Jump to content

வடமேல் முஸ்லிம் கிராமங்கள் மினுவாங்கொடை வன்முறைகளின் பின்னணியில் உள்ளவர்கள் யார்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடமேல் முஸ்லிம் கிராமங்கள் மினுவாங்கொடை வன்முறைகளின் பின்னணியில் உள்ளவர்கள் யார்?

 

'அன்று 13 ஆம் திகதி. நோன்பு துறக்க நாம் தயா­ரா­கிக்­கொண்­டி­ருந்த நேரம். முகத்தை முழு­மை­யாக துணி­களால் கட்­டிக்­கொண்டு நாலா பகங்­களில் இருந்தும் ஊருக்குள் வந்த அவர்கள், முதலில் பள்ளிவா­ச­லையும் அதனைத் தொடர்ந்து எமது வர்த்­தக நிலையங்க­ளையும், வீடுக­ளையும் தாக்­கத்­தொ­டங்­கினர்.

13471586-7026281-image-a-6_1557818091074

நாம் காடு­க­ளுக்குள் ஓடி ஒளிந்தோம். மறு நாள் அதி­காலை வேளை வரை நாம் காடு­க­ளுக்­குள்­ளேயே இருக்க வேண்டி ஏற்­பட்­டது.

 முஸ்லிம் கிரா­மங்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றை­களில் உயி­ரி­ழப்பு சம்­பவம் பதி­வா­னது, பல கோடி ரூபா சொத்­துக்கள் சூரையா­டப்­பட்டு தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட சம்­ப­வங்கள்  இடம்­பெற்­றன.  

புத்­தளம் மாவட்­டத்­தி­லுள்ள சிலாபம் பொலிஸ் வல­யத்தின் கொஸ்­வத்த பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நாத்­தாண்­டிய, - தும்­மோ­தர பிரதேசத்தைச்  சேர்ந்த மொஹம்மட் நிஷ்­தாரின் வாக்கு மூலமே அது. 

13471640-7026281-image-a-10_155781814087

''திங்கள் பகல் 2.30 மணி­யி­ருக்கும். நூற்றுக் கணக்­கான குண்­டர்கள் பஸ்­களில் வந்­தி­றங்­கி­னார்கள்.  நான் வீட்­டி­லி­ருந்து காரை வெளியில் கொண்டு போக முயன்றேன். காரைக் கொண்டு செல்ல வேண்டாம் என்­றார்கள். 

நான் காரை நிறுத்­தி­விட்டு வீட்­டுக்குள் சென்று விட்டேன். பின்னர் வீட்டின் முன்­புறம் வந்து வாக­னத்தை உடைத்­தார்கள். எமது வீட்டில் 6 முதல் 7 வாக­னங்கள் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தன. அவற்றில் 3 வாக­னங்­க­ளுக்கு தீ வைத்­தார்கள். மகனின் மோட்டார் சைக்­கிளும் தீக்கிரையாகிவிட்­டது. 

இதனால் ஒன்­றரைக் கோடி ரூபா இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. சுமார் 1 மணித்­தி­யாலம் இப் பகு­தியில் நின்று தாக்­கி­னார்கள். அவர்கள் சென்­ற­வுடன் வெளியே வந்து நீரைப் பாய்ச்சி தீயை அணைத்தோம். இல்­லா­விட்டால் எல்லா வாக­னங்­களும் எரிந்து நாச­மா­கி­யி­ருக்கும்.

எனது சமையல் நிலை­யத்தில் நூற்றுக் கணக்­கான சிங்­க­ள­வர்கள் வேலை செய்­கி­றார்கள். அவர்­களில் சிலரும் சேர்ந்து வந்­துதான் எமது இடத்தை தாக்­கி­யுள்­ளார்கள். என்னை வெளியில் வரு­மாறு அழைத்­தார்கள். நான் வந்­தி­ருந்தால் கொன்­றி­ருப்­பார்கள்.'

13471580-7026281-image-a-7_1557818101553

மொஹம்மட் நளீம் எனும்  கேட்­டரீன் உரி­மை­யா­ள­ருடன் நாம் கதைத்த போது தெரிந்­து­கொண்­ட­வையே அது. 

அதிக பாதிப்­புக்கள் பதி­வான பகு­தி­களில் ஒன்­றான  ஹெட்­டி­பொலை - கொட்­டம்­பிட்­டிய பகு­தியைச் சேர்ந்­த­வரே இவர். 

