கிருபன்

கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி

Recommended Posts

கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி

 

எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதி அல்ல. அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் தஜீந்தர் பால் சிங் பாகா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

mode.jpg

“பயங்கரவாதத்தை ஒரு மதத்திற்குள் வரையறுப்பது தவறு. இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியைக் கொன்றவரை இந்து பயங்கரவாதி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆயிரக் கணக்கான சீக்கியர்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்தியை அவர் எவ்வாறு அழைப்பார்? நாட்டில் மக்களிடையே மத அடிப்படையில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள கமல்ஹாசன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்கையில்,

Kamal.jpg

“எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதி அல்ல. அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. எந்த ஒரு பயங்கரவாதியும் இந்து மதத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,“ சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஓர் இந்து. அவர் தான் மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சே.” என பேசியது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/55988

Share this post


Link to post
Share on other sites

பொற்கோவிலுக்குள் சென்று சீக்கியர்களை கொன்றது இந்திரா காந்தியா,ராஜிவ் காந்தியா எந்தக் காந்தி  கன் எடுத்தவர்  ஒரே குழப்பமாக இருக்கு......!   🚀

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

பொற்கோவிலுக்குள் சென்று சீக்கியர்களை கொன்றது இந்திரா காந்தியா,ராஜிவ் காந்தியா எந்தக் காந்தி  கன் எடுத்தவர்  ஒரே குழப்பமாக இருக்கு......!   🚀

இந்திரா காந்தி காலத்தில்தான் 'Operation Bluestar' நிகழ்ந்தது. இந்தியப் படை பொற்கோவிலுக்குள் சென்று பிந்தரன்வாலே மற்றும் அவன் ஆட்களை ஒழித்தனர். அரசியல் காரணத்தால் பிந்தரன்வாலே இந்திரா அரசினால் ஒரு காலத்தில் உருவாக்கப்பட்டவன்தான் - அமெரிக்கா‌ ஒரு காலத்தில் ரஷ்யாவிற்கு எதிராக பின்லேடனை உருவாக்கியதைப் போல. இரண்டுமே வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதை.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

இந்திரா காந்தி காலத்தில்தான் 'Operation Bluestar' நிகழ்ந்தது. இந்தியப் படை பொற்கோவிலுக்குள் சென்று பிந்தரன்வாலே மற்றும் அவன் ஆட்களை ஒழித்தனர். அரசியல் காரணத்தால் பிந்தரன்வாலே இந்திரா அரசினால் ஒரு காலத்தில் உருவாக்கப்பட்டவன்தான் - அமெரிக்கா‌ ஒரு காலத்தில் ரஷ்யாவிற்கு எதிராக பின்லேடனை உருவாக்கியதைப் போல. இரண்டுமே வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதை.

 

ராஜீவகாந்தி என்று சொல்கிறவர் தஜிந்தர் பால் சிங் பாகா(பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்) அவருக்கே ஒரு செய்தியை சொல்வதில் தடுமாற்றம் என்றால் என்னத்தை சொல்லுறது.....சுப.சோமர்.....!  😄

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

கிருபன் அவர்கள் பதிவிட்ட செய்தி நமக்குத் தெரிந்தமையால், மேலோட்டமாக வாசித்ததில் தஜிந்தர் சிங் பெயர் வரும் இரண்டாம் பத்தியைக் கவனிக்கவில்லை. நீங்கள் வேடிக்கையாய்க் கேட்டதற்கு நான் முனைப்புடன் பதிலிறுத்துவிட்டேன். எனினும் தஜிந்தர் சிங் குறிப்பிடுவது, இந்திரா காந்தியின் Operation Bluestarக்கு பழி வாங்கும் விதமாக இந்திரா தமது மெய்க்காப்பாளராயிருந்த இரண்டு சீக்கியர்களால் கொல்லப்பட்டவுடன் வெடித்த கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டதை, என நினைக்கிறேன். இந்திரா மறைந்ததும் உடனே ராஜீவ் காந்தியைப் பிரதமராக்கித் தீவிர அரசியலுக்கு இழுத்து வந்தார்கள். டெல்லி கலவரம் காங்கிரஸின் முக்கியப் பிரமுகர்களாலேயே அரங்கேற்றப்பட்டது. அப்போது கொலைகாரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. "ஒரு பெரிய ஆலமரம் விழும்போது பூமி அதிரத்தான் செய்யும்" என்று பிரதமர் ராஜீவ் வேறு திருவாய் மலர்ந்தருளினார்.

