• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • எதனால தட்டி என்கிறாங்க?
    • அருமை! அருமை! இயற்கை நேயமான கவிதை!
    • கூட்டமைப்பின் அங்கதனாக கோட்டாவை சந்திக்கிறாா் சுமந்திரன்..! அடுத்தகட்டம் சம்மந்தன் களத்தில் இறங்குவாராம்..! ஜனாதிபதி வேட்பாளா்கள் அனைவரையும் சந்திக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தீா்மானத்தின் பிரகாரம் கோட்டாபாய ராயபக்சாவை சந்திக்க திகதி குறிக்கப்படுவற்காக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கின்றது. தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்போதே இது தொடர்பிலும் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முன்பு இரு தடவைகள் கட்சி ரீதியாக கோத்தபாய ராயபக்சா உரையாடினார். தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு சந்திப்பிற்கு திகதி கோரியுள்ளார். இதற்கமைய விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோத்தபாய ராயபக்சாவை சந்திப்பார். அவ்வாறு சுமந்திரனின் சந்திப்பையடுத்து நானும் சந்திப்பேன் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார். https://jaffnazone.com/news/13578
    • இஸ்ரேல் பொதுத்தேர்தல் – கருத்துக்கணிப்பில் நெதன்யாகுக்கு பின்னடைவு இஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக இடம்பெற்ற பொதுத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தேர்தலில் நெதன்யாகு வெற்றிபெறுவாரா என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், கருத்துக்கணிப்பில் முன்னாள் இராணுவத் தலைவரே முன்னிலை வகிக்கின்றார். அந்தவகையில், முன்னாள் இராணுவத் தலைவர் பென்னி காண்ட்ஸின் மையவாத நீல மற்றும் வெள்ளை கூட்டணி 32 முதல் 34 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி லுகுட் கட்சி 30 முதல் 33 இடங்களே கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வென்று மீண்டும் இஸ்ரேலின் பிரதமரானார் பெஞ்சமின் நெதன்யாகு. மொத்தமுள்ள 120 இடங்களில், 65 இடங்களில் லுகுட் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்று ஆட்சியைப் பிடித்தன. எனினும் தொடர்ந்து கட்சிகளை இழுத்து கூட்டணி அமைக்க முடியாததால் அரசினை அமைக்கும் வாய்ப்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து செப்ரெம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பின்னணிலேயே நேற்று தேர்தல் இடம்பெற்றது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த நெதன்யாகு, “உண்மையான முடிவுகளுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம், ஆனால் ஒன்று தெளிவாக உள்ளது. இஸ்ரேல் நிலை வரலாற்று கட்டத்தில் உள்ளது, நாங்கள் பெரும் வாய்ப்புகளையும் பெரும் சவால்களையும் எதிர்கொண்டோம்.” என தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னாள் இராணுவத் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஆதரவாளர்களிடம் பேசியபோது, “நிச்சயமாக நாங்கள் உண்மையான முடிவுகளுக்காக காத்திருப்போம், ஆனால் நாங்கள் எங்கள் பணியை நிறைவேற்றியுள்ளோம்” என மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   http://athavannews.com/israel-election-result-too-close-to-call/  
    • மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி நடைபயணம் யங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்தி, அரசியல் கைதிகளை விடுதலை செய் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த பயணத்தில் அனைவரும் கலந்துகொண்டு நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற தியாகி திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்குமாறு ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.இந்த நடைபயணம் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.(15)   http://www.samakalam.com/செய்திகள்/மூன்று-அம்ச-கோரிக்கைகளை/