Sign in to follow this  
பிழம்பு

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப அச்சுறுத்தல் - அவசர நிலை பிரகடனம் செய்த டிரம்ப்

Recommended Posts

வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவின் கணினி நெட்வர்க்குகளை பாதுகாக்க, அந்நாட்டில் அவசர நிலையை அதிபர் டொனால்டு டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

அவசர நிலைக்கு டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைதொடர்புகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவை அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அபாயம் விளைவிப்பதாக கருதப்படுகிறது.

எந்த நிறுவனம் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிடவில்லை என்றாலும், சீனாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஹுவாவேயை நோக்கியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்நிறுவனத்தின் சாதனங்கள், சீனா வேவுபார்க்க பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கவலை தெரிவித்திருந்தன. ஆனால், அதனை ஹுவாவே மறுத்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-48278501

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • தேசிய மெய்வல்லுநர் போட்டியில் நிமாலி தேசிய சாதனை  (சுகததாச அரங்கிலிருந்து எம்.எம்.சில்ஸெ்டர்) 97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில்  பெண்களுக்கான  1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற நிமாலி  லியனாராச்சி தேசிய சாதனையுடன் முதலிடம் வென்றார். இதுவே இதுவரை பதிவான ஒரேயொரு இலங்கை சாதனையாகும்.  ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேரட்ண பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் 35 நிமிடங்கள் 30 செக்கன்களில் ஓடி முதலிடம் பிடித்தார். கொழும்பு சுகததாச  விளையாட்டரங்கில் கடந்த வெள்ளின்று ஆரம்பமான 97 ஆவது  தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி இன்றைய தினத்துடன் நிறைவடைகிறது. தேசிய சாதனை படைத்த நிமாலி பெண்களுக்கான 1500  மீற்றர் ஓட்டப் போட்டியில் சிறப்பாக ஓடிய நிமாலி லியனாராச்சி புதிய தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார். இவர் இப்போட்டித்  தூரத்தை 4 நிமிடங்கள் 15.89 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம், 2012 ஆம் ஆண்டு சம்பிக்கா தில்ருக்சியால் ஏற்படுத்தப்பட்ட 4 நிமிடங்கள் 16.42  செக்கன்கள் என்ற தேசிய சாதனையை முறிடித்தார். இப்போட்டியில் இரண்டாம் இடத்தை கயன்திகா அபேரட்ணவும் (4 நிமி.22.24 செக்.), முன்றாம் இடத்தை கே.ஏ. குமாரியும் (4 நிமி.49.77 செக்.), பெற்றுக்கொண்டனர். முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு முதலிடம் போட்டியின் முதல் நாளான வெள்ளியன்று நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் சப்ரின் அஹமட் 16.33 மீற்றர் தூரம் பாய்ந்து முதலிடம் வென்றார். வெலிகமவைச் சேர்ந்த இவர் எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியைப் பெற்றார்.  