Jump to content

வாள்கள், கத்திகள், இரும்புக் கம்பிகளுடன் வந்தவர்கள் துரத்தித் துரத்தித் தாக்கினார்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாள்கள், கத்திகள், இரும்புக் கம்பிகளுடன் வந்தவர்கள் துரத்தித் துரத்தித் தாக்கினார்கள்

 

(ஹெட்­டி­பொ­ல­விலி­ருந்து எம்.எப்.எம்.பஸீர்)

வன்­மு­றை­யா­ளர்கள் வாள்கள், கூரிய கத்­திகள், இரும்புக்கம்பி­க­ளுடன்  எங்­களை துரத்தி துரத்தி தாக்­கினர்.  அந்த வன்­முறைக் குழு­வி­னரில் இளை­ஞர்­களும் பெளத்த பிக்­கு­களும் கூட இருந்­தனர். எம்மைக் காப்­பாற்­று­மாறு பொலி­ஸா­ருக்கு நாம் தொலை­பேசி அழைப்­பெ­டுத்­த­போதும் பல சந்­தர்ப்­பங்­களில் அவர்கள் அழைப்­புக்கு பதி­ல­ளிக்­கவே இல்லை. பொலிசார் வன்­மு­றை­யா­ளர்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வதை விடுத்து எம்மை வீடு­க­ளுக்குள் முடக்­கினர் என  வடமேல் மாகா­ணத்தின் முஸ்லிம் கிரா­மங்­களில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் கேச­ரிக்கு தெரி­வித்­த பாதிக்­கப்­பட்ட பலரும்  கண்ணீர் மல்கி கூறினர். 

minuvangoda1.jpg

அதன் பின்­ன­ரே வன்­மு­றை­யா­ளர்கள் எமது சொத்­துக்­களை சூறை­யாடி  தீ வைத்து கொளுத்­தினர்.  இந்த வன்­முறைக் குழுவில் எம்­முடன் நெருக்­க­மாக அன்­றாட நட­வ­டிக்­கை­களில் பழ­கிய பலரும் இருந்­த­மைதான் வேத­னை­ய­ளிக்­கி­றது என்றும் அவர்கள் குறிப்­பிட்­டனர்.  

வன்­மு­றை­களால்  அதி­க­மாக பாதிக்­கப்­பட்ட இடங்­களில் உள்­ள­டங்கும் ஹெட்­டி­பொல நகரை மையப்­ப­டுத்­திய  கொட்­டம்­­பிட்­டிய மற்றும் மடிகே அனுக்­கன ஆகிய முஸ்லிம் கிரா­மங்­களின் தற்­போ­தைய நிலைமை தொடர்பில் நேற்­று­நே­ர­டி­யாக சென்று பார்த்தோம். இதன்­போதே அப்­பி­ர­தே­சத்தில் பாதிக்­கப்பட்ட மக்கள் கேச­ரிக்கு  இவற்றை தெரி­வித்­தனர்.

மடிகே அனுக்­கன பகு­தியில்  இரு ஜும் ஆ பள்­ளி­வா­சல்கள் உட்­பட 3 பள்­ளி­வா­சல்கள்,  90 வீடுகள்,  3 ஹோட்­டல்கள்,  ஒரு மொத்த விற்­பனை வர்த்­தக நிலையம், 6 சிறு வர்த்­தக நிலை­யங்கள் வன்­மு­றை­யா­ளர்­களால் சேத­ப்­படுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அத­னை­விட பல வாக­னங்கள் தீயிட்டும்  தாக்­கியும் சேத­ப்­படுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் மஸ்­ஜிதுல் அப்ரார் ஜும் ஆ பள்­ளி­வா­சலின் தலைவர் மெள­லவி எம்.எச்.எம். றிஸ்வி தெரி­வித்தார்.

hettipola2.jpg

அத்­துடன் கொட்­டம்­ப­பிட்­டிய பகு­தியில் இரு  ஜும்மா பள்­ளி­வா­சல்­களும்  20 வரு­ட­மாக இயங்­கி­வரும் ஜமா­லியா அரபுக் கல்­லூ­ரியும் வன்­மு­றை­யா­ளர்­க­ளினால் சேத­ப்­படுத்­தப்­பட்­டுள்­ளன. அத்­துடன் அப்­ப­கு­தியில் சுமார் 50 இற்கும் அதி­க­மான வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

இதனால் அப்­ப­கு­தி­களில் வாழும் மக்கள் இன்னும் அச்­சத்­து­ட­னேயே நாட்­களை கடத்­து­வதை அவ­தா­னிக்க முடிந்­தது. குறிப்­பாக சிறு­வர்கள், பெண்கள் கடும் மன உளைச்­ச­லுக்கு ஆளா­கி­யுள்­ள­துடன் சில இடங்­களில் இந்த தாக்­கு­தல்­களின் அதிர்ச்­சியில் இருந்து மீளாத பல­ரையும்   சந்­தித்தோம். 

1000 பேரளவில் வந்­தார்­கள்

இதன்­போது ஹெட்­டி­பொல, கொட்­டம்­ப­பிட்­டி­ய­வி­லுள்ள பண்­டு­வஸ்­நு­வர மோட்டர்ஸ் மற்றும் ஒயில் மார்ட் வர்த்­தக நிறு­வ­னத்தின் உரி­மை­யா­ளர் எம்.சி.அப்துல் பாரி. வன்­மு­றை­களின்  கொடூ­ரத்­தையும் தமது சொத்­து­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட சேதங்கள் பற்­றியும் இவ்­வாறு கூறினார்.

'' எமது கடை­களும் வீடும் தாக்கி எரிக்­கப்­பட்­டன. பொலிசார் எம்மை விரட்­டி­விட்டு வன்­முறைக் கும்பல் தாக்­குதல் நடத்த வழி­யேற்­ப­டுத்திக் கொடுத்­தார்கள். ஊர­டங்குச் சட்டம் எங்­க­ளுக்­குத்தான் போடப்­பட்­டது. அவர்­க­ளுக்­கல்ல. சுமார் 1000 பேர­ளவில் வந்து தாக்­கி­னார்கள். எமது சொத்­துக்கள் தீப்­பற்றி எரிந்த போது அதனை பொலிசார் அணைக்­க­வு­மில்லை. எம்மை அணைக்க விட­வு­மில்லை. இன்று நாம் நடுத் தெருவில் நிற்­கிறோம். எனது வர்த்­தக நிலை­யத்தில் இருந்த 50 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான பொருட்கள் முற்­றாக எரிந்­து­விட்­டன. வீடும் சேத­ம­டைந்­துள்­ளது'' என்றார்.

hettipola3.jpg

hettipola1.jpg

ஹெட்­டி­பொ­லவில் உள்ள மஸ்­ஜிதுல் ஹுதா பள்­ளி­வா­சலும் இதே கும்­பலால் திங்கட்கிழமை மாலை தாக்­கப்­பட்­டுள்­ளது. '' சிலா­பத்தில் பேஸ்புக் பதி­வொன்­றினால் தொடங்­கிய பிரச்­சினை இன்று எமது பகு­திக்கு வந்­தி­ருக்­கி­றது. கடந்த 12 மணித்­தி­யா­லங்­களில் இந்தப் பகு­தியில் பாரிய அழி­வுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன'' என பள்­ளி­வா­சலின் நிர்­வா­கி­களில் ஒரு­வான மொஹமட் சலீம் தெரி­வித்தார். 

பெயர் சொல்­லி அழைத்­தார்கள்

இதே­வேளை  கொட்­டம்­பிட்­டி­யவில் வசிக்கும் முஹமட் ஜெளபர் எனும்  இரு கண்­க­ளி­னதும் பார்­வையை இழந்த கோழி­களை மொத்­த­மாக வாங்கி வந்து விற்­பனை செய்­கின்ற வியா­பாரி இந்த வன்­மு­றைகள் குறித்து பின்­வ­ரு­மாரு விளக்­கினார். .

