Jump to content

'இரானுடன் போர் நடத்த அமெரிக்கா விரும்பவில்லை'

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
இரானுடன் போர் நடத்த அமெரிக்கா விரும்பவில்லைபடத்தின் காப்புரிமை Reuters

இரான் - அமெரிக்கா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்யாவில் பேசிய அவர், இரான் ஒரு "சாதாரண நாடாக" நடந்துகொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவுடன் எந்த போரும் இருக்காது என இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

வளைகுடா பகுதியில் கடந்த வாரம் போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிலை நிறுத்தியது.

https://www.bbc.com/tamil/global-48276952

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன சீலம்பாய்க்கு உந்த தோணியள், வள்ளங்களை அனுப்பினியள்?🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

அப்ப என்ன சீலம்பாய்க்கு உந்த தோணியள், வள்ளங்களை அனுப்பினியள்?🙄

😀😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

அப்ப என்ன சீலம்பாய்க்கு உந்த தோணியள், வள்ளங்களை அனுப்பினியள்?🙄

வழமையாய் செய்யுறது போலை சும்மா வெருட்டிப்பாக்கத்தான்......அடிக்கிறதுக்கு ஐரோப்பியன் ஓம் படுறாங்கள் இல்லையாம்....:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:
 
இரானுடன் போர் நடத்த அமெரிக்கா விரும்பவில்லைபடத்தின் காப்புரிமை Reuters

இரான் - அமெரிக்கா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்யாவில் பேசிய அவர், இரான் ஒரு "சாதாரண நாடாக" நடந்துகொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவுடன் எந்த போரும் இருக்காது என இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

வளைகுடா பகுதியில் கடந்த வாரம் போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிலை நிறுத்தியது.

https://www.bbc.com/tamil/global-48276952

டிரம்ப் பதவிக்கு வந்தநாள்முதல் ஈரானுடன் ஒபாமா அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் செய்துகொண்ட அணுவாயுதப் பரவல்த் தடுப்பிற்கான ஒப்பந்தம் பற்றி விமர்சித்தே வந்திருக்கிறார். 

ஒபாமா அரசாங்கத்தின் ஒப்பந்தப்படி, தனது அணுவாயுத தயாரிப்பை ஈரான் கைவிடும் பட்சத்தில், அதன்மீது கொண்டுவரப்பட்டைருந்த பொருளாதாரத் தடைகள், எண்ணெய் ஏற்றுமதிக்கான தடைகள் என்பவற்றை விலக்கிக் கொள்வதாகப் பேரம் பேசப்பட்டிருந்தது. இதனடிப்படையில், ஈரான், தனது அணுவாயுத தயாரிப்பை இடைநிறுத்தி (வெளியில் அப்படித்தான் சொல்லிக்கொண்டது) , ஒப்பந்தந்தத்தின் படி சலுகைகளைப் பெற்றுக்கொண்டது. வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த ஈரானின் பொருளாதாரம், மீள எழ ஆரம்பித்தது மட்டுமல்லாமல், ஈரான் மக்களும் பொருளாதார சுபீட்சத்தை அனுபவிக்க ஆரம்பித்தனர். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதித் தடை நீக்கப்பட்டதால் உலக எண்ணெய்ச் சந்தையில் எண்ணெயின் விலை குறைந்து, அமெரிக்கா உற்பட பல நாடுகளில் வாகன ஓட்டுநர்கள் சிறிதுகாலம் குறைந்த விலைக்கு பெட்ரோலினை வாங்கிப் பாவிக்க ஏதுவாக அமைந்தது.

ஆனால், இந்தப் பொருளாதாரச் சலுகைகளைப் பாவித்துக்கொண்டே ஈரான் மறைவாக தனது அணுவாயுத உற்பத்தியில் ஈடுபடுகிறதென்று அமெரிக்காவின் ரிபப்ளிக்கன் கட்சியினர் தொடர்ந்தும் குறைப்பட்டு வந்ததோடு, ஹிஸ்பொல்லா இயக்கத்துக்கான ஈரானின் வெளிப்படையான ஆதரவு, சவுதி அரசுக்கெதிரான ஈரானின் செயற்பாடுகள், இஸ்ரேலுக்கெதிரான ஈரானின் நிலைப்பாடு ஆகியன ஈரான் மீது டிரம்ப் அரசு மீண்டும் நெருக்குவாரங்களை கொடுக்க ஏதுவாக அமைந்தது. 

இயல்பாகவே இஸ்ரேலுக்குச் சார்பான போக்கைக் கொண்ட டிரம்ப் அரசு, தடாலடியாக , ஒருதலைப் பட்சமாக ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற, ஈரானும் தன் பங்கிற்கு மீண்டும் அணுவாயுதத் தயாரிப்பில் ஈடுபடப்போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்க, இடையே அகப்ப்ட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்பந்தத்தைத் தக்கவைக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள்.

