கிருபன்

இலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்

Recommended Posts

இலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்

சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 
உமேஸ்வரன் அருணகிரிநாதன்UMESHWARAN உமேஸ்வரன் அருணகிரிநாதன்

(ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் மூன்றாவது பகுதி இது.)

இலங்கை அரசுப்படைகளுக்கும், விடுதலை புலிகள் தரப்புக்குமிடையே கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவற்று இன்றுடன் (மே 18) பத்தாண்டுகளாகிறது. 

பத்தாண்டுகளில் நீதி நிலைநாட்டப்படவில்லை; இலங்கையில் தமிழர்களுக்கு இன்னமும் சம நீதி வழங்கப்படவில்லை; சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் - என்பது போன்ற பல்வேறு குரல்கள் இன்னமும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

ஆனால், ஓரடி முன்னோக்கி வைத்தால், இரண்டடி பின்னோக்கி தள்ளிவிட்ட வாழ்க்கையில் மனம் தளராமல் எதிர் நீச்சலடித்து, இலங்கையிலிருந்து ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து அந்நாட்டின் புகழ்மிக்க மருத்துவராக உயர்ந்திருக்கிறார் உமேஸ்வரன் அருணகிரிநாதன். இலங்கை தமிழர்களுக்கிடையே, குறிப்பாக புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கிடையே பரவலாக அறியப்படும் இதயமாற்று அறுவை சிகிச்சை நிபுணரான உமேஸ்வரனின் வாழ்க்கை பயணத்தை அறிவதற்காக பிபிசி அவரிடம் பேசியது.

"தூக்கத்தில் துடித்தேன்"

உமேஸ்வரனின் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள்; இரண்டாவது குழந்தையான இவர்தான் குடும்பத்தின் முதல் ஆண் குழந்தை. இவருக்கு ஒரு அக்கா, இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி என பெரிய குடும்பமாக உற்றார் உறவினர் சூழ யாழ்ப்பாணம் அருகேயுள்ள புத்தூரில் வாழ்ந்து வந்தனர்.

"எனக்கு அப்போது எட்டு வயதிருக்கும். அப்போது, எனக்கு உள்நாட்டுப் போரின் தீவிரமும், அர்த்தமும் தெரிந்திருக்கவில்லை. அந்த சமயத்தில்தான் என் வாழ்க்கையில் முதல் முறையாக ராணுவத்தால் கொல்லப்பட்ட ஒருவரை பார்க்க நேர்ந்தது.

சகோதர, சகோதரிகளுடன் உமேஸ்வரன் (வலமிருந்து இரண்டாவது)UMESHWARAN சகோதர, சகோதரிகளுடன் உமேஸ்வரன் (வலமிருந்து இரண்டாவது)

எங்களது வீட்டருகே நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவரை பார்ப்பதற்காக நாங்கள் சென்றிருந்தபோது, எனது கண்களை அம்மா கையால் மூடிக்கொண்டார். ஆனால், எப்படியோ கண்ணை கொஞ்சம் திறந்து படுகாயங்களுடன் உயிரிழந்திருந்த அந்த நபரை பார்த்துவிட்டேன்.

அன்றைய தினம் முதல் இன்றுவரை அந்த காட்சிகள் மனதில் ஓடும் போதெல்லாம் உடல் முழுவதும் வியர்க்கிறது; தூக்கம் பறிபோகிறது; பயம் படருகிறது" என்று உள்நாட்டுப் போரின் வீரியத்தை உணர்ந்த நாள் குறித்து உமேஸ்வரன் விளக்குகிறார்.

'குண்டு வீசிய முதலை'

உள்நாட்டுப் போரின்போது இலங்கை ராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களை தாங்கள் முதலை என்று அழைத்ததாக கூறும் உமேஸ்வரன், தனக்கு சுமார் பத்து வயதிருக்கும்போது, தங்களது குடியிருப்பு பகுதிகளை சுற்றி வளைத்த ராணுவம் முதலைகளை (ஹெலிகாப்டர்களை) கொண்டு குண்டு மழையை பொழிந்ததாக கூறுகிறார்.

 

"முதலில் எங்களது பகுதியை வட்டமிட ஆரம்பித்த முதலையை பார்த்த அம்மா, முன்னெச்சரிக்கையாக எங்கள் ஐந்து பேரையும் வீட்டருகே இருந்த மரத்தினடியில் எங்களை தனித்தனியே உட்கார வைத்தார். அருகிலுள்ள வீடுகளை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளை கூடவே வைத்திருந்த நிலையில், எனது அம்மாவின் செயல் அப்போது எனக்கு கோபமூட்டியது. ஆனால், இப்போதுதான் அதன் முக்கியத்துவம் புரிகிறது. 

இப்படி போரின் காரணமாக நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டிருக்க, மற்றொரு புறம் ஒரு சிறுநீரகம் செயலிழந்ததாலும், போதிய சிகிச்சை அளிக்க வசதி இல்லாததாலும் எனது அக்கா உயிரிழந்துவிட்டார். அவரது மறைவு எங்களுக்கு பேரிடியாக அமைந்தது. அப்போது, 'நீ நல்லா படிச்சு மருத்துவர் ஆகணும், நம்ம வீட்லயே ஒரு மருத்துவர் இருந்தா இந்த மாதிரி நடக்காம பாத்துக்கலாம்' என்று என்னிடம் அம்மா கூறியதே நான் பல்வேறு தடைகளையும் கடந்து மருத்துவராவதற்கு அடிப்படை" என்று உமேஸ்வரன் கூறுகிறார்.

“இரத்ததை அடைக்க வழியில்லாமல் மண்ணை பூசினர்” - போர்க்கால நினைவலைகள்Robert Nickelsberg

அதே சூழ்நிலையில், ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த உமேஸ்வரனின் ஆசிரியர்கள் போரின் காரணமாக பள்ளிக்கு வராததாலும், இவரது பெற்றோர்கள் அனுப்ப விரும்பாததாலும் கல்வி அதோடு தடைபட, குடும்பத்தின் வறுமை நிலையை கருதி மண்ணெண்ணெய் வாங்கி விற்று வீட்டிற்கு உதவியதாக அவர் மேலும் கூறுகிறார்.

கொழும்பை நோக்கி முதல் பயணம் 

உள்நாட்டுப் போரின் காரணமாக ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்க்கையும், கல்வியும் பாதிக்கப்பட, அச்சமயத்தில் 12 வயதை எட்டிய தான் விடுதலை புலிகள் அமைப்பில் சேர்ந்துவிடுவேனோ என்ற பயம் தனது தாயாருக்கு ஏற்பட்டதாக கூறும் உமேஸ்வரன், அதன் காரணமாக அக்கம்பக்கத்தினரிடம் பேசி, தன்னை ஜெர்மனிக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டதாக கூறுகிறார்.

"ஜெர்மனிக்கு கொழும்பிலிருந்துதான் செல்ல முடியுமென்பதால், நானும் அம்மாவும் யாழ்ப்பாணத்திலிருந்து காலடியாகவும், லாரி, பேருந்து, ரயில் போன்றவற்றின் மூலமாகவும் போர் நடைபெற்று கொண்டிருந்த பல்வேறு பகுதிகளையும், ராணுவத்தின் பரிசோதனைகளையும் தாண்டி எட்டு நாட்களில் கொழும்பை சென்றடைந்தோம். 

தற்காலத்தில் கூகுளில் சொடுக்கிய அடுத்த நிமிடமே எல்லா விவரங்களும் கிடைக்கின்றன. ஆனால், அப்போது சரியான முகவரை தேடி கண்டுப்பிடிப்பதும், முடிவுகளை எடுப்பதும் மிகவும் கடினமான காரியமாக இருந்தது. தங்குவதற்கு வீடின்றி வாகன நிறுத்துமிடத்தில் தங்கி எனக்கு தேவையான பாஸ்போர்ட், ஜெர்மனிக்கு அழைத்து செல்வதற்கு உதவும் முகவர் போன்றவற்றை இறுதி செய்வதற்கும், எனது வருகை குறித்து ஜெர்மனியில் இருக்கும் எனது தாய் மாமாவிடம் இசைவுபெறுவதற்கு ஆறு மாதங்களாகி விட்டது. 

