Jump to content

மன்னாரில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் 508 ஏக்கர் காணி கொள்வனவு! உள் நோக்கம் என்ன?


Recommended Posts

மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் உள்ள சுமார் 508 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண ஆளுனர் கிஸ்புள்ளாவுக்கு சொந்தமான SEYLAN Business private limited நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இக் காணிகள் கொள்வனவு தொடர்பாக பெரும் சந்தேகம் இருப்பதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த ஓலைத்தொடுவாய் உவரி காணிப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகள் பல பொது மக்களின் காணிகளை அடாத்தாகவும் அதே நேரத்தில் யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு இடம் பெயர்ந்த மக்கள் காணிகளில் இல்லாமை காரணமாக அவர்களுடைய காணிகளையும் அடாத்தாக கொள்வனவு செய்து இங்குள்ள முஸ்லீம் நபர்களுடைய பெயர்களில் பெயர் மாற்றம் செய்து பல இடங்களில் பல ஏக்கர் காணிகளை முஸ்லீம் அரசியல்வாதிகள் கொள்வனவு செய்திருக்கின்றனர்.

குறிப்பாக தற்போது கிழக்கில் ஆளுனராக உள்ள ஹிஸ்புல்லா மன்னார் ஓலைதொடுவாய் உவரி என்ற பிரதேசத்தில் உள்ள 508 ஏக்கர் காணியை செலான் பிஸ்னஸ் பிரைவேட் லிமிட்டட் எனும் பெயரில் கொள்வனவு செய்துள்ளார் அந்த நிறுவனத்தின் இயக்குனராக ஹிஸ்புல்லா இருக்கின்றார் அதன் பெயரில் 508 ஏக்கர் காணிகளை 2013 ஆம் ஆண்டு கொள்வனவு செய்து இருக்கின்றார்.

இந்த 508 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்வதற்கு குறித்த நிறுவனத்திற்கு நிதி எவ்வாறு கிடைத்தது குறித்த அரசியல்வாதிக்கு எந்த அரபு நாட்டில் இருந்து எந்த செல்வந்தர் நிதி வழங்கினார் என்பது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டும் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்று ஜனாதிபதியினால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது அதற்கு சவுதியை சேர்ந்த தனிப்பட்ட நபர் ஒருவர் ஹிஸ்புல்லாவிற்கும் அவருடைய மகனுக்கும் சொந்தமான நிறுவனம் ஒன்றிற்கு பெரும் தொகையான பணம் அனுப்பியிருக்கின்றார் அதன் மூலம் பல்கலைகழகம் கட்டப்பட்டுள்ளது

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள முஸ்லீம் மத தீவிரவாத அமைப்புக்களால் கத்தோலிக்க மக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது.

இந்த உவரிப்பகுதியும் ஒரு கத்தோலிக்க கிராமமாகும் இங்கிருந்த மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவிலும் வேறு பகுதிகளிலும் இருக்கின்றார்கள். ஆரம்பத்தில் இது ஒரு தமிழ் மக்களுடைய கிராமம் அதற்கு அடையாளமாக 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அந்தோனியார் ஆலயம் இங்கு இருக்கின்றது

ஆக இப்படியான நில ஆக்கிரமிப்புக்களை முஸ்லீம் அரசியல்வாதிகள் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து அரபு நாடுகளில் உள்ள தனிப்பட்ட நபர்களின் நிதிகளை பெற்று தாங்களும் அந்த பணத்தில் சுக போகத்தை பெற்று இங்குள்ள தமிழ் மக்களின் காணிகளை எந்த அடிப்படையில் கொள்வனவு செய்கின்றார்கள்.

குறிப்பாக இந்த உவரி பகுதிகாணி தற்போது கிழக்கு ஆளுனர் எந்த அடிப்படையில் 508 ஏக்கர் கொள்வனவு செய்தார் அவருடைய உள்நோக்கம் என்ன என்பது தொடர்பாக தேசிய புலனாய்வு உடனடியாக விசாரிக்க வேண்டும் என்பதுடன் அதற்குரிய நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.