 

Edited by சுப.சோமசுந்தரம்

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, suvy said:

பொற்கோவிலுக்குள் சென்று சீக்கியர்களை கொன்றது இந்திரா காந்தியா,ராஜிவ் காந்தியா எந்தக் காந்தி  கன் எடுத்தவர்  ஒரே குழப்பமாக இருக்கு......!   🚀

மோடி சொல்வதில் அர்த்தமிருக்கிறது.

சீக்கியர்களின் புனிதமான பொற்கோயிலுக்குள் தனது ராணுவத்தை அனுப்பி, தீவிரவாதிகளைக் கொல்கிறேன் என்கிற போர்வையில் பல அப்பாவிகளின் உயிர்களையும் சேர்த்தே பறித்தவர்தான் இந்திரா. இதனாலேயே அவர் தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆனால், இந்திராவின் கொலைக்குப் பின்னர், அதற்குப் பழிவாங்குவதற்காக ராஜீவ் காந்தியும் அவரது இந்திரா காங்கிரஸ் அமைச்சர்கள் சிலரும் சேர்ந்து தில்லி அடங்கலாக வட மாநிலங்கள் பலவற்றில் சீக்கியர்களுக்கெதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு சுமார் பத்தாயிரம் சீக்கிய அப்பாவிகளைக் கொன்று குவித்தார்கள். இது இன்றுவரை காங்கிரஸால் மறைக்கப்பட்டு வரும் ஒரு இனவழிப்பு நடவடிக்கை. சீக்கியர்களைடம் இதுபற்றி விசாரித்துப் பார்த்தால் ராஜீவின் உண்மையான முகம் தெரியும். அந்த முகத்தின் இன்னொரு பக்கத்தை அவரது ராணுவம் 1987 இல் இருந்து 1990 வரை ஈழத்தில் செய்துகாட்டியது.

ஆனால், இதைச் சொல்வதற்கு இந்துப் பயங்கரவாதி மோடிக்கு எந்த அருகதையும் கிடையாது. குஜாரத்தில் இவர் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் முஸ்லீம்களுக்கெதிரான வன்முறையைத் திட்டமிட்டு நடத்திக் காட்டினார்,. பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களைக் கொன்று குவித்ததில் இவரது ஏவலும் பங்கும் இருக்கிறது. 

Share this post


Link to post
Share on other sites

குஜராத்தில் மோடி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 2005 இல் அமெரிக்கா தனது நாட்டுக்குள் நுளைய மோடிக்குத் தடை வித்திதிருந்தது. 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

கமலுக்கு நன்றி. (மறைக்கப்பட்ட உண்மைகளை அவரவர் வாயால் வெளிக் கொண்டு வருவதற்கு.)

சொக்கத்தக்கம் சோனியா ஈழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலை.. மாமியார்.. கணவர் வழியில் வந்தது என்பது வெளிப்படை உண்மை.

இதில் சில ஹிந்திய தீவிரவாதிகள்.. அது பழிவாங்கலாம். ராஜீவ் காந்தி என்பவர்.. உண்மையில்.. தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொடூர இனப்படுகொலையாளன் என்பதே சர்வதேச நீதிச் சட்டம் ஒழுங்காக அவர் மீது விசாரணை செய்திருந்தால்.. வந்திருக்கும் தீர்ப்பாக இருக்கும். 

