Jump to content

இலங்கை உள்நாட்டுப் போர்: ரத்தத்தை அடக்க வழியில்லாமல் மண்ணை பூசிய துயர கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உள்நாட்டுப் போர்: ரத்தத்தை அடக்க வழியில்லாமல் மண்ணை பூசிய துயர கதை

சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 
"இரத்ததை அடைக்க வழியில்லாமல் மண்ணை பூசினர்" - போர்க்கால நினைவலைகள்LAKRUWAN WANNIARACHCHI (கோப்புப்படம்)

(ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் நான்காவது பகுதி இது.)

இன்று மே 18. இது வெறும் தேதி மட்டுமல்ல. தாய் - தந்தையை, உடன் பிறந்தோரை, உற்றார் உறவினரை, உயிர் நண்பர்களை இழந்த பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத தேதி. 

ஆம், இலங்கை ராணுவப் படைகளுக்கும், விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கி 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி வரை சுமார் 26 ஆண்டுகள் இலங்கையில் நடந்த இந்த வரலாறு காணாத உள்நாட்டுப் போரின்போது, எண்ணிலடங்கா மனித உரிமை மீறல்கள் இழைக்கப்பட்டதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

அப்படிப்பட்ட கொடூரமான போர் நடந்து முடிந்து இன்றுடன் பத்து ஆண்டுகள் ஆகிறது. போரின்போதோ, போர் முடிவுற்ற பிறகோ தத்தமது உயிரை காத்து கொள்வதற்கான பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் பல்வேறு வழிகளில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.

போர் முடிந்து பத்தாண்டுகளாகியும் நீதி கிடைக்காதது ஏற்படுத்தும் வலியும், மன உளைச்சலும் ஒருபுறமிருக்க, தங்களது இளமை காலத்தில் போரின்போது சந்தித்த மோசமான நினைவுகளால், இன்றுவரை தினந்தினம் தூக்கத்திலிருந்து அலறித்துடித்து எழுந்து கொள்வதாக குமுறுகிறார்கள் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள்.

இலங்கை உள்நாட்டுப் போரின்போது தாங்கள் சந்தித்த மிகவும் மோசமான அனுபவத்தை பிரிட்டன், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

ரோஷிணி ரமேஷ், பிரிட்டன்

“இரத்ததை அடைக்க வழியில்லாமல் மண்ணை பூசினர்” - போர்க்கால நினைவலைகள்Buddhika Weerasinghe

"எனக்கு அப்போது 13 வயதிருக்கும். யாழ்ப்பாணத்தில் வசிப்பது உயிருக்கு அச்சுறுத்தல் என்று தெரிந்த பிறகு, குடும்பம் குடும்பமாக கடலை கடந்து வன்னியை நோக்கி சென்றுக்கொண்டிருந்தோம். ஆனால், அப்போதுதான் தெரிந்தது அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளேதென்று" என்று கூறுகிறார் தற்போது பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வரும் ரோஷிணி.

எனவே, வேறு வழியின்றி மீண்டும் யாழ்ப்பாணத்தை நோக்கி செல்ல நேரிட்டதாகவும், அப்போது உள்நாட்டுப் போரின் காரணமாக பல ஆண்டுகளுக்கு நடத்தப்படாமலிருந்த யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் கந்தசாமி முருகன் கோயிலில் தீர்த்த திருவிழா வெகுகாலத்திற்கு பிறகு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

"உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தின் காரணமாக சொந்தங்களை விட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கனோர் இந்த திருவிழாவிற்காக ஒன்று கூடினோம். குண்டுவீச்சுகளையும், துப்பாக்கிகளின் சத்தத்தையும், பீரங்கிகள் உண்டாக்கிய பிணக் குவியல்களையும், இரத்த ஆறுகளையும் பார்த்து, பார்த்து மரண பீதியில் உறைந்து போயிருந்த நாங்கள் அப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.