வளைகுடாவிற்கு அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்பிவைப்பது ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்க மட்டும்தான். மற்றும்படி, அமெரிக்கா இன்னொரு போருக்கு ஆயத்தப்படுவதாகத் தெரியவில்லை. ஈரானினாலும் அமெரிக்காவுடன் ஒரு போரைத் தாக்குப்பிடிக்கும் சக்தி இருப்பதாகத் தெரியவில்லை. 

சுன்னி அடிப்படைவாதைகளுக்கெதிரான போரில், ஈரானின் பங்கு அளப்பரியது. ஈராக்கில் ஐஸிஸ் பயங்கரவாதிகளை ஒடுக்கியதில் ஈரானின் பங்கும் உள்ளது. ஆவ்வாறே, சிரியாவில், ஆசாத்தின் படைகளுடன் ஈரானிய ஆதரவுபெற்ற ஹிஸ்பொல்லா அமைப்பு சேர்ந்து போராடியது. அதுமட்டுமல்லாமல், ஈரானுக்கு ரஷ்ஷியாவின் ஆதரவும் இருக்கிறது. ஆகவே, அமெரிக்க ஈரான் மீது அவ்வளவு லேசில் கைவைப்பது இப்போதைக்கு நடவாது.

ஆனால், போரென்று வரும் பட்சத்தில், மிக இலகுவாக அமெரிக்கா ஈரானை வீழ்த்திவிடும் என்பது மட்டும் உண்மை (அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குபவனாக இருந்துகொண்டு, இதைக்கூடச் சொல்லாவிட்டால் எப்படி ??!!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

டிரம்ப் பதவிக்கு வந்தநாள்முதல் ஈரானுடன் ஒபாமா அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் செய்துகொண்ட அணுவாயுதப் பரவல்த் தடுப்பிற்கான ஒப்பந்தம் பற்றி விமர்சித்தே வந்திருக்கிறார். 

தேர்தல் நெருங்கும் காலமாக பார்த்து சண்டை தொடங்கலாம்.
அமெரிக்காவில் எழுதப்படாத எழுத்து சண்டை நேரத்தில் தேர்தல் வந்தால் அந்த ஜனாதிபதி தோற்கக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசிட்டே இருக்கனே ஒழிய .. ..எதையும் செய்ய மாட்றனப்பா..🤔

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

Link to comment
Share on other sites

22 hours ago, ரஞ்சித் said:

டிரம்ப் பதவிக்கு வந்தநாள்முதல் ஈரானுடன் ஒபாமா அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் செய்துகொண்ட அணுவாயுதப் பரவல்த் தடுப்பிற்கான ஒப்பந்தம் பற்றி விமர்சித்தே வந்திருக்கிறார். 

ஒபாமா அரசாங்கத்தின் ஒப்பந்தப்படி, தனது அணுவாயுத தயாரிப்பை ஈரான் கைவிடும் பட்சத்தில், அதன்மீது கொண்டுவரப்பட்டைருந்த பொருளாதாரத் தடைகள், எண்ணெய் ஏற்றுமதிக்கான தடைகள் என்பவற்றை விலக்கிக் கொள்வதாகப் பேரம் பேசப்பட்டிருந்தது. இதனடிப்படையில், ஈரான், தனது அணுவாயுத தயாரிப்பை இடைநிறுத்தி (வெளியில் அப்படித்தான் சொல்லிக்கொண்டது) , ஒப்பந்தந்தத்தின் படி சலுகைகளைப் பெற்றுக்கொண்டது. வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த ஈரானின் பொருளாதாரம், மீள எழ ஆரம்பித்தது மட்டுமல்லாமல், ஈரான் மக்களும் பொருளாதார சுபீட்சத்தை அனுபவிக்க ஆரம்பித்தனர். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதித் தடை நீக்கப்பட்டதால் உலக எண்ணெய்ச் சந்தையில் எண்ணெயின் விலை குறைந்து, அமெரிக்கா உற்பட பல நாடுகளில் வாகன ஓட்டுநர்கள் சிறிதுகாலம் குறைந்த விலைக்கு பெட்ரோலினை வாங்கிப் பாவிக்க ஏதுவாக அமைந்தது.

ஆனால், இந்தப் பொருளாதாரச் சலுகைகளைப் பாவித்துக்கொண்டே ஈரான் மறைவாக தனது அணுவாயுத உற்பத்தியில் ஈடுபடுகிறதென்று அமெரிக்காவின் ரிபப்ளிக்கன் கட்சியினர் தொடர்ந்தும் குறைப்பட்டு வந்ததோடு, ஹிஸ்பொல்லா இயக்கத்துக்கான ஈரானின் வெளிப்படையான ஆதரவு, சவுதி அரசுக்கெதிரான ஈரானின் செயற்பாடுகள், இஸ்ரேலுக்கெதிரான ஈரானின் நிலைப்பாடு ஆகியன ஈரான் மீது டிரம்ப் அரசு மீண்டும் நெருக்குவாரங்களை கொடுக்க ஏதுவாக அமைந்தது. 

