• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
கிருபன்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு இன்று !

Recommended Posts

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு இன்று !

தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.

mullivaikkaal.jpg

இந்நிலையில் கடந்த சில நாட்களாக முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் குருக்கள், கன்னியர்கள், இந்து மத குருக்கள், பொதுமக்கள் இணைந்து சிரமதானப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

IMG_5157.jpg

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இக் காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தினம் வருடா வருடம் இலங்கை மற்றும் புலம்பெயர் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

IMG_5166.jpg

இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

IMG_5186.jpg

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அனைத்துப் பொதுமக்களும் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும். அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் இடம்பெற்று வருகின்றன.

IMG_5188.jpg

இம்முறை பெரும் எதிர்பார்ப்பில் இடம்பெறவிருந்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டு அமைதியான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_5220.jpg

IMG_5205.jpg

 

http://www.virakesari.lk/article/56191

Share this post


Link to post
Share on other sites

அவர்கள் யுத்தத்தின் மூலம் எம் விடுதலை போராட்டத்தை வெல்லவில்லை.

இனப்படுகொலை ஒன்றின் மூலமே அவர்கள் எம் விடுதலை போராட்டத்தினை நசுக்கினர்.

வாழும் உரிமைக்காக தம் பூர்வீக மண்ணில் வாழ்வதற்காக உலகில் வாழும் ஏனைய மக்களுக்கு இருக்கும் சாதாரண உரிமைகளை தம் பாரம்பரிய மண்ணில் பெற்று தம் பிள்ளைகளுடனும் சந்ததியுடனும் நிம்மதியாக வாழ்வதற்காகவே போராடினோம், ஆயினும் படுகொலைகள் மூலம் தோற்கடிக்கப்பட்டு போனோம்...

நாம் எம் மீதான இனப்படுகொலை ஒன்றின் மூலமே தோற்கடிக்கப்பட்டோம் என்பதை உரத்து சொல்வோம்..

நேரடி யுத்தத்தினால் அல்ல, பெரும் இனவழிப்பு ஒன்றின் மூலமே தோற்கடிக்க பட்டோம் என எம் சந்ததிக்கு சொல்வோம்..

இரசாயன ஆயுதங்கள் மூலமும் கொத்து குண்டுகள் மூலமும் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ஆன்மாக்களின் இறுதி அலறலின் குரலில் சொல்வோம்..

விடுதலை கேட்ட நாம் இனப்படுகொலை மூலமே மவ்னிக்கப்பட்டவர்கள் என்று.. சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளையும் மக்களையும் சிதைத்து விட்டுத்தான் எம் தோல்வியை அவர்கள் கொண்டாடுகின்றனர் என சொல்வோம்..

போராளிகள் மீதல்ல பொது மக்கள் மீதான அரச பயங்கரவாதத்தின் மூலமாகவே அவர்கள் வெற்றியை பெற்றனர் என உரத்து உரத்து சொல்வோம்..

இந்த இனப்படுகொலை க்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என இந்த இனப்படுகொலை யின் பத்தாம் ஆண்டில் மீள உறுதி கொள்வோம்!

எமக்கான ஒரு காலம் கண்டிப்பாக வந்தே தீரும் எம் தலைவனின் கனவும் ஒரு நாள் நனவாகும்

 

  • Like 4
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

மேற்கு நாடெங்கும் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவிடங்கள்.. அவற்றிற்குரிய பொழிவுடன் மாட்சியத்துடன்.. புனிதப் படுத்தப்பட்டு.. காணப்படும்.

எமது மக்களின் நினைவிடம்.. இவ்வாறு கிடக்கிறது.

அரசியல் தேவைகளுக்கு அப்பால்.. மானுடத் தேவை ஒன்றின் பால்.. இவை நிர்வகிக்கப்பட வேண்டும்.

புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தி... அதற்குரிய மாட்சிமத்துடன் காணப்பட வேண்டும்.

அப்போது தான் உலகம்.. எம்மை பார்த்து சொல்லும்.. இந்த மக்களின் இழப்பை தமிழ் மக்கள் அவ்வளவு இலகுவில் மறப்பதிற்கில்லை என்று.

முன்னர் மாவீரர் துயிலும் இல்லங்கள்.. போராளிகளின் நினைவிடங்கள்.. எப்போது ஒரு பொழிவுடன்.. மற்றவர்கள் கூட மதித்து தொழுது செல்லும் சூழல் இருந்தது.

இன்று.. எம்மக்களின் உயிர்க்கொடை.. தரிசாக கிடக்கிறது. நினைவு பந்தம் உடைந்து கிடக்கிறது. இதைப் பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்.. இவர்களுக்கு சொந்த மக்களின் சாவில் அக்கறை இல்லை என்று தானே..??!

Share this post


Link to post
Share on other sites

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அக்கிரமத்தோடு எமது கோரிக்கைகள் பற்றிய பேச்சுக்களே இல்லாமல் போயிற்று. 

பத்தாவது வருடம் ஆகியும் இன்னும் முற்றான ஆக்கிரமிப்பினுள்ளும் நிகழ்த்தப்பட்ட இனக்கொலைக்கான நீதி மறுக்கப்பட்டும் அதே அவலங்களைச் சுமந்துகொண்டும் எமதினம் நிற்கிறது.

முற்றான சர்வதேச அனுசரணையிடனான இனவழிப்பு யுத்தம், இனவழிப்பிற்குச் சற்றும் குறையாத நியாயப்படுத்தல்கள், சர்வதேச தட்டிக்கழிப்புகள், தொடர்ச்சியான ஏமாற்றங்கள், நம்பமுடியா அரசியல்த் தலைமகள், இவைகளோடு இழுப்பட்டுச் செல்லும் எமது அவல வாழ்வு.

நிர்க்கதியாய் நிற்கிறோம், தேற்றுவார் எவருமின்றி.

 

 

Share this post


Link to post
Share on other sites

வகை தொகையின்றி கொல்லப்பட்ட புலிகள், மற்றும் மக்களுக்கு நினைவுதின அஞ்சலிகள்.

Share this post


Link to post
Share on other sites

மக்களுக்கும், மாவீரர்களுக்கும் தாங்கவொண்ணா துயருடன் நினைவஞ்சலிகள் .....!

Share this post


Link to post
Share on other sites

போரினால் இறந்த மக்களுக்கும் மாவீரர்களுக்கும் கண்ணீருடன் நினைவஞ்சலிகள்.

 

Share this post


Link to post
Share on other sites

போரினால் இறந்த மக்களுக்கும் மாவீரர்களுக்கும் கண்ணீருடன் நினைவஞ்சலிகள்.

Share this post


Link to post
Share on other sites

முள்ளிவாய்க்காலில் மடிந்த மக்களுக்கும் போராளிகளுக்கும் நினைவஞ்சலிகள்.

Share this post


Link to post
Share on other sites

முள்ளிவாய்க்காலில் மடிந்த மக்களுக்கும், மாவீரர்களுக்கும் கண்ணீருடன் நினைவஞ்சலிகள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.