ஆனால், அந்த நிம்மதி வெகுநேரத்திற்கு நீடிக்கவில்லை. நாங்கள் கோயில் திருவிழாவை ரசித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று எங்களை நோக்கி பறந்து வந்துக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி இருப்பதை அறிந்த ராணுவம் மொத்தமாக கொன்று குவிப்பதற்கே வந்துக்கொண்டிருப்பதாக எண்ணி, அலறி துடித்த மக்கள் அங்கும், இங்கும் சிதறி ஓட ஆரம்பித்தனர்.

“இரத்ததை அடைக்க வழியில்லாமல் மண்ணை பூசினர்” - போர்க்கால நினைவலைகள்Luis Enrique Ascui

நான் அருகிலுள்ள ஒரு இடத்தில் ஒளித்து கொண்டேன். என்ன நடக்கப் போகிறதோ என்று அதிர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்த நேரத்தில், கோயிலுக்கு நேரே பறந்த ஹெலிகாப்டர் சிவப்பு பூக்களை கொட்டி இன்ப அதிர்ச்சி அளித்தது" என்று தனது வாழ்வின் மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் ரோஷிணி.

இறுதிக்கட்ட போர் முடிந்த பின்னர் திருமணம் செய்து கொண்டு லண்டனுக்கு சென்ற ரோஷிணி, தனக்கு இன்றைக்கு கூட ஹெலிகாப்டர்களை பார்த்தால் பயமென்று கூறுகிறார்.

பரிமளநாதன் மயூரன், சுவிட்சர்லாந்து 

உள்நாட்டுப் போரின் தாக்கம் யாழ்ப்பாணத்தில் தீவிரமடைந்து கொண்டிருந்த காலக்கட்டம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரிடமும் பதற்றம் நிறைந்திருந்தது. அப்போது யாழ்ப்பாணத்தில் களமிறங்கிய இந்திய ராணுவம், தங்களது பள்ளிக்கு வந்து இனிப்புகளை வழங்கியது ஆச்சர்யத்தை அளித்ததாக கூறுகிறார் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மயூரன்.

"ராணுவத்தினரை கண்டாலே பயந்து ஓடும் சூழ்நிலை நிலவிய காலக்கட்டத்தில், இந்திய ராணுவத்தின் வருகையும், அணுகுமுறையும் தொடக்கத்தில் எங்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த மகிழ்ச்சி ஒரு சில நாட்களிலேயே பேரதிர்ச்சியாக மாறியது.

 

அச்சமயம் எனக்கு சுமார் ஏழு வயதிருக்கும். பள்ளி விடுமுறை தினத்தன்று, விளையாடுவதற்காக எங்களது பாட்டி வீட்டருகே இருக்கும் தோட்டத்திற்கு சென்றோம். அந்த தோட்டத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ரயில் தண்டவாளம் இருக்கும். தண்டவாளத்திற்கு ஓரமாக மக்கள் நடந்து செல்வது இயல்பான ஒன்று. இந்நிலையில், சம்பவ தினத்தன்று தோட்டத்தின் பக்கம் இருக்கும் தண்டவாளத்தின் ஓரமாக சென்றுக்கொண்டிருந்தவரை அதன் மறுபுறத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

எனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக ஒருவரது மரணத்தை, அதுவும் சுட்டுக்கொல்லப்படுவதை அப்போதுதான் பார்த்தேன். ராணுவ வீரர்கள் மீதான எனது பார்வையை மாற்றிய இந்திய ராணுவத்தினரின் செயல்பாடு என்னை திடுக்கிட செய்தது. அடுத்த நொடியே அங்கு விளையாடி கொண்டிருந்த நாங்கள் அனைவரும் பயந்துக்கொண்டு அருகிலுள்ள கோயிலுக்குள் ஒளிந்து கொண்டோம். 

