத நிலையில்  உள்ளார்.

இதனால் சிறிலங்காவில் இடம்பெறும் மத வன்முறைகளையும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புருவாக்கத்தையும் கூட, எந்த அரசியல் கட்சிகளும் நேரடியாக எதிர்த்து நிற்க முடியத நிலையில் உள்ளன.  மத அரசியலே இந்த ஆண்டின் இறுதியில் வரும் தேர்தலில் முக்கிய இடம் பிடிக்க இருக்கிறது.

சிங்கள பௌத்தம் சார்ந்த பெரும்பான்மை ஜனநாயக அரசியலில் வெற்றி பெறப்போவது அதீத மதவாதமே என்ற தீர்மானமும் கண்டு விட்ட பின்பு, பல்லினத்தன்மை என்பது முற்று முழுதாக மறுக்கப்பட்ட ஒரு தேசமாகவே சிறிலங்கா சென்று கொண்டு இருக்கிறது.

rajapakshas-2.jpg

தமிழ் தேசிய இனம் நடத்திய போராட்டங்களை நசுக்க சிறிலங்காவுக்கு உதவிய  சர்வதேசம்,  மேலும் தமது தேசிய நலன்களின் தேவைகளை அடிப்படையாக கொண்டு பெரும்பாண்மை மதவாத சக்திகளை ஊக்குவிக்கும் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது,.  சிறிலங்காவில் அரச கட்டமைப்பு என்ற பெயரில் மதவாத சிந்தனைகள் மேலும் மேலும் வளர்த்தெடுக்கப்படுகிறது. சட்டஅங்கீகாரம் பெற்று வருகிறது.

உலகில் மத அடிப்படையில் சட்ட அங்கீகாரம் பெற்ற  மேற்கு நாடுகளின் ஆதரவுடன் உள்ள நாடுகளான சவூதி அரேபியா , இஸ்ரேல், ஈரான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளின் வரிசையில் சிறிலங்காவும் மிக சில வருடங்களில் நிறம் மாற்றப்படும் நிலையுள்ளது.

சிறிலங்காவிலும் முகவர் யுத்தம்

சர்வதேச அரங்கில் இன்றை காலகட்டம் முகவர் யுத்தம் அல்லது பதிலிகள்  யுத்த காலகட்டமாக பல்வேறு ஆய்வாளர்களாலும் பார்க்கப்படுகிறது. அதாவது வல்லரசுகள் அவற்றின் செலவுகளை மட்டுபடுத்தும் வகையில், தமது  பிரதிநிதிகள் ஊடாக தமது எதிரி நாட்டிற்கு சேதம் விளைவித்தல் என்பதுடன், நாடுகளை யுத்த நிலையில் ஈடுபட வைத்திருப்பதன் வாயிலாக  அரசியல் இலாப நோக்கை எட்டும் போக்கு இந்த யுத்த முறையாகும் .

இந்த யுத்தத்தில் ஈடுபடக் கூடிய அலகுகள் பல்வேறு தேசிய இனங்களையும் மதங்களையும் சார்ந்தவர்களாக நாடுகளுக்கு நாடு பிராந்தியங்களுக்கு பிராந்தியம் வேறுபட்டவைகளாக இருக்கின்றன. இதில் ஒன்று தான் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பாகும்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஐஎஸ் ஐஎஸ் அமைப்புக்கு, மேற்கு நாடுகளில் இருந்தும் இஸ்ரேலிய, சவூதி அரசுகளிடமிருந்தும்  முகவரி தவறாது எவ்வாறு ஆயுத தளபாடங்களும் நிதி உதவியும் பல்வேறு  முகவர்களுடாக கொண்டு செல்லப்படுகிறது என்பதை ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல ஈரானும், லெபனானில் இருந்து தொழிற்படும் ஹிஸ்புல்லா இயக்கம், தெற்கு யேமனில் போராடும் கவுட்டி படைகள் என  பல்வேறு ஷியா இஸ்லாமிய குழுக்களை,  சவூதி அரேபியா மீதும் இஸ்ரேலின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தி வருகிறது.

இதேபோல சிறிலங்காவிலும் இந்த முகவர் யுத்த ஏற்பாடுகள் அந்த நாட்டின் பூகோள அரசியல் தேவைகள் சார்ந்து பல்வேறு மேற்குலக, மத்திய கிழக்கு பிராந்திய, தெற்காசிய பிராந்திய வல்லரசுகளின் வழிநடத்தலில் ஒருசில அரசியல் இலாபம் பெறக்கூடிய அரசியல்வாதிகளின் இணக்கத்துடன் சிறிலங்காவில் தமக்கு சாதகமான அரசியல் நிலைமை ஒன்றை உருவாக்கும்பொருட்டு நடைபெற்று வருகிறது.

இதனை நிரூபிக்கும் வகையில் ஏற்கனவே சீன அமெரிக்க போட்டியை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் பொருட்டு சிறிலங்கா வல்லரசுகளுடனான பேரம் பேசலில் ஈடுபட்டு இருந்தது. இதில் இரு வல்லரசுகளும் சிறிலங்காவில் ஆழ ஊடுருவி சமூக மட்டத்தில் ஆளுமை செலுத்தும் வரைக்கும் சென்றுள்ளன. பல அரசியல் தலைவர்களை தமது தேவைக்கு ஏற்ப மனம் மாற்றவும் முனைந்திருக்கின்றன.

இதில் சிங்கள பௌத்த பேரினவாத தூண்டுதலும் இஸ்லாமிய மதஅடிப்படைவாத சிந்தனைகளும், அதேவேளை முன்பு குறிப்பிட்டது போல  ஒரே காலப்பகுதியில் இந்தியாவில் இந்து மதவாத எழுச்சியின் தேவையும் ஒருங்கே இணைவாக ஏற்பட்டதன் காரணமே, சிறிலங்காவில் இஸ்லாமிய மதவாதிகளை கருவிகளாக பயன்படுத்துவதன் தேவை சிறிலங்காவில் ஏற்பட்டு உள்ளது.

சிறிலங்காவில் இடம் பெற்று வரும் அரசியல் மாற்றங்களை பொறுத்தவரையில் ராஜபக்ச குடும்பத்தின் மீள் வரவும், சர்வதேச அளவில் தற்போது  எழுந்துள்ள தாராளவாதத்திலிருந்து, ஜனரஞ்சகவாத அரசியல் கோட்பாட்டு எழுச்சியும், கோத்தாபய ராஜபக்சவின் வரவும்  தவிர்க்க முடியாது என்று அமெரிக்க உணர்ந்துள்ளது.