இயல்பாகவே இஸ்ரேலுக்குச் சார்பான போக்கைக் கொண்ட டிரம்ப் அரசு, தடாலடியாக , ஒருதலைப் பட்சமாக ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற, ஈரானும் தன் பங்கிற்கு மீண்டும் அணுவாயுதத் தயாரிப்பில் ஈடுபடப்போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்க, இடையே அகப்ப்ட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்பந்தத்தைத் தக்கவைக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள்.

வளைகுடாவிற்கு அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்பிவைப்பது ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்க மட்டும்தான். மற்றும்படி, அமெரிக்கா இன்னொரு போருக்கு ஆயத்தப்படுவதாகத் தெரியவில்லை. ஈரானினாலும் அமெரிக்காவுடன் ஒரு போரைத் தாக்குப்பிடிக்கும் சக்தி இருப்பதாகத் தெரியவில்லை. 

சுன்னி அடிப்படைவாதைகளுக்கெதிரான போரில், ஈரானின் பங்கு அளப்பரியது. ஈராக்கில் ஐஸிஸ் பயங்கரவாதிகளை ஒடுக்கியதில் ஈரானின் பங்கும் உள்ளது. ஆவ்வாறே, சிரியாவில், ஆசாத்தின் படைகளுடன் ஈரானிய ஆதரவுபெற்ற ஹிஸ்பொல்லா அமைப்பு சேர்ந்து போராடியது. அதுமட்டுமல்லாமல், ஈரானுக்கு ரஷ்ஷியாவின் ஆதரவும் இருக்கிறது. ஆகவே, அமெரிக்க ஈரான் மீது அவ்வளவு லேசில் கைவைப்பது இப்போதைக்கு நடவாது.

ஆனால், போரென்று வரும் பட்சத்தில், மிக இலகுவாக அமெரிக்கா ஈரானை வீழ்த்திவிடும் என்பது மட்டும் உண்மை (அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குபவனாக இருந்துகொண்டு, இதைக்கூடச் சொல்லாவிட்டால் எப்படி ??!!)

ட்ரம்ப் பதவிக்கு வந்த நாள் முதல் அல்ல, தேர்தலில் குதிக்க முன்னமிருந்தே தான் ஜனாதிபதியானால் ஒபாமா ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட (ஈரானுக்கும் UNSC இன் 5 நிரந்தர உறுப்பினர்களான சீனா, ரஷ்யா, பிரான்ஸ், UK, US, அது தவிர ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட) JCPOA ஒப்பந்தத்திலிருந்து விலகுவேன் என்று கூறி புதிய ஒப்பந்தம் உருவாக்கும் எண்ணத்திலும் கதைத்து வந்தவர். 

அதன்படி காரண சூழ்நிலைகளும் அமைய போன வருடம் அவ் ஒப்பந்தத்திலிருந்து விலகியிருந்தாரே தவிர தடாலடியாக எல்லாம் விலகவில்லை.

விலகிய பின் ஒரு சில விடயங்களை மேலதிகமாக உள்ளடக்கி புதிய ஒப்பந்தம் அமைக்கும் நோக்கில் அழைப்பு விடுத்த போது அதற்கு ஈரான் மறுத்து விட்டது. 

பின் ஈரான் மீது பொருளாதார தடை அது இதென்று அழுத்தங்களை கொடுக்க பிரச்சினை எங்கோ போனாலும் ட்ரம்ப் ஜனாதிபதியாக உள்ள வரை அமெரிக்கா போரை ஆரம்பிக்க மாட்டுது என நம்புகிறேன். பார்க்கலாம். 

ஈரானும் இப்ப அவ் ஒப்பந்திலிருந்து பகுதியாக தன்னும் விலக தான் நிற்கிறது.

இன்னொரு பக்கம் வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் போர் வரும் என பலர் முன்பிலிருந்து கூறினார்கள். ஆனால் இப்ப வரைக்கும் போர் வரவில்லை. அதற்கு பதிலாக ஒரு சில பேச்சுவார்த்தை முயற்சிகளை ட்ரம்ப் மேற்கொண்டிருந்தார். ஆனால் பிரச்சினை தொடர்கிறது.

