Jump to content

1979 - இரண்டாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1979 - இரண்டாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்...

1979 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி.யின் இரண்டாவது உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாகவும் சம்பியன் ஆனது.

GettyImages-519211642.jpg

* இங்கிலாந்தின் 8 மைதானங்களில் 1979 ஜூன் 6 முதல் ஜூன் 23 ஆம் திகதி வரை நடைபெற்றது.

* முதலாவது உலக கோப்பை போட்டியை போன்றே இந்த போட்டியிலும் 8 அணிகள் கலந்து கொண்டன. ( குழு 'A' யில் இங்கிலாந்து, பாகிஸ்தான், கனடா மற்றும் அவுஸ்திரேலியாவும் குழு 'B'யில் மேற்கிந்தியத்தீவுகள், நியூஸிலாந்து, இந்தியா மற்றும்  இலங்கை)

* 15 நாட்கள் இடம்பெற்ற இத் தொடரில் 15 போட்டிகளில் இடம்பெற்றது.

* முதலாவது உலகக் கிண்ணத் தொடரைப் போன்று 60 ஓவர்கள் என்ற அடிப்படையில் போட்டிகள் இடம்பெற்றன.

* வெள்ளை நிற சீருடை, சிவப்பு நிற பந்தும் 

* முதலாவது உலகக் கிண்ண அட்டவணை முறையிலேயே தொடர் இடம்பெற்றது.

  • 1979 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் திகதி குழு 'A' மற்றும் குழு 'B'யில் தலா இவ்விரு லீக் போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A' யின் முதல் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 60 ஓவர்களின் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 47.1 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இரண்டாவது லீக் போட்டியில் கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா 60 ஓவர்களின் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 40.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. 

குழு 'B'யின் முதல் லீக் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 53.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 190 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 51.3 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 56.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 47.4 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

  • 1975 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் திகதி குழு 'B'யில் இரண்டு லீக் போட்டிகள் இடம்பெற்றன.

அதில் குழு 'B'யின் மூன்றாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் மோதவிருந்தன. எனினும்  இப் போட்டியானது தொடர் மழையின் காரணமாக எதுவித முடிவுளுமின்றி கைவிடப்பட்டது.

குழு 'B'யின் நான்காவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 55.5 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 47.4 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

  • 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி குழு 'A' யில் இரண்டு லீக் போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A' யின் மூன்றாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 60 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 57.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 89 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.

குழு 'A' யின் நான்காவது லீக் போட்டியில் கனடா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 40.3 ஓவர்களை எதிர்கொண்டு 40 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

  • 1975 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் திகதி குழு 'A' யில் இரண்டு லீக் போட்டிகளும், குழு 'B'யில் ஒரு லீக் போட்டியும் இடம்பெற்றது.

குழு 'A' யின் ஐந்தாவது லீக் போட்டியில் கனடா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா 33.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 26 ஓவரில் 3 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

குழு 'A' யின் ஆறாவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 60 ஓவரில் 9 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 56 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டத்தை மாத்திரம் பெற்று, 14 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.

குழு 'B'யின் ஐந்தாவது லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின.  இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 60 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 60 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 32 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.

  • 1975 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் திகதி குழு 'B'யில் ஒரு லீக் போட்டி நடைபெற்றது.

குழு 'B'யின் ஆறாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 60 ஓவர்களின் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்தியா 54.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 47 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. 

லீக் ஆட்டம் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் குழு 'A' யில் இங்கிலந்து, பாகிஸ்தான் அணியும், குழு 'B'யில் மேற்கிந்தியத்  தீவுகள், நியூஸிலாந்து அணியும் அரையிறுதிப் போட்டியில் நுழைந்தன.

icc.JPG

icc2.JPG

  • 1979 ஜூன் 20 ஆம் திகதி இறுதி அரையிறுதிப் போட்டிகளும் இடம்பெற்றன.

முதலாவதாக இடம்பெற்ற அரையிறுதிப் போட்டி மேறகிந்தியத் தீவுகள் மற்றம் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 60 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுக்கைள இழந்து 293 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 56.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 43 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி இறுதிப் போட்டியில் நுழைந்தது.

இரண்டாவதாக இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 60 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 60 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 9 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

1979 ஜூன் 23 ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் கிளைவ் லோயிட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணியும், மைக் பிரேர்லி தலைமையிலான இங்கிலாந்து அணிகளும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 99 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டை இழந்த போதிலும் விவியன் ரிச்சர்ட்ஸ் (ஆட்டம் இழக்காமல் 138 ஓட்டம்), காலின்ஸ் கிங் (86 ஓட்டம்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 60 ஓவர்களில் 9 விக்கெடுக்களை இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

287 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அணித் தலைவர் மைக் பிரியர்லி (64 ஓட்டம்), ஜெப் பாய்காட் (57 ஓட்டம்) முதல் விக்கெட்டுக்கு 129 ஓட்டத்தை எடுத்த நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

எனினும் இவர்களின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் சோபிக்கத் தவறியமையினால் இறுதியாக இங்கிலாந்து அணி 51 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 92 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

icc3.JPG

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ச்சியாக இரண்டு முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை காட்டியது. 

1979-world-cup.jpg

* இப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை விவியன் ரிச்சர்ட்ஸ் பெற்றார்.

* தொடரில் அதிக ஓட்டம் - மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கோர்டன் கிரீன்னேட்ஜ் (4 போட்டிகளில் 253 ஓட்டம்)

* தொடரில் அதிக விக்கெட்டுக்கள் - இங்கிலாந்து அணியின் மிக்கி ஹெண்ரிக்ஸ் (5 போட்டிகளில் 10 விக்கெட்)

(தொகுப்பு : ஜெ. அனோஜன்)

 

http://www.virakesari.lk/article/56158

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.