இதனை வெளிப்படுத்தும் வகைகளில் குண்டு வெடிப்பின் பின்பு மே மாதம் 8ஆம் திகதி கொழும்பில் இடம் பெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட  முன்னைநாள் அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக், 2009 ஆம் ஆண்டு முடிவுற்ற  ஈழ யுத்தத்தில் பாதுகாப்பு செயலராக  இருந்த கோத்தாபய ராஜபக்ச, யுத்தசூழலிற்கு ஏற்ப வல்லுனர் குழுவை அமைத்து முடிவுகளை எடுக்கவும் அவற்றை செயற்படுத்தவும் ஒரு வலுவான தேசிய தலைமைக்கு அழைப்பு விடுத்ததாக நினைவு கூர்ந்து புகழ்ந்துரைத்தார்.

அமெரிக்கா தற்பொழுது பெரும்பான்மை அரசியலின் பக்கம் சார்ந்து செயற்பட முயற்சிப்பதையே இது காட்டுகிறது. ஏனெனில் கடந்த யுத்த காலத்தின் போது சிறிலங்காவுக்கு நேரடி ஆயுத உதவி செய்ய முடியாது போனதை இட்டு றொபேட் ஒ பிளேக்  கவலையும் தெரிவித்திருப்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

இந்த பேச்சுகளுக்கு இணங்கி  பெரும்பான்மை ஜனநாயக அரசியலில் பதவிக்கு வரும் ராஜபக்ச குடும்பத்தவர்கள் சிறிலங்காவின் எதிர்காலத்தை மீண்டும் இரத்தக் களரிக்குள் செல்லாது தடுப்பார்களா என்பது தான் கேள்வி.

லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

 (தமிழ் மக்களும்  மதமும் குறித்து அடுத்து பார்க்கலாம்.)

 

 

http://www.puthinappalakai.net/2019/07/16/news/39012

Share this post


Link to post
Share on other sites

மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு

by in கட்டுரைகள்

Periyar-E.-V.-Ramasamy-300x200.jpg

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நிலவும் மத உணர்வுகள் குறித்து விவாதிப்பதாயின், தமிழ் உலகினால்  ‘தந்தை  பெரியார்’ என்று அழைக்கப்பட்ட ஈவே ராமசாமி அவர்களின் போராட்டத்திலிருந்து தொடங்குவதே பகுத்தறிவுள்ள எந்த தமிழரும்  கொண்டிருக்க கூடிய சிறந்த சிந்தனையாகும்.

லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நிலவும் மத உணர்வுகள் குறித்து விவாதிப்பதாயின், இந்து மதத்தினதும் ஏனைய மதங்களினதும் மூடநம்பிக்கைகளையும் சமூக மற்றும் பால் ஏற்றத்தாழ்வுகளையும் அடியோடு அறுத்து எறிய வேண்டும் என்று தனது வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்து போராடிய, தமிழ் உலகினால்  தந்தை  பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈவே ராமசாமி அவர்களின் போராட்டத்திலிருந்து தொடங்குவதே பகுத்தறிவுள்ள எந்த தமிழரும்  கொண்டிருக்க கூடிய சிறந்த சிந்தனையாகும்.

மதம் மக்களுக்கு விசம் போன்றது எல்லா மதங்களும் மனிதர்களின் ஒற்றுமையை தவிர்க்கிறது ஆகவே எல்லா மதங்களும் இந்த நாட்டிலிருந்து விரட்டப்பட வேண்டும் என்பது பெரியாரின் சிந்தனையாக இருந்தது. ஆனாலும் பிறரின் மதநம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பதை  மனதில் கொண்டே பெரியார் தமது கருத்துகளை தெரிவித்து வந்தார்

இருபதாம் நுற்றான்டின் ஆரம்பத்திலிருந்து, குறிப்பாக சொல்வதானால் 1916 ஆம்ஆண்டு ரீ எம் நாயர். பி தியாகராச செட்டியார் போன்ற தலைவர்களால் நீதிக் கட்சி  ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து திராவிடர் அரசியல் ஆரம்பமானது.  .

1919 ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்த பெரியார் 1025இல் இந்திய தேசிய காங்கிறஸ் ஒரு பிராமணீயர்களின் ஆதிக்கம் கொண்டது என்ற  முரண்பாட்டால் அதிலிருந்து வேளியேறி சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை உருவாக்கினார்.

பல்வேறு அரசியல் போராட்டங்கள் இந்துத்துவ ஆக்கிரமிப்புகள் பிரித்தானிய ஆட்சியாளர்களின் அழுத்தங்களை எதிர் கொண்ட நீதிக்கட்சி,  1944 இல் பெரியாரின் தலைமையிலே திராவிடர் கழகமாக பரிணமித்தது.  சுமார் அறுபது ஆண்டுகளாக தமிழ் நாட்டில் பெரியார் உருவாக்கிய சமூக விழிப்புணர்வு சிந்தனைகள் இன்று வரை மிக ஆழமான தாக்கத்தை விளைவித்து வருகிறது.

இதன் காரணமாக இன்று வரை இந்து மத அடிப்படைவாத சிந்தனைகளின் பால் அகில இந்தியாவுமே சார்ந்து இருக்கும் அதேவேளை தமிழ் நாடு மாநிலம் மட்டும் தனித்துவமான மதசார்பற்ற போக்கை கொண்டிருப்பதாக கணிப்பிடப்படுகிறது.

இந்து மதத்தின் பெயரால் சாதீய வேறுபாடுகள் தமிழ் சமூகத்தின் மத்தியில் திணிக்கப்படுவதை பெரியார் கடுமையாக சாடினார். இது தமிழ் சமூகத்தின் மத்தியில்  பிராமணீய ஆதிக்கத்திற்கு எதிராக  அமைந்தது.

அதேவேளை பிராமணீயத்துக்கு எதிராக குரல் எழுப்பினாலும் பிராமணர்களை அவர் எதிர்க்கவில்லை என்பது அவரது பகுத்தறிவு கொள்கையாகும்.

ஒரு மனிதனுடன் இன்னும் ஒரு மனிதன் தொடர்பு கொள்ளும் இடத்தில் சாதி தடைக்கல்லாக இருக்கலாகாது என்பது பெரியாரிய சித்தாந்தத்தின் பிரதான பார்வையாக இருந்தது.

இன்று இந்திய மத்திய அரசில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் இந்து மத அடிப்படைவாதம் இந்தியா முழுவதும் ஒரு மதம், ஒரு மொழி, ஒரு ஆட்சி என்ற பார்வையை பலவந்தமாக இந்திய இனங்கள் மத்தியில் திணிக்க முயல்கிறது. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் இந்தி திணிப்பிற்கு எதிராக  அன்றுலிருந்து  இன்றுவரை எதிர்த்து நிற்பது பெரியாரிய வாதிகளின் சித்தாந்தமே என்றால் அது மிகையாகாது.