Depopulation agenda இன் கீழ் ட்ரம்பை போர் தொடங்க வைக்க பின்னணியில் பலர் தொடர்ச்சியாக கடும் பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

நம்பீட்டன்

இலுமினாட்டிகளின் பொம்மைதான் ஒபாமா என்றால், அவர் ஈரானுடன் ஒப்பந்தம் செய்யவேண்டிய தேவை என்ன?டிரம்ப் இலுமினாட்டிகளின் எதிரியென்றால், ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகி அதனுடன் முரண்பாடான போக்கைக் கடைப்பிடித்து போருக்கான முஸ்த்தீபுகளில் இறங்கவேண்டிய அவசியம் என்ன?

Depopulation என்னும் இலுமினாட்டிகளின் கனவு ஒபாமாவினால்த்தனே செய்துமுடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரோ போரைத் தவிர்த்து சமாதானம் செய்ய, இலுமினாட்டிகளின் எதிர்ப்பாளரான டிரம்ப் சமரச ஒப்பந்தத்தை மீறி போர்நோக்கிப் பயணிக்கிறாரே??

Depopulation  தான் இலுமினாட்டிகளின் உண்மையான கனவென்றால் , அதை இலுமினாட்டிகளின் பொம்மையான ஒபாமாவைவிக் காட்டிலும், அவர்களின் எதிரியான டிரம்ப்பே சிறப்பாகச் செய்வதாக எனக்குப் படுகிறது.

Link to comment
Share on other sites

32 minutes ago, ரஞ்சித் said:

ஒபாமா மட்டுமல்ல, George Bush உட்பட பல ஜனாதிபதிகள் பொம்மைகளாக தான் இருந்தார்கள். 

ஒபாமா ஈராக்கில் மக்களை கொன்றவர் தானே?

இந்த ஒப்பந்தம் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பரிசோதித்து பார்க்கும் ஈரானின் முயற்சிகளை தடுக்கும் வகையில் அமையவில்லை என்று தான் அதிலிருந்து விலகி, புதிய ஒப்பந்தத்தில் அது பற்றி உள்ளடக்க ட்ரம்ப் முயற்சித்தார். புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் மறுத்து விட்டது.

John Bolton போன்ற சிலர் தான் பின்னணியில் ட்ரம்புக்கு போர் தொடங்க அழுத்தம் கொடுக்கிறார்கள். 

ஆனாலும் ட்ரம்ப் ஜனாதிபதியாக உள்ள வரை போர் தொடங்க மாட்டார் என்று நினைக்கிறேன் என்றே நான் எழுதியுள்ளேன்.

Link to comment
Share on other sites

தவிர secret societies என்பது தனியே illuminatti ஐ மட்டும் கொண்டதல்ல. பல secret societies உள்ளன. அவர்களது குறிக்கோள் தனியே depopulation செய்வது மட்டுமல்ல. முழு உலகையும் ஆள்வது, anti christ நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட பல உள்ளன.

அத்துடன் பல வருடங்களுக்கு முன்னமே அமெரிக்கா secret societies இன் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. 

சிலரை அவர்களே பொம்மை ஜனாதிபதியாக கொண்டு வந்து தாம் நினைப்பவற்றை அவர்களை வைத்து நிறைவேற்றுவர். அப்படியான சிலர் தான் ஒபாமா, புஷ் போன்றோர்.

டொனால்ட் ட்ரம்ப்பின் பல நடவடிக்கைகள் இவர்களது நோக்கிற்கு எதிராக இருந்தது என்பதால் தான் அமெரிக்க மக்கள் பலர் அவரை ஆதரிக்கிறார்கள், உலக mainstream media அவரை போட்டுத்தாக்குகிறது என முன்னர் நான் குறிப்பிட்டேனே தவிர அரசியலை பொறுத்த வரை 100% யாரையும் நம்ப முடியாது என்பதையும் குறிப்பிட்டே இருக்கிறேன்.

ட்ரம்ப்பாலும் எவ்வளவு தூரம் இவர்களை தாக்குப்பிடிக்க முடியும் என தெரியாது என்பதால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

ஒபாமா ஈராக்கில் மக்களை கொன்றவர் தானே?

நீங்கள் எழுந்தமானமாக எழுதுவதுபோலத் தெரிகிறது.

ஈராக்கினுள்ளும், ஆப்கானிஸ்த்தானினுள்ளும் அமெரிக்கத் துருப்புக்களை அனுப்பி போர்களை ஆரம்பித்துவைத்தவர் ஜோர்ஜ் புஷ். இது நடந்தது 2001 ரெட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிற்பாடு (உடனேயே ரெட்டைக் கோபுரத் தாக்குதல்கூட உள்வீட்டு வேலைதான் என்று நிறுவ வேண்டாம்).

ஒபாமா பதவிக்கு வந்ததோ 2008 ஆம் ஆண்டு. அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் செய்வதாகக் கூறிய மிக முக்கிய விடயங்களில் ஒன்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் உள்ள அமெரிக்கத் துருப்புக்களை கால அட்டவணை ஒன்றின் அடிப்படையில் திரும்பப் அழைப்பதென்பது.

