Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

ராஜ்ய சபா சீட்டு யாருக்கு மகனுக்கா..? இல்லை மருமகனுக்கா..?

Recommended Posts

ராஜ்யசபா சீட் யாருக்கு...? மகனுக்கா..? மருமகனுக்கா? மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி..!

15052019blobid1557901418603.jpg

மக்களைவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாக உள்ள நிலையில், ஜூலை மாதம் 6 ராஜ்யசபா இடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில் யாருக்கு அதிர்ஷ்டம் என்ற பேச்சுக்கள் இப்போதே எழத் தொடங்கி விட்டது. திமுகவில் கனிமொழியின் இடத்துக்கு மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியா..? மருமகன் சபரீசனா.? என்ற போட்டா போட்டி இப்போதே தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த, டாக்டர் மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல்; திமுகவில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா ஆகிய 6 பேரின் ராஜ்யசபா எம்.பி பதவிக்காலம் வரும் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இந்த 6 இடங்களுக்கு யார் ? யார் ? தேர்வாகப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழத் தொடங்கி விட்டது.

இந்த 6 இடங்களுக்கு தற்போதுள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் அதிமுகவுக்கு மூன்று எம்.பிக்களும், திமுகவுக்கு, இரண்டு எம்.பிக்களும் உறுதியாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளின் முடிவுகளைப் பொறுத்து மீதமுள்ள ஒரு இடம் யாருக்கு என்பது தெரிந்துவிடும்.

ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது கூட்டணியில் திமுகவுக்கு 88, காங்கிசுக்கு 8, முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ என மொத்தம் 97 பேர் உள்ளனர். இதனால் இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 5-ல் திமுக வென்றாலே மூன்றாவது ராஜ்யசபா எம்.பி. சீட்டும் உறுதியாகிவிடும்

மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என்று ஒப்பந்தமாகியுள்ளது. அதே போல் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு சீட் தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக, திமுக, மதிமுக, பாமகவில் புதிதாக ராஜ்யசபா எம்பியாக தேர்வாகப் போவது யார் என்று இப்போதே கூட்டல் கழித்தல் கணக்குப் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

இந்தக் கணக்கில் பெரும்பாலும் வாரிசுகளுக்கே ராஜ்யசபா சீட் சென்றடையும் என்று தெரிகிறது. பாமகவில் தருமபுரியில் அன்புமணி ஜெயித்து விட்டால் அவருடைய மனைவி சௌமியா எம்பி ஆக்கப்படுவாராம். தோற்றுவிட்டால் அன்புமணி தான் ராஜ்ய சபா எம்.பி. என்று கூறப்படுகிறது. மதிமுகவில் வைகோ தான் எம்பி ஆவார் என்று கூறப்பட்டாலும், ஒருவேளை அவருடைய மகன் வையாபுரியை எம்பியாக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லையாம்.

அதிமுகவில் பாமகவுக்கு ஒரு சீட் போக மீதமுள்ள 2 எம்பிக்கள் சீட்டுக்கு கடும் போட்டி என்று கூறப்படுகிறது. இதில் மைத்ரேயன் தனது இடத்தை தக்கவைக்கப் போராடுகிறாராம். மற்றொரு சீட்டுக்கு ஏகப்பட்ட அடிதடி உள்ள நிலையில், கரூரில் தோற்றுவிட்டால் எனக்குத் தான் அந்த சீட் என்று தம்பித்துரை துண்டு போட்டு வைத்துள்ளாராம்.