பிரித்தானிய ஆதிக்க காலத்தில் மெட்ராஸ்  பிரசிடென்சி என்று 1937அம் ஆண்டிலிருந்து 40ஆம் ஆண்டுகளில் தமிழ் நாடு ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்கள் அழைக்கப்பட்ட காலத்தில் முதல்வராக பதவி அமர்த்தப்பட்ட இராஜாஜி இராஜகோபாலாச்சாரியார் அவர்களின் தலைமையில் இந்தி மொழி அனைத்து பள்ளிகூடங்களிலும் கட்டாய பாடமாக  கற்பிக்கப்பட வேண்டும். என்று மசோதா நிறைவேற்றப்பட்டதிலிருந்து இந்தி மொழிக்கெதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

இன்று மீண்டும் இந்திய மத்திய அரசில்  இந்து ஆதிக்கவாதத்தின் கை ஒங்கிய நிலையில்   தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏழைகளுக்கு உயர்கல்வி கிடைக்காத வகையிலான மறைமுக திட்டமாக மீண்டும் மாணவர்கள் தரப்படுத்தப்பட்டு குலக்கல்வி என்ற பெயரில் சாதீய அடிப்படையிலான தொழில்களை திணிக்கும் முறை ஒன்று கொண்டு வரப்படுவதாக தமிழ் நாட்டு கல்வியாளர்கள் கூறி வருகிண்றனர்.

தமிழ் மக்கள் மத்தியில் இந்து மத மேலாதிக்கம் மிக நெடும் காலமாக திணிக்கப்பட்டு வருவதாக பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை  கொள்கையின் பால் சார்ந்த தலைவர்களான அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் பெரியாருடன் சேர்ந்தும் பின்பு திராவிட முன்னேற்றகழகம் என்னும் கட்சியை பெரியாரில் இருந்து பிரிந்து சென்று ஆரம்பித்ததிலிருந்தும் கூறி வந்தனர்.

இதனால் மதம் சாதீயம் ஆகியவற்றை பொது மன்றத்தில் எதிர்க்கும் தரப்பு ஒரு புறமும், மதம் சாதீயம் ஆகியவற்றை ஆதரித்தோ அல்லது ஒரு பொருட்டாக காட்டி கொள்ளாத தரப்பு மறுபுறமாகவும் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களிலும் விவாதங்கள் இடம் பெறுவதை பொது வாக காணலாம்.

ஆனால் அரசியலில் தமிழ் நாட்டு வாக்கு வங்கிகளை தக்கவைத்து கொள்ளும் வகையில் சாதீய கட்சித் தலைவர்களை தம்மகத்தே சேர்த்து கொள்ளும் சுயமரியாதைவாத  பகுத்தறிவுவாத கட்சிகளையும் காணக்கூடியதாக இருக்கிறது என்பது முக்கியமான தாகும்.

ஆக இன்றுவரை தமிழ் நாடு இந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மத வேறுபாடுகள் இல்லாத ஒரு மாநிலமாக கணிப்பிடப்படுவதற்கு திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு வாத்தின் மீதான  அடிமட்ட மக்கள் மத்தியிலான விழிப்புணர்வு தான் காரணம் என்பது பல தமிழக  கல்விமான்கள் சிலரது  கருத்தாக உள்ளது.

இன்றைய தமிழ் நாடு

இன்றைய தமிழ் நாட்டிலும் , இந்து மத்தினால் உருவாக்கப்பட்ட சமூக கட்டமைப்பிற்கும்  அதனை எதிர்த்து நிற்கும் கொள்கைக்கும் இடையில் ஒரு விவாதப் போர் இடம் பெற்ற வருவதை காணக் கூடியதாக உள்ளது

சமூக ஏற்றதாழ்வு இதில் மிக முக்கிய இடம்பிடிக்கிறது. சமூக ஏற்றத்தாழ்விற்க சாதீயமே காரணம் என்ற கருத்தின் அடிப்படையில் சாதீயத்திற்கு இந்து மதமே காரணம் என்று பொரியார் காலத்திலிருந்து போராடப்படுவதால்  இந்துத்துவ மேலாண்மைக்கு இடமளிக்கக் கூடாது என்ற போக்கிற்கும், மதக்கோட்பாடு ஆன்மீகம், கலாச்சாரம் என்பதன் பெயரில் அதிகமான ஒரு பகுதியினர் மதசெயற்பாடுகளை ஊக்குவித்து வருகின்றனர் .

ஏன் மத நம்பிக்கை அற்றவர்களாக தம்மை காட்டிக் கொள்ளும் பல அரசியல்வாதிகள், தமது மனைவியரை கோவில் பூசை அர்ச்சனைகள் செய்து வர அனுமதிக்கின்றனர் என மதவாதிகள் தமது எதிர்தரப்பினரை கேலி செய்வதுவும் இருந்து தான் வருகிறது. இதனால் எந்த துறையிலும்  தமிழ் நாட்டு அரசியல் மதநம்பிக்கை அற்றவர்களின் முகாம், இந்துத்துவ பண்பாட்டு முகாம் என இரு பிரிவுகளாக உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

அதேவேளை மதநம்பிக்கை அற்றவர்கள் சமூக நீதியின் பால் அதிகம் கவனம் செலுத்துவதாக  தம்மை காட்டி கொள்ள முயல்கின்றனர்.  இந்த மத நம்பிக்கை அற்ற முகாமை திராவிடர் என்ற தென் மாநிலங்கள் அனைத்தையும் இணைத்த ஒரு பிராந்திய அரசியலாக இவர்கள் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

ஆனால் இதற்கு ம் எதிராக திராவிடம் என்ற சொல் தமிழ் நாட்டிலேயே அதிகம் பேசப் படுவதாகவும் ஏகைய திராவிட மாநிலங்களில் இது குறித்து எவரும் கரிசனை கொள்வதில்லை என இன்னும்  ஒரு சாரார் கருத்து  கொண்டுள்ளனர்.

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த திராவிட முன்னேற்ற  கழகம்,   அதிலிருந்து நடிகர் எம் ஜீ இராமச்சந்திரனால் உருவாக்கப்பட்ட  அண்ணா திராவிட  முன்னேற்ற கழகம், இந்த இரு வாக்கு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தமிழ் நாட்டை தமது பூர்வீகமாக கொண்டவர்கள் அல்ல என்பது புதிதாக எழுந்த தமிழ் தேசிய வாதிகளின் பார்வையாகும் .

இந்த வியாக்கியானங்கள் ஈழத்தமிழர் ஆயுதப்போராட்ட காலத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்திருக்கவில்லை.  ஆனால்  ஈழத்தமிழர் போராட்டத்தை புது டெல்லி தலைமைகள் என்றும் மத வாத போக்கை முன் நிறுத்தியே கையாண்டன.

இந்திரா காங்கிரஸ் கட்சி யாயினும் சரி பாரதீய ஜனதா கட்சி ஆயினும் இரு கட்சிகளும் மாறி மாறி இந்துத்துவ பிராமணீய மேலாண்மை கோட்பாட்டை அடிப்படையாக கொண்டே ஈழப்போராட்டத்தை கையாண்டன என்பது இங்கே குறிப்பிட த்கக்கதாகும்.