தெற்காசிய விளையாட்டு விழாவில் தனது திறமைகளை அனைத்தையும் வெளிப்படுத்தி தாய்நாட்டுக்கு பதக்மொன்றை பெற்றுக்கொடுப்பதே எனது பிரதான நோக்கமாகும். எனினும், பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவில் உள்ளதால் எனக்கான விளையாட்டு உபகரணங்கள், போஷாக்கான உணவு போன்றவற்றுக்கு பெருந்தொகையான பணம் செலவாகிறது. இதுபோன்று இன்னும் பல சவால்களை எதிர்கொண்டே இப்போட்டியில் நான் தொடர்ந்தும் பங்கேற்று வருகின்றேன் என சப்ரின் அஹமட் தெரிவித்தார். யாழ். வீர வீராங்கனைகள் பிரகாசிப்பு கோலூன்றிப் பாய்த்தல் மற்றும் உயரம் பாய்த்தல் போட்டிகளை மையப்படுத்தி இம்முறை தேசிய மெய்வல்லநர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்றிருந்தனர். இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தக்சிதா நேசராசா இரண்டாம் இடத்தையும், அனிதா ஜெகதீஸ்வரன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மேலும், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிக்கு அருந்தவராசா பவிதரன் முன்னேறினார். முதலிடத்தை தவறவிட்ட தக்சித்தா  நேற்றைய இரண்டாம் நாளான்று நடைபெற்ற கோலூன்றிப் பாய்தலில் பங்கேற்ற சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவியான நேசராசா தக்சிதாவுக்கும், ஷஷினிக்கும் பலத்த போட்டி நிலவியது. இவ்விருவரும் 3.40 மீற்றர் உயரம் தாவியதுடன், 3.45 மீற்றர் உயரத்தை தாவ எடுத்துக்கொண்ட மூன்று முயற்சிகளிலும் இருவரும் தோல்வியடைந்தனர். 3.40 மீற்றர் உயரத்தை தனது முதல் முயற்சியில் தாவிய ஷஷினிக்கு முதல் இடம் வழங்கப்பட்டது. மேற்படி உயரத்தை தனது மூன்றாவது முயற்சியில் தாவியதால்  தக்சிதாவுக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டது. அனிதாவுக்கு மூன்றாமிடம்   பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனிதா ஜெகதீஸ்வரன் 3.33 மீற்றர் உயரம் தாவி மூன்றாம் இடம் பிடித்தார். 3.40 மீற்றர் உயரத்தை தாவ எடுத்துக்கொண்ட மூன்று முயற்சிகளிலும் அனித்தா தோல்வியடைந்தார்.இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு யாழ் வீராங்கனையான ஹெரீனா 3.00 மீற்றர் உயரத்தை மாத்திரமே தாவியிருந்தார். இறுதிக்கு முன்னேறிய பவிதரன் போட்டியின் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் பங்கேற்ற யாழ் சாவகச்சேரி மாணவனும் புவிதரனின் சகோதரருமான அருந்தவராசா பவிதரன் 4.40 மீற்றர் உயரம் தாவிய பவிதரன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.  முதல் சுற்றின்போது தாடை மற்றும் முழங்கால் பகுதிகளில்  காயமடைந்தபோதிலும், அவற்றை பொருட்படுத்தாமல் பங்கேற்ற  பவிதரன் அனைவரது பாராட்டை பெற்றார். இவர் பங்கேற்கும் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்ற மஹாஜனா கல்லூரி மாணவன் சுரேஸ்குமார் சுகி கேதரன் 3.85 மீற்றர் உயரத்தை தாவியிருந்ததுடன், மானிப்பாய் இந்து கல்லூரி மாணவனான சிவகுமார் கபில்சன் 3.85 மீற்றர் உயரத்தை தாவ தவறினார். 100 மீற்றரில் ஹிமாஷ, சுகந்தி முதலிடம்  ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை ஹிமாஷ ஏஷான், வினோஜ் சுரஞ்சய இருவரும் 10.49 செக்கன்கள் என்ற ஒரே நேரப் பெறுதியில் முடித்த போதிலும் சலன அசைவு புகைப்படத்தின்படி ஹிமாஷ ஏஷானுக்கு முதலிடமும்,  வினோஜ் சரஞ்சயவுக்கு இரண்டாமிடமும் வழங்கப்பட்டதுடன், முன்றாமிடத்தை  பிரியதர்சன அபேகோன்(10.52 செக்கன்கள்) பெற்றார். பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் லக்சிக்கா சுகந்தி (12.08 செக்கன்கள்), அமாஷா டி சில்வா (12.20 செக்கன்கள்), சர்மிளா ஜேன் (12.24 செக்கன்கள்) ஆகியோர் முறையே முதல் முன்று இடங்களை பிடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருமேஷிகா ரட்நாயக்க எல்லைக் கோட்டைடை அண்மித்திருந்தபோது, தசைப்பிடிப்பின் காரணமாக வெற்றியீட்ட முடியாமல் போனது. 