அதேபோல்.. சோனியாவும் சர்வதேசச் சட்டங்களால் தண்டிக்கப்பட வேண்டிய ஒருவர்.. சொறீலங்கா இனப்படுகொலையாளர்களுடன் சேர்த்து. 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • படம் : தழுவாத கைகள்(1986) இசை : இளையராஜா பாடியவர்கள் : P.ஜெயச்சந்திரன் & S.ஜானகி வரிகள்: கங்கை அமரன் தொட்டுப் பாரு குத்தமில்ல ஜாதி.. முல்லை.. சின்ன.. புள்ள.. காமன்.. தொல்லை.. காமன் தொல்லை தாங்கவில்லை மாமா தொட்டுப் பாரு குத்தமில்ல.. பலகாரமும் சூடாறுது பரிமாறவா.. பசியாகுது பலகாரமும் சூடாறுது பரிமாறவா.. பசியாகுது விருந்திருக்கு எனக்கு முன்னே விரிச்சுவிடு இலைய கண்ணே விருந்திருக்கு எனக்கு முன்னே விரிச்சுவிடு இலைய கண்ணே இது போதுமா வேணுமா உன் பசி ஆறுமா வேணும் வேணும் வேகம் தீராதம்மா தொட்டுப் பாரு.. ஹக்..ஹ குத்தமில்ல நடு ராத்திரி பயமாகுது துணையாக வா குளிராகுது நடு ராத்திரி பயமாகுது துணையாக வா குளிராகுது விறு விறுன்னு இறங்குதய்யா விளைஞ்ச மனம் கிறங்குதய்யா விறு விறுன்னு இறங்குதய்யா விளைஞ்ச மனம் கிறங்குதய்யா விளையாட வா கூடவா வேடிக்கை காட்டவா ஆத்தா ஆத்தா பாத்தா போதாதய்யா.. தொட்டுப் பாரு ஹ்..ஹா குத்தமில்ல ஜாதி முல்லை சின்ன புள்ள காமன் தொல்லை காமன் தொல்லை தாங்கவில்லை மாமா தொட்டுப் பாரு குத்தமில்ல..  
  • உங்கள் அனுபவத்தையும் ஒருக்கால் அறிய ஆவல் மேலிடுகிறது சார். 🤣
  • ந‌ன்றி ச‌கோத‌ரா / உங்க‌ளிட‌மும் இருந்து நிறைய‌ ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ளை அன் நாளில் க‌ற்று கொண்டேன் , ஒம் எம் போராட்ட‌ம் 2008க‌ட‌சியில் இருந்து 2009மே 18வ‌ர‌ பெரும் க‌வ‌லையை குடுத்த‌து , ம‌ன‌ உளைச்ச‌ல் ம‌ற்றும் தாங்க‌ முடியாத‌ வேத‌னையை குடுத்த‌து /
  • பி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் பி.வி. சிந்து. "இந்த பதக்கத்தை இன்று பிறந்தநாள் கொண்டாடும் எனது அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்" என பதக்கம் வென்றபின் சிந்து தெரிவித்தார். இதன் மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் பி.வி. சிந்து. 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முன்னிலை ஆட்டக்காரரும் ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலின் மெரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதியில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார். பி.வி.சிந்து : ஃபோர்ப்ஸ் பட்டியலில் அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனையாக உயர்ந்தது எப்படி? ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து அதே போன்று, கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், பேட்மிண்டன் பிரிவில் பங்கேற்ற சிந்து, வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டு போட்டியில், பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை ஒருவர் வெள்ளிப்பதக்கம் வென்றது அதுவே முதல்முறை. 2018 காமன்வெல்த் போட்டிகளிலும் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்றார் பி.வி.சிந்து கலப்பு இரட்டையர் பிரிவில் அணி தங்கம் வெல்ல உதவினார். குவியும் வாழ்த்துக்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சிந்துவின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் உத்வேகமளிக்கக்கூடியது என்று தெரிவித்துள்ளார். மேலும், சிந்துவின் இந்த வெற்றி பல தலைமுறை வீரர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளார். கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @narendramodi   இதைப் பற்றி 10.2ஆ பேர் பேசுகிறார்கள்       முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @narendramodi இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். புகைப்பட காப்புரிமை @sachin_rt@SACHIN_RT மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். https://www.bbc.com/tamil/sport-49467116