“இரத்ததை அடைக்க வழியில்லாமல் மண்ணை பூசினர்” - போர்க்கால நினைவலைகள்LAKRUWAN WANNIARACHCHI

அதன் பிறகு எங்களது ஊருக்குள் புகுந்து மற்றொரு இடத்தை நோக்கி சென்ற இந்திய ராணுவத்தினரின் அட்டூழியத்தை கண்ணார பார்த்தேன்" என்று கூறுகிறார் சுவிட்சர்லாந்து தேசிய வானொலியின் தமிழ் சேவையின் ஆசிரியரான மயூரன்.

1991ஆம் ஆண்டு தனது பதினோராவது வயதில், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்த இவர், கடந்த 28 ஆண்டுகளாக அந்த துப்பாக்கி சத்தமும், நிகழ்வும் தன்னை துன்புறுத்தி கொண்டிருப்பதாக கூறுகிறார்.

பாஸ்கரன் சித்திரவேல், ஆஸ்திரேலியா 

இலங்கை உள்நாட்டுப் போரை இன அழிப்பு போர் என்று வர்ணிக்கும் பாஸ்கரனின் போர் கால நினைவுகள் அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் உள்ளது.

"நான் உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதல் இறுதிவரை இலங்கையில்தான் இருந்தேன். அதாவது, உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்ததை என் கண்ணால் நேரடியாக பார்த்துள்ளேன்; நானும் பல தாக்குதல்களிருந்து கடும் காயத்துடன் உயிர் பிழைத்துள்ளேன்" என்று கூறும் பாஸ்கரன் கடந்த ஏழு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் மின் வினைஞராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இலங்கை பாதுகாப்புப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதலே தனது வாழ்க்கையில் கண்ட மோசமான மற்றும் மறக்க முடியாத சம்பவம் என்று அவர் கூறுகிறார்

 

"2008ஆம் இறுதிப்பகுதி அல்லது 2009ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதியாகவோ இருக்குமென்று எண்ணுகிறேன். அப்போது நாடுமுழுவதும் உச்சகட்ட போர் நடைபெற்று கொண்டிருந்தது. இரத்த காயமின்றி மக்களையோ அல்லது பிணங்கள் அற்ற பகுதிகளையோ பார்க்க முடியாத சூழ்நிலை நிலவியபோது, செஞ்சிலுவை சங்க உறுப்பினரான நான் வன்னியின் புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள மருத்துவமனையில் உதவி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். 

ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம், இரண்டாயிரம் பேர் அந்த மருத்துவமனைக்கு வந்து செல்வர். இந்நிலையில், இலங்கை ராணுவத்தின் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் திடீரென்று மருத்துவமனையை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் தரைமட்டமானதுடன், ஏற்கனவே காயமடைந்து அறைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் உடல் சிதறி உயிரிழந்ததை என் கண்ணால் பார்த்தேன்." 

“இரத்ததை அடைக்க வழியில்லாமல் மண்ணை பூசினர்” - போர்க்கால நினைவலைகள்Robert Nickelsberg

அதுமட்டுமின்றி, ராணுவத்தின் தாக்குதலில் படுகாயம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடலிலிருந்து வெளியேறிய இரத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கு தக்க மருத்துவ வசதியோ அல்லது துணிகூட இல்லையென்றும், அதன் காரணமாக மக்கள் மண்ணை எடுத்து இரத்தம் வெளியேறிய பகுதிகளில் அடைக்க தொடங்கினர் என்று அவர் மேலும் கூறுகிறார்.

"தனக்குத்தானே மனித குலம் இதுபோன்ற பேரழிவை, அவலநிலையை ஏற்படுத்துவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. பிஞ்சு குழந்தைகளும், தாயுடன் சேர்ந்து அவரது வயிற்றினுள்ளேயே இறந்துபோன சிசுக்களும் என்ன பாவம் செய்தன? இந்த போர் காட்சிகள் கடந்த பத்து ஆண்டுகள் மட்டுமல்ல, இனி எத்தனை ஆண்டுகள் நான் உயிர் வாழ்கிறேனோ அத்தனை ஆண்டுகளும் எனது மனதை விட்டு விலகாது" என்று கூறும் பாஸ்கரனால் தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-48305606

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையில் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.