தமிழ் மக்களுக்கு என்ற ஒரு அரசு தெற்காசியாவில் அமைந்தால் இந்துத்துவ பார்ப்பணீய மேலாண்மை வலுவிழந்து போய்விடும் என்பது புது டெல்லி அரச கொள்கை பகுப்பாளர்கள்,  வெளியுறவு மற்றும்  பாதுகாப்பு திணைக்கள் அதிகாரிகளின் பார்வையாகும்.

இன்று வரை புது டெல்லி இதே கொள்கை வடிவமைப்பையே கொண்டுள்ளது என்பது முக்கியமானதாகும். இதனால் தமிழ் நாட்டில் திராவிட எதிர்ப்போக்கை கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் அரசியல் நலன்கள் கருதி டெல்லி கட்சிகள் தமிழ் நாட்டு கட்சிகளுடன் கூட்டுகள் வைத்து கொள்கின்றன.

இரு திராவிட கட்சியிலும் மத நம்பிக்கை என்பது அவரவர் உரிமை என்ற வரையறைகளை கடைப்பிடித்து வருகிண்றனர். ஆனால் அதன் தாய்கட்சியான திராவிடர் கழகம் அதிக ஆதரவை திமுகவுக்கு கொடுத்து வருகிறது.  இதனால்  திராவிடர் கழகம் திமுகவின் ஒரு பின்புல பிரச்சார தளமாகவும் மக்கள் மத்தியில் மறைமுகமான சில நேரங்களில் நேரடியான சிபாரிசு செய்யும் பரப்புரை சக்தியாகவும் செயல்படுகிறது.

அதே வேளை அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வேறுபட்ட கோணத்திற்க இன்று சென்று விட்டது எனலாம் . இன்றைய சர்வதேச அரசியலில் நடைமுறையில் இருக்கும் ஜனரஞ்சகவாத அரசியல் தத்துவத்திற்கு அடிப்படையாக இருந்தவர் எம் ஜீ இராமச்சந்திரன் அவர்கள்.  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அவரினால் உருவாக்கப்பட்டது தான் .

அக்கட்சி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கைப் போக்கை தமது அடிப்படை யாக கொண்டிருந்தது.  இந்த கொள்கை  அறிஞர் அண்ணாவினால் உருவாக்கப்பட்டது என்று எம் ஜீ ஆரினால் கூறப்பட்டது. இருந்து போதிலும் மத வேறுபாட்டை எதிர்ப்பவராக எம் ஜீஆர் இருந்தார். இன்று அவரது கட்சி மத  நம்பிக்கை எதிர்ப்புவாத போக்கிலிருந்து முற்றிலுமாக வெளியேறி விட்டது மட்டுமல்லாது சமூக ஏற்றத்தாழ்வு  அடிப்படைகளில் இருந்தும் வெளியேறி விட்டது என பல தமிழ் நாட்டு அரசியல் ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.

அதே வேளை தமிழ் தேசிய வாத போக்கை கொண்டவர்களும் மத நம்பிக்கையை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.  ஆனால் மக்கள் மத்தியிலே சாதீய ஒடுக்க முறைக்கு எதிரானவர்களாகவும் இந்து மத மேலான்மைக்கு எதிரானவர்களாகவுமே அனைத்து தமிழக கட்சிகளும் கூறி வருகின்றனர்.

இதனால் பெரியாருடைய சிந்தனைகள் ஆழவேரூன்றி விட்ட  தமிழ் நாட்டில் சமய சார்பாக கட்சிகள் உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதிக்கம் செலுத்தவது மிகவும் கடினமான ஒரு விடயமாக உள்ளது. இருந்த போதிலும் சாதீயத்தின் பெயரால் அரசியல் செய்வது இன்னமும் இலகுவான ஒரு காரீயமே.

இதனால் தமிழ் நாட்டு அரசியல் சமூக பண்பாட்டு விவகாரங்களில் ஒவ்வொரு விடயத்திலும் திராவிட பின்புலமோ அல்லது இந்து பார்ப்பணீய மேலாதிக்கவாத பின்புலமோ அடங்கி இருக்கும் தன்மையை புரிந்து கொள்வது அவசியமாகிறது.

 

 

http://www.puthinappalakai.net/2019/11/24/news/41323

Share this post


Link to post
Share on other sites

மதம் பிடித்த பிராந்தியங்கள் -8

by புதினப்பணிமனைin ஆய்வு கட்டுரைகள்

blast-colombo-6.jpgசர்வதேச அரங்கிலே அரசியல் மாற்றங்கள் பல்வேறு கோணங்களில் நிகழ்வது போல் தென்படுவதாக இருந்தாலும், அனைத்து நகர்வுகளும் மேலைத்தேய முதலாளித்துவ ஜனநாயக நலன்களை பாதுகாக்கும் வகையிலேயே இடம் பெற்று வருகிறது என்பதை, இந்த இறுதி எட்டாவது கட்டுரை பிரதிபலித்து நிற்கிறது.

மத்திய கிழக்கு,  மேற்காசியப் பிராந்தியத்திலும்  தெற்காசியப் பிராந்தியத்திலும் மட்டுமல்லாது,  மதத்தின் பெயரால் ஐரோப்பிய அமெரிக்க பிராந்தியங்களிலும் அரசியல் நடத்தப்படுகிறது.

மத தேசியவாதம் என்றும் மத அடிப்படைவாதம் என்றும் மத பயங்கரவாதம் என்றும் அரசியல் கொதி நிலையின் தேவைக்கு ஏற்ற வகையில் மதம் பயன்படுத்தப்படுகிறது .

மத்திய கிழக்கு நாடுகளில் இதன் கொதி நிலை அதிகமாக காணப்படுவதையும் இதர பகுதிகளிலும் மத தேவையின் கொதி நிலை அதிகமாக இருந்தாலும்  ஆளும்தரப்பினால் உபயோகப்படுத்தக் கூடிய வகையில் தேசியவாதமாக காட்டப்படுகிறது .

பல்தேசிய சமூகங்களை கொண்ட பிராந்தியங்களில் பெரும்பான்மையினர் என தம்மை அடையாளப்படுத்தி கொண்டுள்ளவர்கள்,   தமது ஆட்சி அதிகாரப் போக்கினை மேலும் பல ஆண்டுகளுக்கு நிலை நிறுத்தி கொள்ளும் போக்கில், தமது மத கொள்கைகளை சமூகங்களின் மத்தியில் பரப்பும் பொருட்டு  பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளை பின்புலத்தில் கொண்டிருக்கின்றனர்.

புனை கதைகளையும் ஆட்சியில் உட்புகுத்துவது மட்டு மல்லாது, சமூக பொருளாதார வாழ்வில் பெரும் தாக்கங்களை விளைவித்து வருகின்றனர். கல்வி தலையீடுகள்,  வேலைவாய்ப்பு தலையீடுகள் மட்டுமல்லாது புதிய  சமநிலையற்ற சமூக வாழ்விற்கான காரணிகளாகவும்  மத அதிகாரத்தை அண்டிப் பிழைக்கும் ஆட்சியாளர்கள்  உள்ளனர்.

