யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
மெசொபொத்தேமியா சுமேரியர்

அனைவருக்கும் அஞ்சலிகள்

Recommended Posts

எப்படிச் சொல்வோம் எம் இழப்பை
ஏதிலியாகி நாம் ஊரூராய் அலைகையில்
எப்படிச் சொல்வோம் எம் இழப்பை

பத்து ஆண்டுகள் பறந்தே போனது
நடந்தவை அனைத்தும் மறந்தும் போனது

நமக்கேன் நாடு என்றும் கேட்கிறார்
நாடு காட்டிப் பிழைக்கும் எம்மவர்

நன்றாய் இருக்குது நாடும் ஊரும் 
என்று சொல்லி எங்கும் திரிகிறார்
எந்த இழப்பும் அற்ற எம்மவர்

நாவாந்துறையில் பிடித்த மீனும்
நண்டு கணவாயும் நல்லாய் தின்று
நாடு நல்லாய் இருக்கென்று நாம் கூறலாமோ???

கோழைகள் போல் ஓடிவந்தவர் 
கோடிகளாய்க் கொட்டிக் கொடுத்து
கொலிடே போக மட்டும் நாடாம்

வெட்கம் கெட்ட தமிழர் நாங்கள்
வேருடன் அழித்தவர் ஊர்கள் பார்க்க
வெளிநாட்டில் இருந்து விருப்பாய் போகிறோம்

வெடிகள் பட்டவர் முடமாய் இருக்க
வெடிகள் கொழுத்தி விழாவெடுக்கிறோம்
விழலாய் எம் பணத்தை இறைக்கிறோம்
வரிகளில் மட்டும் வேதனை கொள்கிறோம்

விழித்தெழு தமிழா இனியும் வீணராய் போகாது
வல்லமை கொண்டே உன் வளங்கள் பெருக்கி
வாழ்விழந்து தவிக்கும் எம்மினம் சீர்பெற
வருந்தி நீயும் உழைத்திடாயோ மானிடா

  • Like 2
  • Sad 2

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி சுமே . உண்மைகள் உறைத்தாலும் அதைமறந்து காலவோட்டத்திற்கு ஓடிக்கொண்டிருக்கும் நாம் வரிகளில் தான் அஞ்சலியை செலுத்துகின்றோம்.சீர் பெற்ற தலைமைஇல்லாமல் சிதைத்து போய் நிற்கின்றோம்.எப்படி வீறு கொள்வது ?

Share this post


Link to post
Share on other sites
On 5/18/2019 at 6:43 AM, ஜெகதா துரை said:

பகிர்வுக்கு நன்றி சுமே . உண்மைகள் உறைத்தாலும் அதைமறந்து காலவோட்டத்திற்கு ஓடிக்கொண்டிருக்கும் நாம் வரிகளில் தான் அஞ்சலியை செலுத்துகின்றோம்.சீர் பெற்ற தலைமைஇல்லாமல் சிதைத்து போய் நிற்கின்றோம்.எப்படி வீறு கொள்வது ?

 வீறுகொண்டு எழமுடியாவிட்டாலும் அறிவும் இரக்கமும் கொண்டு ஏதாவது செய்யலாம் தானே

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பச்சைகள் தந்த உறவுகள் புங்கை, யெகதா துரை, ராசவன்னியன் அண்ணா, ஏராளன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு