• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • கனடா நாடாளுமன்றில் இலங்கை குறித்த விடயம்: பிரதமர் ட்ரூடோ கருத்து! இலங்கையின் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்பாக கனடா நாடாளுமன்றில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பதிலளித்துள்ளார். இது தொடர்பாக, கென்சர்வேற்றிவ் உறுப்பினர் கார்னெற்  ஜீனஸ் (Garnett Genuis) சபையில் கேள்வியொன்றை முன்வைத்தார். “இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கடந்த ஜூன் மாதம் பொதுச் சபையானது ஏகமனதாகத் தீர்மானித்தது. ஆகவே நான் பிரதமரைக் கேட்க விரும்புகிறேன், குறித்த சர்வதேச விசாரணை தொடர்பாக இதுவரை ஏதாவது முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளதா? அமெரிக்காவினால் இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள தடையில் கனடாவும் பங்கெடுக்குமா? என்று கேட்டார்.       .   இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, “நாங்கள் மனித உரிமைகளை நிலைநாட்டத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றோம். அது இலங்கையாகவோ அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் வலியுறுத்துவோம். அதற்காகவே கடந்த 2019ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் தொடர்பான பிரேரணையினை கனடா கொண்டு வந்து, மனித உரிமைகள் தொடர்பான கடமைக்கு இணங்கியது. நாங்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகளை கடுமையாக எதிர்க்கிறோம். இது இறையாண்மையின் அழிவுக்கு உதவுகிறது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் நாங்கள் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/கனடா-நாடாளுமன்றில்-இலங்க/  
    • இந்தியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கைப் பிரதமர்     by : Dhackshala ஜப்பானில் கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலிலிருந்த இரு இலங்கையர்ளையும் வெளியேற்றியதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு, ஜப்பான் யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த இலங்கை உட்பட ஏனைய ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலமாக இன்று (வியாழக்கிழமை) காலை டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இடம்பெறும் வைத்திய பரிசோதனைகளின் பின்னர், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காவிட்டால், அவர்கள் இருவரும் 14 நாட்களின் பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து நன்றி தெரிவித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், ‘இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த இரண்டு இலங்கையர்களும் டோக்கியோவிலிருந்து வெளியேறி பாதுகாப்பாக டெல்லிக்கு வந்துள்ளதாக அறிவித்தார். இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான எயார் இந்தியாவின் மூலம் அவர்களை அழைத்து வந்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்’ என அந்த அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/இந்தியப்-பிரதமருக்கு-நன்/
    • ஐ.நா. பிரேரணையில் இருந்து இலங்கை விலகியதற்கு இராமதாஸ் கடும் கண்டனம்!     by : Krushnamoorthy Dushanthini போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா. பிரேரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகியுள்ளமை தொடர்பாக பா.ம.க நிறுவனர் இராமதாஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் இடம்பெற்ற போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த பன்னாட்டு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அறிவித்திருக்கிறது. போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கதாகும். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன,  இலங்கை, போருக்குப் பிறகு அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்த ராஜபக்ஷ  தலைமையிலான அரசாங்கம் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார். ஆனால் ஈழப் போர் முடிந்து 11 ஆண்டுகள் ஆகியும் ஈழத்தில் தமிழர்கள் அச்சமின்றி வாழும் நிலை ஏற்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மையாகும். இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ள பல புள்ளிவிவரங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதி செய்கின்றன. ஈழப்போர் முடிந்து இரு ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தும் கூட இன்னும் ஈழத்தமிழர்கள் முழுமையாக அவர்கள் முன்பு வாழ்ந்த பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. ஈழத் தமிழர்களின் நிலங்கள் அவர்களிடம் முழுமையாக திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவத்தினர்  இன்று வரை வெளியேற்றப்படவில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்களை தினேஷ் குணவர்தன ஒப்புக்கொண்டுள்ளார். ஈழப்போர் முடிவடைந்து 11 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவர்களின் உறவினர்களுக்கும் இப்போதுள்ள ஒரே ஆறுதல் இலங்கை போர்க்குற்ற விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் உறுதியாக இருப்பதுதான்” எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஐ-நா-பிரேரணையில்-இருந்து-2/
    • இலங்கையின் PUBG மொபைல் போட்டித் தொடருக்கு மொபிடெல் அனுசரணை     இலங்கையில் Esportsஐ ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் முன்னணி இணைய இணைப்புச் சேவைகளை வழங்கும் மொபிடெல், Gamer.LK உடன் இணைந்து இலங்கையின் மாபெரும் மொபைல் லீச் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் பிரபல்யம் பெற்ற PUBG மொபைல் விளையாட்டுப் போட்டித் தொடருக்கு இவ்வாறு மொபிடெல் அனுசரணை வழங்குகின்றது.   இலங்கைக்கு இந்தப் போட்டியின் விறுவிறுப்பைக் கொண்டு வரும் வகையில், மொபிடெல் Esports பிரீமியர் லீக் போட்டித் தொடரில், நாட்டின் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் தலா ஒரு அணி வீதம் பங்கேற்கும். போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் 2020 பெப்ரவரி 8 ஆம் திகதி முதல் இடம்பெற்றன. மாபெரும் இறுதிப் போட்டி பெப்ரவரி 22ஆம் திகதி இரத்மலானை, ஸ்டெய்ன் ஸ்டூடியோ அரங்கில் இடம்பெற்றது. இதில் 9 அணிகளான ஈஸ்டர்ன் கிளாடியேட்டர்ஸ், கந்துரட்ட கிங்ஸ், நோதர்ன் ரேஞ்ஜர்ஸ், ரஜரட்ட ஜயன்ட்ஸ், சப்ரகமுவ நைட்ஸ், சதர்ன் ஷார்க்ஸ், ஊவா பென்டிட்ஸ், வயம்ப ரெய்டர்ஸ் மற்றும் வெஸ்டர்ன் வொரியர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் பரிசுக்காக போட்டியிட்டன.  இந்த மாபெரும் Esports போட்டித்தொடரின் பரிசுத் தொகையாக ரூ. 