'எமது வீட்டின் முன்­பாக ஒரு  மீன் தொட்டி உள்­ளது. அதனை ஒருவன் உடைக்க முயன்­ற­போது இன்­னொ­ருவன் ''மீன் தொட்­டியை உடைக்க வேண்டாம்... மீன்கள் பாவம்'' என்று சொன்னான். அதனால் மீன் தொட்டி தப்­பி­விட்­டது. எமது வீட்டைத் தாக்கும் சத்தம் கேட்­டதும் நாம் உயிரைக் காப்­பாற்றிக் கொள்ள ஒரு மூலையில் இருந்து எல்­லோரும் அழுதோம்.

பிள்­ளைகள் மிகவும் பயந்து போயுள்­ளார்கள். இச் சம்­ப­வத்தின் பிறகு சாப்­பி­டு­கி­றார்கள் இல்லை. எமது தூக்கம் தொலைந்­து­விட்­டது. பிள்ளைகள் தூக்­கத்தில் வீறிட்டு அழு­கி­றார்கள். உம்மா இது மையத்து வீடா என்று எனது மகள் கேட்­கிறாள்.  ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தலை அறிந்து நாங்­களும் கவ­லைப்­பட்டோம்.

கண்ணீர் வடித்தோம். நாமும் அந்த தீவி­ர­வாத கூட்­டத்­திற்கு எதிரான­வர்­கள்தான். அப்­பாவி மக்­க­ளான எங்­களை இவர்கள் ஏன் தாக்குகிறார்கள்? சம்­ப­வத்­தின்­போது வீட்­டினுள் பிள்­ளை­க­ளுடன் ஒளிந்­தி­ருந்த நளீமின் மனை­வி­யான ஆசி­ரியை பாத்­திமா பர்வீன் எம்மைப் பார்த்து கேட்­கிறார்.

''13 ஆம் திகதி பகல் ஹெட்­டி­பொ­லவில் தாக்­குதல் நடப்­ப­தாக எமக்கு தகவல் கிடைத்­தது. எனினும் நக­ரி­லி­ருந்து 4 கிலோ மீற்றர் உட்புறமவுள்ள எமது கிரா­மத்­துக்கு தாக்க வர­மாட்­டார்கள் என்ற நம்­பிக்­கையில் இருந்தோம்.

ஆனால் எமது எதிர்­பார்ப்­புகள் தவி­டு­பொ­டி­யா­கின. 3.45 மணி­ய­ளவில் அதிக சத்­தத்­துடன் 300 பேர் கொண்ட பெருங் கூட்­டத்­தினர் லொறிகள், வேன்கள், மோட்டார் சைக்­கிள்­களில் எமது பள்­ளியை நோக்கி வந்­தார்கள். பள்­ளியைத் தாக்க வந்­த­வர்கள் எம்­மையும் வாளால் வெட்டத் துரத்­தி­னார்கள்.

நாங்கள் பின்­வ­ழியால் ஓடி உயிர் தப்­பினோம். காட்­டுக்குள் அரை மணி நேரம் ஒளிந்­தி­ருந்தோம். பெண்­க­ளு­டனும் குழந்­தை­க­ளு­டனும்  காடுக­ளுக்குள் ஒளிந்­தி­ருந்தோம். 

அங்­கி­ருந்து எம்மைக் காப்­பாற்­று­மாறு பொலி­சா­ருக்கும் சி.ஐ.டி.யின­ருக்கும் தொலை­பே­சியில் அழைப்­பெ­டுத்தும் அவர்கள் பதிலளிக்கவில்லை. 

பின்னர் தாக்­கு­தல்­தா­ரிகள் அங்­கி­ருந்து விலகிச் செல்­கின்ற அதே நேரத்­தில்தான் பொலி­ஸாரும் வந்து சேர்ந்­தார்கள். பொலிஸ் பாதுகாப்புடனும் துணை­யு­ட­னும்தான் இவர்கள் தாக்­குதல் நடத்­தி­யி­ருக்­கி­றார்கள் என்றே நாம் சந்­தே­கிக்­கிறோம்.

நாம் தீயில் எரிந்து கொண்­டி­ருந்த பள்­ளி­வா­சலை அணைக்க முற்­பட்­ட­போது அதற்கு பொலிஸார் எச்­ச­ரிக்கை விடுத்­தார்கள். எம்­முடன் கடுமை­யாக நடந்து கொண்­டார்கள். 

ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் எமது பள்­ளி­வா­சலில் கூட அதனைக் கண்­டிக்கும் நிகழ்­வையும் இரங்கல் கூட்­டத்­தையும் நடத்­தினோம். நாம் அந்த தீவி­ர­வாத செயலை என்றும் கண்­டிக்­கிறோம். அதனுடன் எந்­த­வ­கை­யிலும் சம்­பந்­தப்­ப­டாத எம்மை இப்­படித் தாக்­கி­விட்­டார்கள் என்பதை நினைக்­கையில்

அதிக பாதிப்­புக்­க­ளுக்கு முகம் கொடுத்த ஹெட்­டி­பொலை -  மடிகே அனுக்­கன மஸ்­ஜிதுல் அப்ரார் பள்­ளி­வா­சலின் இமாம்  மொஹம்மட் சப்வான் நேரில் கண்­டதை, எம்­மிடம் விப­ரித்­ததே அது.