ஒபாமா பதவியேற்றபோது ஈராக்கிலிருந்த அமெரிக்கத் துருப்புக்களின் எண்ணிக்கை 150,000. இதை அவர் 2011 ஆண்டளவில் வெறும் 5,000 ஆகக் குறைத்துக் காட்டினார். ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் நடக்கும் போர்கள் நிறுத்தப்படவேண்டும் என்று வெளிப்படையாகவே கோரி வந்ததோடு அதை அடையும் நோக்கிலும் செயற்பட்டு வந்தார். 

2014 இல் ஐஸிஸ் அமைப்பு வெளிவரும்வரைக்கும் சில நூறு அமெரிக்க ராணுவ ஆலோசகர்களைத்தவிர முற்றான ராணுவ வெளியேற்றத்தை ஒபாமா செய்திருந்தார். 

ஆனால், ஐஸிஸ்களின் கரம் ஈராக்கில் ஓங்கியபின்னரே, மிகச்சிறியளவிலான அமெரிக்க சிறப்புப் படைப்பிரிவுகளையும், விமானப் படைப்பிரிவையும் மீளவும் அங்கே அனுப்பிவைத்தார்.

ஆகவே, ஒபாமா ஈராக்கில் மக்களைக் கொன்றார் என்கிற உங்களின் கூற்று அடிபட்டுப் போய்விடுகிறது.

ஈராக் மீதான இரு போர்களையும், ஆப்கானிஸ்த்தான் மீதான போரையும் ஆரம்பித்து நடத்தியவர்கள் புஷ் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும்தான். வேண்டுமென்றால், அவர்கள் லட்சக்கணக்கில் மக்களைக் கொன்றார்கள் என்று சொல்லுங்கள். சகட்டுமேனிக்கு ஒபாமா மக்களைக் கொன்றார் என்று எழுதுவது சரியாகப் படவில்லை.

1 hour ago, Lara said:

தவிர secret societies என்பது தனியே illuminatti ஐ மட்டும் கொண்டதல்ல. பல secret societies உள்ளன. அவர்களது குறிக்கோள் தனியே depopulation செய்வது மட்டுமல்ல. முழு உலகையும் ஆள்வது, anti christ நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட பல உள்ளன.

அத்துடன் பல வருடங்களுக்கு முன்னமே அமெரிக்கா secret societies இன் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. 

சிலரை அவர்களே பொம்மை ஜனாதிபதியாக கொண்டு வந்து தாம் நினைப்பவற்றை அவர்களை வைத்து நிறைவேற்றுவர். அப்படியான சிலர் தான் ஒபாமா, புஷ் போன்றோர்.

டொனால்ட் ட்ரம்ப்பின் பல நடவடிக்கைகள் இவர்களது நோக்கிற்கு எதிராக இருந்தது என்பதால் தான் அமெரிக்க மக்கள் பலர் அவரை ஆதரிக்கிறார்கள், உலக mainstream media அவரை போட்டுத்தாக்குகிறது என முன்னர் நான் குறிப்பிட்டேனே தவிர அரசியலை பொறுத்த வரை 100% யாரையும் நம்ப முடியாது என்பதையும் குறிப்பிட்டே இருக்கிறேன்.

ட்ரம்ப்பாலும் எவ்வளவு தூரம் இவர்களை தாக்குப்பிடிக்க முடியும் என தெரியாது என்பதால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உங்களினால், இந்த ரகசியக் குழுக்கள் பற்றியும், அவர்களின் புதிய உலக ஒழுங்குபற்றியும் குறிப்பிடாமல் கருத்துக்களை எழுத முடியாதா லாரா? 

நீங்கள் தேவையில்லாமல் எல்லாவிடத்திலும் இதுபற்றிக் குறிப்பிடுவது திரியின் போக்கையே மாற்றிவிடக் கூடும்.

இக்குழுக்கள் பற்றியும், அவர்களது நடவடிக்கைகள் பற்றியும் இன்னொரு பகுதியில் ஒரு திரியை நீங்கள் திறந்து எழுதினால் என்ன? ஆர்வமுள்ளவர்கள் அங்கு வந்து தமது கருத்துக்கள்ளையும் முன்வைக்க முடியுமல்லவா? சிந்தித்துப் பாருங்கள் !

Link to comment
Share on other sites

4 minutes ago, ரஞ்சித் said:

நீங்கள் எழுந்தமானமாக எழுதுவதுபோலத் தெரிகிறது.