திமுகவில் மதிமுகவுக்குப் போக இரண்டில், கனிமொழி இடத்துக்கு மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் ஒருவருக்கு நிச்சயம் என்கிறார்கள். இதில் உதயநிதிக்கு கொடுக்க வேண்டும் என்பது ஸ்டாலின் குடும்பத்து கிச்சன் கேபினட் கெடுபிடி காட்டுகிறதாம். மற்றொரு தரப்பிலோ, டெல்லியில் திமுகவுக்காக திரைமறைவு வேலைகளைப் பார்க்க ஸ்டாலின் மருமகன் சபரீசன் தான் லாயக்கானவர் என்று உசுப்பேற்ற, யாரை தேர்வு செய்வது என்ற நெருக்கடியில் உள்ளாராம் மு.க.ஸ்டாலின் .

https://tamil.thesubeditor.com/news/tamilnadu/13894-mk-stalins-son-or-son-in-law-who-get-mp-seat-in-dmk.html

டிஸ்கி :

ரெட்டை கிளிகள் ..

15052019blobid1557901218780.jpg

 

Share this post


Link to post
Share on other sites

பேசாமல் மனைவி துர்காவுக்கு குடுத்திடலாம்......!  😄

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு     
  • முள்ளிவாய்க்கால் பரணி!   கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென ஒருவரும் கொல்லப்படவில்லையென யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனரென பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென இறுதியில் சொல்லினர் யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென எமை மீட்கும் யுத்தமென்றனர் மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா? மனிதாபிமான யுத்தமென்றனர் பீரங்கியின் சுடுகுழலில் மனிதாபிமானமுண்டா? நிகழ்த்திய எல்லாவற்றையும் மறுத்து மேலும் அதை தொடர்ந்து எல்லாவற்றையும் மறப்போமென்றனர் எதையும் பகிராமல் ஒருதாய் பிள்ளையென்றனர் தாயற்ற என் மகளுக்கு இதையெல்லாம் எப்படி விளக்குவேன்? பழி வாங்கும் ஜனங்களென்றனர் ஒருபோது மன்னிக்கத் தெரியாத ஜனங்களென்றனர் இன்னொருபோது திரும்பாத இழப்பை வெற்றி என்போரே! என் மகளைக் குறித்து நான் கண்ணீர் மல்குதல்தான் பழிவாங்குதலா? 02 எனதாசை மகளே! இம்மாபெரும் காயத்தை எப்படி ஆற்றுவோம்? இம் மாபெரும் இழப்பை எப்படி நிரப்புவோம்? காயங்களை மூடும் இழப்புக்களை மறைக்கும் தந்திரம் மிக்க வார்த்தை என்னிடமில்லை மீளப் பெறமுடியாத கால்களை மறந்து கால்களை பறித்த வெற்றியை கொண்டாடச் சொல்லினர் அவர்களோ போருக்கு காரணம் சொல்லினர் நாமோ அழிக்கப்பட்டதின் நியாயத்தை வேண்டினோம் மகளே! போரிடம் என்ன நியாயம் இருக்கும்? அது நம் குழந்தைகளை கருவிலே நசித்தது அப்பாவிகளின்மீது குண்டுகளைப் பொழிந்தது நிலத்துடன் லட்சம் மனிதர்களை தின்று செரித்தது எலும்புக்கூடுகளினிடையே நிணங்களினிடையே குருதியினிடையே கொடி உலுப்பி மகிழ்ந்தது அவர்கள் சொல்லுவதைப் போல அந்தக் கணங்களை மறந்துவிட முடியுமோ? அவர்கள் சொல்வதைப்போல அந்தக் கணங்களை மன்னிக்க முடியுமோ? திட்டமிட்டு செய்யப்பட்டவைகள் மறக்கக்கூடியவை அல்லவே வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டவைகள் மனிக்கக்கூடியவை