உமேஸ்வரன்UMESHWARAN

இந்நிலையில், சம்பவ தினத்தன்று, அதிகாலையிலேயே அம்மா என்னை எழுப்பி, நான் தனியாக வெளிநாடு செல்லவுள்ளதாக தெரிவித்தார். ஆனால், அம்மா என்னுடன் வரவில்லை என்று தெரிந்ததும், நான் அழத் தொடங்கிவிட்டேன். அம்மா உடனடியாக என்னை சமாதானப்படுத்தியதுடன், 'எக்காரணம் கொண்டும் ரகசியம் வெளியிட கூடாது, குடிப்பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது', 'நன்றாக படித்து டாக்டராக வேண்டும்' உள்ளிட்ட விடயங்களை விளக்கினார்" என்று தனது நினைவலைகளை பட்டியலிடுகிறார் உமேஸ்வரன்.

ஐந்து நாடுகள்; ஆறு மாதகால போராட்ட வாழ்க்கை 

12 வயதில் கண்ணீருடன் இலங்கையிலிருந்து தன்னந்தனியாக புறப்பட்ட உமேஸ்வரனின் ஜெர்மனியை நோக்கிய பயணம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களானது. ஆம், முன்பின் தெரியாத பத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுடன் முதலில் கொழும்புவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற அவர், இரண்டு வாரங்களுக்கு ஒரே அறையில் அடைக்கப்பட்டு அங்கிருந்து, துபாய் வழியாக கானாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 

"ஜெர்மனிக்கு வர வேண்டிய நான், துளியும் சம்பந்தமில்லாத பல்வேறு நாடுகளுக்கு அடுத்தடுத்து அழைத்துச் செல்லப்பட்டது எனக்கு பயத்தை உண்டாக்கியது. ஆனால், கானாவுக்குள் வந்திறங்கி, என்னைவிட கருப்பான மக்களை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. ஏனெனில், எனக்கு சிறுவயதிலிருந்தே 'நான்தான் ரொம்ப கறுப்பு' என்று நினைத்திருந்த நிலையில், எனக்கு இது மிகவும் ஆச்சர்யமானதாக இருந்தது" என்று உமேஸ்வரன் கூறுகிறார்.

கானாவில் உமேஸ்வரன் அழைத்து செல்லப்பட்ட இடத்தில் ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் இருந்தனர். இந்நிலையில், ஒரே இடத்தில் மூன்று மாதங்களுக்கு மேலாக இருந்த நிலையில், அருகிலுள்ள டோகோ நாட்டிற்கு கானாவின் எல்லை வழியே சட்டவிரோதமாக முகவர் செல்லுமாறு கூறியதாகவும், அதன் பிறகு மீண்டும் ஒரு மாதம் கழித்து பழைய இடத்திற்கே வந்ததாகவும் உமேஸ்வரன் கூறுகிறார்.

“இரத்ததை அடைக்க வழியில்லாமல் மண்ணை பூசினர்” - போர்க்கால நினைவலைகள்Buddhika Weerasinghe

"இடைப்பட்ட காலத்தில் எனக்கு 13 ஆகியது. என்னுடைய காத்திருப்பு நேரம் அதிகமானதால், ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுந்தான் உணவு தர முடியுமென்று முகவர் கூறிவிட்டார். நான் தவித்தது ஒரு புறமிருக்க, என் தாய்-தந்தை-சகோதர, சகோதரிகள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பது கூட தெரியாமல் நான் பரிதவித்தேன். இந்நிலையில், மீண்டும் அங்கிருந்து நைஜீரியாவுக்கு அழைத்துச் சென்றார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் சுமார் இரண்டு வாரகாலம் இருந்த உமேஸ்வரன், பின்பு போலி விசா மூலம் ஸ்பெயின் வழியாக ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரை சென்றடைந்தார். 

'அரவணைத்த ஜெர்மனி'

போலி விசாவின் மூலமாக நைஜீரியாவிலிருந்து புறப்பட்ட உமேஸ்வரன், அதே விசாவுடன் ஜெர்மனியில் தரையிறங்கினால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தனது முகவர் சொல்லி கொடுத்தபடி, அந்த விமானத்தில் பயணித்த இலங்கை தமிழர்கள் ஒன்றன் பின்னொன்றாக கழிவறைக்கு சென்று தங்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கிழித்து போட்டுவிட்டு வந்ததாக உமேஸ்வரன் கூறுகிறார்.

 

"பாஸ்போர்ட்டை கிழித்து போட்டவுடன், ஜெர்மனியில் தரையிறங்கியதும், 'என் உண்மையான பெயரை எக்காரணம் கொண்டும் சொல்ல கூடாது' உள்ளிட்ட முகவர்கள் அளித்த வழிமுறைகளை மனதில் நிலைநிறுத்திக் கொண்டேன். பிராங்க்பர்ட் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், மற்ற பயணிகளை போல வெளியேறினோம். விமான நிலையத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியே சென்றுவிடலாம் என்று அந்த விமானத்தில் பயணித்த நாங்கள் அனைவரும் திட்டமிட்டிருந்த நிலையில், நான் என்னையே அறியாமல் நன்றாக தூங்கிவிட்டேன்.

தூங்கி எழுந்து பார்த்ததும், ஜெர்மானிய காவல்துறை அதிகாரி ஒருவரும், மொழிபெயர்ப்பாளராக தமிழர் ஒருவரும் இருந்தனர். இலங்கை உள்நாட்டுப் போரின்போது நான் நேரில் கண்ட விடயங்கள், அந்த காவல்துறை அதிகாரியை பார்த்ததுமே அச்சமடைய வைத்தது. ஆனால், அவர்கள் ஆச்சர்யமளிக்கும் வகையில், என்னிடம் மிகவும் பணிவாக நடந்துக்கொண்டனர். என் பெயர் உள்ளிட்ட சில விவரங்களின் ரகசியத்தை காத்தாலும், என்னுடைய அவலநிலையை எடுத்து கூறினேன். 

போரிலிருந்து ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்UMESWARAN

ஆச்சர்யமளிக்கும் வகையில், அந்த காவல்துறை அதிகாரி என்னைப் பார்த்து புன்முறுவல் செய்துவிட்டு, சாக்கலேட் ஒன்றை அளித்தார். அது எனக்கு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பிறகு, என்னை போன்ற சிறுவர்களை வைத்திருக்கும் அறைக்கு அழைத்து சென்று, பீட்சா போன்ற உணவுகளை கொடுத்தனர். என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக அப்போதுதான் பீட்சாவை சாப்பிட நேர்ந்தது; ஆனால், எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. 

இந்நிலையில், ஜெர்மனியில் இருக்கும் என் மாமாவின் அலைபேசி எண்ணை விமான நிலைய அதிகாரிகளிடம் கொடுக்க அவரை வரவழைத்து தகுந்த ஆவணங்களை சரிபார்த்த பின் அவரது வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்" என்று உமேஸ்வரன் விளக்குகிறார்.

தமிழை தவிர்த்து வேறெந்த மொழியிலும் அப்போது புலமை இல்லாத உமேஸ்வரன், ஜெர்மன் மொழி பெரும்பான்மையாக இருக்கும் அந்நாட்டிற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொள்வதற்காக ஆறு மாதங்கள் மொழிப் பயிற்சியை பெற்ற பிறகு, நேரடியாக ஏழாவது வகுப்பில் சேர்க்கப்பட்டார்.

நிலையான முன்னேற்றமும், திடீர் வீழ்ச்சியும் 

ஏழாம் வகுப்பு முதல் ஜெர்மன் மொழி மட்டுமின்றி, அதன் மக்கள், வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள், உணவு முறை போன்றவற்றை படிப்படியாக கற்றுக்கொண்டு வந்த உமேஸ்வரனுக்கு 9ஆம் வகுப்பு படிக்கும்போது அவரது வாழ்வின் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று நடந்ததாக கூறுகிறார்.