'வன்­மு­றை­யா­ளர்­களின் கூட்­டத்தில் பெண்கள், பெளத்த குருமார் இருந்­தனர். அவர்­களின் கைகளில் கூரிய வாள்கள், கத்­திகள், இரும்பு பொல்­லுகள் இருந்­தன. 

 நாம் நல்­லி­ணக்கம் தொடர்பில் மிகத் தாரா­ள­மாக செயற்­பட்­ட­வர்கள். அது இப்­ப­கு­தியில் உள்ள பொலிஸார் உட்­பட அனை­வ­ருக்கும் தெரியும். அப்­படி இருக்­கையில் எம்மை இலக்கு வைத்­ததை எம்மால் புரிந்­து­கொள்ள முடி­யாமல் உள்­ளது. 'மெள­லவி மொஹம்மட் சப்­வானின்  கருத்­துக்­க­ளுக்கு மேல­தி­க­மாக இந்த தக­வல்­களை அப்­பள்­ளி­வா­சலின் தலைவர் மெள­லவி எம்.எச்.எம். றிஸ்வி வீடி­யோக்­க­ளையும் காட்டி விளக்­கு­கின்றார்.

வன்­மு­றை­களால் பாதிக்­கப்­பட்ட பிங்­கி­ரிய பொலிஸ் பிரிவின் கினி­யம  முஸ்லிம் கிரா­மத்தை சேர்ந்த  ஏ.எஸ். ஜவுபர் சம்­ப­வத்தை விளக்­கு­கையில், 'தக்வா பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் இருக்கும் குளத்தில் துப்­பாக்கி ரவைகள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்கள் பள்­ளி­வா­ச­லுக்கு வரு­வார்கள் என்று தெரி­விக்­கப்­பட்­டது. நாம் 119 ஐ தொடர்பு கொண்டு முறைப்­பாடு செய்தோம். பொலிஸ் ஜீப்­பொன்று வந்­தது. 

நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் பள்­ளி­வா­சலைத் தாக்­கு­வ­தற்கு வந்­தார்கள். அவர்­க­ளிடம் கற்கள் இருந்­தன. பள்­ளி­வா­சலை கற்­களால் தாக்­கி­னார்கள். அதன் பின்பு இரா­ணுவம் வந்­தது. இரா­ணுவம் வந்த சந்­தர்ப்­பத்­திலே பள்­ளி­வா­சலை உடைத்து உள்ளே சென்­றார்கள். இதன்­போது ஊர­டங்கு அமுலில் இருந்­தது. எனினும் அது எமக்கு மட்­டுமே'  என அவர் தெரி­வித்தார்.

இவை­ய­னைத்தும் வடமேல் மாகா­ணத்தின் முஸ்லிம் கிரா­மங்­களை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட வன்­மு­றை­களின் சாட்­சி­யங்கள். வடமேல் மாகா­ணத்தில்  குறிப்­பாக குரு­நாகல் மாவட்டம், புத்­தளம் மாவட்டம் ஆகிய இரு மாவட்­டங்­க­ளுக்கும் உட்­பட்ட  குரு­நாகல், குளி­யா­பிட்டி, நிக்­க­வ­ரட்டி, சிலாபம், புத்­தளம் ஆகிய 5 பொலிஸ் வல­யங்­களின் கீழ் செயற்­படும்  47 பொலிஸ் பிரி­வு­க­ளுக்குள் உள்­ள­டங்கும் முஸ்லிம் கிரா­மங்­களில் நடந்த சம்­ப­வங்­களின் சாராம்­சத்தை மேலுள்ள  வாக்கு மூலங்கள் ஊடாக உணர முடியும்.  இந்த 47 பொலிஸ் பிரி­வு­க­ளிலும் சில பொலிஸ் பிரி­வு­களில் எந்த வன்­மு­றை­களும் பதி­வா­காத போதும் குறிப்­பாக சிலாபம் பொலிஸ் வல­யத்தில், சிலாபம், வென்­னப்­புவ, மார­வில, கொஸ்­வத்த பொலிஸ் பிரி­வு­க­ளுக்கு  உள்­ளிட்ட பகு­தி­க­ளிலும், குளி­யா­பிட்டி பொலிஸ் வல­யத்தின் குளி­யா­பிட்டி, பிங்­கி­ரிய,  நாரம்­மல, ஹெட்­டி­பொல பொலிஸ் பிரி­வு­க­ளிலும் குரு­நாகல் பொலிஸ் வல­யத்தில் கட்­டு­பொத்த பொலிஸ் பிரி­விலும், நிக்­க­வ­ரட்­டிய பொலிஸ் வல­யத்தில்  நிக்­க­வ­ரட்­டிய, கொபேய்­கனே, ரஸ்­நா­யக்­க­புர  பொலிஸ் பிரி­வு­க­ளிலும் உள்­ள­டங்கும்  முஸ்லிம் கிரா­மங்­களே வன்­மு­றை­யா­ளர்­களின் வெறித்­த­னத்­துக்கு உள்­ளான இடங்­க­ளாகும்.