1,000,000 வழங்கப்பட்டது. தற்போது இந்தப் போட்டியில் பங்கேற்க 300க்கும் அதிகமான அணிகள் முன்வந்திருந்தன. இலங்கையின் Esportsஐ பொறுத்தமட்டில், ஒரு போட்டித்தொடரில் பங்கேற்ற ஆகக்கூடிய அணிகளாக இது அமைந்துள்ளது. மொபிடெலின் மேம்படுத்தப்பட்ட 4G இணைப்புத்திறன் ஊடாக வலுவூட்டப்பட்டுள்ளதுடன், Facebook, YouTube, Twitch, Mixer ஊடாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இதை கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இலங்கையில் Esports ஐ ஊக்குவிப்பது மற்றும் மெருகேற்றுவதில் Gamer.LK முன்னிலையில் திகழ்வதுடன், பெருமளவு ரசிகர்களை கவர்ந்திருந்த இலங்கையின் மாபெரும் Esports நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தது. தேசிய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Esports தெற்காசிய கோப்பை போன்ற சர்வதேச Esports நிகழ்வுகளையும் Gamer.LK ஏற்பாடு செய்துள்ளது.    http://www.tamilmirror.lk/வணிகம்/இலங்கையின்-PUBG-மொபைல்-போட்டித்-தொடருக்கு-மொபிடெல்-அனுசரணை/47-246100
    • அமெரிக்கா உருவாக்கும் இலங்கையின் அடுத்த ஹீரோ       -விரான்ஸ்கி   ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட நாளிலிருந்து, நாட்டில் அதிரடி அறிவிப்புகளை விடுத்துக்கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவின் நடவடிக்கைகளால், பலரும் அதிர்ச்சியடைந்து இருந்தார்கள். நாட்டின் நிர்வாகத்தைச் சீர்தூக்கி வைப்பதற்கும் களைகளைப் பிடுங்கி எறிவதற்கும், உரியவர் வந்துவிட்டார் என்று உச்சிமோந்து கொண்டார்கள். அறிவிப்புகளைத் தாண்டி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, களத்தில் அதிரடி விஜயங்களை மேற்கொண்டு, அரச நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, அவர்களது பணிதொடர்பான கலக்கத்தைக் கொடுத்தார். முதலில், மோட்டார்ப் பதிவுத் திணைக்களத்துக்கு விஜயம் செய்தது முதல், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு விஜயம் செய்தது வரை, மக்கள் சேவை தொடர்பான தனது கரிசனையை, வித்தியாசமான முறையில் வெளிப்படுத்திக் கொண்டார். அவருக்கு வாக்களித்த தென்னிலங்கைச் சிங்கள மக்கள், கோட்டாபயவின் இந்த நடவடிக்கைகள் குறித்து மனம் குளிர்ந்தார்கள். நாட்டை முற்றுமுழுதாக ‘சுத்தம்’ செய்வதற்கு, சரியானவரைத்தான் தெரிவு செய்திருக்கிறோம் என்று திருப்திபட்டுக் கொண்டார்கள்.  மக்களுக்கான சேவைகள் தொடர்பில், தான் புதிய அணுகுமுறையைக் காண்பிப்பதாக வெளிக்காட்டிக் கொண்ட அதேவேளை, உயர் பதவிகளுக்கு, முன்னாள் படைத்துறையினரை நியமிக்கத் தொடங்கினார். நடந்து முடிந்த இலங்கையின் சுதந்திரதின நிகழ்வில், தனது இராணுவ இலச்சினைகளை உடையில் அணிந்தபடியே படத்துக்கு போஸ் கொடுத்திருந்தார். கோட்டாபய ராஜபக்‌ஷ, முன்னர் இராணுவத்தில் பணியாற்றியவர் என்ற போதிலும், மக்களாட்சியுடைய நாடொன்றுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் என்ற வகையில், தனது இராணுவ அடையாளங்களை இவ்வாறு காண்பிப்பது சரியா, தவறா என்பது பற்றியெல்லாம் அவர் சிந்திக்கவில்லை.  