"9ஆம் வகுப்பு படிக்கும்போது ஜெர்மன் மொழியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உரையாட கற்றுக்கொண்ட சமயத்தில், எனது வகுப்பிற்கான மாணவ தலைவனை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் ஆறாம் வகுப்பு வரை படித்த நான் வகுப்பின் மாணவ தலைவனாகவும் செயல்பட்டதை போன்று, இங்கேயும் இருக்க விரும்புகிறேன் என்று தெரிவிக்க, வகுப்பின் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமின்றி, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எங்களது ஒட்டுமொத்த பள்ளியின் தலைவனாகவும் விளங்கினேன்.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருந்த நிலையில், நான் பத்தாம் வகுப்பு படித்த முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று ஜெர்மானிய அரசிடமிருந்து உத்தரவு வந்ததை கண்டு அதிர்ந்துவிட்டேன். ஒருகட்டத்தில் மொட்டை மாடிக்கு சென்று, தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு சென்றுவிட்டேன். 

போரிலிருந்து ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்UMESHWARAN

பின்பு, எனது அம்மா பட்டப் பாட்டையும், நான் ஜெர்மனியை அடைவதற்கு பட்ட வேதனையையும் நினைத்து பார்த்தேன். மறுதினம் பள்ளிக்கு சென்று அனைவரிடமும் இந்த தகவலை பகிர்ந்து கொண்டேன். அதைத்தொடர்ந்து, பள்ளியில் என்னுடன் படித்தவர்கள், ஆசிரியர்கள் என பலரும் இணைந்து பணம் திரட்டி அரசின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தோம். 

நாங்கள் மேற்கொண்ட முதல்கட்ட முயற்சியின் காரணமாக பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை ஜெர்மனியில் இருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஹம்பர்க் நகர மாணவ தலைவர்கள் குழுவில் ஒருவனான என்னை, அம்மாகாணத்தின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட நான், என் வாழ்க்கை பயணத்தை விளக்கியதுடன், நான் ஜெர்மனிலேயே இருப்பதற்கான அனுமதியை அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினேன்" என்று தனது பள்ளி வாழ்க்கையின் முக்கிய தருணங்களை விவரிக்கிறார் உமேஸ்வரன்.

கனவு நனவானது 

ஹம்பர்க் மாகாண நாடாளுமன்றத்தில் உமேஸ்வரனது உரையை கேட்டவர்கள், அவரை தொடர்ந்து ஜெர்மனிலேயே தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் ஒருபகுதியாக, பள்ளிப்படிப்பை முடித்த அவரது கனவான மருத்துவத்தில் சேர்ப்பதற்கு உதவியது மட்டுமின்றி, அவரை தற்காலிகமாக டென்மார்க் அனுப்பி, அங்கிருந்து பல்கலைக்கழக படிப்பை படிப்பதற்காக மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்க வைத்து, அவரை மீண்டும் ஜெர்மனிக்கு வரவழைப்பது வரையிலான பல்வேறு உதவிகளை ஆசிரியர் ஒருவர் தானே முன்னின்று செய்ததாக அவர் கூறுகிறார்.

 

"1999ஆம் ஆண்டு நான் எனது மருத்துவப் படிப்பை தொடங்கினேன். என்னுடைய படிப்பு முதல் தங்குமிடம், இலங்கையில் வாழும் குடும்பத்தினருக்கு உதவி செய்வது வரை அனைத்திற்கும் தேவையான பணத்தை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டே பகுதிநேரமாக பணி செய்து சம்பாதித்தேன். எனது படிப்பின் கடைசி ஆறு ஆண்டுகள் நான் படித்த பல்கலைக்கழகத்திலேயே பகுதிநேரமாக பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது. படிப்பு, இரவுநேரத்தில் பணி என்று இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ததால், ஆறாண்டுகளில் முடிக்க வேண்டிய படிப்பை நான் எட்டாண்டுகளில் முடித்தேன்.

அதன் பிறகு, இருதய அறுவை சிகிச்சை நிபுணருக்கான பயிற்சியை கடந்த பதினோரு ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த நான், இனவெறி உள்ளிட்ட பல்வேறு தடைகளையும் தாண்டி, இம்மாத தொடக்கத்தில் எனது பட்டத்தை பெற்றுள்ளேன். இதன் மூலம் என்னுடைய தனிப்பட்ட கனவு மட்டுமின்றி, எங்களது ஒட்டுமொத்த குடும்பத்தினரின் கனவும் நிறைவேற்றியுள்ளது" என்று பெருமையுடன் கூறுகிறார் உமேஸ்வரன் அருணகிரிநாதன்.

ஜெர்மனி அதிபரின் பாராட்டு 

போரிலிருந்து ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்UMESHWARAN

இலங்கை உள்நாட்டுப் போர் முதல் ஜெர்மனியின் புலம்பெயர்ந்தவர்கள் சமுதாயத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாளராக உயர்ந்தது வரையிலான தனது வாழ்க்கை பயணத்தை அடிப்படையாக வைத்து, உமேஸ்வரன் இதுவரை இரண்டு புத்தகங்களை ஜெர்மானிய மொழியில் எழுதியுள்ளார். 

"மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற எனது புத்தகங்கள் குறித்து தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நான் பேசியதை கேட்ட ஜெர்மன் நாட்டின் உள்துறை அமைச்சர், அந்நாட்டு அதிபர் தலைமையில் நடைபெறும் அகதிகள் தொடர்பான நிகழ்ச்சியில் என்னை சிறப்புரை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். 

அதன்படி, சென்ற ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான விழாவில், 'நான் பார்ப்பதற்குதான் வேறொரு நாட்டை சேர்ந்தனாக தெரிகிறேன்; ஆனால், உள்ளுக்குள்ளே நான் ஜெர்மானியன்; அது என்னுடன் பழகினால்தான் தெரியும்' என்ற பொருளை உதாரணத்துடன் விளக்கினேன். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் என்னிடம் பேசிய ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல், என்னை வெகுவாக பாராட்டினார்."

போரும், குடும்பமும் 

2016ஆம் ஆண்டு தனது சகோதர, சகோதரிகளை உமேஸ்வரன் சந்தித்தபோது எடுத்த படம்UMESHWARAN 2016ஆம் ஆண்டு தனது சகோதர, சகோதரிகளை உமேஸ்வரன் சந்தித்தபோது எடுத்த படம்

எனது வாழ்வின் ஒட்டுமொத்த வெற்றிக்கும் காரணமான எங்களது அம்மா, என்னுடைய இரு தங்கைகள் மற்றும் ஒரு தம்பியை பெரும்பாடுபட்டு நல்ல நிலைக்கு கொண்டுவந்தார்; தற்போது அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் குடிமகன்களாக உள்ளனர்.

ஆனால், பல்வேறு காரணங்களினால், எங்களது அம்மாவை நான் இலங்கையிலிருந்து கிளம்பிய 15 ஆண்டுகளுக்கு பிறகு சகோதர, சகோதரிகளுடன் இணைந்து 2005ஆம் ஆண்டுதான் லண்டனில் சந்திக்க முடிந்தது. அதன் பிறகு எங்களது தந்தையை இயற்கை எய்துவிட்டார். நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு நாட்டில் இருந்தாலும், தனது பாரம்பரியத்தையும், சொந்த மண்ணையும் விட்டுக்கொடுக்க முடியாத எங்களது அம்மா தற்போது இலங்கையிலே வசித்து வருகிறார்" என்று தனது வாழ்க்கையின் பெருமைமிகு தருணங்களை உமேஸ்வரன் அருணகிரிநாதன் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

கடைசியாக, தனது குடும்பம் சிதறுண்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து, உறுப்புகளை இழந்து, லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் நீங்கா வடுவை ஏற்படுத்திய இலங்கை உள்நாட்டுப் போருக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், அதுவே மக்களுக்கு நீதியை பெற்றுத்தரும் ஒரே வழியென்றும் உமேஸ்வரன் கூறுகிறார்.

 

 

https://www.bbc.com/tamil/sri-lanka-48313022

 

Share this post


Link to post
Share on other sites

இவர் போன்ற வல்லுநர்கள் தொடர்ந்து எமது மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டல் வேண்டும் :

"  கடைசியாக, தனது குடும்பம் சிதறுண்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து, உறுப்புகளை இழந்து, லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் நீங்கா வடுவை ஏற்படுத்திய இலங்கை உள்நாட்டுப் போருக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், அதுவே மக்களுக்கு நீதியை பெற்றுத்தரும் ஒரே வழியென்றும் உமேஸ்வரன் கூறுகிறார்." 