'' நாம் இப்­படி ஒரு தாக்­கு­தலை கன­விலும் நினைக்­க­வில்லை. வன்­மு­றை­யா­ளர்கள் வீட்டின் உள்ளே வர­வில்லை. என்னை வெளியில் வரு­மாறு அழைத்­தார்கள். நான் போக­வில்லை. வந்­தி­ருந்தால் என்­னையும் தாக்­கி­யி­ருப்­பார்கள்.  கடந்த 20 வரு­டங்­க­ளாக  நான் இந்தத் தொழில் செய்து  குடும்­பத்தை நடத்தி வரு­கிறேன்.  எனக்கு 5 பிள்­ளைகள். பார்வை இல்லை என்­ப­தற்­காக யாரி­டமும் எதிர்­பார்க்­காது சுய­மாக உழைத்து வரு­கிறேன்.  எல்லாம் அல்­லாஹ்வின் ஏற்­பாடு. மீண்டும் அல்லாஹ் எனக்கு பொரு­ளா­தார வளத்தை இதை விட இரட்­டிப்­பாக தருவான் என்ற நம்­பிக்கை உண்டு. எனது வேன் மற்றும் லொறி என்­பன எரிக்­கப்­பட்­டுள்­ளன. வீடும் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது. இந்தத் தாக்­கு­தலில் எனக்கு அறி­மு­க­மா­ன­வர்­களும் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என நினைக்­கிறேன். ஏனெனில் ''ஜெளபர் வெளியே வா...'' என்று பெயர் சொல்­லித்தான் அழைத்­தார்கள் '' என கண்ணீர் மல்க  தெரி­வித்தார்.

ஒரு மணித்­தி­யாலமாக தாக்­கி­னர்

இதன்­போது அதே பகு­தியைச் சேர்ந்த மொஹம்மட் நளீம் என்­பவர்  தனக்கு நடந்­த­வற்றை விப­ரித்­த­துடன் அவ­ரது மனை­வியும் அது தொடர்பில் கேச­ரியிடம் விளக்­க­மளித்தார். பல நூறு சிங்­கள இளை­ஞர்­க­ளுக்கு தனது நிறு­வனம்  ஊடாக தொழில் வாய்ப்பு வழங்­கி­யுள்ள நளீம் குறிப்­பி­டு­கையில்,  

'' திங்கள் பிற்பகல் 2.30 மணி­யி­ருக்கும். நூற்றுக் கணக்­கான குண்­டர்கள் பஸ்­களில் வந்­தி­றங்­கி­னார்கள்.  நான் வீட்­டி­லி­ருந்து காரை வெளியில் கொண்டு போக முயன்றேன். காரைக் கொண்டு செல்ல வேண்டாம் என்­றார்கள். நான் காரை நிறுத்­தி­விட்டு வீட்­டுக்குள் சென்று விட்டேன். பின்னர் வீட்டின் முன்­புறம் வந்து வாக­னத்தை உடைத்­தார்கள். எமது வீட்டில் 6 முதல் 7 வாக­னங்கள் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தன. அவற்றில் 3 வாக­னங்­க­ளுக்கு தீ வைத்­தார்கள். மகனின் மோட்டார் சைக்­கிளும் தீக்­கி­ரை­யா­கி­விட்­டது. இதனால் ஒன்­றரைக் கோடி ரூபா இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. சுமார் 1 மணித்­தி­யாலம் இப் பகு­தியில் நின்று தாக்­கி­னார்கள். அவர்கள் சென்­ற­வுடன் வெளியே வந்து நீரைப் பாய்ச்சி தீயை அணைத்தோம். இல்­லா­விட்டால் எல்லா வாக­னங்­களும் எரிந்து நாச­மா­கி­யி­ருக்கும்.

hettipola4.jpg

எனது சமையல் நிலை­யத்தில் நூற்றுக் கணக்­கான சிங்­க­ள­வர்கள் வேலை செய்­கி­றார்கள். அவர்­களில் சிலரும் சேர்ந்து வந்­துதான் எமது இடத்தை தாக்­கி­யுள்­ளார்கள். என்னை வெளியில் வரு­மாறு அழைத்­தார்கள். நான் வந்­தி­ருந்தால் கொன்­றி­ருப்­பார்கள்  என்றார்.