இன்னொரு வகையில் பார்க்கப்போனால், ‘இலங்கையை இனி இராணுவ ஒழுங்கின் கீழான ஒரு தேசமான வைத்திருக்கப் போகிறேன்’ என்ற செய்தியை, மறைமுகமாகக் கூறுவதற்குக்கூட அவர் அவ்வாறு அந்த இலச்சினைகளை அணிந்திருக்கலாம். எது எப்படியோ, மக்கள் சேவையை உறுதிப்படுத்தும் தனது அணுகுமுறைக்குச் சமாந்தரமாக, இராணுவ அணுகுமுறையை வேறு தளங்களில் வலுப்படுத்திக் கொண்டு வந்தார். இவ்வாறு, கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்து பதவியேற்ற நாள் முதல், உள்நாட்டுக்குள் நட்சத்திர அந்தஸ்தைக் கட்டியெழுப்பிக்கொண்டு வந்த கோட்டாபய பீடத்தை, முதல் தடவையாக சர்வதேசச் சமூகம் தற்போது சந்திக்கு இழுத்து வந்திருக்கிறது.  அதாவது, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அமெரிக்காவுக்கு விசா வழங்காததன் மூலம், இலங்கைத் தரப்பைச் சீண்டியதை அடுத்து, ஜெனீவா தீர்மானத்தில் இணை அனுசரணையாளராக அங்கம் வகித்த பொறுப்பிலிருந்து இலங்கை விலகிக்கொண்டுள்ளது. இதன்மூலம், ஆட்சிக்கு வந்துள்ள கோட்டாபய அரசாங்கம், முதல் தடவையாக,  அதுவும் மிகவும் சீரியஸாக, சர்வதேச சமூகத்துடன் முரண்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர், இந்தியாவுக்குப் பயணம் செய்த கோட்டாபயவிடம், இந்தியப் பிரதமர் மோடி, தமிழர்கள் நல்வாழ்வு குறித்த விடயத்தைப் பேசியிருந்தார்.  கோட்டாபயவின் இந்த விஜயத்தின் போது, இந்தியத் தரப்பு எந்தவிதமான கேள்வியை, அழுத்தத்தைக் கொடுக்கப்போகிறது என்று தாம் அவதானித்துக் கொண்டிருப்பதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் அப்போது தெரிவித்திருந்தார்கள்.  கோட்டாபயவுடனான சந்திப்பின்போது, அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய மோடி, இது விடயத்தில், இலங்கை அரசாங்கம் துரிதமாகச் செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.  ஆனால், சந்திப்பு முடிந்த பின்னர், இந்தியாவில் வைத்தே அதனை நிராகரித்த கோட்டாபய, ‘தி இந்து’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின்போது, “பெரும்பான்மைச் சிங்கள மக்களின் ஆணையின் கீழ் ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அரசாங்கம், அவர்களது விருப்பத்துக்கு மாறாக எந்த விடயத்தையும் செய்யாது” என்றும் “தீர்வுப் பொதி என்று எதையும் தமிழர்களுக்கு வழங்குவது குறித்து தமக்கு உடன்பாடில்லை, அவர்களை நாட்டின் சம பிரஜைகளாக ஏற்றுக்கொள்வதும் அவர்களது பிரதேச அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும்தான் தங்களது அரசாங்கத்தின் முன்னுரிமை” என்றும் கூறியிருந்தார். “தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கி, அவர்களது பிரதேசங்களின் முன்னேற்றங்களை அழித்து ஒழித்ததும்  ஆட்சிக்கு வந்துபோன இலங்கை அரசாங்கங்கள்தானே, அதனை மீண்டும் அவர்களுக்குக் கொடுப்பதில் என்ன புதுமை இருக்கிறது? அது உங்களது கடமையல்லவா, முப்பது ஆண்டுகளாக உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அந்த மக்களின் குரலுக்கு என்ன பதில்?” என்று ‘த இந்து’ பத்திரிகையாளர் பதில் கேள்வியை கேட்கவுமில்லை; வசதியாக அதற்கான பதிலை கோட்டாபய வழங்கவுமில்லை. ஆனால் இந்தச் செவ்வியின் மூலம், இந்திய ஆட்சித்தரப்பு தன்னிடம் முன்வைத்த கோரிக்கையை, அந்த நாட்டிலேயே வைத்து நிராகரித்துவிட்டு வந்தார். இந்தப் பின்னணியில்தான், தற்போது ஷவேந்திர சில்வா விவகாரம் எழுந்துள்ளது. ஷவேந்திர சில்வா விவகாரம் என்பது, வல்லரசுகளுக்கு இடையில் வாலாட்டுவதற்கு முயற்சிக்கும் சிறிலங்காவுக்கு எதிராக பிரம்பெடுத்திருக்கும் ஒரு நடவடிக்கையாகவே தெரிகிறது. இதன் பின்னணியில் இடம்பெறும் திரைமறைவு நாடகங்கள், பலருக்கு தெரியவராதவையாக இருப்பதற்குத்தான் அதிக சாத்தியங்கள் உண்டு. ஆனால், அமெரிக்கா போட்ட விசா தடைக்கு, தாங்கள்தான் காரணம் என்றும் தாங்கள் மேற்கொண்ட பிரசாரத்துக்குக் கிடைத்த வெற்றி என்றும், சில புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள், நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ‘டான்ஸ்’ ஆடுவது நகைச்சுவைக்குரியது.  தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை, இப்போதிருக்கும் நிலையில், அதனைப் பேசக்கூடிய ஒரே தரப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே ஆகும். புலம்பெயர்ந்த அமைப்புகளை, எதாவது ஒரு விடயத்தில் வெளிநாடுகள் அழைத்துப் பேசுகின்றன அல்லது கரிசனையாக அவர்கள் கேட்டதற்கிணங்க ஓர் அறிக்கையை விடுகிறார்கள் என்றால், அது அவர்களது உள்நாட்டு அரசியல் இலாபத்துக்கானதே தவிர, இலங்கையிலுள்ள தமிழர் உரிமை குறித்துப் பேசுவதற்கு, அவர்கள் காண்பித்த அவசரங்கள், தேவைகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. இனிமேல், அதற்குரிய தேவை எதுவுமே வெளிநாடுகளின் பக்கத்தில் இல்லை. ஆனால், தற்போது எழுந்துள்ள இந்த ஷவேந்திர சில்வா விகாரத்தின் விளைவாக உருவாகக்கூடியதொரு புதிய சூழ்நிலையை, இங்கு வலுதெளிவாக விளங்கிக் கொள்ளலாம். அதாவது, ஜெனீவா தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலகிக்கொள்வது, சர்வதேசத்தை பகைத்துக்கொள்வது என்பதற்கு அப்பால், ஷவேந்திர சில்வாவை இந்த விடயத்தில் அமெரிக்கா ஹீரோவாக்கியிருக்கிறது. அதுவும், சிங்கள மக்கள் மத்தியில் மிக்பெரிய ஹீரோவாக்கியிருக்கிறது. அவருக்கான விம்பம், வரும் காலங்களில் இன்னும் பெரிதாகப்போகிறது. தமது நாட்டின் விடிவுக்காகப் போராடிய தளபதி ஒருவரை, அந்தக் காரணத்துக்காக வெளிநாடு ஒன்று தடை செய்திருக்கிறது என்ற அரசியல் சித்திரம், தற்போது அவர் மீது அழகாக விழுந்திருக்கிறது. ஆக, எதிர்காலத்தில் படைத்துறைப் பதிவிக்காலம் முடியும்போது, அவருக்கான அரசியல் எதிர்காலம், தற்போது கோட்டாபயவின் ஆட்சிக் காலத்திலேயே உறுதி செய்யப்பட்டுவிட்டது என்ற எடுகோளுக்கு வரலாம். இவை அனைத்தும் இப்படியிருக்க, இலங்கை அரசாங்கம்,  இனி வரப்போகும் சர்வதேச சூழ்நிலையை எவ்வாறு கையாளப்போகிறது என்பதுதான் புதிய கேள்வியாக எழுந்திருக்கிறது. உண்மையில், தற்போது எழுந்துள்ள சூழல், கோட்டாபய அரசாங்கத்துக்கு, தென்னிலங்கையில் இன்னும் இன்னும் ஆதரவுத் தளத்தை வலுப்படுத்தியிருக்கிறது. இன்னொரு வகையில், இந்த ஆதரவானது, வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுக்குமளவுக்கு உதவி செய்யப்போகிறது என்றும் குறிப்பிடலாம்.  ஆனால், உள்நாட்டு ஆதரவை வைத்துக்கொண்டு சர்வதேசத்தை எவ்வாறு சமாளிக்கப்போகிறது? 2015இல் மஹிந்த அரசாங்கம் கவிழ்ந்ததற்கு முக்கியக“ காரணமே, இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் முரண்பட்டுக் கொண்டதுதான் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம்.  அப்படியிருக்கும் போது, இனியொரு ராஜபக்‌ஷ இராச்சியத்தைக் கட்டியெழுப்பும் கனவோடும் பலத்த போராட்டத்தோடும் ஆட்சியைப் பிடித்த மஹிந்த - கோட்டா - பஸில் தரப்பு, திரும்பவும் அதே தவறை விடுமா? மீண்டும் சீனாவை நம்பிக்கொண்டு மேற்குலகக் கடலில் காலை விடுவதற்கு ராஜபக்‌ஷர்களின் தரப்பு தயாரா? http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அமெரிக்கா-உருவாக்கும்-இலங்கையின்-அடுத்த-ஹீரோ/91-246120