Share this post


Link to post
Share on other sites

இவர் போன்ற வல்லுனர்கள்.. ஒன்றும் செய்ய வேண்டாம்.. போரில் பாதிக்கப்பட்டு அவயவங்கள் இழந்து.. தமது அன்றாடக் கடமைகளுக்கே அடுத்தவர்களைச் சார்ந்திருக்கும் சொந்த மொழி பேசும் மக்களுக்கு உதவி செய்யலாம்.

அடுத்தவர் வந்து எம்மை அழித்தவர்களை.. தண்டித்து நீதி வழங்கி.. பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு நிவாரணமும் நட்ட ஈடும்.. உதவிகளும் பெற்றுத் தருவார்கள் என்று நினைத்தால்.. அது நடக்காது. அதை எம்மில் சிலரே குழப்பி அடித்துவிடுவார்கள்.. அவ்வளவு சிங்கள எஜமான விசுவாசம் அவர்களிடம்.

 அந்த வகையில்.. மக்களையும் மண்ணையும் காட்டி.. வெறும் 13 வயதில் அச்சம் காரணம்.. நம்ப முடியவில்லை.. இருந்தாலும்..  நாட்டை விட்டு வெளியேறி.. அசூர் அடிச்சதுக்கு.. மனச்சாட்சியான செயற்பாடாக இருக்க முடியும். 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள்..💐

Share this post


Link to post
Share on other sites
28 minutes ago, nedukkalapoovan said:

அந்த வகையில்.. மக்களையும் மண்ணையும் காட்டி.. வெறும் 13 வயதில் அச்சம் காரணம்.. நம்ப முடியவில்லை.. இருந்தாலும்..  நாட்டை விட்டு வெளியேறி.. அசூர் அடிச்சதுக்கு.. மனச்சாட்சியான செயற்பாடாக இருக்க முடியும். 

எல்லோரும் ஸ்ருடன்ற் விசாவில் வரமுடியுமா?

யுத்தம் ஒன்றே பலரை நாட்டைவிட்டு ஓடச்செய்தது. குடும்பங்கள் சிதறி நாட்டுக்கொருவராய் போய் வாழவேண்டும் ஒரு தாயும் விரும்புவதில்லை.

Share this post


Link to post
Share on other sites
16 minutes ago, கிருபன் said:

எல்லோரும் ஸ்ருடன்ற் விசாவில் வரமுடியுமா?

யுத்தம் ஒன்றே பலரை நாட்டைவிட்டு ஓடச்செய்தது. குடும்பங்கள் சிதறி நாட்டுக்கொருவராய் போய் வாழவேண்டும் ஒரு தாயும் விரும்புவதில்லை.

அவர் சொல்லி இருக்கிறார் தான் 13 வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பில் போய் சேர்ந்து விடுவேனோ என்ற அச்சத்தில் தான் தங்கள் அம்மா.. நாட்டை விட்டு வெளியேற்றியதாக. போர் இராணுவ ஆக்கிரமிப்பு.. அரச படைகளின்.. வான் தாக்குதல்.. செல் தாக்குதல்.. இதுக்கெல்லாம் அவரின் அம்மா அச்சப்படவில்லை. 

ஆனால்.. அதே அம்மா.. இன்றும் ஊரில் தான் இருக்கிறார். விடுதலைப் புலிகள் போய் எதுக்கு உன் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பினாய்.. போராட விடாமல் என்று அவரின் அம்மாவை அச்சுறுத்தவில்லை தானே.

பிபிசி சொன்ன படி எழுதுதா.. இல்ல இரு தரப்பும் திரிக்குதா.

இவர் முதலை என்று சொல்வது ஹிந்திய வான்படை ஈழத்தில் முதற்தடவையாக வான் தாக்குதலில் பயன்படுத்தி MI 24 தாக்குதல் ஹெலிக்கொப்டர்கள். அதுவே சாவகச்சேரி சந்தை படுகொலையையும் நடத்தி முடித்தது.

ஆனால்.. பிபிசி.. அதைச் சொல்லவில்லை. சொறீலங்கா வான்படை MI 24 தாக்குதல் ஹெலிக்கொப்டர்களை ஆனையிறவு முற்றுகை தாக்குதலுக்கு (ஆகாய கடல் வெளி) பின்னரே பாவிக்க ஆரம்பித்தது. 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, nedukkalapoovan said:

. போர் இராணுவ ஆக்கிரமிப்பு.. அரச படைகளின்.. வான் தாக்குதல்.. செல் தாக்குதல்.. இதுக்கெல்லாம் அவரின் அம்மா அச்சப்படவில்லை

அப்படி ஊகிப்பது தவறு. போருக்கு எல்லோரும்தான் அச்சப்பட்டார்கள். 

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, கிருபன் said:

அப்படி ஊகிப்பது தவறு. போருக்கு எல்லோரும்தான் அச்சப்பட்டார்கள். 

அப்ப ஒரு இனத்தின் வேதனையின் சாட்சியமாக ஒரு சர்வதேச ஊடகத்துக்கு கருத்துச் சொல்லும் போது குறைந்தது உண்மையை உள்ளபடி சொல்லலாம் தானே. அதில் என்ன வெட்டி விடுவிப்பு. இப்படித்தான் இவர் மருத்துவ சேவையும் ஆற்றுவாரோ..??! அப்படி ஆற்றி இருந்தால்.. இந்த மதிப்பு வந்திருக்குமா..??! 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, nedukkalapoovan said:

அப்ப ஒரு இனத்தின் வேதனையின் சாட்சியமாக ஒரு சர்வதேச ஊடகத்துக்கு கருத்துச் சொல்லும் போது குறைந்தது உண்மையை உள்ளபடி சொல்லலாம் தானே. அதில் என்ன வெட்டி விடுவிப்பு. இப்படித்தான் இவர் மருத்துவ சேவையும் ஆற்றுவாரோ..??! அப்படி ஆற்றி இருந்தால்.. இந்த மதிப்பு வந்திருக்குமா..??! 

மதிப்பு வந்ததினால்தான் அந்தத் தமிழனை உங்களுக்கும் தெரியவந்தது, உலகத்திற்கும் தெரிந்தது. நாங்கள் தமிழரும் வளையத்தான் வேண்டும். வளையாது நிமிர்ந்து வளர முற்பட்டதால் இன்று முறிந்துபோய்க் கிடக்கிறோம்.

 

Share this post


Link to post
Share on other sites

இங்கு சிலர் கூறுகிறார்கள் ஊரில் மூண்டாம் வகுப்பும் படிக்காது ஏஜன்சிக்காரனுக்கு காசைக்கொடுத்து வந்ததுகள் எல்லாம் இப்ப தெருவில நிண்டுகொண்டு போர்க்குற்றம் தமிழ்த்தேசியம் அது இது எண்டு கத்துதுகள் என. ஆனால் அப்படிக்கூறுபவர்கள்தான் மூண்டாம் வகுப்புக்கும் போகாமல் இங்க அனாமத்தாக வந்து தாங்கள்தான் ஐரோப்பியாவின் சிறப்புப்பிரசைகள் என கூறுகிறார்கள் என்பது வேறுவிடையம்.

ஆனால் இந்தாள் என்னடாவெண்டால் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் எனக்கூறுகிறர் வாழ்த்துக்கள் உங்கள் எண்ணத்துக்கு உங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவோம்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Paanch said:

மதிப்பு வந்ததினால்தான் அந்தத் தமிழனை உங்களுக்கும் தெரியவந்தது, உலகத்திற்கும் தெரிந்தது. நாங்கள் தமிழரும் வளையத்தான் வேண்டும். வளையாது நிமிர்ந்து வளர முற்பட்டதால் இன்று முறிந்துபோய்க் கிடக்கிறோம்.

நாம் வளைந்து நின்ற போது சத்தப்படாமல் மிதிக்கப்பட்டோம்.

நிமிர்ந்து நின்ற போது வல்லாதிக்க உலகம் கூடி வீழ்த்த வேண்டிய அளவுக்கு நிமிர்ந்தோம்.