ஈராக்கினுள்ளும், ஆப்கானிஸ்த்தானினுள்ளும் அமெரிக்கத் துருப்புக்களை அனுப்பி போர்களை ஆரம்பித்துவைத்தவர் ஜோர்ஜ் புஷ். இது நடந்தது 2001 ரெட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிற்பாடு (உடனேயே ரெட்டைக் கோபுரத் தாக்குதல்கூட உள்வீட்டு வேலைதான் என்று நிறுவ வேண்டாம்).

ஒபாமா பதவிக்கு வந்ததோ 2008 ஆம் ஆண்டு. அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் செய்வதாகக் கூறிய மிக முக்கிய விடயங்களில் ஒன்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் உள்ள அமெரிக்கத் துருப்புக்களை கால அட்டவணை ஒன்றின் அடிப்படையில் திரும்பப் அழைப்பதென்பது.

ஒபாமா பதவியேற்றபோது ஈராக்கிலிருந்த அமெரிக்கத் துருப்புக்களின் எண்ணிக்கை 150,000. இதை அவர் 2001 ஆண்டளவில் வெறும் 5,000 ஆகக் குறைத்துக் காட்டினார். ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் நடக்கும் போர்கள் நிறுத்தப்படவேண்டும் என்று வெளிப்படையாகவே கோரி வந்ததோடு அதை அடையும் நோக்கிலும் செயற்பட்டு வந்தார். 

2014 இல் ஐஸிஸ் அமைப்பு வெளிவரும்வரைக்கும் சில நூறு அமெரிக்க ராணுவ ஆலோசகர்களைத்தவிர முற்றான ராணுவ வெளியேற்றத்தை ஒபாமா செய்திருந்தார். 

ஆனால், ஐஸிஸ்களின் கரம் ஈராக்கில் ஓங்கியபின்னரே, மிகச்சிறியளவிலான அமெரிக்க சிறப்புப் படைப்பிரிவுகளையும், விமானப் படைப்பிரிவையும் மீளவும் அங்கே அனுப்பிவைத்தார்.

ஆகவே, ஒபாமா ஈராக்கில் மக்களைக் கொன்றார் என்கிற உங்களின் கூற்று அடிபட்டுப் போய்விடுகிறது.

ஈராக் மீதான இரு போர்களையும், ஆப்கானிஸ்த்தான் மீதான போரையும் ஆரம்பித்து நடத்தியவர்கள் புஷ் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும்தான். வேண்டுமென்றால், அவர்கள் லட்சக்கணக்கில் மக்களைக் கொன்றார்கள் என்று சொல்லுங்கள். சகட்டுமேனிக்கு ஒபாமா மக்களைக் கொன்றார் என்று எழுதுவது சரியாகப் படவில்லை.

ஒபாமா ஈராக் மீது போரை ஆரம்பித்தார் என நான் கூறவில்லை, ஈராக்கில் மக்களை கொன்றார் என்றே கூறினேன். 

நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இரட்டைக்கோபுர தாக்குதல் inside job தான். 

ஒபாமா சிரியாவிலும் போர் நடத்தினவர் தான். 

ஏதோ அவரை சமாதான தூதுவர் கணக்கில் கதைக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Lara said:

ஆளை விடுங்கள். 

Link to comment
Share on other sites

13 minutes ago, ரஞ்சித் said:

உங்களினால், இந்த ரகசியக் குழுக்கள் பற்றியும், அவர்களின் புதிய உலக ஒழுங்குபற்றியும் குறிப்பிடாமல் கருத்துக்களை எழுத முடியாதா லாரா? 

நீங்கள் தேவையில்லாமல் எல்லாவிடத்திலும் இதுபற்றிக் குறிப்பிடுவது திரியின் போக்கையே மாற்றிவிடக் கூடும்.

இக்குழுக்கள் பற்றியும், அவர்களது நடவடிக்கைகள் பற்றியும் இன்னொரு பகுதியில் ஒரு திரியை நீங்கள் திறந்து எழுதினால் என்ன? ஆர்வமுள்ளவர்கள் அங்கு வந்து தமது கருத்துக்கள்ளையும் முன்வைக்க முடியுமல்லவா? சிந்தித்துப் பாருங்கள் !

நான் இவர்களை பற்றி எழுத வரவில்லை. தனியே depopulation என குறிப்பிட்டு எழுதினேன். நீங்கள் தான் இலுமினாட்டி பற்றி இழுத்தீர்கள். அதனால் அது பற்றி விளக்கம் தந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Lara said:

நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இரட்டைக்கோபுர தாக்குதல் inside job தான். 