மேற்­சொன்ன பகு­தி­களைச் சேர்ந்த அல்­லது அந்த பொலிஸ் பிரி­வு­க­ளுக்கு உட்­பட்ட 32 முஸ்லிம் கிரா­மங்கள்  வன்­மு­றை­யா­ளர்­களின் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளன. அங்கு 26 பள்­ளி­வா­சல்கள், 175 இற்கும் அதி­க­மான கடைகள், 500 வரை­யி­லான வீடுகள் வன்­மு­றை­யா­ளர்­க­ளினால் தீயிட்டும் அடித்தும் அழிக்­கப்­பட்­டுள்­ளன.

அதே நேரம் இதனை ஒத்த வன்­முறை கம்­பஹா மாவட்­டத்தின் மினு­வங்­கொடை நக­ரிலும் பதி­வான நிலையில்,  அங்கு  20 இற்கு மேற்­பட்ட முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் முற்­றாக தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ள­துடன் மினு­வாங்­கொடை ஜும் ஆ பள்­ளி­வா­சலும்   பாரிய சேதங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

இலங்­கையில் உயிர்த்­த­ஞா­யிறு தினத்தில் அதா­வது 21/4 அன்று இடம்­பெற்ற தொடர் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடந்து 20 நாட்கள் கடந்த நிலையில் இந்த வன்­மு­றைகள் இடம்­பெற்­றுள்­ளன. உண்­மையில் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து இலங்­கையில் பர­வ­லாக முஸ்லிம் சமூ­கத்­த­வரை  சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் ஒரு  சூழல் உரு­வா­னது. இல்லை உரு­வாக்­கப்­பட்­டது. 

பாது­காப்புத் தரப்­பினர் பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­பட்­டோ­ரையும் ஆயு­தங்­க­ளையும் தேடு­வ­தாக முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கைகள்  முஸ்லிம் கிரா­மங்­களை இலக்கு வைத்து மட்­டுமே நடத்­தப்­பட்­டன.  குறிப்­பாக குரு­நாகல் மாவட்­ட­மெங்கும் 356 முஸ்லிம் கிரா­மங்கள் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன.  

அதே போல் நாட­ளா­விய ரீதியில் பல முஸ்லிம் கிரா­மங்கள் மட்­டுமே சோத­னைக்கு உள்­ளா­கின. இதன்­போது கைப்­பற்­றப்­பட்ட வாள்கள் உள்­ளிட்ட மிகச் சிறிய அள­வி­லான பொருட்­களை வைத்து  முஸ்­லிம்கள் அனை­வ­ரி­டமும் வாள்­களும் கத்­தி­களும் உள்­ளதைப் போல் ஒரு மாயை ஏற்­ப­டுத்­தப்­பட்டு பிர­சா­ரங்கள் இடம்­பெற்­றன. குறிப்­பாக கொழும்பு - கொம்­ப­னித்­தெரு பள்­ளி­வாசல் ஒன்றில் அர­சி­யல்­வாதி ஒருவர் ஒளித்து வைத்­தி­ருந்த ஒரு தொகை வாள் மீட்­கப்­பட்­டது. கொழும்பு மாந­கர சபை உறுப்­பி­ன­ரான அவரை பொலிஸார் கைதும் செய்­துள்­ளனர்.