இதில் இருந்து எதனை தெரிவு செய்வது நல்லம் என்பதை நாம் தான் தீர்மானிக்கனும். 

இவர் ஒருவரின் கூற்றுக்கு மதிப்பளித்து..  தமிழர்களை அழிக்க உதவி செய்த.. செய்கிற ஜேர்மனி  அதை நிறுத்தும் அல்லது அதற்காக ஒரு மன்னிப்பு.. ஏன் வருத்தம் தெரிவிக்கும் என்று கூட இல்லை.

நாமே நமக்குள் பெருமை கொள் தான். 

Share this post


Link to post
Share on other sites

கடும் சிரமப்பட்டு  ஜெர்மனி வந்து முன்னேறிய வைத்தியருக்கு வாழ்த்துக்கள்.....!  👍

Share this post


Link to post
Share on other sites

இதில என்னதான் இவர் கஷ்டப்பட்டு முன்னேறினார் அல்லது மருத்துவரானார் என்று தெரியவில்லை. 12 வயதில் சிறுவனாக போன ஒருவர் அங்கிருக்கும் மொழியை படித்து, அந்நாட்டில் இருக்கும் வசதி பல வாய்ப்புக்கிளை / சலுகைகளை இலவசமாக் அனுபவித்து (ஜெர்மனில் பல்கலைகழக கல்வி இலவசம் என கேள்விப்பட்டுள்ளேன்) படித்து ஒர் வைத்தியராவது என்ன புதுமையா? 

வடக்கு கிழக்கில் போரினால் பெற்ரோரை இழந்து எத்தனையோ பிள்ளைகள் டியுசன் கொடுத்து கஷ்டப்ப்பட்டு படித்து வருகின்றார்கள் அவர்களே என் பார்வையில் சிறந்த சாதனையாளர்கள்.   

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

இங்கு சிலர் அவரை சாடி கருத்து பகிர்வது அதிருப்தியாக  இருக்கிறது.

மனிதன் முதலில் இயற்கையிடம் இருந்தே கற்றுக்கொள்ள தொடங்கினான் 
பின்பு கற்றுக்கொண்ட மனிதர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள தொடங்கினான் 
இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள எவ்ளவோ இருக்கிறது. 

அதுவும் குறிப்பாக யாழ்ப்பாண தமிழாராக இருந்து சொந்த ஈகோவை 
விடுவிப்பது என்ற ஒன்றை எல்லா யாழ்பாணத்தனும் இவரிடம் கற்றுக்கொள்ள முடியும். 

எங்கு இருந்து வந்தேன் என்பதை தெளிவாக புரிந்த ஒரு மனிதன்தான் 
இங்கு செல்ல வேண்டும் என்று இலக்கு வைத்து அங்கு சென்றடைகிறான்.

சாதாரணமாக ஒரு அயல் நாட்டு மொழியை தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் 
கிடைத்தால் பாதி யாழ்பாணத்தனுக்கு சொந்த தமிழ் மறந்து போகிறது.
இதை மூன்று நாலு ஆங்கில சொல் தெரிந்த யாழ் கல்லூரி மாணவர்களிடையேயே 
சாதாரணமாக காணலாம்.

இவர்களுடைய உதவிகள் நாட்டுக்கு சென்றுகொண்டே இருக்கும் 
இவர் ஜேர்மன் அதிபர் முன்னிலையிலேயே எமது நாட்டு நிலைமை பற்றி பேசி இருக்கிறார் 
அது தமிழர்கள் பற்றிய ஒரு நல் எண்ணத்தை ஜேர்மன் அரசியல் வாட்டாரத்தில் உண்டு பின்னி இருக்கும். 

இவர்களுடைய பண பரிமாற்றம்கள் கண்காணிப்பில் இருக்கும் எம்மை போல காசு அனுப்பி கொண்டு 
இருக்க முடியாது. அமெரிக்காவில் ஒரு எகிப்த்து 70 வயது மூதாட்டி (மருத்துவர்)  பாலஸ்தீன சிறுவர்களின் கல்விக்கு பணம்  உதவி செய்து இருந்தார் பாலஸ்தீன காஸா பகுதி ஹாமாஸ் கட்டுப்பாடில் இருப்பதால் 
அந்த பணம் ஒரு மூன்றாம் தரப்பால் ஹமாஸின் ஊடாகவே கல்விக்கு சென்று அடைந்து இருக்கிறது  இது ஒரு சாதாரண  நிலைமை  புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலும் இதே நிலைமை முன்பு இருந்ததால் சாதாரணமாக இதை  புரிந்து கொள்ள முடியும். இப்போ ஹமாஸுக்கு பணம் கொடுத்தார் எனும் வழக்கில் மூதாட்டி  சிறையில் இருக்கிறார் ....... இவர்களின் செல்வ செழிப்பை அழிக்க வேண்டும் என்ற யூத பின்னணியை  கொண்டவர்களால் இது நிறைவேற்ற பட்டது என்பதை இலகுவாக புரிந்துகொள்ள முடியும். 

வெளிநாட்டவருக்கு எதிரானவர்கள்  அல்லது எதிரான போக்கு உடையவர்கள் என்பவர்கள் இப்படியான 
உயர்ந்தநிலையை எட்டுவோருக்கு எப்படியான முட்டு கட்டைகளை போடுகிறார்கள் என்பது இங்கு கருத்து பகிருக்கும்  சிலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்று எண்ணுகிறேன். 
12 வருடங்கள் முன்பு என்று எண்ணுகிறேன் பிரிட்டனில் 8 பிரான்ஸ் நாட்டை சேர்ந்த திறமை சாலி 
மைக்ரோ பையோலஜி மாணவர்கள்  ஒரு ஆராய்ச்சி கல்விக்காக சென்று இருந்த போது கொலைசெய்ய பட்டார்கள்  ஐரோப்பியர்களுக்கே இந்த நிலைமை உண்டு என்பதால் குறிப்பிடுகிறேன். 

நான் தமிழேண்டா!
என்று நிமிர்ந்து நிற்கும் இவருக்கு  இந்த ஒரு விடயத்துக்காகவே 
என் மனதில் எப்போதும் ஓர் உயர்ந்த இடம் உண்டு.
இங்கு யாழ் களத்தில் குப்பை கொட்டும் சிலரிடமே யாழ் மேட்டுக்குடி  திமிரை அவர்களின் 
சில கருத்த்துகளில் சாதாரணமாக பார்க்க முடியும்.... குறை குடங்கள்!

இப்படியான நிறைகுடங்கள் தளும்பாது என்பதால் இது நிறைகுடம்
என்பதை எளிதாக புடிந்துகொள்ள முடியும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் யாரை கடிகிறீர்களோ தெரியவில்லை..

உந்த மருத்துவம் என்பதை படித்துவிட்டால்.. அதுதான் சமூகத்தின் உயர்ந்த நிலை என்ற மனப்போக்குத்தான் யாழ்ப்பாண மேற்குடியின் அடிமட்ட சிந்தனை.

குறிப்பாக பிரித்தானியாவை பொறுத்தவரை.. உள்நாட்டு மருத்துவர்களை விட மருத்துவ சேவையில் அதிகம் இருப்பவர்கள் வெளிநாட்டவர்களே. சிறந்த மருத்துவ சேவைக்கான ராணியின் சேர் பட்டத்துடனான பாராட்டை.. ஒரு ஈழத்தமிழர் கூட பெற்றிருந்தார்.

இங்கிலாந்தில் மட்டும்... புலம்பெயர் ஈழத்தமிழர்களின் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த பலர் மருத்துவத்துறையில் இருக்கிறார்கள். அது ஒன்றும் கடினமும் கிடையாது. ஒன்றும் பெரிய படைக்கப்பட முடியாத சாதனையாக பிம்பப்படுத்தப்படுவதும் இல்லை. அது ஓர் தொழிற்சார் கல்வி. அவ்வளவே. 