அது எப்படி இவ்வளவு உறுதியாகக் கூறுவீர்கள்?🤔 நீங்களும் CIA உடன் கூட இருந்து தாக்குதலாளிகளுக்கு கட்டளை கொடுத்திருந்தால்தான் உண்மை என்று நம்பமுடியும்😂🤣

சதிக்கோட்பாடுகளை தொடக்கவும், பரப்பவும் உலகம் முழுவதும் பலர் உள்ளனர். ஆனால் எல்லோர் மூளையும் புகையடிப்பால் மாறாது அல்லவா!😎

Link to comment
Share on other sites

31 minutes ago, Lara said:

நான் இவர்களை பற்றி எழுத வரவில்லை. தனியே depopulation என குறிப்பிட்டு எழுதினேன். நீங்கள் தான் இலுமினாட்டி பற்றி இழுத்தீர்கள். அதனால் அது பற்றி விளக்கம் தந்தேன்.

ரஞ்சித் சொன்னமாதிரி எல்லா இடத்திலும் வந்து இப்படி Secret society ஒரு இருப்பதாக எழுதி திரிகளின் போக்கை உங்களின் இருட்டு நம்பிக்கைகளின் பால் நகர்த்திக் கொண்டு இருக்கின்றீர்கள்.

இன்றைய செய்திகளில் முக்கியமாக இருப்பது அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிரான கடுமையான சட்டம். இது ட்றம்ப் ஆட்சிக்கு வந்த பின் பின்பற்றப்படும் கடும் கிறிஸ்தவ கொள்கை சார்பானது. இதே போன்று இன்னும் 16 மாகாணங்கள் சட்டங்களை கொண்டு வர முயல்கின்றன.  ட்றம்பால் நியமிக்கப்பட்ட அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் துணை கொண்டு இதை செயற்படுத்த முனைகின்றன. ட்றம்ப் அரசு Anti Christ செயற்திட்டங்களை செய்கின்றவர்களின் பொம்மை அரசு எனில் கருக்கலைப்புக்கு எதிராக போக மாட்டார்கள். அத்துடன் கருக்கலைப்பு என்பது depopulation இற்கும் எதிரானது.

இதற்கும் ஒரு கற்பனை உலகில் இருந்து கொண்டு பதில் எழுதுவீர்கள் என நினைக்கின்றேன். Secret society  என்பது ஏதோ கடவுளர்கள் போலவும், அவை அமெரிக்க மக்களில் இருந்து உலக மக்கள் எவருக்கும் கண்ணுக்கு புலப்படாமல் நீக்கமற நிறைந்து இருந்து உலகை இயக்குகின்றார்கள் என்பது போலவும் நீங்கள் கற்பனையில் ஒன்றை உருவாக்கி  அதையே எல்லா இடங்களிலும் காரணமாக சொல்லி வருகின்றீர்கள்.ஒரு நாட்டில் / உலகி இருக்கும் புலனாய்வுப் பிரிவுகளும் (சி.ஐ.ஏ /மொசாட்/ போன்ற) Lobby பண்ணும் பிரிவுகளையும் தவிர சீக்கிரட் சொசைட்டி என்று ஒன்று இல்லை.

மற்றது, நானும் "ஆளை விடுங்கள்" என்று இறுதி பதிவிட்டு விட்டு இந்த திரியில் இருந்து நகர்கின்றேன்.

Link to comment
Share on other sites

5 minutes ago, கிருபன் said:

அது எப்படி இவ்வளவு உறுதியாகக் கூறுவீர்கள்?🤔 நீங்களும் CIA உடன் கூட இருந்து தாக்குதலாளிகளுக்கு கட்டளை கொடுத்திருந்தால்தான் உண்மை என்று நம்பமுடியும்😂🤣

சதிக்கோட்பாடுகளை தொடக்கவும், பரப்பவும் உலகம் முழுவதும் பலர் உள்ளனர். ஆனால் எல்லோர் மூளையும் புகையடிப்பால் மாறாது அல்லவா!😎

Inside job என்பதற்கான ஆதாரம் வலுவாக இருப்பதால் தான். இன்னொரு திரியில் அது பற்றி எழுதியுள்ளேன். வேண்டுமானால் பாருங்கள். 😎

எனக்கு சரியென படுவதை நான் எழுதுகிறேன். அதை மற்றவர்கள் நம்புவது நம்பாதது அவர்களை பொறுத்தது.

Link to comment
Share on other sites

5 hours ago, நிழலி said:

ரஞ்சித் சொன்னமாதிரி எல்லா இடத்திலும் வந்து இப்படி Secret society ஒரு இருப்பதாக எழுதி திரிகளின் போக்கை உங்களின் இருட்டு நம்பிக்கைகளின் பால் நகர்த்திக் கொண்டு இருக்கின்றீர்கள்.