இந்த கட்டுரைகள் வருட ஆரம்பத்தில் இடம் பெற்ற கொழும்பு குண்டு வெடிப்புகளுடன் ஆரம்பமானது ,இப்பொழுது வருட இறுதியில் இலண்டன் கத்தி குத்து சம்பவங்களில் வந்து நிறைவு பெறுகிறது.

இவை இரண்டிற்கும் இடையிலே இஸ்லாமிய மத அடிப்படைவாத தலைமையான ஐஎஸ் ஐஎஸ் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட செய்தியை அமெரிக்க அதிபர் பெருமையுடன் கூறிய நிலையையும் நாம் அறிவோம்.

இது ட்ரம்ப் அவர்களின் அடுத்த தேர்தல் குறித்து நகர்வுக்கான ஒரு முத்தாய்ப்பாக பார்க்கப்பட்டாலும், 1990 களில் இருந்து ரஷ்யாவின் வளர்ச்சியும் மத்திய கிழக்கு நாடுகளில் அதன் தலையீடுகளும் அமெரிக்க மூலோபாய முனைப்புகளுக்கு தடைக்கல்லாக இருக்கிறது.

இதன் காரணமான பெரும் பின்னடைவுகளை சந்திக்கும் நிலையில் அமெரிக்க பின்வாங்கல்களும் நிகழ்ந்துள்ளன. இதனாலேயே அல் பக்தாதி கொல்லப்பட்டிருப்பதையும் பல அறிக்கைகள் கூறுகின்றன. இவை குறித்து பின்பு மதங்களுக்கு அப்பால் ஆய்வு செய்யும் கட்டுரைகளில் காணலாம்.

ஆனாலும், லண்டன் பிறிஜ் அருகே இடம் பெற்ற கத்தி குத்துகளுக்குப் பின்பு இன்றைய நிலையிலிருந்து பார்க்கும் பொழுது மதத்தின் பெயரால் இத்தகைய தாக்குதல்கள் மேலும் இடம்பெறமாட்டாது என்பதை உறுதியாக கூற முடியாது.

கொழும்பு குண்டு தாக்குதல்களின் எதிரொலியாக, இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இந்து அடிப்படைவாத பாரதீய ஜனதா கட்சி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தேர்தலில் பல காரணிகள் முன் வைக்கப்பட்டாலும் அவற்றில் பெரும்பாலான காரணிகள் மதம் சார்ந்தவையாகவே இருந்தன.

அதேபோல சிறிலங்காவில்  அதிபர்  தேர்தலில் அதிபர் கோத்தாபய ராஜபக்ச வெற்றி கொள்ளும் நிலைக்கும் மதத்தை முன்நிறுத்திய பயங்கரவாத பிரசாரமும் அடிப்படைவாதமுமே காரணம் என் சர்வதேச பத்திரிகைகள் பலவும் கூறி உள்ளன.

இந்த வகையில் பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் இம்மாதம் 12ஆம் திகதி நாள் இடம்பெற்றது. பிரித்தானியாவில் உள்ள இரு பெரும் கட்சிகளில் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோபின் அவர்களின் போக்கு நேற்ரோ அமைப்புக்கும் அணுஆயுத பலப்படுத்தல் களுக்கும் எதிரானது.

இஸ்லாமிய அமைப்புகளுடன் மென் போக்கை கொண்டிருப்பவர் மேலைத்தேய முதலாளித்த்துவத்தை சாடுபவர். சர்வதேச அளவல் அடக்கப்பட்ட மக்களின் பால் அனுதாபம் கொண்டவர். செமிட்டிச எதிர்ப்பு என்று கூறக் கூடிய யூத இன எதிப்பு போக்கிற்கு உரியவர் என்ற குற்றம் சாட்டப்பட்டவர்.

இவ்வாறான பல்வேறு தன்மைகளையும் கொண்ட ஜெரமி கோபின் அவர்களின் வரவை தவிர்க்கும் பாங்கில்.  மத்தின் பெயரால் மக்கள் மத்தியில்  இஸ்லாமிய மத வெறுப்பை உண்டாக்கும் போக்கு கொண்டதோ என்று எண்ணவும் தோன்று கிறது

இதன் மூலம் ஜனரஞ்சகவாத போக்கையும் முதலாளித்துவ கொள்கைகளையும்  கொண்ட பொறிஸ்  ஜோன்சன் அவர்களின் வரவு  நல்லதோ கெட்டதோ முதலாளித்துவ, பழமைவாத, ஏகாதிபத்திய வாத்தை சீர்திருத்தும் வகையில்  கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தாத நிலை இருந்தால் போதும் என்ற பார்வை ஒன்று தெரிகிறது.

பிரதமர் போறிஸ்

இந்த கட்டுரை எழுதி கொண்டிருக்கம் போதே பொறிஸ் ஜோன்சன் அவர்கள் மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மிகவும் பலம் வாய்ந்த அரசாங்கம் ஒன்றை பிரித்தானிய மக்கள் அமைப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

பிரதமர் மாகிரட் தாட்சர் எவ்வளவு அதிகாரத்துடன் செயற்பட கூடிய ஒரு அரசாங்கத்தை மக்கள் 1980 களின் நடுப்பகுதியில் வழங்கி இருந்தார்களோ அதேபோல இன்று அதே கட்சியை சார்ந்த பொறிஸ் ஜேன்சனுக்கும் வழங்கி உள்ளனர்.

அதுமட்டுமல்லாது பல தொழிற்கட்சி கோட்டைகாளாக கருதப்பட்ட இடங்களில் கூட, பொறிஸ் ஜேன்சனின் பழமை வாதகட்சி தனது இடங்களை பிடித்திருக்கிறது

இது ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து எந்தவித ஒப்பந்தமும் இல்லாது  பிரித்தானியா விலகிக் கொள்வதற்கான ஆணையாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். இது பாரிய நிதிப்பளுவை பிரித்தானியா மீது ஏற்படுத்தினாலும் பரவாயில்லை, விலகு என்பது முடிந்த முடிவாகி இருக்கிறது .

அடுத்து இந்த தேர்தல்  முதலாளித்துவ ஜனரஞ்சகவாதிகளின் அதிக ஆதரவை கொண்ட அரசாங்கத்திற்கு அதீத பலத்தை கொடுத்திருக்கிறது.   ஆனால் பலருக்கும் பொறிஸ் ஜோன்சன் அவர்கள் அதீத ஜனரஞ்சக வாதியாக  தெரிய வில்லை என்பதுவே உண்மையாகும்

பிரித்தானியா தனது பொருளாதாரத்தை முன்னிறுத்தி சர்வதேச அரசியலில் ஈடுபட வேண்டுமாயின் நிச்சயமாக  முன்னைநாள் காலனித்துவ பொதுநலவாய நாடுகளுடன் அதீத உறவில் இருப்பதன் மூலமே ஆரம்பிக்க முடியும்

ஆகவே இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேசம் என ஆசிய நாடுகளுடன் முக்கிய உறவை வளர்த்து கொள்வதுடன் ஆபிரிக்க நாடுகள் தென் அமெரிக்க நாடுகளுடனும் கூட தனது உறவுகளை உருவாக்கி கொள்ளும் தேவை உள்ளது..