பிரச்சனை அதுவல்ல. ஒரு உயர்ந்த நிலையை அடைந்ததும்.. தாங்கள் நடந்து வந்த தடங்கள் பற்றிய சரியான உண்மையை அப்படியே உலகுச் சொல்ல வேண்டும்... அதுதான் கற்வனுக்குரிய பண்பு. அதைவிடுத்து தங்கள் வசதிக்கு தேவைக்கு ஏற்ப தடங்களை.. தவிர்ப்பதும்.. குறுகிப்பதும்.. மாற்றுவதும்.. அந்த இனம் பட்ட வலிகளை விடுவிக்க உதவாது.

இத்தனை ஆயிரம் ஈழத்தமிழர்களுக்கு புகலிடம் கொடுத்த இதே ஜேர்மனி உட்பட்ட நாடுகள்.. விடுதலைப்புலிகளை தடை செய்து அழித்தது மட்டுமன்றி.. இன்று வரை பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஒரு உருப்படியான சர்வதேசப் பொறிமுறை மூலமான தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை என்றால்.. அது புலம்பெயர் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள்.. உட்பட அவர்களின் எல்லா வித செயற்பாடுகளின் முதிர்ச்சி இன்மையை.. தோல்வியையே காட்டுகிறது.

யூதர்கள் உலக நாடுகள்.. பூராவும் பரவி இருந்து தமக்கான ஆதரவை திரட்டிக் கொண்டு ஒரு தேசம் அமைத்தது போல்.. எம்மால் முடியவில்லை என்றால்.. அதற்குக் காரணம்.. நாமே நம் வலியின் உண்மைத் தன்மையை உலகுக்குச் சொல்லாததும்.. குறைத்து அல்லது திரித்துச் சொல்வதும் தான்.

சிறுவர் போராளிகள் பற்றி வெள்ளைக்காரனுக்கு படம் எடுத்துக் காட்டின எம் புலம்பெயர் மேதாவிகள்.. எவராவது போரால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள்.. போரால் அரச படைகளால் குண்டு வீசி அழிக்கப்பட்ட பாடசாலைகள்.. கொல்லப்பட்ட மாணவர்கள்.. பற்றிப் படம் பிடித்திருக்கிறார்களா..??!

ஒரு சிறுவர் போராளி எப்படி உருவாகிறான்..

இவர் கூட 13 வயதில்.. புலிக்குப் போயிடுவனோ என்ற பயத்தில் அம்மா வெளிநாட்டுக்கு.. அனுப்பினார் என்று தான் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.. ஆக.. இன்னொரு வாக்குமூலம் பதிவாகிறது.. புலிகள் இப்படியான திறமையான சிறுவர்களையும் போராளி ஆக்கினார்கள்.. அவர்களிடம் இருந்து தப்பி வந்த இவரை அடைக்கலம் கொடுத்து ஜேர்மனி ஒரு உயரிய மனிதனாக்கி விட்டது.. புனித தேசமாகி விட்டது என்று.

இதே ஜேர்மனி ஆயுதமும் பணமும் நன்கொடையும் கொடுத்து சிங்கள அரசை ஊக்குவித்துக் கொன்ற தமிழர்கள் எத்தனை..????! அதனை எத்தனை பேர் ஜேர்மனிக்கு அதன் மொழியில் சொல்லி உள்ளனர்... எம்மவர்கள்..???!

இதுதான் கேள்வியே..! இதுதான் இங்கு பேசப்படும் சாரம்.

மற்றும்படி.. இன்றைய நவீன உலகில் மருத்துவப்படிப்பு என்பது யுயுபி. அதை எல்லாம் யாரும் இப்போ பெரிதாகக் கணக்கிலும் எடுப்பதில்லை. பல மருத்துவர்கள் கிரிமினல்களாகவும் மாறி இருக்கிறார்கள். அது வேறு விடயம். 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

ஜேர்மன் மொழியில் மேர்கல் அம்மையாருக்கு முன்னால் உள்ள பேச்சும் வாத்தியாரின் மொழிபெயர்ப்பும் இன்னொரு திரியில் உள்ளது.

நெடுக்ஸின் பெயரும் பேர் சொல்லும் காலம் வராமலா போய்விடும்!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nedukkalapoovan said:

நீங்கள் யாரை கடிகிறீர்களோ தெரியவில்லை..

உந்த மருத்துவம் என்பதை படித்துவிட்டால்.. அதுதான் சமூகத்தின் உயர்ந்த நிலை என்ற மனப்போக்குத்தான் யாழ்ப்பாண மேற்குடியின் அடிமட்ட சிந்தனை.

குறிப்பாக பிரித்தானியாவை பொறுத்தவரை.. உள்நாட்டு மருத்துவர்களை விட மருத்துவ சேவையில் அதிகம் இருப்பவர்கள் வெளிநாட்டவர்களே. சிறந்த மருத்துவ சேவைக்கான ராணியின் சேர் பட்டத்துடனான பாராட்டை.. ஒரு ஈழத்தமிழர் கூட பெற்றிருந்தார்.

இங்கிலாந்தில் மட்டும்... புலம்பெயர் ஈழத்தமிழர்களின் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த பலர் மருத்துவத்துறையில் இருக்கிறார்கள். அது ஒன்றும் கடினமும் கிடையாது. ஒன்றும் பெரிய படைக்கப்பட முடியாத சாதனையாக பிம்பப்படுத்தப்படுவதும் இல்லை. அது ஓர் தொழிற்சார் கல்வி. அவ்வளவே. 

பிரச்சனை அதுவல்ல. ஒரு உயர்ந்த நிலையை அடைந்ததும்.. தாங்கள் நடந்து வந்த தடங்கள் பற்றிய சரியான உண்மையை அப்படியே உலகுச் சொல்ல வேண்டும்... அதுதான் கற்வனுக்குரிய பண்பு. அதைவிடுத்து தங்கள் வசதிக்கு தேவைக்கு ஏற்ப தடங்களை.. தவிர்ப்பதும்.. குறுகிப்பதும்.. மாற்றுவதும்.. அந்த இனம் பட்ட வலிகளை விடுவிக்க உதவாது.

இத்தனை ஆயிரம் ஈழத்தமிழர்களுக்கு புகலிடம் கொடுத்த இதே ஜேர்மனி உட்பட்ட நாடுகள்.. விடுதலைப்புலிகளை தடை செய்து அழித்தது மட்டுமன்றி.. இன்று வரை பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஒரு உருப்படியான சர்வதேசப் பொறிமுறை மூலமான தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை என்றால்.. அது புலம்பெயர் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள்.. உட்பட அவர்களின் எல்லா வித செயற்பாடுகளின் முதிர்ச்சி இன்மையை.. தோல்வியையே காட்டுகிறது.

யூதர்கள் உலக நாடுகள்.. பூராவும் பரவி இருந்து தமக்கான ஆதரவை திரட்டிக் கொண்டு ஒரு தேசம் அமைத்தது போல்.. எம்மால் முடியவில்லை என்றால்.. அதற்குக் காரணம்.. நாமே நம் வலியின் உண்மைத் தன்மையை உலகுக்குச் சொல்லாததும்.. குறைத்து அல்லது திரித்துச் சொல்வதும் தான்.

சிறுவர் போராளிகள் பற்றி வெள்ளைக்காரனுக்கு படம் எடுத்துக் காட்டின எம் புலம்பெயர் மேதாவிகள்.. எவராவது போரால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள்.. போரால் அரச படைகளால் குண்டு வீசி அழிக்கப்பட்ட பாடசாலைகள்.. கொல்லப்பட்ட மாணவர்கள்.. பற்றிப் படம் பிடித்திருக்கிறார்களா..??!

ஒரு சிறுவர் போராளி எப்படி உருவாகிறான்..

இவர் கூட 13 வயதில்.. புலிக்குப் போயிடுவனோ என்ற பயத்தில் அம்மா வெளிநாட்டுக்கு.. அனுப்பினார் என்று தான் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.. ஆக.. இன்னொரு வாக்குமூலம் பதிவாகிறது.. புலிகள் இப்படியான திறமையான சிறுவர்களையும் போராளி ஆக்கினார்கள்.. அவர்களிடம் இருந்து தப்பி வந்த இவரை அடைக்கலம் கொடுத்து ஜேர்மனி ஒரு உயரிய மனிதனாக்கி விட்டது.. புனித தேசமாகி விட்டது என்று.