  அந்த ஒரு சம்­பவம் தவிர வேறு எங்கும் பள்­ளி­வா­சல்­களில் வாள்கள் கைப்­பற்­றப்­ப­ட­வில்லை. எனினும் அந்த ஒரு சம்­ப­வத்தை வைத்து முஸ்­லிம்­களின் பள்­ளி­களில் வாள்கள், கத்­திகள் இருப்­ப­தாக ஒரு தவ­றான பிர­சா­ரமும்  தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

 இவ்­வா­றான நிலை­மை­க­ளுக்கு ஊட­கங்­களும் ஒரு வகையில் துணை போன­தா­கவே தெரி­கின்­றது. இதனால் அர­சாங்­கத்­துக்கு ஊட­கங்கள் மீது சில விதி­மு­றை­களை  கடைப்­பி­டிக்க கோரும் நிலைமை ஏற்­பட்­டது. அத­னாலோ என்­னவோ அர­சாங்கம்  சோத­னை­களின் போது கைப்­பற்­றப்­படும் பொருட்­களை ஊட­கங்கள் ஊடாக காண்­பிக்க வேண்டாம் என  உத்­த­ர­விட்­டது.

இவ்­வா­றான பின்­ன­ணி­களில் தான் கடந்த 12 ஆம் திகதி சிலா­பத்தில் முதல் சம்­பவம் பதி­வா­கி­யது.  அதா­வது அந் நகரில் உள்ள முஸ்லிம் வர்த்­தகர் ஒருவர் இட்ட முகப்­புத்­தக பதி­வொன்­றினை மையப்­ப­டுத்தி, அப்­ப­தி­வுக்கு கருத்துக் கூற விளைந்­த­வ­ருடன் ஏற்­பட்ட தர்க்­கத்தால் அந்த சம்­பவம் பதி­வா­னது. அதன் முடிவு, சிலாபம் பொலிஸ்­ பி­ரிவில் இரு பள்­ளி­வாசல் உள்­ளிட்ட முஸ்­லிம்­களின்  சொத்­துக்­களை அழிக்கும் அள­வுக்கு வளர்ந்­தது. அது தொடர்பில்  பேஸ்­புக்கில் கருத்துப் பதிவு செய்த முஸ்லிம் வர்த்­தகர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இந்த சம்­பவம் இடம்­பெற்று 24 மணி நேரம் கடப்­ப­தற்குள் வடமேல் மாகா­ணத்தின் ஏனைய முஸ்லிம் கிரா­மங்­களை நோக்­கிய வன்முறைகள்  மிகத் தெளி­வாக  பர­வி­யது. முத­லா­வது சம்­பவம் - குளி­யா­பிட்டி பொலிஸ் பிரிவில் குளி­யா­பிட்டி ஹெட்­டி­பொல வீதியில் பதிவாகியி­ருந்­தது. 12 ஆம் திகதி இரவு 7 மணி­ய­ளவில்  4 முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீது மோட்டார் சைக்­கிள்கள் மற்றும் முச்­சக்­கர வண்டிகளில் வந்தோர்  தாக்­குதல் நடத்­தி­யி­ருந்­தனர். இதன்­போது  சிலரைப் பொலிஸார் கைதும் செய்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து கைதா­ன­வரை விடு­விக்க குளி­யா­பிட்டி பொலிஸ் நிலையம் முன்­பாக  கூடிய  வன்­மு­றை­யா­ளர்கள்  ஆர்ப்­பாட்டம் செய்­தனர்.

அதனைத் தொடர்ந்து குளி­யா­பிட்டி, தும்­மல சூரிய, பிங்­கி­ரிய ஆகிய பொலிஸ் பிரி­வு­களில் வன்­முறை அச்சம் ஏற்­பட்­டதால் பொலிஸ் ஊரடங்கு பிறப்­பிக்­கப்­பட்­டது.

 இவ்­வாறு பொலிஸ் ஊர­டங்கு அமுல் இருக்கும் போது இரவு வேளை­யி­லேயே பிங்­கி­ரி­யவின்  கினி­யம முஸ்லிம் கிராமம் மீதும் அதனை அன்­மித்த பல கிரா­மங்கள் மீதும்  வன்­மு­றை­யா­ளர்கள் அத்து மீறி­யுள்­ளனர்.  இதன்­போது வன்­மு­றை­யா­ளர்கள் முஸ்­லிம்­களின் உடை­மை­களை கொள்ளை அடிப்­பதில் குறி­யாக இருந்­துள்­ள­துடன் அதன் பின்னர் அச்­சொத்­துக்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்டும் அடித்தும் அழிக்­கப்­பட்­டுள்­ளன.  இவை நிகழும் போது அப்­ப­கு­தி­களில் ஊர­டங்கு அமுலில் தான் இருந்­துள்­ளது. 