400 மீற்றர் ஓட்டப்போட்டி ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் 46.76 செக்கன்களில் ஓடி முடித்த அருண தர்ஷன முதலிடம் பிடித்தார். பி.எல். குணரட்ண (47.18 செக்.) இரண்டாவது இடத்தையும் , ஆர்.என். ராஜகருண (47.49 செக்.) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். பெண்களுக்கான 400 மீற்றரில் நதீஷா ராமநாயக்க (53.11செக்.) முதலிடம் வென்றதுடன், கே.மதுஷானி (54.30 செக்.) இரண்டாவது இடத்தையும், ஈ.வீ. ரத்னகுமாரி (54.59 செக்.) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். அசத்திய ஹிருனி விஜேரட்ண   அமெரிக்காவில் வசித்துவரும் ஹிருணி, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்காக சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வருகை தந்தார்.  நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமான பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டி அனைவரையும் கவர்ந்த போட்டியாக அமைந்தது. இப்போட்டியில் பங்கேற்ற ஹிருணி விஜேரட்ண 35 நிமிடங்கள் 30 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் வென்று தெற்காசியப் போட்டிக்கு தகுதி பெற்றார்.  இவருக்கு சிறந்த போட்டியை அளித்த லங்கா ஆரியதாசா 35 நிமிடங்கள் 42 செக்கன்களில் ஓடி முடித்து இரண்டாவது இடத்தை பிடித்தார். இப்போட்டியின் மூன்றாவது இடத்தை எஸ். ஏ. லமாஹேவகே (36 நிமி.52.8 செக்கன்கள்) பெற்றார்.  https://www.virakesari.lk/article/62885
    • தலைமைப்பீடம் என்று வரும் போது அரசியல் தலையீடுகள், நிர்வாக ஊழல்கள் என்று தேவையற்ற அவப்பெயர்கள் சைவத்திற்கு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, ஏற்கனவே இயங்கும் உள்ளூர் சைவ அமைப்புகளூடாக மக்கள் நலத் தொண்டுகள், அறநெறி வகுப்புகள் போன்ற செயற்பாடுகளைத் தொடர்வதன் மூலம் சைவநெறியைத் தழைக்கச் செய்வதுடன், சமூகச் சீர்கேடுகளையும் குறைக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். சைவர்களின் நம்பிக்கையுள்  அனாவசியமாக மூக்கை நுழைப்பவர்கள், போலி முற்போக்குவாதிகள் போன்றோறோரின் விஷமப்பிரச்சாரத்திலிருந்து சைவர்களை மீட்டெடுக்க இது உதவலாம். 😊 https://yarl.com/forum3/topic/231067-’அறநெறி-வகுப்புகளால்-குற்றச்செயல்கள்-தடுக்கப்படுகின்றன’/?tab=comments#comment-1393142
    • தொழில்நுட்பம் வளர்ந்து வரும்பொழுது அது பெரும்பாலும் இலாபத்தை குறி வைத்தே எழுதப்படும் / முகாமைப்படுத்தப்படும். எனவே, சமுதாயத்தில் பணம் இல்லாதவர்கள் இல்லை பெரியளவில் பணம் சம்பாதிக்க முடியாத மக்கள் பகுதியில் இவ்வாறான புதிய தொழில்நுட்பங்கள் அதிகளவில் கால் பாதிப்பதில்லை.  ஆனால்,  சில வேளைகளில் சில நல்ல பயனுள்ள செயலிகள் உருவாவதுண்டு.   பெயர்: மைக்ரோசோப்ட் சவுண்ட்ஸ்கேப்  விலை : இலவசம்  தளம் : நிச்சயமாக ஆப்பிள் ஐ ஓஎஸ். ஆன்ட்ராய்ட்டில் இருக்கலாம்  இது என்ன செய்யும்: ஜி. பி. எஸ், இனை கொண்டு இயங்கும், 3டி வடிவில் இடங்களை கூறி பாதுகாப்பாக நடக்க, வாக்கம் ஓட்ட உதவும்  குறிப்பு : நீங்கள் வாழும் நாட்டில் இன்னும் இருக்காமல் இருக்கலாம். யாரெனுக்கும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பயன்படலாம்  ( இவ்வானவை தமிழில் இருந்தால் .... )       
    • தாயக  தமிழ் உறவுகள் இவ்வாறான ஒரு நிலையை கோத்தபாய விடயத்தில் எடுக்க கூடும், 2006 அமெரிக்க அதிபர் தேர்தலில், ஹிலாரியை விரும்பாதவர்கள் ட்ரம்பிற்கு வாக்களித்தார்கள் என்றும் அதனாலேயே அவர் வென்றார் எனவும் கூறுபவர்கள் உள்ளனர்.