இதே ஜேர்மனி ஆயுதமும் பணமும் நன்கொடையும் கொடுத்து சிங்கள அரசை ஊக்குவித்துக் கொன்ற தமிழர்கள் எத்தனை..????! அதனை எத்தனை பேர் ஜேர்மனிக்கு அதன் மொழியில் சொல்லி உள்ளனர்... எம்மவர்கள்..???!

இதுதான் கேள்வியே..! இதுதான் இங்கு பேசப்படும் சாரம்.

மற்றும்படி.. இன்றைய நவீன உலகில் மருத்துவப்படிப்பு என்பது யுயுபி. அதை எல்லாம் யாரும் இப்போ பெரிதாகக் கணக்கிலும் எடுப்பதில்லை. பல மருத்துவர்கள் கிரிமினல்களாகவும் மாறி இருக்கிறார்கள். அது வேறு விடயம். 

படிக்காமல் கூட இருக்கலாம் 
இவருடைய கல்வி தகமை பற்றியது அல்ல எனது கருத்து 

முட்டு கட்டைகள் தடைகள் என்பன ஓவருவருக்கு ஒவ்வரு மாதிரி வருகிறது.

இவருடைய முகப்பக்கத்தில் எல்லா நாட்டு ஆட்களும் நண்பராக இருக்கிறார்கள் 
இவர் கடந்த வருடம் இந்த ஏழை வீட்டில் இருந்ததுதான் நான் வந்தேன் என்று 
சில வெள்ளை ஜெர்மனியரையும் அழைத்து சென்று பல படங்களை போட்டிருந்தார் 
நான் எங்கிருந்து வந்தேன் என்பது ஒவ்வரு மனிதனுக்கும் முக்கியம் 
அதை ஞாபகம் வைத்தருப்பவனே எங்கு செல்ல வேம்டும் என்ற இடத்தையும் தீர்மானிக்கிறான்.

யாழை பொறுத்தவரை ஒரு சாதாரான கல்லூரிக்கு போய் மூன்று அல்லது நாலு 
ஆங்கில சொல்லும் தெரிந்த பின்னர் அவர்கள் போடும் ஆட்டத்தையும் அவர்கள் நினைப்புக்களையும் 
நான் நேரில் பார்த்தவன் இந்த யாழ்களத்திலேயே பல உதாரணம் உண்டு.

இப்படியான கோவேறு கூடத்தினுள் 
எங்காவது தழும்பாத நிறைகுடங்களை பார்க்கும்போது 
தனிப்பட எனது மனம் பாராட்டி கொள்கிறது அவளவுதான்.

நான் சிங்களவனிடம் அடிவாங்கி அகதியாக வந்தவன் 
ஆனாலும் தமிழேண்டா!  என்ற நிமிர்வுடன் இருக்கும் எவரையும் எனக்கு 
தனிப்பட பிடிக்கிறது அதே வலியும்  அதே திமிரும் இங்கும் இருப்பதால் 
பிடித்துபோகிறது ... இது ஒரு சாதாரண விடயம் அவளவுதான். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
18 minutes ago, கிருபன் said:

நெடுக்ஸின் பெயரும் பேர் சொல்லும் காலம் வராமலா போய்விடும்!

அப்படி ஒரு காலம் வரத்தேவையே இல்லை. எங்கள் பெயரால்.. நாலு பேர் பயன்பெற்றால் போதும். இந்த உலகப் பந்தில் ஒரு சின்னஞ்சிறிய தாவரம் கூட அந்தப் பயனைப்பெற்றால் போதும். ஆனால் எங்களால் எந்த உயிருக்கும் உலகுக்கும் கேடு தான் வேண்டாம். அடுத்தவரின் வலியை உணராட்டிலும் பறுவாயில்லை.. அவர்களின் வலியோடு நமக்கு விளையாட்டு வேண்டாம். 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, colomban said:

இதில என்னதான் இவர் கஷ்டப்பட்டு முன்னேறினார் அல்லது மருத்துவரானார் என்று தெரியவில்லை. 12 வயதில் சிறுவனாக போன ஒருவர் அங்கிருக்கும் மொழியை படித்து, அந்நாட்டில் இருக்கும் வசதி பல வாய்ப்புக்கிளை / சலுகைகளை இலவசமாக் அனுபவித்து (ஜெர்மனில் பல்கலைகழக கல்வி இலவசம் என கேள்விப்பட்டுள்ளேன்) படித்து ஒர் வைத்தியராவது என்ன புதுமையா? 

 

தமிழ்க்கடையில போய் சாமான் வாங்குறமாதிரி தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்,புலம்பெயருமுன் எம் வாழ்க்கை முறையுடன் எந்த வகையிலும் தொடர்பு பட்டிராத ஒரு மொழியை கற்று அந்த மொழிமூலமாகவே  வைத்திய கல்வி கற்று பின் வைத்தியராவது இவ்வளவு ஈஸியெண்டு இண்டைக்குத்தான் தெரியும் எனக்கு.

Edited by valavan

Share this post


Link to post
Share on other sites
26 minutes ago, valavan said:

தமிழ்க்கடையில போய் சாமான் வாங்குறமாதிரி தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்,புலம்பெயருமுன் எம் வாழ்க்கை முறையுடன் எந்த வகையிலும் தொடர்பு பட்டிராத ஒரு மொழியை கற்று அந்த மொழிமூலமாகவே  வைத்திய கல்வி கற்று பின் வைத்தியராவது இவ்வளவு ஈஸியெண்டு இண்டைக்குத்தான் தெரியும் எனக்கு.

இதில் ஒரு தகவல் தவறு. யாழ் நகர் முழுமையாக போராளிகளின் கையில் இருந்த போதும்.. ஜேர்மன் மொழி யாழ் நகரில் தனியாரால் கற்பிக்கப்பட்டது. பல இளைஞவர்கள் போய் படித்திருக்கிறார்கள். ஏன் சிங்களம் கூடப் படிப்பிக்கப்பட்டது. போராளிகள்.. விடுதலைப்புலிகள்.. இவை எதனையும் தடுக்கவில்லை. 

Edited by nedukkalapoovan
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இலங்கையில் தரப்படுத்தல் என்ற ஒரு கொள்கை 1972ல் அறிமுகப்பட்டதால் திறமையுள்ளவார்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். இதனால் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதே உமேஸ்வரன் போர் இல்லாத இலங்கையிலும் கூட வைத்தியராக வந்திருக்க முடியாமல் போயிருக்கலாம். அதேவேளை இந்த இனவாத கொள்கை அமுலாக்கப்படாமல் இருந்திருந்தால் ஒரு உமாமகேஸ்வரன் உருவாகாமல் இருந்திருக்கலாம்!

Share this post


Link to post
Share on other sites
On 5/18/2019 at 12:00 PM, கிருபன் said:

அதன்படி, சென்ற ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான விழாவில், 'நான் பார்ப்பதற்குதான் வேறொரு நாட்டை சேர்ந்தனாக தெரிகிறேன்; ஆனால், உள்ளுக்குள்ளே நான் ஜெர்மானியன்; அது என்னுடன் பழகினால்தான் தெரியும்' என்ற பொருளை உதாரணத்துடன் விளக்கினேன். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் என்னிடம் பேசிய ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல், என்னை வெகுவாக பாராட்டினார்.

 

இவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லையே ????🤔

1 hour ago, valavan said:

தமிழ்க்கடையில போய் சாமான் வாங்குறமாதிரி தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்,புலம்பெயருமுன் எம் வாழ்க்கை முறையுடன் எந்த வகையிலும் தொடர்பு பட்டிராத ஒரு மொழியை கற்று அந்த மொழிமூலமாகவே  வைத்திய கல்வி கற்று பின் வைத்தியராவது இவ்வளவு ஈஸியெண்டு இண்டைக்குத்தான் தெரியும் எனக்கு.