இன்றைய செய்திகளில் முக்கியமாக இருப்பது அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிரான கடுமையான சட்டம். இது ட்றம்ப் ஆட்சிக்கு வந்த பின் பின்பற்றப்படும் கடும் கிறிஸ்தவ கொள்கை சார்பானது. இதே போன்று இன்னும் 16 மாகாணங்கள் சட்டங்களை கொண்டு வர முயல்கின்றன.  ட்றம்பால் நியமிக்கப்பட்ட அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் துணை கொண்டு இதை செயற்படுத்த முனைகின்றன. ட்றம்ப் அரசு Anti Christ செயற்திட்டங்களை செய்கின்றவர்களின் பொம்மை அரசு எனில் கருக்கலைப்புக்கு எதிராக போக மாட்டார்கள். அத்துடன் கருக்கலைப்பு என்பது depopulation இற்கும் எதிரானது.

இதற்கும் ஒரு கற்பனை உலகில் இருந்து கொண்டு பதில் எழுதுவீர்கள் என நினைக்கின்றேன். Secret society  என்பது ஏதோ கடவுளர்கள் போலவும், அவை அமெரிக்க மக்களில் இருந்து உலக மக்கள் எவருக்கும் கண்ணுக்கு புலப்படாமல் நீக்கமற நிறைந்து இருந்து உலகை இயக்குகின்றார்கள் என்பது போலவும் நீங்கள் கற்பனையில் ஒன்றை உருவாக்கி  அதையே எல்லா இடங்களிலும் காரணமாக சொல்லி வருகின்றீர்கள்.ஒரு நாட்டில் / உலகி இருக்கும் புலனாய்வுப் பிரிவுகளும் (சி.ஐ.ஏ /மொசாட்/ போன்ற) Lobby பண்ணும் பிரிவுகளையும் தவிர சீக்கிரட் சொசைட்டி என்று ஒன்று இல்லை.

மற்றது, நானும் "ஆளை விடுங்கள்" என்று இறுதி பதிவிட்டு விட்டு இந்த திரியில் இருந்து நகர்கின்றேன்.

உங்களுக்கு நான் எழுதிய தமிழ் விளங்கவில்லை என்றால் மீண்டும் வாசித்து பாருங்கள். நான் ஒபாமா, புஷ் ஆகியோரை தான் பொம்மைகள் என கூறியுள்ளேன். ட்ரம்பை எங்கே அப்படி சொன்னேன்?

தவிர மலட்டுத்தன்மையை ஏற்படுத்தல், sacrifice என்ற பெயரில் கருக்கலைப்பு செய்தல், குழந்தைகளை கொல்லுதல் (எமது நாட்டில் ஆடுகளை வெட்டுவதை போல்) போன்றன அங்கு நடக்கிறது. ட்ரம்ப் கருக்கலைப்புக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தால் நல்ல விடயம் தான். (என்ன, ஒரு சில இதனுடன் சம்பந்தப்படாத மக்கள் பாதிக்கப்படுவார்கள்)

Secret societies என்பதை கடவுள் என்ற ரீதியில் எங்கே எழுதினேன்? அவர்களும் மனிதர்கள் தான், ஆனால் இரகசிய குழுவாக இயங்கி shadow government நடத்துவோர். உலக வங்கி உட்பட பல வங்கிகளை நடத்துவோரும் இதில் அங்கத்துவம் வகிக்கின்றனர். பல நாட்டு புலனாய்வு பிரிவில் உள்ளோரும் இதில் அங்கம் வகிக்கிறார்கள்.

நான் இத்திரிக்கு சம்பந்தப்படும் விடயம் என்பதால் depopulation என்ற சொல்லை பயன்படுத்தினேன். அதை தூக்கிப்பிடித்து வாதாடுவோர் தான் திரியின் போக்கை மாற்றுவோர்.

உலகத்தில் நடக்கும் விடயம் உங்களுக்கு தெரியாவிட்டால் நீங்கள் தான் இருட்டுக்குள் உள்ளீர்கள் என்று அர்த்தம். நானல்ல. 

(இத்தனைக்கும் நான் சைவ சமயத்தை சேர்ந்த ஒருவர், கிறிஸ்தவரும் கிடையாது)

Link to comment
Share on other sites

நான் முன்னைய பதிவில் குறிப்பிட்ட John Bolton பற்றி wikipedia கூறுவது.

Bolton has been called a "war hawk" and is an advocate for regime change in IranSyriaLibyaVenezuelaCubaYemen and North Korea and repeatedly called for the termination of the Iran nuclear deal.[16][17] He was an early supporter of the Iraq War and continues to back this position.[18] He has continuously supported military action and regime change in Syria, Libya, and Iran.

மேலதிகமாக வாசிக்க,

https://en.m.wikipedia.org/wiki/John_R._Bolton

Link to comment
Share on other sites

ஈரானுடன் பேச்சுவார்த்தையை விரும்பும் ட்ரம்பின் twitter பதிவு.

EA761925-8FD7-4331-8CCD-08EB1F1E5D72.jpg

E774E557-6C25-4CF5-9AB4-AA3161302A71.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.