 இதனைத் தொடர்ந்து அந்த வன்­மு­றைகள் ஏனைய முஸ்லிம் கிரா­மங்­க­ளுக்கு பர­வி­யி­ருந்­தது.  ஹெட்­டி­பொல, நிக்­க­வ­ரட்­டிய, நாத்­தாண்­டிய, வர­கா­பொல நக­ரங்­களை மையப்­ப­டுத்­தி­யுள்ள முஸ்லிம் கிரா­மங்­களை நோக்கி வன்­மு­றைகள் மிக வேக­மாக பர­வி­யதால் இன்று முழு வடமேல் மாகா­ணமும் அச்­சத்தில்  உறைந்து போயுள்­ளது எனலாம். 

இவ்­வா­றான சூழ­லி­லேயே 13ஆம் திகதி நோன்பு துறக்கும் வேளையில் மினு­வங்­கொ­டை­யிலும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் தாக்­குதல் நடந்த மறுநாள் 14 ஆம் திகதி வன்­முறை பதி­வான பகு­திகள் உள்­ள­டங்­க­லாக  முழு நாட்­டுக்கும் பொலிஸ் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டது. அத்­துடன்  இந்த வன்­மு­றைகள் தொடர்பில் பொலிஸ் தலை­மை­யகம் சிறப்பு பொலிஸ் குழு­வொன்­றி­னையும் விசா­ர­ணைக்­காக அமைத்­தது. கொழும்பு தெற்கு பொலிஸ் அத்­தி­யட்சர்  நிசாந்த சொய்­ஸாவின்  கீழ் அந்த சிறப்பு குழு அமைக்­கப்­பட்­டது. அந்த பொலிஸ் குழு  உடன் களத்தில் இறங்கி ஏற்­க­னவே நாட்டில் பதி­வான இன­வாத சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் மீது அவ­தானம் செலுத்தி விசா­ரிக்க ஆரம்­பித்­தது.

அதன்­படி, ராஜ­கி­ரிய பகு­தியை சேர்ந்த ஒருவர் அமித் வீர­சிங்­கவின் பெயரில் பரவும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்புக் கருத்­துக்கள் அடங்­கிய  பிர­சாரம் தொடர்பில் கிடைக்கப் பெற்­றி­ருந்த முறைப்­பாட்டை மையப்­ப­டுத்தி  கைது செய்­யப்­பட்டார். பதில் பொலிஸ் மா அதிபர்  சி.டி. விக்­ர­ம­ரத்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய அந்த முறைப்­பாட்­டுக்கு அமைய 14 ஆம் திகதி அதி­காலை, தெல்­தெ­னிய பகு­தியில் வைத்து அமித் வீர­சிங்­கவை, கொழும்பு தெற்கு பொலிஸ் அத்­தி­யட்­சரின் கீழ் இயங்­கிய கிரு­லப்­பனை  பொலிஸ் நிலை­யத்தின் உப பொலிஸ் பரி­சோ­தகர் அஜித் குமார தலை­மை­யி­லான குழு­வினர் கைது செய்­தி­ருந்­தனர். 

கடந்த 13 ஆம் திகதி முதல் குளி­யாப்­பிட்டி, ஹெட்­டி­பொல, மினு­வங்­கொடை பகு­தி­களில் பதி­வான சம்­ப­வங்­க­ளுடன் அமித் வீர­சிங்­க­வுக்கு உள்ள தொடர்பு குறித்து  இதன்­போது பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்­ர­ம­ரத்­னவின் உத்­த­ர­வுக்கு அமைய விசா­ர­ணைகள் இடம்­பெற்­றுள்­ளன. 

தொடர் தற்­கொலைத் தாக்­கு­தல்­களின் பின்னர் அமித் வீர­சிங்­கவின்  வீட்டில் கடந்த 6 ஆம் திகதி ஒரு கூட்டம் நடந்­துள்­ளது. 11 ஆம் திகதி நடத்­தப்­பட இருந்த கூட்­டத்தை பொலிஸார் நீதி­மன்ற உத்­த­ரவை பெற்று தடுத்­துள்­ளனர்.  அந்த பின்­ன­ணி­யி­லேயே   14 ஆம் திகதி தெல்­தெ­னி­யவில், அவ­ரது வீட்டில் இருந்­த­போது அமித்தை பொலிஸார் கைது செய்­தனர். 

பொலிஸார் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் அமித் வீர­சிங்க அவ­ரது வீட்­டி­லேயே இருந்­துள்ள போதும் அவரை சந்­தித்து ஆலோ­சனை பெற தொடர்ச்­சி­யாக 7 அல்­லது 8 பேர் வந்து சென்­றுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.  அது தொடர்பில் தீவிர விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.   இத­னை­விட,  முஸ்­லிம்கள் மீது ஆத்­திரம் ஊட்டி வெறுப்பு உணர்வைத் தூண்டும் வகையில் கடந்த 2018.08.5 ஆம் திகதி அமித் வீர­சிங்க  தெரண தொலைக் காட்­சிக்கு வழங்­கிய உரைப் பதி­வினை  அண்­மையில் மீள பதி­வேற்றி  முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை அவர் தூண்­டி­ய­தாக சந்­தே­கிப்­ப­தற்­கான இரண்­டா­வது கார­ணி­யாக அமைந்­தது.