தொடர்பற்ற மொழிகள் பலவற்றை ஒரே நேரத்தில் கற்ற பல மாணவர்களை நான் கண்டிருக்கிறேன். வைத்தியராவது முற்காலத்தில் இருந்ததுபோல் அத்தனை கடினமானது இல்லை. பல மாணவர்கள் மருத்துவத் துறைக்கு தேர்வாகும் நிலை இருந்தும் அதைத் தவிர்த்து வேறு துறையைத் தேர்வு செய்வதை நான் கண்கூடாகக் கண்டுள்ளேன் லண்டனில்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
36 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லையே ????🤔

அதாவது தான் தமிழன் இல்லையாம். தோல் தானாம் அப்படி. மற்றும்படி.. ஜேர்மன் பாரம்பரியத்தின் வாரிசாம்.  அசூர் அடிக்க மட்டும் தமிழன் என்ற அடையாளம் முழுமையாக வேண்டும். அடிச்சாப் பிறகு.. ஜேர்மன். கொடுமை. 

வந்திட்டாங்கையா வந்திட்டாங்க. கொடுமை பாருங்க.. மாற்றான் வேடம் போடுவதில் தமிழனுக்கு இருக்கிற பெருமை போல வேறு எவருக்கும் இல்லை. அதனால் தான் தமிழன் நாடோடி. மற்றவன் எல்லாம் அவன் நாட்டை ஆளுறான். 😂

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

தொடர்பற்ற மொழிகள் பலவற்றை ஒரே நேரத்தில் கற்ற பல மாணவர்களை நான் கண்டிருக்கிறேன். வைத்தியராவது முற்காலத்தில் இருந்ததுபோல் அத்தனை கடினமானது இல்லை. பல மாணவர்கள் மருத்துவத் துறைக்கு தேர்வாகும் நிலை இருந்தும் அதைத் தவிர்த்து வேறு துறையைத் தேர்வு செய்வதை நான் கண்கூடாகக் கண்டுள்ளேன் லண்டனில்.

லண்டன் கதை இஞ்சை வேண்டாம்.......ஜேர்மனியிலை டாக்குத்தருக்கு படிக்கிறதைப்பற்றி இதுக்கை நிண்டு கதைப்பம்.😎

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கைத்தொலைபேசியில் இருந்தும் அதே மாதிரி முயற்சி பண்ணுங்கள். ஒரு தடவை முடியலை என்றால் எடிற்றை அழுத்தி மீண்டும் மீண்டும் முயற்சி பண்ணுங்கள்.
  • நியாயத்தை சொல்கிறார். உண்மையும் கூட.... சாகிறதெண்டால் போய் சாகுங்கோ.ஏன் ஒன்றும் அறியாத பிஞ்சுகளை கொல்கிறீர்கள்.
  • சம்பந்தன் என்னுடைய நண்பர்.மட்டக்களப்பில் நேற்று நீதியரசர் விக்கினேஸ்வரன்இப்படித்தெரிவித்தார். July 3, 2020 0 19         சம்பந்தன் என்னுடைய நண்பர். அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அதனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை. பின்னர்தான் கண்டுகொண்டேன் என்று முன்னாள் வடமாகாண முலமைச்சரும் ஓய்வு பெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் வடமாகண முலமைச்சரும் ஓய்வு பெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் மட்டக்களப்பு கொம்மாதுறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், வட கிழக்கு மாகாணத்தின் ஏகோபித்த தலைவர் என்ற வகையில் சம்பந்தன் அவர்கள், கிழக்கு மாகாணத்தில் இருந்து வந்த ஒரு தலைவர் இவ்வாறானதொரு விடயம் நடைபெற இடம் கொடுத்துவிட்டார் என்பது மனதுக்கு பெரும் வேதனையாக உள்ளது. சம்பந்தன் என்னுடைய நண்பர். அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அதனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை. பின்னர்தான் கண்டுகொண்டேன். நான் 2013ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தேன். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய நல்லாட்சி அரசாங்கம் வந்தது. அப்பொழுது பெப்ரவரி 3ஆம் திகதி கொழும்பிலுள்ள என்னுடைய வீட்டிற்கு சம்பந்தன் அவர்களும் சுமந்திரன் அவர்களும் வந்தார்கள். கதைத்துவிட்டுச் செல்லும்போது தம்பி நாளைக்கு பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திரதின விழா. நான் அதிலே கலந்து கொள்கிறேன் நீங்களும் வருவீர்களா? என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் சொன்னேன். நான் வரவில்லை. நீங்கள் போவதாக இருந்தால் செல்லுங்கள் என்றேன். இல்லை இல்லை. நாங்கள் இந்தக் காலகட்டத்தில் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டிய ஒரு அவசியம் இருக்கின்றது. ஆகவே இந்தச் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்கிறோம் என்று. நான் அவர்களுக்குச் சொன்னேன். 1958ஆம் ஆண்டு கெடக் (சாரணர் ஆரம்ப நிலை) என்ற முறையிலே சுதந்திர தினவழாவில் பங்குபற்றினேன். அதற்குப்பின்னர் எந்தக் காலத்திலும் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் போது கூட நான் போகவில்லை. காரணம், எங்களுடைய சுதந்திரம் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று அன்றே சொன்னேன். இல்லை இல்லை. எங்களுக்கு இனி எல்லாம் கிடைக்கும். இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எல்லாம் கிடைக்கும் என்று சொன்னார். அவருடைய மனதில் நம்பிக்கை இருந்தது, நான் அவரைக் குறை கூறவில்லை. அவருடைய பார்வையைச் சொன்னேன். தம்பிசுமந்திரனை வருவீர்களா என்று கேட்டவுடன் அவர் சரியென்றார். இரண்டுபேரும் மறுநாள் சென்றார்கள். நான் போகவில்லை. இதனை எதற்காகக் கூறுகின்றேன். அவர்களுடைய பார்வை சற்று வித்தியாசம். அவர்களுடன் சேர்ந்து பயணித்தால் சிங்களத்தலைவர்கள் நாங்கள் கேட்பதைக் கொடுப்பார்கள் என்ற ஒரு எண்ணம் அவர்களிடமிருந்தது. அது ஒருபோதும் நடக்காது என்பது ஏற்கனவே நான் தெரிந்து கொண்டு வைத்திருந்த விடயம். ஏனென்றால் அவர்கள் கடந்த 100 வருடங்களாகத்திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வந்த விடயங்களை அவர்கள் எவ்வாறு நாங்கள் நன்றாகப் பேசி பல் இழித்ததுடன் விட்டுக் கொடுக்கப்போகின்றார்கள். கொடுக்க மாட்டார்கள். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனுடைய பார்வையினால், நோக்கினால், அவர்கள் என்ன விதமாகப் பிரச்சினையை அணுகியிருக்கிறார்கள் என்ற வழியிலேயே சென்று இதுவரை காலமும், கடந்த 5 வருடங்களாக எங்களுடைய மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்திவிட்டார்கள். வருங்காலப்பிரச்சினைகளை மிகைப்படுத்திவிட்டார்கள். ஆகவே அவர்களுக்கு நீங்கள் வாக்களிப்பதால் எந்த வித நன்மையையும்; கொண்டுவராது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட கட்சியை கடந்த 5 வருடங்களாக சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள். கிழக்கு மாகாணத்தில் அதிகாரத்தினையும் கைவிட்டு 11 பேர் இருக்கும் போது 7பேர் இருந்த முஸ்லிம் காங்கிரசுக்கு அதிகாரத்தினைக் கொடுத்து அவர்கள் என்ன செய்தார்கள். தங்களுக்குத் தனிப்பட்ட வகையில் நன்மைகளைப் பெற்றுக் கொண்டு, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிவதை செயற்படுவலதை மறந்துவிட்டார்கள். தங்களுக்கு நன்மைகள் கிடைத்தது என்றவுடன் அவர்களுக்கு வாக்களித்த மக்களை மறந்துவிட்டார்கள். எங்களுக்குக் கிடைக்கவேண்டியவைகள் தான் கிடைக்கப்போகின்றன என்ற அந்த எண்ணத்தில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆகவே கடந்த 5 வருடங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் நிலை மிகவும் மோசமாக மாறிவிட்டது. நாங்கள் அதற்குரிய நடவடிக்கைகளை அப்போதே எடுத்திருக்க வேண்டும். ஆனால் காலம் தாழ்த்தி விட்டோம் என்றார். http://www.supeedsam.com/129897/
  • பாவக்காய் ஏற்கனவே கைச்சல்கறி.இதுக்கை அருமந்த மீனை போட்டு கறியை பழுதாக்க போறியள்.