உம்மா இது மையத்து வீடா என்று எனது மகள் கேட்­கிறாள்

சம்­ப­வத்­தின்­போது வீட்­டினுள் பிள்­ளை­க­ளுடன் ஒளிந்­தி­ருந்த நளீமின் மனை­வி­யான ஆசி­ரியை பாத்­திமா பர்வீன் தனது அனு­ப­வத்தை கேச­ரிக்கு விப­ரித்தார். 

"எமது வீட்டின் முன்­பாக ஒரு  மீன் தொட்டி உள்­ளது. அதனை ஒருவர் உடைக்க முயன்­ற­போது இன்­னொ­ருவர் '' மீன் தொட்­டியை உடைக்க வேண்டாம்... மீன்கள் பாவம்'' என்று சொன்னார். அதனால் மீன் தொட்டி தப்­பி­விட்­டது. எமது வீட்டைத் தாக்கும் சத்தம் கேட்­டதும் நாம் உயிரைக் காப்­பாற்றிக் கொள்ள ஒரு மூலையில் இருந்து எல்­லோரும் அழுதோம். பிள்­ளைகள் மிகவும் பயந்து போயுள்­ளார்கள். இச் சம்­ப­வத்தின் பிறகு சாப்­பி­டு­கி­றார்கள் இல்லை. எமது தூக்கம் தொலைந்­து­விட்­டது. பிள்­ளைகள் தூக்­கத்தில் வீறிட்டு அழு­கி­றார்கள். உம்மா இது மையத்து வீடா என்று எனது மகள் கேட்­கிறாள்.  ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தலை அறிந்து நாங்­களும் கவ­லைப்­பட்டோம். கண்ணீர் வடித்தோம். நாமும் அந்த தீவி­ர­வாத கூட்­டத்­திற்கு எதி­ரா­ன­வர்­கள்தான். அப்­பாவி மக்­க­ளான எங்­களை இவர்கள் ஏன் தாக்­கு­கி­றார்கள்? எனக் கேட்­கிறார்.

இதே­வேளை வன்­முறைக் கும்­பலின் தாக்­கு­தல்­களில்  தீயிட்டு கொழுத்­தப்­பட்ட ஒரே ஒரு அரபுக் கல்­லூ­ரி­யான ஜமா­லியா அரபுக் கல்­லூரி அதிபர் அஷ்ஷெய்க் நி ஃமதுல்லாஹ் (நூரி) இவ்­வாறு கூறினார்.

ஏப்ரல் 21 தாக்­கு­த­லுக்குப் பிறகு 23 ஆம் திகதி நாம் மத்­ர­ஸா­வுக்கு விடு­முறை கொடுத்து மாண­வர்­களை வீடு­க­ளுக்கு அனுப்­பி­விட்டோம். இதன் பின்னர் எமது கல்­லூ­ரியை 4 தட­வைகள் பொலி­சாரும் இரா­ணு­வத்­தி­னரும் வந்து சோத­னை­யிட்­டார்கள். இறு­தி­யாக 5ஆவது தடவை நூற்றுக் கணக்­கானோர் வந்து எமது கல்­லூ­ரியை சோத­னை­யிட்­டார்கள். இதன் பின்­னர்தான் வந்து எமது கல்­லூ­ரியைத் தாக்­கி­னார்கள். எமது கட்­டிடம் உடைந்­தமை  பற்றிக் கவ­லை­யில்லை. ஆனால் குர்­ஆன்­க­ளையும் புத்­த­கங்­க­ளையும் எரித்­து­விட்­டார்கள். இந்த மத்­ரஸா கடந்த 20 வரு­டங்­க­ளாக இப் பகு­தியில் இயங்கி வரு­கி­றது. இதற்கு உதவி செய்­து­வரும் இக்கிராம மக்கள் கூட இன்று இத்தாக்­கு­தலால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டு­விட்­டார்கள் என்றார்.

இந் நிலையில் அதிக சேதங்­களை சந்­தித்த மடிக்கே அனுக்­கன பகுதி சார்பில் அந்த ஊரின் ஜும் ஆ பள்­ளி­வா­ச­லான மஸ்­ஜிதுல் அப்ரார் பள்­ளி­வா­சலின் இமா­மாக கட­மை­யாற்றும் மெள­லவி மொஹம்மட் சப்வான் கேச­ரிக்கு விளக்­க­ம­ளித்தார். 

