• ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • இலங்கையில் ஓர் இனம் பேசும் மொழி பல ஆண்டுகள் பழமையான மொழி இன்றுதான் முதன் மொழியாக விமான நிலையத்தில் முதன் முதலில் எழுந்து நிற்கிறது என்றால் நாமெல்லாம் மொழியை இழந்து தோற்று விட்ட கதைதான் இதை இப்ப தூக்கி திரிஞ்சு கொண்டு இருக்கிறம்  கொழும்பு , கொச்சிகடையிலோ, வெள்ளவத்தையிலோ தமிழன்கிட்ட தமிழ் பேசினால் சிங்களத்தில் பதில் சொல்லுவான் இத்தனைக்கும் அவர் ஓர் யாழ்ப்பாண சுத்த தமிழராக இருப்பார்   
  • சட்டத்தை மீறியுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்! சிக்கலில் கோத்தபாய இராணுவ அதிகாரிகளின் படங்களை தமது அறிக்கைகளில் பிரசுரிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் சட்டத்தை மீறியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. சிஎம்இவி என்ற தேர்தல்கள் கண்காணிப்பு மையம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஒழுங்குகளை மதித்து நடப்பதாக உறுதியளித்துள்ளனர். எனினும் பத்திரிகை விளம்பரங்களில் அவர்கள் இந்த ஒழுங்குகளை மீறி வருகின்றனர். முப்படைகளின் தளபதிகளை தாங்கிய கோத்தபாய ராஜபக்சவின் விளம்பரங்கள் மூன்று பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக 2009ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி தற்போதைய இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அன்று விடுத்த அறிக்கை ஒன்று இந்த விளம்பரங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதையும் சிஎம்இவி சுட்டிக்காட்டியுள்ளது. https://www.tamilwin.com/politics/01/228526?ref=rightsidebar  
  • வியாழேந்திரன் கூட்டமைப்பில் இருந்தால் ஒன்றையும் செய்ய முடியாது என விலகி வந்தது காலம் கடந்தது  இருந்தாலும் பலர் கோட்டாவுக்கு ஆதரவு என்பது துளி கூட இல்லை ஆனால் அவருக்குத்தான் வாக்களிக்க உள்ளார்கள் காரணம் கிழக்கு என்பது கிழக்கு மக்களுக்கு சிங்களவன் எடுத்தாலும் பேசியாவது வாங்கி கொள்ளலாம் காணீகளை அதிகாரங்களை ஆனால் முஸ்லீம்களை பொறுத்த வரைக்கும் நமக்கு தெரியாத ஆண்டு (இல்லாத) ஆண்டு வரலாறுகளைக் கொண்டு வந்து சேர்க்கிரர்கள் உதாரணம் கல்முனை ஏன் கிழக்கு பக்கம் இருக்கும் பல பிரதேசங்கள் ஒரு வேளை கோத்தா வென்றால் பிள்ளையான் வெளியில் வரலாம் அல்லது வராமல் போகலாம் கருணா கொஞ்சம் சோல்டரை கூட தூக்கி திரிய வாய்ப்பு உள்ளது கோட்டா சாம்ராஜ்ஜியத்தில். இது எங்களுக்கு சின்ன வரம்பை போட்டு பாதுகாப்பது போல தான் அணையை உடைத்து நீர் பாய்வதை தடுப்பது போல  கூட்டமைப்பும்  நல்லாட்ட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து கொண்டுவந்தது வந்தவர்கள் இருந்தவர்கள் சென்றவர்கள் எல்லாம் பிரச்சினையை தீர்த்துவைக்கவும் இல்லை தீர்த்து வைக்கப்ப்போவதும் இல்லை  இப்படியே இருப்பதை விட அவனுகள் பரவாயில்லை போல தோன்றும் சில சர்வாதிகார ஆட்சி சில வேளைகளில் தேவைப்படுவது போல மனதுக்கு தோன்றும் இருந்தாலும் அடிமை வாழ்க்கையும் அல்லல்படும் வாழ்கையும் தமிழருக்கு இலங்கையில் இருந்து கொண்டுதான் இருக்கும் இதை எந்த அரசாங்கம் வந்தாலும் எமக்கு பரிசாக கொடுத்துத்தான் இருக்கும்  கோத்தா கூட டம்மிதான் இந்த எலக்சன்ல பின்புலம் மகிந்தவும் பசிலும்தான்  எனது வாக்கும் கோட்டாவுக்கு விரும்பம் இல்லை ஆனால் போடத்தான் வேண்டும் இரண்டு தெரிவுகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் 
  • ஒற்றையாட்சி தொடர்பான கருத்துக்களில் கஜேந்திரகுமார் மிகவும் அப்பட்டமான பொய்களை நாக்கூசாமல் மேலே கூறியுள்ளார்.   தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தாங்கள் ஒற்றைக்காலில் நின்றதை மறைத்து விட்டார்! நடந்த நிகழ்வுகளின் சுருக்கம்.   (1) முதலாவது கலந்துரையாடலிலிருந்து தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை சேர்க்காவிட்டால் தாங்கள் கையெழுத்திட மாட்டோம் என்று கஜேந்திரகுமார் கும்பல் மிரட்டி வந்தது. (2) ஒற்றையாட்சி நிராகரிப்பு, சமஸ்டி அடிப்படையிலான தீர்வு பற்றி தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் இரண்டாவது கூட்டத்தில் சமர்ப்பித்த தமது அறிக்கைகளில் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தன. ஆனாலும் தமிழரசுக்கட்சி ஏனைய சகல கட்சிகளால் முன்வைக்கப்பட்ட "ஒற்றையாட்சி நிராகரிப்பு, சமஸ்டி அடிப்படையிலான தீர்வு" என்பதை உடனடியாக ஏற்றுக்கொண்டிருந்தது. எனவே இதை தமது தனித்துவமான கோரிக்கை என கஜேந்திரகுமார் கோஷ்டி உரிமை கொண்டாடி இப்போது நாடகமாடுவது, மக்களை ஏமாற்ற முனைவது  அவர்களின் மிகமிக மோசமான கீழ்த்தரமான பண்பினைக் காட்டுகிறது. (3) இரண்டாவது கலந்துரையாடலின் பின்னர் கஜேந்திரகுமார் கோஷ்டி கபட நோக்கங்களுடன் தேர்தலை மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று அறிக்கைகளை வெளியிட்டனர்.   (4) ஆரம்பத்திலேயே தேர்தலை மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, பின்னர் நிலைமைக்கேற்ப தேவைப்பட்டால் அப்படியான ஒரு முடிவை பரிசீலிக்கலாம் என்று 5 கட்சிகளும் ஒருமித்துக்  கூறியவற்றை கஜேந்திரகுமார் கோஷ்டி ஏற்கவில்லை. (5) கஜேந்திரகுமார் கோஷ்டி குறித்த பொது உடன்பாட்டு ஆவணத்தில் தங்கள் கட்சியின் பெயரை தனித்துவமாக குறிப்பிட வேண்டும் என்று அடம்பிடித்து, அது ஏற்றுக்கொள்ளப்படாத போது தாமே வெளியேறினார்கள். அவர்களை யாரும் வெளியேற்றவில்லை.