ஆனால் சர்வதேச அளவில்  மதவாதத்தை தமது தேவைக்கு ஏற்றவகையில் கையாளும் சக்திகள் மேலைத்தேய நலன்களையும் அதன் விழுமியங்களையும் விட்டு விலகும் நாடுகள் மீது , அதிக அழுத்தத்தை பிரயோகிக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது .

கடந்த கால குண்டு வெடிப்புகள் யுத்தமுனைப்புகள் என பலவற்றையும் வைத்து பார்க்கும் பொழுது  “கண்ணுக்குப் புலப்படாத கை “ சர்வதேச அரசியலில்   அரசுகளுக்கும் அப்பாற்பட்ட வகையில் உலக அளவில் செயற்படுகின்றதா என்ற ஒரு கேள்வியை கேட்டு நிற்கிறது.

கண்ணுக்கு புலப்படாத கை என்பது பொருளாதாரத்துவத்தில் தன்னிச்சையாக செயற்பட கூடிய  சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தை நகர்த்தும் கண்ணுக்குத் தெரியாத சக்திகளின் ஒரு உருவகமாகும். தனிப்பட்ட நலன் மற்றும் உற்பத்தி சுதந்திரம் மற்றும் நுகர்வு மூலம், ஒட்டுமொத்தமாக சமூகத்தின் தேவைகளும் நலன்களும் பூர்த்தி செய்யப்படும் .

அரசியல் பார்வையில் “கண்ணுக்குப் புலப்படாத கைகள்“ என்ற பதம் அரசுகளின் மக்கள் மீதான மறைமுகமாக  உருவகப் படுத்தப்பட்ட  விதிமுறை அதிகாரத்தையும் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்தி இறையாண்மையை வலியுறுத்தும் சக்தியையும் குறிப்பிடபடுகிறது. இது மேலைத்தேய அரசியல் தத்துவத்தில்  குறிப்பிடப்படும் ஒரு முறையாகும்

இந்த கட்டுரைகளின் படி கேள்வி ஒன்று எழுகிறது.  இன்னும் ஒரு கண்ணுக்கு புலப்படாத கை ஒன்று சர்வதேச அரசியலில்  உள்ளதா?

ஏகாதிபத்திய பண்பை காத்து நிற்கக் கூடிய  மேலைத்தேய முதலாளித்துவம் சார்பாக அரசாங்கங்களை உலகளவில் உருவாக்கும் வகையில் மக்களின் மனதை மதத்திற்கு எதிரான பயத்தை உருவாக்கவதன் மூலம்  முதலாளித்துவம் சார்பாக தூண்டும் அல்லது அதற்கு எதிராக எழக்கூடிய வர்களை திசை திருப்பும் சக்தி ஒன்று  செயற்படுகிறதா என்ற ஒரு கேள்வி தான் அது.

-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

கட்டுரையாளருடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள -loganparamasamy@yahoo.co.uk

http://www.puthinappalakai.net/2019/12/22/news/41676

Share this post


Link to post
Share on other sites

மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்

by in ஆய்வு கட்டுரைகள்

Hakkem-sampanthan-300x200.jpg

 

இலங்கைத் தீவில் தமிழர்கள் மத்தியில்  இந்து மதமும் இஸ்லாமிய மதமும் கிறீஸ்தவமதமும் உள்ளன. இருந்த போதிலும் அரசியல் நோக்கம் கொண்ட மதவாத சர்ச்சைகள் தமிழர்கள் மத்தியிலே என்றும் தன்னிச்சையாக எழுந்ததே கிடையாது.

1948 காலகட்டத்திலிருந்து தமிழ் மக்கள் மத்தியிலே மத பிரிவினை இருந்ததில்லை என்பதை பல்வேறு சமூக ஆய்வாளர்களும் கூறி வந்துள்ளனர்

அரசியல் தேவைகளுக்காக இலங்கைத்தீவு இரு கூறாக பிளவுபட்டு போவதை தடுக்கும் நோக்கத்திற்காக,  தமிழ் மக்களிடையே மதப்பிரிவினையை உருவாக்கும் பொறி முறை, மிகவும் இரகசியமான- முக்கியமான பாரிய திட்டமாக கையாளப்பட்டது . கையாளப்பட்டு வருகிறது.

ஆயுதப்போராட்ட காலத்திலும் மத நல்லினக்கத்தை பேணுவதில் போராட்ட தலைமை மிக முக்கிய கவனம் செலுத்தியதை காண கூடியதாக இருந்தது. சிங்கள பௌத்த அரசின் சதித்திட்டங்களின் பலனாக, ஆயுத போராட்ட காலத்தில் பல்வேறு சிக்கல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை மறுக்க முடியாது என்பது இஸ்லாமிய ஆய்வாளர்கள் சிலர் ஏற்றுக்  கொண்டுள்ளனர்.

இந்த நிலை தமிழ் மக்களின் தேசிய விடுதலையை இடையூறு செய்து மேலைத்தேய பார்வையாளர்களையும் பல நாடுகளையும் திசைமாற்றம் செய்யும் வகையில்   சிறிலங்கா அரச தரப்பு தேசிய இனப்பிரச்சனையை சிக்கல் நிறைந்த மூன்ற பிரிவான சர்ச்சையாக காட்டுவதில் மிக முக்கிய கவனம் செலுத்தியது என்பதிலிருந்து வெளியாகிறது.

சிங்களம், தமிழ் என இரு மொழிகளுக்கிடையிலான சிக்கலாக பார்க்காது, தமிழ் பேசும் மக்களை இரு கூறுகளாக இந்து தமிழர்கள்,  இஸ்லாமியர்கள் என பிரிப்பதன்  மூலம் – மூன்று மதங்களுக்கு இடையிலான பிரச்சினையாக காட்டுவதன் மூலம்  இந்த சிக்கலாக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில், மேலைத்தேய அரசியல் கோட்பாட்டாளர்களின் பார்வையில் பல்லின சமுதாய அரசில் இரண்டு தேசியங்களுக்கு இடையிலான பிரச்சனையை தீர்த்து வைப்பதிலும் பார்க்க மூன்று அலகுகளுக்கு இடையில்  எழுந்துள்ள பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதற்கு மிகவும் கடினமான , சிக்கலான நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய தேவை ஏற்படும். இதற்கு  ஏற்ற வகையில் சிக்கலான அரசியலை உருவாக்கி விடும் நோக்குடன் சிறிலங்கா அரசு செயற்பட்டு வந்துள்ளது.