இந்த செலான் நிறுவனத்திற்கு எவ்வாறு இவ்வளவு பணம் கிடைத்தது என்பது தொடர்பாகவும் விசாரித்து இந்த காணிகளை அரச உடைமையாக்கி இப் பிரதேசங்களில் காணி இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்

அதே நேரத்தில் 508 ஏக்கர் காணிகள் என்ற போர்வையில் குறித்த பகுதியில் உள்ள 900 ஏக்கர் காணிகளை அடைத்து வைத்துள்ளதாகவும் எனவே உடனடியாக இது தொடர்பான விசாரணகளை முன்னெடுத்து உண்மை நிலையை வெளிக்கொண்டுவருமாறும் தெரிவித்துள்ளார்.

குறித்த விஜயத்தின் போது மன்னார் மாவட்ட நகர சபை உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் அக் காணிகளை பார்வையிட்டமை குறிப்பிடதக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/119924

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வேறயா....

அல்ஹம்திலல்லா

Link to comment
Share on other sites

இப்படி பல இடங்களில் தமிழர் நிலங்கள் பறிபோயுள்ளன. அனைத்தும் மீளப் பெறப்படவேண்டும்

Link to comment
Share on other sites

புணான என்னும் இடத்தில் கட்டியுள்ள பல்கலைக்கழகத்துக்கு விடுதிகள் கட்டுவதற்காக இருக்கலாம்.பின்னர் இரண்டையும் இணைத்து நெடுஞ்சாலை அமைத்து இரு பக்கமும் முஸ்லிம்களை குடியேற்றிவிட்டால் ....காக்கா உங்கட பிளான் பக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, போல் said:

குறிப்பாக தற்போது கிழக்கில் ஆளுனராக உள்ள ஹிஸ்புல்லா மன்னார் ஓலைதொடுவாய் உவரி என்ற பிரதேசத்தில் உள்ள 508 ஏக்கர் காணியை செலான் பிஸ்னஸ் பிரைவேட் லிமிட்டட் எனும் பெயரில் கொள்வனவு செய்துள்ளார் அந்த நிறுவனத்தின் இயக்குனராக ஹிஸ்புல்லா இருக்கின்றார் அதன் பெயரில் 508 ஏக்கர் காணிகளை 2013 ஆம் ஆண்டு கொள்வனவு செய்து இருக்கின்றார்.

2013 இல் வாங்கப்பட்டிருக்கிறது என்றால் இதுவரை நாள் இதைப் பற்றியே பேசாமல் இருந்தது ஏன்?

Link to comment
Share on other sites

10 hours ago, ஈழப்பிரியன் said:

2013 இல் வாங்கப்பட்டிருக்கிறது என்றால் இதுவரை நாள் இதைப் பற்றியே பேசாமல் இருந்தது ஏன்?

இப்பகுதியை பிரதிநித்துவபடுத்தும் செல்வம் அடைக்கலநாதன் என்ன செய்றார்? இதை வெளிக்கொண்டுவர வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தான் தேவையா? செல்வம் அடைக்கலநாதன் ரிஷாட், ஹிஸ்புல்லாவிடம் சம்திங் வாங்கிட்டாரா? அறிய ஆவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடற்புலிகளின் தளமாக இருந்த காணியும் கிழக்கு ஆளுநரால் கொள்வனவு – ஸ்ரீநேசன் தகவல்