அல்லவே 03 ஆட்களற்ற வீடுகளைக் குறித்தும் வீடுகளற்ற நிலங்களைக் குறித்தும் புகைப்படங்களில் இருக்கும் இல்லாதவர்களைக் குறித்தும் பெயர் பட்டியல்களில் மாத்திரம் இருப்பவர்களைக் குறித்தும் என் அன்பு மகளே என்னிடம் கேட்காதே? இரத்தமும் சதைகளும் படிந்த பழைய பத்திரிகைகளை நீ விரித்துப் பார்க்காதபடி மறைவாகவே வைத்துள்ளேன் 04 யுத்த வெற்றியின் பாடலில் மயங்கியபடி எல்லாவற்றையுமே மறக்கும்படி சொல்லினர் என் பிஞ்சுக் குழந்தை கால்களற்று நிற்கிறாள் என் கால்களுக்கு என்ன ஆனது? ஏன் என் கால்களை எறிகணைகள் தின்றனவென அவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்? என் தாயிற்கும் என் ஐந்து சகோதரர்களுக்கும் என்ன ஆகிற்று? நம் பதுங்கு குழியில் யார் குண்டு வீசினரென அவள் கேட்கையில் நான் எதைச் சொல்வேன்? மாபெரும் இனக்கொலையை ருசிக்கும் பற்கள் நிரம்பிய கொடியை என் மகளுக்கு பரிசளிக்கும் இந்த நாட்களில் தொடங்குமொரு காலம் எப்படியானதாய் இருக்கும்? மேலுமொரு காயம் வேண்டாம் மகளே மேலும் பலர் இல்லாதுபோக வேண்டாம் மகளே 05 நாம் கேட்பதெல்லாம் உயிருக்கு உயிரல்ல கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் உரிமையை மாண்டுபோனவர்களின் கல்லறைகளை அழுது கண்ணீர் விடும் விடுதலையை நாம் கேட்பதெல்லாம் குருதிக்குக் குருதியல்ல அழிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நாம் கேட்பதெல்லாம் பழிக்குப் பழியல்ல இன்னொரு இனக்கொலையற்ற அமைதிநிலத்தை நாம் கேட்பதெல்லாம் எவருடைய உரிமையையுமல்ல எம்முடைய உரிமையை எனதருமை மகளே! நாம் கேட்பதெல்லாம் நீதியின் உண்மையை உண்மையின் நீதியை உண்மைகளை நம் சடலங்ளைப் போலப் புதைத்து இடுகாடுகளாக்கப்பட்ட நம் மண்மீது எளிய நம் சனங்களின் குருதியினால் பொய்யை புனைந்தெழுதிய அவர்களின் வீர வரலாறு அழிக்கப்பட்டவர்களை உறங்கவிடாது ஏனெனில் அவர்களின் போர் சூழ்ச்சிகளினால் வென்றது ஏனெனில் அவர்களின் போர் அநீதிகளால் வென்றது ஏனெனில் அவர்களின் போர் விதிகளை மீறியது 05 எனதருமை மகளே! நம்முடைய நிலத்தை அபகரிக்கவும் தம்முடைய அதிகாரத்தை பரப்புவும் நம்முடைய அரசை கலைக்கவும் தம்முடைய வேர்களைப் பதிக்கவும் நம்மை பூண்டோடு துடைக்கவும் உனது கால்களை பிடுங்கி உன் தாயையும் ஐந்து சகோதரர்களையும் கொன்றனரென அறிகையில் இந்த உலகத்தை குறித்து நீ என்ன நினைப்பாய்? தீபச்செல்வன் 2016 ஓவியம்: றஷ்மி பிரசுரம்: குளோபல் தமிழ் செய்திகள்    
  • - தமிழர்கள் யாருக்கு வாக்களித்தாலும் ஒரு சிங்களவர் சனாதிபதியாக இருப்பார்  - ஒரு இனவழிப்பின் கூட, உலகம் தமிழர்களுக்கு ஒரு தீர்வை தரவில்லை.  - தமிழர்கள் ஒரு பொருட்டு அல்ல எனவே உலகம் பார்க்கின்றது ?  - ஏன் மோடி அரசு தடையை நீடித்தது ?    
  • ம்க்கும்.... நான், இதற்கு பதில் சொல்ல மாட்டேன்.  எனக்கு...   எச்சரிக்கை புள்ளிகள் தர,  "பிளான்"  பண்ணுறியள்  போலை. கிடக்கு.   😄