அதனால் அது குறித்தும் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.  இதற்கு மேல­தி­க­மாக  பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தில் உள் பெட்டி ஊடாக ஒரு தகவல்  பரி­மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும், அதில்  முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களில்  ஆயு­தங்கள் இருப்­ப­தாக 119 அவ­சர அழைப்பு இலக்­கத்­துக்கு அழைத்து கூறு­மாறும், முஸ்­லிம்­களின் பள்­ளிகள், கடைகள் மீது வன்­மு­றையை பிர­யோ­கிக்கும் வண்ணம் பிர­சாரம் செய்­யப்­பட்­டி­ருந்­த­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். அத­னா­லேயே இந்த வன்­மு­றை­களின் பின்­ன­ணியில் அமித் வீர­சிங்க உள்­ளாரா எனும் விசா­ர­ணை­க­ளுக்­காக அவர் கைது செய்­யப்­பட்டார். இதனல் அவ­ரது கைய­டக்கத் தொலை­பே­சியை  கைப்­பற்றி அதனை  விஷேட ஆய்­வுக்­காக சி.ஐ.டி.யின்   டிஜிட்டல் பகுப்­பாய்வு அறைக்கு அனுப்­பி­யுள்­ள­தா­கவும் குறிப்­பாக அவ­ரது கைய­டக்கத் தொலை­பே­சியில் வட்ஸ் அப், இமோ மற்றும் பேஸ் புக் தக­வல்கள் ஆய்வு செய்­யப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பொலிஸார் சுட்­டிக்­காட்­டிய நிலையில், அமித் வீர­சிங்க  தற்­போது விளக்­க­ம­றி­யலில் உள்ளார்.

அடுத்து  பொலிஸ் அத்­தி­யட்சர் நிசந்த சொய்­ஸாவின் கீழ் இயங்­கிய பொலிஸ் குழு நாமல் குமார எனும் ஊழல் ஒழிப்புப் பிரிவின் நட­வ­டிக்கைப் பனிப்­பா­ளரைக் கைது செய்­தது.

 குறித்த அன்பர், ஹெட்­டி­பொல வன்­மு­றைகள் இடம்­பெறும் போது அங்கு இருப்­பது கணொளி ஆதா­ரங்கள் ஊடாக வெளிப்­ப­டுத்­தப்­பட்ட பின்­ன­ணி­யி­லேயே அவர் கைது செய்­யப்­பட்டார் இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட அவர் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் தடுத்­து­வைத்து விசா­ரிக்­கப்­பட்ட பின்னர் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக சி.ஐ.டி.யின­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

அதே போன்று டேன் பிரி­யசாத் எனும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளுக்கு பெயர் போன புதிய சிங்­ஹலே அமைப்பின் தலை­வரும், வெல்­லம்­பிட்டி பொலிஸ் நிலை­யத்­துக்கு கிடைத்த முறைப்­பா­டொன்­றினை மையப்­ப­டுத்தி கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்ப்ட்டு தற்­போது பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

இந் நிலையில் வன்­மு­றை­களில் பங்­கேற்­ற­வர்­களைக் கைது செய்­யவும் அதனை திட்­ட­மிட்­ட­வர்கள் வழி நடத்­தி­ய­வர்­களை பிடிக்­கவும் வட மேல் மற்றும்  மினு­வங்­கொடை சம்­ப­வங்­களை மையப்­ப­டுத்தி சிறப்பு உள­வுத்­துறை குழுக்­களும் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளன.  நேற்று வரை வட மேல் சம்­ப­வங்கள் தொடர்பில் 81 சந்­தேக நபர்­களும் மினு­வங்­கொடை சம்­பவம் தொடர்பில் 14 சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

மினு­வங்ெ­காடை சம்­ப­வங்கள் தொடர்பில் மேல் மாகா­ணத்தின் வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­ன­கோனின் கீழ் விசா­ரணை நடக்­கின்­றது.

இந் நிலையில் வட மேல் வன்­மு­றைகள் தொடர்பில் மேல­தி­க­மாக ஒவ்­வொரு விஷேட பகு­தி­க­ளுக்கும் பொலிஸ் மா அதி­பரால் சிறப்பு விசா­ர­ணை­யா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். பதில் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ரம ரத்ன இந்த மேல­திக விசா­ர­ணை­யா­ளர்­களை நிய­மித்­துள்ளார். இரு பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள் மற்றும் 8 பொலிஸ் அத்­தி­யட்­சர்கள், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர்கள் இவ்­வாறு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். 