srisenasan-hisbulla.jpg

விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகளின் தளமாக இருந்த காணியும் கிழக்கு மாகாண ஆளுநரினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வெருகல் பிரதேசத்தின் இராமர் தீவு என்னும் இடத்தில் இருந்த கடற்புலிகளின் காணியே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநரினால் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் குறித்து முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் ஸ்ரீநேசன் கோரியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நீதி அமைச்சு ஊடாக சமாதான நீதிபதிகளாக தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “தற்போது எமது வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல அரசியல்வாதிகள் அளவுக்கதிகமாக காணிகளை அபகரித்து வைத்திருக்கின்றார்கள். தற்போது கிழக்கு ஆளுநராக இருக்கும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும் ஒரு நிறுவனத்தின் பெயரில் மன்னார் மாவட்டத்தில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை கொள்வனவு செய்திருப்பதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வெருகல் பிரதேசத்தில் இராமர் தீவு எனும் இடத்தில் கடற்புலிகளின் தளமாக இருந்த காணி கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக ஒரு கருத்து நிலவுகின்றது. அதேபோன்று திருகோணமலையில் சல்லித்தீவு பிரதேசம் மற்றும் பதுளை வீதியில் புல்லுமலை பிரதேசம் ஆகிய இடங்களில் கணிசமான காணிகள் உள்ளதாகக் கருத்துக்கள் நிலவுகின்றன. இவைகளைப் பற்றி ஆராய வேண்டிய தேவை இருக்கின்றது.

சாதாரண முஸ்லிம் மக்கள் இவ்வாறு காணிகளை சிறிது சிறிதாக கொள்வனவு செய்து அவர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்துவது பரவாயில்லை. ஆனால் இவ்வாறு அளவுக்கதிகமாக அரசியல்வாதி ஒருவர் கொள்வனவு செய்து வைத்திருப்பதென்பது எதிர்காலத்தில் என்ன நோக்கத்திற்கானது என்ற கேள்வியும் எழுகின்றது.

எனவே, சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் குறிப்பிட்ட அரசியல்வாதியினால் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்ற குறித்தும் இதன் நோக்கம் என்னவென்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://athavannews.com/கடற்புலிகளின்-தளமாக-இருந/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Rajesh said:

இப்பகுதியை பிரதிநித்துவபடுத்தும் செல்வம் அடைக்கலநாதன் என்ன செய்றார்? இதை வெளிக்கொண்டுவர வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தான் தேவையா? செல்வம் அடைக்கலநாதன் ரிஷாட், ஹிஸ்புல்லாவிடம் சம்திங் வாங்கிட்டாரா? அறிய ஆவல்.

காணி வாங்குதல், விற்பனை செய்தல் காதும், காதும் வைத்தது போலவே நடக்கும். வெளியே தெரியாது.

ஒரு சில இடைத்தரகர்கள் இருந்திருக்கலாம். 

இப்போது அவர்கள் சந்தேகம் கொண்டு கசிய விட்டிருக்கலாம். அதனாலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் அது குறித்து பேசுகின்றனர்.

Link to comment
Share on other sites

18 minutes ago, Nathamuni said:

காணி வாங்குதல், விற்பனை செய்தல் காதும், காதும் வைத்தது போலவே நடக்கும். வெளியே தெரியாது.

ஒரு சில இடைத்தரகர்கள் இருந்திருக்கலாம். 

இப்போது அவர்கள் சந்தேகம் கொண்டு கசிய விட்டிருக்கலாம். அதனாலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் அது குறித்து பேசுகின்றனர்.

இப்பொழுது இவர்கள் தமிழ் முகவர் களை வைக்க தமிழர் வாங்குவது போல் வாங்கி முஸ்லிம் கைகளுக்கு மாறுகின்றன. சுன்னாகத்திலும் ஒரு காணி முஸ்லிம் கைகளுக்கு மாறி அங்கு பள்ளி வாசலும் குடியிருப்பும கட்டப்படுகிறது.

தமிழன் நேரடியாக  விற்க மாட்டார்கள் அதனால் முகவர்களை வைத்து வாங்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

எனவே, சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் குறிப்பிட்ட அரசியல்வாதியினால் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்ற குறித்தும் இதன் நோக்கம் என்னவென்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

 கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது?

வெறும் அறிக்கைகள் மட்டும் தான் அவர்களுக்கு தெரிந்த அரசியலா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.