அடுத்து மேலைநாட்டு அரசியல் சித்தாந்தத்தில்  ஒரு நாடு ஜனநாயக முறையில் ஆளப்படுகிறது என்று தெரிந்தாலே அந்த நாட்டில் அது பிரிக்கப்பட்டாலும் இனைந்திருந்தாலும் அனைத்து சமூகங்களும் சமஉரிமையும் சுதந்திரமும்  உடையனவாகவே இருக்கும் என்பது பொதுவான நம்பிக்கை யாகி விடுகிறது .

இஸ்லாமிய மக்களை மத ரீதியாக பிரிக்கும் செயற்பாடு மூர் என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சொற்பத்தின் ஊடாக, மூர்களுக்கும் அடையாளம் உள்ளது என்பதை வலியுறுத்தும் வகையிலாக வாய் பேச்சுகளும் பத்திரிகை கட்டுரைகளும் வெளி வந்தன. தமிழ் பிரிவினையை உண்டு பண்ண கூடிய சிறிலங்கா அரச மற்றும் பெரும்பான்மை சார்பு அலகுகளால் இஸ்லாத்தை தழுவும் தமிழர்கள்  பெருமைக் குள்ளாக்கப்பட்டனர்.

மேலும் அரச ஊட்டத்தின் பெயரில் உழைக்கும்  ஒரு சில தமிழ் மொழியை அல்லது தமிழ் பெயர்களை தமதாக கொண்டவர்களாலும் தமிழரை பிரிக்கும் வகையிலான  கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. இதற்கு ஏற்றவாறு வரலாறும் உருவாக்கம் பெற்றது.

இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில்,  இலங்கைத்தீவில் எந்த ஒரு சிறு ஊரை எடுத்து கொண்டாலும் சங்க காலத்திலிருந்தும் பகவத்கீதை காலத்திலிருந்தும்  பௌத்த மத வருகையின் போதிருந்தும் அராபியர்களின் வருகையின் போதிருந்தும், சீனர் வருகையிலிருந்தும், போர்த்து கீசியர்கள் வருகையின் போதிருந்தும்  ஒல்லாந்தர், ஆங்கிலேயர்  என ஒவ்வொரு காலப்பகுதியிலிருந்தம் ஒரு வரலாறை உருவாக்கலாம்.

அந்த ஊரில் வாழும் எல்லோருக்கும் அவர் என்ன மதமாயினும் என்ன இனமாயினும் புனைகதைகளின் ஆதாரம் கொண்டு,  தனது வரலாற்றை ஒரு ஆதிகால வரலாறாக கூற எவ்வாறோ வரலாற்று ஆதாரம் கிடைத்து விடும் என்பது தான் உண்மை. இந்த நிலையில் தான் இலங்கைத்தீவு இன்று உள்ளது.

இன்றைய நடைமுறை அரசியலில் இஸ்லாமியர்களை அவர்களது எந்த கோலத்திலும், அதாவது அவர்கள் ஆதிவாசிகளாக இருந்தாலும்  மூர்களாக இருந்தாலும் அராபியர்களாக இருந்தாலும் இந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்களாக இருந்தாலும் அவர்கள் விவகாரத்தில் அவர்களுக்கான உரிமையும் கடமையும் கொண்ட சாதாரண தமிழ் மக்களாக வாழ்வதிலோ பொது வாழ்வில் ஈடுபடுவதிலோ எந்த வகையிலும்  விலக்கப்பட்டிருக்க முடியாது

இன்றைய வடக்கு கிழக்கு அரசியல் நிலைமையின் பிரகாரம் ஈழத் தமிழ் மக்களிடையே உள்ள அரசியல் ஆய்வாளர்கள் பலர் இஸ்லாமியரை இன்னமும் தமிழ் மக்களிடம் இருந்து பிரித்து  நோக்கும் நிலையை பார்க்கும் பொமுது அவர்களுடைய பார்வை எந்த அளவு எதிர்கால ஆரோக்கிய வாழ்வை கொண்டது என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

தமிழ் மக்கள் தமது உள்ளக கட்டமைப்பில் ஜனநாயக போக்கையும் சர்வதேச பார்வைக்கு ஒரு தமிழ் தேசிய அரசியல் செய்வதுவும் இன்றைய காலத்தில் மிகவும்   முக்கியமானதாக  உள்ளது.  ஆனால்  வெளியுலகிற்கு ஈழத்தமிழர்களாக தம்மை காட்டி கொண்டு  தமிழ் மக்கள் மத்தியில் மதஅரசியலை தூண்டும் வகையில் இஸ்லாமிய மத பிரிவை அரசியல் ஆதாரமாக கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகளுக்கும், தமிழ்நாட்டிலே திராவிடம் பேசி சாதி அரசியலை வாக்கு வங்கிகளாக வைத்திருக்கும் திராவிட கட்சிகளுக்கும் இடையில் குறிப்பிட்ட ஒரு ஒற்றுமை இருப்பது சரியானதாகவே தெரிகிறது. (ஆதாரம் கடந்த கட்டுரை தமிழகம்)

இதற்கு ஒரு நல்ல உதாரணம் இவ்வருடம் ஜூன் மாதம். இடம் பெற்ற, காலம் சென்ற திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழாவில் ஒரு ஈழத்தமிழனாக கலந்து கொண்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ,  அங்கே கருணாநிதியின் வரலாற்றை எடுத்து கூறி மிகப்பெரும் வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து அதே பயணத்தில் ஒரு பகுதியாக தமிழ் நாட்டு யூரியூப் ஒளிபரப்பு ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், பெரியாரிய பகுத்தறிவு கோட்பாடு சமயம் சார்ந்த விடயம் அல்ல பகுத்தறிவு கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த திராவிட இயக்கங்களின் செயல்பாடுகளில் முஸ்லீம்கள் பாதிக்கப்படவில்லை. முஸ்லீம்கள் மத்தியிலே சமய உணர்வை விட தமிழன் என்ற உணர்வு  மேலோங்கியது என்று கூறினார்.

மேலும் அந்த பேட்டியிலே அவர் கூறிய  வடக்கு கிழக்கு மாகாணங்கள் பலவந்தமாக பிரிக்கப்பட்டதா அல்லது பலவந்தமாக இணைக்க முனைகிறார்களா என்பதில் மிகவும் தெளிவற்ற ஒரு நிலை உள்ளது . இஸ்லாமியர்கள்  தமிழர்கள் இல்லை என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் பார்ப்பது சரியானதாக தெரியவில்லை .  ஏனெனில் தமிழ் என்பது ஒரு மதம் அல்ல, தமிழர்களை இந்துகளாக பார்ப்பது ஹக்கீம் அவர்களின் தனிப்பட்ட அரசியல் இலாப நோக்கம் கொண்ட தாகவே தெரிகிறது.

ஏனெனில் தமிழ்நாட்டில் ஈழத்தமிழனாகவும்,   ஈழத்தில்  முஸ்லீமாகவும் பார்ப்பதானது, தமிழ் மக்களை இந்துக்களாகவும் முஸ்லீம்களாகவும் பிரித்து வைப்பதன் மூலமே ஹக்கீம் அரசியலில் தனது நிலையை தக்க வைத்து கொள்ளலாம் . இதுவே அவரது நோக்கமாக தெரிகிறது.

முன்னுக்குப்பின் முரணான விவாதங்களை வைப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் மீதான தனது ஆளும் உரிமையை  தேட முனைகிறார் என்பது வெளிச்சமாக தெரிகிறது.

சிறிலங்காவை பொறுத்தவரையில் இதர மத நம்பிக்கைகளை சிங்கள பௌத்தம் என்றும் நசுக்கி விடவே முயற்சித்துள்ளது. உதாரணமாக இஸ்லாமிய உணவுமுறை ஆடை முறை அதிகாலையிலும் இரவிலும் இடம் பெறும் பிரார்த்தனைகள் குறித்த விவகாரம் என சமூக வாழ்விற்கு எதிரான அழுத்தங்களை மறைமுகமாக மதவாத சக்கதிகளின் விருப்பத்திற்கு ஆதரவாகவே நடந்து கொள்கிறது.

ஆனால் தமிழ் அப்படியான சமூக வாழ்வில் தலையிடுவது இல்லை . அது ஒரு மொழியாகவே உள்ளது. இஸ்லாமிய இலக்கியங்களை கூட போற்றி அதன் அடையாளங்களை தனித்துவமாக எடுத்து காட்டி உள்ளது.

மேலும் சிங்கள தரப்பு இன்று இஸ்லாத்தின் மீது ஒரு பெரும் பயங்கரவாத முலாம் பூசுவதில் மிக கவனமாக செயற்பட்டு வருகிறது. மத ரீதியான விவகாரங்களை திரிபு படுத்தி கூறுவதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது.  இதற்கு தமது வியாபார நோக்கங்களுக்காகவும் அரசியல் இலாபங்களுக்காகவும் இஸ்லாமிய அரசியல் தலைவர்களே உடந்தையாக உள்ளனர் .

இந்த நிலையானது எந்தப் பொழுதிலும் இலங்கைத்தீவில் வாழும்  இஸ்லாமிய மக்கள் மீது  பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க கூடிய வகையில் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ஆட்சி உரிமை பெற்ற ஒரு தரப்பாகவே சிறிலங்கா தரப்பை உயர்த்தி உள்ளது.

மதம் பிடித்த அதீத இஸ்லாமிய அரசியல் தலைவர்கள்   ஏப்ரல் மாதத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு களின் பின்பு  கைது செய்யப்பட்டும்  பின்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில் அரசின் நன்மதிப்பை பெறும் பொருட்டு இன்னமும் தமது சமூகத்தின் மத்தியிலேயே பிளவை உண்டு பண்ணுவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.`

இது மத அடிப்படையிலான முத்தரப்பு பிச்சினையாக்குவதில்  அரசிற்கு பெரும் உதவியாக இருக்கின்றது.  மட்டுமன்றி மேலும் இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தும் நிலைக்கே இட்டு செல்லும்

ஈழத்து இந்துவாதம்

ஈழத்து இந்து மதவாதிகளும் அண்மைக் காலங்களில் மத அடிப்படையிலான வாதங்களை   சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்தியா போன்ற பிராந்திய வல்லரசுகளின்  மத்தியில் உள்ள இந்து கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் அனுதாப   உருவாக்கல் பிரசாரங்களில் ஈடுபட்டிருப்பதை காண கூடியதாக உள்ளது.

இந்தியாவின் மதவாத  அடிப்படையிலான    அரசாங்கத்தின் அனுதாபத்தை பெறும் பொருட்டு, பௌத்தத்திற்கு எதிரான பிரசாரம் வெற்றி யை தரக்கூடியதாக இருந்தாலும் அவர்களுடைய நிலைப்பாட்டை இந்திய மட்டத்திலேயே வைத்து கொள்ளும் வகை யில் கையாள வேண்டிய நிலையே உள்ளது.

ஏனெனில் எந்த மதவாத சிந்தனையாளர்களும், இந்திய உள்நாட்டு அரசியலில் இருக்கக் கூடிய மதவாத கருத்துகளுக்கும், மத சார்பற்ற கருத்து வேறுபாடுகளுக்கும் இடையிலான பிரிவுகளால் உந்தப்பட்ட நிலையை தமிழ்ப் பகுதிகளுக்கு பரவ செய்வது அரசியல் ஆரோக்கியமானதாக இருக்க முடியாது.

பௌத்த மத சார்பு தமிழர்கள்

அதேபோல மதவாதத்தை மனதார ஏற்று கொண்ட கல்விமான்கள் சிலர் இலங்கைத்தீவு சிங்கள பௌத்த ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்ற விம்பத்தை உருவாக்குவதை    தமது தொழில் நலன், பதவி நலன், அரசியல் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு   பணியாக கொண்டுள்ளனர்.

மேலைத்தேய கல்வி கற்ற இவர்களை அரசு தனது கைக்குள் வைத்திருக்கிறது.  மேலைத்தேய ஆய்வு முறைகளின் படி, வாத, பிரதி வாதங்களை முன் வைத்து ஆய்வு கட்டுரைகளை எழுதி வரும் இவர்கள், தம்மை நடுவு நிலை  ஆய்வாளர்கள் என்ற  பெயரில் உலகிற்கு உண்மையை உளறி விடுவார்கள் என்பதினாலே இவர்களை, கட்டிவைத்து சோறு போடுவதற்கு நாய்குட்டிகளாக தம்முடன் இருப்பார்கள் என்ற நோக்கிலேயே ஆகும்.

இவர்கள் கொழும்பின் புகழ் பாடல் இராஜதந்திரத்திற்கு மயங்கியவர்களாக காணப்படுவது தமிழினத்திற்கு பெரும் கேடு ஆகவே தெரிகிறது.  நேரிலே நண்பர்களாகவும் பண்பாகவும் இத்தகைய அரசியல்வாதிகளுடன் பழகும் கொழும்பு அரசியல்வாதிகள் பத்திரிகைகளில் அவர்களை பிரிவினைவாதிகளாக சித்தரிப்பதன் மூலம் பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்புகளாக தமது காலடியில் வைத்திருக்கும் தன்மையை பல இடங்களில் காணலாம்

இவ்வாறு தமிழால் இணைந்திருக்க கூடிய  இந்து மதமும் இஸ்லாமிய மதமும் தமிழ் உணர்வு இல்லாத நிலையில் பல கோணங்களில் பிரிந்து சிங்கள பௌத்தத்தின் கட்டு பாட்டிற்குள் இருக்கின்றன. இதனால் அரச நிறுவன அதிகாரங்களையும் இதனூடாக  சர்வதேச அங்கீகாரத்தை இலகுவாக பெற்று கொள்ள கூடிய சந்தர்பங்களை கொண்ட சிங்கள பௌத்தத்திடம் தமது விதியை கையளித்து விட்டிருக்கின்றன.

-லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி

 

http://www.puthinappalakai.net/2019/12/11/news/41505

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.