மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் உள்ள சுமார் 508 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண ஆளுனர் கிஸ்புள்ளாவுக்கு சொந்தமான SEYLAN Business private limited நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இக் காணிகள் கொள்வனவு தொடர்பாக பெரும் சந்தேகம் இருப்பதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த ஓலைத்தொடுவாய் உவரி காணிப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்