இந்த விசா­ர­ணைகள் பதில் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­னவின் நேரடி கட்­டுப்­பாட்டில் இடம்­பெ­று­கின்­றன.

அவரின் கீழ் பொலிஸ் சட்டப் பிரிவு மற்றும்   குற்றம் திட்­ட­மிட்ட குற்­றங்­களை தடுக்கும் பொலிஸ் பிரி­வு­க­ளுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்­வாவின்  கீழ் பிர­தான விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. குளி­யா­பிட்டி மற்றும் ஹெட்­டி­பொல பகு­தி­களில் இடம்­பெற்ற விரும்­பத்­த­காத சம்­ப­வங்கள் தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்­வாவின் கீழ் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. 

அத்­துடன், நிக்­க­வ­ரட்டி பொலிஸ் பிரிவில் பதி­வா­கி­யுள்ள வன்­மு­றைகள் தொடர்பில் விசா­ரிக்கும் பொறுப்பு கொழும்பு  குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பதில் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் உதய ஹேமந்­த­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.  கட்­டு­பொத்த பொலிஸ் பிரிவில் பதி­வான சம்­ப­வங்கள் தொடர்பில் சமூக பொலிஸ் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர்  டி.வி.பி. அஜித்தின் கீழும்,  தும்­ம­ல­சூ­ரிய பொலிஸ் பிரிவில் பதி­வா­கி­யுள்ள சம்­ப­வங்கள் தொடர்பில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர்  கொடி­சிங்­கவின் கீழும் விஷேட விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

இத­னை­விட  கொபேய்­கனே பொலிஸ் பிரிவில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சம­ர­கோனும்,  வாரிய பொலிஸ் பிரிவின் சம்­ப­வங்கள் தொடர்பில்  உத­விய பொலிஸ் அத்­தி­யட்சர் சமந்த திஸாநாயக்கவின் கீழும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கொஸ்வந்த பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்கும் பொறுப்பு  சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சர் கீர்த்தி பண்டாரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிலாபம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடியின் கீழ் தனியான விசாரணைகள் இடம்பெறுவதுடன்  மாரவில பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சுஜீவ விஜேசிங்க தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.  வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சர்  பேர்னாட் பெரேராவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் விடயங்கள் மற்றும் பிரதான விசாரணைக் குழுவின் விசரணைத் தகவல்கள், பாதிக்கப்பட்ட மக்களின் வாக்கு மூலங்களை ஆராயும் போது இந்த வன்முறைகளின் பின்னணியில் பலம் வாய்ந்த அரசியல் சக்தி ஒன்று இருப்பதாக புலப்படுகின்றது.

குறிப்பாக  கேசரி, ஹெட்டிபொல - கொட்டம்பிட்டிய பகுதியில்  முன்னெடுத்த கள ஆய்வின் போது அப்பிரதேச மக்கள், குருநாகல் மாவட்ட பிரபல பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது குற்றம் சுமத்துகின்றனர். அவர்கள் அதற்கான ஆதாரமாக கொட்டம்பிட்டிய ஜமலைய அரபுக் கல்லூரி மீதான தாக்குதலின் போதும், அக்கல்லூரி கிணற்றை சோதனை செய்த போதும் வன்முறையாளர்கள் பயன்படுத்திய சில வார்த்தைப் பிரயோகங்களை ஆதாரங்களாக கூறின்றனர்.

எனினும் உன்மையிலேயே அந்த அரசியல் சக்தி இந்த சம்பவத்தின் பின்னனியில் இருக்கின்றதா அல்லது வேறு சக்திகள் இருக்கின்றனவா என ஆராய்ந்து உடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய பொறுப்பு பிரதான பொலிஸ் விசாரணைக் குழுவுக்கு உள்ளது.

இனவாதத்தை தூண்டி அரசியல் நடத்தும் கலாசாரம் இலங்கையில் அரவணைக்கப்பட்டு வந்துள்ளதொன்று என்பதால்,  இந்த வன்முறைகளின் பின்னால் அத்தகைய சக்தி இருப்பின்,  அந்த சக்தியை வெளிப்படுத்தி தொடர்புபட்டவர்களை தண்டிக்க வேண்டும். இல்லையே நாளைய தேர்தல் பிரசாரமாக இந்த இனவாதம் மட்டுமே எஞ்சும்.

எம்.எப்.எம்.பஸீர்

 

http://www.virakesari.lk/article/56201

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.