வாள்க­ளு­டன் துரத்­தி­னார்கள் 

'13 ஆம் திகதி பகல் ஹெட்­டி­பொ­லவில் தாக்­குதல் நடப்­ப­தாக எமக்கு தகவல் கிடைத்­தது. எனினும் நக­ரி­லி­ருந்து 4 கிலோ மீற்றர் உட்­பு­ற­மா­க­வுள்ள எமது கிரா­மத்­துக்கு தாக்க வர­மாட்­டார்கள் என்ற நம்­பிக்­கையில் இருந்தோம். ஆனால் எமது எதிர்­பார்ப்­புகள் தவி­டு­பொ­டி­யா­கின. 3.45 மணி­ய­ளவில் அதிக சத்­தத்­துடன் 300 பேர் கொண்ட பெருங் கூட்­டத்­தினர் லொறிகள் வேன்கள் மோட்டார் சைக்­கிள்­களில் எமது பள்­ளியை நோக்கி வந்­தார்கள். பள்­ளியைத் தாக்க வந்­த­வர்கள் எம்­மையும் வாளால் வெட்டத் துரத்­தி­னார்கள். நாங்கள் பின்­வ­ழியால் ஓடி உயிர் தப்­பினோம். காட்­டுக்குள் அரை மணி நேரம் ஒளிந்­தி­ருந்தோம். பெண்­க­ளு­டனும் குழந்­தை­க­ளு­டனும்  காடு­க­ளுக்குள் ஒளிந்­தி­ருந்தோம். அங்­கி­ருந்து எம்மைக் காப்­பாற்­று­மாறு பொலி­சா­ருக்கும் சி.ஐ.டி.யின­ருக்கும் தொலை­பே­சியில் அழைப்­பெ­டுத்தும் அவர்கள் பதி­ல­ளிக்­க­வில்லை. 

பின்னர் தாக்­கு­தல்­தா­ரிகள் அங்­கி­ருந்து விலகிச் செல்­கின்ற அதே நேரத்­தில்தான் பொலி­சாரும் வந்து சேர்ந்­தார்கள். பொலிஸ் பாது­காப்­பு­டனும் துணை­யு­ட­னும்தான் இவர்கள் தாக்­குதல் நடத்­தி­யி­ருக்­கி­றார்கள் என்றே நாம் சந்­தே­கிக்­கிறோம்.

தீயில் எரிந்து கொண்டிருந்த பள்ளிவாசலை அணைக்க முற்பட்டபோது அதற்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்தார்கள். எம்முடன் கடுமையாக  நடந்து கொண்டார்கள். 

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் எமது பள்ளிவாசலில் கூட அதனைக் கண்டிக்கும் நிகழ்வையும் இரங்கல் கூட்டத்தையும் நடத்தினோம். நாம் அந்த தீவிரவாத செயலை என்றும் கண்டிக்கிறோம். அதனுடன் எந்தவகையிலும் சம்பந்தப்படாத எம்மை இப்படித் தாக்கிவிட்டார்கள் என்பதை நினைக்கையில் வேதனையாகவுள்ளது என்றார்.

பெளத்த குருமார் இருந்தனர்

 இதன்போது கேசரியுடன் கருத்து பரிமாறிய அப்பள்ளிவாசலின் தலைவர் மெளலவி எம்.எச்.எம். றிஸ்வி, 

' வன்முறையாளர்களின் கூட்டத்தில் பெண்கள், பெளத்த குருமார் இருந்தனர். அவர்களின் கைகளில் கூரிய வாள்கள் , கத்திகள் , இரும்புக் கம்பிகள் இருந்தன.  நாம் நல்லிணக்கம் தொடர்பில் மிகத் தாராளமாக செயற்பட்டவர்கள். அது இப்பகுதியில் உள்ள பொலிசார் உட்பட அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் எம்மை இலக்குவைத்ததை எம்மால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது. ' என்றார்.

 

http://www.virakesari.lk/article/56135

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.